முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 38


 

அத்தியாயம்: 38


நெடுஞ்சாலை அது.


பல சாலைகளைக் கொண்ட அந்த ரோட்டில் மிதமான வேகத்தில் தேவ் காரை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனின் மனம் ஒரு வித மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.


மகிழ்ச்சி... இருக்காத பின்னே. மனம் விரும்பியவளுடன் யாருமற்ற வேளையில் இரவு நேர கார் பயணம், இனிக்கத் தானே செய்யும். நொடிக்கொருமுறை தன் அருகில் அமர்ந்திருத்தவளைப் பார்த்தபடி காரின் குறைந்த பட்சம் வேகத்தில் ஓட்டிக் கொண்டு இருந்தான் தேவ். ஏனெனில் அந்தப் பயணம் விரைந்து முடிவதை அவன் விரும்பவில்லை.


ஆனால்…


அவனுக்கு அருகில் அமர்ந்திருத்தவளின் மனமோ பதட்டத்தில் இருந்தது. இதயம் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே எகிறிக் குத்தித்து விடுவேன் என்று சொல்வது போல் துடித்தது. அது துடிக்கும் வேகம் அதிமாகிக் கொண்டே இருந்ததே தவிர குறையவே இல்லை.


தன்யாவையும் முரளி குடும்பத்தையும் விமானம் ஏற்றி விடவென ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளாள் வாசு. முரளியும் ராஜியும் வாசுவை விடவே இல்லை. விமானத்தில் ஏறும் வரையும் அவர்களின் பார்வை வாசுவைத் தாண்டி எங்கும் செல்லவில்லை. அவளின் கன்னம் தடவி ஆசையுடன் பேசினர்.


ஏன் இந்தப் பாசம் என்று வாசுவிற்கு தெரியவே இல்லை. எந்த வகையில் உறவு எனத் தன்யாவிடம் கேட்க, அவளுக்கே தெரியாததைப் பதிலாக எப்படி சொல்வாள். ஆதலால் யார்? எவர்? ஏன் இந்த அதீத பாசம்? எனக் குழம்பி நின்றனர் இரு பெண்களும்.


" மூணு நாளாப் பாக்குற ஒரு பொண்ணுக்காகத் தன்னோட தங்க செயினையே கலட்டிக் குடுக்குற அளவுக்கு உம்மேல எப்படி பாசம் வந்தது? " என வியப்புடன் கேட்டாள் தன்யா.


" எனக்கும் அது தான் தெரியல. நான் வேண்டாம்னு சொன்னேன். ஆனா அந்த ராஜி ஆன்டி உடனே அழ ஆரம்பிச்சிட்டாங்க. முரளி அங்கிளும் சேர்ந்து அழும்போது எப்படி மறுக்க முடியும். " எனத் தன் கழுத்தில் தொங்கிய ஆபரணத்தைக் கைகளால் சுருட்டியபடி கூறினாள் வாசு.


எப்படியும் அது ஐந்து பவுனுக்கு மேல் தேறும். முன் பின் தெரியாத ஒருவருக்கு இத்தனை விலையுயர்ந்த பரிசு பொருளா.


" இட்ஸ் ஓகே. விடு அதை. இன்னைக்கி உனக்கு லக்கி டேன்னு நினைச்சுக்க வேண்டியது தான். " தன்யாவின் குரலில் சிறு வறுத்தம். ஏனெனில் தூர நின்று டேனியல் அவளைப் பார்த்ததுக் கொண்டும் கை அசைத்துக் கொண்டும் நின்றிருந்தான்.


" நீ எடுத்த முடிவு ரொம்ப சரியானது தன்யா. இனி உன்னோட லைஃப்ல அவனுக்கு இடம் தராத. உனக்கு... உனக்கு... தேவ் ஸார் தான் கரெட்டான மேச். " என்றவள் கடைசி வார்த்தையைச் சொல்லும் போது தொண்டை அடைத்தது‌.


க்ரிஷ் சொல்லி இருந்தான், புவனா திருமணத்தின்போது தேவ்விற்கும் தன்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடக்கலாம் என்று.


'அவன் யார கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்ன? நான் தான் அவன லவ்வே பண்ணலயே. அப்றம் ஏன் எனக்குத் தொண்ட அடக்கணும். நார்மலா பேசுவோம். ' என நினைத்தவள்,


" டூ வீக்ஸ்ல நடக்கப்போற உன்னோட எங்கேஜ்மெண்ட்டுக்கு வாழ்த்துக்கள். " எனக் கை நீட்ட,


" லூசாடி‌ நீ. அவெந்தா உன்னை லவ் பண்றானே. அப்றம் எப்படி சம்மதமே இல்லாம என்னை எங்கேஜ்ட் பண்ணுவான். பைத்தியம்." வாசுவின் முகத்தில் நிஜமா என்று கேள்வி எழுந்தது.‌


" நீயே பாரு. உன்னை வீட்டுல விடும்போது உங்கிட்ட லவ்வ சொல்லி, கட்டிப்பிடிச்சி முத்தம் மழைல உன்னை நனைய வச்சிட்டு தான் விடுவான். " என்க, குப்பென வாசுவின் முகம் சிவந்தது. ஆனாலும்,


"நான் டாக்ஸில போய்க்கிவேன். அவரு கூட போகமாட்டேன். " என்க.


"உன்னைத் தனியா அவெ விடுவானாக்கும். ம்... கனவு காணணும்னா அதுல அவனுக்கும் ஒரு இடம் குடு. அது உன் ஹாட்டா இருந்தா இன்னும் நல்லது. " என்று வாசுவிற்குப் பதட்டத்தை உண்டு பண்ணி விட்டுச் சென்றாள் தன்யா.


'என்ன ருத்ரா கூடத் தனியா? கார்லயா?' என்ற பதட்டம் தான் அது‌.


எட்டு மணிக்கு விமானம் என்பது வானிலை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமானது. அது வந்து, பின்னும் தாமதமாகப் புறப்பட்டு என மணி பத்தைத் தாண்டி விட்டது. வேகவேகமாக வெளியே வந்தவள் டாக்ஸிக்காகக் கை நீட்ட, நீட்டிய கரத்தைப் பற்றி இழுத்து சென்றான் தேவ், தன்னுடைய காருக்குள்.


இதுவரை ஃபோனில் மணிக் கணக்கில் பேசினாலும், நேரில் அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வித நடுக்கம் வராமல் இல்லை.‌ ஏன் என்ற காரணம் தான் அவளுக்குப் புரியவில்லை.


" ருத்ரா, நான் டாக்ஸில போய்க்கிறேனே. " என்றவளை ஒரு பார்வை பார்த்தவன்,





"என்னை டாக்ஸி டிரைவரா ஏத்துக்க. மீட்டர்லாம் கிடையாது. நீயா பாத்து குடுக்குறத நான் வாங்கிப்பேன். பிரச்சன பண்ண மாட்டேன்." எனக் கண்சிமிட்டி அவளை முன் பக்கம் ஏற்றிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.


காரின் உள்ளே நிலவிய அமைதியும் தனித்து இருக்கும் அந்தச் சூழ்நிலையிலும் இருவருக்குமே என்ன பேச என்று தெரியாது போக, அமைதியாகப் பயணம் சென்றது.


" நான் இவ்ளே நேரம் ஆகும்னு நினைக்கல. " என அந்த அமைதியை வாசு குழைக்க, அவன் புன்னகைத்தான்.


" என்னோட ஃபோன்! என்னோட பேக் எங்க? " எனத் தேட,


"அது பின்னாடி சீட்ல இருக்கு. எதுக்கு அது? "


" நான் கார்த்திப்பாட்ட லேட் ஆகும்னு சொல்லல. சோ… இன்பார்ம் பண்ணணும்‌‌. எனக்கு ஃபோன் வேணும். " என்க. அவன் தன் மொபைலை நீட்டினான்.‌ அதை வாங்காது,


"இல்ல, நான் டாக்ஸில வர்றதா சொல்லிருக்கேன். இப்ப உங்கூட வர்றேன்னு சொன்னா... தப்பா... " என இழுக்க, அவன் திரும்பிப் பின் சீட்டில் உள்ள பேக்க எடுத்து தரத் திரும்புவதற்கும், வாசு அதை எடுக்கத் திரும்புவதற்கும் சரியாக இருந்தது‌.


தன் அருகில் வரும் இரும்பை தன்னோடு ஒட்ட வைத்துவிடுமாம் காந்தம். அதுபோல் தான் ருத்ரா எனும் காந்ததை வெகு அருகில் பார்த்தபோது, வாசு என்னும் இரும்பால் என்ன செய்து விட முடியும்.‌ ஒட்டிக் கொண்டது. இல்லை இங்கு ஒன்றோடு ஒன்று உரசி சென்றது. உதடுகள் அல்ல.


இதழில் பாய்ந்த என் முத்தம், இடறி விழுந்தது கன்னத்தில் என்ற பாடல் வரிகள் வாசுவிற்கு சரியா பொருந்தி இருந்தது. ஏனெனில்.‌


தேவ்வின் கன்னத்தில் வாசுவின் உதடுகள் உரசி சென்றன. அதற்குத் தேவ் தன் கன்னம் தடவி கள்ளத்தனமாய் அவளை பார்த்துக் கண்சிமிட்ட, பெண்ணவளுக்கு தன்யா கூறியது நினைவு வந்தது. அது பதட்டத்தை தந்தது. உல்லாசமாக காரைச் செலுத்தியவன் திரும்பி வாசுவை பார்த்து,


"என்னாச்சி வாசு?" என ஏசி காரில் வியர்த்து வடியும் அவளின் முகம் பார்த்துக் கேட்க,


"ஒன்னுமில்ல.‌" என்றவளை விசித்திரமாகப் பார்த்தான்.


"ஓகே… சீட் பெல்ட் போட்டுக்க. " என்க, இழுத்து இழுத்து பார்த்தாள். அவளின் பதட்டத்தில் எதுவும் கைக்குச் சிக்கவில்லை. காரை ஓரம் நிறுத்திய தேவ், அவளுக்குச் சீட் பெல்ட் போட்டு விட,


மீண்டும் அருகில் பார்க்கும் அவனின் முகம். அவன் விடும் மூச்சு அவள் கன்னம் பட்டு அவளின் உஷ்ணத்தை அதிகரிக்க, உடல் வியர்வையில் குளித்தது.


" ஏசிய ஃபூல்லா வச்சா உனக்கு ஓகே தான. " எனக் கேட்டான் தேவ் அவளின் பதட்டத்தைக் கண்டு. அவனும் அவளின் நிலை கண்டு பயந்து விட்டான் போலும்.


இல்லையென மறுத்தவள் ஜன்னலைத் திறந்து விடச் சொன்னாள்.‌ சரியென அவள கூறியதைச் செய்ய, அப்போதும் அவளால் நார்மலாக இருக்க முடியவில்லை.


இதழ்கள் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. சின்ன சின்னதாக வளர்ந்திருந்த அவனின் தாடி முடி அவளின் மென்மையான உதட்டில் கீறல்களை உண்டாக்கி இருக்க வேண்டும். விரலால் அதை மடித்து விளையாடியபடி அமர்ந்திருக்க, உள்ளம் கண்டதை கற்பனை செய்யத் தொடங்கியது.


"நீ ஓகே தான?" என்றான் தேவ்.


"எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. "


"உனக்குப் பசிக்கிதா? உடம்புக்கு என்ன பண்ணுது? எதாவது ஹோட்டல்ல நிப்பாட்டவா? இல்ல ஹாஸ்பிட்டல் போகலாமா?" என நெற்றியை தொட வர,


"அதன் தெரியலன்னு சொல்றேன்ல. எனக்கு என்னாச்சின்னு எனக்கே தெரியல. அப்றம் எப்படி உங்கிட்ட சொல்லுவேன். " எனக் கத்த,


"சில்… சில்… ஏன் இவ்ளோ டென்ஷன். " எனத் தூக்கிய கரத்தைக் கீழே போட்டவன் காரை ஸ்டார்ட் செய்து வேகவேகமாக ஓட்டத் தொடங்கினான்.


"அது... அது… நீ… பக்கத்துல வந்தா அப்படி தான் இருக்கு. உள்ளுக்குள்ள யாரோ ரேஸ் கார் ஓட்டுற மாறி‌‌. லவ்டப் லப்டப்ன்னா கேட்டுக்கிட்டே இருக்கு‌. " என்க, அவன் தண்ணீர் பாட்டில் எடுத்து நீட்டினான். அதைக் குடித்தவள் அமைதியாக மூச்சு விட்டாள்.


தேவ், "உன்னோட மைண்ட டைவர்ட் பண்ற மாறி எதாவது பேசேன். "


"என்ன பேச.‌"


"ம்... டேனியல்ல பத்தி சொல்லு. உனக்கு இப்போ அவன் ஃப்ரெண்டு தான. தன்யா கூட ஏன் ப்ரேக்கப் பண்ணான்.‌" எனக் கேட்க,


"எஸ் ஃப்ரெண்டு தா. பட்… தன்யாவோட பர்மிஷன் இல்லாமா… ஹேய் அவளோட லவ்வ பத்தி உனக்குத் தெரியுமா?"


"ம்… தன்யா எங்கிட்ட எதையுமே மறச்சது இல்ல. ப்ரேக்கப் பத்தி தெரியும். பட் டேனியல் தான் அதுன்னு தெரியாது. "


"அப்றம் எப்படி.?"


"நேத்து நான் அவள பிக்கப் பண்ண வந்தேன் உங்க ரெஸ்டாரன்ட்டுக்கு. அப்பத் தான் டேனியல் தன்யாட்ட அடிவாங்குறத பாத்தேன். நீயும் அவங்கூட சண்ட போட்டுட்டு தான போன. இன்னைக்கி ஏர்போர்ட்லயும் இருந்தான். சோ... ஒன் ப்ளஸ் ஒன் டூ. என்ன நடந்தது?" என்க, வாசு அவனிடம் தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்ல,


"டேனிக்கு மேரேஜ் மேல சுத்தமா நம்பிக்க இல்ல. இப்ப‌ ஓகேன்னு சொல்லித் தன்யாக்காக மேரேஜ்க்கு சம்மதிச்சாலும் கண்டிப்பா பின்னாடி பிரிஞ்சி போய்டுவாங்க. நான் அவங்கிட்ட தன்யா உனக்கு‌ வேண்டாம்னு சொன்னேன். பட் அவன் கேக்குற ஐடியாலயே இல்ல. " எனத் தன் கருத்தை‌ச் சொல்ல, தேவ் அமைதியாகக் காரை ஓட்டினான்.


"ருத்ரா, கார நிப்பாட்டேன். " என்றாள் வாசு.


"ஏன்? நாம உன்னோட வீட்டுக்குப் பக்கத்துல வந்துட்டோமே. " என்றாலும் காரை ஓரமாக நிறுத்தினான்.


"நான் தான் சொன்னேனே. நான் டாக்ஸ்ல வர்றதாத்தான் கார்த்திப்பாட்ட சொன்னேன். இது நைட் டைம்‌ எல்லாருமே வீட்டுல இருப்பாங்க. இந்த நேரத்துல ஒரு பையங்கூட, அதுவும் உங்கூட வந்து இறங்குனா… தேவையில்லாம நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க. அதான்… நான் இங்கயே இறங்கி நடந்து போய்க்கிறேன். " எனத் தயங்கி தயங்கி கூறியவள் கதவைத் திறக்கப் போக,


தேவ் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டி, அவளின் வீட்டு வாசலின் முன் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.‌ கார் க்ரீச் எனச் சத்தத்துடன் சாலையில் தீ பொறிகளைப் பறக்கவிட்டபடி நின்றது.


அது எப்படி இருந்தது என்றால். 'என்ன எல்லாரும் உள்ளயே இருக்கிங்க. நான் வந்திருக்கேன். வந்து எட்டிப்பாத்து பன்னீர் தூவி வரவேறுங்க. ம்... வாங்க வெளிய.' என்பது போல் இருந்தது.


அதிர்ந்து முழித்தவளின் பக்கம் இறங்கி வந்து கதவைப் பணிவுடன் திறந்து விட்டவன் அவளின் கரம்பற்றி அவளை இறக்கியும் விட்டான்.


'அதான் இறக்கி விட்டுட்டியே. நீ போ. நான் போய்க்கிறேன். ' என்பது போல் பார்த்தவளிடம்.‌


" உள்ள வான்னு கூப்பிட மாட்டியா ஸ்வீட்டி." என்க, அவனின் ஸ்வீட்டியில் ஒரா கணம் அதிர்ந்தலும், வீட்டிற்குள் அழைக்கவா வேண்டாமா என மனத்தில் சிறு பட்டிமன்றமே‌ நடத்திக் கொண்டு நின்றாள்.


"அது.‌.. அது‌... " எனத் தயங்கிக் கொண்டு நிற்க,


'யாரும் என்னைக் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வரவேற்கவும் தேவையில்லை. ' என்பது போல் நடந்து வீட்டிற்குச் சென்றான்.


கதவைத் தட்டும் வேலையெல்லாம் வைக்காமல் கார்த்திகேயனே கதவைத் திறக்க,


"குட் ஈவினிங் மிஸ்டர் கார்த்திகேயன். " எனப் புன்னகையுடன் சொல்ல,


'இவெ எதுக்கு வந்திருக்கான்? ' என நினைத்தபடி கார்த்திக் நின்றான்.


"கொஞ்சம் வழி விட்டா வீட்டுக்குள்ள வருவேன்.‌ உள்ள போய் டின்னர் சாப்பிட்டுட்டே சில முக்கியமான விசயத்த பத்தி பேசலாம். " என்றவன் நகராது நின்ற கார்த்திக்கை பொம்மைபோல் நகர்த்தி விட்டு உள்ளே சென்றான்.


கார்த்தி, பதட்டத்துடன் வந்து கொண்டிருந்த மகளைப் பார்க்க…


"கார்த்திப்பா ஏர்போர்ட்ல லேட்டாகிடுச்சி. அதான் நானே டிரப் பண்றேன்னு ருத்ரா சொன்னான். " என்றவளுக்கு குறைந்திருந்த படபடப்பும் வியர்வையும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.


அந்தக் குளிர் இரவிலும் வியர்வை ஊற்றி ஒழுக, அவளை அழைத்துபடி கார்த்திகேயன் உள்ளே சென்றான். அப்படி என்ன முக்கியமான விடயத்தைப் பத்தி பேசப் போகிறான்??


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...