முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 39

 

அத்தியாயம்: 39


" பொட்ட பிள்ளைக்கி இவ்வளவு தைரியம் ஆகாது. கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா அதுக்கு. காலாகாலத்துல வீட்டுக்கு வரணுங்கிற புத்தி இல்லாம ஊர் சுத்திட்டு இருக்கா. நான் சொன்னா உடனே வீட்டு ஆம்பளைங்க வந்து முத ஆளா‌ நின்னுடுறானுங்க சண்டைக்கி.‌ என்ன பண்ணறது" என்று சமையலறையில் இருந்த உஷாவின் புலம்பல் ஹாலிற்கு வந்து கொண்டிருந்த தேவ்வின் காதுகளில் நன்கு விழுந்தது. அது புன்னகையையும் உண்டாக்கியது.


" டேய் அஸ்வினு, அந்தக் கழுதைக்கி ஃபோன் போட்டு வர்றாளா இல்லையான்னு கேட்டுச் சொல்லு. " என மகனை ஏவ.


"இப்பத் தான் உஷா மெசேஜ் பண்ணா ‘ஆன் தி வே’ன்னு. வந்திடுவா உஷா. நீ சும்மா சும்மா கத்தி என்னையும் டென்ஷன் பண்ணாத. " ஜோஹிதா.


" என்னத்த நீ டென்ஷன் ஆன. உன்னைச் சொல்லிக் குத்தமில்ல. அந்தக் கார்த்தி‌க்க சொல்லணும். பெத்து போட்டதோட உங்கடம முடிஞ்சதுன்னு மகள தூக்கிட்டு போய் அவனெந்தான ஆளாக்குறான். எப்பப் பாத்தாலும் மக மகன்னு ஐஸ்ஸாட்டம் உருகி ஓடுறான். நீ அவன எதுவுமே சொல்றது இல்ல. ச்ச... என்ன குடும்பமோ! டேய் எல்லாத்தையும் எடுத்துட்டு டைனிங் டேபிளுக்கு வா. அந்தக் கழுத வந்ததும் பசின்னு தா கத்துவா. நல்லா சாப்பிடட்டும் அப்றம் அவகூட நான் சண்ட போடுறேன். " என்றவர் மேஜையில் பாத்திரங்களை அடுக்க,


யாரோ சோஃபாவில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு கைகள் இரண்டையும் சோஃபாவின் மேல் விரித்து அமர்ந்திருப்பது தெரிந்தது. முகம் தெரியவில்லை. முதுகு தான் தெரிந்தது. அது கார்த்திக்கோ முருகனோ அல்ல எனச் சொல்லியது அந்தப் பின்பம். அப்படி எனில் யார்? என யோசித்தவர் அந்த உருவம் அசைந்ததும். ஆ…. என அலறல் தொடங்கிவிட்டார்.


திடீரெனப் பார்த்ததால் உஷா பயந்து அலற, ஜோஹிதாவும் கார்த்தியும் வேகமாக ஹாலிற்கு வந்தனர்.


'போச்சி உஷா ஆன்டி கத்த ஆரம்பிச்சிட்டாங்களா. இவனால இன்னும் எத்தனப் பேரு தான் மாரடைப்புல படுக்க வைக்கப் போறோமோ. ' வாசுவின் மைண்ட் வாய்ஸ்.


"யார்ரா நீ? சொல்லாமக் கொல்லாம நடு வீட்டுக்குள்ள வந்து உக்காந்திருக்க. யாரு நீ? " என நெஞ்சில் கை வைத்துக் கொண்டு கேட்க, மனைவியின் அலறல் சத்தத்தில் கையில் கம்புடன் வந்தார் முருகன்.


"உஷா என்னாச்சுமா? யாரு அது?" என்ற கேட்டபடி வர,


" உங்க வரவேற்பு ரொம்ப பிடிச்சிருக்கு ஆன்டி. என்னோட பேரு.."


"ருத்ரதேவ். சிவ்ராம் ஸாரோட பையன். " என்றபடி வந்து அவனுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தான் கார்த்திகேயன். தேவ், அவனைப் பார்த்து நக்கல் கலந்த ஒரு சிரிப்பு சிரிக்க, அதைப் பார்த்த வாசுவிற்கு கோபம் கோபமாக வந்தது.


சாதாரணமாகக் கார்த்திக் அமர்ந்திருக்க, தேவ் மட்டும் முதலாளி போல் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அதிகாரமாய் அமர்ந்திருப்பதைப் பார்க்கையில் 'எங்கார்த்திப்பா எவ்ளோ பெரிய ஆளு. அவருக்கு முன்னாடி கால் மேல கால் போட்டு உக்காந்திருக்க. நேரா உக்காருடா. ' என விழிகளால் பேச.


அவளின் விழி மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யாது ஜோஹிதாவிடம். " Can I have some water pls. " என்க, ஜோஹிதா கார்த்திக்கை பார்த்தபடி சமையலறை சென்று நீர் எடுத்து வந்தாள்.


'தண்ணி கேட்டா வெறும் தண்ணி மட்டும் தான் தருவாங்க போல. ' என ஜோஹிதா வைத்துவிட்டு சென்ற அந்த க்ளாஸ் டம்ளரை ருத்ரா பார்க்க,


'உனக்குப் பச்ச தண்ணி குடுக்குறதே பெரிய விசயம் டா டேய்.‌' என்பது போல் பார்த்தான் கார்த்திகேயன்.


தண்ணீரை அருந்தியவன் எதுவும் பேசாது தன் லாப்டாப்பைத் திறந்து எதையோ நோண்டிக் கொண்டு இருந்தான்‌. அவனின் முன் ஜோஹிதா சில ஸ்னாக்ஸ் ஐட்டங்களை எடுத்து வைத்தாள்.‌


'பரவாயில்ல இவங்களுக்காது விருந்தோம்பல் னா என்னனு தெரிஞ்சிருக்கு. ' என நினைத்தவன் அதைக் கையில் எடுக்காது லாப்டாப்பில் தலையை விட்டிருந்தான்.


'விருந்தோம்பல் வீட்டுக்கு வந்த கெஸ்ட்டுக்கும் ஃப்ரெண்ட்ஸுக்கும் தான் குடுப்பாங்க. வில்லனுக்கு இல்ல. ' வாசுவின் மைண்ட் வாய்ஸ்.‌


" என்ன விசயமா இங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா மிஸ்டர் ருத்ரதேவ்? " எனக் கார்த்திகேயன் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தவன், மீண்டும் லாப்டாப்பிலேயே மூழ்கினான். கார்த்திக்கேயனின் ஃபோன் அலறியது.


அதை எடுத்துப் பார்த்தவன் திரும்பி மீண்டும் தேவ்வை பார்த்தான். அவனோ "ம்… அட்டன் பண்ணி பேசுங்க மிஸ்டர் கார்த்திகேயன்.‌" எனப் பர்மிஷன் கொடுக்க, காண்டானது வாசுவிற்கு. ‘யாரு வீட்டுல வந்து யாருக்கு மேன் ஆர்டர் போடுற நீ.‌' எனப் பொருமினாள் பெண்.


" ஹலோ. "


"மிஸ்டர் கார்த்திகேயன், நான் சிவ்ராம் பேசுறேன். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். இஃப் யூ நோண்ட் மைண்ட் வீடியோ கால் வந்தா நல்லா இருக்கும். " என்க, கார்த்திகேயன் குழப்பத்துடனேயே சரி என்றான்.


ஃபோன் காலைக் கட் கூடச் செய்திருக்க மாட்டான், அதற்குள் தேவ் லாப்டாப்பை அவன் புறம் திருப்பி வீடியோ காலைக் காட்ட, முதலில் நலம் விசாரிக்கப்பட்டது.


"கார்த்திகேயன் இப்ப நான் எதுக்கு கூப்பிடடேன்னா. என்னோட பொண்ணுக்கு இன்னும் டூ வீக்ஸ்ல மேரேஜ்‌ ஏற்பாடு பண்ணிருக்கோம். நீங்களும் உங்க குடும்பமும் அவசியம் வரணும்."‌


" நேர்ல பாத்து பத்திரிக்கை வைக்கலன்னு தப்பா எடுத்துக்காதிங்க தம்பி.‌ என்னோட பையனும் மருமகளும் உங்க வீட்டுக்கு வருவாங்க. நீங்களும் உங்க குடும்பமும் வந்து என்னோட பொண்ணு கல்யாணத்துல கலந்துக்கிட்டு அவளுக்கு உங்க ஆசிய குடுக்கணும்.‌" என்றார் அமிர்தா.


" கார்த்தி மாமா நான் லைட்டா பிஸி. உங்கள நான் அடுத்த வாரம் வந்து பாக்குறேன். ஆனா அப்படி வரும்போது வாசுவ தூக்கிட்டு வந்திடுவேன். நீங்க ஒன்னும் சொல்லக் கூடாது." என்றது க்ரிஷ்.


"ஆமா அங்கிள். " எனக் கணவனின் அழைப்பைத் தாரிகாவும் சொல்ல, கார்த்திகேயனும் ஜோஹிதாவும் சிறிது நேரம் உரையாடினார்கள்.‌‌ கடைசியாக வந்தது நம் ராசாத்தி பாட்டி.


" ஐயா கார்த்தி, இந்த ஆத்தாவோட நாக்கு‌ உன்னோட சோத்துக்கு அடிம ஆகிடுச்சிய்யா. உங்கையால சாப்பிடணும் போல இருக்குய்யா. " என ஏக்கமாகக் கேட்டார்.


"ம்மா... இப்ப மாப்ள எதுக்கு அங்க போயிருக்காருன்னு நினைக்கிற. புவனா கல்யாணத்துல சமையல கார்த்திகேயன் தம்பிட்ட ஒப்படைக்க தான். " என மதன கோபல் சொல்ல, சிவ்ராமும் கார்த்திகேயனிடம் அது பற்றிப் பேசினார். மறுக்க முடியாது சரி எனக் கார்த்தி தலையசைத்தான்.


பொதுவாக இது போன்ற ஆர்டர்களை கார்த்திக்கேயன் ஏற்பதில்லை. ஒரே ஊர் என்றால் கூடப் பரவாயில்லை. வெளி ஊர். தன் ரெஸ்டாரன்ட்டை விட்டுப் பயணிக்க நேரிடும். எது வேண்டுமோ அதை வந்து எங்கள் இடத்தில் உண்ணுங்கள் என்பவன், ராசாத்தியின் குரலுக்காக ஏற்றுக் கொண்டான்.


"இன்டியன் மெனு எல்லாம் உங்களுக்கு என்னோட மனைவி சொல்லுவாங்க. " என்க, குடும்பமே பேசிப் பேசி அந்த மெனுவை லிஸ்ட் போட்டது.‌


அனைவரும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்க இந்தத் தேவ் மட்டும் வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். உடன் ஆர்வமாகக் கார்த்திக்கின் முகம் பார்த்துக் கொண்டு நின்ற வாசுவையும் தான். வீட்டின் உள்ளே நுழைந்ததும் பயந்து போனவள் பின் மெல்ல மெல்ல நார்மலாக மாறத் தொடங்கி இருந்தாள்.


"எனக்குச் சம்மதம் மிஸ்டர் சிவ்ராம். நீங்கக் கேக்குற எல்லாமே உங்க பொண்ணு கல்யாணத்துல இருக்கும். " என்றான் கார்த்திகேயன்.‌


" ரொம்ப நன்றி மிஸ்டர் கார்த்திகேயன். நான்-இன்டியன் ஐட்டம்ஸ் சிலது இருக்கு.‌ அது என்னென்ன தேவ் உங்கிட்ட சொல்வான். நான் இப்பவே உங்களுக்கு அட்வான்ஸ் பே பண்ணீடுறேன்." என்று சொன்னதோடு மட்டுமல்லாது பணத்தையும் பரிவர்த்தனை செய்து விட்டார்.


அனைவரும் பேசிய பின்‌ லாப்டாப்பை மூடி வைத்தவன், கால்மேல் கால் போட்டு அதே தோரனையில் கார்த்திகேயனிடம் கேள்வி கேட்டான்.


"உங்க ரெஸ்டாரன்ட்டு ஸ்டார் பண்ணி எத்தன வர்ஷமா ரன் பண்றிங்க. " எனக் கேட்க, கார்த்திக்கிற்கு கடுப்பாக இருந்தது‌.


'அன்னைக்கி நான் கேட்டப்போ ரொம்ப தெனாவட்டா அலட்சியமாக நின்னிங்க. இப்ப என்னோட கேள்விக்குப் பதில் சொல்லித்தான ஆகணும். ஏன்னா இப்ப நான் உங்க கன்ஸ்டமர். எனக்குப் பதில் சொல்ல வேண்டிய கடம உங்களுக்கு இருக்கு. ' என்பது போல் பார்த்தான்.


" பிப்டீன் இயர்ஸ் ஆகுது. " என்றான் கார்த்திக் பற்களைக் கடித்துக் கொண்டு. ஏனெனில் கார்த்திக் ஒரு சிறுவனிடம் தோற்றுப்‌போவது போல் உணர்ந்தான். அதான் அந்தக் கடுப்பும் எரிச்சலும்.


" ம்… வெரி குட். உங்க சமயல பத்தி சர்டிபிகேட் குடுக்க எங்க ஃபேமிலியே போதும். சோ… நல்லா பண்ணுங்கன்னு சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நான் மெனுவ வாசுக்கு மெசேஜ் பண்றேன். அண்ட்… என்ஜாய் யுவர் டின்னர். " என்றவன் எழுந்து சென்றான்.


"கார்த்திக் அவன நம்ம வீட்டுல சாப்பிட சொல்லிச் சொல்லு. " என ஜோஹிதா மெல்ல கணவனின் காதில் ஓதினாள்.‌


"நீ வச்ச ஸ்நாக்ஸ்ஸையே தொட்டுகூட‌ பாக்காதவன், எப்படி சாப்பிடுவான். அவன விடு. வா நாம சாப்பிடலாம். பாரு அஸ்வின்னுக்கு தூக்கம் வர ஆரம்பிச்சிடுச்சி. கம். " என்றவன் மேஜையில் அமர,


" கார்த்தி சொல்றதும் சரிதா. வா ஜோஹி. " என்ற உஷாவும் மேசையை நோக்கிச் சென்றாள். ஆனால் இரு பெண்களுக்கும் வீட்டிற்கு வந்த அவனை அப்படியே வழியனுப்ப விருப்பம் இல்லை. வாசு சொல்லி இருக்கிறாள் ருத்ராவிற்கு பிடித்த உணவு எது என்று. வேகவேகமாக எதாவது கிடைக்கிறதா என்று தேடிய ஜோஹிதாவிற்கு, இரு சான்விச்கள் கண்ணில் பட, அதைச் சூடு செய்து வாசுவின் கரத்தில் தினித்தாள்.


காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிய அவன் சென்று விடு முன் குறுக்கு வழியில் ஓடிச் சென்று காரை மறித்தாள் வாசு.


" ஸ்டாப் ருத்ரா. " என்றபடி காரின் முன் இரு கரத்தையும் விரித்து நின்றவளுக்கு மூச்சி வாங்கியது.


" ஹேய்… என்னாச்சு ஸ்வீட்டி. எதையாது மறந்து விட்டுட்டு போய்டியா. " எனக் கேட்டபடி கீழே இறங்க, அவள் அந்தக் கவரை அவன் முன் நீட்டினாள். என்ன என அவன் பிரித்துப் பார்க்க,


" சான்வெச் தான். எனக்காக வாங்கி வச்சிருந்தாங்க. " என்க, அவன் அதை வாங்கவில்லை.


"ஸாரி. " என அடுத்து எதுவும் சொல்லாமல் வார்த்தைகளை நிறுத்தினாள் பெண்.


பிஸ்னஸ் பேசவந்த க்ளைண்ட்டாக இல்லை என்றாலும், வீட்டிற்கு வந்த கெஸ்டாகவாது கார்த்திகேயன் மதித்து விருந்தோம்பல் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாதது வாசுவிற்கு கஷ்டமாக இருந்தது. தன் கார்த்திப்பாவை அவனிடம் விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் மன்னிப்பை வேண்டி நின்றாள் வாசு.


"ஓகே… உன்னோட ஸாரிய மட்டுமில்ல இந்தச் சான்வெச்சையும் அக்சப்ட் பண்ணணும்னா ஒரு கண்டிஷன் இருக்கே. " என்றான் குறும்பாக.


" என்ன? "


"நாளைக்கி உன்னோட பொழுத எங்கூட ஸ்பென் பண்ணணும். கேன்சல் ஆன டேட்டிங்கு நாம போகணும். ஓகேவா… " எனப் புருவங்களை உயர்த்தி காரில் சாய்ந்து கொண்டு கேட்க, வாசு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.


" லுக் இன்னும் ரெண்டு நாள்ல நான் லாஸ் ஏஞ்சல்ஸ் போய்டுவேன். அப்றம் ரொம்பவே பிஸி. ஃபோன் பேசக் கூட டைம் கிடைக்காது. சிஸ்டர் மேரேஜ் வேற இருக்கு. நாம டேட் போகக் கரெட்டான நாள் நாளைக்கின்னு நான் சொல்வேன். ம்… என்ன சொல்ற?. " என்றவன் அவள் நீட்டிய கவரை வாங்கி உண்ணத் தொடங்கினான். பசி போலும்.


வேகவேகமாக உண்ட அவனைப் பார்க்கையில் சிறு குற்ற உணர்வு எழ, "சரி நாளைக்கு எத்தன மணிக்கி வர. எங்க போகப்போறோம்?" எனக் கேட்டாள்.


" அது சஸ்பென்ஸ். ரெடியா இரு மார்னிங் எயிட் ஓ க்ளாக் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். நைட் நயன் ஓ க்ளாக் குள்ள நீ வீட்டுல இருப்ப. " என சொல்லிக் காரை எடுத்துச் சென்றான். முழுதாக இரண்டையும் உண்ட பின் தான்.


செல்லும் அவனைப் புன்னகையுடன் பார்த்தவளுக்கு தன் கார்த்திப்பாவின் மீது கோபம் வந்தது.


உள்ளே வந்ததும் வாசு கார்த்திக்கை திட்டு தொடங்கி விட்டாள். " கார்த்திப்பா நீங்கச் செஞ்சது சரி இல்ல. வீட்டுக்கு வந்த ஆள இப்படியா துரத்தி விடுவிங்க. " என்க, ஜோஹிதாவும் மகளுடன் சேர்ந்து கொண்டாள்.


" இப்ப என்ன! நான் அவன உபசரிக்கலன்னு பட்டினியா கிடப்பபோறான். இல்லேல. அப்றம் ஏன் ரெண்டு பேரும் குதிக்கிறீங்க. இந்தா வாசும்மா முதல்ல நீ உக்காந்து சாப்பிடு. " என மகளை‌ அருகில் அமரவைத்து ஊட்டிவிட்டான் கார்த்திக்.


அனைவரையும் மதித்துப் பொறுமையுடன் சிரித்து பேசும் கார்த்திக் ஏனோ ருத்ராவிடம் மட்டும் அலட்சியமாகவே நடந்து கொண்டான். காரணம் என்னவாக இருக்கும்.‌


ஒருவேளை அவனின் உணவகத்தை விலை பேச வந்தற்காக இருக்குமோ. இல்லை அவனின் செல்ல மகளின் மனத்தைக் கவர்ந்ததால் இருக்குமோ. இருக்கும் இருக்கும். இரண்டு காரணங்களுமே இருக்கும்.


அல்லது இரண்டும் அல்லாது வேறொரு காரணம் இருக்குமோ?.


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


நேசிப்பாயா 38

நேசிப்பாயா 40


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...