முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 40


 

அத்தியாயம்: 40


மருத்துவமனை.


ஓர் அறையின் உள்ளே நேவி ப்ளூ என்று சொல்லப்படும் நீல நிறத்தில் உடை அணிந்த செவிலியரும் வெள்ளை கோர்ட் அணிந்த மருத்துவரும் இருந்தனர். அனைவரும் ஸ்டெக்சரில் கிடந்த நோயாளியின் கண்ணிமைகளை இழுத்துப் பார்த்து டார்ச்சை‌ அடிக்க, ஒருவர் கை விரலில் க்ளிப் போட்டு இதயத்துடிப்பை அளந்தார்.


என்னவென்று பெயர் சொல்ல முடியாத சில பல இயந்திரங்களால் அங்குப் படுத்திருந்தவளின் உடல் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.


வெளியே‌ தேவ் குறுக்கும் நெடுக்கும்மாக நடந்து கொண்டிருந்தான். அனைவரும் அவனுக்கு வித்தியாசமான பார்வை ஒன்றை தந்துவிட்டு கடந்து சென்றனர்.


ஏனெனில் இரவு‌ உடை என்ற பெயரில் தன் முட்டியை கூட மூடாது தொடை வரை மட்டுமே இருக்கும் ஒரு ஷாட்ஸ், மேலே கை இல்லாத டீசர்ட். இல்லை இல்லை பனியன் என்று சொன்னால் சரியாக இருக்கும்.


மருத்துவமனையில் இப்படி அறையும் குறையுமாக ஆடை அணிந்து கொண்டு ஓரிடத்தில் நிற்காது நடந்து கொண்டும், செவிலியர்களை கத்திக் கொண்டும் இருந்தால் யார் தான் அவனைத் திரும்பி பார்க்கமாட்டார்கள்.


டென்ஷன்… டென்ஷன்... டென்ஷன்... லாட் ஆஃப் டென்ஷன்.‌


ஆனால் அவனுக்கு இருக்கும் டென்ஷனில் ஒரு சதவீதம் கூடக் கையில் பிஸ்கட் பாக்கெட்டுடன் அமர்ந்திருந்த கார்த்திகேயனைக்கு இல்லை.


கார்த்திக்கைப் பார்க்கும் போதெல்லாம் சட்டையைப் பிடித்திழுத்து கன்னம் கன்னமாக அறைய வேண்டும் என்ற வெறி பிறந்தது தேவ்விற்கு. ஆனால் முடியாதே. தன் மனம் விரும்பியவளை பெற்றவன் ஆயிற்றே.


' அப்பாவா இருந்து என்ன ப்ரயோஜனம். உள்ள மயக்கம் போட்டுக் கிடக்குறது தன் பொண்ணுதாங்கிற நினப்பே இல்லாம உக்காந்து பிஸ்கட்...‌ ச்ச… இந்தாள திட்டவும் முடியாது. அடிக்கவும் முடியாது. அப்படி பண்ணா வாசு கூடச் சண்ட வரும். ஆனாலும். இந்தாள. ' என மனதிற்குள் பொறுமிக் கொண்டு இருந்தான்.


கார்த்திகேயன், ‘உனக்கு வேண்டுமா?’ என்பது போல் பிஸ்கட்டை நீட்டினான்.


" வாசு சுயநினைவு இல்லாமா உள்ள படுத்துக் கிடக்கா. ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கு. அந்த நினப்பு உங்களுக்கு இருக்கா இல்லையா. " என காட்டமாகவே கத்தினான்


"ம்… இருக்கு. அதுனால தான் சாப்பிடுடு இருக்கேன். மணி எட்டாகுது. என்னோட ப்ரேக் ஃபஸ்ட் டைம் இது. காலைல இருந்து நான் ஒன்னுமே சாப்பிடலப்பா.‌" என்க பற்களைக் கடித்தான் தேவ்.


"ஒருவேள சாப்பிடலன்னா செத்தா போய்டுவோம். "


" இல்ல தான். பட் வீக்காகிடுவேனே. " என நக்கலாகச் சொல்ல,


'இவெங்கிட்ட போய்ப் பேசுறேன் பாரு ச்ச... ' என்றிருந்தது தேவ்விற்கு. மீண்டும் விட்ட இடத்திலிருந்து தன் நடை பயிற்சியைத் தொடர்ந்தான் அவன். அதே டென்ஷனாக.


அவனுக்கு வாசுவைப் பார்க்க வேண்டும். அவளின் குரலைக் கேட்க வேண்டும். ஏன் மயங்கினாள் என்ற காரணம் தெரிய வேண்டும்.


'என்ன மயங்கிட்டாளா? அப்ப இவங்க அவுட்டிங்க போகலையா?’ நம்ம மைண்டு வாய்ஸ். 


அதிக டென்ஷனாக இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.


ஆனால் கார்த்திக், தேவ்வைச் சுவாரஸ்யமான பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு ருத்ராவின் இந்த நிலை பிடித்திருந்தது. தன் மகளுக்காக இன்று காலை அவன் கண்ணில் வந்த நீர், பதைபதைப்பு எல்லாம் எல்லாம் வாசுவிற்காக தன் மகளிற்காக என்பதால் ருத்ராவின் காதல் மனம் கார்த்திக்கை கவர்ந்தது.


'லவ் பண்றான்‌ போலப் பயெ. அதா ஒரே டென்ஷன்.' என நினைத்துத் தேவ்வின் டென்ஷனை ரசித்தான்.


'ஏன் இந்தாளு இப்படி பாக்குறான்.' என்பது போல் பார்த்தான் தேவ்.


"கார்த்திக்… கார்த்திக் என்னாச்சு? ஏன் ஃபோன் பண்ணி ஹாஸ்பிடலுக்கு வரச் சொன்ன? வாசு... வாசுக்கு என்ன? அவளுக்கு என்னாச்சி? சொல்லு கார்த்திக். " என ஜோஹிதா பயத்துடன் கேட்டபடி வந்தாள்.


"உங்கப் பொண்ணு உள்ள இருக்கா. அன்கான்ஸியஸ்ஸா. சுயநினைவே இல்லாம உள்ள படுத்திருக்கா. ஆனா... ஆனா... உங்க ஹஸ்பென்ட் சின்னப்பயென் மாறிப் பிஸ்கெட் சாப்டுட்டு இருக்காரு. ஹாஸ்பிட்டல்க்குத் தூக்கிட்டு வந்து சேத்தது கூட நான் தா‌ன். இவரு எதுவுமே பண்ணல. " எனக் கார்த்திக்கை முறைத்துக் கொண்டே குற்றம் சாட்டும் குரலில் சிறுவன்போல் சொல்ல, கார்த்திக் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.


" மாப்ஸ்... இங்க பக்கத்துல சாப்பிட என்ன இருக்குன்னு பாத்து, எதாவது வாங்கிட்டு வாயேன். பாக்கெட் காலியாகிடுச்சி. " என முருகனிடம் சொல்ல அவர் தேவ்வை பார்த்தபடி சென்றார்.


அது 'இந்த வெள்ள கொரங்கு ஏன் பாக்க இப்படி இருக்கு.' என்பது போல் இருந்தது.


"என்ன தூக்கிட்டா?" ஜோஹிதா குழப்பத்துடன் பார்க்க,


"நீங்கக் கொண்டு வந்து சேத்திங்களா? " உஷா.


"அவ எதுக்கு உங்கள பாக்க வந்தா?. அதுவும் இந்தக் காலை நேரத்துல.‌" ஜோஹிதா.


"நேத்து தான ரெண்டு பேரும் வெளில போய்ட்டு வந்திங்க." உஷா.


"எங்கெங்க போனிங்க.?" ஜோஹிதா.


"அன்கான்ஸியஸ் ஆகுற அளவுக்கு என்ன நடந்தது உங்களுக்குள்ள?" எனச் சரமாரியாகக் கேள்விகளை உஷாவும் ஜோஹிதாவும் அடுக்கினர். அவன் கார்த்திக்கைப் பார்த்தான், ஏதாவது பேசி அவர்களைச் சமாளிப்பான் என்பதற்காக.


ஆனால் அவனோ வழக்கம்போல் தன் கிண்டலான சிரிப்புடன் புருவங்களை உயர்த்திப் பார்த்தபடி இருந்தான்.


அது தேவ்வைப் பார்த்து, ‘தம்பி இன்னும் பதில் வரல.‌ உங்களத்தான் கேக்குறாங்க. சொல்லுங்க. ' என்பது போல் இருந்தது. அதனால் தேவ் கோபமாக மருத்துவமனையை விட்டுச் சென்றான். பதில் ஏதும் சொல்லாமல்.


'ச்ச...‌ என்ன மாறியான ஃபேமிலி இது. பொண்ணு மயக்கம் போட்டுடுச்சின்னு சொல்றேன். அவளுக்கு என்ன ஏதுன்னு பாக்காம வந்து எங்கிட்ட கேள்வி மேல கேள்வியா அடுக்கி‌க் கிட்டு இருக்காங்க. ச்ச... ' என மனதிற்குள் திட்டிக்‌கொண்டே தன் காரை‌ எடுத்துச் சென்றான், கடை ‌வீதிக்குச் சென்று உடை வாங்க.‌


இப்போது அதே கேள்விகள் கார்த்திக்கிடம் கேட்கப்பட்டன.


"கார்த்திக் என்னாச்சி? நீயாது சொல்லேன். " ஜோஹிதா.


" ஒன்னுமில்ல.‌ பயந்திருக்கான்னு நினைக்கிறேன். சரியாகிடும். " என்க, ஜோஹிதா அறைக்கு உள்ளே எட்டிப்பார்த்தாள்.


அப்போது உள்ளிருந்து வந்த மருத்துவர், " சின்ன மயக்கம் தான். பயந்திருப்பாங்க போல. சீக்கிரமா கண்ண முழிச்சிடுவாங்க. nothing to don't worry. " எனக் கார்த்திக் சொல்லியதை சற்று விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேவ் வேகவேகமாக ஓடி வந்து கார்த்திக்கையும் முருகனையும் இடித்துத் தள்ளி விட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டான்.‌


ட்ராக் ஃபேண்ட் டீசர்டுமாக வந்தவன், அந்த மருத்துவரைத் துருவி துருவி கேள்வி கேட்டான். 'எதுனால மயக்கம் போட்டா? அவளுக்கு என்ன ஆச்சி? இன்னும் ஏன் கான்ஸியஸ் வரல? எப்ப தான் கண்ணு முழிப்பா? என்ன தான் ட்ரீட்மெண்ட் பாக்குறிங்க? நீங்க டாக்டர்ஸ் தானா?' என விடாது கேட்க, அந்த டாக்டர் இவனை 'லூசா இவன். ' என்பது போல் பார்த்தார்.


"இது சின்ன மயக்கம் விட்டிருந்தா பத்து நிமிசத்துல அவங்களே எழுந்து நடமாடிருப்பாங்க. அதுக்கு போய் இங்கத் தூக்கிட்டு வந்து... எங்களக் கத்தி... நீங்களும் பயந்து. ஏன் ஸார்? ஏன்??" என அவர் கேட்க,


" டேமிட்… ஒரு டாக்டர் மாறிப் பேசுங்க. ஏன் ஹாஸ்பிட்டல்ல தூக்கிட்டு வந்தன்னு கேக்குறீங்க. லூசா **. வாசு ஏன் கண்ணு முழிக்கலன்னு கேட்டா… கண்டதப் பேசிட்டு இருக்க. " எனக் கத்தினான்‌.


" சரி நான் டாக்டரா மாறிப் பேசுறேன். இப்ப ட்ரீட்மெண்ட் பாக்க வேண்டியது அந்தப் பொண்ணுக்கு‌ இல்ல. உங்களுக்குத் தான். நான் பக்கத்து பெட்ட ரெடி பண்றேன். " என்றபடி சென்ற அந்த மருத்துவரைத் தாக்க தயாரான தேவ்வை கார்த்திக் தான் பிடித்திழுத்து அமரச் செய்தான்.


"ஆமா, இந்தப் பையனுக்கு என்னாச்சி? ஏன் உடம்பெல்லாம் பூச்சி கடிச்ச மாறிச் சிவப்பு சிவப்பா இருக்கு. ஒரே வேள ரபிஸ் நோயா இருக்குமோ! " சற்றுத் தள்ளி அமர்ந்த தேவ்வைப் பார்த்தபடி உஷா கேட்டார்.


"சும்மா இரு உஷா." ஜோஹிதா கண்டிக்கும் குரலில்.


" மச்சி ஒரு வேள நம்ம பொண்ணு இவனோட இந்த விநோத விசித்திர முகத்த பாத்து தான் மயக்கம் போட்டு விழுந்திருக்குமோ.?" முருகன் சந்தேகமாகக் கேட்டார்.


"இருக்கும் இருக்கும். எனக்கே பாக்க ஒரு மாதிரித் தான் இருக்கு. என்னைக் கேட்டா அந்தப் பையனத்தா‌ன் பெட்ல வச்சி பாக்கணும். நம்ம வீட்டுக்கு வரும்போது கூட நல்லா தான இருந்தது இந்தத் தம்பி. ஏன் திடீர்னு அம்மப் பொக்கலம் வந்தா மாதிரி மாறிடுச்சி." எனத் தேவ்வை பற்றி ஆராய்ந்து பேச, அது தூரத்தில் அமர்ந்திருந்த தேவ்வின் காதுகளில் நன்கு விழுந்தது. பற்களைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.


"அது அலர்ஜி ஜோஹிதா. டேப்லெட் போட்டிருப்பான். சரியாகிடும். " என்றான் கார்த்திக்.


நிஜமாவே தேவ்வின் உடல் முழுவதும் தட்டை தட்டையாகச் சிவந்து இருந்தது. ஏன்? இந்த வாசுவிற்கு என்னானது?. ஏன் மயக்கமடைந்தாள்? என்று தெரிந்து கொள்ள நாம் இவர்கள் இருவரும் சென்று வந்த அவுட்டிங்க்கு தேதிக்கு காலப் பயணம் செய்யவேண்டும்.


போலாமா...


காலை ஏழு மணிக்கே வாசு ரெடியாக இருந்தாள். தன்னைப் பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்து கொள்ள, ஜோஹிதா தான் முகத்தைத் தூக்கி‌ வைத்துக் கொண்டு இருந்தார். அவளுக்கு இந்த டேடிங் என்ற பெயரில் பப்ளிக்காக ஊர் சுற்றுவது பிடிக்கவில்லை.


பயந்து பயந்து அப்பா அம்மாவிற்கு அண்ணன்களுக்கு எனத் தெரியாமல் கார்த்திக்கைப் பார்தது, பேசியதுமாக இருந்த அவளுக்கு வாசுவின் இந்த வெளிப்படையா பேச்சும் நடவடிக்கையும் ஒரு பக்கம் பயமாக இருந்தாலும், ஒரு பக்கம் பிடித்தும் இருந்தது. பெற்றவர்களை நண்பர்களாகப் பாவித்து மனம் விட்டுப் பேசும் போதும் பிள்ளைகளின் மனத்தை பெற்றவர்களால் நன்கு அறிந்து கொள்ள முடியும்.


வாசுவின் மனம் ருத்ராவை விரும்புவதை அறிந்த முதலே அவள் ருத்ராவைப் பற்றியும் அவனின் குணங்களை பற்றியும் விசாரித்துத் தான் வந்தாள். ஒரு தாயாக. அது சற்று திருப்திகரமானதாகவே இருந்தது. ஆனாலும்,  வயதுப் பெண்ணின் அம்மாவாக யோசிக்கும் போது சிறு பயம்.


"கார்த்திப்பா எனக்கு ரொம்ப எக்சைட்மெண்டா இருக்கு. கூடவே பயமாகவும் இருக்கு. "


" ஏன்டா.? நீ ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன். " என்றவன் அவளுக்குக் காலை உணவை ஊட்டி விட்டுக்கொண்டிருந்தான்.


"தைரியம் இருக்கு கார்த்திப்பா. ஆனா ருத்ராவ பாக்கும்போது மட்டும், என்னோட எந்தச் சென்ஸ்ஸும் வெர்க் ஆக மாட்டேங்கிது. அதுக்கான காரணம் என்ன கார்த்திப்பா?." எனக் கேட்க,


"காரணத்த நீ‌தான் தேடி கண்டு பிடிச்சி தெரிஞ்சுக்கணும். ஆனா ஒன்னு. உன்னோட மனசு ஒருக்க ஒருத்தன விரும்பிட்டா, இவெந்தான் நமக்கான லைஃப்னு சொல்லிட்டா, அவன எந்தச் சூழ்நிலையிலும் விட்டுடாத. உன்னோட மைண்ட் சொல்றத விட. ஹார்ட் சொல்ற கேளு. இந்த விசயத்துல அது தான் உனக்கு உதவும். ஆல் தி பெஸ்ட். " என்க, அவனை அணைத்துக்‌ கொண்டாள் வாசு.


" நல்லா இருக்கு!. பொண்ணு டேட்டிங் போறாலாம். அத அப்பங்காரனே வழி அனுப்பி வைக்கிறானாம். என்ன கொடுமடா இது?" உஷா‌ சலித்து கொள்ள,


" அப்ப நீங்க எனக்கு‌ ஒருத்தனோட ஃபோன் நம்பர் தந்தது, அவன பாத்து பேசச் சொல்லி அனுப்புனது… அதுக்கெல்லாம் பேரு என்ன ஆண்டி?. சோஷியல் சர்வீஸா!. பேசிப் பாக்க பழகிப் பாக்கன்னு ஒரு டைம் தர்றீங்கள்ல அதுக்கு பேர் தான் டேட். வேற எதுவும் கிடையாது. போய் நல்லதா எதாவது வேலை இருந்தா பாருங்க. ஹிம்..


அப்றம் உங்க பையனோட ஆக்டிவிட்டியா நல்லா கவனிங்க. ஏன்னா அவனுக்கும் ஒரு பொண்ணு ஃப்ரெண்டா இருக்கா. முந்தாநேத்து அவ கூட க்ளாஸ்ஸா கட்டடிச்சிட்டு ஊர் சுத்தினான். " என அஸ்வினை போட்டுக் கொடுக்க,


"ம்மா... அப்படில்லாம் இல்லம்மா. வாசுக்கா ஏன் இப்படி பண்ண?" என அடிக்க வரும் அன்னையிடமிருந்து தப்பித்து ஓடினான் அஸ்வின்.


பார்க்...


அங்கு தான் காத்திருப்பதாகத் தேவ்விற்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள். அவளை‌க் காத்திருக்க வைக்காது அவளுக்கு முன்னதாகவே வந்திருந்தான் தேவ். காரில் சாய்ந்து கொண்டு தன் சிகையை விரலால் வருடியபடி நின்ற அவனின் தோற்றம் அவளைக் கவர்ந்தது.


" ஹாய்‌ ருத்ரா. நான்... ரெடி. " என்க.


" You look gorgeous. " என்றான் தேவ் ரசிக்கும் பார்வை பார்த்தபடி.


த்ரீ பை ஃபார்த் என்று சொல்லப்படும் கனுக்கால் அளவுக்கு ஃபேண்ட் அணிந்திருந்தாலும் இடையில் சிறிய மினி ஸ்கர்ட் ஒன்றை அணிந்திருந்தாள் வாசு. தன் கரம் முழுவதையும் மூடி உடலை இறுக்கி பிடித்த மேலாடையின் இடையே மெல்லியதாக அவளின் இடை எட்டி பார்த்தது. கர்ல் என்ற பெயரில் சுருட்டப்பட்டு தோளில் ஊஞ்சலாடிய அவளின் சாயம் பூசிய குழல் சிவப்பு நிற கடலலை போல் அவள் நடக்கும் போது எழும்பியது. பெரிய வளையங்களைக் காதில் தொங்க விட்டிருந்தாள்.


இவை எல்லாம் அவளின் அழகை மெருகேற்றி காட்டினாலும், ருத்ராவை கவர்ந்தது‌ அவளின் மூக்குத்தி. அணியும் ஆடைக்கு ஏற்ப அதன் கற்களை மாற்றிக் கொண்டே இருப்பாள். இன்று அவள் தேர்ந்தெடுத்து கரும்பு நிறம்.


தன் வசீகர புன்னகையுடன் ருத்ரா வாசுவை வரவேற்கவென மிகவும் லேசாக அணைக்க, அதுவே வாசுவின் மனத்தை‌ படபடக்கச் செய்தது.


'ஓவ்... ஓப்பனிங்கே இப்படின்னா. பினிஷிங் எப்படி இருக்கும். எப்படித் தான் இவங்கூட இந்த நாள் முழுக்க ஸ்பென்ட் பண்ண போறேன். கடவுளே. எனக்கு எதுவும் ஆகாம என்னோட கார்த்திப்பாட்ட கொண்டு வந்து சேந்துடுப்பா. ' என வேண்டிய படியே காரில் ஏறி அமர்ந்தாள்.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


நேசிப்பாயா 39


நேசிப்பாயா 41



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...