முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 41

அத்தியாயம்: 41


எத்தனை முறை


யோசித்தாலும் ஞாபகம் 


வர மறுக்கிறது


உன்மேல் நான்


காதல் கொண்ட


அந்த நொடி….


இன்றையபொழுது எப்படி இருக்கப் போகிறதோ என்று சிறு நடுக்கத்துடன் தான் காரில் ஏறினாள் பெண். ஆனால் அது தேவையற்றது என்று உணர்த்தி விட்டான் ருத்ரா.


"சர்ப்ரைஸ். " எனப் பின் ஷீட்டிலிருந்து பல குரல்கள் கேட்டன. அவளின் நண்பர்கள் தான். ரானை தவிர மற்ற மூவரும் வந்திருந்தனர்.


"மெய்ஸி... லிண்டா... விக்டர்... எப்ப வந்திங்க. ஹாலிடேஸ்ஸா என்ன? " என ஆவலுடன் கேட்டு அவர்களை அணைத்துக் கொண்டாள் வாசு.


" ஹேய், ஹாலிடேஸ்லாம் இல்ல. உன்னைப் பாக்கத்தான் வந்தோம். " என்றாள் லிண்டா.


"சொல்லப் போனா எங்கள வர வச்சாரு. " விக்டர்.


"வர வச்சாரா! யாரு? "


"உன்னோட பாய் ஃப்ரெண்ட். " மெய்ஸி சொல்ல வாசு குழம்பிப் போய் ருத்ராவை பார்த்தாள். அவன் சிறு புன்னகையுடன் கண்‌சிமிட்டி விட்டுக் காரை ஸ்டார்ட் செய்தான். காரில் நால்வரின் பேச்சுச் சத்தம் மட்டுமே கேட்டன.


மெய்ஸி, " ஆக்சலி உனக்கு இது தான் ஃபஸ்ட் டேட். இல்லயா."  


வாசு, "எஸ், நான் இதுவர டேட்ன்னு எங்கயும் யார் கூடயும் போனது இல்ல. " 


"அதுனால உன்ன கம்ஃபட்டபுல்லா வச்சிக்க. எங்க எல்லாரையும் வரவச்சிருக்காரு. " என்றான் விக்டர்


மெய்ஸி, "நீ கவலையே படாத. ஆப்டர்நூன் நாங்க கலண்டுக்கிவோம். "


"அதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேர் மட்டும் தான். என்ஜாய் யூவர் டேட்." என லிண்டா கண்சிமிட்டி சொல்ல, 


"ரான் எங்க? " என வாசு கேட்டாள்.


" அவனுக்கு நீ இன்னொருத்தர் கூட அவுட்டிங் போகுறத பாக்குற அளவுக்கு மனசுல தெம்பில்லயாம். அதுனால ஆல் தி பெஸ்ட் மட்டும் சொன்னான். " லிண்டா.


"ஆனா அவெ கடவுள் கிட்ட இந்த அவுட்டிங் நல்லபடியா முடியக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்னு சொன்னான். "


"ஏன்?"


"அப்பத் தான் அவன நீ பாய் ஃப்ரெண்ட்டா ஏத்துக்கிறத பத்தி கன்சிடர் பண்ணுவியாம். " என்க, வாசு ஃபோன் செய்து அவனைத் திட்டித் தீர்த்தாள்.


வெகுநாள் கழித்து நண்பர்களுடன் இருப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டிருந்தபடி mission peak என்ற மலை குன்றிற்குத் தான் சென்றனர்.

மலை ஏறுவது என்றால் கற்களும், பாறைகளும், மரங்களும் அடர்ந்து இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அது சறுக்களான மண் பாதை கொண்ட மலை. இரு புறம் பச்சை பசேல் எனப் புற்கள் இருக்கும்.


நாம் சிறு வயதில் இயற்கை ‌காட்சி வரைய வேண்டும் என்றாலே வளைவாக நான்கைந்து மலைகளை வரைந்து, அதில் நெளிவானப் பாதை‌ அமைத்து, பச்சை நிற வண்ணம் தீட்டி வைப்போமே, அதுபோல் தான் இருக்கும் அந்த peak வசந்த காலத்தில்.


கரம் கோர்த்த படி. பேசிக்கொண்டே கிட்டத்தட்ட 3 மணி நடந்து சென்று அதன் உச்சியை அடைந்த பின்னும் நிழல் தர மரங்களே கிடையாது. ஆனால் மாலை வேலையில் சூரியன் மறையும் காட்சியை அதில் காணும்போது வெகு அழகாய் இருக்கும். நம் கன்னியாகுமரியில் கடலுக்குள் மறைந்து செல்லும் சூரியன் ஒரு அழகென்றால். மலைகளில் ஒளிந்து கொள்ளும் இந்த ஆதவன் தனி அழகு.


ஆனால் ருத்ரா சூரிய உதயத்தையோ அஸ்தமனத்தையோ காட்ட கூட்டிச் செல்லவில்லை. அது குளிர்காலம். பல இடங்களில் பனி மூட்டங்கள் படர்ந்து நம் கண்ணை மறைத்துவிட்டது. அந்த peakன் மேல் நின்று பார்க்கும்போது அந்தப் பனி மேகங்களுக்கு மேல் நாம் நிற்பது போன்ற ஓர் உணர்வைத் தரும். அந்த உணர்வைத் தரத்தான்‌ அழைத்துச் சென்றான்.

பழைய படங்களில் சொர்க்கத்தை காட்சி படுத்த எனப் புகையைக் கிளப்பி மேகங்களைப் போல் செட் அமைத்திருப்பர். இங்கு அந்தச் செட்டிங் தேவையில்லாதது.


வாசுவின் நண்பர்கள் ருத்ராவை தனித்து விடவில்லை. மெய்ஸி அவனின் கூடவே நடந்தபடி வாசுவின் சேட்டைகளைச் சொல்லிக் கொண்டே வந்தாள்.


அவனும் தன் கல்லூரி கால அனுபவங்களைச் சொல்ல, கேலியும் கிண்டலுமாக அந்தப் பகல் பொழுது இனிமையாய் முடிந்தது. மாலை உணவிற்கு பின் அவர்கள் சென்று விட, வாசுவிற்கு தேவ்வுடன் தனித்து இருக்கிறோம் என்ற உணர்வானது எழவே இல்ல.


"ருத்ரா அடுத்து நாம எங்க போகப்போறோம். " என ஆவலுடன் கேட்க, அந்த ஊரில் எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கெல்லாம் இருவரும் சேர்ந்து சுத்தினார். 


கடைசியாக ஒரு டிரைவின் தியேட்டரில் மூவி பார்க்கச் சென்றனர். அதாவது காரில் அமர்ந்தபடியே படம் பார்ப்பது.


ஆங்கில படம் தான். ஆனால் அனிமேஷன் படம். அந்த இருளில் மின்னிய அவளின் முகமும். புன்னகை சிந்தி பார்க்கும் அவளின் ரசனையும் அவனைப் பெரிதும் கவர்ந்திருந்தது. அவளுடன் இருக்கும்போது நேரம் சென்றதே தெரியவில்லை.‌ நொடிகளாய் மாறிச் சென்றிருந்தது அன்றைய நாள்.


மணி ஒன்பதை‌ தொட உள்ளது. இனி வீட்டிற்கு வாசுவைக் கொண்டு விட்டு விட்டால், அவர்களின் முதல் டேட் முடிந்து விடும். டின்னருக்கு என ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர் இருவரும். ருத்ரா வழக்கம்போல் பாஸ்தாவை ஆர்டர் செய்தான்.


" இதுல என்ன டேஸ்ட் இருக்கும். டெய்லியும் சாப்பிடுற.‌" எனக் கேட்டாள் வாசு. ஏனெனில் ஹோட்டலில் தங்கியிருக்கும்போது அவனின் மெனு வகைகளை அவள் அறிவாளே. அதில் பாஸ்தா இடம் பெறாத நாளே இல்லை எனச் சொல்லலாம்.‌ அவனின் உணவு முறைகள் அனைத்தும் உப்பு‌ சப்பு இல்லாமல் இருந்தது.

பாஸ்தாவாகவே இருந்தாலும் ஸ்பைஸி ரகங்களும் உண்டு. அதாவது அதைக் காரமாகக் கூட உண்ணலாம். ஆனால் அவன் காரம் சேர்த்துக் கொள்ளவில்லை. அதைத் தான் வாசு ஏன் என்று கேட்கிறாள்.


" எனக்கு இது தான் பிடிக்கும். I like it. உனக்கு. " என்க,


"நல்லா காரமா இருக்குறது தான் எனக்குப் பிடிக்கும். கார்த்திப்பா எனக்கு ஆந்திர டிஸ்னு சொல்லிச் சில ஐட்டம்ஸ் செஞ்சி தருவாரு. செம்மையா இருக்கும். சில சைனீஸ் ஃபுட், மெக்ஸிக்கன், இட்டாலி ஃபுட்ஸாவே இருந்தாலும் காரமா இருந்தா… எனக்கு டபுள் ஓகேன்னு சொல்வேன்." என்றவள் அவளுக்குப் பிடித்தது போல் உணவு ஆர்டர் செய்தாள்.


இருவரும் தங்களின் விருப்பங்களையும் ரசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். வாசு ருத்ராவிடம் அதிகமாகவே கேள்வி கேட்டாள். ஏனெனில் அவளுக்கு அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருந்தது. அவளின் அத்தனை கேள்விகளுக்குச் சலிக்காது பதில் சொல்லிக் கொண்டே வந்தான்.

முழு நாளும் முழுந்தது. அத்தோடு எட்டிப் பார்த்தாள் அவளின் வீடு. ஆனால் அவளை இறக்கி விட மனமின்றி தூரத்திலேயே காரை நிறுத்தினான் ருத்ரா.


" How was the day. Feeling better. " என அவளின் முதல் அனுபவம் குறித்து கேட்க,


"‌ betterலாம் இல்ல. Best னு சொல்வேன். ரொம்ப நன்றி. எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிச்சதே நீ என்னை ஹன்டில் பண்ற விதம் தான். என்ன பண்ணா, நான் நல்லா ஃபீல் பண்ணுவேன்னு யோசிக்கிற உன்னோட தாட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தேங்க்ஸ். " என்றவள் கீழே இறக்க போக,


அவன் காரை ஸ்டார்ட் செய்து ஒரு முறை ஆக்ஸிலேட்டரை அழுத்தி விடுவித்தான். கார் சில மீட்டர்கள் உருண்டு நின்றது. அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் கதவைத் திறக்கப் போக, ருத்ரா மீண்டும் ஆக்ஸிலேட்டரை அழுத்தினான்.


"What ருத்ரா. " என்றால் முகம் கொள்ளாப் புன்னகையுடன்.


" நீ என்னை விட்டுடு போறது எனக்குப் பிடிக்கல.‌" என்றான் ஆழ்ந்த குரலில்.


"அதுக்காக உங்கூடவே வர முடியாதே. "


" வரலாம். நீ மனசு வச்சா. " என்க, அவளின் முகம் நாணத்தில் சிவந்தது.


" அந்த மாதிரியான பெரிய முடிவ நான் மட்டும் தனியா எடுத்திட முடியாது. எனக்கு. " என இழுக்க,


"கார்த்திப்பா பர்மிஷன் வேணும். சரியா. " என்க, அவள் இதழ்களை மடித்து ஆம் என வேகமாகத் தலையசைத்தாள்.‌


" இன் கேஸ் உன்னோட கார்த்திப்பாக்கு என்னைப் பிடிக்கலன்னா… நாம ரெண்டு பேரும் பழகுறது, பேசுறது பிடிக்கலா, எங்கூட பேசக் கூடாதுன்னு சொன்னா. "


" அப்படில்லாம் சொல்லமாட்டாரு. "


"ஒரு வேள எதாவது சந்தர்பத்துல எங்கூட பேசாதன்னு சொன்னா என்ன பண்ணுவ. "


"பேசமாட்டேன். " என்று சட்டென வந்த பதிலில் காதல் கொண்ட அவனின் மனம் சோர்ந்து போனது. அவன் காரை ஸ்டார்ட் செய்து ஓட்ட,


"ஹேய், ஹேய்… சில்… அப்படி சொல்லமாட்டாரு. கார்த்திப்பாக்கு என்னோட மனசு தெரியும். எனக்கு பிடிச்ச எதையும் வேண்டாம்னு சொல்ல மாட்டார். பிடிக்காதத ஃபோர்ஸ் பண்ண மாட்டாரு. சோ... அப்படி நடக்க வாய்ப்பில்ல. " என்றதும் அவனின் மனம் சற்று தனித்திருக்க வேண்டும்.


"அப்ப உன்னோட மனசுல நான் இருக்கேன்னு சொல்ல வர்ற. " என்க, அவள் அவனைக் காணாது ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். திரும்பி இருந்தாலும் அவளின் நாண முகமும், வெட்க சிரிப்பும் அவளைக் காட்டிக் கொடுத்தது.. ரிவர்வியூ மிரர் வழியே அதைக் கண்டவன் அவளின் வீட்டில் நிற்காது தாண்டிச் செல்ல, 


"ருத்ரா வீடு அங்க இருக்கு. "


"ம்… அங்க தான் இருக்கு. அதுக்கு என்ன இப்ப. "


"ஏன் கார நிப்பாட்டாம ஓட்டுற. "


"ஏன்னா நம்ம டேட் முடிய இன்னும் ஃபிப்டீன் மினிட்ஸ் டயம் இருக்கு. நான் அத வேஸ்ட் பண்ண விரும்பல. அதுமட்டுமில்லாம இது நம்ம ஃபஸ்ட் டேட். சோ.. நான் சொல்ற ஒன்ன நீ செய்யணும். நீ சொல்ற ஒன்ன நா செய்யணும். ‌இது டேட்டிங் ரூல். தெரியும் தான. " என்க, அவன் ஏடாகூடமாக எதையாவது கேட்பானோ எனச் சிறு பயம் வந்து விட்டது வாசுவிற்கு. நகம் கடித்தபடி வழிகள் படபடக்க அமர்ந்திருந்தவளிடம்,


"ஹேய்... ஹேய்... ஓவரா திங்க் பண்ணாத. ஓகே... பத்து நாள் தான் இருக்கு என்னோட சிஸ்டர் மேரேஜ்க்கு. கெஸ்ட்டு மாறி நீ கல்யாணத்தன்னைக்கி வந்துட்டு உடனே திரும்பிப் போறதுல எனக்கு விருப்பம் இல்ல. சோ… என்னோட விஷ் இது தான். என்னோட வீட்டுல ஒரு ஃபைவ் டேஸ் நீ வந்து தங்கணும். நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன், நீ அங்க சேஃபா இருப்ப.‌. அம்மா, அத்தை, தன்யா, பாட்டின்னு எல்லாரும் இருப்பாங்க. இதுக்கு நீ நோ சொல்லக் கூடாது. என்ன முடியும் தான?" என அவளை பார்த்துக் கேக்க, வாசு அமைதியாகிவிட்டாள்.


'அஞ்சி நாள் இவனோட வீட்டுல தங்குறதா! கார்த்திப்பா என்ன சொல்வாரு. ஜோஹிம்மாவும் உஷா ஆன்டியும் என்னைப் பேசியே கொன்னுடுவாங்களே. அதோட இவெங்கூட ஒரே வீட்டுல… இவெனப் பாத்துட்டே எப்படி?’  என யோசித்தபடி இருக்க,


" என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட. "


"இல்ல அது..." என இழுக்க.


"ஒரே வீட்டுல தான் இருக்க சொன்னேன். ஒரே ரூம்ல. ஒரே பெட்ல இல்ல. " எனச் சற்று சூடாகவே சொன்னான் ருத்ரா. 


பின்னே இத்தனை யோசன யோசித்தால் சூடாகத்தான் செய்யும் வார்த்தை.


" ஓகே… உன்னோட விஷ் என்ன? என்னித தான் நீ செய்ய மாட்டியே. உன்னிதயாது சொல்லு. " என்க.‌ அவளுக்குள் அந்த விபரீத எண்ணம் வந்தது.


"ருத்ரா அந்தக் கார்னர்ல கார நிப்பாட்டேன். " என்க, ஏன் என யோசித்தபடியே காரை நிறுத்தினான். 


அது ஒரு சாட் ரெஸ்டாரன்ட். பானிப்பூரி, மசாலா பூரி, பேல் பூரி, பாவ் பஜ்ஜியென சாட் ஐட்டங்களை மட்டுமே விற்கும் கடை அது.


 'இங்கே எதற்கு.?' என யோசித்தபடி இறங்க,


" உள்ள போலாம் ருத்ரா. வா. " என அவனின் கரம்பற்றி இழுத்துச் சென்றாள் வாசு.


"இது தான் என்னோட விஷ். நீ பானி பூரி சாப்பிடணும். ஒன்னில்ல ஆறு பூரி. " என இரு ப்லேட்களை ஆர்டர் செய்துவிட்டு வர,


" வாட்… இத நான் சாப்பிடணுமா? " எனப் புருவங்களை உயர்த்தி கேட்டான் தேவ்.


"ம்... இத நீ சாப்பிட்டேன்னா. உன்னோட விஷ்ஷ நான் நிறைவேத்துறேன். உன்னோட வீட்டுக்கு வர்றதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. ம்… சாப்பிடு. " எனத் தட்டை நீட்ட,


அவன் ஒரு விரலை அந்தப் பானியில் விட்டு நாக்கில் வைத்தான். அவனின் உடலில் உள்ள அத்தனை முடிகளும் ஒரு சேர விரைத்து எழுந்து நின்றது.


' ஒரு துளியே இவ்ளோ காரமா இருக்கு.‌ இவ என்னடான்னா அரலிட்டர வாய்க்குள்ள ஊத்த சொல்றா. எப்படி இவ்ளோ காரத்த சாப்பிடுறது. வேண்டாம் ருத்ரா. இவ சொன்ன‌ மாறிச் செய்யாத. அப்றம் பின் விளைவுகள் பெருசா இருக்கும். ' என மூளை எச்சரித்தாலும்.

மனம் கேட்கவில்லை.


' உன்னோட வீட்டுக்கு வர்றதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. ' என்ற அவளின் குரலிலேயே இருக்க, கடகடவென்று அனைத்தையும் முழுங்கத் தொடங்கினான்.


‘அடப்பாவி. தட்டையாது மிச்சம் வைப்பா.’


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

நேசிப்பாயா 40


நேசிப்பாயா 42



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...