அத்தியாயம்: 42
இரவு பதினொரு மணி இருக்கும். வாசுவின் அறையில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன.
பெட்டில் குப்புற படுத்துக் கொண்டு கால்களை ஆட்டியபடியே ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தாள்.
ருத்ராவா…
இல்லை தன்யாவிடம் உரையாடிக் கொண்டிருக்கிறாள் வாசு.
தேவ்வுடன் கழித்த அவளின் இனிய பொழுதைத் தன்யாவுடன் பகிர்ந்துக் கொண்டிருந்தாள்.
"நாங்க சைக்கிளிங் போனோம். அந்தப் பார்க்க யாரு வேகமாச் சுத்தி வர்றான்னு போட்டி வச்சிக்கிட்டோம். நான் தான் வின் பண்ணேன் தெரியுமா. நூறு டாலர் பெட். பாவம் தோத்திட்டு காச எங்கிட்ட குடுத்தப்போ… பாக்கவே பாவமா இருந்தது. " என சொல்லிச் சிரிக்க.
"ம்... வாழ்த்துக்கள். பட் நீயா வின் பண்ணிருக்க மாட்ட. உன்னை அவெ வின் பண்ண வச்சிருப்பான். " தன்யா.
"அதெல்லாம் இல்ல. நானா என்னோட பவர்ர வச்சி வேகமாக ஓட்டி முதல்ல போய்ச் சேந்தேன். " என் வீராப்பாய் பேச, தன்யாவின் கேலி சிரிப்பைக் கேட்க நேர்ந்தது.
" ருத்ரா எதுக்கு என்னை வின் பண்ண வைக்கணும். "
" ஏன்னா அவெ உன்னை லவ் பண்றான். உனக்காக எதுனாலும் செய்ய ரெடியா இருக்கான். "
"தன்யா நீ நிஜமாவே சொல்றியா. இல்ல என்னை உசுப்பேத்தி விட்டு விளையாடுறியா. " என்றாள் சந்தேகமாக. ஏனெனில் ருத்ரா அவளை மனதளவில் நெருங்கி இருந்தாலும், உடலால் நெருங்க முயற்சிக்கவில்லை.
'ஃபஸ்ட் டே டேட் போனா கிஸ் பண்ணிப்பாங்கன்னு லிண்டா சொன்னா. ஆனா அவனுக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லையே. ஒருவேள அவன் எங்கூட ஜஸ்ட் ஃப்ரெண்டாத்தான் பழக நினைக்கிறானோ. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு கற்பன பண்ணிக்கிறேனோ. ' என்ற சந்தேகத்தை உண்டாகியது இந்த டேட்.
"ஹேய்... நான் விளையாடல. சீரியஸ்ஸா சொல்றேன். என்னோட கெஸ் சரின்னா இன்னேரம் உங்கிட்ட ஸ்டெயிட்டா சொல்லிருப்பானே. I love you னு... ம்… சொன்னானா... " என்னவளின் குரலில் கேலி இருந்தது.
"அப்படில்லாம் நேரடியா சொல்லல. பட் இலைமறை காய்மறையா… மறைமுகமாகச் சொன்னான். " என்றவளுக்கு வெட்கம் வந்து விட்டது.
'நீ என்னை விட்டுட்டு போறது எனக்குப் பிடிக்கல. ' என்ற ஆழ்ந்த அவனின் குரல் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. அதை நினைத்துப் புன்னகைத்தவளுக்கு தேகம் சிலிர்த்தது. இனிய கற்பனைகளுடன் தலையணையில் முகம் புதைத்துக் கொள்ள,
" மேடம் என்ன பதில் சொன்னிங்க?" என்ற தன்யாவின் கேள்விக்குப் பதில் தான் வரவில்லை.
"சரி வெக்கபடுறோங்கிற பேர்ல தலவாணிய கடிச்சி குதறாத. தேவ் என்ன விஷ் கேட்டான். "
" அது… புவனா மேரேஜ்க்கு ஒன் வீக் முன்னாடியே வந்து சிவாஸ் பேலஸ்ல தங்கச் சொல்லிக் கேட்டான். "
"பார்டா!. காதலிய வீட்டுல இருக்குற எல்லாத்துக்கு இன்ரோ குடுத்து பழகிப் பாக்கச் சொல்றான். நல்லா பழகுனாத்தான பின்னாடி கல்யாணம்னு பேச்ச எடுக்கும்போது ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட இருந்து எந்த எதிர்ப்பும் வராது. பக்காவா ஃப்ளான் போட்டிருக்கான். அப்றம். " என்க,
" என்னோட விஷ்ஷ நீ செஞ்சேன்னா நான் உன்னோட விஷ்க்கு ஓகேன்னு சொன்னேன். "
"உன்னோட விஷ் என்ன?"
"நான் பாத்த வரைக்கும் ருத்ராவோட சாப்பாட்டு மொற எனக்குப் பிடிக்கவே இல்ல. சோ... அத மாத்துறதுக்கான ஃபஸ்ட் ஸ்டெப்பா பானி பூரி சாப்பிட சொன்னேன். "
"என்ன பானி பூரி சாப்பிட சொன்னியா?" என அதிர்ச்சியாகக் கேட்டாள் தன்யா.
"ம்... ஆமா. நீ சாப்பிட்டா நான் உன்னோட வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன். "
"தேவ் சாப்டானா? "
"ம்… ஒன்னில்ல ஆறு பூரி சாப்டான். ஹலோ… ஹலோ…. தன்யா... தன்யா. " எனக் கத்த ஃபோன் கட்டாகி இருந்தது. என்ன ஆனது என்று தெரியாததால் தன்யாவிற்கு மீண்டும் மீண்டும் முயற்சிக்க, அது செல்லவே இல்லை. பிஸி என்று வந்தது.
ஒரு மணி நேரம் முயற்சித்திருப்பாள். அதன் பலனாகத் தன்யா அட்டென் செய்தாள். "தன்யா எதுவும் பிரச்சனையா?" என்றாள் சிறிய குரலில்.
"எஸ் பிரச்சன தான். தேவ்க்கு காரம் ஆகாது. அலர்ஜி ஆகிடும். அதுனால தான் காரத்த அவாய்ட் பண்ணி அத்தை சமைப்பாங்க. இப்ப உனக்காகச் சாப்பிட்டான்னு சொல்ற. "
"ருத்ராக்கு என்னாச்சி. தன்யா... நீ ருத்ராட்ட பேசுனியா? " எனப் பதறிப் போய்க் கேட்க,
"ம்... பேசினேன். பெட்டரா இருக்குன்னு சொன்னான். தூங்கிட்டு இருப்பான். ஏன்னா அலர்ஸியால உடம்பு முழுக்க பூச்சி கடிச்ச மாதிரி அரிப்பும் தடுப்பும் வந்திடும். கை வச்சா அது புண்ணாகிடும். சோ ஸ்லீப்பிங் பில் எடுத்துட்டு தூங்கிட்டு இருப்பான். கவலப்படாத சரியாகிடும். " என்றுவிட்டு வைத்துவிட்டாள் தன்யா.
ஆனால் வாசுவுற்குத் தான் இருப்புக் கொள்ள முடியவில்லை. இப்பொழுதே ருத்ராவின் முகத்தைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடியாதே. இரவில் தனியாகச் செல்லக் கூடாது எனக் கார்த்திக் சொல்லியிருக்கானே. ஆனால் ருத்ராவைப் பார்த்தே ஆகவேண்டுமே. சென்று அவளின் கார்த்திப்பாவை இந்த நேரத்தில் எழுப்பவும் மனம் வரவில்லை. எனவே தன் இரவு உடையை மாற்றிக் கொண்டு ஹாலில் சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.
எனெனில் கார்த்திக் ஆறு மணிக்குத் தன் நடை பயிற்சியைத் தொடங்கத் தயாராகி வரும்போது அவனை அப்படியே பிடித்து இழுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக. அது குளிர்காலம். கை காலென எல்லாம் மரத்துப் போகும் அளவுக்குக் குளிர் இருந்தது. ஆனாலும் உறங்காது ருத்ராவைக் கண்களால் பார்த்துவிட வேண்டும் அவனின் நலத்தை அறிந்து விட வேண்டும் என்ற தவிப்புடன் அமர்ந்திருக்கிறாள்.
"வாசும்மா… என்னாச்சி. ஏன் இந்தப் பனில உக்காந்திருக்க. " எனக் காலையில் எழுந்து வந்த கார்த்திக் அக்கறையுடன் கேட்க,
"கார்த்திப்பா நான் உடனே ருத்ராவ பாக்கணும். என்னால தான் அவனுக்கு இந்த நிலம. ச்ச... நான் ஒரு லூசு. முட்டாள். அவெ வேண்டாம்னு சென்னாலும் நான் கேக்கல… கேக்குற நிலமைல இல்லாம போய்ட்டேன். " எனத் தன்னைத்தானே திட்டிக் கொண்டு அழுதாள்.
"வாசு என்ன நடந்ததுன்னு முதல்ல சொல்லும்மா… அழாத. " என மகளை அமர்த்தி அவளின் முகத்தில் வடிந்தோடிய கண்ணீரைத் துடைத்தெடுத்தான் கார்த்திக்.
"கார்த்திப்பா… ருத்ரா… என்னை அவனோட வீட்டுக்கு இன்வெட் பண்ணான். நான். நான்... " எனத் திக்கி தினறி நடந்தவைகளைச் சொல்ல, கார்த்திக் அவளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
கார்த்திக் காரை ஓட்டிக் கொண்டே வாசுவின் புலம்பல் மொழிகளைக் கேட்டான். அவளின் பதைபதைப்பே சொல்லியது ருத்ராவின் மேல் அவள் கொண்ட காதலை.
"வாசும்மா இது ஒன்னும் புதுசா வந்த அலர்ஜி இல்ல. அவனுக்கு இதுக்கு முன்னாடியே இதுமாதிரி வந்திருக்கும். முன்னெச்சரிக்கையா டேப்லெட் வச்சிருப்பான். பயப்படாதம்மா. அவனுக்கு எதுவும் ஆகிருக்காது. " எனச் சமாதானம் சொன்னபடியே வந்தான் கார்த்திக்.
ஹோட்டல் வந்ததும் காரை நிறுத்தும் முன்னரே கீழே இறங்கினாள் வாசு. "பாத்து போ வாசு... " என்ற சொல்லைக் காற்றிடம் தான் சொல்ல வேண்டி இருந்தது. தலையசைத்துக் கொண்டே காரின் கதவை மூடியவனின் முன் வந்து நின்றாள் வாசு.
"என்னாச்சி வாசு?"
"கார்த்திப்பா நான் ருத்ராவ பாக்கப்போய்ட்டா… நீங்க என்ன பண்ணுவிங்க... " என்றவளுக்குக் கார்த்திக்கை உடன் அழைத்துச் செல்வதில் உடன்பாடு இல்லை. அதை உணர்ந்தவன்.
"நான் லாபில வெயிட் பண்றேன். காஃபி குடிச்சிக்கிட்டே. " என்றான் கண்சிமிட்டி.
"கார்த்திப்பா இங்க காஃபி வாய்ல வைக்க முடியாது. அதையாக் குடிக்க போறிங்க?"
" அப்ப நான் போய் அந்த செஃப்க்கு காஃபி போடுவது எப்படின்னு க்ளாஸ் எடுக்கேன். " என்று சொல்லிச் செல்ல, வாசு புன்னகையுடன் ருத்ராவைக் காணச் சென்றாள்.
விடியும் முன்னரே வந்துவிட்டாள் வாசு. அந்தத் தளத்தின் பொறுப்பு நான்ஸியிடம் இருந்தது. ருத்ரா உறங்குகிறான் என்றால் அவனின் அறைக்குள் எப்படி செல்வது என யோசித்தவள், நான்ஸி அசந்த நேரம் பார்த்து அறையின் டூப்ளிகேட் சாவியைத் திருடிக் கொண்டாள்.
வேகவேகமாக அறைக்குள் நுழைந்தவளை வெற்று அறைதான் வரவேற்றது. ஏனெனில் ருத்ரா படுக்கையில் இல்லை. "ருத்ரா... ருத்ரா... " எனக் கத்தியபடியே தேடிப் பார்க்க, பால்கனியில் நின்று யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான். அவனைப் பார்த்ததும் கோபமாக அந்தக் கண்ணாடி கதவைத் தாண்டிச் சென்றவள்,
"உனக்கு அறிவிருக்கா டா! நான் சொன்னா என்ன வேண்ணாலும் செய்வியா? உனக்குத் தான் அது அலர்ஜின்னு தெரியும் தான. அப்றம் ஏன்டா சாப்ட... பைத்தியக்காரா. " எனத் திட்ட,
இந்த முறை அவளின் டா என்ற அழைப்பு அவனுக்குப் பிடித்திருந்தது. அது மட்டுமல்ல கண்களில் கோபம் தெறிக்க, தன் பனியனை பிடித்துக் கேள்வி கேட்டது.
" நீ என்னோட வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேல. டீல் இஸ் டீல். " என்றான் ரசனையுடன்.
"அதுக்காக. " என்றவளுக்கு ருத்ராவைப் பார்க்கும்போது அழுகை வந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த அவனின் உடல் ஆங்காங்கே சிவந்து இருப்பதைப் பார்த்து கண்ணீர் கொட்டியது.
" ஸாரி... ஸாரி ருத்ரா. நான் உன்ட்ட அப்படி கேட்டுருக்கக் கூடாது. ஸாரி. " என அழ, அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்,
" எனக்கு ஒன்னுமில்ல வாசு. ஐ ஆம் ஓகே. ஈவ்னிங்குள்ள சரியாகிடும். வாசு… " என அதட்டியும் அழுதவளின் கண்ணீரை நிப்பாட்டவே முடியவில்லை. அணைத்தபடியே தூக்கிக் கட்டிலில் அமரச் செய்தவன் அவளின் அருகில் தரையில் அமர்ந்து கொண்டு அவளை பேசிப் பேசி சரி செய்தான்.
"வா ஹாஸ்பிட்டல் போகலாம். " வாசு.
" எனக்கு ஒன்னுமில்ல. "
"இல்ல எங்கண்ணு முன்னாடி உன்னைச் செக்கப் பண்ணி டாக்டர் சொன்னாத்தான் நான் நம்புவேன். வா. " என கரம்பற்றி இழுக்க,
"இப்படியேவா வர முடியும். சொல்லு. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன். லைட்டா எதாவது சாப்டுட்டு போகலாம். " எனப் பாத்ரூமிற்கு செல்ல, வாசு அங்கிருக்கும் சமையலறைக்குள் சென்றாள்.
மினி ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து முட்டைகளை எடுத்தவள் ப்ரெட் ஆம்லெட் செய்யத் தொடங்கினாள். காரம் இல்லாமல்.
"நான் தான்… நான் தான் லூசு... அவெ சரியாத்தான் இருந்தான். என்னோட புத்தி தான் அப்படி விபரீதமா யோசிச்சது. அறிவே இல்ல டி வாசு உனக்கு. " என அவளை அவளைத் திட்டிக் கொண்டே ப்ரட்டை ட்டோஸ்ட் செய்ய, வாயிலில் இருந்து நிழலாடியது.
ருத்ரா தான்.
மெல்ல அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்,
"என்ன வேணும் ருத்ரா? நீ ஏ இன்னும் டிரெஸ் மாத்தாம இருக்க.” என்க, அவனின் பார்வையிலும், குறுநகையுடன் கூடிய ரசனையிலும்,
“ஏன் அப்படி பா…க்குற ருத்ரா… ருத்ரா. " என்றவளின் கால்கள் தன்னால் பின்னோக்கிச் சென்றன, ருத்ராவின் அண்மையில்.
" வேணுங்கிற எல்லாமே கிடைக்குமா ஸ்வீட் டி?. ம்… " என்று புருவம் ஏற்றி இறக்கியவனின் கரம் உயர்ந்து சமயற்கூடத்தில் அழுத்திப் பிடித்திருந்த அவளின் கரத்திற்கும் இடைக்கும் இடையே, இடையை உரசுவது போல் சென்று எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்தது. கூடவே அவளையும் தான்.
அவனின் இடையணைப்பில் அவனின் மார்பில் முட்டித் தலை உயர்த்தி பார்த்தபடி நின்ற பெண்ணவளின் விழிகள் இரண்டையும் அவனின் கண்களை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்களில் தனக்கான தவிப்பை உணர்ந்தவன், இறுக்கத்தை அதிகரித்து, அவளைத் தன்னுள் புதைக்க முயன்றான்.
மலர்பந்தியாய் நெஞ்சில் மோதியா பெண்ணவனின் அங்கமும், காலை வேலையில் மலர்ந்த மொட்டைப் போல் விரிந்திருந்த கண்களும் அவனின் இறுக்கத்தை தளர்த்தாததற்குக் காரணமாக அமைந்தது.
சாயம் பூசாது பனியில் வறண்டிருந்த அவளின் அதரங்களை ஈரம் செய்யத் துடித்து, தலை சாய்ந்து வசீகரப் புன்னகையுடன் பெண்ணவளின் இதழ்களை அடைந்தது ஆடவனின் உதடுகள். மெல்ல மெல்ல மங்கையின் அதரங்களைச் சுவைக்கத் தொடங்கினான் ருத்ரா.
‘இது சென்சார் காட்சி. நாம போகலாம்.
வெய்ட்... வெய்ட்...
இவனுக்கு உடம்பு சரியில்லை. ஓகே. அப்ப வாசுவ எதுக்கு ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்கா. எப்படின்னு சந்தேகம் வருத்தில்ல. அடுத்த அத்தியாயத்துல பாக்கலாம்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..