அத்தியாயம்: 43
நாம் நேசிப்பவரிடம்...
இருந்து கிடைக்கும்...
எதிர்பாராத ஒரு முத்தம்…
எதிர்பார்த்த அன்பை...
பூர்த்தி செய்து விட்டும்...
இந்த ஜோடிகளுக்கு இது சரியாக இருக்கும். தன் காதலை வார்த்தைகளால் பரிமாறி இருந்தால் கூட இத்தனை ஆனந்தம் கிடைத்திருக்குமா என்பது ஐயம் தான். தன் இதழ்களால் கவி பாடி சொன்ன அவனின் காதல், பேதையை நிலைகுலையச் செய்தது.
ஒரு கரம் அவளின் இடையை அழுத்தி இருந்தாலும் மற்றொரு கரம் இதமாய் அவளின் மிருதுவான கன்னம்பற்றி கட்டை விரலால் வருடியது. மூக்கோடு மூக்கு உரசும்போது அந்த மூக்குத்தி அவனின் மூக்கை உரசி பதம் பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும். சிவந்திருந்து அவனின் மூக்கு.
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை அவன். அவனின் எண்ணம் முழுவதும் தன் சிகையிலும் முதுகிலும் அழுந்தப் பற்றி, தன் கரத்திற்குள் நெளிந்தக் கொண்டு, தனக்கு வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கும் நங்கையிடமே லயித்திருந்தது.
எல்லாம் சில நொடிகள் தான். பின் திடீரென அவனின் கரம் கனக்கத் தொடங்கியது. என்னவென்று யோசிக்கும் முன்னரே வாசு மயங்கிப் போயிருந்தாள்.
" ஹேய்…. வாசு… வாசு... " எனக் கன்னம் தட்டியவன் அவள் அசையாது இருக்கவும் கைகளில் ஏந்திக் கொண்டு கத்திக் கொண்டே ஓடினான்.
"Anybody help. " எனக் கத்தியவனை எதிர்கொண்டது கார்த்திகேயன்.
ருத்ராவின் அபாயக் குரல் கேட்டது. தான் தயாரித்த காஃபியை அருந்தாது ஓடி வந்திருந்தான். அவனின் கையில் தன் மகளைக் கண்டவன் வேகமாகக் காரை இயக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் வாசு.
மகளின் மயக்கமும் ருத்ராவின் சிவந்திருந்த உதடுகளும் சொல்லியது மயக்கத்திற்கான காரணத்தை. சிறிய புன்னகை எழ, பயமின்றி ருத்ராவின் பரிதவிப்பை வேடிக்கைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான் கார்த்திகேயன்.
தவமிருப்பவனுக்கு வரம் கிடைத்து போல் ருத்ராவின் வரம் கண்முழித்தது. அதைச் செவிலியர் ஒருவர் சொல்ல, பாய்ந்து சென்றான் வேறு யாருக்கும் வழி விடாத படி. ஜோஹிதாவும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே ருத்ராவைப் பின் தொடர்ந்தனர்.
வரைந்து முடித்த ஓவியமாய் அவள் கட்டிலில் கிடக்க, ருத்ரா அவளை நெருங்காது தூர நின்றுப் பார்த்தான்.
"வாசும்மா, உனக்கு ஒன்னமில்லைல. " என ஜோஹிதா கவலையுடன் கேட்க,
" ஒழுங்கா சாப்பிடுன்னு சொன்னா கேட்கணும். எப்பப் பாத்தாலும் சீஸு, சாஸுன்னு கண்டத தின்னா எப்படி டி தெம்பு இருக்கும். கழுத… பொம்பளப்பிள்ள மாதிரியா இருக்க, ரோட்டுல குப்ப பொறக்குறவெ கணக்கா… டிரெஸ்ஸ பாரு, தலைய பாரு. பான்பராக்கு மென்னு துப்புன மாதிரி இது என்னடி ஒத்த ஒத்த வெரலுக்கும் ஒரு ஒரு கலர பூசி வச்சிருக்க. " என உஷா வசபாட, அதை ருத்ரா குறுநகையுடன் சுவரில் சாய்ந்தபடி கேட்டு நின்றான்.
அவன் வாசுவிடம் பேச முயற்சிக்கவில்லை. தன் கண்களால் அவளின் நலத்தை அளந்துக் கொண்டிருந்தான். அவளின் குடும்பம் அவள் மேல் காட்டும் அன்பை ரசித்துக் கொண்டும் தான்.
ஏதுவும் பிரச்சனை இல்லை. வாசு நலமாக இருக்கிறாள் என்பதை டாக்டர் உறுதி செய்தபின் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டாள்.
"நான் ப்பே பண்ணிட்டேன். என்னைப் பாக்க வந்ததுனால தான் வாசுக்கு இந்த நிலமை. சோ, வாசுவா பத்திரமா பாத்துக்கங்க. " என்றான் ருத்ரா கார்த்திகேயனிடம்.
"எம்பொண்ணப் பாத்துக்க எனக்குத் தெரியும். உன்னோட பணம் எனக்குத் தேவையில்லை. எந்த ஜில்லாக்கு போனாலும் எம்பொண்ணுக்கு வேண்டியத நான் தான் பண்ணுவேன். அவளுக்குச் செய்ற உரிம உனக்கு இன்னும் வரல. ஞாயபகம் இருக்கட்டும். " என்றவன் ருத்ராவின் கரத்தில் காசை வைத்துவிட்டு செல்ல, ருத்ராவிற்குக் கோபமாக வந்தது, கார்த்திகேனின் சொல்லிலும் செயலிலும்.
'உரிமை… அத எப்படி உங்கிட்ட இருந்து பறிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். ' என நினைத்தவன் கையில் இருந்த காசை அங்கிருந்த சேரிட்டி பாக்ஸில் போட்டான்.
"பாத்து வாசு." என்ற ஜோஹிதாவின் குரலில் திரும்பிப் பார்க்கும் போது கார்த்திகேயனும் முருகனும் வாசுவை கைத் தாங்களாக அழைத்துக் கொண்டு வந்திருந்தனர், வீட்டிற்கு செல்ல.
ருத்ராவின் வருகையை வாசு அறிந்தாலும் அவனின் முகம் பார்க்கத் தயக்கமாகவும் நாணமாகவும் இருந்தது.
நாணம் அவன் தந்த முத்தத்தால் வந்தது. தயக்கம் ‘ஒரு சின்ன முத்ததுக்கே மயங்கிட்டன்னா… மத்தெல்லாம் எப்படிம்மா?' எனக் கேட்டுவிடுவானோ என்றதால் வந்தது.
அதை உணர்ந்ததாலோ என்னவோ வாசுவிடம் ருத்ரா பேச முயற்சிக்கவில்லை. ஆனால் அவள் தன் முகம் பார்க்கமாட்டாளா என்ற ஏக்கம் இருந்தது. அதே பரிதவிப்புடன் செல்லும் அவளைப் பார்த்தபடி நின்றான்.
சரியாகக் காரில் ஏறவிருக்கும் நேரம் தன் முகத்தினைத் திருப்பாது விழிகளை மட்டும் உருட்டித் தன் பார்வை வட்டத்தில் நின்றிருந்தவனை பார்க்க, அது அவனுள் பலவித மாற்றங்களைக் கொண்டுவந்தது.
காரில் எறிய பின் ருத்ராவைத் திரும்பிப் பார்த்தபடி சென்ற அவள் நலமாகத்தான் இருந்தாள். ஆனால் ருத்ராவால் நார்மலாக இருக்க முடியவில்லை.
'இப்பத்தான் நார்மலா பேசிப் பழகவே ஆரம்பிச்சோம். அதுக்குள்ள கிஸ் பண்ணி அதக் கெடுத்துட்டேனோ. ' என்ற குழப்பிப் போய் இருந்தவனுக்கு அந்தக் குழப்பம் இப்போது இல்லை. அவளின் உதடுகளில் பூத்த அந்தப் புன்னகை காதலை சொல்லிவிட்டு சென்றது.
,ஒலி இல்லா மொழியில் சொல்லிவிட்டு சென்றாள் பெண். இந்த இடத்துல ருத்ராக்கு ஒரு சுச்சிவேஷன் ஸாங் போடணும்னா என்ன போலாம். ம்... இது சரியா இருக்கும்.
மௌனம் பேசும் மொழிகூட அழகடி…
ஆயுள் நீல அது போதும் வருடி…
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்…
புது மொழி அதை உடைத்தெறி.
அனிருத் இவனுக்காவே பாடினது.
கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேசத் துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…’ண
_________
நான்கு நாட்களுக்குப் பின்.
கார்த்திக்கேயனின் வீடு.
"கார்த்திப்பா உங்களுக்காக நான் க்ரீன் கலர்ல ஒரு கோர்ட் சூட் ஆர்டர் பண்ணிருக்கேன். இன்னைக்கி வந்தாலும் வந்திடும். " என்றவள் கையில் ஒரு ப்ளாஸ்டிக் உறையை மாட்டிக் கொண்டு கார்த்திக்கின் தலையில் கை வைத்தாள்.
" கோர்ட் போடுறதுக்கு உங்கப்பா தான் கல்யாணம் மாப்பிள்ளையா என்ன?" என்றாள் ஜோஹிதா. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற என ஓஸ் டியூப்பை கையில் வைத்திருந்தாள்.
"ஏன்… என்னோட கார்த்திப்பாக்கு என்ன கொற? இப்ப நினைச்சாலும் என்னோட கார்த்திப்பா கல்யாணம் பண்ணிக்க இந்த ஊர்ல ஒரு போட்டியே நடக்கும். தெரியுமா?" என ஜோஹிதா மகளை முறைத்தாள். கார்த்திக்கும் மெல்லியதாய் சிரிக்க, அவனின் கன்னம் பற்றித் திருப்பிய வாசு.
"ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் போட்டியெல்லாம் தேவையே இல்ல. உங்களுக்கு ஜோஹிம்மா இருக்கங்க. வேற யார் பக்கமாச்சும் பார்வ திரும்புச்சி. பாத்துக்கங்க. " எனக் கார்த்திக்கை மிரட்ட,
"நான் ஏன் வாசும்மா பாக்கறேன். உங்க ரெண்டு பேர மீறி." என்றான் பணிவான பயந்த குரலில்.
"ம்… அந்தப் பயம் இருக்கட்டும். " என்றவள் கரும்பு நிற பவுடரை கின்னத்தில் போட்டு நீர் போல் எதையோ ஊற்றிக் கலந்து, அந்த கலவையைக் கார்த்திக்கின் தலையில் முளைத்திருந்த வெள்ளை முடிகளில் தடவினாள்.
" ரொம்ப அவசியா உன்னோட அப்பாக்கு இதெல்லாம். உனக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல பேரனோ பேத்தியோ வரப் போற வயசுல. தலைக்கி டை. ஏன்டி அநியாயம் பண்ற. " ஜோஹிதா.
"ஜோஹிம்மா சிவ்ராம் வீட்டு கல்யாணம்னா சும்மாவா. அதுக்கு எத்தனை பேர் வருவாங்க தெரியமா. மில்லியனியர் பில்லினியர் பிஸ்னஸ் மேன்னு ஆயிரம் பேருக்கு மேல இருப்பாங்க. எத்தன பேர் வந்தாலும் என்னோட கார்த்திப்பா தனிச்சி தெரியணும். அவங்க யாருக்கும் என்னோட கார்த்திப்பா சளைச்சவர் இல்லன்னு நிறுபிக்கணும். அதுக்கு தான் பட்டி டிங்கரிங் பாத்துட்டு இருக்கேன். நீங்களும் வந்து உங்காருங்க. பெத்த கடமைக்கு உங்க தலைலையும் தடவி விடுறேன். ஆ… " என்றவளின் காதைத் திருகினான் கார்த்திக்.
"நல்லா போடு கார்த்திக். வாயி வாயி ரொம்ப பேசுறா. " என ஜோஹிதா உற்சாகப்படுத்த,
" கார்த்திப்பா. " எனச் சிணுங்கிக் கொண்டே தப்பித்தோடினாள் பெண் வாசலுக்கு.
வழக்கம்போல் வரும் தினசரி நாளிதழ் போல் கிடந்த இன்விடேஷனை கையில் எடுத்தவள்.
"ஒரு ஃபங்ஷனுக்கு எதுக்கு இத்தன இன்விடேஷன். அதுவும் டெய்லி அனுப்புற அந்த அறிவாளி யாரா இருக்கும். கார்த்திப்பா உங்களுக்குத் தெரியுமா. " எனக் கத்த, வாசலில் கார் ஒரு வந்து நின்றது.
" என்னை வரவேற்கத் தான் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கியா வாசு. " என்றபடி இறங்கினான் க்ரிஷ்.
" ஹேய் வாசு. " தாரிகா.
" ஹேய் க்ரிஷ் ஸார். உங்க ரெண்டு பேரையும் பாத்தது ரொம்ப சந்தோஷம். வாங்க. " என வரவேற்றாள் வாசு.
"ரெண்டு பேருங்கிறது நாலு பேரா வந்தா வரவேற்க மாட்டியாம்மா. " மதன கோபால்.
"நாலு பேரா. " எனப் புருவம் சுருக்க. 'ஒ ராசாத்தி பாட்டி வந்திருக்காங்களா. ' என ஆவலுடன் பின்னால் பார்க்க, உள்ளே இருந்து இறங்கியது சிவரஞ்சனி.
பிஸ்தா க்ரீன் மற்றும் லைட் ரோஸ் கலரில் பட்டுப் புடவை அணிந்து பாந்தமாக வந்து இறங்கினார் அவர்.
" நீ தான் வாசுவா. உன்னைப் பத்தியும் உன்னோட அப்பா அம்மா பத்தியும் அத்தை சொன்னாங்க. " என்றவர் ராசாத்தி கார்த்திகேயனுக்கு எனச் சமைத்துக் கொடுத்தனுப்பிய டப்பாவுடன் இறங்கினார்.
" தன்யா அம்மா தான நீங்க.” எனப் புருவம் சுருக்கிக் கேட்டவள்,
“வாங்க. வாங்க. கார்த்திப்பா. ஜோஹிம்மா. " என உள்ளே குரல் கொடுத்தவள்,
"தன்யா வரலயா. " என்க. அதற்கு தாரிகா, "தன்யா வரல. அதுக்கு பதிலா... "
"உன்னைத் தன்யா கிட்ட கூட்டீட்டு போக நாங்க வந்திருக்கோம். குறிப்பா நான் உன்னைத் தூக்கிட்டு போக வந்திருக்கேன். " க்ரிஷ் கண்சிமிட்ட.
"வழியாத டா. " என அவனின் தலையில் தட்டி விட்டு உள்ளே சென்றாள் தாரிகா.
"ஆவ்ச்…. வலிக்கிற மாதிரி அடிச்சிட்டா உங்க பொண்ணு. இதெல்லாம் கேக்க மாட்டிங்களா நீங்க. "
" க்ரிஷ் இப்பதைக்கு தான் கை. அடுத்து இரும்பு கம்பி தான் வரும் தலைல தட்ட. அதுக்குள்ள நாம. " ரஞ்சனி.
"வீட்டுக்குள்ள போய் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்கிறேன். வா வாசு. என்னை நீ கைய பிடிச்சு கூடக் கூட்டீட்டு போலாம். தப்பில்ல. " என வாசுவின் கரத்தைப் பற்றி அவன் இழுத்துச் சென்றான்.
புவனாவின் திருமணத்திற்கு எனப் பத்திரிகை வைக்க வந்துள்ளனர். அமிர்தா சிவ்ராம் இல்லாது எங்கும் செல்லமாட்டார். அதனால் தான் சிவரஞ்சனியும் க்ரிஷ்ஷும் தம்பதியர்களாக வந்துள்ளனர். அழைப்பிதழ் கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். ஜோஹிதாவும் அவர்களை நன்முறையில் உபசரித்தாள்.
"மிஸ்டர் கார்த்திக், உங்களுக்குப் பூர்வீகம் சென்னைத் தானா. " என்றார் சிவரஞ்சனி.
"இல்ல மேம். பிறந்தது காரைக்கால்ல. அப்பா இறந்ததுக்கு அப்றம் சென்னை தான். " என்றவன் முகத்தில் கசந்த புன்னகை.
"ஓ... " என்றவருக்கும் வாசுவை பார்க்கும்போது அவர்களின் வீட்டிற்கு வரும் இளம் பெண் வாணியின் முகம் வந்து சென்றது. கார்த்திக்கிடம் வாணியைப் பற்றிக் கேட்க நினைத்தவர் பின் அமைதியாகி விட்டார்.
"கார்த்தி மாமா, மறக்காம புவனா கல்யாணத்துக்கு வந்து அதைச் சீரும் சிறப்புமா நடத்தி தரணும். இமைபோல் வாழ்ந்து, இமயம் போல் வளர்ந்து, என்றும் இணை பிரியாமல் வாழ, வாழ்த்திச் செல்ல வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். " எனத் தலை தாழ்த்தி சொல்ல,
"க்ரிஷ் இவ்ளோ லெண்த்தா டயலாக் பேசிங்கிங்க. அதுவும் தமிழ்ல. வாழ்த்துக்கள். " என வாசு கைக் குழுக்கினாள்.
"நன்றி நன்றி. கைய மட்டுமில்ல கட்டிப்பிடிச்சி கூட வாழ்த்து சொல்லலாம். நான் எதுவும் சொல்லமாட்டேன். " எனக் கரம் விரிக்க, அதைத் தட்டி விட்டாள் தாரிகா.
"உனக்கு இதச் சொல்லிக் குடுத்தது நான். "
"அதுனால என்ன. வாயத் திறந்து டயலாக்க டெலிவரி பண்ணது நான். "
"அதுனால உன்னைப் பாராட்டணுமா. "
"வாசு என்னைக் கட்டிப்பிடிச்சதுக்கு அப்றம் உன்னையும் ஒருக்க கட்டி பிடிச்சிடுறேன். இல்லனா கண்ணீர் விட்டுக் கதறி அழுவ போல இருக்கே. " என்க, அவர்களின் சேட்டையைப் பார்த்து வீட்டார் சிரிக்க, அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். வாசுவை உடன் அழைத்துக் கொண்டு.
இந்தத் தேவ் தான் ரஞ்சனியிடம் வரும்போது வாசுவுடன் தான் வர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தானே. எப்படி விட்டுச் செல்வது. அதான் கையோட அழைத்துச் செல்கின்றனர்.
'எனக்கு அவங்க கூடப் போறதுல ஆச்சரியம் இல்ல. ஏன்னா நான் ருத்ராட்ட ஏற்கனவே வர்றேன்னு சொல்லிட்டேனே. ஆனா இந்த ஜோஹிம்மா எப்படிச் சரி சொன்னாங்க. ம்... ' என யோசித்தபடியே ருத்ராவின் இல்லத்திற்குச் சென்றாள்.
சிவாஸ் பேலஸ்…
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..