முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 44


 

அத்தியாயம்: 44


சிவாஸ் பேலஸ்ஸின் தோட்டம்.


மனைவிக்கு மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடப் பிடிக்கும் என்பதற்காகவே அந்தப் பெரிய மரத்தை வளர்த்திருந்தார் சிவ்ராம். நடுவில் நெருப்பு மூட்டி மனைவியுடன் அந்த மூங்கில் ஊஞ்சலில் ஆடும்போது அவர் இந்த உலகத்தில் இருப்பதே இல்லை. சொர்க்கம் தன் மனைவியிடம் உள்ளது என்பதை உணர்ந்தவர்.


அந்த நெருப்பு வளையங்களைச் சுற்றி அமர்வதற்கு ஏதுவாகக் கல் மேஜைகளும் உண்டு. அந்த மேஜையில் தான் இப்போது மொத்த குடும்பமும் உள்ளது. அமிர்தா-சிவ்ராம் மட்டும் இந்த வயதிலும் அந்த ஊஞ்சலை யாருக்கும் விட்டுத்தராது அமர்ந்திருந்தனர்.


" அடுத்து நீ தா‌ன் பாடணும். வாசு பாடு. " என்க, வாசு ஒரு தமிழ் பாடலைப் பாடினாள்‌. அவள் முடிந்த இடத்திலிருந்து தன்யா பாடத் தொடங்க என பாட்டுக்குப் பாட்டு போட்டி நடைபெற்றது.


க்ரிஷ், கையில் கிட்டாரை வைத்துக் கொண்டு கொஞ்சம் கூடச் சேரதா சுருதியில் அதன் கம்பிகளைத் தட்டிக் கொண்டு இருந்தான்.


" ஐய்யோ கேக்க சகிக்கல. அதத் தூக்கி அந்தப் பக்கம் வை க்ரிஷ் அண்ணா. " புவனா.


"நான் ஒன்னும் இதை உனக்காக வாசிக்கல. வாசுக்காக வாசிச்சேன். வாசு. Have you like it. "


"Yes of course. எனக்கு நீங்க வாசிக்கிற ஸ்டெயில் ரொம்ப பிடிச்சிருந்தது. ம்... வாசிங்க. " என உற்சாகப்படுத்த,


"இவ காதுல கம்பிய விட்டு நோண்டுனா கூடக் கேக்காதுன்னு நினைக்கிறேன். " தன்யா.


"அண்ணா நீ பெரிய இசை கலைஞன் தான் ண்ணா. நான் ஒத்துக்கிறேன். ப்ளிஸ் அத எங்கிட்ட குடுத்துடுண்ணா. டாட் சொல்லுங்க. " எனச் சப்போட்டுக்கு அழைக்க, அவர் தன் சொர்க்கத்தில் இருக்கிறாரே. எப்படிப் பதில் சொல்வார். மனைவியின் கரம்பற்றி அந்த நிலவையும் இரவையும் ரசித்துக் கொண்டு இருக்க,


"ஐய்யோ இவங்க ரொமாண்டிக் வேல்டுக்குள்ள போய்ட்டாங்க. பாட்டி... பாட்டி… நீங்களாது உங்க பேரெ கைல இருக்குறத பிடுங்கி வைங்களேன்.‌ தலை வலிக்கிது. " எனப் புவனா கத்த, க்ரிஷ் வாசித்துக்கொண்டிருந்தான்.‌


" சூப்பராத்தான இருக்கு. அந்தக் காலத்து எம்எஸ்வி இசை மாதிரி. ஆஹா... ஆஹா... " என ரசித்து அதைக் கேட்டார். அவருக்குத் தான் க்ரிஷ் செல்லப் பேரனாயிற்றே, எப்படி அடக்குவார். அடங்கித்தான் போனார்.


"ஏய் கிழவி நீ அவங்க பாட்ட‌ முன்னபின்ன கேட்டுருக்கியா இல்லையா. வயசானா கண்ணு தான் தெரியாம போகும்னு சொல்லுவாங்க. இதுக்கு மூளையே வேலை செய்ய மாட்டேங்கிது. " தன்யா.


" தாரி நீயாது உதவி பண்ணேன். " எனப் புவனா கெஞ்ச,


"கல்யாணப் பொண்ணு கேட்டுச் செய்யலன்னா நல்லா இருக்குதுல.‌" என்றவள் எழுந்து கணவனின் கையில் உள்ள கிட்டாரை வாங்கி வைத்துவிட்டு அவனின் மடியிலேயே அமர, அங்கும் காதல் காட்சி தான்.


" கண்ணவிஞ்சி போச்சிடா சாமி. முடியல. ஆமா நீங்க மட்டும் ஏன் தனி தனியா உக்காந்திருக்காங்க. கட்டி பிடிச்சிக்க வேண்டியது தான. " எனத் தன்யா இரண்டு அடி இடைவெளி விட்டு அமர்ந்திருந்த தன் தாய் தந்தையை பார்த்துச் சொல்ல, ரஞ்சனி முறைத்தாள் மகளை.


"நானும் அப்பத்துல இருந்து பக்கத்துல வான்னு கூப்பிடுறேன் பாப்பா. உங்கம்மா தான் புது பொண்ணு மாதிரி வெக்கப்பட்டுட்டு தள்ளி உக்காந்திருக்கா. நீ ஆசைப் பட்டுடுட்ட, அதுனால வேணும்னா நானே உங்கம்மா பக்கத்துல வந்து உக்காந்துக்கிறேன். " என்ற நெருங்கி வந்து அமர்ந்த மதன கோபாலை ரஞ்சனி செல்லமாக அடிக்க, இளம் மங்ககைகளின் சிரிப்பொலி அவ்விடத்தை நிறைத்தது.


ஒரு வாரம் முடிந்து விட்டது, வாசு சிவாஸ் பேலஸ் வந்து. அவளுக்கு இந்த வீடும் வீட்டாரும் அவ்வளவு பிடித்திருந்தது. இளமையும் காதலும் ததும்பி வடிந்து ஓடிக்கொண்டு இருந்தது அந்த வீட்டில்.


அனைவரும் கூடி இருந்தாலும் நம் தலைவி தேடும் தலைவன் மட்டும் அங்கு இல்லை. அவனைப் பார்த்துப் பேசி ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும். அன்று மருத்துவமனையில் பார்த்தது. அதன் பின், அவ்வப்போது பார்த்தாலும் ருத்ராவிற்கு நின்று பேச நேரம் கிடைக்கவில்லை. பிஸி மேன்.


அன்றைய நிகழ்விற்கு பின் வாசு ருத்ராவிற்கு ஸாரி என்று மெசேஜ்ஜையும் பரிதாபமாக முகத்தை வைத்தார் போல் சில பல எமோஜிக்களையும் அனுப்பி வைத்தாள். ஆனால் அது பார்க்கப்படவில்லை. ஃபோன் செய்தாலும் பிஸி என்று தான் வந்தது. அவனிடம் பேசாது தவித்த அவளுக்கு அவன் தந்த முத்தம் மட்டுமே துணை. தன் ஈர உதடுகளை நாவால் வருடும் போதெல்லாம் அவனை உணர்வாள் அவள். இதமாய் அவனை உணர்த்திவிடும் அது.


இப்போதும் தேவ் பிஸி தான். நாளைத் திருமண நிச்சயம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாட்டைக் கவனிக்க சென்றுள்ளான். பொதுவாகச் சிவ்ராம் வெளியில் தங்க நேரிட்டால் மனைவியையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார். அப்படி அல்லாதபோது, வர நேரம் அதிகமாகும்பொழுது மகன்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்து

விடுவார்.


மொத்தம் மூன்று நாள்கள் திருமணவிழா. முதல் நாள் மாலையிலிருந்து தொடங்குகிறது அது. மெகந்தி. சங்கீத் என்று சொல்லப்படும் வட நாட்டு முறையில் மாப்பிள்ளை அழைப்பை வைத்து இரு வீட்டார் முன்னிலையில் மோதிரங்கள்‌ மாற்றப்பட்டு தாம்பூலம் மாற்றப்பட்டு நிச்சயம் நடைபெற உள்ளது.


மறுநாள் காலையில் தமிழ்நாட்டு முறைப்படி மங்கல நாதங்கள் ஊத, திருமாங்கல்யம் மணப்பெண்ணின் கழுத்தில் மணமகனால் பூட்டப்படும்.


முதல் இரண்டு நாள் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் பங்கு பெறுவர். ஆனால் மூன்றாம் நாள் பிஸ்னஸ் நண்பர்கள்‍ அன்பர்கள், வாடிக்கையாளர்கள் எனப் பலர் கூடி நின்று நடத்தும் ரிஷப்ஷன்.


விழாவிற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு பெண்கள் மூவரும் ஷாப்பிங், ப்யூட்டி பார்லர் என ஊர் சுற்றி திருந்தனர் அந்த ஒரு வாரமும்.


" ஹேய்… இந்தக் கல்யாணம் முழுக்க நாம ரெண்டு பேரும் ஒன்னா ஒரே கலர்ல டிரெஸ் போடலாமா. " தன்யா.


"எனக்கு ஓகே. " வாசு உற்சாகமாக.


"அதென்ன ரெண்டு பேரு. நானும் உங்க கூட்டத்துல ஒருத்தி தான. என்னையும் சேத்துக்கங்க. " தாரிகா சொல்ல, புவனா‌ ஒத்தூதினாள்.


"ஏய்...‌ நீ கல்யாணப் பொண்ணுடி. சோ டிரெஸ் மாத்திட்டே இருப்பா. நாங்க அப்படி இல்லல்ல. அதா ஒன்னா இருக்க ஃப்ளான் போட்டாருக்கோம். "


"அதுல ஏன் என்னையும் சேக்கலான்னு நான் கேக்கறேன்." தாரிகா.


" நீ ஆன்டி தாரிகா. ஒரு குழந்த பெத்த ஆன்டி. நாங்க கல்யாணம் ஆகாத யூத்ஸ். எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. வர்ற கெஸ்ட்ல நல்ல பையனா பாத்து சைட் அடிக்கணும். அதுல பத்து பேர் கிட்ட பேசி ஃபோன் நம்பர் வாங்கணும். அதுல நாலு பேர் கூட அவுட்டிங். ரெண்டு பேர் கூட டேட்டிங். அந்த ரெண்டுல எவெ பெஸ்டோ அவன லவ் பண்ணிக்க வேண்டியது‌தா. அப்றம் கல்யாணம் காட்சின்னு லைஃப் செட்டில் தான். அதுக்கான ப்ராஸஸ்ஸ இப்பவே ஸ்டாட் பண்ணணும்.


ஆனா உனக்கு உன்னோட பையன கவனிச்சிக்கிறத தவிர எதுவுமே கிடையாது. ‌ஷோ நாங்க ஆன்டியான பழைய பீஸ்ஸ கூட்டத்துல சேத்துக்கிறது இல்ல. " தன்யா. சொல்லத் தாரிகா அவளை முறைத்தாள்.


"ஆமா ஆமா. இவ்ளோ ப்ராஸஸ் பண்ணி கடைசில கலட்டி தான விடப்போற. ஹிம்… ஒரு சின்னப் பையன் சமாளிக்கிறது அவ்ளோ ஈசியா காரியம் இல்ல.‌ வளத்து பாரு அப்ப தான் தெரியும் என்னோட அரும.‌ " தாரிகா‌ முணுமுணுத்துக் கொண்டே சென்றாள் அங்கிருந்து.‌


மூவரின் சிரிப்பும் அவளைப் பின்தொடர்ந்தது. வாசு அந்த வீட்டிற்கு வந்ததில் இருந்தே மூவரும் ஒரு அறை தான். கண்டையும் பேசிச் சிரித்து விட்டு உறங்கச் செல்வது நள்ளிரவை தாண்டிய பின்தான். நாளை நிச்சயம்.‌ எனவே கதை பேசாது சீக்கிரம் உறங்கச் சொல்லி ரஞ்சனி கட்டளையிட்டு சென்றிருந்தார். அதனால் விளக்கும் அணைக்கப்பட்டு இருவரும் உறங்கி‌விட்டனர். வாசு மட்டும் உறங்கவில்லை.


அவளுக்குள் மனக்குழப்பங்கள் சில இருந்தன. ஒன்று ருத்ரா. இங்கு வரச் சொன்னதே அவன் தான். அவள் வந்தது அவனுக்காகத்தான். ஆனால் அவனை மட்டும் பார்த்து ஒரு வார்த்தைகூட வாயால் பேச முடியவில்லை. அட்லீஸ்ட் மெசேஜ், சேட், அதுவும் இல்லை. தினமும் காலையில் அவள் எழும்பும் போதே வேலை என்று சென்றிருப்பான். சரி உறக்கும் போதாவது பார்த்துவிடலாம் என்று நினைத்தால் அப்போதும் தங்கையின் திருமண ஏற்பாட்டைக் கவனிக்கிறேன் என்ற பெயரில் சென்று விடுகிறான்.


'ஒட்டு மொத்த குடும்பத்தையும் தன்னோட சுண்டு விரல்ல தூக்கி சுமக்குறவெ மாதிரி ஓவரா பில்டப் குடுக்குறான். ச்ச. ஒரு வேள நிஜமாவே வேலை இருக்குமோ. இல்ல ஒரு கிஸ்ஸுக்கே தாங்காத பார்டி கிட்ட மேக்கெண்டு எதாவது செய்யப் போய் டெத் பாடி ஆகிடுவேனோன்னு பயப்படுறானோ. இல்ல கிஸ்ஸுக்கே ஒத்துவராதவன்னு சொல்லி என்ன வெறுத்து ஒதுக்குறானோ. ' எனப் பல்வேறாக யோசனைகள் செல்வதை தடுக்க முடியவில்லை. அதற்குக் கடிவாளம் இடக் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாள் வாசு.‌


'நம்ம வாசு ஓவரா திங்க பண்ணுறா. மூள மூஞ்சி தாண்டி வழியுது. '


மற்றொரு குழப்பத்திற்கான காரணம். அவளின் அம்மா அப்பா.‌ கார்த்திகேயன் மற்றும் ஜோஹிதா.


அதுநாள் வரை அவர்கள் கணவன் மனைவியாக மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறாள். இல்லை அப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனரோ என்ற சந்தேகம் இப்பொழுது தான் எழத் தொடங்கியது.


காரணம் அவள் இப்போது பார்க்கும் தம்பதியர்கள். சிவ்ராம் அமிர்தாவையும் க்ரிஷ் தாரிகாவையும் சொல்லவே தேவையில்லை. அன்னியோன்யமாக வாழும் காதலர்கள்.


சரி அமெரிக்காவில் இருக்கும் கப்பில்ஸ் அப்படித்தான். காலையில் காபிக்குப் பதிலாக முத்தங்களைத் தான் பருகுபவர்கள். கட்டி‌ அணைத்துக் கொள்ள காரணங்கள் தேவையே இல்லை. பெற்ற பிள்ளைகள் நண்பர்கள் என யார் பார்க்கிறார்கள் என்ற கவலையே இல்லாது தன் இணையிடம் அன்பை பகிர்ந்து கொள்பவர்கள்.


இந்தியாவில் அப்படில்லாம் கிடையாது போலும். அதான் தன் பெற்றவர்கள் தள்ளி நின்று அன்பு பகிர்கின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ரஞ்சனி மதன கோபாலின் அன்னியோன்யம் குழப்பத்திற்குள் தள்ளியது.


மதன கோபால், சிவராம் கிரிஷ்ஷை போல் கட்டியணைத்து முத்தமிட்டாது வேறு விதமாகத் தன் அன்பை ரஞ்சனியிடம் காட்டினார். ரஞ்சனியை அவர் கேலி‌ செய்வது. அவரின் சில செயல்களைப் பாராட்டுவது. எதையாது சொல்லி ரஞ்சனியை வெட்கப்பட வைப்பது. மனைவியின் கையால் செல்லமாக அடி வாங்கிக் கொள்வது என அவர்களின் அன்பு வித்தியாசமானதாக இருந்தது.


ஆனால், கார்த்திக் ஜோஹிதா ஜோடி இந்த இரு விதத்திலும் இல்லை. இருவரின் பேச்சு ஒன்று ரெஸ்டாரன்ட் சம்மந்தமானதாக இருக்கும். இல்லையேல் வாசுவைப் பற்றியதாக இருக்கும். அதைத் தவிர்த்துத் தனிப்பட்ட அந்தரங்க விசயங்களைப் பேசி அவள் கேட்டதே‌ இல்லை. ஏன் கட்டியணைத்து கிண்டல் கேலி செய்து பார்த்ததில்லை.


கார்த்திக், ஜோஹிதாவின் செயலைப் பாராட்டி கூட அவள் கேட்டது இல்லை. திருமணம் நாள் பிறந்த நாளென எந்த விசேஷங்களுக்கும் பரிசு வாங்கி‌ ஜோஹிதாவிற்கு கொடுத்து அவள் பார்த்ததே இல்லை. இருவரின் உடைகளையும் வாசு தான் தேர்வு செய்வாள். உடைகள் மட்டுமல்ல எல்லாமே வாசுவின் விருப்பமாகவே இருக்கும்.


இருவரின் முக்கியத்துவமும் வாசுவாக இருந்தாள். பிள்ளைகளுக்கு முதன்மைத்துவம் தருவது பிரச்சினை இல்லை. ஆனால் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் தரும் காதல் அவர்கள் இருவரிடம் காணாதது தான் பிரச்சனை.


அது ஏன். காதல் மணம் புரிந்தவர்கள் தானே. பின் அவர்களின் அன்பை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லையே என யோசித்தபடியே நடை பயின்றவள், நடந்து அந்த நீச்சல் குளத்திற்குப் பக்கத்தில் சென்றாள்.


இந்த டேனியல் வேறு அவ்வபோது கார்த்திக் ஜோஹிதாவைப் பற்றிப் பேசுவது நினைவிற்கு வந்தது.


" அது என்ன ஜோஹிதா! எனக்கு இப்படியொரு அழகான வைஃப் கிடைச்சா. நான் ஜோஹி, ஜோ, இல்ல ஹனி பேபி, ஸ்வீட் ஹார்ட்ன்னு செல்லப் பேர் வச்சித் தான் கூப்பிடுவேன். லவ் பண்ணி மேரேஜ் பண்ணவங்கன்னு சொல்ற‌‌. ஆனா செல்லப் பேர் வச்சி கூப்பிட்டுக்கிட்டது இல்லையே. ஏன். ஒருவேள உன்னோட ஃபேரன்ஸ் எதையோ உங்கிட்ட இருந்து மறைச்சி. சந்தோஷமா வாழ்ற மாறக் காட்டிக்கிறாங்களோ." என அடிக்கடி சொல்வான்.


அப்பொழுதெல்லாம் கோபம் கொண்டு அவனுடன் சண்டைக்குச் செல்வாள். ஆனால் இப்போது அதையும் சேர்ந்து குழப்பிக் கொண்டு இருக்கிறாள்.


நிலவின் ஒளியை நீர் பிரதிபலிக்க, அது வாசுவின் முகத்தில் பட்டு முகத்தை மின்னச் செய்தது. கார்த்திக் அவளுக்கு முதல் முறை நீச்சல் கற்றுத்தந்தது நினைவு வந்தது. அது மட்டுமல்ல நடை பயில, சைக்கிள் ஓட்ட என அனைத்தும் கார்த்திப்பா தான். கார்த்திக் ஜோஹிதாவுடன் செலவு செய்யும் நேரத்தை விடத் தன்னுடன் இருக்கும் நேரம் தான் அதிகம் என்று தோன்றியது அவளுக்கு. ஏன்? மனைவி இல்லாமல் மகள் கிடையாதே அதைக் கார்த்திப்பா உணரவில்லையா.


'அவங்களுக்குள்ள எதாவது பிரச்சன இருக்குமோ. ' என்ற யோசனையுடன் நின்றவளை பயமுறுத்தியது அந்தக் குரல்.


"இங்க என்ன பண்ணீட்டு இருக்க. இந்த நேரத்துல. " என்ற குரல் தான் அது.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...