முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 45

 

அத்தியாயம் 45


" தூங்காம இந்த நேரத்துல என்ன பண்ணீட்டு இருக்க. " ருத்ரா.


கண்டுவிட்டாள். கேட்டும் விட்டாள். தன் மனம் கவர்ந்தவனின் குரலை. அது அவளின் தேகத்தில் மயிர்கூச்சத்தை ஏற்படுத்த, புன்னகையுடன் அவன் புறம் திரும்பினாள் வாசு.


"தூக்கம் வரல ருத்ரா. அதான். " என்றவள் அவனின் முகம் பார்த்தபடியே பேச,


" நைட் டைத்துல பேய் மாதிரி நடந்துட்டு இருந்தேன்னா… பயம் வரும் அப்றம் மயக்கம் வரும். போ... போய்த் தூங்க ட்ரெய் பண்ணு. "


"ஹேய்... நான் ஒன்னும் பயந்தாங்கொள்ளி இல்ல. மிட் நைட்ல உன்னோட ரூமுக்குள்ள வர்றதுக்கு சுவரேறி குதிச்சவ. என்னைப் பாத்து பயந்தாங்கொள்ளின்னு சொல்ற. " என விழி விரித்துக் கேட்க,


"அப்றம் எதுக்கு மயக்கம் போட்டு விழுந்தியாம். ம்... " எனப் புருவங்களை உயர்த்தி கேட்க,


"அது… அது... அன்னைக்கி நைட்டுல நான் சரியா தூங்கல. உனக்கு என்னாச்சின்னு கவல. அழுதுட்டு வேற இருந்தேன். அப்றம்... அப்றம்... உன்னை பாத்ததும்… மயங்கிட்டேன். " என விளக்கம் தர,


"சரி டென்ஷிடா இருந்த. ஓகே.” என்றா அவள் சொன்னதை நம்பு போல் தலையசைத்தவன், 


“அப்ப பாத்ததும் மயக்கம் வந்திருக்கணுமே. ஆனா அப்படி வராம லேட்டா.‌. ப்ரேக் ஃபஸ்ட்லாம் சமச்சதுக்கு அப்றம் வந்திருக்குன்னா… அதுக்கு அர்த்தம்... " என்றவனின் ஆழ்ந்த குரலில் பெண்ணவளின் முகம் நாணம் எனும் முகமூடி போட்டுக் கொண்டது. அவனுக்குப் பதில் சொல்லாது வேறு புறம் திரும்ப, அவனின் முன் வந்து நின்றவன்,


" ம்… சொல்லு வாசு மயக்கம் எதுனால வந்தது. சமயலுக்கு அப்றம் நடந்த இன்சிடென்ட்னாலயா. " எனக் குறும்புடன் கேட்டு மேலும் சிவக்கச் செய்தான் ருத்ரா.


"இல்ல... அதுனாலலாம் இல்ல. இனி மயக்கம் வராது. ." என்றாள் சின்னக் குரலில்.


" அத எப்படி நான் தெரிஞ்சிக்கிறது. ம்... டெஸ்ட் பண்ணி பாத்திடலாமா. " எனக் கேட்டுக்கொண்டே நெருங்கி வர,  அவளின் இதயத்துடிப்பு அதிகமானது.


"ருத்ரா போதும். ப்ளீஸ்... எனக்கு இந்தப் பேச்சு கொஞ்சம் அன்கம்பர்ட்புல்லா இருக்கு. " என்க, அவன் மெல்லிய புன்னகையுடன் அதை விடுத்து வேறு பேச்சைப் பேசத் தொடங்கினான்.


"சரி சொல்லு, உனக்கு எங்க வீடு பிடிச்சிருக்கா?" எனக் கேட்கபடி அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துக் கொண்டு கேட்க, வாசுவும் அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தாள்.


"ம்… ரொம்ப பிடிச்சிருக்கு ருத்ரா. வீட்ட விட வீட்டாளுங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. மாதேஷ், பாட்டி, க்ரிஷ் ஸார்.‌. தாரிகாக்கா, அமிர்தா ஆன்டி. "


"அத்தை. நீ அத்தைன்னு கூப்பிடலாம். " என்க, உதடுகள் வளைந்து அவளின் வெட்கத்தைக் காட்டிக் கொடுத்தது.


"அமிர்தா அத்தை, சிவ்ராம் மாமான்னு, எல்லாரையும் படிச்சிருக்கு. கார்த்திப்பா சொல்லிருக்காரு சிவ்ராம் மாமா பெரிய பிஸ்னஸ் மேன்னு. பந்தா காட்டாம மாமா எங்கூட சிரிச்சி பேசி விளையாடுறத என்னால நம்பவே முடியல. அமிர்தா அத்தை அத விடச் சூப்பர். அவங்க கூட நின்னு சமைக்கும்போது கார்த்திப்பா தான் ஞாபகம் வர்றாரு." எனச் சொல்லிச் சிரித்தவள்.


"ஆனா உன்னைத்தான் பாக்க முடியல. ரொம்ப பிஸியோ. நான் எவ்ளோ தேடுனேன்னு தெரியுமா. " என்றாள் ஏக்கம் நிறைந்த குரலில்.


" பிஸி தான். கொஞ்சம் வெர்க். ஏய். என்னைத் தேடுனியா! எதுக்கு?"


"அது... அது... ஒரு நிமிஷம். " என்றவள் வேகவேகமாகத் தன் அறைக்கு‌ சென்று அங்கிருந்து ஒரு சிறிய கிஃப்ட் பாக்ஸ்ஸை எடுத்து வந்தாள்.


அதை அவனிடம் நீட்டி "நாம டேட் போன மறுநாள், நீ ஊருக்குக் கிளம்பும் போது இத உங்கிட்ட குடுக்கணும்னு ரெடி பண்ணி வச்சிருந்தேன். பட், பாத்துக்க முடியல. This is for you. " என்க, அதைப் பிரித்துப் பார்த்தான்.‌


அந்தப் பாக்ஸில் இருந்தது கர்சிப். அது முக்கியம் அல்ல. அதில் வாசு தன் கரத்தால் செய்திருந்த எம்ராயிடரி வெர்க் தான் முக்கியம். இருவரின் பெயரையும் சேர்த்து தமிழில் எழுதி, சுற்றி வண்ண வண்ண பூக்கள் இருப்பது போல் வைத்து வடிவமைத்திருந்தாள் வாசு. நம் ருத்ராவிற்கு தான் தமிழ் வாசிக்கத் தெரியாதே.


" Nice flowers. சூப்பரா இருக்கு. " என்க,


"அதுல நான் என்ன எழுதிருக்கேன்னு உனக்குத் தெரியலைல்ல.‌" என்றாள் குறும்புடன்‌.


" தெரியலதான். அதுக்கு என்ன இப்ப. மறுபடியும் சண்ட போட்டுட்டு போகப் போறியா. " என்றான் சிறு படைப்பு டன்.


"இல்ல. சண்ட இனி உங்கூட போடமாட்டேன். "


"ப்ராமிஸ்ஸா. " என அவனின் கரம் நீட்ட,


"போடவே மாட்டேன்னுலாம் சத்தியம் பண்ண முடியாது. போடுவேன். நிறைய சண்ட போட்டுவேன். நீ வேணும்னா கோய்ச்சிட்டு போ. " என்க அவன் சிரித்தான்.


"இதுல என்ன எழுதிருக்கு?"


"எழுதிருக்கு இல்ல. எழுதிருக்க. அப்படி கேக்கணும். சரியா.. உனக்கு டைம் கிடைச்சா அதுல என்ன எழுதிருக்கேன்னு நீயா கண்டு பிடி. கூகுள் உதவி இல்லாம." என்றாள் அவள்.


ஏனெனில் அவனுக்காக யாரின் உதவியுமின்றி, பிறரின் கவிதை அல்லாது தானாவே யோசித்து வடித்த கவிதையை எம்ராயிடரியின் உதவியுடன் எழுதி, தன் காதலை சொல்லியிருக்கிறாள் வாசு. அதனால் லான் அவனே கண்டுபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்.


"எல்லாம் ஓகே. பட் நான் உனக்கு எந்த கிஃப்ட்டும் வாங்கி வைக்கலயே. "


" நீ தான் குடுத்துட்டியே. இந்த ஃபேமிலி. " என்றவள் ஆழ தன் மூச்சே இழுத்து விட்டாள்.


"எனக்கு கூடப் பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது ருத்ரா. ரிலேஷன்ஸ்ஸ பத்தி ஜோஹிம்மா சொல்லி தான் தெரியும். நிறைய பேர் இருக்காங்கன்னு சொல்லுவாங்க. ஆனா நான் யாரையும் பாத்தது இல்ல. பழகுனதும் இல்ல. கார்த்திப்பா ஜோஹிம்மா, முருகு மாம்ஸ், அஸ்ஸு, கடைசியா உஷா ஆன்டி. " என்றபோது அவளின் முகம் அஷ்டகோணலாக மாறியது.


"அவங்களத் தவிர யாருமே எனக்குக் கிடையாதுன்னு நினைச்சேன். இப்பப் பாட்டி, சித்தப்பா, சித்தின்னு எக்கச்சக்க உறவு. அதுக்கு நன்றி. "


"நன்றிய ஏத்துக்கணும்னா ஒரு கன்டிஷன் இருக்கு.” 


என்ன என்பது போல் புருவம் சுருக்க, “அந்த நன்றிய தூரமா இருந்து சொல்லாம. இங்க… பக்கத்துல வந்து சொன்னா. இன்னும் நல்லா இருக்கும். " எனத் தனக்கருகே இடத்தைக் காட்ட, அவள் முறைத்தாள்.


"கேக்கம்மா. நீ நன்றி சொல்றத பக்கத்துல இருந்து கேக்க நல்ல இருக்கும்னு சொல்ல வந்தேன்‌. " என்றவனை அங்கிருந்த ஒரு துண்டால் அடிக்க, அதை வாங்கிக் கொண்டான்.


" ஹேய், உனக்குச் சேல கட்ட தெரியுமா? மேரேஜ் அப்ப நீ சேல கட்டேன்.‌"


"இல்ல. எனக்குக் கட்ட தெரியாது. உனக்கு. "


"எனக்கும் தெரியாது. "


"அப்றம் எதுக்கு நான் கட்டணும். "


"பட் நீ கட்டுனா பாக்க அழகா இருக்குமே. " எனக் கண்சிமிட்ட.‌


"நான் வேணும்னா உன்னோட காதலிக்கு உதவி பண்ணவா. ம்... ஆனா ஒன்னு நான் சோக்கேஷ் பொம்ம மாதிரி அழகால்லாம் கட்டிவிட மாட்டேன். பஃபூன்னுக்கு கட்டிவிடுற மாதிரி கண்ணா பிண்ணான்னு தான் கட்டுவேன். ஏன்னா என்னை விட அவ அழகா கட்டீட்டான்னா நீ அவள தான் பாப்ப. என்னைப் பாக்க மாட்ட. நீ என்னை மட்டுமே பாக்கணும். அதுக்கு ஏத்த டிரெஸ் சொல்லேன் தேவா. " என்றபடி வந்தாள் தன்யா.


தலையில் கை வைத்த தேவ் அவளை நிமிர்ந்து பார்த்து முறைக்க,


"தன்யா நான் உன்னை இந்த மாதிரிப் பேசாதன்னு சொன்னேன்ல. " என்று பற்களைக் கடித்துக் கொண்டு பேச, அதைக் கண்டு கொள்ளாது.


" நான் உங்க காதல் பூஜைல கரடி மாதிரி வந்துட்டேனா."


"ஆமான்னு சொன்னா போய்டுவியா. " தேவ்.


"நோ... தேவ் நீ பண்ற காதல் காட்சிய பாக்க பக்கத்துலயே உக்காந்துப்பேன்." என அவனை உரசிக்கொண்டு அமர, தேவ் எழுந்து வாசுவின் நாற்காலியில் அமர்ந்தான். அது படுத்துக் கொள்ளும் அளவுக்கு நீளமாகப் பெஞ்ச். அதில் ஒரு முனையில் வாசு இருந்தாள் என்றால் தேவ் இடைவெளி விட்டு மற்றொரு முனையில் அமர்ந்தான்.‌


"தேவ் இது நீ தானா? என்னால நம்பவே முடியல. ச்ச... இந்தச் சோஷியல் டிஸ்டென்ஸ் ஜோடிய பாக்கும்போது பொறாமையா இருக்கு. அதே நேரம் சந்தேகமாவும் இருக்கு. "


"ஏன்?" வாசு.


" வாசு உனக்குத் தெரியுமா தேவ்க்கு ஸ்கூல் படிக்கிறப்ப எக்கச்சக்க கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தது. இப்பையும் அதுல ஒன்னு ரெண்டு பேர் கூட டச்ல தான் இருக்கான். ஆனா அவங்க யார் கிட்டையும் இவ்ளோ இடைவெளி விட்டுத் தேவ் இருந்து பாத்தது இல்லை.


அவெ உங்கிட்ட காட்டுற இந்த நிதானத்து மேல எனக்கு ரொம்ப பொறாமையாவும் ஆச்சரியமாவும் இருக்கு. தேவ் எனக்கு ஒரு சான்ஸ் தாயேன். ஒரு ஒன் வீக். உன்னோட லவ்வரா இருந்துக்கிறேன். ம்... ப்ளீஸ். " என்றபடி இருவருக்கும் இடையில் வந்து அமர, தேவ் எழுந்து கொண்டான்.


"சரி ஒன் வீக். வேண்டாமா... ஒன் டே. ஒன் ஹவர். " என்க,


"ஒரு செக்கேண்ட் கூட உனக்கு அந்தப் போஸ்ட் கிடைக்காது. கெட் அவுட். " என்றான் பற்களைக் கடித்துக் கொண்டு.


"ஆல்ரெடி வெளில தான் இருக்கோம். இது மறுபடியும் கெட் அவுட்டுன்னா… வெளில இருந்துட்டு எப்படி வெளில போக முடியும்." என்றவள் மீண்டும் அவனின் தோளை உரசியபடி பேச, அவன் அவளை அலேக்காகத் தூக்கி நீச்சல் குளத்திற்கு அருகில் தூக்கிச் சென்றான்.


" தேவ்... தேவ்... எனக்கு நீச்சல் தெரியாது. "


"எனக்கு அது நல்லா தெரியும் தன்யா. அதுனால உன்னை முக்கி எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். "


"வேண்ணாம் தேவ். ப்ளீஸ்... ஏய் வாசு. அங்க நின்று ஏன்டி கெக்பிக்கேன்னு சிரிச்சிட்டு இருக்க. வந்து சொல்லிடி.‌" என அரட்ட, அதையும் நின்று வேடிக்கை பார்த்தாள் வாசு.


அவளுக்குப் பொறாமை வரவில்லை. மாறாகத் தன்யா தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள அவ்வாறு விளையாடுகிறாள் என்று தோன்றியது. டேனியலுடனால அவளின் காதலை மறக்க முயற்சிப்பது வாசுவிற்கு புரிந்தது.


" இதுவே கடைசியா இருக்கட்டும். இனி லூசு மாதிரிப் பேசிட்டு இருந்த, கால்ல தம்பில்ஸ்ஸ கட்டி, உள்ள இறக்கி விட்டுடுவேன். ஜாக்கிரதை. " என எச்சரித்து இறக்கி விட்டான்.


"நல்ல வேள தம்பிச்சேன். இதுக்குள்ள விழுந்தா அவ்வளவு தான். எவனாவது வீட்டுக்குள்ள கிணத்தைக் கட்டி வச்சிருப்பானா. இந்த மாதிரி அரைவேக்காடு தான் செய்யும். " எனக் குரல் வெளியே கேட்காதபடி முணுமுணுத்தாள் தன்யா. தேவ்வின் காதில் விழுந்தால் கன்ஃபாம் ஜல சமாதி தா.


" ஏய் வாசு. உனக்கு நீச்சல் தெரியுமா. தெரியலன்னா கவலப்படாத. நம்ம கிட்ட ஒரு ஜீம் பாய் இருக்கான். உன்னை டச்சே பண்ணாம சொல்லித்தருவான். என்ன தம்பி தொடமா வாசுக்கு சொல்லிக் குடுத்திடுவேல்ல. " என அவனின் தோளில் தட்டி வம்பு பேச, அவன் முறைக்கவும் ஓடத் தொடங்கி விட்டாள். சிரிப்புடனேயே ருத்ராவிற்கு குட் நைட் சொல்லிவிட்டு சென்றாள் வாசு.


அவள் பிரிந்து செல்வது பிடிக்கவில்லை. இந்த இரவில் தன் காதலிக்கான ஏக்கம் அவனிடம் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாது இருந்தான் ருத்ரதேவ்.


திருமண நாள் வெகு அழகாக விடிந்தது. உறவினர்கள் மட்டுமே என்பதால் சிவாஸ் பேலஸ்ஸிலேயே நிச்சயமும் திருமணமும் நடைபெறும். ரிஷப்ஷன் மட்டும் இவர்களின் நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


காலையிலேயே சில சொந்தங்கள் வந்திறங்கி விட்டது. புது மாப்பிள்ளை மார்க்கின் உறவினர்களும் மாலையில் வருகை தர, வீடு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சங்கீத் என்ற பெயரில் மருதாணி இட்டுக் கொண்டனர் பெண்கள். வாசு தன்யாவின் நடனம் வெகு அழகாய் இருந்தது. பாவம் என்று தாரிகாவையும் அவர்கள் சேர்த்துக் கொள்ள, நம் ராசாத்தியின் ஆட்டம், அமிர்தாவின் பாட்டு, க்ரிஷ்ஷின் கலாட்டா, மதன கோபாலின் கிண்டலான பேச்சு, மாதேஷின் குறும்பு என அத்தனையும் அந்த இடத்தைக் கலகலக்கச் செய்தது.


கார்த்திக்கும் ஜோஹிதாவும் காலை வேளையிலேயே வந்த விட்டனர். பஃபே முறையில் உணவு பரிமாறப்படாது தலை வாழை இலை விருந்து தரப்பட்டது. அனைத்தும் நல்ல தரத்தில் நம்ம ஊர் உணவுகள். இரண்டு நாளும் வாழையிலை விருந்து தான்.


மணமகனின் பெயரைத் தன் கையில் எழுதி மாப்பிள்ளையைக் கண்டு பிடிச்ச சொல்லிக் கலாட்டாக்கள் நடந்தது. விளையாட்டு என்ற பெயரில் ஜோடிகள் இருவரையும் கேலி செய்து. அந்த இரவை ஆட்டம் போட்டுக் கொண்டாடினர்.


வாசுவும் தன்யாவும் ஒரே நிறத்தில் லெகங்கா அணிந்திருந்தனர். தேவ்வின் கண்கள் வாசுவைத் தவிர்த்து வேறு‌பக்கம் நகர மாட்டேன் என்று சத்தியாகிரகம் செய்தன. ஆனால் இந்த வாசு கார்த்திக் வந்தவுடன் தேவ்வைக் கண்டு கொள்ளாது‌ தன் தந்தைக்கு உதவிகிறேன் என்று அவனுடனேயே திரிந்தாள்.


அவளைத் தனியாகச் சந்தித்து பேசும் தருணத்திற்காகத் தேவ் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.


மறுநாள் நம்மூரில் கொண்டாடப்படுவது போல் நாதஸ்வர இசையுடன் மேளதாளத்துடன், பட்டு வேட்டி பட்டுப் புடவை சகிதமாக மாலை மாற்றி மங்கல நாண் ஏற்றி அட்சதை தூவி அனைவரும் ஆசி வழங்க, மார்க் புவனாவின் திருமணம் இனிதே முடிந்தது. அன்று மாலை கிருஸ்தவ முறைப்படி சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றப்பட்டது.


திருமணம் முடிந்த கையோடு கார்த்திக்கின் குடும்பம் தன் மகளை அழைத்துக் கொண்டு ரிஷப்ஷன் நடைபெறும் ஹோட்டலில் தங்கியது. தேவ்வுடைய ஹோட்டல் தான் அது. மாலையில் நடைபெறும் ரிஷப்ஷனில் நல்லபடியாக‌‌ பங்கு பெற்று, பின் ஊர் திரும்பத் திட்டமிட்டிருந்தனர்.


ஆனால் அவர்கள் நினைப்பது போல் ரிஷப்ஷன் அமையவில்லை அவர்களுக்கு.

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


நேசிப்பாயா 44

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...