முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 46


 

அத்தியாயம்: 46


டக்.‌.. டக்.‌..


நட்சத்திர விடுதியில் உள்ள அறையின் கதவு தட்டப்பட்டது.


"Who is that. " எனக் கத்தியபடியே கதவைத் திறந்தாள் வாசு.


" Good afternoon mam. நான் ஒரு ப்யூட்டீஸ்யன். இங்க வாசுன்னு ஒரு பொண்ணுக்கு அலங்காரம் பண்றதுக்காக வந்திருக்கேன். " என ஒரு பெண் தன்னை அறிமுகம் செய்ய, வாசு புருவங்களைச் சுருக்கினாள். அப்போது‌ அவளின் அலைபேசி இசைத்தது. தேவ் தான்.


" உன்னை இன்னைக்கி நான் சேலைல பாக்கணும்னு ஆசையா இருக்கு. சோ உனக்கு அவங்க கட்டிவிட்டு மேக்கப் பண்ணி விடுவாங்க. சீக்கிரம் வா. உன்னைப் பாக்க ரொம்ப ஆவல காத்துட்டு இருக்கேன். " என்று அவன் மட்டும் பேசி விட்டு வைத்து விட்டான்.


சிறு வெட்கத்துடன், சரியென வந்த பெண்ணைத் தனக்கு அலங்காரம் செய்ய அனுமதித்தாள் வாசு. அவளுக்குப் பச்சை நிறத்தில் மேல் அலாவதியான விருப்பம் இருக்கும். எந்தப் பொருளாக இருந்தாலும் அது அந்தப் பச்சை நிற குடும்பத்திலேயே எடுப்பாள். டார்க் க்ரீன், லைட் க்ரீன், லெமன் க்ரீன் என எல்லாமே பச்சை தான்‌.


அதனால் தேவ் அவளுக்குத் தேர்வு செய்த சேலையும் பச்சைதான். அடர் பச்சை நிறத்தில் அங்காங்கே கற்கள் பதித்து அவளின் அழகை பறைசாற்றும் வகையில் இருந்தது அந்தப் புடவை.


"அட... அட... அட… இப்பத் தான் பொம்பளப்பிள்ளைய பாக்குற மாதிரி இருக்கு. என்ன அழகு… என்ன அழகு… இரு உனக்குத் திருஷ்டி பொட்டு வைக்கிறேன். எங்கண்ணே பட்டுடுச்சி. " உஷா தான் அது.


" போதும் உஷா. பிள்ளைய பயமுறுத்தாத. நேரமாச்சி வா. " என முருகன் அழைத்தாலும் உஷா வாசுவை வர்ணித்துக் கொண்டே இருக்க‍


" ஆன்டி, எனக்குப் பயம்மா இருக்கு. நீங்க உஷா ஆன்டி தானா. இல்ல உஷா ஆன்டி வேஷம் போட்ட ஏலியன்னா. இது என்னன்னு சொல்லுங்க பாப்போம். " என அருகில் கிடந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்ட, அவர்‌ முறைத்தார்.‌


" உன்னை நான் பாராட்டுறேன் டி. அப்பயும் என்னைக் கேலி பண்றல்ல நீ. " என்க,


"நீங்க என்னைத் திட்டுங்க அது தான் நல்லா இருக்கு. பாராட்டுனா பயம்மால்ல இருக்கு. " என்க, அவர் அவளை செல்லமாகத் தலையில் தட்டி விட்டுச் சென்றார்.


"வாவ்.‌‌.. கார்த்திப்பா செம்மையா இருக்கீங்க. ஜோஹிம்மா எங்க. கார்த்திப்பா நான் நல்லா இருக்கேன்னா. " என முந்தானையை சுற்றி காட்டிக் கேட்க, கார்த்திக்கிற்கோ வேறு ஒருவரின் குரலாகக் கேட்டது.


'கார்த்தி நான் நல்லா இருக்கேன்னா. ம்‌‌... ' என்ற அந்தக் குரலையும் அதன் சொந்தக்காரியையும் மறக்கத்தான் நினைக்கிறான். ஆனால் முடியவில்லை.


"கார்த்திப்பா ஜோஹிம்மா வந்துட்டாங்க. சூப்பரா இருக்காங்கல்ல அம்மா.‌" என மூவரும் சேர்ந்து புகைப்படங்கள் பல எடுத்துவிட்டு, அனைவரும் ரிஷப்ஷன் ஹாலிற்குச் சென்றனர்.‌


அது ஒரு பார்டி ஹால். பெரியது. மிகவும் பெரியது. அந்த ஹால் முழுவதும் வண்ண விளக்குகள் தான். அனைத்தும் இளம் பச்சை நிறத்தில் இருந்தன. கர்டன்ஸ், மேஜை விரிப்பு, டெக்கரேஷன் என அனைத்தும் இளம் பச்சை நிறம் தான்.


கண்களைக் கூச செய்யும் அளவுக்கு இருந்த விளக்கின் ஒளியில் வருபவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் டேனியல் அவளின் கண்ணிற்கு பட,


"டேனி நீ எப்படி இங்க?"


"நான் ஃபோட்டோ கிராஃபர் வாசு. ரிஷப்ஷனுக்கு எடுக்க வந்திருக்கேன். " என்றான்.


"டேனி நீ மாடல்ஸ்ஸ ஃபோட்டோ எடுக்குறதா சொன்ன. இப்ப ரிஷப்ஷனுக்கு ஃபோட்டோ எடுக்குற!… எப்படின்னு தான் கேக்குறேன். "


"ஏ எடுக்கக் கூடாதா?" என எதிர் கேள்வி கேட்டவனை முறைத்தாள் வாசு.


அவன் எப்படி சொல்வான். கடந்த இரு வாரமாக அவன் படும் துயரை. முதலில் வேலை பறிபோனது. பின் வாடைக்கு இருந்த வீடும் பறிபோனது. வேறு வீடும் கிடைக்கவில்லை வேலையும் கிடைக்கவில்லை. கையில் இருக்கும் சேமிப்பு பணமும் மொத்தமாகக் கரைந்து போன நிலையில் வயிற்றைக் கவனிக்க‌ ஏதாவது வேலை பார்த்துத் தானே ஆக வேண்டும்.


எல்லாம் தேவ்வின் வேலை. தன்யாவை அவன் கலட்டி விட்டுவிட்டான் என்று தெரிந்ததும்‌ அவனைத் துரத்தத் தொடங்கி விட்டான். டேனி ஓடிக் கொண்டுருக்கிறான். யார் துரத்துகிறார்கள் என்று கூடத் தெரியாது.


"டேனி ஏன் உனக்கு இந்த நிலம. ஏன் வேல போச்சி. "


"அது தான் தெரியல. ஆனா போயிடுச்சி. இப்பக் கைல இருக்குறது ஒரே ஒரு கேமரா. அத வச்சி தான் பிழச்சிட்டு இருக்கேன். ஏய் வாசு. ஒரே ஒரு ஹெல்ப் பண்ணேன். "


"முடியாது. "


"என்ன ஹெல்புன்னே கேக்காம முடியாதுன்னு சொல்ற. "


"நீ என்ன கேக்கப்போறன்னு தெரிஞ்சதுனால தான் முடியாதுன்னு சொல்றேன்."


" வாசு, ப்ளீஸ். பத்தே பத்து நிமிஷம் தான். பாக்க வேற ஆளு செம்மையா இருக்கா. ஒரே ஒரு கிஸ் மட்டும்.‌ ம்... ஏற்பாடு பண்ணு வாசு. " எனக் கெஞ்ச.,


"நீ என்ன லூசா. உனக்கும் அவளுக்கு இடைல ஒன்னுமே கிடையாது. அப்படியிருக்குறப்போ கிஸ்ஸு கேக்குற. நிஜமாவே நீ பைத்தியக்காரெந்தான். " என்றவள் அவனின் கையில் இருந்த கேமராவை பிடுங்க பார்க்க, அதில் இருந்த மொத்த படமும் தன்யா உடையது தான்.


ஏற்கனவே சொல்லி வைத்தது போல் இருவரும் ஒரே நிறத்தில் தான் சேலை. ஆனால் அணிகலன்களும் புடவையின் டிசைனும் வேறு. தன்யா மாநிறம். வட்டமான முகம். முகம் மட்டுமல்ல ஆளும் அப்படித்தான். சற்று பூசினார் போல் இருக்கும்‌. முகத்தில் சிறு பிள்ளைத்தனம் இருக்கும். குறும்புச் சிரிப்பு உதட்டில் நிலைத்திருக்கும். சின்னக் கண்கள் தான். ஆனால் அது கன்னங்கள் இரண்டிற்கு நடுவில் எட்டிப் பார்ப்பது போல் இருக்கும்.


எடுத்திருந்த படங்களில் பாதிக்கும் மேல் அவளுடையது. அதைப் பார்த்த வாசு, டேனியலைத் திட்டத் தொடங்கி விட்டாள்.


"டேனி வேணாம். நீ இங்கருந்து போய்டு. அது தான் தன்யாக்கு நல்லது. உன்னைப் பாத்தான்னா கவலப்படுவா. மறக்கணும்னு நினைக்கிற எல்லாமே நியாபகம் வரும்.‌. சோ போய்டு." என அவனை விரட்டுவதிலேயே குறியாய் இருந்தாள் வாசு.


அவளுக்கு மட்டுமல்ல தன்யாவின் தலையணைக்கும் தெரியும். தன்யா டேனியலுக்காக வடிக்கும் கண்ணீர். அதான் செல் என்கிறாள்.


" என்னை அவ மறந்திட கூடாதுன்னு தான். கெஞ்சி கூத்தாடி இங்க வந்திருக்கேன். கெடுத்து விட்டுடாத. தனியா கூட்டீட்டு வா வாசு. ப்ளீஸ். " என்க, இருவரும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்.


" வாசு நீ பேசி முடிச்சிட்டேன்னா நான் டேனியல் கிட்ட பேசலாமா. " எனக் கேட்டபடி வந்தாள் டேனியலின் நாயகி.


கண்கள் ஆசையில் விரிய, 'பாத்துக்க இப்பயும் என்னோட காதலி தான் என்னோட தன்யா.‌' என்று கெத்தாகப் பார்த்தபடி தன்யாவை அழைத்துச் சென்றான்‌, தனியாக.


' அடப்பாவிங்களா... இந்த உலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியலயே.‌ இன்னைக்கு காலைல வர அவன திட்டிக்கிட்டே திரிஞ்சவ இப்ப தனியா பேசணும் வான்னு கையப் பிடிச்சி வேற இழுத்துட்டு போறா. என்ன கொடும இதெல்லாம். ச்ச… இதுக எக்கேடு கெட்டா எனக்கென்ன நாம போலாம். இல்ல... என்ன பேசுறாங்கன்னு ஒட்டு கேக்கலாம். ' என அவர்களைப் பின் தொடர்ந்து போனவள் அங்கே ஃபோனில் பேசிக் கொண்டிருந்த ருத்ராவைப் பார்த்து நின்று விட்டாள்.


கம்பீரமான அழகு என்பார்களே அது ருத்ராவிடம் இருந்தது. இரு நாள்களாகவே அவனைச் சைட் அடிப்பது மட்டும் தான் அவளின் வேலை. அருகில் சென்றாலோ, இல்லை அவன் அருகில் வந்தாலோ இதயம் படபடக்கத் தொடங்கி கண்கள் இருட்டுக் கொண்டு மயக்கம் வந்து விடுவது போல் இருந்தது. அதனால் தூர நின்று பார்க்கிறாள்.


தன்யாவின் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், சோஷியல் டிஸ்டென்ஸிங் காதல்.


அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ருத்ரா அவளின் முன் வந்து நிற்க, அவள் திரும்பிச் சென்று விடப் பார்த்தாள்.


"எங்க ஓடுற?"


" கார்த்திப்பா கூப்பிட்ட மாறி இருந்தது. "


"உங்கார்த்திப்பாவ ராசாத்தி பாட்டி அரஸ்ட் பண்ணி வச்சிருக்கு. இப்போதைக்கி ஜாமின் கிடைக்காது. " என்றவன் அவளை ஏற இறங்க பார்க்க, அது வெட்கத்தை தந்தது வாசுவிற்கு.


" You look sooo gorgeous. " என அவளை நெருங்கி வந்து கூற, அவனை உரசிடாதபடி ‌அவள் பின்னே‌ நகர்ந்தாள்.


"நீயும் தான் ருத்ரா. ரொம்ப... ரொம்ப அழகா இருக்க… " என்றாள் நாணத்துடன்.


"நிஜமாவா. பட் இத இப்படிச் சொன்னா கேக்க நல்லாவே இல்ல. " என்றவன் அவளின் இடையில் தன் கரம் பதித்து தன்னை நோக்கி இழுத்து, கழுத்தில் அவளின் பெண்மையின் வாசம் முகர்ந்தான். அதில் தன் இதழ் பதிக்க, வாசு இமை மூடி ஆடவனின் அன்பில் உருக தொடங்கினாள். மெல்ல ‌அவளின் காதுகள்வரை ஊர்வலம் வந்த அவனின் இதழ்கள்.‌


" செம்...மையா இருக்கடி. " என்றுவிட்டு அவளின் காதை லேசாகக் கடிக்க, வலியில் சுயநினைவு வந்தவள் அவனைத் தள்ளி விட்டு விட்டுத் திட்டத் தொடங்கினாள்.


கோபமாக இருந்தவளின் முன் ரோகிணி வந்து நின்றாள். " வாசு அத்தை. " என்றவளை வாசு தூக்கிக் கொண்டு தன் பெற்றோர் இருக்கும் இடம் சென்றாள்.‌ செல்லும் முன் ருத்ராவை முறைக்கத் தவறவில்லை.


"ஜோஹிம்மா நான் சொன்னேன்ல, ஒரு குட்டி ராணி. அது இவங்க தான். ரோகிணி. இது என்னோட ஃபேரன்ஸ். நான் வான்னு கூப்பிட்டப்பவே நீ எங்க ரெஸ்டாரன்ட்டுக்கு வந்திருக்கலாம். " என்க, ஜோஹிதா அவளை வாங்கிக் கொண்டு கொஞ்சினாள்.


"அப்பா அம்மா எங்க ரோகிணி.‌‌ ஏன் கல்யாணத்தப்ப நீங்க இல்ல. " எனக் கேட்டாள் வாசு.‌


ஏனெனில் வந்த இரு தினங்கள் மட்டும் தான் முரளி ராஜி தம்பதியரை பார்த்தாள். பின் அவர்களைத் திருமணத்தில் கூடப் பார்க்கவில்லை. அதனால் தான் எங்கே என்று கேட்டாள்.


" அம்மாக்கு உடம்பு சரியில்லை. டாக்டர்ட்ட போயிருந்தோம்." என்றாள் சிறுமி.


"இப்ப நல்லா இருக்காங்களா அம்மா. " என் நலம் விசாரித்தாள் வாசு.


"ம். " எனத் தலையசைத்தாள் சிறுமி.


"எங்க அவங்க.‌" என்று ஜோஹிதா கேட்பதற்கும்,


"ரோகிணி. " என்று அதட்டலுடன் ராஜி சர்க்கரை நாற்காலியைத் தள்ளுக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. ஜோஹிதாவின் கையில் இருந்த மகளை ராஜி திட்டத் தொடங்கினாள். 


" ஏய்... அறிவில்லாத தெண்டம். கண்டவ கூடப் பேசக்கூடாதுன்னு நான் சொல்லிருக்கேன்னா இல்லையா. விவஸ்தை இல்லாம எந்தச் சனியெ கூப்பிட்டாலும் ஏறி உங்காந்துகிறது.‌ இறங்கு டி கீழ. போய் உங்கப்பா பக்கத்துலயே நிக்கணும். எங்கையும் நகரக் கூடாது. " என விழி உருட்டிச் சத்தமாக திட்ட, ஜோஹிதாவின் முகம்‌ சுருங்கி விட்டது. வாசுவுடையதும் தான்.


பேசிப் பழகிய இத்தனை நாட்களில் கடுமையான ஒரு சொல்‌, ஏன் முகத்தைச் சுண்டி கூட ராஜியை பார்த்ததில்லை அவள். இப்போது கோபமாக, அனல் பறக்கத் திட்டிக்கொண்டு இருக்கிறார் ராஜேஸ்வரி. அதுவும் தன் அன்னையை.


"ஏன் ஆன்டி இப்படில்லாம் பேசுறீங்க. அவங்க என்னோட அம்மா. கண்டவங்க கிடையாது. " என்றாள் வாசு மெல்ல காட்டமான குரலில்.


"என்னைப் பொறுத்த வரைக்கும் உங்கம்மா கண்டவ தான். சுயநலவாதி. இவள மாதிரி ஒரு கேவலமான ஜென்மத்த நான் இதுவரைப் பாத்ததே இல்ல. இன்னும் எப்படித் தான் உயிரோட நடமாடுறாளோ. ச்சீ. " என வெறுப்பை உமிழ, ஏன் என்று தெரியாது முழுத்தனர் இரு பெண்களும்.


ஜோஹிதா ராஜியை இதற்கு முன் பார்த்து இல்லை. ஏன் தன்னைப் பகையாளி போல் பேசுறாள் என்று புரியாது நின்றாள்.


" ராஜி என்ன பண்ணிட்டு இருக்க. " எனக் கேட்டபடி வந்தார் முரளி.


" முரளி." என்றாள் ஜோஹிதா ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும்.‌


"ஜோஹிதா, நீ நல்லா இருக்கியா. ஸாரி ராஜி நீ யாருன்னு தெரியாம ஏதேதோ பேசிட்டா. அவளுக்காக நான். "


"தெரியாமல பேசல. தெரிஞ்சி தான் பேசுறேன்.‌" என்றார் ராஜி வெடுக்கென.


"வாய மூடு ராஜி. உன்னைப் பாத்தது சந்தோஷம் ஜோஹிதா. கார்த்தி எங்க. " நலம் விசாரிக்க, ராஜி கடுகடுவெனத் தன் முகத்தை வைத்துக் கொண்டாள்.


" நல்லா இருக்கேன் முரளி.‌. கார்த்திக் இப்பத் தான் எங்கயோ போனான். நீ எப்படி இருக்க?. உன்னோட பொண்ணா?. " என ரோகிணியை பார்த்து வாஞ்சையுடன் கேட்டாள் ஜோஹிதா.


"ச்சீ... போயும் போயும் இந்தச் சனியெ கண்ணுலயா எம்பொண்ணு படணும். இனி எம்பொண்ணுக்கு ஏழற நாட்டு சனி தான். "


"ராஜீ கொஞ்ச நேரம் பேசிமா இரேன். "


" அதெப்படி பேசாம இருக்குறது. அதுலயும் இவள நேர்ல பாத்த பின்னாடி. இந்த மாகாராணிட்ட கேக்கணும்னே நிறைய கேள்வி யோசிச்சு வச்சிருக்கேன். இப்ப விட்டுட்டா ராணி அந்தப்புரத்துக்குள்ள ஒழிஞ்சிப் பா. அப்பறம் பாக்கவே முடியாதே. எதுவும் கேக்க முடியாது. "


" அப்படி என்ன கேக்கப் போற.?" கார்த்திக்கின் குரல் அது. அவனைப் பார்த்ததும் ராஜிக்கு கோபம் இன்னும் அதிகமானது.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


நேசிப்பாயா 45

நேசிப்பாயா 47

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...