அத்தியாயம்: 47
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறாள் வாசு. அவளின் அந்தக் கேட் வாக்கை ரசிக்கும் மன நிலையில் இல்லை நால்வரும்.
"கார்த்தி இன்னைக்கு தான் நான் ஒன்னப் புரிஞ்சிக்கிட்டேன். வயசுங்கிறது ஜஸ்ட் நம்பர் தான். அதால நம்மோட குணங்கள மறைச்சி வைக்க முடியுமே தவிர, ஒரேயடியா காணாம ஆக்கிட முடியாது. " என்றது உஷா.
"இப்ப எதுக்கு நீங்கத் தேவையில்லாதத பேசுறீங்க. " வாசு கோபமாகவே கத்தினாள்
" தேவை இருக்கே. கார்த்திக்... கார்த்திக்... உன்னைப் பாராட்டுறதுக்கு எனக்கு வார்த்தையே வரல. ரொம்ப நேரமா யோசிட்டு இருக்கேன். கிடைக்கவே இல்ல. நீ என்ன சொல்ற ஜோஹிதா. இன்னைக்குக் கார்த்திக் செம்மையா அந்தாள அடிச்சான்ல." என வெகு உற்சாகமாகக் கேட்டாள் உஷா.
" ஒருத்தன அடிச்சதுக்கெல்லாமா பாராட்டுப் பத்திரம் வாசிப்பாங்க. " வாசு காட்டமாகவே கேட்டாள்..
" ஹாங்... வாசிக்கலாமே. ஏன்னா ந் ரொம்ப வர்ஷத்துக்கு அப்றம் பழைய கார்த்திக்க, அதாவது நான் ஸ்கூல் படிக்கிறப்ப இருந்த கார்த்திக்க பாத்தேன். நான் பாத்து பழகுன கார்த்திக்குக் கோபம் நிறைய வரும். வாய் பேசுறதுக்கு முன்னாடி கைப் பேசும். இன்னைக்கு நடந்த மாதிரி. அதான் கார்த்திக்க நான் பாராட்டுறேன். நீங்க என்னங்க சொல்றீங்க. " என உஷா தன் கணவனை பார்த்துக் கேட்க, அவரும் மனைவியின் கருத்தை ஆமோதித்து.
"நானும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மச்சி. அவன நீ தூக்கி டேபில்ல போடும்போது… ப்பா... பழைய கார்த்திக். என்னோட கார்த்திக்க பாத்த மாதிரி இருந்தது. நான் அந்தக் கார்த்திக்க ரொம்ப வர்ஷமா மிஸ் பண்ணேன் மச்சி. " என்று சொல்லி முருகன் கார்த்திக்கை தூக்கிச் சுற்றி அணைத்துக் கொள்ள, ஜோஹிதாவுக்கும் பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பார்த்து ரசித்து காதலித்த, கார்த்திக்கின் முகமும் நடந்த நிகழ்வுகளும் நினைவு வந்தது.
" இங்க என்ன நடக்குதுன்னு யாராது சொல்றீங்களா. கார்த்திப்பா உங்களுக்கு எப்படி முரளி ராஜி ஜோடியத் தெரியும். அவங்க எதுக்கு அம்மாவ அப்படிப் பேசுனாங்க. நீங்க எதுக்கு அந்த ஆளத் தூக்கிப் போட்டு அடிச்சீங்க. பதில் சொல்லுங்க கார்த்திப்பா. " எனக் கத்த,
" வாசு, முரளி எங்க கூடப் பீஜி படிச்சான். டெல்லில ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். அவனும் கார்த்திக்கும் ஃப்ரெண்டு. ஆனா ராஜிய எனக்குத் தெரியாது. அந்த ராஜேஸ்வரி யாரு கார்த்திக்?" எனக் கேட்க, ராஜி யார் என்றதற்கு பதில் சொல்ல விரும்பாது.
" ம்ச்... அந்த முரளி எனக்கு இப்ப ஃப்ரெண்டு கிடையாது. அவெ ஒரு துரோகி. அவனும் அவளும் ரொம்ப பெரிய துரோகி. என்னால மன்னிக்கவே முடியாத *** நாய்ங்க. " எனக் கண்ட படி திட்ட,
வாசுவிற்குப் புரிந்தது நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது பகைவர்களாக மாறி உள்ளனர் என்று. அதனால் தான் நேரில் பாத்ததும் கார்த்திக் கோபத்தில் முரளியை அடித்து விட்டான் போலும்.
ஆனால் அடுத்த வீட்டு விசேஷத்தில், டேபிள் சேர் உடையும் அளவிற்கு அவர்களோட நட்ப பாராட்டி இருக்க வேண்டாம் என்று தோன்றியது வாசுவிற்கு. அதைத் தான் கார்த்திக்கிடம் கூறினாள்.
"என்ன இருந்தாலும் நீங்க அவர அடிச்சிருக்க கூடாது. அடிச்சது மட்டுமில்ல நீங்க நடந்துக்கிட்டது ரொம்ப தப்பு. " எனக் காட்டமாகக் கத்த,
" உன்னோட பாய் ஃப்ரெண்ட்டா ஒன்னும் அடிக்கலயே. ஜஸ்ட் சட்டைய மட்டும் தான பிடிச்சான். அதுக்கு போய் இவ்ளோ கோபப்படுற." என உஷா சொல்ல, வாசுவிற்கு கடுப்பாகவும் கவலையாகவும் இருந்தது.
ஏனெனில் ருத்ராவிற்கு ரெஸ்பெக்ட் மிகவும் முக்கியம். அவனை டா என்று சொல்லியதற்கே அத்தனை கோபமாகக் கை உடையும் அளவிற்கு அழுத்திப் பிடித்தவன். மனம் விரும்பியவளாக இருந்தாலும் அவனின் ஈகோவை விட்டுக் கொடுக்க விரும்பாதவன்.
ஆனால் இப்போது. மாலையில் அவனின் தங்கை ரிஷப்ஷனின் கலாட்டா செய்தது மட்டுமில்லாமல், ருத்ராவின் சட்டையைப் பிடித்து உளுக்கித் தூக்கி உள்ளான் கார்த்திக்.
தன் நண்பர்கள், உறவினர்கள், பிஸ்னஸ் மேன் என அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதற்கு எவ்வளவு கோபமாக இருப்பான் என்று கவலையாக இருந்தது.
" கார்த்திப்பா நாளைக்கி காலைல ரெடியா இருங்க. முதல் வேலையா நாம சிவாஸ் பேலஸ் போறோம். அங்க சிவ்ராம் மாமாட்ட அவரோட பொண்ணு வரவேற்பப்ப நீங்கப் பண்ண கலாட்டாக்கு ஸாரி கேக்குறோம். "
"அவன் ஏண்டி ஸாரி கேக்கணும். அந்த முரளி தான வந்து பேசுனான். கார்த்திக் போய்டுன்னு எவ்வளோ சொல்லியும் கேக்காம வம்பிழுத்தது அவெந்தான். அதுனால கார்த்திக் நீ மன்னிப்பெல்லாம் கேக்காத. " உஷா.
"உஷா என்ன இருந்தாலும் ரிஷப்ஷன்ல வச்சி கார்த்திக் அப்படி பண்ணிருக்க கூடாது. அவரு எவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேன்னு தெரியுமா. அதுமட்டுமில்ல அங்க வந்திருந்த எல்லாருமே பெரிய ஆளுங்க. அவங்க முன்னாடி இப்படி நடந்துக்கிட்டதுனால அவருக்கு இது மரியாதைக் குறைவான மாதிரித் தான் ஃபீல் ஆகும். அதுனால அவர நேர்ல பாத்து நீ கண்டிப்பா ஸாரி கேக்கணும் கார்த்திக். " என்றாள் ஜோஹிதா.
" அவருக்கிட்ட மட்டும் தான. " உஷா.
" ருத்ரா கிட்டையும் தான். " வாசு கைக் கட்டிக் கொண்டு கூறினாள். ஏனெனில் ஸாரி கேட்டாலாவது அவனின் கோபத்தைக் கொஞ்சமாவது குறைக்கலாமே. அதான்.
" அந்தப் பொடிப்பயெ கிட்டல்லாம என் மச்சான் பேசமாட்டான். மன்னிப்பும் கேக்க மாட்டான்." என்றது அவளின் முருகு மாம்ஸ். அதுவும் வேகமாகக் கூறினார்.
"மாம்ஸ்… நீங்களுமா. "
" ஆமாண்டி. அந்த ஸ்கூல் பையங்கிட்ட போய் நம்ம கார்த்திக் 'மன்னிச்சிடுப்பா தெரியாம உன்னோட சட்டைய பிடிச்சி ஒரு அடி உசரத்துக்கு தூக்கிட்டேன். சார்.'ன்னு கேக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல. " என்றார் உஷா.
அனைவரும் பேசிப் பேசி சமாதானமாகி உறங்க நள்ளிரவு ஆனது. ஆனால் உறக்கம் தான் வரவில்லை. வாசு, ருத்ரா என்ன சொல்லப் போகிறானோ? என்ற கவலையில் இருக்க, கார்த்திக், முரளிதரன் மீது இன்னும் கோபமாக இருந்தான். ஜோஹிதா, ராஜியின் பேச்சிற்கான காரணம் தெரியாது குழம்பியபடி இருக்க, மூவரும் மூன்று சிந்தனைகளில் உறக்கத்தைத் தொலைத்தனர்.
அப்படி என்ன நடந்தது? ம்… வாங்க பாக்கலாம்.
"சொல்லுங்க ராஜேஸ்வரி மேடம். அப்படி என்னென்ன கேக்கப் போறிங்க என்னோட வைஃப்ட்ட. " கார்த்திக். கடைசி வரியை அழுத்திச் சொன்னான், ஜோஹிதா தன் மனைவி என்பதை.
அதுவரை தாம் தூம் எனக் கத்திக் கொண்டிருந்த ராஜேஸ்வரி கார்த்திக்கைப் பார்த்ததும் வாயைத் திறக்கவே இல்லை. அவளின் ஆத்திரமும் கோபமும் அளவுக்கு அதிகமாகவே இருந்தாலும் அதைப் பார்வையால் காட்டினாளே தவிர, திட்டுவதற்கு கூடக் கார்த்திக்கிடம் பேசவில்லை.
அவனிடம் பேசக் கூடாது எனச் சத்தியம் செய்தது தேவை இல்லாமல் நினைவுக்கு வந்தது. அதை மீற விரும்பாமல் அமைதியாக இருந்தாலும், உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, 'என்னோட மனைவி. ' என்ற வார்த்தையில்.
"கார்த்தி... மச்சான்... " என ஆசையுடன் அவனின் அருகில் வந்தான் முரளிதரன். அவனை ஒரு கரம் நீட்டித் தடுத்து நிறுத்தியவன்,
"மச்சா மாமான்னு கூப்பிடுற வேலை வேண்டாம். இங்க எதுக்கு வந்தியோ, அத மட்டும் பாத்துட்டுப் போய்ட்டே இரு. தேவையில்லாம எங்கிட்டப் பேசி வாங்கிக் கட்டிக்காத." என முகம் சுண்டி பற்களைக் கடித்துக் கொண்டுப் பேச,
" மச்சான் அப்படி பேசாத மச்சான். உன்னைப் பாக்கணும்னு நான் இத்தன நாள் இங்க இருந்தேன். இப்ப நாங்க வந்தது கூட உனக்காகவும் வாசுக்காகவும் தான். " என வாசுவை நோக்கிக் கரம் நீட்ட, அந்த கரத்தைத் தட்டி விட்டான் கார்த்திக்.
" நீ எதுக்கு எம்மகள பாக்கணும். தேவையில்லாதத பேசி எம்பொண்ணு பக்கம் நீயும் உம்பொண்டாட்டியும் வரவே கூடாது. உங்கள நான் ஆயுள் முழுக்க பாக்க கூடாதுன்னு இருந்தேன். பாக்க வச்சிட்ட. மரியாதையா உன் நொண்டிப் பொண்டாட்டிய கூட்டீட்டு போய்டு இல்லன்னா என்னைக் கொலகாரனாத்தான் பாப்ப. " என்ற கார்த்திக்கின் பார்வையிலும் பேச்சிலும் ஏளனமும் நக்கலும் அதிகமாகவே இருக்க, அது ராஜிக்கு கண்ணீர் வரவைத்தது.
முரளி மனைவியின் கண்ணீரை உணர்ந்தாலும் அவளுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்யாது நண்பனிடம் பேசும்படி கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
முரளி கெஞ்ச, கார்த்திக் கத்த அவ்விடம் மினி மீன் மார்க்கெட்டாக மாறியது. அவர்களின் பேச்சைக் கூடி நின்று வேடிக்கைப் பார்த்தனர் விருந்தினர். வேறு ஒருவரின் திருமண வரவேற்பில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டான் கார்த்திக்.
வாசுவிற்கும் ஜோஹிதாவிற்கும் கார்த்திக்கின் பேச்சு அதிகப்படியாகத் தெரிய, அவனை இழுத்துச் செல்லப் பார்த்தனர். ஆனால், முருகு உஷா ஜோடி மட்டும் மிகவும் சுவாரசியமான கார்த்திக் முரளியின் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கைத் தட்டி விசிலடிக்கவில்லை. அதுமட்டும் தான் பாக்கி.
" What's going on here?" என க்ரிஷ்ஷை பார்த்துக் கேட்டபடி வந்தான் தேவ். தன் ஒரே தங்கையின் வரவேற்பு நிகழ்ச்சி. அதில் யாரோ இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கின்றனர் என்று பார்த்தால் அந்த யாரோ இவனுக்கு வேண்டிய யாரோக்கள், என்ன செய்வது?
"தெரியல தேவா, முரளி அங்கிளும் கார்த்தி மாமாவும் கொஞ்சம் சத்தமா வாக்குவாதம், இல்ல சண்ட போடுற மாதிரித் தான் தெரியுது. "
" புல் சிட்…. அவங்களுக்குச் சண்ட போட்டுக்கணும்னு தோணுனா வெளில போய்ப் போட வேண்டியது தான. நம்ம வீட்டு ஃபங்ஷன் நடக்குற இடத்துல தான் போடணுமா. " என்றபடி முரளி இருக்கும் இடத்திற்கு வர, அங்கு ராஜியின் கண்ணீரைக் காண வேண்டு இருந்தது..
" நொண்டி… நான் நொண்டி… பிறக்கும்போது ரெண்டு கால குடுத்த கடவுள், அத திரும்பி எடுத்துக்காம இருந்தா, இந்த மாதிரிப் பேச்செல்லாம் நான் கேட்டிருப்பேனா. கடவுளே. " எனப் புலம்பியபடி அழ, அருகில் ரோகிணியும் அழுது கொண்டு இருந்தாள். அதைக் கண்ட தேவ்விற்கு கோபம் வந்தது.
"மிஸ்டர் கார்த்திகேன், இங்க என்ன நடக்குது?. எதுக்கு இப்படி இன்டீசென்டா பிகேவ் பண்றிங்க?. உங்களுக்குச் சண்ட தா போடணும்னா நானே அதுக்கு ஏற்பாடு பண்றேன். " எனக் கத்த, கார்த்திக் முரளியையும் தேவ்வையும் முறைத்தபடி நின்றான்.
"இன்டீசென்டா இங்க பீகேவ் பண்ணது நான் கிடையாது. இதோ இந்த *** தான். " என முரளியை திட்ட,
" அவங்க என்னோட கெஸ்ட். என்னோட கெஸ்ட்ட இன்சல் பண்ண உங்களுக்கு உரிம கிடையாது மிஸ்டர் கார்த்திகேயன். "
"யாரா இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. " எனச் சொல்லி வெளியே செல்லப் பார்க்க,
"எங்க போறிங்க?. அவங்க ரெண்டு பேர்கிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டு போங்க. " எனப் பற்களைக் கடித்துக் கொண்டு கோபத்தை அடக்கியபடி பேச, அது கார்த்திக்கை மேலும் எரிச்சலடைலயச் செய்தது.
தேவ்வின் மீது விவரிக்க இயலாத ஒரு வெறுப்பு கார்த்திக்கிற்கு எப்பொழுதுமே உண்டு. அது ஏன் என்று பலமுறை யோசித்தும் காரணம் தெரியவில்லை. ஆனால் வெறுப்பு மட்டும் இருந்தது. தன் ரெஸ்டாரன்ட்டை விலை பேசியதாலா, அல்லது தன் மகளுடன் பழகுவதாலா. இரண்டும் இல்லாது வேறு காரணங்கள் உள்ளதா எனத் தெரியவில்லை. புரியவில்லை அவனுக்கே. ஆனால் ருத்ரா தன்னிடம் எதையோ எதிர்பார்த்து குத்துலாகப் பேசுவது போல் தோன்றியது.
அந்தப் பொடியன் தன்னை வீழ்த்துவது போல் தோன்றியது. எந்தப் போட்டியில் என்று தெரியாது அவனிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்றுணர்ந்தான் கார்த்திக். அதனால்,
"மன்னிப்பா… கேட்டிடலாமே. முதல்ல இதுகள உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு. இதுகளுக்கு சொல்லிக்கிற மாதிரிப் பெரிய சைல சொத்தெல்லாம் கிடையாதே. அப்றம் ஏன் அவனுங்க கூட ஒட்டி உறவாடிட்டு இருக்க." என நக்கலாக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்பது போல் இரு கரத்தையும் கட்டிக் கொண்டு கார்த்திகேன் நிற்க, தேவ்விற்கு அது பிடிக்கவில்லை.
பாவம் சண்டையை நிறுத்த வந்த அவனே இப்போதே சண்டைக்கு நிற்கிறான். இருவரும் ஒருவர் மேல் உள்ள மற்றொருவரின் கோபத்தை தீர்த்துக் கொள்ளும் விதமாக அந்தக் களம் மாறியிருந்தது. இருவருக்கும் இடையே வாதங்கள் அதிகரிக்க, கார்த்திக் கோபத்தில் ருத்ராவின் சட்டையைப் பிடித்து உளுக்கிவிட்டான். இதற்கெல்லாம் காரணம் அந்த முரளி அவனையும் தூக்கி போட்டுள்ளனான்.
அதன் காரணமாக ஒரு மேஜையும், மூன்று நாற்காலியும் உடைந்து விட்டது. மேற்கொண்டு டேமேஜ் ஆகும் முன் நல்ல வேளையாக வாசு கார்த்திக்கை இழுத்து சென்றாள். அவளைத் தவிர வேறு யாருக்கும் கார்த்திக்கை அங்கிருந்து இழுத்துச் செல்லும் எண்ணமே இல்லை.
‘சண்டை காட்சிய யாருப்பா தடுக்குறா. முழுசா முடியட்டுமே. ஹாஸ்பிட்டல்ல வச்சி பிரிச்சி விட்டுக்கலாம்’ என்பது போல் தான் பார்த்தனர்.
புவனாவின் ரிஷப்ஷன் சில பல கலாட்டக்களுக்கு இடையே இனிதே சிறப்பாக நடந்து முடிந்தது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..