முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 48

அத்தியாயம்: 48


"கார்த்திப்பா நான் திரும்பவும் சொல்றேன், உள்ள என்ன நடந்தாலும் நீங்கக் கோபம் மட்டும் படவே கூடாது. ஆத்திரத்தில வார்த்தையக் கொட்டீட்டா அள்ள முடியாதுன்னு எனக்குச் சொல்லித் தந்தது நீங்கத் தான். சோ, அமைதியாப் பேசணும். பொறுமையா பேசணும். வாய்ஸ் ரைஸ் பண்ணாம பேசணும். புரியுதா கார்த்திப்பா. " என மகள் தந்தைக்கு அறிவுரைகள் கூறிக் கொண்டு வர., கார்த்திக் சிரித்தான்.


" ஃபாய் ஃப்ரெண்ட் குடும்பத்துல மேல எம்பொண்ணுக்கு இருக்குற பாசமும் அக்கறையும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிது வாசும்மா.‌" எனச் சொல்லிச் சிரிக்க, அவள் முறைத்தாள்.


"ஓகே முறைக்காத. என்னால உங்க ரெண்டு பேருக்குள்ள ப்ரேக்கப் ஆகிடாது. போதுமா. உனக்காக நான் மன்னிப்பு கேக்குறேன்." என்க,


'நீ பிரிச்சி விட மாட்ட… ஆனா உன்னால தான் அதுக பிரியப் போது. ச்ச... என்ன கார்த்திகேயா நீ. '


" கார்த்திப்பா எனக்காக நீங்கப் போய் பேசல. நீங்கப் பண்ணது தப்பு. அதுக்கு தான் சிவ்ராம் மாமாட்ட‌‌ பேசப் போறிங்க. நல்லா புரிஞ்சி வச்சிக்கங்க. நீங்கப் பண்ணதும் பேசுனதும் தப்பு. அதுலயும் நீங்க ராஜி ஆன்டிய தொண்டின்னு சொல்லிருக்கவே கூடாது. நீங்கச் சிவ்ராம் மாமாட்டையும் ராஜி ஆன்டிட்டையும் பேசுனா மட்டும் போதும். " 


"அப்ப உன்னோட பாய் ஃப்ரெண்டுட்ட. "


"வேண்டாம். அவெ கோபத்துல உங்கள ஏதாவது வார்த்தைச் சொல்லித் திட்டிட்டான்னா எனக்கு தான் கஷ்டமா இருக்கும். அதுமட்டுமில்ல வயசுல சின்னப் பையன்ட்ட மன்னிப்பெல்லாம் கேக்க கூடாது. உஷா ஆன்டி சொன்னது கரெக்ட் தான்."


"ம்… பெரிய பொண்ணு மாதிரிப் பேசுறா. வளந்துட்டா எம்மக. " என்று மகளின் சிகை கோதியவனுக்கும் ராஜியை அப்படிப் பேசியதுக் குற்ற உணர்வாக இருந்தது. இருவரும் பேசிக் கொண்டே சிவாஸ் பேலஸ்ஸை அடைய,


அமிர்தா இருவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவர் மட்டுமல்ல முக்கியமான ஒருசிலரைதீ தவிர மற்றவர்கள் யாரும் கார்த்திக்கை வரவேற்க தவறவில்லை. அந்த ஒருசிலர் ராஜி மற்றும் தேவ் ஆவர்.


" வா கார்த்திக்... சாப்பிடுறியா. " என ராசாத்தி அக்கறையுடன் கேட்க,


"இல்லம்மா… நான் சாப்பிட வரல. உங்க எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேக்கலாம்னு தான் வந்தேன். நேத்து நான் அப்படி நடந்துக்கிட்டு இருக்க கூடாது. கொஞ்சம் கோபம் அதிகமாகிடுச்சி. அதான்... சாரி. " என அனைவர் முன்னும் கேட்க, அனைவரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டனர். அதிலும் சிவ்ராம்.


" இட்ஸ் ஓகே கார்த்தி. பட் நடந்தது மறக்க முடியாத‌ ஒரு நிகழ்வு. என்னோட ஒரே பொண்ணு. அவளோட ரிஷப்ஷன்ல இப்படி ஆனதும் அதப் பாத்த எங்க எல்லாருக்கும் அதிருப்தி தான். ஆனாலும் அதப் பெருசு படுத்த விரும்பல. இத இப்படியே விட்டுடு. " என்றார்.


"ஆமா கார்த்தி விடு அந்தப் பேச்ச. உனக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது. ம்… அதுவும் அந்தத் தம்பி மேல. நீயும் அவனும் ஒன்னா படிச்சவங்களாமே. அப்றம் எதுக்கு சண்ட.‌" ராசாத்தி.


" எல்லா நேரமும் நண்பர்களாகவே இருந்திட முடியாது ம்மா. மனுஷனோட மனசு சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கிட்டேத்தான் இருக்கும். அப்ப நண்பனும் பகையா மாறுவான். "


" சூழ்நிலைக்கு ஏற்ப மாறுனா அதப் பச்சோந்திதனம்னு சொல்லுவாங்க. அவங்களோட உண்மையான நிறத்த மறைச்சி வாழ்றவங்க நம்பிக்கைக்கு உரியவங்களா இருக்க மாட்டாங்க. சரி தான மிஸ்டர் கார்த்திகேயன்." என்றது தேவ். அவனின் கண்களில் கோபம் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.


" ஹிம்… சரி தான். பட் பச்சோந்தி மாதிரி இருக்கலன்னா இந்த உலகத்துல நம்மால சர்வே பண்ணவே முடியாது மிஸ்டர் ருத்ரதேவ். அதுமட்டுமில்ல இங்லீஸ் பழமொழி ஒன்று இருக்கு. Be a Roman, when you are in Rom. நாம எங்க இருக்குறோமோ அதுக்கு ஏற்ற படி தான் நடத்துக்கண்ம். " என்க.


"ம்… நேத்து ரிஷப்ஷன்ல நடந்துக்கிட்ட மாறியா. " என நக்கலாகக் கேட்க.


" ம்… வச்சிக்கலாம். நான் பிரச்சனைய முதல்ல ஆரம்பிக்கல. சொல்லப் போனா நான் உங்க கெஸ்ட்டுட்ட முதலயே சொன்னேன், போய்டுன்னு. கேக்கல. தொடர்ந்து தேவையில்லாதத பேசிட்டு இருந்தான்.” என்று சிறு இடைவெளி விட்டான்.


 ‘அதான் அடிச்சேன்.’ என்பது போல் இருந்தது அந்த இடைவெளி. பின் சிவராமிடம் திரும்பி,


“என்ன இருந்தாலும் மிஸ்டர் சிவ்ராம் நான் பண்ணது தப்பு. சோ, sorry for that. " கார்த்திகேயனும் ருத்ராவிற்கு சளைக்காது பதில் பேச.


" கார்த்தி, இந்தப் பேச்ச இத்தோட விட்டுறது நல்லது. இது உன்னோட செட்டில்மென்ட் அமௌண்ட். நீங்க உடைச்ச ஃபர்னிச்சர் ஐட்டம்ஸ்ஸ கழிச்சிட்டேன். " என்க, கார்த்திக் புன்னகையுடன் பெற்றுக் கொண்டான். அப்போது ராஜியும் முரளியும் அங்கு வர, கார்த்திக் ராஜியிடம் சென்று மன்னிப்பு வேண்டினான்.


"முரளி, எனக்கு யாரோட மன்னிப்பும் தேவையில்ல. கழுத்த அறுத்துட்டு மன்னிப்பு கேக்குறதே இவனுக்குப் பழக்கமா போச்சி. ஆனா இவனுக்கு மன்னிப்பு வழங்குற அளவுக்கு எனக்குப் பெரிய மனசு கிடையாது. " என்றாள் அவள்.


"மச்சான் அவ கோபமா இருக்கா. " என முரளி பேச மீண்டும் கையை உயர்த்தி தடுத்தான் கார்த்திக்.


" நான் உன்னை அப்படி பேசாதன்னு சொல்லிருக்கேன். இங்கயும் காஸ்ட்லியான நிறைய ஃபர்னிச்சர்ஸ் இருக்கு. உன்னோட காலும் நல்லாதா இருக்கு. உடைஞ்சாலும் உடைஞ்சிடும்‌‌. எங்கிட்ட பேச ட்ரெஸ் பண்ணாத. " என்றவன் அவர்களின் மகள் ரோகிணியைப் பார்த்துக் புன்னகைத்து அவளின் கழுத்தில் ஒரு தங்க சங்கிலியைப் போட்டான். வாசுவிற்கு அவர்கள் தந்ததைத் திருப்பித் தந்துவிட்டார் போல் இருந்தது.


" மிஸ்டர் கார்த்திகேன், I have something to talk to you about. " என தனியாகப் பேச வேண்டும் என அவனின் அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றான் தேவ்.


வாசு, கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்து பேசத் தொடங்கியதுமே தன்யாவைப் பார்க்கச் சென்று விட்டாள். அவளுக்குத் தன் தாயைப் பழித்து பேசிய ராஜியுடன் பேசப் பிடிக்கவில்லை. ஏன் பார்க்கக் கூட விரும்பவில்லை.


டேனியலுடன் என்ன பேசினாள்? பேசியபின் எங்குச் சென்றாள் என்று தெரியாது. ரிஷப்ஷனில் இல்லை அவள், அது‌மட்டும் நன்கு தெரியும். எனவே இருவருக்குள்ளும் என்ன நடந்தது எனக் கேட்க அவளின் அறைக்குள் செல்ல,


அறை இருளில் மூழ்கி இருந்தது. உறங்கிக் கொண்டு இருப்பாள் என்று நினைத்து விளக்கைப் போட்டு அவளின் மேல் கை வைக்க, உடல் அனலாய் கொதித்தது.


"தன்யா... தன்யா... என்னாச்சி‌ தன்யா? காய்ச்சல் அடிக்கிது!. எந்திரி தன்யா‌‌. "


காய்ச்சல் வீரியத்தில் மயங்கி விட்டாளோ எனத் தன்யாவின் கன்னம் தட்டிக் கேட்டாள் வாசு. நேற்று அணிந்த உடையைக் கூட மாற்றாது அப்படியே கிடந்தாள் தன்யா. வாசுவின் உலுக்கலில் கண் விழித்தவள். வாசுவைப் பார்த்ததும் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்‌‌. சிறு பிள்ளைபோல் குரலுயர்த்தி ஓ வெனத் தன்யா அழ, டேனியல் மீண்டும் தன்யாவை காயப்படுத்தி விட்டானோ என்று தோன்றியது வாசுவிற்கு.


" தன்யா, அந்த டேனியல் தான காரணம். நீ எதுக்கு அவெங்கூட தனியா பேசப் போன? என்ன பண்ணான்? சொல்லு தன்யா. உன்னை என்ன சொன்னான் அவெ. அப்படி அவன் என்ன பேசிருந்தாலும் காதுல வாங்கிக்கிட்டா அது உனக்குத் தா லாஸ். " என்க,


"இனி இழக்குறதுக்கு எங்கிட்ட எதுவுமே இல்லையே வாசு. எங்கிட்ட இருந்த எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன். அநாத மாதிரி ஃபீல் பண்ண வச்சிட்டான். என்னைச் சுத்தி எல்லாரும் இருந்தும் அனாதை ஆக்கிட்டான். " என்க.


"என்ன நடந்தது தன்யா?" என்ற வாசுவின் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாது.


" பொய் வாசு. எல்லாமே பொய். டேனியல் எங்கிட்ட காட்டுன அன்பு லவ் மொத்தமும் பொய். உண்மையான காதல ஒரு பையங்கிட்ட தேடி நான் ஏமாந்துட்டேன். அது தான் தா உண்ம. இந்த உலகத்துல எல்லாருமே எல்லார் கூடவும் உண்மையான அன்பா இருக்குறது இல்ல. ஏதோ ஒரு காரணம், தேவ அதுக்காகப் பழகுறாங்க. அந்தத் தேவ முடிஞ்சதும் கலட்டி விட்டுட்டு போய்ட்டே இருக்காங்க.


டேனியலும் அப்படி தான். காதல்னு எதுவுமே கிடையாது வாசு. " எனக் கதறி அழுதவளைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது.


தன்யா என்ற பெயரைக் கேட்டாலே அவளின் குறும்பு சிரிப்புடன் மின்னும் அவளின் முகம் தான் நினைவு வரும். ஆனால் இன்று‌. அவளின் கண்ணீரை காண்கையில் கஷ்டமாக இருந்தது வாசுவிற்கு. டேனியல் மீது கோபமும் வந்தது. அவளைப் பேசிச் சமாதானம் செய்து, அவளுக்கு உணவு எடுத்து வந்து தந்தாள் வாசு. கூடவே இருந்தாள்.


தன்யா டேனியலிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க, அவன் அதை மறுத்து அவனின் பிடியிலேயே நின்றான். கூடவே லிவ்விங் டுகெதர் லைஃப் தான் சிறந்தது என்று பாடம் வேறு நடத்த, அது தன்யாவை சோர்வுறச் செய்து அவனை வெறுத்து ஒதுக்க வைத்தது.


அவனுடன் இருந்த நினைவுகளை அழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறாள் அவள்.


" வாசு நான் இன்னைக்கு இந்தியா போறேன். ஈவ்னிங் ஃப்ளைட். இனி இந்த நாட்டுப்பக்கம் வரவே மாட்டேன். பட் உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். நாம டச்லயே இருக்கலாம். " என்றவள் உடைகளைப் பேக் செய்யத் தொடங்கினாள்.‌ கடைசி வரை டேனியலுக்கும் தன்யாவிற்கும் இடையே நடந்த உரையாடல் என்ன என்று தெரியவே இல்லை வாசுவிற்கு.


அவளின் அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு கார்த்திகேயன் தேவ்வின் அலுவலக அறையில் இருப்பது தெரிந்தது.


அதுமட்டும் இல்லை, இருவரும் காரசாரமாக எதையோ விவாதிப்பது போல் தெரிந்தது. ருத்ராவின் பேசில் கோபம் இருப்பதை அவனின் முகபாவனைகளே காட்டிக் கொடுத்தன. ஆனால் கார்த்திகேயனின் உணர்வுகள் என்ன எனக் கணிக்க முடியாதபடி இறுகி இருந்தன.


கதவை நெருங்கி வந்தவளின் காதுகளில் நன்கு விழுந்தது ருத்ராவின் குரல்.


" கடைசியா என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கிங்க. " ருத்ரா.


‍" அத நான் முன்னாடியே சொல்லிட்டேன்‌‌. திரும்பத் திரும்ப கேட்டா மட்டும் மனச மாத்திட்டு பதிலையும் மாத்தி சொல்வேன்னு எதிர்பாக்காத. "


" நான் நினைச்சத நடத்திக் காட்டியே பழக்கப்பட்டவெ. சொன்னத நீங்கச் செஞ்சி தான் ஆகணும்‌‌. இல்லன்னா செய்ய வைப்பேன். "


"ஆல் தி பெஸ்ட். நீ நினைச்சத நடத்தி காட்ட." என்ற கார்த்திக் எழுந்து கொள்ள,


" இத்தன வயசுக்கு அப்றமும் உங்கள நீங்க மாத்திக்கவே இல்லல்ல. ஆனா மாறுவீங்க. உங்க பொண்ணு இருக்கா. அவ போதும் எனக்கும். நான் நினைச்சது எல்லாத்தையும் என்னோட இடத்துல இருந்து அவ செய்வா. உங்கள அசைச்சி பாக்குற ஆயுதமா மாறுவா உங்க பொண்ணு. நான் அவள மாத்துவேன். " என்க, திரும்பி அதற்கும் ஒரு புன்னைகையுடன் தன் கட்டை விரலை உயர்த்தி, ஆல் தி பெஸ்ட்.’  என்பது போல் வாழ்த்தி  விட்டுச் சென்றான் கார்த்திகேயன்.


அவை அத்தனையையும் வாசு கேட்டாள். அவளுக்குத் தான் ருத்ராவின்‌ மீது சந்தேகம் இருக்கிறதே. தன்னைப் பணயமாக வைத்துத் தன் தந்தையிடம் அந்த உணவகம் விலை பேசப்படும் என்று. அதைச் சரியாகத் தப்பாக யோசித்த அவளுடைய மூளைக்கு என்ன பரிசு தரலாம். ம்...


'ஒரு சேர்ல உக்கார வச்சி. மண்டைல சில வயர்கள ஒட்டிக் கரண்ட் சாக் குடுக்கலாம். என்ன சொல்றிங்க. '


வெளியே வந்த கார்த்திக் மகளைப் பார்த்து எதுவும் சொல்லாது அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்குத் திரும்பினார்.


" போகலாம். நம்ம வீட்டுக்கு." 


"கார்த்திப்பா தன்யாக்கு ஈவ்னிங் ஃப்ளைட், அவள ஏத்தி விட்டுட்டு வீட்டுக்குப் போலாமே. " 


"நீயும் ஜோஹிதாவும் இருந்து பாத்துட்டு வாங்க. நான் கிளம்புறேன். " என்றவனின் முகத்தில் உள்ள உணர்ச்சிகளைப் படிக்க முயன்று தோற்றுப் போனாள் வாசு.


' வாசு ருத்ரா சரிப்பட்டு வரமாட்டான். அவெங்கூட இனி பழகாத. இனி அவெங்கூட நீ பேசுறத நான் பாத்தேன். அவ்வளவு தான். ' என்பது போன்ற மிரட்டல்களையும், ‘வேண்டாப் வாசு அந்த ருத்ரா. உனக்கு நல்ல பையன் கிடைப்பான். மனத் தேத்திக்க.’ என்பது போன்ற அறிவுரைகளையும் எதிர் பார்த்தவளுக்கு கார்த்திக்கின் பேச்சு மிகவும் பிடித்திருந்தது.


தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்காகத் தன் மகளை அவன் மாறச் சொல்லவில்லை என்பது.


'ச்ச இந்தக் கார்த்திப்பா தான் எவ்ளோ நல்லவரு. நான் சொன்னேங்கிறதுக்காக… எனக்காக... பொறுமையா பேசி, எல்லார்ட்டையும் சாரி கேட்டாரு. ஆனா இந்த ருத்ரா. மன்னிப்பு கேட்க வந்த இடத்துல பிஸ்னஸ் பேசிட்டு இருக்கான்.


இவன மாறி ஒரு பிஸ்னஸ் சைக்கோ கிட்ட மாட்டிக்காம தள்ளி இருக்குறது தான் பெட்டர். இவனும் மத்த ஆம்பளைங்க போலத் தான். என்னோட கார்த்திப்பாட்ட இருந்து அந்த ரெஸ்டாரன்ட்ட வாங்குறதுக்காகத் தான் எங்கிட்ட பழகுறான். என்னோட சந்தேகம் ரொம்ப சரி. இவனும் அவனோட தேவைக்காகத் தான் எங்கூட பழகுறான்.


இவங்கூட நெருங்கிப் பழகுனா தன்யாவோட நிலம தான் எனக்கும். இவனப் போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு. ச்ச... ' என நினைத்தவள் வீட்டிற்கு வந்ததும் செய்த முதல் வேலை, அவளின் வேலையை ரிசைன் செய்தது.

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


 

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...