அத்தியாயம்: 49
இரு வாரங்கள் ஓடி விட்டன அவள் ரிசைனிங் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து. எந்த ஒரு பதிலும் வரவில்லை. விளக்கமும் கேட்கப்படவில்லை.
ஒரு பணியிலிருந்து விடுபடும்போது முன்கூட்டியே தகவல் சொல்லி இருக்க வேண்டும். குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னாள்லாவது வேலையை விடுவதாக மேலிடத்திற்குச் சொல்ல வேண்டும். வாசு சொல்லி விட்டாள். இனி ஒரு மாதம் வேலை செய்து விட்டு விடுபட வேண்டியது தான் பாக்கி.
அவளுக்குத் துளியும் விருப்பம் இல்லை பிடித்த வேலையை விடுவது. ஆனால் ருத்ராவின் கீழ் வேலை செய்வது பிடிக்கவில்லை. அவளின் செவிகளில் இருவரின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒன்று ருத்ராவின் குரல். 'உங்கள அசைச்சி பாக்குற ஆயுதமே உங்க பொண்ணு தா. அவள நான் மாத்துவேன். ' என்றதும்.
'இந்த உலகத்துல எல்லாருமே எல்லார் கூடவும் உண்மையான அன்பா இருக்குறது இல்ல. ஏதோ ஒரு காரணம், தேவை. அதுக்காகத் தான் பழகுறாங்க. அந்தத் தேவை முடிஞ்சதும் கலட்டி விட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க. ' என்ற தன்யாவின் குரலும் கேட்டுக் கொண்டே இருந்தது.
இரண்டும் சேர்ந்து வாசுவை பயங்கரமாகக் குழப்பியது. தன்னை வைத்து ருத்ரா தன் தந்தையிடம் பேரம் பேசியிருக்கிறான்.
'உங்க மன்னிப்ப நான் ஏத்துக்கணும்னா. உங்க ரெஸ்டாரன்ட்ட நீங்க எழுதித் தரணும். இல்லன்னா உங்க பொண்ண வச்சி அத எழுதி வாங்கிக்கிவேன். ஹாஹ்ஹா... ' என முகத்தில் மரு வைத்த வில்லன்போல் ருத்ராவை உருவகப்படுத்திப் பார்த்தார் வாசு.
கண்ணாடிக்குப் பின்னால் என்ன பேசினார்கள் என்பதே தெரியாது ருத்ராவிற்காக டப்பிங் பேசியுள்ளாள். இருவரின் வாயசைவை வைத்து அவளே வார்த்தைகளை நிரப்பிக் கொண்டாள்.
'கடைசில தன்யா சொன்னது தான் உண்ம. யாரையும் நம்பக் கூடாது. ச்ச... அவெ யாருன்னு தெரிஞ்சும் அவெகூட நெருக்கிப் பழகுனது என்னோட தப்பு. ஆனாலும் பர்ஸ்னல் லைஃப்குள்ளயும் பிஸ்னஸ் மேனா மாறிப் பிஸ்னஸ் பேசிருக்க கூடாது. இடியட். ' என திட்டித் தீர்த்தாள் ருத்ராவை.
காலையில் மிகவும் தாமதமாகப் பணிக்கு வந்த வாசுவை வரவேற்றது நான்ஸி.
" வெல்கம் மேடம். உங்களுக்கு இப்ப தான் ட்யூட்டிக்கு வர்ற வழி தெரிஞ்சதா. " என நக்கலாகக் கேட்க,
"உனக்கு என்ன வேணும் நான்ஸி? " என்றாள் வாசு சோர்வாக.
"எனக்கு எதுவும் வேணாம். அதுவும் உங்கிட்ட இருந்து எதுவும் வேண்டவே வேண்டாம். பட் நம்ம புது MD க்கு நிறைய வேணும் போல இருக்கு. உன்ன பாக்கணும்னு காலைல ஆறு மணில இருந்து வெயிட் பண்றாரு. "
"என்ன ருத்ரதேவ் வந்திருக்கானா? " என அதிர்ச்சியுடன் கேட்டாள் வாசு.
ஏனெனில் ராஜினாமா தகவலை அவனின் மெயிலுக்கு அனுப்பியவள் அவனின் ஃபோன் நம்பர்… ஃபேஸ்புக் ஐடி உள்ளிட்ட தொடர்பு கொள்ளும் வழிகளை ப்ளாக் செய்து விட்டாள்… இனி பேசவே கூடாது என்று. இப்போது நேரில் வந்துள்ளான் என்றால் அதிர்ச்சி வரத்தான செய்யும்.
"ம்... அவனே தான். உன்னோட ஃபாய் ஃப்ரெண்ட். ரொம்ப கோபமா இருக்கான் போல. வந்ததுமே உன்னை கேட்டு ஒரு கண்ணாடி டிப்பாய உடச்சிட்டான். இப்பதா அத க்ளீன் பண்ண ஆள அனுப்புனேன். போ… போய்ப் பாரு. உன்னையும் அந்தக் கண்ணாடி மாதிரி நொறுக்கி எறிஞ்சா நான் ரொம்ப சந்தோஷப் படுவேன். " என விஷமச் சிரிப்புடன் நான்ஸி செல்ல, வாசு ருத்ராவை காணச் சென்றாள்.
" May I. " எனக் கதவைத் தட்டி கேட்க,
"Come in. " என்ற குரல் கேட்டது. சிறு பயம் உண்டாக, எச்சிலுடன் சேர்ந்து அதையும் முழுக்கித் தள்ளிவிட்டு விட்டு உள்ளே வந்தாள்.
"குட் மார்னிங் ஸார். "
" மார்னிங். Please sit down. " என்றவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதைச் சிறு பிள்ளைபோல் தன் கால்களால் முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டு இருந்தான்.
'ஐய்யையோ... இந்தப் பிஸ்னஸ் மேக்னட் ஆரம்பிச்சிட்டானே. என்ன பண்ணப் போறானோ. ' என யோசித்தபடி அமர,
" உங்க ரிசைனிங் மெயில் கிடைச்சது. ரீசன் தெரிஞ்சிக்கலாமா. எதுக்கு ரிசைனிங் மெயில் அனுப்புனிங்கனு. " எனக் கேட்க,
"அது... அது... சம் பர்ஸ்னல் ப்ராப்ளம். கொஞ்சம் ஹெல்த் இஸ்யூஸ் இருக்கு. " என்க, தேவ் மேஜையில் ஓங்கி தட்டியபடி எழுந்து நின்றான்.
"ஏன் வாசு பொய் சொல்ற. ஃபேன். ஃபேஸ்புக்ன்னு எல்லாத்துலயும் ப்ளாக் பண்ணிட்ட. வேற யாரு மூலமாவும் உங்கிட்ட பேச ட்ரெய் பண்ணாலும் பேசாம அவாய்ட் பண்ற. என்ன ப்ராப்ளம்ன்னு சொன்னாத்தா எனக்குத் தெரியும் வாசு. speak out. " எனக் கோபமாகக் கேட்டான் ருத்ரா.
ஒரு வாரமாக அவளைத் தொடர்பு கொள்ள அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த கோபம் அவனுக்கு. என்ன ஏது என்று எதுவும் சொல்லாது அவள் பணியிலிருந்து வெளியேற விரும்புவது என அவனுக்குப் பல காரணங்கள் உள்ளது.
அவனின் கோபம் கண்டு வாசு வாய் திறக்காது அமைதியாகி பயந்து போய்ப் பார்க்க, அவன் அவளின் முன் வந்து அவளின் நாற்காலியைப் பற்றி மண்டியிட்டான்.
" வாசு, ஏன் என்னை அவாய்ட் பண்ற. நமக்குள்ள எல்லாமே ஸ்மூத்தா தான போய்க்கிட்டு இருக்கு. அப்றம் ஏன் இந்தக் கேப். நான் யாரு என்னன்னு தெரியாதப்பவே உன்னோட மனச நீ எங்கிட்ட மறைச்சது இல்ல. ஓப்பனாத்தா இருந்திருக்க. இப்பயும் ஓப்பனாவே சொல்லு. என்னாச்சி. " என அவளின் முகம் பார்த்துக் கேட்க, வாசுவிற்கு அழுகை அழுகையாக வந்தது.
'ஏன்டா கார்த்திப்பாட்ட அப்படி பேசுன.. ' எனக் கேட்கச் சொல்லி மனம் கதற.
" எதுவும் இல்ல ருத்ரா. நான் கார்த்திப்பா கூட ரெஸ்ட்டாரெண்ட்ட பாத்துக்க ஆசைப் படுறேன்."
"அதுக்கும் என்னோட நம்பர ப்ளாக் பண்றதுக்கும் என்ன சம்மந்தம். "
" அது. ருத்ரா நமக்குள்ள எதுவும் செட்டாகாதுன்னு தோணுது. நாம ப்ரேக்கப் பண்ணிக்குவோமா. " என்றவளை விட்டு எழுந்து சற்று தள்ளி நின்றவன்.
" எனக்கு ரீசன் வேணும். எதுக்காக இப்படி விசித்திரமான முடிவ எடுத்தன்னு எனக்குத் தெரியணும். " என்றான் முடிந்த அளவு பொறுமையைக் கொண்டு வந்த குரலில்.
" அது... அது…" என்று இழுத்தவளுக்கு எப்படி சொல்வது என்று தயக்கம்.
"எதுவா இருந்தாலும் இங்கயே சொல்லிடு. மிஸ்டர் கார்த்திகேயன் ப்ரேக்கப் பண்ண சொல்லிச் சொன்னாறா. " எனக் கேட்க, அது அவளுக்குக் கோபத்தை உண்டாக்கியது.
" என்னோட கார்த்திப்பா என்னோட மூளைல அவரோட கருத்த தினிச்சதே இல்ல. எதுவா இருந்தாலும் நானா யோசிச்சி செய்யணும்னு எனக்கு முழு சுதந்திரம் குடுத்து வளத்திருக்காரு. சோ இது என்னோட தனிப்பட்ட முடிவு தான்."
" நம்புற மாதிரி இல்லயே இது. அப்பா பேச்ச கேக்குற பெண்ணு தான நீ. "
"கார்த்திப்பா எதுவும் சொல்லல. "
"பொய். அன்னைக்கி எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்றமா கண்டிப்பா மிஸ்டர் கார்த்திகேயன் என்னைப் பத்தி நல்ல விதமா சொல்லி வான் பண்ணிருக்காரு. அதுனால தான நீ ரிசெக்ட் பண்ற. வேலையையும் என்னையும் சேத்து."
" இல்ல. அப்படில்லாம் இல்ல. கார்த்திப்பா உன்னைப் பத்தி இதுவரைக்கும் எதுவுமே சொன்னது இல்ல. இந்த முடிவு எடுக்கக் காரணம் கார்த்திப்பா இல்ல. நீ தான். நீ தான் காரணம். " என அவளும் காட்டமாக பேசி எழுந்து நிற்க, அவன் புருவங்கள் முடிச்சிட்டன.
" நான் கேட்டேன். நீயும் கார்த்திப்பாவும் பேசிக்கிறத நான் தெளிவா கேட்டேன். " என இரு கரத்தையும் கட்டிக் கொண்டு பேச,
" என்ன கேட்ட? முழுசா கேட்டியா! எப்பருந்து கேக்க ஆரம்பிச்ச.? என்னென்ன கேட்ட? " என்றவனின் குரலில் பயமும் பதட்டமும் இருந்தது என்று நினைக்கத் தோன்றியது வாசுவிற்கு.
" நம்ப முடியல ருத்ரா. என்னாலா நம்பவே முடியல. நீ என்னோட கார்த்திப்பாட்ட பேரம் பேசுனத என்னால நம்பவே முடியல. அதுவும் என்னைப் பணயமா வச்சி, அவர ப்ளாக் மெயில் பண்ணினத என் காதால கேட்டேன். உன்னோட பிஸ்னஸ்காக நீ எந்த எல்லைக்கும் போவன்னு எனக்குத் தெரியும். ஆனா என்னை வச்சே பிஸ்னஸ் பேசுவன்னு நான் நினைச்சி கூடப் பாக்கல. " என கோபமாகக் கேட்க,
'லூசா இவ. எதையும் முழுசா கேட்காம. அரையும் கொறையுமா கேட்டுட்டு வந்து கண்ணாபின்னான்னு யோசிச்சிக்கா பாரு. இவள... ச்ச.' என மில்லி மீட்டர் அளவுக்குப் புன்னகை வந்தாலும் அவள் தன்னை தவறான கோணத்திலேயே பார்த்துப் பழகி வருகிறாள் என்பது சென்டி மீட்டர் அளவுக்குக் கவலையையும், அடுத்தடுத்து அவள் பேசிய பேச்சு கிலோமீட்டர் அளவுக்குக் கோபத்தைத் தந்தது ருத்ராவிற்கு.
ஏதோ பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பல கிளைகள் கொண்ட அவர்களின் உணவகத்தை மிரட்டி வாங்குவது போல் வாசு பேச.
"நீ கார்த்திப்பாட்ட பேசுனது தப்பு. நீ என்னை லவ் பண்றன்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்ல. எங்க ரெஸ்டாரன்ட்ட எழுதி வாங்கத்தா எங்கூட க்ளோஷா பழகிருக்க. இல்ல பழக கூடச் செய்யல நடிச்சிருக்க.
எல்லா சூழ்நிலைகளிலும் பிஸ்னஸ் மேன்தா நீ இருந்திருக்க. நாந்தா முட்டாள் தனமா இது லவ்வுன்னு நினைச்சி கற்பனைய வளத்துக்கிட்டேன். அடுத்தவங்க உழைப்ப அடிச்சி பிடுங்குறோங்கிற நினப்பு உனக்கு வரவே இல்லையா ருத்ரா. " எனப் பேசிக் கொண்டே போக, அவன் அமைதியா நாற்காலியில் அமர்ந்து கொண்டான். நாற்காலியை அசைத்த படி, ஏதோ ஒரு ஃபைல்லை மிரட்ட,
'நான் பேசிட்டே இருக்கேன் இவெ கண்டுக்காம போய் உக்காந்திட்டான் பாரேன். ' என நினைத்தவள் அவனின் முன் வந்து நின்று மேஜைய தட்டி,
"ருத்ரா, நான் பேசிட்டே இருக்கேன். நீ பேசாட்டிக்கி வந்து உக்காந்து உன் வேலைய பாத்தா என்ன அர்த்தம். உண்ம தெரிஞ்சிடுச்சே அடுத்து என்ன பண்ணி அந்த ரெஸ்டாரன்ட்ட பிடுங்களாம்னு திட்டம் போடுறியா. " எனக் கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன்.
"Get… out… " என்றான் நிதானமாக. அவள் திருதிருவென முழிக்கவும்.
" உனக்கு இங்லீஸ் தெரியாத. நான் உன்னை வெளில போச்சொன்னேன். போய்டு. ஒரேடியா. வேலைய விட்டு மட்டுமில்ல. என்னோட லைஃப் விட்டும் தான். "
"ருத்ரா." என்றவளுக்கு குரல் எழவில்லை.
" வெளில போடி. " என்க அவளும் கோபமாகச் சென்றாள். கதவைத் திறக்கும் நேரம், அவளை அழைத்தான் ருத்ரா, அதுவும் சொடக்கிட்டு. அவள் திரும்பியதும்.
" ஒரு 2000 square feet இருக்குமா… உங்கப்பெ கட்டி வச்சிருக்குற தாஜ் ரெஸ்ட்டாரெண்ட். என்னோட பெட் ரூம் ஏரியா அளவு கூட உங்க ரெஸ்டாரன்ட்ட விட அதிகமா இருக்கும். நாலு சுவரு. அதுக்கு மேல் ஒரு ஓடு. அதெல்லாம் ஒரு ரெஸ்டாரன்ட்டுன்னு நான் அந்த டஞ்சன்காகப் பிஸ்னஸ் பேச வருவேன்னு நினைக்கிற.
ஒன் டேக்கு எவ்ளோ turnover பண்ணுவீங்க. 1000 டாலர்… இல்ல அதுக்கும் கீழ… உனக்கு என்னோட ஒரு நாள் இன்கம் என்னன்னு தெரியுமா. ஒரு நாள்ல நான் பாக்குற, ஹேண்டில் பண்ற பிஸ்னஸ் என்னன்னு தெரியுமா. ஏன் என்னோட கார் ரேட் கூட உன்னோட அந்தக் குப்ப ரெஸ்டாரன்ட்ட விடக் காஸ்ட்லி. " என வாசுவை இளக்காரமாகப் பேச, வாசு கோபமாக நின்றாள்.
"அவ்ளோ பெரிய ஆளு எதுக்காக என்னை மாதிரி ஏழை கூடப் பழகணும். டைம் பாஸ்க்கா. இல்லபொழுது போக்குக்கா. "
"என்னோடபொழுது கோல்ட் மாதிரி. அதத் தேவையில்லாம யூஸ் பண்ணிக்க மாட்டேன். " என்றவன் அவளின் அருகில் வந்து,
"நான் வந்தது உனக்காக. உன்னோட ப்யூட்டிக்காக இல்ல. ப்யூட்டி புல்லான உன்னோட ஹார்ட்டுக்காக. அது எனக்குப் பிடிச்சிருந்தது. உன்னை லவ் பண்ண வச்சது. Yes I love you. Love you so much. உன்னோட காதலுக்காகத் தான் உங்கூட பழக நினைச்சேன். பட். இப்ப எனக்கு அது வேண்டாம். என்னை எப்பயும் தப்பான ஒரு வில்லனாவே பாக்குற நீ எனக்கு வேணாம். get… out…" என்றவன் கோபமாக அங்கிருந்த பூச் சாடியை குத்த, அது உடைந்து சிதறியது. அவனின் மனத்தை போலவே.
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து அழுகையுடனே சென்ற அவளைப் பார்க்கையில் தேவ்வின் மனம், விட்டுக் கொடுக்க சொல்லிக் கெஞ்சியது. அவளிடம் உன் காதலை பேசிப் புரிய வை என்ற இதயத்தில் கார்த்திகேயனைக் கொண்டு வந்து நிறுத்தினான்.
அவன் தான்... அவன் தான் வாசுவிடம் எதுவோ சொல்லி இருக்க வேண்டும். அவனால் தான் இன்று தன்னை விட்டு அவள் பிரிந்து செல்கிறாள். என்றுரைத்தது அது.
" விடமாட்டேன். ஒருக்க உங்கிட்ட தோத்துட்டேன் மிஸ்டர் கார்த்திகேயன். அதே மாதியி இந்தத் தடவையும் நான் உங்கிட்ட தோக்க மாட்டேன். I will win you மிஸ்டர் கார்த்திகேயன். " என்றுரைத்தவன் அந்த அறையைச் சின்னா பின்னமாக்கினான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..