அத்தியாயம்: 52
"மா…தே…ஷ். எழுது பாப்போம்." தாரிகா.
"ம்மா, இது கஷ்டமா இருக்கு ம்மா. நான் வேண்ணா இங்கலீஸ்ல எழுதிக் காட்டவா. என்னோட மிஸ் சொல்லித் தந்தாங்க. "
"உங்க மிஸ் இங்லீஸ்ல தான் பேர் எழுத சொல்லித் தருவாங்க. நான் தான் தமிழ்ல எழுதக் கத்து தரணும். ஏன்னா நான் தான் உன்னோட அம்மா. ம்… வாய் பேசாம எழுது பாப்போம். " தாரிகா மகனின் கையில் டிஜிட்டல் சிலேட்டையும், பல்பத்திற்குப் பதிலாக மார்க்கரையும் திணித்து மகனின் பெயரைத் தமிழில் எழுதுவது எப்படி என்று கற்றுத் தந்தது கொண்டிருக்கிறாள்.
"ம்மா… கை வலிக்குதும்மா. நாம இன்னைக்கி ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கி எழுதலாமா." என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டுக் கேட்கத் தாரிகா மனமிறங்கவில்லை.
" முடியாது மாதேஷ். டென் டயம், அதாவது பத்து தடவ கரெட்டா எழுதிட்டேன்னா போதும். திரும்ப நாம நாளைக்கி ஒரு பத்துவாட்டி எழுதலாம். டெய்லி இப்படி எழுதுனா தான் உனக்கு உன்னோட பேர தமிழில எழுத வரும். கூடவே உயிரெழுத்தையும் உனக்குச் சொல்லித் தரணும். " என்க, மகன் தலையைக் குனிந்து கொண்டான். தாயிடம் பேசிப் பலனில்லையே அதான்.
" ஹனி என்னோட டை எங்கன்னு பாத்தியா." அறையிலிருந்து க்ரிஷ்ஷின் குரல் கேட்க.
"அங்க தான் க்ரிஷ் இருக்கு. நல்லா பாரு. " என இருந்த இடத்தில் இருந்தே குரல் கொடுத்தாள் அவள்.
" காணும் ஹனி. எனக்கு டயம் ஆச்சி. இன்னைக்கி மட்டும் நான் லேட்டா போனா அதுக்கு நீ தான் தா காரணம். எம்பொண்டாட்டி எனக்கு ஒரு டிரெஸ்ஸ கூட ஒழுங்கா எடுத்து வைக்கமாட்டான்னு ஊரெல்லாம் பரப்பிடுவேன். " எனக் கத்த,
" இவனா... இரு வாரறேன். டேய் ஒழுங்கா எழுதி வை. இதோ வந்திடுறேன். " என்று கணவனைக் காணச் செல்ல, சிறுவன் இது தான் சரியான நேரம் எனப் பலகையைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான். ருத்ராவின் அலுவலக அறைக்குள்.
" தேவ் அங்கிள் என்னைக் காப்பாத்துங்க. " என்க,
" காப்பாத்தவா… உன்னையா... யாருக்கிட்ட இருந்து காப்பாத்தணும். " எனக் கேட்டான் சிறுவனைப் பார்த்து.
"என்னோட மேரி மதர் என்னைக் கொடுமப் படுத்துறாங்க. அவங்ககிட்ட இருந்து என்னைக் காப்பாத்தணும். "என்க.
"இதோ பாரு உன்னோட அம்மா பெரிய ராச்சஸி. அவக்கிட்ட இருந்தெல்லாம் யாராலயும் தப்பிக்க முடியாது. காப்பாத்தவும் முடியாது. பேசாம சரண்டர் ஆகிடு. " என்றவன் தன் வேலையைப் பார்க்க,
" பட் உதவ முடியுமே. அத எனக்குப் பண்ணலாமே நீங்க. "
" எப்படி? என்ன உதவி?. "
" இதோ இது என்னோட பேரு. " என டிஜிட்டல் பலகையை நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவனுக்கு வாசுவின் முகம் நினைவு வந்து. கூடவே 'எங்க உன்னோட பேர எழுது பாப்போம். தமிழ்ல. ' எனப் பேனாவை நீட்டி நின்ற அவளின் தோரணை நினைவு வந்து அவனின் முகத்தில் சிறு புன்னகையை வர வைத்தது.
இன்று அவளின் கையில் அந்தக் கடிதம் கிடைத்திருக்கும். தன்னிடம் விளக்கம் கேட்டு அல்லது திட்டவாவது தன்னை அழைப்பாள் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம் தான். காலையிலிருந்து தன் ஃபோனை பார்த்தபடி இருந்தான்.
"தேவ் அங்கிள், இத எனக்குப் பதிலா நீங்க எழுதித் தந்தா பதிலுக்கு நானும் உங்களுக்கு உதவி பண்றேன். It is a profitable business deal. " என வியாபாரம் பேசப் புன்னகைத்தான் அவன்.
" deal. I like deals. என்ன மாதிரியான deal. "
" நான் கால் பண்ணா வாசு ஆன்டி எங்கூட பேசுவாங்க. அப்ப நீங்க அதைக் கேட்கலாம். அவங்க வாஸ்ஸ. என்ன ஓகேவா." என்க,
'டேபில் சைஸ்ஸுக்குக் கூட வளரல. ஆனா புத்தியோட வளர்ச்சிய பாரேன். அப்படியே க்ரிஷ்ஷ எங்கேன்னு வந்து பொறந்திருக்கான். ' என நினைத்தவன் அவனின் பெயரை அந்தப் பலகையில் தமிழில் எழுத, இல்லை எழுத முயற்சி செய்தான். ஆனாலும் முடியவில்லை.
"என்ன அங்கிள் எழுதி முடிச்சிட்டீங்களா. " எனக் கேட்க, எப்படி சொல்வான். அதை எப்படி எழுதுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதை.
மா ஓகே. ரெட்ட கொம்பு கூட ஓகே. ஆனா த வும் ஷ் ஷும் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. எங்குத் தொடங்கி எங்கு முடிப்பது என்று புரியாமல் இருந்தவனுக்கு தன் அன்னையின் நினைவு வர, வேகமாக எழுந்தான்.
" தேவ் அங்கிள் எங்க போறீங்க? "
"உன்னோட இந்த டாஸ்க்க கம்ப்ளீட் பண்ண நமக்கு உதவக்கூடிய ஆள பாக்க போறோம். " என்றவன் அமிர்தாவைப் பார்க்கச் சென்றான். ஆனால் பரிதாபம் அவர் வீட்டில் இல்ல. சிவ்ராமும் அமிர்தாவும் வெளியூர் சென்றிருப்பது நினைவு வர, எப்படி எழுத எனத் தெரியாமல் தன்யாவிற்கு கால் செய்தான்.
" என்ன தேவ் அதிசயமா கூப்பிட்டிருக்க. இல்லன்னா நான் பத்து தடவ கூப்பிட்டாலும் திருப்பிக் கூப்பிடவே மாட்டியே. " எனக் கேலியாகக் கேட்க,
" அங்கயும் டென் டயம்ஸ் தான் பிரச்சனையா? " என்றான் மாதேஷ்.
" டேய் வாண்டு எதுக்குடா கால் பண்ண. "
"உதவி வேணும். அதான் கால் பண்ணோம். "
"என்ன உதவி. " என்க அந்தப் 1பலகையைக் காட்டினர் இருவரும்.
"என்ன இதெல்லாம். "
"சித்தி இது என்னோட பேரு. "
"அது தெரியுது. அதை ஏன் எங்கிட்ட காட்டுற. "
" இத எப்படி எழுதுறதுன்னு தெரியல தன்யா. உங்கக்கா சொல்லிட்டு போயிருக்கா. "
"ஸாரி உங்களுக்குத் தமிழ் க்ளாஸ் எடுக்க எனக்கு விருப்பமில்லை. நானே மூடு அப்ஷட்ல இருக்கேன். மரியாதையா ஃபோன வச்சிடுங்க. " என்றவளுக்கு டேனியலுக்கு தமிழ் சொல்லித் தந்தது நினைவு வர, சோர்வுடன் காலைக் கட் செய்தாள்.
"ச்ச… என்ன அங்கிள். நானும் பெரிய பையனா மாறினா உங்கள மாதிரியே கஷ்டப்பட போறேன் போல. " மாதேஷ்.
"கஷ்டமா... உனக்கா... என்ன சொல்ற. "
"ஹாங்… உங்களுக்கு உங்க பேர தமிழ்ல எழுதத் தெரியாததுனாலதான உங்க கேர்ள்ஸ் ஃப்ரெண்டு உங்கள ப்ரேக்கப் பண்ணிட்டு போய்டாங்க.” என்க, இவனுக்கு அதிர்ச்சி,
“யாரு டா சொன்னா?”
“டாட் தான் சொன்னாரு. அது மாதிரி தான் எனக்கும் ஆகப்போது. இட்ஸ் ஓகே. நா அமெரிக்கன் கேர்ள ஃப்ரெண்ட்டா பிடிச்சிக்கிறேன்." என்று சொல்லிச் செல்ல,
'எம்மானம் போகுது இவளால. இருடி உன்னை வரவைக்கிறேன்.' என நினைத்தவன் ஃபோன் செய்தான் வாசுவிற்கு அல்ல தன்யாவிற்கு.
"தேவ், ப்ளிஸ் என்னை டிஸ்டப் பண்ணாத. நானே ரொம்ப ப்ரெஸ்டேஷனா இருக்கேன். புரிஞ்சிக்க. " என்க.
"அதக் கொறைக்கிறதுக்காகத் தான் உனக்குக் கால் பண்ணிருக்கேன். அன்னைக்கி அவெங்கிட்ட பேசுனதுக்கு அப்றம் நீ டேனியல கான்டாக் பண்ணியா. "
"நான் ஏன் அவன்ட்ட பேசணும். அவெந்த என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இல்லையே. அவன்ட்ட போய்க் கெஞ்ச சொல்றாயா. "
"இல்லதான். ஆனா அடுத்து நீ என்ன செய்யப் போற. "
"எனக்குத் தெரியல. "
"அத்தை மாமா பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்கப் போறியா. "
"அப்படிப் பண்ணிக்கிட்டா அது அந்தப் பையனுக்கு நான் பண்ற துரோகமாக மாறிடும். நான் அவன ஏமாத்துன மாதிரி இருக்கும். "
"அப்ப உன்னைப் பத்தி எடுத்துச் சொல்லி, சரின்னு சொல்லுற பையன. "
"ம்… எடுத்துச் சொல்லி. ஓகே. என்ன சொல்ல. ஸார் நீங்க நினைக்கிற மாதிரிக் கன்னிப் பொண்ணு நான் கிடையாது. எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்டு இருந்தான். அவெங்கூட நான் லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப்ல ஆறு மாசமா இருந்தேன். இப்ப இல்ல. உங்கள கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த எங்கிட்ட முன் அனுபவம் எக்கச்சக்கமா இருக்குன்னு சொல்லவா."
"அது முடியாதுல்ல. அப்ப என்ன பண்ண போற. "
"நீ என்ன நினைக்கிற தேவ். எனக்குப் புரியுற மாதிரிச் சொல்லு. "
"தன்யா, நம்மல வேண்டாம்னு சொல்லி ஒதுக்கி வைக்கிறவங்க முன்னாடி நாம முடங்கிக் கிடக்கக் கூடாது. நம்ம லவ் உண்ம. பட் அதப் புரிஞ்சிக்காத அவங்களுக்கு நாம தான் புரியிற மாதிரிப் புரிய வைக்கனும். " என்றான்.
"என்ன புரிய வைக்கணும்னு எனக்குப் புரியவே இல்லை. ஒரு நிமிடம். இதுல நாம... நாமன்னு சொன்னியே. அதுக்கு அர்த்தம். வாசுவும் நீயும் சண்ட போட்டுக்கிட்டீங்களா. " எனக் குதுகலத்துடன் பேச,
" எஸ்… அவளுக்கு என்னோட லவ் மேல் சந்தேகம். அதா தப்பு தப்பா பேசுறா. "
" நிஜமாவா!. புவனா கல்யாணத்துல கார்த்தி அங்கிளுக்கும் உனக்கும் மோதல் வந்தப்பவே நினைச்சேன். ஆனா எனக்கு வந்த நியூஸ் வேற மாதிரி இருந்ததே. மூணு மாசம் கழிச்சி உனக்கும் அவளுக்கும் மேரேஜ்ஜின்னு சொன்னாங்க. உனக்கும் அவளுக்கும் ஜாதப் பொருத்தம் சூப்பரா இருக்குன்னு கிழவி கடந்து குதிச்சிச்சே."
"எஸ்… ரெண்டு பக்கமும் எந்தப் பிரச்சனையும் இல்ல. என்னால இப்பயும் நம்பவே முடியல. மிஸ்டர் கார்த்திகேயன் வாசுவ எனக்குக் கல்யாணம் பண்ணி தர்றேன்னு சொன்னத. ஆனா வாசுக்கு என்னோட லவ் புரியல. காச் மூச்சின்னு கத்திட்டு போனா. அதான் அவளுக்கு நான் யாருன்னு தெரிய வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்."
" லூசா நீ. முதல்ல கல்யாணம் பண்ணிக்க. அப்றம் கட்டில்ல புரிய வை உன்னோட காதல. ஏன் தேவ் நீ இப்படியொரு தத்தியா இருக்க. "
" கல்யாணத்துக்கு அப்றம் காதல் பண்றதுல இல்ல தன்யா த்ரில். அதுக்கு முன்னாடி சுத்தும்போது தான் இருக்கும். அதுக்கு அவ வேணும். அதுனால தான் அவளுக்கு ஒரு ஷாக் குடுத்திருக்கேன். "
"என்ன பண்ண?. இரு நான் அவக்கிட்ட பேசிட்டு உன்னைக் கூப்பிடுறேன். " என்றவள் தேவ்வின் காலை ஹோல்டில் வைக்க, சில நிமிடங்களிலேயே மீண்டும் வந்துவிட்டாள் தன்யா.
"என்ன ரொம்ப சீக்கிரமா லையனுக்கு வந்துட்ட. நான் ஒரு மணி நேரம் ஆகும்னு நினைச்சேன். " என்றான் தேவ்.
"என்னால ஒரு நிமிஷம் கூடக் கேக்க முடியல. உன்னைக் கண்ட மேனிக்கி திட்டுறா. அப்படி என்ன பண்ண. "
" அது ஒன்னுமில்ல வேலைய ரிசைன் பண்றதா சொன்னா. அதா breach of contract ( ஒப்பந்த மீறல்.) ன்னு சொல்லு இழப்பீடு தரச் சொல்லிருந்தேன். "
"வாட்… contract டா. எவ்ளோ தரச் சொன்ன. "
" ஜஸ்ட் ஒன் மில்லியன் டாலர். " என்க தன்யா அதிர்ச்சி அடைந்தாள்.
" அ அதுல இன்னும் மூணு சீரோஸ்ஸ சேத்தா பில்லியன்னா மாறிருக்குமே. ஏன் சேக்கல. " எனக் கடுப்புடன் கேட்க,
"எனக்கும் அது தோணுச்சி. பட் அத பாத்துட்டு நெஞ்சி வலில படுத்துட்டா யாரு கூட டுயட் படுறது. அதான், கம்மிய ஜீரோஸ் போட்டேன். நல்ல மனசுல எனக்கு. " என கூலாகச் சொல்ல,
"ஏன் இப்படி பண்ற தேவ் நீ. "
"தன்யா, நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சி. எப்ப காரணமே இல்லாம ரிசைனிங் மெயில் அனுப்புனாளே. அப்பத்துல இருந்து என்னால நிம்மதியா இருக்க முடியல. அதுக்கு அவ தந்த ரீசன். கடைசில என்னை வேண்டாம்னு சொல்லிட்டு, என்னோட லவ்வ எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ, அவ்வளவத்தையும் செஞ்சிட்டு போய்ட்டா. " எனப் பெருமூச்சு விட்டவனின் நிலையைத் தன்யாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
வாசுவின் ஊஞ்சலாடும் மனதையும் அவள் அறிவளே. அதனால் தான் இருவருக்கும் இடையே சண்டை என்பதை அறிந்தவள்.
"அதுக்காக என்ன பண்ண போற. "
"என்ன தேடி வரவைக்கப் போறேன். என்ன வேண்டாம்னு ஏ சொன்னோம்னு ஃபீல் பண்ணனும். அப்படி பண்ணலன்னாலும். அவா நிம்மதியா இருக்க கூடாது. இருக்க விடமாட்டேன். "
"தேவ். "
"நம்மல வேண்டாம்னு சொல்லிட்டு அவங்க மட்டும் நிம்மதியா எப்படி இருக்கலாம். சொல்லு. "
"அதுனால?. "
"அதுனால டேனியலோட நிம்மதிய கொழைக்க எங்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு. " என்றவன் திட்டம் தீட்டிக் கொடுக்கு.
"அடப்பாவி! நீ சொன்ன மாதிரிப் பண்ணா என்னோட மானம் மட்டுமில்ல நம்ம குடும்பத்தோட மானமும் சேந்தே போய்டும். "
"இப்ப மட்டும் எப்படி வாழுதாம். "
"ஆனா தேவ். " எனத் தயங்க,
"நான் உனக்குச் சில ஃபோட்டோஸ் அனுப்புறேன். இது எல்லாமே நேத்து எடுத்தது. நம்மல கலட்டி விட்டுடுட்டு ரெண்டும் எப்படி ஆடீட்டு திரியுறாங்கன்னு பாரு." என வாசுவும் டேனியலும் சேர்ந்து ஊர் சுற்றி, சிரித்து மகிழ்வது போல் புகைப்படங்களை அனுப்ப, அது தன்யாவின் கோபத்தைத் தூண்டி விட்டது.
'என்னை வேண்டாம்னு சொன்ன நீயும் சந்தோஷமா இருக்க கூடாதுடா. இதோ வர்றேன் உன்னோட நிம்மதியா சாவடிக்க. ' என நினைத்தவள் உடனடியாகக் கிளம்பி விட்டாள் டேனியலை இம்சை செய்ய.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..