அத்தியாயம்: 51
புற்களும் இலைகளும் இறைந்து கிடக்க, புயல் வந்த சென்ற இடம்போல் இருந்தது அந்தச் சிறிய தோட்டம்.
தோட்டத்தை எப்பொழுதும் அழகாக வைத்திருப்பது வாசுவின் வேலை. புற்களை ஒட்டாக வெட்டிப் பூந்தொட்டிகளுக்கு நீர் ஊற்றிக் களை எடுத்து, கூட்டிச் சுத்தம் செய்து அதைப் பராமரிப்பது அவள் தான். ஆனால் மூன்று வாரமாக அப்பணியைச் செய்யாது எதையோ தொலைத்தது போல் அமர்ந்திருக்கிறாள் வாசு.
ம்… தொலைத்து விட்டாள் தான். அவளின் ருத்ராவை. ' I love you. love you so much.' என அவனின் குரல் அவளை அவனிடத்தே தொலைய வைத்தது. அவளும் காதல் செய்கிறாள் தான். ஆனால் அதைச் சொல்லும் முன்னரே பிரிய வேண்டியதாயிற்று.
எதுவாக இருந்தாலும் கார்த்திக்கிடம் பேரம் பேசியது அவன் தான். இப்போது காதலைச் சொல்வதும் அவன் தான். நான் ஒரு தூண்டில் புழு. யார் தூண்டிலில் மாட்டியது என்று தெரியாது. ஆனால் நான் தான் புழு. யாரையோ மாட்டிவிட நான் இறையாக வீசப் பட்டிருக்கிறோம் என்பதை சொன்னது அவளின் மனம். தப்பிக்க இயலாதபடி துடித்துக் கொண்டிருக்கிறது.
மனத்தை மாற்ற வேண்டும் என்று ஊரில் எங்குச் சென்றாலும் அவனுடன் கழித்தபொழுது தான் நினைவில் வந்து இம்சை செய்கிறது. எனவே ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளாள். புதிய இடம் புதிய மனிதர்கள் புதிய அனுபவம் எல்லாம் தன்னை மாற்றும் என்ற நம்பிக்கையில் மீண்டும் நியூயார்க்கை நோக்கிச் செல்ல உள்ளாள்.
இரு முழங்கால்களையும் கட்டிக் கொண்டு சோகமே உருவாய் அமர்ந்திருந்த மகளைத் தேடி ஜோஹிதா வந்தாள்.
தேவ்வை சந்தித்துப் பேசியதிலிருந்து கார்த்திகேயனைப் பார்க்க முடிவதில்லை. முருகனுடன் தான் திரிகிறான். வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து போனது. அதை மீறிப் பார்த்தாலும் ருத்ராவைப் பற்றியும் அவனின் குடும்பத்தையும் பற்றியும் அவளிடம் பேசாது தவிர்த்து வருகிறான். அது வாசுவிற்குப் புரிந்தது. அதனால் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்காமல் தவிக்கிறாள்.
" வாசு! என்ன டா பண்ணிட்டு இருக்க.?" ஜோஹிதா.
" நத்திங் ஜோஹிம்மா. " என்றாள் தலை தூக்காது.
" ரெண்டு வாரமா வீட்டுலயே கிடக்க. வேலய விட்டுட்டதா ஒலிவியா சொன்னாங்க. "
"நான் மறுபடியும் நியூயார்க் போகப்போறேன். லிண்டா எனக்காக ஒரு வேலை அங்க பாத்து வச்சிருக்குறதா சொன்னா. " என்றவளின் குரலில் இருந்த சோர்வு புரியாமல் இல்லை ஜோஹிதாக்கு.
இருவரும் இடையே மோதல் தான் மகளின் சோர்விற்கு காரணமென உணர்ந்தவள். அப்பா, மகள் என இருவரும் சிவ்ராம் வீட்டிற்குச் சென்று வந்ததில் இருந்தே சரியில்லை.
இரு தினங்களுக்கு முன் கார்த்திக் வாசு ருத்ரா திருமணம் குறித்து பேசி இருப்பதை அறிவாள் அவள். எதுவும் உறுதியாகும் வரை வாசுவிடம் சொல்ல வேண்டாம் என்றிருந்தான் கார்த்திக். குழப்பமாக இருந்தது அவளுக்கு.
ருத்ரா, வாசுவை நேசிப்பது தெரியும். ஆனால் ஏன் திருமணத்தைச் சில காலம் தள்ளிப்போட்டான். அதை ஏன் வாசுவிடம் சொல்லாது கார்த்திக் மறைக்கிறான் என்பதெல்லாம் புரியாது, ருத்ரா வாசு இருவருக்குள்ளும் என்ன பிரச்சினையென அறிய விரும்பினாள்.
" நீ ஏன் வேலைய விட்டன்னு எனக்குத் தெரியாது வாசு. பட் ருத்ரா கூட என்ன பிரச்சினன்னு சொன்னேன்னா உனக்கு மனசு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கும். சொல்லுடா. எதுக்காகச் சண்ட போட்டுக்கிட்டீங்க. " எனத் தலை தடவி கேட்க,
"நான் ஒன்னும் சண்டைய ஆரம்பிக்கல ஜோஹிம்மா. அவெந்தா. பண்றதெல்லாம் அவெ பண்ணிட்டு. என்ன கில்டியா ஃபீல் பண்ண வைக்கிறான். " எனக் கண்ணீருடன் சொன்னாள் மகள்.
ருத்ராவுடன் சரிக்கு சரியாகச் சண்டை போட்டு இதற்கு முன் பேசாது இருந்தபோது இல்லாத வலி, அவனின் காதலைச் சொல்லி உடனே தன்னை நிராகரித்தபோது… அதிகமான வலியைத் தந்தது. நடந்த அனைத்தையும் ஜோஹிதாவிடம் சொல்லி அழ,
" எனக்கு என்னமோ தப்பு உம்மேல இருக்குற மாதிரித் தான் தெரியுது. " என்க, சீறும் பாம்பாய் தலை தூக்கினாள் பெண்.
" என்ன தப்பு எங்கிட்ட இருக்குன்னு சொல்றிங்க. ஹாங்… இதுக்குத் தான் நான் உங்கக் கிட்ட எதையுமே சொல்றது இல்ல. உங்களுக்கு நான் மட்டும் தான் தெரிவேன். எங்க எது நடந்தாலும் நான் தான் தப்பு. ச்ச... கார்த்திப்பா தான் என்னைச் சரியா புரிஞ்சுப்பாரு. வழி நடத்துவாரு. இப்பவரைக்கும் அவரு அப்சட்டா இருக்காருன்னா அதுக்குக் காரணம் ருத்ரா தான். அவனுக்குப் போய் சப்போட் பண்றீங்க."
" வாசு, உங்க ரெண்டு பேருக்குள்ள நீ எதுக்காகக் கார்த்திக்கக் கொண்டுவர்ற. நீ கார்த்திக்காக உன்னோட வேலைய விட்டிருந்தா அது தப்பு. "
"அவரு என்னோட அப்பா. அவருக்காக நான் பேசாம யாரு பேசுவா. "
" ஏன் உன்னோட கார்த்திப்பாக்கு வாயில்லையா. " என்க, வாசு முறைத்தாள் ஜோஹிதாவை.
"ஓகே... ஓகே மொறைக்காத. நீ பண்ண முதல் தப்பு உங்க ரெண்டு பேருக்கும் நடுவல கார்த்திக்கக் கொண்டு வந்தது. ஒருவேளை ருத்ரா கார்த்திக்கிட்ட பிஸ்னஸ் பேசுறதாவே இருந்தாலும் அதக் கார்த்திக் பாத்துப்பான். அவனுக்கு இன்னும் அந்தத் திறம இருக்கு.
ரெண்டாவது தப்பு அவங்க ரெண்டு பேரும் எதப் பத்தி பேசுனாங்கன்னே தெரியாம, நீயா ஒன்ன யோசிச்சி வேலைய ரிசைன் பண்ணது.
எந்த ஒரு கான்வர்ஷேசனையும் முழுசாக் கேக்காம அரையுங்குறையுமாக் கேட்டுட்டு கத்தக் கூடாது. "
"பட், அந்த ரெஸ்டாரன்ட்ட தவிர அவங்க ரெண்டு பேத்துக்குள்ளயும் பேச என்ன இருக்கபோது. "
" எதுவா வேண்ணாலும் இருக்கலாம். அது எதுன்னு நமக்குத் தெரியாது. தெரிஞ்சிக்க வேண்டியதுன்னா கார்த்திக் இன்னேரம் நம்ம கிட்ட சொல்லிருப்பான். உன்னை எச்சரிக்க கூடச் செஞ்சிருப்பான். அப்படிப் பண்ணலன்னா அது பாய்ஸ டாக். ஆம்பளைங்க எதையாது பத்தி பேசிப்பாங்கன்னு விட்டுடணும்.
அவங்க அதத்தான் பேசுனாங்களான்னு முதல்ல நீ கார்த்திக்கிட்ட பேசித் தெளிவு படுத்திட்டு ருத்ரா கூடச் சண்ட போட்டிருக்கலாம்.” என்க வாசு யோசித்தாள்.
இப்போது தான் அவளுக்கு மணியடித்து இருக்கிறது. அவர்கள் வேறு எதையோ பேசிருக்கலாம் என்று.
" ஆனாலும் நான் கேட்டேன். ருத்ரா கார்த்திப்பாவ மிரட்டுற மாதிரித் தான் பேசினான். அதுவும் என்னை வச்சி… நான் கார்த்திப்பாக்கு ஆதரவா இருக்க விரும்புறேன். "
"நீ பண்ண மூனாவது தப்பு என்னன்னு தெரியுமா. " என்க, வாசு முழித்தாள்.
" உன்னோட காதல்ல நீ ஸ்ராங்கா இருக்காம, உன்னை உயிருக்கு உயிராக லவ் பண்ற பையன விட்டுக் குடுக்க நினைச்சது."
"உயிருக்கு உயிரா... இது கொஞ்சம் அதிகமா இல்ல. "
" இல்ல… ருத்ரா உன்னை ரொம்ப சின்ஸியர.. சீரியஸ்ஸா லவ் பண்றான்."
"எதை வச்சி இவ்ளோ உறுதியா சொல்றிங்க. " எனக் கேட்கும்போதே மனமெங்கும் மத்தாப்பு பூத்திருந்தது அவளுக்கு.
'இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல இவளுக்கு.'
" ஹாஸ்பிட்டல்ல வச்சி பாத்தேன். நீ கண்ண திறக்குற வர அந்தப் பையன் பட்ட பாட்ட. எவ்ளோ டென்ஷன்... எவ்ளோ படபடப்பு… எவ்ளோ கோபம்... எல்லாமே உனக்காகனது. பட், என்ன இருந்து என்ன பிரயோஜனம். "
"நீங்க எனக்கு அம்மா. எனக்குத் தான சப்போட் பண்ணும். அது தான நியாயம். "
"இல்ல, இந்த விசயத்துல என்னோட சப்போட் முழுக்க முழுக்க அந்தத் தம்பிக்கி தா. "
"ஏன். "
"ஏன்னா அவன் அவனோட லவ்ல உறுதியா இருக்கான். எம்மகளோட லவ் தான்… பீச்ல கட்டுன மணல் வீடு மாதிரி ஒரு அலைக்கி கூடத் தாங்க மாட்டேங்கிது. "
"நீங்க என்ன சொல்ல வர்றிங்க? இப்ப நான் கார்த்திப்பாக்காகப் பேசாம ருத்ரா பக்கம் நின்னு, கமான்… கமான்… அப்படித்தா.ன்னு அவன உற்சாகப்படுத்தி, கார்த்திப்பாவ அசிங்கப்படுத்திருக்கணுமா? எப்படி ஜோஹிம்மா உங்களால இப்படி பேச முடியுது. "
" வாசு காதல்ல மனச தராசு முள் மாறி வைச்சிக்க கூடாது. எந்தப் பக்கம் அன்பு அதிகமா இருக்கோ அந்தப் பக்கம் அசைஞ்சிக்கிட்டே இருக்க, லவ் ஒன்னும் எடை போடுற மிஷின் கிடையாது. அது உள்ளார்ந்த உணர்வு. அன்பு அதை ஃபீல் பண்ணணுமே தவிர கம்பேர் பண்ணி பாக்க கூடாது.
என்ன கேட்டா… உனக்குக் கார்த்திக் மேல இருக்குற உண்மையான அன்பு ருத்ரா மேல இல்ல. அதான் ரொம்ப ஈசியா அவன விட்டுட்டு போகுற முடிவ எடுத்திட்ட. அது தப்பு இல்லயா.
எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாக்காம மனச மட்டுமே பாத்து வர்ற லவ்வும் லவ்வரும் கிடைக்கிறது கஷ்டம். உனக்குக் கிடைச்சும் நீ கை விட்டுட்டு வந்திருக்க. " என்றாள் குற்றச்சாட்டாக.
" எனக்குப் புரியல... நீங்க இந்த நேரத்துல எங்கிட்ட வந்து காதலுக்காக உன்னோட அப்பாம்மாவ விட்டுடுட்டு போய்டாத. அவனுக்காக எங்கள அசிங்கப்படுத்திடாத. அவன மறக்குறது தான் நமக்கு நல்லதுன்னு அட்வைஸ் பண்ணுவீங்கன்னு நினைச்சேன். ஆனா இப்படிப் பேசுவீங்கன்னு நான் எதிர்பாக்கல. "
" நான் பண்ண அதே தப்ப தான் நீயும் செஞ்சிருக்க வாசு. அதுனால தான் நான் இப்படி உங்கிட்ட பேசுறேன். பெத்தவங்க முக்கியம் தான். ஆனா ரத்தம் சம்மந்தமே இல்லாம வர்ற நட்பும் காதலும் உன்னதமானது. ருத்ராவ சரியாப் புரிஞ்சிக்க முயற்சி செய் வாசு. " என்ற ஜோஹிதாவின் கண்ணில் நீர் திரண்டு நின்றது.
"நீங்க என்ன சொல்றீங்க ஜோஹிம்மா கார்த்திப்பா கூடச் சண்ட போட்டிங்களா?. ப்ரேக்கப் பண்ணிங்களா.? " என விழி விரிய கேட்டாள் வாசு. ஏனெனில் ஜோஹிதா கார்த்திக்கை எதிர்த்துப் பேசி சண்டை போட்டுப் பார்த்தது இல்லை அவள். இந்த உஷா தான் இடைஇடையே எதையாவது சொல்லி குழப்பி விட்டுக் கொண்டே இருப்பார்.
" என்னோட குடும்பத்தாரோட பேச்ச கேட்டு நான் ஒருக்க கார்த்திக்க விட்டுட்டு போய்ட்டேன். இனி சேரவே மாட்டோம்னு கூட நினைச்சேன். அன்னைக்கி நான் தொலைச்ச அவன், ரெண்டு வர்ஷம் கழிச்சி தான் எனக்குக் கிடைச்சான். ஆனாலும் திரும்ப அவனோட முழுமையான காதல் கிடைக்க இப்பவரைக்கும் போராடீட்டு தான் இருக்கேன். " என்றவள் கடைசி வாக்கியத்தைச் சத்தமாக பேசாது வாயினுள் முணுமுணுத்தாள்.
" என்ன... கார்த்திப்பாவ விட்டுட்டு போய்டிங்களா?. ரெண்டு வர்ஷமா? ஏ... எப்படி?. எதுக்கு? அப்றம் எப்படிச் சேந்திங்க?. ஜோஹிம்மா உங்க லவ் ஸ்டோரிய சொல்ல முடியுமா... ப்ளிஸ். " என ஆவலாகக் கேட்டாள் வாசு.
"இன்னொரு நாள் சொல்றேன். இப்ப வேண்டாம். ஒன்னும் மட்டும் புரிஞ்சிக்க... நம்மல தேடி வர்ற அன்ப என்னைக்கும் உதறி தள்ளக் கூடாது. நாங்க சண்ட போட்டதுக்கு அப்றமும் கார்த்திக் என்னைத் தேடி வந்து சமாதானம் பண்ண மாதிரி, நீயும் ருத்ராவ பாத்தா சண்ட போடாம பேசணும். "
"ஆனா ருத்ரா வரமாட்டானே. எனக்கு அவனப் பத்தித் தெரியும். அவனோட கோபம் நியாமானதுன்னு வேற சொல்றீங்க. சோ நானாத்தான் அவெங்கிட்ட போய்ப் பேசணும். ஆனா எப்படி பேச? என்ன பே”
"அப்ப இதப் பத்தி அவெங்கிட்ட பேசிப்பாரேன். " என ஒரு காகிதத்தைக் கையில் தர, அதை வாங்கியவள் வாயைப் பிளந்தாள்.
"ஜோஹிம்மா இது... இது... என்னதிது ஜோஹிம்மா. பகல் கொள்ளைக் கூட இல்ல. இது… இது... என்ன சொல்றதுன்னு எனக்கே தெரியல. இது எனக்கா வந்ததா?. அட்ரஸ் கரெட்டா.? " என்றவளுக்குச் சிரிக்கவா.. அழுகவா… கோபப்படவா என எதுவும் புரியாது அதை முன்னும் பின்னும் திருப்பித் திருப்பி பார்த்தாள்.
"உனக்குத் தான் வந்தது. MET க்ரூப்ஸ்ல இருந்து வந்திருக்கு. வித் லீகல் டாக்குமெண்ட்டோட காப்பி. உன்னோட கையெழுத்து தான இது.” எனக் கேட்டார் சற்று நக்கலான குரலில்.
"என்னோடது தான். பட் நான் எந்தக் கான்ட்ராக்ட்லயும் கையெழுத்துப் போடல. என்னோட வேலை பர்மனென்ட் கிடையாது. டெம்ப்ரவரி தான். உனக்குப் பிடிச்சா மட்டும் கன்டின்யூ பண்ணுன்னு க்ரிஷ் சொன்னாரு. ஆனா இது... இது... ஒன் மில்லியன் டாலர். அவ்வா!... " என வாயில் அடித்துக் கொண்டாள் வாசு.
என்ன தான் செய்திருக்கிறான் என்றால்…
அவனால் வாசுவை விட முடியவில்லை. ஆதலால் அவனிடம் மூன்று ஆண்டுகள் கட்டாயமாக வேலை பார்ப்பதாகவும், அந்தக் காலம் முடியும் வரை பணியை விட்டு செல்லமாட்டேன் என்றும், இடையில் விட்டுச் செல்ல நேரிட்டால் ஒன் மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் இழப்பாகத் தருவதாக வாசுவே கையெழுத்து போட்ட ஒரு போலி பத்திரத்தைச் செட் செய்து வாசுவின் வீட்டிற்கு அனுப்பி உள்ளான்.
" ஜோஹிம்மா இது பொய். போலி டாக்குமெண்ட் ரெடி பண்ணி நம்மல மிரட்டிப் பாக்குறான். நான் கேஸ் போடப் போறேன். இப்பவே நான் லாயருக்கு கால் பண்றேன். ஒன் மில்லியன்... இவனுக்கு எதுக்கு குடுக்கணும்." எனப் புலம்ப,
"ம்... கேஸ் தான… போடலாம். சில மாசம். ஏன் பல மாசம் கூட இழுக்கும். எப்படிப் பாத்தாலும் லாபம் அவனுக்குத் தான். "
" எப்படிச் சொல்றிங்க. அது போலி. என்னால நிறுபிக்க முடியும். அந்த ஃப்ராடு பிஸ்னஸ் மேன் எங்கிட்டயே அவனோட வேலையக் காட்டப் பாக்குறான். விடமாட்டேன். இவெ இப்படில்லாம் பண்ணா நான் பயந்திடுவேனா. ம்… இருக்கு அவனுக்கு. " என்றவள் வேகவேகமாக உள்ளே சென்று தன் ஃபோனை எடுக்க,
" வாசு, உனக்கு இன்னும் ருத்ராவ தெரியல. ருத்ரா உன்னைத் தேடி வரமாட்டான். ஆனா உன்னை வரவைப்பான். இப்படி…." எனக் காகிதங்களைக் காட்ட,
" பட் இது முட்டாள் தனம்."
" இல்ல, இது அவனோட வழி. நீ கேஸ் போட்டாலும் உன்னால ஜெயிக்க முடியாது. நீ போற எல்லா பாதையையும் அவெ மூடுவான். அவனத் தேடி நீ போற வர. " என்றாள் ஜோஹிதா.
உண்மை தான். ருத்ராவைத் தேடி செல்வதைத் தவிர வேறு வழியே கிடையாது வாசுவிற்கு…
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..