
அத்தியாயம்: 54
கையில் பெரிய ஆல்பம். சுற்றி பல ஃபோட்டோக்கள் இறைந்து கிடக்க, அதை மும்மரமாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர் வாசுவும் அஸ்வினும். அது ஜோஹிதா கார்த்திகேயனின் திருமண வைபவம். அது மட்டும் இல்லை. ஜோஹிதாவின் வளைகாப்பு புகைப்படமும் தனியாக ஒரு ஆல்பத்தில் இருந்தது. வாசுவின் சிறு வயது ஃபோட்டோஸ் என வீட்டில் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"வாசு, இதுல பாரேன். ஜோஹிதா ஆன்டி எப்படி இருக்காங்கன்னு. " அஸ்வின் ஒரு புகைப்படத்தைக் காட்ட, அதை ரசித்தவள்,
"ஜோஹிம்மா இதுல நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க. இது உங்க சின்ன வயசு ஃபோட்டோவா?. பாக்க அந்தக் காலத்து ஹீரோயின் மாதிரி இருக்கு. " என ஒவ்வொன்றாக எடுத்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள் வாசு. அவளின் வர்ணனைகளுக்கு அஸ்வின் ‘ஆமா...ஆமா...’ எனத் தாளம் போட்டான்
" என்னடி இது! கடை விரிச்சி வச்சிருக்க. " எனக் கேட்டபடி வந்தார் உஷா.
" ஸ்வீட் மெமரீஸ் ஆன்டி. ஒவ்வொரு ஃபோட்டோவும் ஒவ்வொரு கதை சொல்லும். அதான் கதை கேக்க காத ரெடி பண்ணிட்டு வந்திருக்கேன். " என்றாள் வாசு.
"மாம்… இதுல நீங்க கூடச் சிலதுல இருந்திங்கம்மா." என உஷாவிற்கு ஒரு புகைப்படத்தை அஷ்வின் காட்ட, அதில் அஸ்வினை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார் அவர். பின் தன் மகனை எப்படி ஈன்றெடுத்தேன் என்று கதை சொல்ல, வாசு உடனே ஜோஹிதாவிடம் சென்றாள்.
" நான் உங்களுக்குள்ள இருக்கும்போது, எத்தனாவது மாசத்துல அசைஞ்சேன்? எப்ப நான் உங்களுக்குள்ள இருக்கேன்னு தெரிஞ்சது? எந்த டாக்டர் கிட்ட பாத்தீங்க?. இதயத்துடிப்பு எப்போ கேக்க ஆரம்பிச்சிச்சி?. எத்தன மாசத்துல உங்களுக்கு வளையல் போட்டாங்க?. கார்த்திப்பா என்ன பரிசு குடுத்தாரு?. " எனக் கேள்வி மேல் கேள்வியாக அடுக்க, ஜோஹிதா ஆல்பத்தை எடுத்து வந்து கதை சொல்லத் தொடங்கினாள். கூடவே சில மருத்துவ பரிசோதனை அறிக்கைகளையும் காட்டினாள்.
"இவ்ளோ மங்களா இருக்கு!" எனப் புருவம் சுருக்கிக் கையில் இருந்த ரிப்போட்டைக் காட்டிக் கேட்டான் அஸ்வின்.
" இதுல நான் எங்க இருக்கேன். " என அதை உற்று உற்று பார்த்தபடி வாசு கேட்க,
"ரிப்போட்டு அப்படி தான் இருக்கும். கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரியா இருக்கும். நல்லா பாரு டி. அதுக்குள்ள தான் சின்னப் புள்ளி வச்சா மாதிரி நீ இருக்க. " உஷா.
"எங்க? எனக்கு ஒன்னும் தெரியல. உங்க கண்ணுக்கு மட்டும் தெரியுதாக்கும். "
" எனக்கும் சரியா தெரியல வாசு. ஆனா அந்த டாக்டரு. பிறந்ததுக்கு அப்றம் பாத்துக்கன்னு சொல்லிட்டாங்க." என்றாள் ஜோஹிதா சோகமாக,
" ஆன்டி யாரு இது?. ஹன்சம்மா இருக்காரு!. " என அஸ்வின் ஓர் இளைஞனின் படத்தைக் காட்ட, அதற்கு உஷா,
"அது வாசுக்கு மாமா மொற. ஜோஹிதாவோட அண்ணே. பேரு தர்ஷன். இப்பப் பாத்தா பாதி கிழவனா இருப்பாரு. "
" ஜோஹிம்மா இவரு போட்டிருக்குற மாதிரி ஒரு டீ சர்ட் உங்க கபோர்ல இருக்குள்ல. நான் பாத்திருக்கேன் அத. என்ன! அண்ணே நியாபகமா வச்சிருக்காங்களா?. " என வாசு கண்சிமிட்டி கேட்க,
"இல்ல வாசு. எனக்கு என்னோட பிறந்த வீடும், வீட்டாரோட நியாபகமும் வந்தது இல்ல. வரவும் வேண்டாம். அது கார்த்திக்கோடது. அது க்ரூப் டீ சர்ட். எங்கண்ணே, கார்த்திக்குன்னு எல்லாரும் ஒரே டீம்ல தான் இருந்தாங்க. நான் அவன மொத மொற எங்கண்ணனோட அந்த club ல தான் பாத்தேன். அப்ப அவெ பத்தாது படிச்சிட்டு இருந்தான்.
பத்தாப்பு வேற வேற ஸ்கூல் தான். அடுத்து ஒரே ஸ்கூல்ல படிச்சோம். ஏரியா ஒரே எரியாங்கிறதுனால சனி, ஞாயிறு ஆனா போதும் கார்த்திக், எங்கண்ணே, முருகா, அப்சத்ன்னு வயசு வித்தியாசம் இல்லாம உஷா வீட்டுக்கு எதிர்ல இருக்குற க்ரவுண்டுல தான் கிடப்பாங்க. கிரிக்கெட்டு, ஃபுல் பாலுன்னு எதையாது விளையாண்டுட்டே இருப்பாங்க. பொழுது போகுற வர. " என்ற ஜோஹிதாவின் முகத்தில் பூரிப்பைப் பார்க்க முடிந்தது.
" ஜோஹிம்மா கதை சொல்லப் போறீங்களா. " என்றபடி வாசு, ஜோஹிதாவின் அருகில் அமர்ந்தாள்.
" ஆன்டி என்னையும் விட்டுடாதீங்க. நானும் இருக்கேன். லவ் ஸ்டோரின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்." என அஸ்வினும் வந்து நடுவில் சொருகிக் கொண்டான்.
" க்கும்… அதெல்லாம் ஒரு கதைன்னு கேக்க வந்துட்டா. எழுந்து போய் வேற வேலைய பாரு. " என உஷா எழுந்து சென்று விட்டார்.
வாசு, "அவங்க கிடக்காங்க"
அஸ்வின், " ஓல்டு லேடி."
" நீங்கச் சொல்லுங்க. " என ஆர்வமாகக் கேட்க, சொல்லத் தொடங்கினாள் ஜோஹிதா.
" கார்த்திக்கோட சொந்த ஊரு காரைக்குடி. அங்க சின்னதா ஒரு ஹோட்டல் நடத்திட்டு இருந்ததா கார்த்திக் சொல்லிருக்கான். அவுங்கப்பா நல்லா சமைப்பாரும்னு சொல்லிருக்கான்.
நல்லா போய்க்கிட்டு இருந்த வியாபாரம் திடீர்னு நட்டத்த பாக்க ஆரம்பிச்சி, வீட்டுல கடன் பிரச்சன அதிகமா இருந்ததாம். கடன் தொல்ல தாங்க முடியாம அவங்க அப்பா இறந்து போய்ட்டாராம். அவங்க அப்பா கூடப் பிறந்தவங்க மொத்தம் நாலு பேரு. ஆனா கார்த்திக்கோட அப்பா இறுதி மரியாத்தைக்கு யாரும் உதவலயாம்.
அங்க அம்மாவோட கல்யாண புடவய வித்து பண்ண வேண்டிய சடங்கு பண்ணங்களாம். அப்பா கூடப் பிறந்தவங்கள விட, அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்ட பெரிம்மா, சித்திங்க தான் அதிகம் பேசி அவங்கள ஊர விட்டுத் தொரத்தி விட்டதுனால சென்னைக்கி வந்திருக்காங்க.
அப்பறம் தெரிஞ்சவங்க மூலமா எங்க ஏரியால குடி வந்தான். எங்க ஏரியா கொஞ்சம் ரிச்சா இருக்கும். மேக்ஸிமம் எல்லாருமே சொந்த வீடு தான். தனி வீடு தான். அங்க எம்எல்ஏ வீடு ஒன்னு இருந்தது. அங்க தான் கார்த்திக் அவனோட அம்மாவோட வந்து தங்கியிருந்தான். அப்பப்போ அவங்க பாட்டி வந்து தங்கிட்டு போவாங்க. எம்எல்ஏக்கு சொந்தம்னு நாங்க நினைச்சோம்.
சென்னைக்கி வரும்போது அவனுக்குப் பதிமூணு வயசு. எனக்கு அப்ப அவன தெரியாது. ஒருக்க அம்மா அண்ணன கூப்பிடச் சொல்லி க்ரவுண்டுக்கு அனுப்சாங்க. அப்பதா பாத்தேன். உங்கப்பாவ. கிரிக்கெட் விளையாண்டுட்டு இருத்தான். அப்ப பந்து எம்பக்கம் வந்தது. அத தூக்கி போடச் சொல்லிக் கேட்டான். அது தான் நான் அவெங்கிட்ட முதல் தடவ பேசி, பந்த குடுக்குற சாக்குல பக்கத்துல பாத்தது. " என்றபோது ஜோஹிதாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"பாருடா வெட்கத்த. ஜோஹிம்மா! உங்க காதல் கதைல யாரு காதல முதல்ல சொன்னா?. நீங்களா? கார்த்திப்பாவா?. " எனக் கேட்க,
"யாரா இருக்கும்னு நீ நினைக்கிற. "
"அங்கில் தான் சொல்லிருப்பாரு. ஏன்னா பாய் அவரு தான. அத்தோட தைரியமானவரு. " என்றான் அஸ்வின். அவனின் தலையில் தட்டி,
"அதெப்படிடா இந்த மாதிரி விசயம் பேசும் போது மட்டும் கரெக்ட்டா தலைய தூக்குற. இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த. " வாசு.
" கதை கொஞ்சம் ஃபோரிங்கா போச்சா… அத ஃபோன்ல விளையாண்டுட்டு இருந்தேன். "
"இப்பயும் போய் அது கூடவே விளையாடு. போ. " என முதல் வேலையாக அவனைத் துரத்தி விட்டாள் வாசு.
" அப்பாடா… இப்ப எந்தத் தொல்லையும் கிடையாது. நீங்கச் சொல்லுங்க. யாரு ப்ரப்போஸ் பண்ணா. "
"யாரா இருக்கும்னு நீ நினைக்கிற? " என்றாள் மீண்டும்.
" கார்த்திப்பா. "
"நோ. "
"நான் கார்த்திப்பாவா இருக்காதுன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீங்க அவசரப்பட்டு நோன்னு சொல்லிட்டீங்க. " என்றவளின் தலையைக் கோதி விட்டவளின் பேச்சு மட்டுமல்ல நினைவும் கடல் கடந்து கண்டம் கடந்து சென்றது.
_______
நெருக்கமாக அல்லாது ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த புத்தம் புது வீடுகளைக் கொண்ட ஏரியா அது. செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையே வளர்ந்து வரும் ஏரியாவில் இதுவும் ஒன்று. இப்போது தான் அதன் நிலங்கள் விலை போகியிருக்க வேண்டும். ஏனெனில் மரங்களும் செடிகளும் காலி நிலங்களும் அதிகமாகவே இருந்தன. அதில் ஒரு பெரிய வீடு தான் ஜோஹிதாவுடையது.
ஜோஹிதாவின் தந்தை மோகன்தாஸ். தாய் ஹிரன். ஒரே ஒரு அண்ணன் தர்ஷன்.
மோகன் தாஸ்ஸின் குடும்பம் சற்று பெரியது. நரேந்திர யாதவ். அவர் தான் அந்தக் குடும்பத்தின் முதன்மையான ஆணி வேர். அவருக்கு மொத்தம் ஐந்து மகன்கள் மனைவி இறைவனிடம் சென்று விட்டார். இரு பெண் பிள்ளைகள். திருமணம் முடித்து வெளியூரில் இருக்கிறார்கள். அவ்வபோது வந்து செல்வர். அதில் மோகன் நான்காவது. பேரன் பேத்தி எனக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் தான்.
அவர்களின் பிரதான தொழில்கள் மொத்தம் இரண்டு. ஒன்று பைனான்ஸ். வட்டிக்கு பணம் குடுத்து வாங்குவது. மோகனின் அண்ணன்கள் அதைக் கவனிக்கின்றனர். அவரும் அவரின் தம்பியும் சேர்ந்து ஸ்வீட் ஸ்டால் வைத்து நடத்துகின்றனர். இரண்டிற்கும் பல கிளைகள் உண்டு.
குடும்ப உறுப்பினர்களின் பெயர். 'ம் அது வேண்டாமே. அவங்க யாருமே நமக்குத் தேவையில்ல. முக்கியமானது நாலு பேரு. அவங்கள சொல்லியாச்சி. அது போதும்.'
தினம் தினம் எதாவது ஒரு பெயரைச் சொல்லி அந்த வீட்டில் பூஜை நடந்துட்டே இருக்கும். மாதம் இரு விழாக்களை அந்த வீடு விமர்சையாகக் கொண்டாடும்.
நரேந்தர், அவர்களின் குடும்பம் கட்டுப்பாடுகள் நிறைந்தது. அது பிரிந்து விடக் கூடாது என்பதற்காகத் திருமணம், உறவு முறைகளுக்குள்ளேயே நடக்கும். அதுமட்டுமல்ல அவர்கள் உயர் தட்டு மக்களுடன் மட்டுமே பழக வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு. அதை மீறினால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்.
இப்போது அந்தக் குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் ஒரு அறையின் வாசலைத் தட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருந்தனர்.
" தர்ஷன் அண்ணா. அக்காவ வெளில வரச் சொல்லுங்க. நேரமாது. அத்த திட்டப் போறாங்க. " என்றாள் ஒருத்தி.
" கொஞ்சம் பொறு மித்ரா. வருவா. ஜோஹிதா கதவ திறடா. அண்ணே வந்திருக்கேன். திறம்மா கதவ."
"இப்படி கொஞ்சிக்கிட்டே இருந்தா எப்படிக் கதவ திறப்பா. " எனப் பெரியப்பா பையன் சடைத்துக் கொள்ள,
" அவள வீட்டுல விட்டுட்டு போன நமக்கு தான் தாத்தாட்ட திட்டு விழும். தேவையில்லாம இவளால நாம எல்லாருமே லேட்டாப் போகப்போறோம். திட்டு வாங்கப் போறோம். " என்றான் பெரிப்பா பையன்.
" இப்ப அவ திறந்து வர்றாளா இல்லயா. ஏய் ஜோஹிதா எதுக்கு பிடிவாதமா உள்ள உக்காந்திருக்க. " என்றவன், பின்,
"என்னம்மா உனக்குப் பிரச்சன. சொன்னாத்தா தெரியும். " என நயந்து பேசினான் விகாஸ். அவர்களின் மூத்தவன். அவனுக்கு மொத்த குடும்பத்தையும் அவன் தான் கட்டிக்காப்பது போல் ஒரு நினைப்பு.
படிப்பை முடித்து விட்டு தந்தையுடன் சேர்ந்து குடும்பத் தொழிலைப் பாத்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்குத் திருமணம் முடிவாகி இருக்கிறது. அதற்காக கோயிலில் ஒரு பூஜை ஏற்பாடு செய்ய, கடைசி தலைமுறை மட்டும் இருக்கிறநு. மற்ற தலைமுறைகள் காரில் சென்று விட்டது. அனைவரும் சேந்து செல்லலாம் என்றிருக்க, ஜோஹிதா மட்டும் கதவைத் திறக்கவில்லை. அவளை விட்டு விட்டுச் சென்றால் நரேந்திரன் திட்டுவார். பொறுப்பாய் அழைத்துவரத் தெரியாதா என்று.
ஆனால், அந்தக் கவலை ஜோஹிதாவிற்கு கிடையாது போலும். உள்ளே சென்று கதவடைத்து கொண்டாள். நேரம் செல்லச் செல்ல அனைவருக்குமே சிறு பயம் தொற்றிக் கொண்டது.
"ஜோஹிதா, தாத்தா காத்திட்டு இருப்பாரு. வாம்மா வெளிய. " எனக் கெஞ்ச, குரல் உள்ளே இருந்து வரவில்லை.
" தர்ஷன் மச்சான். என்னால தான் அவ கதவ திறக்க மாட்டேங்கிறான்னு நினைக்கிறேன். நான் பேசிப் பாக்குறேன். " என்றாள் அவளின் அத்தை மகள் ஒருத்தி. ஜோஹிதா வயதை ஒத்தவள்.
" ஜோஹிதா நான் உன்னோட ட்ரெஸ்ஸ போடல. சும்மா விளையாட்டுக்குத் தான் அப்படி சொன்னேன். நான் அதத் தொடக்கூட இல்ல. இந்தா… கவர கூட நான் பிரிக்கல. " எனக் கதவைத் தட்டி சொல்ல, கதவு திறந்தது.
உள்ளே இருந்த ஜோஹிதா அவள் நீட்டிய கவரை வாங்கி அவளை ஏற இறங்க பார்த்தாள். " நீ போட்டிருக்குற கம்மல். ஸ்லிப்பர் எல்லாமே என்னோடது தான். கலட்டு. " என்றாள் அதிகாரமாக.
மற்றவர் அந்த அத்தை மகளைத் திட்டினார். 'அவளின் குணம் தெரிந்தும் ஏன் அவளுடையதை எடுத்தாய்' என்று. அந்த பெண்ணிடமிருந்து அனைத்தையும் பிடிங்கி கொண்டே விட்டாள் ஜோஹிதா.
"அவளும் நம்ம ரிலேஷன் தான. ஏன் உங்களோடத அவ யூஸ் பண்ணக்கூடாதா. " என்றாள் சித்தி மகள்.
"கூடாது. இது என்னோடது. எனக்கு மட்டுமானது. எனக்குப் பிடிச்சத யாரும் உரிம கொண்டாடுறத நான் விரும்பமாட்டேன். " என்றவள் அந்தக் கம்மலையும் செருப்பையும் பிய்த்து எறிந்தவள், அந்த உடையையும் கிழித்தாள்.
"என்னோடத யாரும் யூஸ் பண்ணக் கூடாது. அப்படி யூஸ் பண்ணா. அத இனி யாரும் யூஸ் பண்ண முடியாத படி செஞ்சிடுவேன். இது லாஸ்ட் டயம்மா இருக்கட்டும். அப்றம் நான் கத்திரிக்கோல வச்சி துணிய கிழிக்க மாட்டேன். " என அந்தப் பெண்ணை மிரட்டியவள் தன் அண்ணனின் கையைப் பற்றிக் கொண்டு,
" வாண்ணா போலாம். நேரமாது" என்று அமைதியாகச் சென்றாள். அவளை எதுவும் சொல்ல முடியாது பின் தொடர்ந்தனர் அனைவரும். வேறு வழி.
ஜோஹிதா, பிடிவாதத்தின் மறு உருவம். தன்னுடைய எதையும் பிறர் பார்ப்பதைக் கூட விருப்ப மாட்டாள். அவளின் குணத்தை யாரும் தவறாக இதுவரை நினைத்து கூடப் பார்த்து இல்லை. அப்படியே தன் அம்மாவை ஒத்துப் பிறந்திருக்கிறாள் என்று நினைக்கத் தோன்றியது மோகனுக்கு. ஏனெனில் அந்தக் குடும்பத்தில் முதல் பெண் வாரிசு ஜோஹிதா. அதனால் செல்லம் அதிகம்.
அவளின் அந்தக் குணம் தான் இந்தக் கதையின் கருவாக மாறி உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..