முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 60


 

அத்தியாயம் : 60


வாழ்க்கைக்குத் தேவை…


பணமோ பொருளோ அல்ல…


எந்தச் சூழ்நிலையிலும் விட்டு...


கொடுக்காத, விட்டு விலகாத...


உண்மையான அன்பு…


இது உண்மையா?. பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே நேரம் பணம் மட்டுமே வாழ்க்கையென்றாகாது.


குறைந்த அளவேயானாலும் பணம் இருந்து அதிக பாசம் இருந்தாலும் போதும். வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம். ஆனால் அதிக பணம் இருக்கும் இடத்தில் பாசம் என்பது மாயையாகவே இருக்கும்.


இப்போது நாம் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணத்திற்கா அல்லது பாசத்திற்கா. இதற்குப் பதில் சொல்ல இயலாது. குழப்பமாக உள்ளது அல்லவா. அதே போல் இருந்தது வாசுவிற்கு.


பிடித்த ஒருவருக்காகப் பிடித்த ஒன்றை விட்டுக் குடுக்க தயாராக இல்லை கார்த்திகேயன். அதைத் தன் அடையாளமாக எண்ணும்போது ஜோஹிதா கன்டிஷன் போட்டது தவறு.


அதே நேரம் விகாஸின் கூற்றும் சரியே. நிலையில்லாத தளத்தில் மாட மாளிகையைக் கட்ட நினைப்பது முட்டாள் தனம். காத்திருப்பது மட்டுமே இங்குச் சரியான முடிவாகப் பட்டது வாசுவிற்கு.


இருவருமே பொறுமையுடன் கையாள வேண்டிய சூழ்நிலை. அதைச் செய்யத் தவறியதால் பிரிந்துள்ளனர். இவை வாசுவின் கருத்து.


"அந்த மெரினா பீச் தான் உங்க கடைசி சந்திப்பா? அதுக்கப்றம் நீங்கக் கார்த்திப்பாவ பாக்கவே இல்லயா ஜோஹிம்மா?. உங்கள சமாதானம் பண்ண கார்த்திப்பா என்ன பண்ணாரு?. ஏன் உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கூட நீங்கப் பேசுறதையே விட்டிங்க?.‌ சண்ட போட்டதுக்கு அப்றம் உங்களுக்கு வீட்டுல பாத்த பசங்கள என்ன பண்ணிங்க.?" என்றாள் வாசு ஆவலுடன். 


அவளுக்குக் கேட்க வேண்டிய கேள்விகள் அதிகமாக இருந்தன.


" கார்த்திக் எங்கூட சண்ட போட்டதுக்கு அப்றம் பேசவே இல்ல. அதுவும் நாலு மாசமா. டிகிரி முடிக்கிற வர. ஏன் நான் ஃபோன் பண்ணாலும் கார்த்திக் எடுக்கவே இல்ல. எங்க லவ் தெரியவுமே எனக்குக் கார்த்தி வாங்கி தந்த ஃபோன விகாஸ் உடச்சிட்டான். ஆனாலும் வீட்டு ஃபோன்ல இருந்து பேசினேன். எடுக்கவே இல்ல கார்த்திக்.


அவெ மட்டுமில்ல நானும் கோபமா தான் இருந்தேன். இதுக்கு முன்னாடி சண்ட போட்டா அடுத்த‌ நாளே பேசிடுவான். எங்கிட்ட பேசாம அவனால் இருக்க முடியாது. சண்ட போட்டுக்கிறதுக்காகவாது பேசிப்போம். ஆனா இந்த மொற அப்படி இல்ல.


நான் அவெங்கிட்ட பேசிப் பாத்தேன். அவனோட காலேஜ்ல போய் அவனுக்காகக் காத்திருந்திருந்தேன். ஆனா அவெ கண்டுக்கவே இல்ல. அதா நானும் கோபமாவே போய்ட்டேன்.


எங்க சண்ட விகாஸ்க்குத் தெரியவும் எனக்கு ரொம்ப தீவிரமா வீட்டுல பொண்ணு பாக்க ஏற்பாடு பண்ணாங்க. எங்களுக்குள் விழுந்த விரிசல யூஸ் பண்ணி எங்கள முழுசாப் பிரிக்க நினைச்சாங்க. ஆனா நா எதுக்கும் சம்மதிக்கல. கார்த்திக் எனக்காக ஒரு நல்ல வேலைய தேடிட்டு வருவான். அது வர நான் அவனுக்காகக் காத்திருப்பேன்னு சொல்லிப் பிடிவாதமா இருந்துட்டேன். "


உண்மையும் கூட. ஜோஹிதாவின் பிடிவாதம் அனைவரும் அறிந்த ஒன்று. மணந்தால் கார்த்திகேயன் இல்லையேல் கடைசி வரை‌ கன்னியாகவே இருப்பது என்று அறையினுள் பூட்டிக் கொண்டு ஒரு மாதம் போராட்டம் பண்ணியவளின் பிடிவாதத்திற்கு வீட்டார் இறங்கி போக வேண்டியதாகிற்று.


அதே நேரம் அவளைப் புரிந்து கொள்ளாது விட்டுச் சென்றதோடு, கண்டு கொள்ளாமல் போன கார்த்திக்கிக்கை மன்னிக்கவும் தயாரா இல்ல அவள்.


அவள் அறியாத ஒன்று விகாஸ் கார்த்திகேயனை ஜோஹிதா இருக்கும் திசையின் அருகே கூட வர விடாமல் ஜோஹிதாவை சுற்றி பாதுகாப்பு வேலிபோல் சிந்துவை வைத்தது. அவளைச் சமாதானம் செய்ய எனக் கார்த்திக் எடுத்த அத்தனை முயற்சியும் ஜோஹிதாவின் பார்வைக்கு படாதபடி விகாஸ் பார்த்துக் கொண்டான்.


கோபமாகக் கத்திவிட்டு சென்றபின் கார்த்திக் ஜோஹிதாவை கண்டு கொள்ள வில்லை தான். ஆனால் ஒரு சில நாள்களுக்கு மேல் கார்த்திக்கால் ஜோஹிதாவை விட்டு இருக்க முடியவில்லை. பல நாள்கள் என்பது சில மாதங்களாகி கோபம் குறையாமல் இருந்தது. பின் அவளைக் காண கல்லூரிக்குச் செல்ல,


"இங்க எதுக்கு வந்த? உன்னைப் பாக்க அவளுக்கு விரும்பமில்ல. போ... போய் அந்தக் கரிச் சட்டியையும் கரண்டியையும் வச்சி தேய் சமையக்கட்டுக்குள்ள. உனக்கு அது தா லாயக்கு. குப்பத்தொட்டி மாட மாளிக்கி ஆச படவே கூடாது‌. " எனச் சிந்து விரட்டி விட்டதோடு, விகாஸ்ஸும் அவ்வபோது கார்த்திக்கை அசிங்கப்படுத்த கார்த்திக்கால் ஏதும் செய்ய முடியவில்லை. 


ரோசம் வந்து விட்டது. சில காலம் விட்டுப் பிடிக்க எண்ணி ஜோஹிதாவை பார்க்க முயற்சிக்காது இருக்க, அவன் கதை முடிந்தது என்று நிம்மதி அடைந்தனர் ஜோஹிதாவின் வீட்டினர். ஆனாலும் கார்த்திக்கை கண்கானித்துக் கொண்டு தான் இருந்தான் விகாஸ்.


கார்த்திக் ட்ரெயினிங் முடிந்து ஒரு நட்சத்திரம் விடுதியில் பணியில் சேர்ந்தான். அதுவும் வெளியூரில். விட்டது சனியன் என நினைத்தவர்களுக்கு ஜோஹிதா எம்பீஏ படிக்க உள்ளதாகவும் அதுவும் டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தான் சேர்வேன் என்று பிடிவாதம் பிடித்ததும் அதிர்ச்சியாக இருந்தது.


அவளை அசைக்க முடியாது என  அங்குச் சேர சம்மதித்தனர். அவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால் கார்த்திக்கும் டெல்லியில் தான் உள்ளான் என்று.


அவளுக்குத் தகவல் சொல்லியது அப்சத். வீட்டாரை விட்டுத் தூரமாக இருந்தால் கார்த்திக்கை பார்க்கவாவது செய்யலாமென டெல்லியைத் தேர்ந்தெடுத்தாள். அவளின் அத்தை குடும்பம் ஒன்று இருக்க அங்குத் தங்கி படித்தாள்.


"ம்... அப்ப ஹோட்டல் ஹோட்டலா போய்க் கார்த்திப்பாவ தேடி பிடிச்சி மறுபடியும் காதல் செஞ்சிங்களா?" என்றாள் வாசு. ஏனெனில் ஜோஹிதா தான் கார்த்திக்கை துரத்தித் துரத்தி காதல் செய்தவளாயிற்றே‌.


"இல்ல. இந்த மொற உங்கார்த்திப்பாவே வந்தான். நான் காலேஜ்ல சேந்த ரெண்டாவது நாளே எம்முன்னாடி வந்து நின்னான். 'நானும் இங்க தான் படிக்கிறேன்.' னு‌. சொல்லி.


எனக்காக அந்தக் காலேஜ்ல ஜாயின் பண்ணிருக்கான். நாம ஒருத்தெ பின்னாடி போய்க் காதலிக்க வைக்கிறதும். நம்மல ஒருத்தெ சுத்தி சுத்தி வந்து காதலிக்க வைக்கிறதும் தனி சுகம். எனக்கு அந்த ரெண்டுமே கிடைச்சது. ஸ்கூல் டேஸ்ல நான் அவெ பின்னாடி போனே.‌ காலேஜ்ல அவெ வந்தான்.” என் உற்சாகமாகச் சொன்னவள், 


“அவெ என்னைச் சமாதானம் படுத்த ட்ரெய் பண்ணப்பவே என்னோட ஈகோவ நான் விட்டுக் குடுத்திருக்கலாம். நான் அப்படி பண்ணாததுனால…." என்றிழுத்தவளின் முகத்தில் வேதனை நிறைந்த கண்ணீர் வந்தது.


காரணம் சொல்லாமல் கண்ணீர் சிந்திய தாயை உளுக்கி, "ஜோஹிம்மா என்னாச்சி?"


" வாசு, நமக்கு ரொம்ப பிடிச்சவங்க மேல வர்ற கோபத்த வெளிகாட்டீட்டு அவங்க கூடச் சீக்கிரமா பேசிச் சமாதானம் ஆகிடணும். இல்லன்னா அந்த உறவுக்குள்ள விரிசல் வந்திடும். கார்த்திக்க விட்டுப் பிடிக்கிறேன்னு நினைச்சி ரொம்ப தூரம் விட்டுட்டேன். பிடிக்கிறது அவ்ளோ சுலபமா இல்ல. "


"எனக்குப் புரியல ஜோஹிம்மா நீங்க என்ன பேசுறிங்கன்னு? "


"ஒன்னுமில்ல வாசு. லவ்வர்ஸ் குள்ள சண்ட வந்தா ஈகோ பாக்காம சமாதானம் ஆகிடணும்னு சொல்ல வர்றேன். அவ்ளோ தான். ருத்ரா இப்பப் பண்ணிருக்குற சின்ன ஸ்டெப்பே அவெ அவனோட ஈகோவ விட்டு உனக்காக இறங்கி வந்த மாதிரித் தான். அதுனால நீயும்… "


"நான் தான் மறுபடியும் அங்க போறேன்னு செல்லிட்டேன்ல. சும்மா சும்மா ருத்ரா புராணம் பாடிட்டு. " எனக் கடுப்புடன் சொல்ல.ன,


"நீ அங்க போறது பெருசில்ல. நீ பண்ண தப்ப சரி பண்ணணும். புரியுதா. அவெங்கிட்ட கண்ட படி பேசாத. பொறுமையா நடந்துக்க. நீ அவனோட காயத்துக்கு மருந்தாத்தா போற. மேக்கொண்டு காயப்படுத்திடாத. என்ன புரியுதா? " என மிரட்டலாகச் சொல்ல,


" இந்த அட்வைஸ்ஸ அவனுக்குக் கால் பண்ணியும் கொஞ்சம் சொல்லுங்க. எம்பொண்ணு ரொம்ப சாஃப்ட். அவள கசக்கிடாதன்னு. ஹிம்... ஆமா நீங்க ஏன் திடீர்னு அவனுக்கு இவ்ளோ சப்போட் பண்றீங்க?"


" ஏன்னா எனக்கும் ருத்ராவ ரொம்ப பிடிச்சிருக்கு” என்றதும் வாசுவின் பார்வை ஜோஹித்தாவின் மீது அழுத்தமாகப் பதிய, 


“அவனும் கிட்டத்தட்ட கார்த்திக் மாதிரித் தான் எங்கண்ணுக்கு தெரியுறான். அவனோட நிலைல இருந்து ஈகோ பாக்காம இறங்கி வர்ற சொல்றேன். அதுனால நான் ருத்ராவ தம்பியா தந்தெடுத்துக்கிட்டேன். "


"தம்பியாவா!!"


"ஹாங்... எனக்குத் தம்பி. உனக்கு மாமா‌. அவன பாத்த மாமான்னு கூப்பிடுவியா! " என்றபோது வாசுவின் முகம் அஷ்டகோணலாக மாறியது.


"இந்த மாமா கோமாலாம் வேண்டாம். நான் எப்பயும் போல ருத்ரான்னே கூப்பிட்டுக்குவேன்‌. " என்க, ஜோஹிதா சிரித்தாள்.


"நீங்க இன்னும் என்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லலயே. கார்த்திப்பா உங்கள சமாதானம் செஞ்சதுக்கு அப்றம் என்ன நடந்தது?. ஏன் உங்க ஃபேமிலியையே வெறுத்து ஒதுக்குறீங்க?." என்க, ஜோஹிதாவின் குரலில் இத்தனை நேரம் இருந்த உயிர்ப்பு முற்றிலும் இல்லாது போனது.


"அப்றம் என்ன நடந்திருக்கும் உங்கப்பெ பின்னாடி சுத்துறான்னு தெரிஞ்சதும் அவெ அண்ணெங்காரெ மறுபடியும் கல்யாணத்துக்கு அவசரப்படுத்திப்பான். இவ கைய அறுத்துட்டு ஆஸ்பத்திரில படுத்திட்டா. நீங்கக் கார்த்திக்க எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாத்தா நான் ட்ரீட்மெண்ட்டே பாப்பேன்னு இவ பிடிச்ச பிடிவாதத்துல ஹாஸ்பிட்டல்ல வச்சே மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க.


அப்றம் ஒரு மாசத்துல ஊரறிய தாலி கட்டி ரெண்டும் சந்தோஷமா வாழ்ந்துச்சிங்க. போதுமா கத. " என்ற படி உஷா வந்தார்.


"அவ்ளோ தானா!!. ஏதோ இடிக்கிற மாதிரி இருக்குல்ல. கதை இன்னும் ஒரு முழுமையான வடிவத்துக்கு வரலையே. Unshapedடா இருக்கே. ஏன்?. "


"ஏன்னா அத சொல்ற அளவுக்கு நேரம் இல்ல. பின்னாடி சொல்லுவோம். போ. இது ஒரு கதன்னு காலைல இருந்து ஒரே இடத்துல உக்காந்துட்டு. " என்க. வாசு அவரை ஏற இறங்க பார்த்தாள்.


" ஏன் உஷா ஆன்டி உங்களுக்கு முருகு மாமா மேல அவ்வளவு லவ்வு?. ஸ்கூல் முடிச்சி ஐஞ்சாறு வர்ஷம் காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு அவ்ளோ லவ்வா? " எனக் கண்சிமிட்டி கேட்க,


"அடிங் கொய்யால. யாருக்கு யாரு மேல லவ்வு. அந்தக் கருமத்தெல்லாம் இவள மாதிரியும் உன்னை மாதிரியும் வேலை வெட்டி இல்லாத ஆளுங்க தான் செய்வானுங்க. நான் எதுக்கு டி அத செய்யணும்." என வீராப்பாய் பேசினார் உஷா.


"அப்றம் எப்படி எதுக்கு எங்க மாம்ஸ்ஸ கட்டிக்கிட்டீங்களாம்?"


" உம்மாமெ கார்த்திக் மேல வச்ச பாசத்துக்காகவும், ரெண்டு பேருக்குள்ள இருந்த நட்புக்காகவும்‌ தான். எனக்கு அவர பள்ளிக்கூடம் போறப்பத்துல இருந்தே தெரியும் தான். ஆனா வசதி வாய்ப்புல கம்மி. அவர காலேஜ்ல படிக்க வச்சது கார்த்திக். அவெந்தா காசு குடுத்து ரெண்டு டிகிரி படிக்க வச்சான்.


தான் சம்பாதிச்சி தானும் படிச்சி தன்னோட நண்பனையும் படிக்க வைக்கிறது எவ்ளோ பெரிய விசயம். அத உங்கப்பெ செஞ்சான். உங்கப்பனுக்கு தங்கமான மனசு. அதுல இடம்புடிச்ச யாரையும் அவெ இதுவர கை விட்டதே இல்லை. உம்மாமனையும் சும்மா சொல்லக் கூடாது. சாப்பாட்டுக்கு வழியில்லாத போதும் அவெங்கூடவே இருந்தாரு.


இவங்க ரெண்டு பேரும் உன்னைத் தூக்கிட்டு அமெரிக்க வந்தபோ எங்களால செய்ய முடிஞ்சது ஒரு வீடும் ஒரு வேலையும் மட்டும்தான். ரொம்ப பெருசால்லாம் கிடையாது. நாலு பேர் படுக்குற அளவுக்குத் தான் இருக்கும். அதுக்குள்ளையே கிச்சன், பாத்ரூம்னு, எல்லாம் இருக்கும்.


ஆனா அந்தச் சின்ன வீட்டுலயும் உம்மாமனும் கார்த்திக்கும் சேந்து அடிக்கிட லூட்டி இருக்கே. அப்பா... ரொம்ப சந்தோஷமா இருந்தானுங்க. இவளையும் உன்னையும் ரெண்டு பேரும் தாங்கு தாங்குன்னு தாங்குனானுங்க. மூணு பேரும் ஒரே வீட்டுல தான் இருந்தாங்க. நண்பனோட மனைவிக்குத் தேவையான ப்ரைவஸிய குடுத்து தன்னோட தங்கச்சி மாதிரிப் பாத்துக்கிட்டாரு‌.


மூணு பேரும் மூணு விதமான வேல பாத்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரனையா இருந்து அடுத்தவங்கள பார்த்துக்கிட்டது எனக்குப் பிடிச்சிருந்தது. அந்தச் சந்தோஷம் எனக்கும் வேணும்.


முன்ன பின்னத் தெரியாத இவளையே நல்லா பாத்துக்கும்போது அவரு பொண்டாட்டி என்னைப் பாத்துக்க மாட்டாரா! அதான் வேண்டி விருப்பி கட்டிக்கிட்டேன். மத்தபடி நீ சொல்ற காதல் கண்றாவில்லாம் கிடையாது. " என்க, ஜோஹிதாவும் வாசுவும் உஷா செய்த முகபாவனைகளைப் பார்த்துச் சிரிக்க, அவருக்கு வெட்கம் வந்துவிட்டது போலும்‌‌. வாசுவின் தலையில் தட்டிவிட்டு சென்று விட்டார்.


"கல்யாணம் தான் பண்ணி வச்சிட்டாங்களே… அப்பறம் ஏன் நீங்க உங்க அப்பா அம்மாவ விட்டுடுட்டு இந்தியாவ விட்டே தூர தேஷம் வந்திங்க?. இப்பத் திரும்பிப் போய் உங்க சொந்தங்களப் பாக்க யோசிக்கிறீங்க. ஏன்?. "


" வாசு பிறந்த வீடோ. இல்ல புகுந்த வீடோ. எந்த வீடா இருந்தாலும் புருஷனுக்குப் பொண்டாட்டி தர்ற மதிப்பும் பொண்டாட்டிக்கி புருஷெ குடுக்குற முக்கியத்துவம் தான், மரியாதைய குடுக்கும்.


கார்த்திக்கு ஃபேமிலி இல்ல. ஆனா எங்க ஃபேமிலில அவன மதிக்கவும் மரியாத குடுக்கவும் ஆள் இல்ல. அப்படியிருக்குறப்போ எப்படி அவெ அங்க இருப்பான்.‌ சொல்லு.‌..


வீட்டோட மாப்பிள்ளையாத்தா இருக்கணும், நாங்க சொல்ற வேலையத்தா செய்யணும்னு எங்க வீட்டு ஆளுங்க அவனுக்குக் கன்டிஷன் போட்டா எப்படி அவனுக்கு மரியாத கிடைக்கும். ம்… அதா கார்த்திக் இங்க வேலை கிடைச்சிருக்குன்னு சொன்ன உடனேயே நானும் அவெ பின்னாடியே வந்துட்டேன். என்னால கார்த்திக் பட்ட கஷ்டம் போதும். இனி அவனோட ஆசைய நிறைவேத்த அவெங்கூட உறுதுணையா நிக்கணும்னு முடிவு பண்ணேன். "


"ஆனா…" என வாசு மீண்டும் வாயைத் திறக்க,


"போதும். வேற எதுவும் கேக்காம, உன்னோட யூனிபார்ம்ம ஐயன் பண்ணி வை. நாளைக்கி போடணும்ல அத. " என மகளின் தலை கோதிவிட்டு சென்றாள்.


வாசு குழம்பிப் போயே அமர்ந்திருந்தாள். 


‘ஆயிரம் நடந்து இருந்தாலும் உயிர் கொடுத்த தந்தையின் இறப்பிற்குக் கூட ஜோஹிதா செல்லவில்லை. இப்போது தாயைக் கூடப் பார்க்க வரச் சொல்லி உஷா தான் கட்டாயப்படுத்தி அழைத்திருக்கார். ஏன் இந்த பாசமற்ற தன்மை?


ஜோஹிதா கார்த்திக்கிடம் இழந்த தன் காதலை இன்னும் பெறவில்லையோ?. அதனால் தான் இன்று வரை இவர்களின் உறவு வித்தியாசமாக இருக்கிறதோ!. ஜோஹிம்மாவின் குடும்பம் கார்த்திப்பா எந்த அளவுக்குக் காயப்படுத்தி இருந்தால் அவர் இந்தியாவிற்கே போக யோசிப்பார்.


இல்ல… இன்னும் இருக்கிறது எதோ.


ஜோஹிம்மா எதையோ எங்கிட்ட மறைங்கிறாங்க.’ எனச் சொல்லியது அவளின் மனம். 


இருவரும் சொல்ல மறைக்கும் அந்த ரகசியங்கள் எது?


ச்ச இந்த வாசுவ யாரும் சும்மாவே இருக்க விட மாட்டேங்கிறாங்க. எப்ப பாரு எதையாது யோசிச்சிட்டே இருக்க வைக்கிறாங்க.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...