அத்தியாயம்: 61
விமானநிலையம்.
இனி இங்கு வரவே கூடாது என்று சபதம் ஏற்றத் தன்யாவை. 'சும்மா விளையாடாதம்மா வா. ' என இழுத்து வந்துவிட்டான் தேவ்.
காலைத் தொடும் அளவுக்கு இருந்த இளம் சிவப்பு நிற அழகிய சுடிதாரில், எங்கே தேவ் என அவள் கண்கள் அலைபாயும் அழகை டேனியல் மட்டும் பார்த்திருந்தான் என்றால் அள்ளிக் கொண்டு சென்றிருப்பான். அத்தனை அழகு அவள்.
'தேவ் எங்க இருக்க?.' எனக் கைகள் தன்னால் தேவ்வின் செல்ஃபோனிற்கு மெசேஜ் அனுப்ப,
'ரைட் சைடு கார்னர். ' என்று பதில் வந்தது. வேகவேகமாக அங்கே சென்று அவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.
"தேவ், வாசு பாவம். அவள அதிகமா படுத்தி எடுத்துடாத ப்ளிஸ். " என்க.
"நான் இன்னும் எதுவுமே பண்ணலயே. அதுக்குள்ள ரெக்கமெண்ட்டேஷனுக்கு வர்ற!." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு காரை எடுக்க, இருவரும் பயணப்பட்டனர்.
"பொய் சொல்லாத!. எனக்கு உன்னைப் பத்தி நல்லாத் தெரியும். நீ எல்லாத்தையும் ப்ளான் போட்டு வச்சிருப்ப. அவள என்னென்ன டிசைன்ல படுத்தப் போறியோன்னு பயந்து போய்த் தான் நான் இங்கையே வந்தேன்.. "
"நீ அதுக்கு மட்டும் தான் வந்தியா?. "
"டேன்காகவும் தான். " எனத் தயங்கி தயங்கி சொன்னாள்.
"லவ்... ஆனா அந்த லவ் நம்ம லவ்வர்ஸ்க்கு நம்ம மேல இல்லையே. என்ன பண்ண?"
" வாசுக்கு உம்மேல இருக்கு. அதுனால தான் அவங்க அப்பாக்கும் உனக்கும் இடைல கிடந்து தவிக்கிறா. நீ அவள கொஞ்சம் புரிஞ்சிக்கயேன். கொஞ்ச நாள் விட்டா அவளாவே உன்னைத் தேடி வருவா. "
"கொஞ்ச நாள்…" எனப் புருவம் உயர்த்தி சந்தேகமாகப் பார்க்க,
"சரி கொஞ்ச மாசம்… எதுவா இருந்தாலும் அவளுக்கு நீ டைம் குடுத்திருக்கணும். "
"ஸாரி, எனக்கு அதக் குடுக்க பிடிக்கல. அதே நேரம் அவளா என்னைத் தேடி வர்ற வரைக்கும் எனக்குப் பொறும இல்ல. "
"சரி இப்போ வாசுவ என்ன தான் பண்ணப்போற?"
" அத நான் பாத்துப்பேன். இப்ப நீ என்ன பண்ணணும் சொல்றேன். இந்தா பிடி. இதுல ரிப்போர்ட் இருக்கு. நான் சொன்னது நியாபகம் இருக்குள்ள. ம்... கரெட்டா பண்ணா டேனியல நம்ம வழிக்கிக் கொண்டு வர முடியும். "
"எனக்குப் பயம்மா இருக்கு தேவ். டேன் கொஞ்சம் சென்ஸ்ஸிட்டிவ் ஆனா ஆளு. எமோஸ்னல் டைப். பாக்க நல்லா வளந்த பையன் மாதிரி இருந்தாலும், அவனோட மனசு குழந்தை மாதிரி. இப்ப நாம பண்ணப் போறத அவெ தாங்கிக்குவானா?. ஒருவேள மனசொடஞ்சி வேற மாதிரி முடிவ எடுத்துட்டா. என்னால அதத் தாங்கிக்க முடியாது தேவ். " என்றவளுக்குக் கண் கலங்கியது.
" அப்படி என்ன பண்ணிடப்போறான். தற்கொலயா?"
" தே… வ்." என்றவளின் குரலில் வலி இருந்தது.
" தற்கொல தான் பண்ணிக்கணும்னு அவெ நினைச்சிருந்தா எப்பையோ பண்ணிருப்பான். ஏன்னா அவனோட லைஃப் அப்படி. அவனோட அம்மாக்கு கிட்டத்தட்ட பத்து முறை மேரேஜ் ஆகிடுச்சி. அப்பா... கொஞ்சம் விவரமா இல்லீகலா மட்டுமே வாழ்ந்துட்டு வர்றாரு. கிட்டத்தட்ட ஒரு விபச்சார விடுதில வாழ்ந்த மாறியான லைஃப் தான் அவனோடது. பட் அவெ நல்லவெ. உன்னைத் தவிர யார் கூடயும் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல இருந்தது இல்ல. என்னைக் கேட்டா அவெ அன்புக்காக ஏங்கிற டைப்.
அது கிடைக்கும்போது சந்தேகம் வர்றது சகஜம் தான். உன்னோடது நிஜமான அன்புன்னு அவனுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுத்து நாம புரிய வைக்க முடியும். அவ்ளோ தான். இதுல பயப்பட என்ன இருக்கு. நா பாத்துபேன். " என அவளின் கரம் பற்றிச் சொல்ல, அவள் சமாதானம் எல்லாம் ஆகவில்லை. ஆனால் புது நம்பிக்கை வந்தது.
"எஸ்… அவனுக்குத் தேவ ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் தான். அதே மாதிரி ஒன்னத்தான் நீ வாசுக்கு குடுத்திருக்கியா. ஒன் மில்லியன் டாலர். "
" அவ பேசுன பேச்சிக்கி இன்னும் நிறைய ட்ரீட்மெண்ட் குடுக்கணும். எவ்ளோ பேச்சு?" என்றவனுக்கு கோபம் வந்தது.
"இப்ப டேன் எங்க இருக்கான்? "
" நம்ம ஜோடிங்க ரெண்டு பேருக்கும் மிஸ்டர் கார்த்திகேயன் அடைக்கலம் தந்து பாதுகாத்துட்டு இருக்காரு. "
"ஹாங்... " எனப் புரியாமல் முழிக்க,
"டேனியல் கார்த்திககேயன் ரெஸ்டாரன்ட்ல தான் இப்ப வேலை பாத்துட்டு இருக்கான். "
" சரி தான் அப்ப வாசுக்கு ஃபோன் போட்டு... " என்றபோது அவளின் ஃபோனை தேவ் பறிக்க,
" என்னாச்சி? "
"நீ Fremont வந்தது அவளுக்குத் தெரிய வேண்டாம். தெரிஞ்சா டேனியல் மேல இரக்கம் காட்டுறேன்னு நம்ம ப்ளான கெடுத்துடுவா. அவனுக்கு எந்த எமோஸ்னல் சப்போட்டும் கிடைக்க கூடாது. யாரும் இல்லாத தீவு தவிக்க விடணும் அவன. " என்க, நம் தன்யாவிற்குத் தான் கஷ்டமாக இருந்தது.
" அம்மா தாயே... நீ சென்டிமென்ட் படத்த ஓட்டி எல்லாத்தையும் கெடுத்துடாத. அப்றம் நீ காலம் முழுக்கு கண்ணன காதலிச்ச மீரா மாதிரிக் கனவுல உலகத்துல அவெங்கூட குடும்ப நடத்த வேண்டி இருக்கும். " என்க, சரி எனத் தலையசைத்தாள் தன்யா.
_____________
சில காலமே ஆனாலும் தனக்குப் பிடித்த ஹோட்டல் அது. என்றும் தனக்குப் பிடித்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலை. அதில் மீண்டும் பணி புரியப் போகிறோம் என்ற ஆவலும், தன் மனம் கவர்ந்த காதலனைக் காணும் ஆசையும், மை சைல்ட் என்று புன்னகைக்கும் மேனேஜர் ஜானின் அன்பு கலந்த முகம் காணும் ஏக்கமும் எனப் பலவித கலவையான எதிர்பார்ப்புடன் அந்த ஹோட்டலுக்குச் சென்றாள் வாசு.
"நான்... வாசவி கார்த்திகேயன். classic restaurant ன் உரிமையாளர் கார்த்திகேயனின் மகள். தி க்ரேட் பிஸ்னஸ் மேன் ருத்ரதேவ்வின் தற்போதைய எதிரியாகிய நான் இருபத்தி ஒரு வயதே நிரம்பிய அரிவை.
எனது அன்னையின் அறிவுரையை ஏற்று வந்திருக்கும் நான், எக்காரணம் கொண்டும் மிஸ்டர் ருத்ரதேவ்வின் மீது வெறுப்போ... கோபமோ... எரிச்சலோ… படமாட்டேன் என்று உறுதி எடுக்கிறேன்.
இது என்… என்... கார்த்திப்பா மேல சத்தியம் பண்ணா அத மீற முடியாது. உள்ள அவெ என்ன பண்ணாலும் சும்மா நிக்க நம்மால முடியாது. அதுனால இந்தப் பவ்யமான பதவி பிரமாணத்த ஒத்தி… இல்ல கேன்சலே பண்ணீடுறேன். ஏன்னா அவெ ஏட்டிக்கி போட்டியா எதாவது பேசுனா, நானும் பேச வேண்டி இருக்கும்.
நான் ஒரு முகம் பாக்குற கண்ணாடி மிஸ்டர் ருத்ரதேவ். நீங்க எங்கிட்ட எந்த முகத்த காட்டினாலும் உங்களுக்கு அதே முகத்த தான் நான் திரும்பிக் காட்டுவேன். சோ, ஜோஹிம்மா சொன்ன மாறிலாம் அடக்க ஒடுக்கமான பொண்ணா என்னால இருக்க முடியாது. நான் நானாத்தா இருப்பேன். எப்பையுமே." என அவளுக்கு அவளே பேசிக் கொண்டு உள்ளே செல்ல, அங்கு அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
முதலாவது அதிர்ச்சி. அவளின் பதவி பறிக்கப்பட்டிருந்தது.
"என்ன ஜான் இந்த டிரெஸ்ஸ தர்றீங்க? இது Supervisors கான டிரெஸ். நான் அசிஸ்டன்ட் மேனேஜர். " என மிடுக்காய் சொல்ல.
'அது போன மாசம். இது இந்த மாசம்.' என்பது போல் அவர் உடையை அவளின் கையில் திணித்து விட்டுப் புன்னகையுடன் சென்றார்.
சரி அடுத்த அதிர்ச்சிய பாக்கலாமா.
அது வேற ஒன்றுமில்லை, அவள் இதுவரை பாத்து வந்த அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் இப்பொழுது யாரிடம் உள்ளது என்றால் நான்ஸியிடம்.
திண்ண எப்ப காலியாகும் அண்ணே எப்ப உக்காரலாம்னு காத்துட்டு இருந்த கணக்கா வாசவி தலை அந்தப் பக்கம் போனதும், ஒலிவியாவை கரெக்ட் செய்து பதவியைப் பறித்துக் கொண்டாள்.
"ச்ச... போயும் போயும் அந்த roasted Lizard க்குக் கீழயா நான் வேலை பாக்கணும். ஐய்யோ கடவுளே இதுக்கு நான் வராமலேயே இருந்திருக்கலாம். " என நொந்து கொண்டாள் வாசு.
" என்ன பண்ண வாய்ப்புங்கிறது எல்லாருக்கும் எப்பயும் கிடைக்கிறது இல்ல. அப்படிக் கிடச்சாலும் உன்னை மாதிரி யூஸ் பண்ணித் தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் அடி முட்டாள் கிடையாது. இப்ப இங்க நான் உனக்கு மேல இருக்குற உயர் அதிகாரி. எனக்கு நீ பணிஞ்சி தான் ஆகணும். என்ன புரியுதா? " என நான்ஸி மிரட்டிச் சொல்ல,
" இந்த எண்ண சட்டிக்குள்ள விழுந்த Lizard லாம் நம்மல மிரட்டீட்டு போகுதே. என்ன மாதிரியான சூழ்நிலை இது?. ச்ச… " என்றிருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
தன் உடையை மாற்றிக் கொண்டு ரிஜிஸ்டரில் கையெழுத்து போடச் சென்றவளின் முன் அந்த roasted Lizard ஸாரி நான்ஸி வந்து நின்றாள்.
" அடிக்கடி வந்து மூஞ்சிய காட்டாத தாயே… சகிக்கல. " என நக்கலாக வாசு கூற,
" இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட மூஞ்சி எப்படி மாறப்போகுதுங்கிறத பாக்க நான் ஆவலா இருக்கேன். வா... உன்ன MD கூட்டீட்டு வரச் சொன்னாரு. புது MD. "
'என்ன அந்த ருத்ரா வந்திருக்கானா.? இங்கயா இருக்கான்? வேற வேலை வெட்டியே இல்லையா அவனுக்கு!. என்னை டார்சர் பண்ண ஹோட்டல் ரூம்லாம் போட்டுத் தங்கிருக்கான் போலயே. ' என மனம் அதிர்ச்சியைக் காட்டினாலும், முகத்தில் அதைக் காட்டாது.
" நீ போ... நான் பாத்துக்கிறேன். " என முதலில் நான்ஸியைத் துரத்திவிட்டாள். பின் ரிஜிஸ்டரில் எப்போழுது வந்தான். எத்தனை நாட்கள் தங்க போகிறான் எனப் பார்த்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி.
ஏனெனில் ஒரு மாதம். முழுதாக ஒரு மாதம் இங்குத் தான் தங்க போகிறான். " போச்சி... நாலு நாள் வந்து இருந்ததுக்கே நமக்கு அந்த நிலம. அப்ப கூடப் பரவாயில்லை நமக்கு ஃப்ரெண்டா இல்லன்னாலும். பகையா இல்ல. இப்ப அவெங்கிட்ட சண்ட போட்டு வீராப்பா பேசி, அவனோட ஈகோவ தூண்டிவிட்டு. ச்ச… என்னடி வாசு உன்னோட தலையெழுத்து கல்வெட்டுல பொறிச்சி வைச்ச பழங்கால தமிழ் எழுத்து மாதிரி யாருக்கும் புரியாமலேயே இருக்கு. " என்று புலம்பியபடியே ரிஜிஸ்டரை மூடும்போது தான் மற்றொன்றை கண்டாள்.
அது அந்த ஹோட்டலின் ஹனிமூன் சூட் புக்காகி இருப்பதற்கான பதிவை.
'எவெ எவ கூட ஹனிமூன் கொண்டாடுனா நமக்கு என்ன!.' என நினைத்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியாக அது ருத்ராவின் பேரில் புக்காகி இருந்தது.
"என்ன ஹனிமூன் சூட்டா.! இவனுக்கு எப்பக் கல்யாணம் ஆச்சி?. இல்ல ரூம்ம எப்படி ரெக்கரேட் பண்றோம்னு பாக்க புக் பண்ணானா. இல்ல புது கேர்ள் ஃப்ரெண்டு கூடக் கொண்டாடப்போற ஹனிமூனுக்கு ரிகர்சல் பாக்க புக் பண்ணானா?. எதுக்கு புக் பண்ணிருப்பான்? ம்... " என அவளின் மூளை படு வேகமாக வேலை செய்ய, அதே வேகத்துடன் ருத்ராவை காணச் சென்றாள்.
டக்…. டக்…
"மே ஐ கம் இன். " எனத் தேன் சொட்டும் குரலில் கேட்க, உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
மீண்டும் கதவைத் தட்ட, பதில் இல்ல. எனவே கதவைத் தள்ளிக் கொண்டு உள்ள சென்றவளின் இதயம் அங்கு ஃபோனில் பேசிக் கொண்டிருந்த ருத்ராவை பார்த்து ஒரு நொடி நின்று விட்டது. ரசிக்கும் விழிகளால் அவனைப் பார்வையால் வருட,
அவளின் நிலை புரியாது. " நான் உன்னை உள்ள வரச் சொல்லலையே. வெளிய போ. " என்றான் ஆங்கிலத்தில்.
"ஹாங்... " என அவன் என்ன பேசினான் என்று புரியாது முழிக்க,
"நான் உன்னை கூப்பிடுற வர வெளிய நில்லுன்னு சொன்னேன். " என்றான் உத்தரவாக.
அவளும் சிறு எரிச்சலுடன் காத்திருந்தாள்… காத்திருந்தாள்... காத்துக் கொண்டே இருந்தாள். காலை முடிந்து மாலை வந்தது. மாலை முடிந்து இருளும் படர்ந்தது. ஆனால் அவளை உள்ளே அழைக்கவில்லை. வேறு எந்தப் பணியும் செய்யாது அவனின் அறை வாசலிலேயே வாட்ச்விமென் வேலை பார்த்தாள் வாசு.
மணி ஆறை தாண்டிவிட்டது. எப்போழுதும் அவளின் டியூட்டி நேரம் ஆறு தான். சரி டீப்ரமோஷன் ஆகி விட்டதால் கூடுதலா ஒரு ஒரு மணி நேரம் இருக்க நினைத்து ஏழு வரை இருந்தாள். அப்போதும் அவனிடமிருந்து அழைப்பு வராததால் எழுந்து செல்லப் பார்த்தவளுக்கு அழைப்பு வந்தது.
'ஒருவழிய அந்த ருத்ரதேவ்க்குக் காட்சி தர மனசு வந்திடுச்சி போல். ' என நினைத்துக் கொண்டே உள்ளே சென்றாள். பாவம்….
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..