அத்தியாயம்: 62
ஆணின் வல்லிய இதழும்…
ரோஜாவை ஒத்தது தான்…
முட்களாய் வளர்ந்திருக்கும்…
மீசை முடிகளுக்கு...
இடையில் வளர்வதால்.
மீசையா!!!!!.
ம்... மீசை தான். அதை ருத்ரா வளர்த்திருந்தான். சொல்லப்போனால் அதைப் போட்டியாக வளர்க்கிறான்.
ஒரு முறை வாசு சொல்லியிருந்தாள், 'என்னோட கார்த்திப்பாவோட மீச எனக்கு ரொம்ப பிடிக்கும். கோபம் வந்தா அந்த மீசையோட ஓரத்த லைட்டா முறுக்கி விட்டுட்டு, புருவத்தத் தூக்கி பாத்து, சட்டையோட கைய மடிச்சி விட்டு சும்மா ஹீரோ மாதிரி வந்து நிப்பாரு... பாரு... விசில் அடிச்சி கொண்டாடன்னும் தோணும். அந்த அளவுக்கு அவரோட மீசைய எனக்குப் பிடிக்கும். ' என்று எப்பொழுதோ சொன்னது அவளை விட்டுப் பிரிந்து இருக்கும்போது நினைவு வந்தது.
அதனால் தான், அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காகவே வளர்க்கிறான். 'உங்கப்பாவ விட எனக்கு மீசை நல்லாவே இருக்கும். முறுக்கி விட்டாலும் சூப்பராத்தா இருக்கும். அதுக்குன்னு ஸ்பெஷல் ஆயுள் எல்லாம் வாங்கி அப்ளை பண்றேன்.' எனக் கம்பியாய் வளர்ந்திருக்கும் மீசையைத் தன் விரலால் வருடினான்.
முதல் முறை வளர்க்கிறான். அதுவும் சில வாரங்களே ஆவதால் அடர்ந்து இல்லாது மெல்லிதான கருப்பு நிறத்தில் எட்டிப்பார்த்த அந்த மீசை வாசவியைக் கவர்ந்தது. எனக்காக வளர்க்கிறான் என்பதே பெண்ணவளுக்கு கர்வத்தைத் தந்தது.
அவன் வெளியே போ என்றபோது கூடக் கோபம் வந்தது தான். ஆனால் கோபித்துக் கொண்டு சென்று விட்டாள் அவனின் முகத்தை முழுதாக இன்று பார்க்க முடியாதே அதான் அத்தனை மணி நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தாள்.
இப்போதும் உள்ளே வந்தவளின் விழிகள் அவனின் முகத்தை மட்டுமே காண, "மிஸ் வாசவி கார்த்திகேயன். ரைட்டா?. இவ்வளோ நேரம் இருந்துட்டு இப்ப மிஸ்ஸாக பாக்குறிங்க?" என்றவனின் நக்கல் பேச்சு வாசுவைக் கனவு உலகத்திலிருந்து கையைப் பிடித்து இழுத்து வந்தது போல் இருந்தது.
"நான் எங்கயும் மிஸ் ஆகல. என்னோட ட்யூட்டி டயம் முடிஞ்சி போச்சி. சோ, நான் கிளம்புறேன். " என்க, அவன் சிரித்தான். சத்தமாக… அதை ரசிக்கத் தோன்றவில்லை அவளுக்கு. மாறாக வயிற்றில் ஏதோ ஒன்னு உருளுவது போல் உருண்டு பயத்தை உண்டு பண்ணியது.
" உங்க டியூட்டி டயம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா மிஸ் வாசவி கார்த்திகேயன். "
"ஈவ்னிங் சிக்ஸ் தா " என்றாள் தயக்கமாக
"அது ஒன் வீக்குக்கு முன்னாடி. இப்ப உங்களோட ஜாப் என்ன, எத்தன மணி நேரம் வேலை பாக்கணும், என்னென்ன வேலை பாக்கணுங்கிறது எல்லாம் அந்தக் கான்ட்ராக்ட் காப்பில இருக்குமே. படிக்கலையா?. இல்ல, என்னை ஏமாத்தி அத மாத்திடலாம்னு தைரியமா?. " எனக் கேட்டபடி அவளின் முன் வந்து நின்றவன் அவளை நாற்காலியில் அமர வைத்துக் கையில் அந்தக் கான்ட்ராக்ட் காப்பியைத் தந்தான்.
அதிலிருந்தது அவளுக்கு அந்த நாளில் கிடைத்த கடைசி அதிர்ச்சி.
‘அது ஒன்னுமில்லைங்க நீங்கப் பேபி சிட்டர்னு ஒரு வார்த்த கேள்வி பட்டிருக்கிங்களா?. இல்லன்னாலும் பரவாயில்லை. குழந்தய பாத்துக்கிற ஆயா. அது என்ன பண்ணாலும் கோபமே படாம, அடிச்சாலும் அடி வாங்கிட்டு, ரோசப்படாம கூடவே இருந்து அது சொல்றத எல்லாம் செய்யணும். இங்க பேபி ருத்ரா. அத பாத்துக்கிற ஆயா நம்ம வாசு.’
"ச்ச... அவெ பெட் ரூம்மு பாத்ரூமு, இந்த ரெண்ட தவிர மத்த எல்லா இடத்துலயும் அவனுக்கு நிழலா இருக்கணும்மா. அது மட்டுமில்ல அவெ இங்க இருக்குற ஒரு மாசமும் அவனோட சொல் பேச்ச கேட்டு நான் நடந்துக்கணுமாம். நான் என்ன கீ குடுக்குற பொம்மையா?. இதெல்லாம் எந்த விதத்துல நியாயம். " என மனத்திற்குள் கருவிய படியே அமர்ந்திருக்க, ருத்ரா அவனின் ஈசி சேரில் அமர்ந்து கொண்டு அதை ஆட்டத் தொடங்கினான். அது எரிச்சலாக வந்தது அவளுக்கு.
" உங்களுக்கு United States labor law ன்னா என்னன்னு தெரியுமா?" என்றாள் வாசு மிடுக்காக.
"நல்லாவே தெரியும்."
"அப்றம் எதுக்காக நான் மட்டும் பதினாலு மணி நேரம் வேலை பாக்கணும். ஒரு நாளோட முக்கால்வாசி நேரத்த நான் உங்களுக்குச் சேவ செய்றதுலயேவா கழிக்கணுமா. "
"எஸ்... அத ஒத்துக்கிட்டு தான் கான்ட்ராக்ட்ல கையெழுத்து போட்டிருக்கிங்க. "
" அது போலி. என்னோட கையெழுத்த நீங்களாப் போட்டுட்டு என்னென்னமோ எழுதி வச்சிருக்கிங்க. இத லீகலா பாத்துக்க எனக்குத் தெரியும். "
" பாத்துக்க... ஆனா அது இப்ப முடியாதே. இது போலின்னு கண்டு பிடிச்சி அத நிறுபிச்சி... அதுக்குள்ள நீ துவண்டு போய்டுவ."
"உங்கிட்ட பதினாலு மணி நேரம் வேலை பாத்தா மட்டும் அப்படியே ஃப்ரிஜ்ல இருந்து எடுத்துவச்ச ஆப்பிள் மாதிரி ஃப்ரெஸ்ஸாவா இருந்திடப்போறேன். " என வெடுக்கெனப் பேச, அவனும் வெடுக்கென எழுந்து நின்றான்.
"I need respect. என்னோட ஸ்டாஃப் எம்முன்னாடி உக்காந்து அகராதியா இப்படிப் பேசுறது எனக்குப் பிடிக்காது. " என நிதானமாகப் பேசினான்.
' நான் உன்னோட ஸ்டாஃப் இல்ல டா. ' எனச் சொல்லத்துடித்த நாவைக் கட்டுப்படுத்தி ஜோஹிதாவை மனதீதிற்குள் அர்ச்சனை செய்துகொண்டிருந்தாள் வாசு.
ஏனெனில் அந்தக் கான்ட்ராக்ட்டை ஏற்று வேலைக்கு வருவதாக அவள் அவனுக்கு மெயில் அனுப்பியிருந்தாள். ஜோஹிதாவின் பேச்சைக் கேட்டு. அப்படி அவள் அனுப்பிய மெயிலே அந்தக் கான்ட்ராக்ட் போலி அல்ல உண்மை என்று ஏற்றுக் கொண்டதற்கு சமம் தானே. அப்படியெனில் கான்ட்ராக்ட் உண்மை. வேலை பார்த்து தான் ஆகவேண்டும். இல்லையேல் காசைக் கொடுக்க வேண்டும்.
‘ஒன் மில்லியன் டாலர் என்ன மரத்துலயா காச்சி கிடக்குது. பறிச்சிட்டு வந்து குடுக்க.’ எனக் கருவியவளின் மனசாட்சி, ‘அப்ப வேல தா பாக்கணும்.’ என்றது.
"எந்த ஒரு வேலையா இருந்தாலும் எட்டு மணி நேரத்துக்கு மேல வேலை பாக்குறது சட்டப்படி தப்பு. நீங்க என்ன காலைல ஆறு மணில இருந்து நைட் பத்து மணி வர. அதாவது பதினாலு மணி நேரம் வேலை பாக்க சொல்றது எந்த விதத்துல நியாயம்னு நினைக்கிறீங்க. நான் ஒரு மனுஷி. மிஷின் இல்ல. "
"எஸ்... மனுஷி தா. ரொம்பவும் அழகான மனுஷி. கண்ணுக்குக் குளிர்ச்சியான பொண்ணுங்கூட. நைஸ் கேர்ள். " என்றவனின் பார்வை ரசனையுடன் அவளை வருட, அவள் முறைத்தாள்.
" சன்டே கூட லீவ் இல்லாம என்னால எப்படி வேலை பாக்க முடியும்."
"முடியாதுன்னா நான் உனக்கு அடுத்த ஆப்ஷன் தந்திருக்கேனே. அத தந்திட்டு போ." என்க ரோசமாக எழுந்தாள் வாசு.
" உங்க பணத்த நான் ரெடி பண்ணி தந்துடுறேன். " எனச் சொல்லி நடக்க,
"எப்படி அந்த டஜ்ஜன்ன வித்தா. அப்படி வித்தாலும் அவ்ளோ காசு வருமா என்ன?. " எனக் கேட்க, அவனைத் திரும்பி முறைத்தாள் அவள்.
"ம்… அது உ விருப்பம். எனக்கு அது தேவையில்ல. எனக்குத் தேவையானது என்னோட மனி. அதுவும் ஒரே வாரத்துக்குள்ள. "
"உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?. ஏன் பணம் பணம்னு அழையுறீங்க. உங்ககிட்ட தான் அது நிறைய இருக்கே. அப்றமும் ஏன் அடுத்தவங்ககிட்ட இருந்து அத பறிக்கிறீங்க. "
"சரி பணம் வேண்டாம். வேலை பாத்து கழிச்சிட்டு போ. எனக்குள்ளயும் ஈரம் இருக்குமா. " என்க, அதற்கும் சரி என்காமல் மனம் முரண்டு பிடித்தது.
இவெங்கிட்ட வேலை பாக்குறதுக்கு கார்த்திப்பா கிட்ட சொன்னா எதாவது வழி கிடைக்கும், என நினைத்தவள் அவனின் அறையை விட்டு வெளியேறிக் கார்த்திக்கிற்கு ஃபோன் போட, அது எடுக்கப்பட வில்லை. அடுத்து ஜோஹிதாவிற்கு முயற்சிக்க, அதுவும் அப்படித்தான் இருந்தது.
எனவே முருகுவிற்கு முயன்றாள். "ஹலோ... மாம்ஸ்… ஏன் கார்த்திப்பா ஃபோனயே எடுக்கல. நீங்க எங்க இருக்கீங்க?"
"நான் நம்ம ரெஸ்டாரன்ட் வாசல்ல தாம்மா நிக்கிறேன். நம்ம ரெஸ்டாரன்ட் கூட்டமா இருக்கு. போலீஸ்லாம் வந்திருக்கு. ஏன்னு தான் தெரியல. தெரிஞ்சிட்டு உனக்குக் கால் பண்றேன். " எனச் சொல்லி வைத்துவிட வாசு குழப்பமாக நின்றாள்.
"ஒரு மாஃபியா கும்பல் உன்னோட ரெஸ்டாரன்ட் வாசல்ல சண்ட போட்டுக்கிட்டாங்கலாம். ரொம்ப பெரிய ப்ரச்சனலாம் இல்ல. நாலஞ்சு டேபில், அப்றம் சில கண்ணாடி டோர்ஸ் உடைச்சதா நியூஸ் வந்தது. உன்னோட கார்த்திப்பா சேஃப் தான். சும்மா என்கொரி பண்ண ஸ்டேஷன்க்குக் கூட்டீட்டு போயிருக்காங்க. மத்தபடி ஒன்னுமில்ல. அடுத்து உள்ள புகுந்து சண்ட போடலாம். ஏன் துப்பாக்கி சண்ட கூட நடக்கலாம். அது உங்க ரெஸ்டாரன்ட் ஸ்டாஃப் மேல கூடப் படலாம். உயிர் கூடப் போலாம். " என கூலாகப் பேசியபடி அவளின் அருகில் வர, வாசுவிற்கு பயம் வந்தது.
இதுவரை தான் பார்த்த ருத்ரா வேறு இப்போது தன் கண்முன்னே நிற்கும் ருத்ரா வேறு. பழைய ருத்ரா தன்னைக் காயப்படுத்த மாட்டான். தன்னைச் சுற்றியிருக்கும் யாரையும் காயப்படுத்த மாட்டேன்.
ஆனால் இந்த ருத்ரா. மனசாட்சியே இல்லாத பிஸ்னஸ் மேன். இவனிடமிருந்து எப்படி தானும் தன் குடும்பமும் தப்பிக்க போகிறோமோ என்ற பயம் தான் அது.
“இதுக்கப்றமும் யாராவது மில்லியன் டாலர் குடுத்து அந்த டஜ்ஜன வாங்குவாங்களா என்ன?’ என்றபோது வாசு அசைக்க கூட இல்லை.
"என்ன உறஞ்சி போய் நிக்கிற மாறி இருக்கு? ஷீ நான் ஒன்னும் கெட்டவென்லாம் கிடையாது. நீ எங்கிட்ட நடந்துக்கிறத பொருத்து உன்னோட க்ரெடிட் ஸ்கோர் ஏறும். எங்கிட்ட வேலை பாக்குற காலம் குறையும். என்ன மிஸ் வாசவி கார்த்திகேயன். எப்ப ஜான் பண்றீங்க. " எனக் கேட்க. அவள் இப்பொழுதே எனத் தலையசைத்து அடித்துபிடித்து ஓடினாள். பேயைக் கண்டது போல்.
அவளின் அந்த அரண்ட பார்வை ருத்ராவை ரசிக்க வைத்து. ' பக்ஷி கூண்டுக்குள்ள வந்திடுச்சி. இனி அதோட சொந்தக்காரன் மட்டும் தான் பாக்கி. அதையும் பிடிச்சிட்டோம்னா. எல்லாம் சரியாகிடும். மிஸ்டர் கார்த்திகேயன். வெய்ட் அன்று ஷீ. இந்த ருத்ராவோட ஆட்டத்த. ' என நினைத்தவன் வாசுவியிடம் இரக்கம் காட்டவில்லை.
அவனின் காலைப் பொழுது அவளின் முகத்தில் தான். அவள் தான் அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்து, குளிக்கச் சுடுநீர் கலந்து வைத்து, அவன் தூக்கி எறியும் உடைகளை லாண்டரிக்குப் போட்டு, மெத்தை உரை திரை சீலையென அனைத்தையும் தினமும் மாற்றி, காலை மாலை இரவு அவன் தரும் மெனுக்களை சரியான நேரத்தில் அவனிடம் ஒப்படைக்க வேண்டும். அது போகச் சில நேரம் அவன் வெளியே செல்லும்போது அவனுக்கு உதவியாக அவனின் பொருட்களை எடுத்துத் தர வேண்டும். கிட்டத்தட்ட அல்லகை மாதிரி. அவளுக்கு உதவியாக வேறு யாரும் இருக்க கூடாது. அதைப் பார்த்துக் கொள்வது நான்ஸியின் பொறுப்பு.
இதற்கு முன்னெல்லாம் அவள் நின்று வேடிக்கை பார்ப்பாள் பிறர் வேலை செய்வர். இப்போது அவள் செய்கிறாள், நான்ஸியின் மேற்பார்வையில்.
சும்மாவே அந்த நான்ஸிக்கு வாசுவை பிடிக்காது. எப்பொழுது எப்பொழுது என்று காத்துக் கொண்டு இருப்பாள். இப்பொழுது சொல்லவே தேவையில்லை. வாசுவை மாட்டி விட்டு, ருத்ரா அவளைத் தன் கண்முன்னே திட்டுவதை ரசிக்கிறாள்.
"என்னதிது. என்னோட ரூம் எப்பையும் சுத்தமா இருக்கணும்னு சொல்லிருக்கேனா இல்லயா. கட்டிலுக்கு சைடுல பாரு. போய் அத க்ளீன் பண்ணு. இப்பவே. " என ஒரு சிறு காகிதம் கிடந்தால் கூடக் கத்துவான்.
"ம்ச்... என்ன காஃபி இது. சுடு தண்ணி மாதிரி கொதிக்கிது. சூடு கம்மியானதும் எடுத்துட்டு வா. "
சரியான பதத்தில் காஃபியை எடுத்துச் சென்றால். " நான் உங்கிட்ட காஃபி கேட்கல... டீ எடுத்துட்டு வா. ப்ளாக் டீ. "
"பட் ஸார் நீங்க கஃபி தான் கேட்டிங்க. இப்ப அத மறந்துட்டு மாத்தி சொல்லுறீங்க. " என்றால்,
"அப்ப எனக்கு மறதி நோய் இருக்கேன்னு சொல்ல வர்ற.”
“இல்ல…” என்றதும்,
“போய்ப் போய் நான் கேட்டத எடுத்துட்டு வா. " எனக் குடிக்கும் காபியில் தொடங்கி அவள் கொண்டு வரும் உணவையும் குறை சொல்வான்.
"சூடே இல்ல. "
"டேஸ்டே இல்ல. "
" என்ன கொல்ல பாக்குறியா? எனக்குக் காரம் ஆகாதுன்னு தெரியும் தான. எடுத்துட்டு போ இத. "
" என்ன கலரு இது. எனக்கு எல்லோ பிடிக்காது. ரூம்மோட தீம்ம மாத்து. இப்பவே. " என அவள் செய்யும் எல்லா வேலையிலும் குறை மட்டுமே சொன்னான்.
என்றாவது ஒரு நாள் என்றால் கூடச் சரி எனலாம். தினமும் என்றால். அலுத்து விட்டது வாசுவிற்கு. அதிலும் அந்த roasted lizard முன்னாடி என்பது தான் அவளுக்கு அசிங்கமாக இருந்தது.
"அது கூடப் பரவாயில்லைங்க. இவெ சும்மிங் பூஃல்ல அரையும் கொறையுமா கைல க்ளாஸ்ஸோட மிதப்பானாம். அந்த க்ளாஸ்ஸ நான் போய் ஃபில் பண்ணணும்மாம். சரக்கு ஊத்தி குடுக்க சொல்றான். என்ன பாத்தா அவனுக்கு எப்படி தெரியுது. பப்புல வேலை பாக்குற பொண்ணு மாதிரியா. இதுல அப்பப்ப கார்த்திப்பாவ பத்தி பேசிக் கடுப்பேத்துறான். என்னோட பொறுமைக்கும் ஒரு லிமிட் இருக்கு. அத எப்பத் தாண்டப்போறானோ தெரியல. அப்றம் நடக்கப் போற டேமேஜ்க்கு நான் பொறுப்பில்ல. " வாசுவின் மைண்ட் வாய்ஸ்.
ருத்ரா கார்த்திகேயனிடம் போட்ட சவாலை நிறைவேற்ற வாசு உபயோகிக்க நினைக்கிறான். நடக்குமா?? பார்க்கலாம்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..