முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 63

 

அத்தியாயம்: 63


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


குழந்தைகள் தன்னை தீண்டுவது உடலுக்கு இன்பம். மேலும் அவர்கள் சொல் கேட்பது காதுக்கு இன்பம்.


இந்தக் குரல் உண்மை என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறான் டேனியல்.


தன் முன்னே கொட்டிக்கிடக்கும் பனிகளை அள்ளி வீசி விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்களைப் பார்க்கையில் மழலையின் சிரிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்ல. அதற்கு நம் டேனியல் மட்டும் என்ன விதி விலக்கா?. ஆசையுடன் அந்தச் சிறுவர்களின் விளையாட்டை விரும்பி ரசித்துப் பார்த்துக் கொண்டு தானும் அவர்களுடன் விளையாடிக் குதுகலித்துக் கொண்ருந்தான். ஏனெனின் தன்யாவை பார்க்கப் போகிறான். ஸாரி தன்யா இவனைப் பார்க்க வரப் போகிறாள்.


அவனுக்குக் குழந்தைகள் மீது பற்று உண்டு. ஆனால் அது அவன் குழந்தையாக இருக்க கூடாது. ஏனெனில் அவனின் தாய் திருமணம் செய்து கொண்ட ஆண்களால் அவனும் அவனின் தாய்க்கு பிறந்த மற்ற குழந்தைகளும் பட்ட துன்பங்கள் பல.


டேனியலின் அன்னை சந்தேக பேர்வழி. ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலே பல கேள்விகளைக் கேட்டு வாக்குவாதம் செய்வார். எதிலும் தன் குரலை மேலோங்கி இருக்க வேண்டும் என்ற அதிகர மனப்பான்மை அவருக்கு உண்டு. அது தான் யாருக்கும் நான் அடங்கி நடக்க மாட்டேன் என்ற எண்ணத்தை உருவாக்கி இணை சேரும் அனைவரையும் துரத்தி விடுக்கிறது.


அவரைப் போன்ற ஒரு மனைவி கிடைக்கப் பெற்றால் வாழ்க்கை நரகம். எங்கே திருமணத்திற்குப் பிறகு தன்யா அவ்வாறு மாறி விட்டுவாளோ என்ற பயமே டேனியல் திருமணம் என்ற வார்த்தையை வெறுக்க காரணம். தன்யா மீது காதல் இருந்தாலும்… வேண்டாமே. அந்தத் திருமணத்தைச் செய்து கொண்டு தான் காதலிக்க வேண்டுமா. காதலின் முடிவுத் திருமணம் தான் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறான்.‌


ஒரு வேளை திருமணம் நடந்தால் கட்டாயமாக டைவர்ஸ் பண்ணாமல் வாழவே முடியாது. பிரிந்து சென்று விட்டால் தன் குழந்தை… தன்னை போன்ற துரதிஷ்டசாலியாகத் தன் பிள்ளைகள் வளரக் கூடாது. பிறந்தால் தானே வளரும்‌. பிறக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான்.


எதற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு கூட்டுக்குள், கனவுகளைத் தொலைத்து கொண்டு இருவரும் வாழ வேண்டும். தனித்தே நிம்மதியாக வாழலாம் அது தான் அவனின் கொள்கை. அதை உடைத்து அவனைத் தன் கழுத்தி தாலி கட்ட வைத்து அவனின் குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பதற்காகவே தன்யா வந்துள்ளாள்.


இன்று காலைத் தான் அவனுக்கு ஃபோன் வந்தது. " நான் உங்கிட்ட பேசணும். எலிசபெத் லேக்குக்கு‌ கிட்ட இருக்குற பார்க்குக்கு வா. " என்றுவிட்டு அவன்‌ பேச இடம் தராது வைத்துவிட்டாள்‌ தன்யா.


சில வாரங்களாக அவளின் குரல் கேட்காமல் இருந்தவனுக்கு அவளின் குரல் கேட்டதும் மனம் ஆனந்த கூத்தாடியது.


"டேன் நீ‌ ஏன் மேரேஜ்ஜ பாத்து பயப்படுறான்னு எனக்குப் புரியுது. உன்னோட ஃபேரன்ஸ் மாதிரியே தான் நாமலும் இருந்திடவோம்னு நீ நினைக்கிறது தப்பில்ல. பட் அவங்க லைஃப்ல நடந்ததே நமக்கும் நடக்கணும்னு எந்த உத்திரவாதமும் கிடையாது. நம்ம லைஃப் புதுசா இருக்கும். அத நாம பத்திரமா பாதுகாப்போம். "


"இல்ல தயா. நம்மளோட லைஃப் ரொம்ப நல்லா இருக்கும். எப்பன்னா மேரேஜ்ங்கிற ஒரு ஸ்க்ரீன் நமக்கு நடுவுல வராம இருக்கும்போது மட்டும் தா.


கல்யாணம்னு ஒன்னு நடக்குறதுக்கு முன்னாடி நமக்குன்னு சில தனிப்பட்ட பழக்கங்கள் சுதந்திரங்கள் இருக்கும். அது எல்லாத்தையும் after marriage நாம விட்டுக் குடுக்கணும். நாம ஒருத்தருக்கு ஒருத்தர் சார்ந்து இருக்குற மாதிரி ஆகிடும்‌.


முக்கியமா Responsibility இருக்கணும். ஒருத்தருக்கு ஒரு ஃபேமிலில ரன் பண்ற அளவுக்குச் சம்பாதியம் இருக்கணும். ஒருத்தர் வீட்டு நிர்வாகத்த ஏத்து நடத்தணும். அந்த ஒருத்தர் யாருங்கிறதுல தான் நமக்குள்ள சண்டையே ஆரம்பிக்கும்.


நிறைய விட்டுக் குடுக்க வேண்டி இருக்கும். நீ இன்டியன் கல்சர். உனக்கு நிறைய ரிலேஷன்ஸ் உண்டு. நமக்குக் கல்யாணம் ஆகிட்டா அந்த முகம் தெரியாத உன்னோட உறவுக்கு நான் மரியாத குடுக்கணும். கிஃப்ட் வாங்கி குடுக்க வேண்டி வரும். அவங்க கூடப் பேசணும் சிரிக்கணும். எக்கச்சக்கமான பல கேள்வி கேப்பாங்க. உன்னோட ஹஸ்பென்ட்டா நான் எல்லாத்துக்கும் பதில் சொல்லணும். அவங்க வீட்டு விசேஷங்களுக்கு வந்து நிக்கணும். போதும் இது வேண்டாம்னு நான் சொல்லும்போது நமக்குள்ள சண்ட வரத் தொடங்கும்.


நிறைய கேள்வி வரும். பதில் சொல்லமுடியாத அந்தக் கேள்விகளால் நமக்குள்ள குழப்பம், அவநம்பிக்க, வெறுப்பு, எரிச்சல், கோபம்னு எல்லாமே வந்து நமக்கு நடுவுல நிக்கும்.


இதே இது லிவ்விங் டுகெதர் லைஃப்ல அப்படி கிடையாது. நான் நானா இருப்பேன். நீ நீயா இருப்பா. ரெண்டு பேருக்குள்ள ‌மட்டும் சின்னதா ஒரு லவ் இருக்கும். அது போதுமே. எதுக்கு தேவையில்லாம கல்யாணம் பண்ணிக்கணும்." எனப் புவனாவின் ரிஷப்ஷனில் வைத்து மிகப் பெரிய விளக்கம் கொடுத்தான் டேனியல்.


அவளைச் சமாதானம் செய்து தன்‌ பக்கம் இழுக்க நினைத்தானே தவிர, அவளின் பக்கம் யோசிக்க கூடத் தயாராக இல்லை அவன். 


இப்பொழுது இவனுக்குத் தேவ்வின் வழி தான் சரி எனப் பட்டது தன்யாவிற்கு.


இந்த முறை எப்படியாவது அவளைக் கன்வின்ஸ் செய்து தன்னுடனேயே தங்க வைத்து விட‌ வேண்டும் என்று டேனியல் அவளிடம்‌ பேச வேண்டியதை மனப்பாடம் செய்து வைத்தான். அங்கு ஊதா நீற சேலையில் ஒயிலாய் நடந்து வந்துகொண்டிருந்தாள் தன்யா.


சேலை, அதை விடக் கவர்ச்சியான உடை வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று தோன்றியது டேனியலுக்கு. முகம் மலர," தயா. " என அவளை அணைக்க வர, அவள் கரம் நீட்டித் தடுத்தாள்.


" ம்… போதும். எங்க கல்சர்ல பாத்ததும் கட்டிப்பிடிக்கிற பழக்கம் கிடையாது. ரொம்ப தெரிஞ்சவங்கன்னா கரம் கூப்பி வரவேற்போம். யாருன்னு தெரியாத ஆளா இருந்தா சின்ன சிரிப்பு மட்டும் தான். உனக்கு அந்த ரெண்டையும் நான் தர விரும்பல." என்றவள் அங்கிருந்த மேஜையில் கோபமாய் அமர, அவளை உரசிக் கொண்டு வந்து அமர்ந்தான் டேனியல்.


"பரவாயில்லை. எனக்கு இது பிடிச்சிருக்கு. உன்னோட சிரிப்ப விட, கோபமான பார்வை போதையா இருக்கு.‌" என்க, அவள் எழுந்து எதிரில் இருந்த நாற்காலியில் அமர, அவனும் எழுந்தான்.


"நான் உங்கிட்ட பேசத் தான் வந்திருக்கேன்‌. அதுவும் முகம் பாத்து. " என்க டேனியல் ஏமாற்றமாக எதிரில் அமர்ந்தாலும் கண்கள் அவளை மேய்ந்து கொண்டிருந்தன.


அவனின் ரசனை பார்வை தன்யாவை எப்பொழுதும் கிறங்க வைக்கும். இப்போது அதற்கு இடம் தராது அவனைத் தீர்க்கமாகப் பார்த்து வைத்தாள். தன்னிடம் அவள்‌ மயங்குகிறாள் என்பது டேனியலின் கர்வம். அது அவளின் மனத்தை மாற்ற வைத்துவிட்டும் என்பது அவனின் நம்பிக்கை.


"நான் உங்கிட்ட என்ன பேச வந்தேன்னா. " எனத் தேவ்வின் திட்டத்தைச் செயல்படுத்தலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் ஆரம்பிக்க,


"நீ என்ன பேசப் போறன்ன எனக்குத் தெரியும், தயா. எனக்கு உன்னைப் பிடிக்கும். ரொம்ப அதிகமாவே லவ் பண்றேன். பட் கல்யாணம். "


"நான் ஒன்னும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிப் பிச்ச எடுக்க உங்கிட்ட வரல. இது என்னோட மேரேஜ் இன்விடேஷன். அத குடுக்கத்தா வந்தேன். " எனப் பத்திரிக்கையை நீட்ட, டேனியலின் முகமும் விழுந்துவிட்டது.


தன்யாவின் காதலை அவன் நன்கு அறிவான். அது உண்மையானது. தனக்காக அவள் எதையும் விட்டுக் கொடுப்பாள் என்று நினைத்தவன் தன்னையே விட்டு விடுவாள் என்று நினைத்துப் பார்க்கவில்லை.


அவனின் சோக முகம் தன்யாவைப் பரிதாப்பட வைத்தாலும், அவளுக்கு ஒரு முடிவு வேண்டும். ஒன்று அவனின் பயத்தைக் காரணம் காட்டி இருவரும் பிரிந்து செல்வது. இல்லையேல் அந்தப் பயத்தை வென்று திருமணம் செய்வது. இரண்டில் ஒன்று வேண்டும்.


" வாழ்த்துக்கள். " என்றான் உயிரற்ற குரலில்.


" நன்றி. ஆனா எனக்கு உன்னோட வாழ்த்து தேவையில்ல. நீ கல்யாணத்துக்கு வா… வராம போ. ஆனா நீ தெரிஞ்சிக்க வேண்டிய விசயம் ஒன்னு இருக்கு. அத சொல்லத்தா வந்தேன். " என்றவள் தேவ் தந்த அந்தக் கவரை அவனின் முன் நீட்ட, அதைக் கண்டவனுக்கு உயிர் வலியே வந்தது. அவன் இதை எதிர்பார்க்க வில்லை.


"எப்படி… எப்படி தன்யா. நாம சேஃப்டியா தான இருந்தோம். அப்பறம் எப்படி பேபி ஃபாம் ஆகிருக்கும். " என அதிர்ச்சியாகக் கேட்க,


"என்ன கேட்டா?. எனக்கு எப்படித் தெரியும். ஆனா உங்குழந்த எனக்குள்ள இருக்கு. சிக்ஸ்டி த்ரீ டேஸ் ஆகுது. " பொய் தான். ஆனால் அதை உண்மைபோல் உறுதியுடன் சொன்னாள். இதற்காகவாது திருமணத்திற்குச் சம்மதிப்பான் என்று எதிர்பார்த்து. ஆனால்,


"கலச்சிடலாமே." என்க, இப்போது அவள் அதிர்ச்சி அடைந்தாள்.


" 100 நாளுக்குள்ள இருந்தா abortion பண்றது ஈசி தான. ப்ராப்ளம் இல்ல. உனக்கு வேற கல்யாணம்னு சொல்ற. அதுனால நீ…. நீ… " என இழுக்க அவனின் கன்னத்தில் ஓங்கி அடைந்தாள் தன்யா கோபமாக.


"ச்சீ… எப்படி டா உனக்கு மனசு வருது. கருல கலச்சிட்டு அடுத்தவன கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்ல. அந்த அளவுக்குக் கீழ்த்தரமான பிறவியா டா நீ. உன்ன போய்.‌ ச்ச... நா கலைக்க மாட்டேன். நான் ஏன் கலைக்கணும்.


நான் உன்னை உண்மையாத்தா லவ் பண்ணேன். என்னோட வயித்துல வளர்றது எங்காதலுக்குக் கிடைச்ச பரிசு. உன்னை மாதிரிப் பொய் அன்பு காட்ட எனக்குத் தெரியாது. "


"பொய் அன்பெல்லாம் இல்ல தயா. உண்மையாத்தா லவ் பண்றேன். ஆனா செட் ஆகலன்னு வரும்போது. "


" பிடிச்சவங்களா இருந்தா கூடச் செய்ய விருப்பமில்லன்னாலும் Sacrificeலாம் பண்ண மாட்டிங்க. அப்றம் எதுக்கு அத லவ்வுன்னு சொல்ற. நீ சரியான சுயநலவாதி. நான் உங்கிட்ட நிறைய எதிர்பாத்துட்டேன் போல. அதா என்னால அந்த ஏமாற்றத்த தாங்கிக்க முடியல. " எனச் சொல்லி அழ,


"தயா அழாத ப்ளீஸ். இப்ப என்ன பண்ண சொல்ற‌. " என அவளின் கண்ணீர் பொறுக்காது புரியாது கேட்க,


"சந்தோஷப்பட சொல்றேன். ஏன்னா உன்னோட குழந்தைக்கு இன்ஷியல் குடுக்குற வேல மிச்சம் உனக்கு. அதுக்கு வேற ஆள் கிடைச்சிட்டான். அதுக்காகச் சந்தோஷப்பட சொல்றேன். "


"தயா லூசு மாதிரிப் பேசாத. முதல்ல போய் இந்தக் கல்யாணத்த நிறுத்து. இல்லன்னா குழந்தைய கலச்சிட்டு ஃபரெஷ்ஷா லைஃப்ப ஸ்டாட் பண்ணு. step father கிட்டலாம் குழந்த வளர்றது கஷ்டம் தன்யா. அடி உதன்னு நான் பட்ட அந்த நில நம்ம குழந்தைக்கி வேண்டாம். " என்றதும் அதிர்ந்து போனது தன்யா தான்.


"அப்பக் கூட உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பில்லைல. இனி நீயே வந்து கேட்டாலும் நாங உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.


நீ கவலையே படாத என்னோட குழந்தைக்கி என்னோட ஹஸ்பென்ட் நல்ல அப்பாவா இருப்பான். நானும் எதையும் மறைக்காம அவெங்கிட்ட எல்லாத்தையும் சொல்லித்தா கல்யாணம் பண்ணிக்க போறேன். உன்னை மாதிரி அத நான் வளக்க மாட்டேன். நீ பட்ட எந்தக் கஷ்டமும் அதுக்கு வராது. வர விடமாட்டேன். போதுமா.


இந்தா இது தான் உன்னோட பேபி. நல்லா பாத்துக்க. உன்னோட ரத்தம். " என்றவள் கையில் இருந்த ரிப்போட்டுகளை அவனின் கையில் தினித்துவிட்டு திரும்பியும் பாராது அங்கிருந்து சென்றாள்.


கண்ணீருடன் வந்த அவளைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றான் தேவ். 


" காம் டவுன் தன்யா. " என அவளுக்கு ஆறுதல் கூற, தன்யா புலம்பித் தீர்த்தாள்.


"நீ சொன்னது சரிதா தேவ் அவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ற நினைப்பே இல்ல. நாங்கூட பேபின்னு சொன்னா எமோஸ்னல் ஆகி எதாவது பண்ணுவான்னு நினைச்சேன். ஆனா அவெ வெறும் மண்ணு. எதுக்கும் உதவாத பீச் மண்ணு‌‌. " என அழ,


"கண்ணீர வேஸ்ட் பண்ணாத. அதுவும் அவனுக்காக. "


"ம்… ஆமா கல்யாணம்னு சொல்லிருக்கோம். நாம டிராமா போடுறாது அவனுக்குத் தெரிஞ்சிடுச்சின்னா?. ஏன்னா நான் இதுவர அவெங்கிட்ட பொய் சொன்னது இல்லை. கண்டுபிடிச்சிட்டான்னா?" என்றாள் சந்தேகமாக.


"யாரு அவனா?. ஹிம் அவனுக்கு அந்த அளவுக்கு அறிவு கிடையாது. ***"


"அவன திட்டாத தேவ். அவெ கொஞ்சம் சுயநலவாதி தான். ஆனா இன்னசென்ட். அவனோட அனுபவம் அப்படி. அவனோட ஸ்டெப் ஃபேரன்ஸ் கிட்ட சிகரெட் சூடு, பெட்டால அடி, கத்தி கீறல் வாங்கின தடம் இப்பையும் அவனோட உடம்புல இருக்கு. சில நேரம் நைட் தூக்கத்துல உலறுவான். அடிக்காதீங்க, வலிக்கிதுன்னு. பாவம் அவெ. நான் அவனக் காயப்படுத்த நினைச்சது இல்ல. பட் இப்ப நானே அவன காயப்படுத்திட்டேன். " என்றவள் டேனியலுக்காக வருந்தினாள்.


" எல்லாம் சரியாகிடும். நீ மட்டும் நான் சொல்றத கேட்டா He will marry you. அதுக்கு நீ நான் அனுப்புன வீடியோஸ்ல ஒன்னு ஒன்னா அவனுக்கு அனுப்பு. அதுவும் ஒன் ஹவருக்கு ஒருக்க. அவெ இன்னும் எமோஷ்னல்லா வீக் ஆவான். " என்றவன் இல்லாத குழந்தையின் கரு வளர்ச்சியை வீடியோ எடுத்து அவனுக்கு அனுப்ப சொன்னான்.


"எத்தன நாளைக்கி அதைச் செய்ய முடியும். வயிறு காட்டிக்குடுத்துடாது,‌ நான் ப்ரெக்னன்ட் இல்லன்னு. "


" அதுக்கும் எங்கிட்ட ஒரு வழி இருக்கு. " என அவளின் காதில் எதுவோ சொல்ல, தன்யாவிற்கு டேனியலை நினைத்துக் கவலையாக இருந்தது.


ரெண்டு பேரும் டேனியல என்ன பண்ண போறாங்களோ!!!


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...