முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 64

அத்தியாயம்: 64



" வாசு எங்க இருக்கம்மா?. எப்ப வருவ.? ஹலோ... வாசு... வாசு... " ஜோஹிதா ஃபோனில் கத்திக் கொண்டே இருக்க, பதிலுக்குத் தான் அந்தப் பக்கம் இருந்து வாய்ஸ் வரவில்லை.


பயந்து போனவள், கார்த்திக்கிற்கு ஃபோன் செய்தாள். " கார்த்திக் வாசு உனக்கு ஃபோன் பண்ணாளா? இன்னும் வீடு வந்து சேரல. இந்த ஒரு வாரமாவே அவ லேட்டாத்தா வர்றா. ஏன்னு நீ அவக்கிட்ட கேட்டியா கார்த்திக்." எனக் கேட்க,


அவனுக்கு அப்போது தான் வீட்டு நினைவே வந்தது. இத்தனை நாளாகத் தன்னுணர்விலேயே உழன்று கிடந்திருக்கிறோம் என்பது உரைக்க வீடு விரைந்தான். ரெஸ்ட்டாரெண்ட்டில் இருக்கும் பிரச்சினையைப் பார்க்கவே சரியாக இருந்தது அவனுக்கு‌.


"என்னாச்சி ஜோஹிதா? வாசு எங்க.? "


"வேலைக்கி போனவள இன்னும் காணும். மணி பத்தாகுது. ஃபோன் பண்ணா அட்டென் பண்றா. ஆனா பேசத்தா மாட்டேங்கிறா. நீ ஃபோன் பண்ணிப்பாறேன் கார்த்திக்.‌" என்க அவனின் காலுக்கும் அதே ரெஸ்பான்ஸ் தான்.


அவளின் பின்னால் இருப்பவர்களின் குரல் எல்லாம் தெளிவாகக் கேட்கிறது. ஆனால் வாசு தான் பேச வில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்?  மகள் கோபமாக இருக்கிறாள் என்பது தான் அர்த்தம்.


இருவரையும் பத்து நிமிடங்கள் காத்திருக்க வைத்துவிட்டு, பின்னர் தான் வந்தாள் வாசு.


"வாசு ஏம்மா லேட்? " எனப் பரிவுடன் கேட்ட அன்னையை முறைத்து பார்த்தபடி உள்ளே செல்ல,


"வாசு... என்னதிது அம்மா கேக்குறா பதில் சொல்லாம போற?" எனக் கார்த்திக் கண்டிக்கும் குரலில் காட்டமாகப் பேசினான்.


"உங்க ரெண்டு பேருக்கும் இப்பதா என்னோட நினப்பு வந்ததா? போங்க. போய் உங்க வேலை மட்டும் பாருங்க. நான் என்ன ஆனா உங்களுக்கு என்ன. ஹிம்… " எனக் கோபமாக கைகளைக் கட்டிக் கொண்டு சோஃபாவில் பொத்தென அமர, பெற்றவர்களின் கண்ணுக்கு மகள் இன்னும் சிறுமியாகவே இருப்பதாகவே தோன்றியது.


"இப்ப என்ன கோபம் என்னோட வாசும்மாக்கு? " எனக் கார்த்திக் அவளின் அருகில் அமர்ந்து தோளில் கை போட, அதைக் கடித்து வைத்தாள் மகள்.


"ஸ்ஸா... பசிக்கிதா வாசு. மனுசெ கறிய பச்சையா சாப்பிடுற அளவுக்குப் பசியா? " என்றவன் ஜோஹிதா திரும்பிப் பார்க்க அங்கு அவள் தட்டில் உணவுடன் வந்தாள். மூவருக்கும்.


"போப்பா… நான் உங்கிட்ட பேசமாட்டேன். உனக்கு என்னை விட அந்த முருகு மாமா தான் பெருசு. அவரு கூடவே இருங்க. வராதீங்க." என முகம் திருப்ப,


"எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல வாசு. ஆனா எம்பொண்டாட்டிக்கி இருக்குமே‌. உங்கத்தையப் பத்தி உனக்குத் தெரியாதாம்மா. பகல் நேரத்துலயே மணி ஒரு தடவன்னு அலாரம் வச்சி கால் பண்ணி எங்க இருக்கிங்கன்னு கேப்பா. இதுல நாள் முழுக்க உங்கப்பெங்கூட இருந்தா அவ்ளோ தான். அதுமட்டுமில்ல நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான். ஒன்னா ஒட்டிட்டு திரிய புருஷெ புருஷெ கிடையாது. " என்றபடி முருகு வந்து இருவரும் முன்னால் அமர்ந்தார்,  ஒரு தட்டை எடுத்துக் கொண்டு.


வாசு, "புருஷெ புருஷெனா!. அத புருஷெ பொண்டாட்டின்னு தான சொல்லுவாங்க. நீங்கத் தப்பு தப்பா பேசுறீங்க.‌"  


"நான் சரியாத்தா பேசுறேன். இப்ப ஒரே ஜென்டர் குள்ள அதாவது ஆணும் ஆணும், பொண்ணும் பொண்ணும் கல்யாணம் பணணிக்கலாம்ல. அதத்தா சொன்னேன். என்ன மச்சான் நாம ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான. " எனக் கார்த்திக்கிடமே கேட்க, தலையில் அடித்துக் கொண்டான் அவன்.


"இப்பத் தலைல அடிக்கடிக்கிற அளவுக்கு என்ன சொல்லிடேன்?. நாட்டுல நடக்குறதத்தான சொன்னேன். "


"டேய் சும்மா இருடா."


" நான் உலகத்தோட எதார்த்தத்த பேசுறேன். தப்பா?"


"தப்பில்ல மாம்ஸ. தப்பே இல்ல. நீங்கப் பேசுங்க கேக்க உங்க மச்சான் காத திறந்து வச்சிட்டு இருப்பாரு.‌ பேசுங்க பேசுங்க. " எனக் கோபமாக எழ,


" வாசு, ருத்ரா உன்னை எதுவும் சொன்னானா?. மறுபடியும் சண்ட போட்டிங்களா?." என் ஜோஹிதா கேட்க,‌ஆண்கள் இருவரும் கேள்வியாய் புருவம் சுருக்கினர்.


"எனக்கு வேற வேலையே கிடையாது பாருங்க. நீங்கப் புதுசா தத்தெடுத்த தம்பி கூடச் சண்ட போட்டுட்டே திரிய. ஹிம்… நான் சண்டல்லாம் போடல்லம்மா. போடவே இல்ல. அவெ தான்… அவன் மட்டும் தான் பேசுறான். நான்… எதுவும்… பேசல. நீங்கச் சொன்ன மாதிரி ஆமா சாமி மட்டும் தான் போட்டுட்டு இருக்கேன். ஓகே வா. " எனக் கோபமாகச் சொல்லிவிட்டு நடக்க, கார்த்திக் அவளின் கரம்பற்றி அமர வைத்தான்.


"என்ன நடக்குது இங்க?" என்றவனுக்கு ருத்ராவின் மிரட்டல்கள் ஏதும் தெரியாது.


" அத ஏன் எங்கிட்ட கேக்குறீங்க. ஜோஹிம்மாட்டா கேளுங்க. அவங்க குடுத்த ஐடியாவால தான் எனக்கு இந்த நிலைம. ஹிம்... " என முகம் திருப்ப,


"வாசு என்ன சொல்றா ஜோஹிதா. ருத்ராக்கும் வாசு லேட்ட வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?" என மனைவியின் முகம் பார்த்துக் கேட்க,


ருத்ராவின் மிரட்டலுக்கு வாசுவை பணிந்து சொல்லச் சொல்வது தெரிந்தால் கோபப்படுவானோ என நினைத்து ஜோஹிதா கலங்கிப் போனாள்.


"அத நான் சொல்றேன்.‌ உங்க வைஃப் என்னை அவெங்கிட்ட மாட்டி விட்டு வேடிக்க பாக்குறாங்க." என நடந்தவைகளைச் சொல்ல, கார்த்திக்கின் முகம் சிந்தனையில் இருப்பதை காட்டியது.


'உங்களை அசைக்கும் ஆயுதம் அவ தான். ' என்று ருத்ரா சொன்னதோடு மட்டுமல்லாது அதைச் செயல்படுத்த தொடங்கி விட்டான் என்று புரிந்தது கார்த்திக்கிற்கு.


சில பல நாட்களாகவே கார்த்திக்கிற்கு மன ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பல தொந்தரவுகளைத் தந்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால் வாசு வைத்து எதுவும் செய்யவில்லை. ஒரு வாரமாவே ஃபோனிலும் நேரிலும் சில விரும்பதகாதவர்களால் கார்த்திக்கின் உறுதியை உடைத்து தான் நினைத்ததை நிறைவேற்றும் உத்வேகத்தில் ருத்ரா இருந்தாலும் கார்த்திக்கை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை‌ என்பது தான் உண்மை.


" அடப்பாவி… மனுஷனா அவெ. உன்னை இவ்வளவு கொடும படுத்துறானா அந்த வெள்ள மூஞ்செலி. " என் முருகு கவலையுடன் கேட்டு வாசுவின் கால்களை அழுக்கி விட,


"ஆமா மாம்ஸ். நீங்கச் சொல்லுவிங்கள்ல இந்தியா வெள்ளக்காரெங்கிட்ட சிக்கி பயங்கர பாடு பட்டுச்சின்னு. இப்ப நானும் இந்த வெள்ளைக்காரெ மாதிரி  கண்ணுக்குத் தெரியுற இவெங்கிட்ட மாட்டீட்டு படுறேன். " என்றாள் கவலையாக.


'எதுக்கு எத முடிச்சி போடுறா பாருங்களே இவ. '


" வாசும்மா. வேற மாதிரி மிஸ் பிகேவ். அப்யூஸ் மாறி. " என ஜோஹிதா மகளை முகம் பார்த்துத் தாயாய் மனம் பரிதவித்துக் கேட்க,


"ச்ச... அப்படிலாம் இல்ல. பட், எனக்கு ஒரு பக்கம் சந்தோஷம இருக்கு. நான் தப்பிச்சிட்டேன்‌‌. That was great escape. நான் எப்படி அவன லவ் பண்னேன்னு எனக்கே தெரியல. அவெங்கூட நான் கமிட் ஆகிருந்தா நான் அந்தச் சீட்டர் கிட்ட மாட்டிச் சின்னா பின்னமாகிருப்பேன். " என்க மூவருக்குமே 'என்ன இப்படி சொல்றா இவ. ஒருவேள ருத்ராவோட கேரக்டர் சரியில்லையோ.? ' என்ற யோசனைகள் வர,


" என்னம்மா சொல்ற? உன்னோட எக்ஸ பாய் ஃப்ரெண்டுக்கு கெட்ட பழக்கம் நிறைய இருக்கா. மோசமான ஆளா என்ன. " முருகு.


" அப்படி நேரடியாகச் சொல்லிட முடியாது. பட் மறைமுகமா சொல்லலாம். "


"நீ சுத்தி வளைக்காம சொல்லும்மா. நான் போய் அந்த வெள்ள மூஞ்சலிய துப்பாக்கிய வச்சி வெட்டிக் குத்திட்டு ஜெயிலுக்கு போய் ஜாமின்ல வந்து தியாகி பட்டம் வாங்கிக்கிறேன். " என்றார் முருகு மீசையை முறுக்கிய படி. காலையிலிருந்து இரவுவரை அவள் படும் பாட்டை வில்லுப்பாட்டாக அவரிடம் பாட,


" டிரிங்க்ஸ் அடிக்கிறான் மாம்ஸ். அதுவும் க்ளாஸ் க்ளாஸ்ஸா இல்ல. பாட்டில் பாட்டிலா. நானும் இந்தச் சமூகத்துல பெரிய ஆளுதாங்கிறத காட்டிக்க கலர் கலர் பாட்டில காலி பண்றான். அவெ காலி க்ளாஸ்ஸ நீட்டுவானாம் நான் போய் அத ஃபீல் பண்ணணுமாம்.


ஃபோன்ல யார் பேசுனாலும் எதிர்க்க இருக்குறவெ காது கிழிஞ்சி போய்டுங்கிற அளவுக்குக் கத்துறான். அவனுக்குப் பீபீ இருக்கும்னு நினைக்கிறேன்‌. லிவர் அவெ குடிக்கிற குடிக்கி கண்டிப்பா இருக்காது. அவனோட முட்டக் கண்ண முழிச்சி இப்படியே நாலு வர்ஷம் பாத்தான்னா. அடுத்து பாக்குறதுக்கு கண்ணுன்னு ரெண்டு இருக்கவே செய்யாது.


ரத்தக் கொதிப்பு இருக்குன்னு நினைக்கிறேன். எப்ப பாத்தாலும் டென்ஷன்வே திரியுறான். பிஸ்னஸ்.. பிஸ்னஸ்... பிஸ்னஸ்... மீட்டிங்... மீட்டிங்.. மீட்டிங்... ஒரு நாளைக்கி அத்தன கான்ஃப்ரன்ஸ் கால் பேசுறான்." எனப் புலம்ப, முருகு கார்த்திக் காதில்.


"மச்சான் நல்ல வேள அந்தப் பையெ நம்ம வீட்டு மாப்பிள்ளையா ஆகல. ஒரு வேள ஆகிருந்தான் நம்ம பொண்ணு ஆஸ்பத்திரி ரூம்ல தான் குடும்பம் நடத்த வேண்டி இருக்கும். ச்ச. அந்த வெள்ள மைதா மாவுக்குள்ள இத்தன ஓட்டையா. ரெண்டு மாசம் கழிச்சி நிச்சயம் வச்சிக்கலாம்னு சொன்ன அந்தப் பெரிய மனுஷெங்கிட்ட வேண்டாம்னு சொல்லிடு. நமக்கு நம்ம பொண்ணு வாழ்க்க தான் முக்கியம்.‌ பிடிச்சிருக்குங்கிறதுக்காகச் சீக்காளிய கட்டி வைக்க முடியுமா?." என்க, கார்த்திக் பதில் சொல்லவில்லை.


"வாசு என்ன இருந்தாலும் நீ வேலய ரிசன் பண்ணத பத்தி எங்கிட்ட பேசிருந்திருக்கலாம். " கார்த்திக்.


"நீங்க அவனால அப்செட்டா இருக்கிங்கன்னு எனக்குத் தெரியும். உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நான் சிக்கிக்க கூடாதுன்னு தான் அப்படி பண்ணேன். பட், அவெ என்னை விடுறதா இல்ல. எல்லாம் இந்த ஜோஹிம்மாவால வந்தது. அவெ மிரட்டலுக்குப் பணியாம கேஸ் ஃபைல் பண்ணலாம்னு சொன்னேன். கேக்கவே இல்ல இவங்க. பெரிய பெரிய டயலாக்கெல்லாம் பேசி.


'நா பண்ண அதே தப்ப நீயும் பண்ணாத. காதலிக்கிற பையங்கிட்ட ஈகோ காட்டாதன்னு.' கதை கதையா சொல்லிக் கண்ணீர் விட்டு என்னை இதுக்கு சம்மதிக்க வச்சாங்க. " என்க கார்த்திக் ஜோஹிதாவின் முகம் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்க்க இருவரின் பார்வையும் சிக்கிக் கொண்டது சில நிமிடங்களுக்கு.


"நீ விடு வாசும்மா. மாமா நான் எதுக்கு இருக்கேன். அவெந்தலைல நாலு தட்டி தட்டி அந்தக் கான்ட்ராக்ட்ட கையோட வாங்கிட்டு வந்திடுறேன். "


கார்த்திக், " அவெ ஒரு பிஸ்னஸ் மேன். அவெ கேக்குறத நீ குடுக்காம அவெங்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. "


"அதுக்கு... காசு தரப் போறீயா. எப்படி மச்சான். நம்ம வீடு கடன்னு எல்லாத்தையும் வித்தாலும். அந்த அளவுக்குக் குடுக்க முடியாதே " என்றார் முருகு.


"வாசு நான் அந்தக் கான்ட்ராக்ட்ட பாக்கணும். "கார்த்திக்.


"உங்களால் ஒன்னும் பண்ண முடியாது கார்த்திப்பா. வேண்டாம். விட்டுடுங்க. மூணு வர்ஷம் தான. நான் சமாளிச்சிப்பேன். " என்க, ஜோஹிதா அதை எடுத்து வந்து தந்தாள்.


வரிக்கு வரி வார்த்தைகளில் என்ன உள்ளது என்பதை படித்துப் பார்த்தவனுக்கு அந்த ருத்ராவை சுற்ற விட வேறு நல்ல திட்டத்தை மனம் உருவாக்கியது.


'அந்தப் பொடியெ. அவனே ஆட்டத்த ஆரம்பிக்கும்போது. நமக்கும் ஆடத்தெரியுங்கிறத இந்த இடத்துல நிறுபிக்கணும்ல. ' கார்த்திக்கின் மைண்ட் வாய்ஸ்.


கண்ணிற்கு பெரிதாகத் தெரியாத சிறு உருவம் தான் எறும்பு. ஆனால் தனக்கு ஆபத்து என்று வரும் போதும் இறப்போம் என்று தெரிந்தே தன்னை அச்சுறுத்துபவர்களை கடித்து தன் எதிர்ப்பைக் காட்டுகிறது. பணம் இளமை எனத் துடிப்புடன் இருக்கும் ஓர் இளைஞனிடம் எவ்வித முயற்சியும் செய்யாது தோற்றுப் போகக் கார்த்திக் தயாராக இல்லை.


" எதாவது வழி கிடைச்சதா. " என வாசு காகிதத்தை உற்று பார்த்தபடி இருந்த கார்த்திக்கிற்கும் காகிதற்திற்கும் இடையே தலையை விட்டுக் கேட்க, அவன் கிடைத்ததாகத் தலையசைத்தான்.


"சொல்லுங்க கார்த்திப்பா. ரொம்ப திமிரா திரியுற அவனோட தலைல நாலு கொட்டு வைக்கணும். " என்றவள் அது பண்ணணும் இது பண்ணணும் எனக் கற்பனைகளில் ருத்ராவைப் பழிவாங்க. கார்த்திக் அதை நிஜத்தில் செய்ய வழி காட்டினான்‌.


அதைக் கேட்டுச் சந்தோஷமாக உணவை உண்டுவிட்டு கார்த்திக்கும் ஊட்டிவிட்டு செல்ல, முருகுவும் ஜோஹிதாவும் தான் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர்.


"கார்த்திக் எனக்கு இது சரியா படல.‍"


"ஆமா மச்சான். அந்தப் பையன நம்ம பொண்ணு விரும்புது. நீ சொல்ற மாதிரிப் பண்ணி, அந்தப் பையன் நம்ம வாசுவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. வாசு உடைஞ்சு போய்டுவா. " என்றார் முருகு.


" நாம ஒன்னும் ருத்ராவ வாசுக்குன்னு பாக்கல. அவங்க வீட்டுல இருந்து தான் நம்ம வாசுவ பொண்ணு கேட்டிருக்காங்க. இந்த மாதிரி நேரத்துல தான் பொண்ணு வீட்டுக்காரங்க கெத்த காட்ட முடியும். அதுமட்டுமில்ல என்னோட பொண்ணு கல்யாணத்த எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும். " என்க, 


"என்னமும் போ. மாமியார் மருமக சண்ட பாத்திருக்கேன். மருமகெ மாமியார் சண்ட கூடக் கேள்வி பட்டிருக்கேன். ‌பட்‌ மருமகெ மாமனாரும் சண்ட போட்டுக்கிறது பதுசாத்தா‌ இருக்கு. " என்றபடி அவர் எழுந்து செல்ல,


"கார்த்திக் நீ சொல்ற மாதிரிச் செஞ்சா அந்த தம்பிக்குக் கோபம் தான் வரும். கோபத்துல நம்ம வாசுவ... " என ஜோஹிதா இழுக்க,


"அவனால நம்ம பொண்ண காயப்படுத்த முடியாது ஜோஹிதா. அவனுக்கு வாசு மேல இன்ட்ரஸ்ட் இருக்கு. " கூலாக.


"ஆனாலும் நீ சொன்ன மாதிரிச் செஞ்சா வாசுவ அவனுக்குப் பிடிக்காம போய்டும். அவளோட கல்யாணம். " என்றவளின் கையில் தன் ஃபோனை வைத்து,


‍"அது நடக்கணும்னா வந்து நிச்சயம் பண்ணிக்க சொல்லு. பத்து நாள்ள வந்து கல்யாணம் உறுதி படுக்கச் சொல்லி நீ தான் சிவ்ராம் குடும்பத்துக் கிட்ட பேசணும்‌. இல்லன்னா எம்பொண்ண கட்டிக்க நான் ஒரு ராஜ குமாரன கூட்டீட்டு வருவேன். இந்தச் சில்லுவண்டு வேண்டாம். நான் சொன்னா எம்பொண்ணு கேப்பா. " என்றவன் ருத்ரா வாசு திருமணத்தில் அவசரம் காட்ட வைத்தான்.


மறுபக்கம் வாசுவிற்கு கீ கொடுத்து ருத்ராவை நோக்கி ஏவி விட்டிருக்கிறான். என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.


கார்த்திக்கை மட்டுமல்ல. ருத்ராவை அசைக்கும் ஆயுதமும் வாசு தான். அதைக் கார்த்திக் கூர்தீட்டி அனுப்பி உள்ளான். எப்படி குத்தி கிழிக்கிற என்று பார்க்கலாம்…

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


 நேசிப்பாயா 63

நேசிப்பாயா 65

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...