அத்தியாயம்: 65
அன்று ஞாயிற்றுக்கிழமை.
வாசு கையில் ஃபேஸ் பால் என்று சொல்லப்படும் அடி மட்டை பந்தை அடிக்கும் மட்டையைக் கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
தினமும் விளையாடுவாள். இப்போது வாரம் ஒரு நாள் தான். இதுவும் இருள் சூழத் தொடங்கும் வேளையில் தான் மைதானத்திற்கே வந்தாள். வாசுவை ஆறு மணி வரை வேலை வாங்கி விட்டுத் தான் விட்டான் ருத்ரா.
'மனசாட்சி இல்லாதவெ. இரக்கம் இல்லாதவெ. கல்நெஞ்ச காரெ. ' என பல செல்லப் பெயர்களைச் சூட்ட, அவனுக்காக மனதிற்குள் ஒரு விழா ஏற்பாடு செய்து லாவைச் சிறப்பித்து விட்டுத் தான் வந்தாள்.
நேரம் ஒன்பதைத் தொட்டிருக்கும். வீடு செல்லலாம் என தன் சைக்கிளில் ஏறியவளின் பார்வையில் பட்டான் ருத்ரா.
யாருடனோ அலைபேசியில் காரசாரமா பேசியபடி ஒரு கடையில் நுழைந்தவனைப் பார்க்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது வாசுவிற்கு.
'என்னோட ஹெப்பி சன்டேவ இல்லாம பண்ணீட்டு, நீ மட்டும் ஜாலியா சிரிச்சி சிரிச்சிப் பேசிட்டு போறீயா!. இருடா வர்றேன். உன்னோட ஸ்மெலிங் ஃபேஸ்ஸ இந்த பேஸ்பால்லால உடைக்க வர்றேன்.' எனப் பொறுமியபடியே சைக்கிளை நிறுத்தி விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள் வாசு.
'ஏம்மா அவனப் பாத்தாச் சிரிச்சி சிரிச்சி பேசுற மாதிரியா இருக்கு. அவனே டென்ஷன்ல யாரையோ திட்டிட்டுப் போய்க்கிட்டு இருக்கான். அவன்ட்ட போய் வம்பிழுக்க போறீயா. என்னமோ போ. ஆமா இவளுக்கு எப்பத்துல இருந்து இந்தத் தைரியம் வந்தது.' என்று யோசித்தால் அது கார்த்திகேயன் தந்தது.
அப்படிக் கார்த்திககேயன் என்ன சொன்னான் என்றால், " வாசு நான் இத நல்லா படிச்சிப் பாத்துட்டேன். எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியுது. பட் அதச் செய்ய தைரியம் வேணுமே…" என இழுக்க,
"எதுவா இருந்தாலும் பரவாயில்லை சொல்லீடுங்க கார்த்திப்பா. நான் பண்றேன். I can do anything against him." என ஆர்வமாக கேட்டாள் வாசு.
"இதுல… ம்… நீ தான் வேலைய விட்டு போகக் கூடாதுன்னு எழுதிருக்கு. அப்போ…. " என மகளை பார்த்துப் புருவங்களை உயர்த்திக் கண்சிமிட்ட,
"அவனா என்னைத் துரத்தி விட்டா கான்ட்ராக்ட் ப்ரேக் ஆகிடும். காசு தர தேவையில்ல. கேஸ் போட தேவையில்லை. சரியா... எஸ். எனக்குப் புரிஞ்சிடுச்சி. அவெ எது சொன்னாலும் தப்பு தப்பா பண்ணும். அப்பத் தான் என்னை வேலைய விட்டுத் துரத்தி விடுவான். ஹேய்... இதுக்குத் தான் என்னோட கார்த்திப்பா வேணுங்கிறது. தேங்க்ஸ் கார்த்திப்பா. " எனக் கார்த்திக்கைக் கட்டி அணைத்து விட்டு, துள்ளிக் குதித்து அப்போது சென்றாலும், பிடித்த பணியைப் பொறுப்பின்றி செய்வதா என்ற குழப்பத்திலேயே இருந்தவளை ருத்ரா தெளிய வைத்தான்.
இரு தினங்களுக்கு முன்...
டீச்சரிடம் தண்டனை வாங்கி பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் போது உயரமாக தெரிவோமே, அந்த உயரத்திற்கு ஒருத்தி நடந்து வந்தாள். ஹைய் ஹீல்ஸ் அணிந்து கொண்டு அரேபியன் குதிரை போல் ஒய்யாரமாக வந்த அவள் அல்ட்ரா மாடல் யுவதி தான். இருக்கும் எல்லா ப்யூட்டி க்ரீமையும் முகத்தில் அப்பிக் கொண்டு வந்திருந்த அவள் ருத்ராவின் நண்பிகளில் ஒருத்தி.
அந்தப் பொண் ருத்ராவிற்கு என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது வாசுவிற்குப் பிரச்சினை இல்லை. வாசுவின் காண்டு என்னவென்றால், எப்பொழுதும் அவனின் தேவைகளை மட்டுமே கவனித்து வந்த வாசுவை அந்தப் பெண்ணிற்கும் சேர்த்து சேவகம் செய்ய வைத்துவிட்டான். அது தான் காண்டு.
அதாவது, வாசுவின் பணியை மீறி சில செயல்களைச் செய்ய உத்தரவிட்டிருந்தான். அதில் ஒன்று மசாஜ்.
அவளும் முணுமுணுத்துக் கொண்டே, 'ஏதோ ஒரு காலத்துல நமக்கு பாய் ஃப்ரெண்டா இருந்தவெ. அதுக்காக வேணும்னா பண்ணலாம்.' என அவன் சொல்லும் போதெல்லாம் தலையில் எண்ணெய் விட்டு இதமாய் மசாஜ் செய்வாள்.
அதற்காக மட்டுமல்ல, அவன் கூறும் பணியைச் செய்யவில்லை என்றால் தரவேண்டும் என்று அவன் கூறிய பணத்தில் ஒரு ஜீரோவை சேர்த்துவிடுவானோ என்ற பயமும் காரணம்.
ஏற்கனவே ஆறு பூஜ்ஜியங்கள் உள்ளன. அதில் மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே செல்வானோ என்று அவன் ஊதும் மகுடிக்கு ஆடத் தொடங்கியிருந்தால். இல்லையேல் டேனியல் படும் பாடு தான் அவளுக்கு நேரும். டேனியல் படும் பாடு தான் அவளுக்குத் தெரியுமே.
ஆதலால் அவன் சொல்லும் வேலைகளைச் சத்தமிடாது செய்யப் பழகியிருந்தாள். மசாஜ் மட்டுமல்ல வயலின்னு வாசிக்க கற்றுக் கொண்டாள்.
நீள குச்சியை அந்த கருவியின் கம்பிகளின் மேல் வைத்து முன்னும் பின்னும் அவள் அசைக்கும் போது. ' இதக் கேக்குறவெ காது சீக்கிரம் செவிடா மாறிடும். '
அப்படித் தான் இருக்கும். ஆனால் அதை முழு ஈடுபாட்டுடன் கற்க முயன்றாள் வாசு. ருத்ராவிற்குப் பிடிக்கும் என்பதற்காக.
பத்து நாள்கள் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆடும் மந்தி போல் இருந்தவளை ருத்ரா தன் தோழியின் முன் வாசிக்க சொல்ல, அவள் 'பைத்தியம் பிடித்த பூனைச் சுவற்றை பிராண்டுவது போல் உள்ளது.' என்று சொல்லி சிரித்தாள். கூடவே நம் வறுத்த பல்லியும் சிரித்து விட்டது.
அதுமட்டுமல்ல வாசு செய்த மசாஜ்ஜை அவன் ஆயிரம் குறை கூறி கேலி செய்ய, குமுறல் மொத்தமும் ருத்ராவின் மீது தான் இருந்தது.
‘எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டியே டா.’ என்று வெதும்பினாள்.
இரு நாள்கள் அந்தப் பெண் அங்குத் தங்கியிருந்தாள். அந்த இரு நாளும் நான்ஸூயும், அந்தப் பெண்ணும் அவளைக் கேலி செய்து சிரிக்க, அதை ருத்ரா ஏதும் சொல்லாமல் இருக்க, 'கார்த்திப்பா சொன்னத ஃபாலோ பண்ணாத்தா சரியா இருக்கும். ' என்று முடிவெடுத்து விட்டாள்.
பொறுத்தது போதும் பொங்கி எழு வாசு என எழத் தொடங்கிவிட்டாள்.
"வாசு what's this." ருத்ரா கோபமாக,
" உங்க ப்ரேக் ஃபாஸ்ட் ஸார். " எனப் போலி பணிவுடன் சொல்ல,
" ம்ச்… என்ன டிஷ் இது. வாய்ல வைக்கவே முடியல. " எனப் பற்களை கடித்துக் கொண்டு கூறினான்.
அவனின் காலை உணவில் அறு சுவைகளில் காரத்தைத் தவிர்த்து மற்ற ஐந்து சுவைகளையும் தூக்கலாகப் போட்டு வாசு தந்திருந்தாளே.
" பாஸ்தா ஸார். making special for you. " அவளின் போலிப் பணிவை உடல் மொழிகளின் மூலம் நன்கு உணர முடிந்தது அவனால்.
" நடிக்காத. இதுல என்னென்னத்த கலந்தன்னு மரியாதையா சொல்லு. "
" எனக்கு எப்படி ஸார் தெரியும். உங்க ஹோட்டல் செஃப் சமைக்கிறத, ஜஸ்ட் எடுத்துட்டு வந்து குடுக்குற சர்வென்ட் நான். எங்கிட்ட கேட்டா எப்படி ஸார்? மேம் உங்க ஃபுட் எப்படி இருக்கு." என அவனின் தோழியைப் பார்த்து கேட்பாள் வாசு.
அவளின் டார்கெட் ருத்ரா தானே தவிர அந்தப் பெண் கிடையாது. 'அவனால தான் அந்த ஜூ அனிமல்ஸ் எல்லாம் என்னைக் கிண்டல் பண்ணுதுங்க. சோ…. நம்ம ஏம் அவெந்தா. '
"ம்… டேஸ்டாத் தான் தேவ் இருக்கு. நீ வேணும்னா என்னோடத எடுத்து சாப்பிடுட்டு பாரு. " என அவள் உணவை நீட்ட, அதை அவன் கையில் சேரும் முன் தட்டி விட்டு விட்டு ' ஸாரி ஸார். ' என்றாள் வாசு.
மசாஜ் செய்யச் சொன்னால் அவனின் முடியை ஒன்னொன்றாக பிடுங்கி எடுக்க ஆரம்பித்தாள் வாசு.
"ஸ்… ஆ. என்ன பண்ற நீ?. "
"ஸார் அது வெள்ள முடி. பாக்க எங்காத் தெரிஞ்சாலும் நீங்க ஓல்ஏஜ்ன்னு உங்க முடி காட்டிக் குடுத்திட கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல அதப் புடுங்கி. எடுத்தேன் ஸார். " என ஆக்ஷனுடன் செய்துக் காட்டுபவளின் செயல்களுக்கான காரணமென்ன எனத் தெரியாது அவளை முறைத்தபடியே இருப்பான்.
வேண்டும் என்றே அவனுக்கு பிடிக்காத நிறத்தில் அறையை அலங்காரம் செய்வது தொடங்கி, அவனைக் குளிர்ந்த நீரில் குளிக்க வைப்பது வரை அனைத்தையும் செய்து கோபம் கொள்ளும் அவனின் முகத்தைப் பார்த்து பார்த்து ரசிக்க தொடங்கி விட்டாள் வாசு.
" வாசு வெய்? என்னாச்சி உனக்கு? நீ இப்படிக் கிடையாது. ஏன் இர்ரெஸ்பான்ஸிபுல்லா நடந்துக்கிற. " எனத் தனியாக அழைத்து கேட்டான் ருத்ரா.
ஏனெனில் அவனிடம் மட்டும் தான் அவளின் வேலையைக் காட்டினாள். மற்ற அனைவரிடமும் நல்ல பொறுப்புள்ள ஊழியராக நடந்து கொண்டாள். முக்கியமாக ஜானிடம். அவரின் ஆதரவு என்றும் அவளுக்கு உண்டு. இத்தனை நாட்களாக இல்லாது அவளின் இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன என அவளிடமே கேட்டான்
" நான் பொறுப்பில்லாத ஸ்டாஃப்பா உங்களுக்குத் தெரியுறேனா?. ம்... " என விழி விரிய கேட்டாள் அவள்.
" எஸ்... உன்னோட ஆக்டிவிட்டி எதுவும் சரியில்ல. I can't tolerate that. "
"பொறுத்துக்க முடியலன்னா என்னை வேலைய விட்டு அனுப்பிட வேண்டியது தான. ம்... fire பண்ணிடுவேன். fire…. fire….னு உறுமிவீங்களே. ம் பண்ணிடூங்க… fire…” என்க, அவளின் நோக்கம் புரிந்தது ருத்ராவிற்கு.
" சோ, நான் உன்னை வேலைய விட்டு அனுப்பனுங்கிறதுக்காக தான் இப்படிப் பண்ற. "
"எஸ்… "
"பண்ணலன்னா... "
"பண்ற வர இப்படித் தான் பண்ணுவேன். " என்றவள் அவனின் லேப்டாப்பில் நீரை ஊற்ற, அவன் பதறாது நின்றான்.
ஏன்னா அது வாட்டர் ஃப்ரூப்ங்க.
' என்ன மரம் மாறி நிக்கிறான். பெர்பாமென்ஸ் பத்தலயோ. ' என்றவள் அதைக் கையில் எடுத்து ஓங்க, ருத்ரா வேகமாக வந்து தடுத்தான்.
" வாசு... what nonsense you are doing? " எனக் கத்த,
" Fire பண்ணலையா என்னை? " என் ஆவலுடன் கேட்டாள் வாசு.
ஒரு மனம் அவளின் செயல்களை ரசித்தாலும். மறுமனம் இது எல்லாம் அந்தக் கார்த்திகேயனின் திட்டம் தான் என்று சொல்லியது.
கார்த்திகேயனுடன் தான் போட்ட சவாலில் வெற்றி பெற அவனை கார்னர் செய்ய நினைத்த ருத்ராவிற்குக் கார்த்திகேயனின் எதிர் தாக்குதல் சற்று நிலைகுலைய செய்வதாகவே இருந்தது.
ருத்ரா, அவனின் ரெஸ்ட்டாரெண்ட்டில் பிரச்சினைகளை உருவாக்க நினைத்தால், அவன் ருத்ரா இதுவரை மிரட்டி வாங்கிய ரெஸ்ட்டாரெண்ட்டின் உரிமையாளர்களை ஒன்று திரட்டி ருத்ராவிற்கு எதிராக நிறுத்தி வைத்துள்ளான்.
அது பத்தாது என்று அவர்களின் பேக்டரியில் சிறிய அளவில் இருந்த பிரச்சனைகள் சமீபகாலமாகவே பூதாகரமாக மாறி வருவதன் காரணமும் கார்த்திகேயனாக இருப்பானோ என்ற சந்தேகம் இப்போது வந்துள்ளது.
இது பத்தாது என வாசுவுடனான அவனின் திருமணத்திலும் நெருக்கடி காட்ட தொடங்கி விட்டான் கார்த்திகேயன்.
நேற்றே ருத்ராவின் அன்னை, "இப்ப முடிவா என்ன தான் சொல்ற தேவா?. பொண்ணு வீட்டுல அவசரப்படுறாங்க. நிச்சயம் மட்டும் இப்ப வச்சிக்கிவோம். ரொம்ப யோசிக்காத தீபாவளி முடியறதுக்குள்ள பதில் சொல்லிடு. " என்க. 'இதுவேறையா!!' என ருத்ரா விழி பிதுங்கி நின்றான்.
மரமளவு பிரச்சினைகளை கார்த்திகேயனின் முன் ருத்ரா நிறுத்தினான் என்றால். கார்த்திகேயன் மலை அளவு கொண்டு வந்து நிறுத்தியுள்ளான். என்ன செய்வது?. தந்தை ஒருபக்கம் டார்ச்சர் செய்தால்… மகள் வேறு பக்கம். ச்ச என்றிருந்தது ருத்ராவிற்கு. அதிலும் வாசு டிசைன் டிசைனாக அவனின் உயிரை வாங்கினாள்.
இப்போது நடக்க இருப்பதை போல்.
ருத்ரா கடையின் உள்ளே இருக்க, வாசு அவனின் காரைச் சுற்றி சுற்றி வந்தாள். 'என் கார் ரேட் கூட உன் குப்ப ரெஸ்டாரன்ட்ட விட காஸ்ட்லி. ' என்று அவன் அன்று சொன்னது நினைவு வர,
"குப்ப... ம்… இப்ப யாரோடது குப்பையா மாறப்போதுன்னு பாருடா. " என்றவள் அங்கிருந்தக் குப்பைத் தொட்டியில் இருந்து சில கருப்பு நிற பைகளை எடுத்துவந்தாள். அவை முழுவதும் குப்பைகள்.
அதை காரின் உள்ளே போட வேண்டும் என்றால் கதவைத் திறக்க வேண்டும். சாவி இல்லாது திறக்க முடியாது போக, அதன் கண்ணாடியைத் தன் பேட் கொண்டு அடிக்கத் தொடங்கினாள் வாசு.
அவள் காரின் கதவைத் திறக்க முயற்சிக்கவுமே ருத்ராவிற்கு அலர்ட் மெஜ்ஏஜ் வந்து விட்டது. 'யார் அது? கார் திருடனா? ' என வந்து பார்த்தால் திருடன் அல்ல திருடி.
" ஹேய்…. what are you doing வாசு? வாசு. " என அவன் கத்திக் கொண்டே அருகில் வரும் முன்னரே கண்ணாடியை உடைத்துவிடலாம் என்று தான் ஓங்கி அடித்தாள்.
கண்ணாடி ஸ்டாங்காக உள்ளதா!. அல்லது அவள் பலம் அவ்வளவு தானா என்று தெரியவில்லை. கண்ணாடியில் சிறு கீறல் தவிர எதுவுமே விழவில்ல. உடனே அவள் கண்ணாடியை விட்டு விட்டு மற்ற இடத்தில் அடிக்க, ஹெட்லைட் உடைந்தது. சைடு மிரர் பறந்தது. அடுத்ததாகக் கையிலிருந்த கருப்பு கவரை காரின் தலையில் கவிழ்த்தும் முன் அவளைப் பிடித்து விட்டான் ருத்ரா.
"வாசு, Are you mad? Stop this ***. " என்றவனின் பேச்சைக் காதில் வாங்காது.
"விடு... விடு டா என்னை. இந்த கார் கூட கம்பேர் பண்ணி தான எங்க ரெஸ்டாரன்ட்ட குப்பன்னு சொன்ன. இப்ப இத நான் நிஜ குப்பத்தொட்டியாவே மாத்தப்போறேன். விடு… விடு என்னை. " என அவள் திமிறிக் கொண்டே இருந்தாள்.
" பைத்தியம் மாதிரி பிகேவ் பண்ணாத வாசு. நிப்பாட்டு. "
" எங்க ரெஸ்டாரன்ட்டையா நீ டஜ்ஜன்னு சொன்ன. அந்த டஜ்ஜன்னுக்காக எத்தன நாள் தூங்காம கார்த்திப்பாவும் ஜோஹிம்மாவும் வேலை பாத்தாங்ன்னு உனக்கு தெரியுமா?. ஒன் மில்லியன் என்ன என்னால உனக்கு அத விட அதிகமாவே பணம் தரம் முடியும். பட்... என்னோட கார்த்திப்பாவ மிரட்டுன உன்னோட கை, கால உடைக்காம அதத் தர மாட்டேன் டா. " என அவளின் கையில் இருந்த பேட்டால் அவனின் தலையைப் பந்தாடப்போக, அவன் தடுக்க என இருவரும் நடு ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டனர்.
நேரம் சென்றது. கூட்டம் கூடியது. ஆனால் சண்டை மட்டும் ஓயவில்லை. எத்தனை முயன்றும் அவளின் வாயை மட்டும் அடக்கவே முடிவில்லை. ருத்ராவிற்கு வேறு வழியே இல்லாது அவளை அடக்கினான். தன் இதழ் கொண்டு.
கையில் மட்டையுடன் காளி அவதாரம் எடுத்திருந்தவளின் கன்னத்தைத் தாங்கி, அழுத்தமாக சற்று வன்மையாகவே அவளின் இதழை அனுகியிருந்தான் ருத்ரா.
அதைச் சாற்றும் எதிர்பாராத அவள் அவன் தந்த முத்தத்தில் தடுமாறிப் போக, கையில் இருந்த பேட் கீழே விழுந்தது. அவனிடம் இருந்து விடுபட அவனின் கோர்ட்டைப் பிடித்து தள்ளி, அவளின் முயற்சிக்கு தோல்வி தான் கிட்டியது.
அடுத்து என்ன நடந்திருக்கும்… ம்… வழக்கம் போல் வாசு மயங்கி விழ. அவளை தோளில் தூக்கிக் கொண்டு காரில் ஏறியவன் அதை ஓட்டிச் சென்று விட்டான்.
எங்கே?
மருத்துவமனைக்கா?..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..