முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 66

அத்தியாயம்: 66


மனித நடமாட்டம் அற்ற மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி அது. இரவில் இரை தேடும் பறவைகளின் ஒலியும், சில  விசித்திரமான பூச்சிகளின் ஓசையும், கூடவே நம்ம வாசு அழும் குரலும் அகோரமாகக் கேட்டது.


" ம்ச்… இப்ப எதுக்கு நீ ஒப்பாரி வச்சிட்டு இருக்க. வாய மூடு. இந்த ராத்திரி நேரத்துல நீ அழுற சத்தத்த கேக்கும் போது எரிச்சலா இருக்கு. ஏய்… உன்னத்தா சொல்றேன். வாய மூடுடீ. " என்று கடுப்புடன் கத்தினான் ருத்ரா.


மயங்கி விழுந்த அவளை காரின் பின் சீட்டில் போட்டவன், காரைத் தொலை தூரத்திற்கு ஓட்டி சென்றான்.


' இங்க எதுக்கு ப்பா கூட்டீட்டு வந்த? ஹாஸ்பிட்டல் போகலையா நீ.?'


'எதுக்கு மறுபடியும் ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போய் அவ அப்பெங்கிட்ட அசிங்கப்படவா?. இன்னைக்கி நடு ரோட்டுல இவ பண்ண இந்த வேலைக்கி இந்தக் காட்டுக்குள்ள எங்கயாது படுக்க வச்சிட்டு கிளம்பணும்னு தோணுதுச்சி.‌ பட் பொண்ணுங்கிறதுனாலயும், என்னோட லவ்வருங்கிறதுனாலையும்  மூஞ்சில தண்ணி ஊத்தி எழுப்புறேன். '  மைண்ட் வாய்ஸ்ஸில் பேசிய படி பின் பக்க கதவைத் திறந்து வாசுவின் முகத்தில் நீரை தெளித்தான்.


வாசுவின் விழிகள் மூடிய இமைகளுக்குள் உருண்டேடின. அவளுக்கு மயக்கம் தெரிந்து விட்டது என்பதை அறிந்தவன் அவளின் கன்னம் தட்டி எழுப்ப, அவள் பெட்டில் படுத்துறங்குவது போல் கை கால்களை அசைத்து சோம்பல் முறித்தாள்.


'இதுவேறையா. ' என நினைத்தவன் அடுத்த சில நொடிகளில் அவளின் மேல் சரிந்தான்.‌ கால்கள் நிலத்தில் ஊன்றி இருந்தாலும் ருத்ராவின் தலையும் உடலும் காருக்குள் இருக்க, அவளின் அசைவால் அவளின் கால் அவன் மேல் பட்டு, சரிந்து அவள் மேல் விழுந்தான் ருத்ரா.


" ஐய்யோ… அம்மா… யாரோ என் வயித்துல கல் கொண்டு வந்து வச்சிட்டாங்க போல. ஆ…. வலிக்கிது... கார்த்திப்பா... கார்த்திப்பா... " என வயிற்றை பிடித்துக் கொண்டு கத்தினாள். ஏனெனில் அங்கு தான் அவனின்  தலை நங்கென்று விழுந்தது.


அவனின் தலையை வயிற்றோடு இறுக பிடித்துக் கொண்டு, ' ஐய்யோ அம்மா.' எனக் கத்தினாள். பஞ்சு மூட்டைக்குள் விழிந்ததைப் போல் இருந்தது ருத்ராவிற்கு அவளின் வயிறு விழுந்தது. ஆனாலும் அவளின் கத்தல், நம் ருத்ராவைக் காண்டாக்கியது.


'கார் கண்ணாடிய உடச்சிட்டு, நடு ரோட்டுல வச்சி என்னை அவமானப்படுத்திட்டு, எங்காரு சீட்டுல சொகமாப் படுத்துட்டு, என்னையே கல்லுன்னா சொல்ற இருடி உன்ன.' என நினைத்தவன் விழுந்த அவளின் வயிற்றில் கடிக்க,


"ஸ்…. ஆ... யாரு நீ? எதுக்கு எம்மேல படுத்திருக்க. ஹாங்… ரேப். ரேப். காப்பாத்துங்க. காப்பாத்துங்க. இதோ பாரு எனக்கு கராத்தே தெரியும். பக்கத்துல வந்த நீ காலி. " என காரில் ஒளிர்ந்த மங்கிய வெளிச்சத்தில் அவனின் முகத்தை சரியாக பார்க்காது அலறிக் கொண்டே கால்களை உதற, அதை உதையாக மாறி ருத்ராவைப் பதம் பார்த்ததஉ.


ஒரு கரத்தால் அசைந்து கொண்டிருந்த அவளின் இரு கைகளையும் பிடித்தவன், கால்கள் இரண்டையும் தன் முட்டியில் லாக் செய்தான். பின் அவளின்‌ கன்னத்தில் லேசாக வலிக்கும் படி ஒரு அடி கொடுக்க, அவள் இவனை மருண்ட விழிகளால் பார்த்தபடி எழுந்து அமர்ந்தாள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு. பின் அழத் தொடங்கி விட்டாள்.


அவளின் அழுகை இப்பொழுது நிற்கும் பிறகு நிற்கும் என்று காத்துக் கிடந்தவனுக்குப் பெரும் ஏமாற்றம் கிட்ட,


" உன்னை நான் வாய மூடச் சொன்னேன். Stop crying. " எனக் கோபமாக கத்தினான். ஆனால்  அவள் அதை பொருட்படுத்தவே இல்லை.


"நான் அப்படித் தான் அழுவேன். நீ யாரு என்னை நிறுத்த சொல்ல. ம்‌... பண்றதெல்லாம் பண்ணிட்டு Stop cryingனு கோபமா கத்தினா நான் பயந்து அழாம இருக்கணுமாக்கும். ஏன்டா அப்படி பண்ண?.‌"


"எப்படி?. "


"கொன்னேடுவே உன்னை. நடு ரோட்டுல வச்சி என்னை கிஸ் பண்ணிருக்க. என்னோட மானம், எனக்குன்னு இருக்கிற நல்ல பேரு, எல்லாமே உன்னால ஸ்பாயில் ஆகிடுச்சி. " என மீண்டும் பெருங்குரலெடுத்து அழ,


"ஏய்... ஏய்... நான் சொல்ல வேண்டியத நீ சொல்லிட்டா எப்படி. இன்னைக்கி உன்னால நான் தான் அதிகமா பாதிக்கப்பட்டது. என்னோட ரெப்டிடேஷனுக்கு உன்னால கெட்ட பேரு. எங்கார குப்பத்தொட்டியா மாத்த நினைச்சி, கண்ணாடில க்ராக் விழ வச்சி, என்னை அடிக்க வந்துன்னு இன்னைக்கி நீ பண்ணதுல. உன்னோட க்ரைம் ரேட் அதிகமாகிடுச்சி. "


"அதுக்கு… அதுக்குன்னு கிஸ் பண்ணுவியா. அதுவும் நடு ரோட்டுல. நாலு அடி அடிச்சிருந்தா கூட நான் பெருசா எடுத்திருக்க மாட்டேன்." என்றவளை 'ஒரு அடிக்கி கூட தாங்க மாட்டா. இதுல நாலு அடி. ஹிம்... வெறும் வாய் மட்டும் தான் வாசு உனக்கு. ' என்பது போல் அவன் உற்றுப் பார்க்க.


அதை உணர்ந்தாலும், " ம். தாங்கிருப்பேன். " என்றாள்‌ ஜாம்பமாக. அவனின் இதழ்கள் குறுநகை பூத்தது.


"ஆனா... ஆனா… நீ பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுமா. நீ என்னை ஃபோர்ஸ் பண்ணி கிஸ் பண்ணிருக்க. அதுவும் பப்ளிக் ப்லேஸ்ல. என்னோட டீம் பசங்கல்லாம் சுத்தி நின்னு வேடிக்க பாத்திருப்பாங்க. அடுத்த வாரம் நான் க்ரவுண்டுக்கு போனா என்னை என்னை….  நினைச்சி பாக்கவே முடியலயே. சுத்தி நிக்க வச்சி கேலி பேசியே… ஐய்யோ…" எனப் புலம்ப, அவளின் டீம் ஆள்களின் முகத்தைக் கஷ்டப்பட்டு நினைவு கொண்டு வந்தான் ருத்ரா.


" பாத்தேன்… எல்லாம் நம்பர் ஒன் ப்ளேயர்ஸ் தான். அவனுங்க அத்தன பேரும் எப்ப ஹைஸ்கூல்ல ஜாயின் பண்ணப் போறாங்கன்னு சொன்னேனா, ஆளுக்கு ஒன்னா வாங்கி லாலி பாப் வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிடலாம். அப்பறம் அவனுங்க உன்னோட நடு ரோட்டு மேட்டர மறந்திடுவாங்க. " கூலாக சொல்ல,


" கரெக்ட் பண்ண போறீயா!. அவனுங்க ஸ்கூல் பசங்களா இருந்தாலும் எவ்ளோ கேலி பண்ணுவாங்கன்னு தெரியுமா உனக்கு. உன்னைக் கூட்டீட்டு போய் அவனுங்களுக்கு மத்தில நிக்க வைக்கிறேன். அப்ப தான் தெரியும் என்னோட புலம்பலுக்குக் காரணம். ஐய்யோ எவ்ளோ பெரிய அசிங்கம்.  " என அழ,


"கிஸ் தான டி பண்ணேன். ரேப் பண்ண மாதிரி சீன் போடுற. " எரிச்சலாக வந்தது குரல்.


"ஓ... அப்ப அதுக்கு தான் என்னைத் தனியா கூட்டீட்டு வந்தீயா. Help… help… where is my phone... phone…. phone... கார்த்திப்பா... கார்த்திப்பா... ஹலோ. " எனத் தன் மொபைலைத் தேடிக் கண்டுபிடித்து கார்த்திக்கிற்கு கால் செய்ய, ருத்ரா கோபமாக வாங்கி அதை வீசி எறிந்தான்.


"ஹேய்… என்னோட ஃபோன். என்னோட லக்கிஃபோன் அது தெரியுமா." என இருளில் கிடந்த அதைக் கைகளால் செடிகளுக்கு இடையில் துழாவி தேட,


"Daddy's girl லா நீ. எல்லாத்தையும் அந்தாளு சொல்லுற படி கேட்டு கேட்டு செய்ய, நீ என்ன சின்ன குழந்தையா?" 


"ஏய் அந்தாளு இந்தாளுன்ன பாத்துக்க. கார்த்திப்பாவ மரியாதையா பேசு. இல்லன்னா. "


"என்ன பண்ணிடுவ?. ம்… Daddy's girl தான நீ. அந்த ஆளு குடுக்குற சாவிக்கி தான வந்து இப்ப எங்கிட்ட கொட்டடிச்சிட்டு இருக்க. monkey toll. " என்றவனை முறைத்து பார்த்தாள் வாசு.


"பாக்க அப்படியே monkey மாதிரி தான் இருக்க. அப்பாவும் பொண்ணு. monkeyயே தா. " என்றவனின் சட்டையைப் பிடித்து உளுக்கி மீண்டும் சண்டைக்கு செல்ல, ருத்ரா அவளின் கோபமான தாக்குதலைச் சமாளித்து சில நிமிடங்கள் அதை ரசித்துக் கொண்டிருந்தான்.


'யாரப்பாத்து குரங்குன்னு சொன்ன... ய்யாய்... ய்யாய்... கீச்சிடுவே கீச்சி. கீச்சிடுவே. கீச்சி. ' என ரஜினியை போல் பேசியபடி மல்லுக்கு நின்றவள் சில நிமிடங்களில் டயர்டாகி சோர்ந்து போக, அவளின் முன் வாட்டர் பாட்டிலை நீட்டினான்.


" யா… தேங்க்யூ. பத்து நிமிசம் ப்ரேக் விட்டுடுட்டு சண்ட போடலாமா. ம்… " என காரில் அமர்ந்து கொண்டு கேட்டாள்.


"பத்து நிமிசம் என்ன பத்து வர்ஷமே ஆனாலும் உன்னால என்னை ஜெயிக்க முடியாது. "  என்றதும், அவள் ஓய்வெடுத்தது போதும் எனக் கல்லை தூக்கி கொண்டு கண்ணாடியைக் குறி பார்க்க,


"வாசு போதும். இதுக்கு மேல எங்காருல சின்ன கீறல் விழுந்தாலும். I will beat you. "


"ஓ… அடிப்பியா‌‌.‌. நீயா… உனக்கு கிஸ் அடிக்க மட்டும் தான தெரியும்னு நினைச்சேன்‌‌. அதுக்கு மேலயும் தெரியும் போலயே. ம்...‌ அடி டா. அடி டா பாக்கலாம். " என இல்லாத வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவனின் அருகில் வர,


"உப்... என்ன வேணும் டி உனக்கு."


"ம்… விடுதல. கிடைக்குமா? "


'இவள என்னை ஜெயில்லைய நான் அடஞ்சி வச்சிருக்கேன். விடுதல கேக்குறா.' என்பது போல் புருவம் சுருக்கி பார்க்க,


"எஸ் விடுதல தான். என்னை அடிச்சிலாம் வைக்கல. ஆனா நீ என்னை டார்ச்சர் பண்ற. ரூம டெக்ரேட் பண்றது. கஸ்டமர்ஸ்கு சர்வீஸ் பண்றது. இன்டீரியர் ஒர்க்குன்னு எல்லாத்தையும் பார்த்து செய்யுற அளவுக்கு எனக்கு எவ்ளோ பிடிச்ச வேலைன்னு தெரியுமா இது‌. பட் உன்னால தான் நான் அதைத் தப்பு தப்பா பண்ணீட்டு இருக்கேன்.


ஒரு சின்ன ட்ராவல் பேக்குள்ள ஒரு ஊருக்கே டிரெஸ் எடுத்து தினிச்சி வைச்சி மூடுனா என்ன ஆகும்? சொல்லு… டப்புன்னு ட்ராவல் பேக் வெடிச்சிடும். அதுமாதிரி தான் என்னை ஆக்கிட்ட. வேலை மேல வேலை சொல்லி என்னோட மைண்டையே கொலாப்ஸ் ஆக்கி வச்சிருக்க.


இன்னைக்கி சன்டே. கார்த்திப்பா என்னை நைட் அவுட்டிங் கூட்டீட்டு போற டே. ஆனா பாரு ஒரு டேடிங் கூட்டீட்டு போகவே பல வர்ஷம் யோசிச்ச உங்கூட இருக்கேன். எல்லாம் என்னோட தலையெழுத்து. ம்ச்... அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.


நான் உங்காச திரும்பி தந்திடுறேன். ஒரே மாசத்துல. என்னை விட்டு ப்ளீஸ். எனக்குப் பிடிக்கல. மாடு மாதிரி வேலை பாத்தும் என்னைத் திட்டிட்டே இருக்குற. அதுவும் அந்த நான்ஸி முன்னாடி என்னை அசிங்கபடுத்துன உங்கிட்ட வேலை பாக்க சுத்தமா எனக்குப் பிடிக்கல. நான் உங்கிட்ட இருந்து ரிலீவ் ஆகணும். அதுவும் சீக்கிரமே. அதுக்கு எதாவது வழி இருந்தா சொல்லு. அது போதும். " என்றவளை சில நிமிடங்கள் ஆழமாக நின்று அவதானித்தவன்,


" ஓகே. எனக்கு புரியுது. உன்னை நான் இந்த பத்து நாளா கொஞ்சம் அதிகமாவே செய்ய வச்சிட்டேன். "


"கொஞ்சமா இல்ல. அதிகத்துக்கும் அதிகமாவே. " என இரு கரம் கட்டிக் கொண்டு சொல்ல,


"அப்ப அதுக்கு வேற வழி சொல்லட்டுமா... ம்… எனக்கு நீ கான்ட்ராக்ட் பணத்த பணமா தர வேண்டாம். ஒரு மாசம் ரெண்டு மாசம்னு டயமும் வேண்டாம். அதுக்கு பதிலா. " என்றவன் அவளின் அருகில் நெருங்கி செல்ல, அவனின் மார்பில் கைவைத்து தள்ளி விட்டவள்,


"அய்யா சீ… கடைசில நீயும் அப்படி தான. எனக்குத் தெரியும் எல்லா பாய்ஸ்ஸும் அப்படித்தான்னு. நீ மட்டும் என்னை வித்தியாசமாவா இருந்திட போற. வேண்டாம் பா. எனக்கு உன்னோட வேற வழியே வேண்டாம். நான் உன்னோட காச குடுத்துட்டே போறேன். ஒன் மன்த்ல.  வித் இன்ட்ரஸ்ட்டோட. ச்சீ... " எனப் புலம்பிய நடக்க, அவளின் கரம் பற்றி இழுத்து காரில் சாய்த்தான் ருத்ரா.


அவன் இழுத்து நிறுத்திய வேகம் சொல்லியது அவனைக் கோபப்படுத்தி விட்டாள் என்று. காரில் சாய்த்த வேகத்தில், முதுகில் வலி ஏற்பட, கலக்கத்துடன் அவனின் கரத்தை விலக்க முயன்றாள் வாசு. அது முடியாது போக அமைதியாய் அவன் முகம் பார்த்தாள். அது கோபத்தில் சிவந்து போய்க் கிடந்தது.


" உனக்கு நல்ல விதமா யோசிக்கவே தெரியாதா. இல்ல என்னை நல்லவனா பாக்குறதுல உனக்கு விருப்பமில்லையா. " எனக் கேட்க, அவள் பாவமாய் முழித்தாள். அவளின் பயந்த நயனங்களின் மருண்ட பார்வை தன் கோபத்தைக் குறைத்தவன்,


" ஓகே பைன். நாளைக்கி என்னோட ஆஃபிஸ் ரூம்க்கு வா. நாம பேசலாம். இப்ப போய் கார்ல ஏறு. உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன். இந்தக் காட்டுக்குள்ள உன்னை தனியா விட்டுடு போய்ட்டா அப்பாவும் மகளும் சேந்து வந்து கைல ஃபோர்டோட போராட்டம் பண்ணாலும் பண்ணுவீங்க. ஏறு... " என வேண்டா வெறுப்பாக சொல்லி காரின் கதவை திறக்க,


" மொத சொன்னது ஓகே. ஆனா ரெண்டாவதா சொன்ன பாரு. காட்டுக்குள்ள தனியான்னு. அது தான் இடிக்கிது. நான் இந்த டவுன்லயே வளந்தவ. இன்டு இடுக்கு சந்து பொந்துன்னு எல்லாம் எனக்கு அத்துப்படி. உன்னோட குப்ப கார்ல ஏறி உக்காந்து வர்றதுல எனக்கும் விருப்பமில்ல.


எனக்கு கால் இருக்கு. பாத கண்டு பிடிச்சி போக கண்ணும் இருக்கும். நீ தேவையில்லை. நானே போய்ப்பேன். " என வீராப்பாய் நடக்க, அவன் காரின் கதவை அவளுக்கு திறந்து விட்டு விட்டு டிரைவிங் சீட்டில் அமர்ந்து ஸ்டாட் செய்தான்.


அவன் எதிர்பார்த்தது சரியே என்பது போல் பத்து நொடிகளில் வாசு வேகவேகமாக வந்து ஏறி அமர்ந்து கொண்டு கதவை மூடினாள். ஏனெனில் அந்தப் பகுதி கரடிகள் நடமாட்டம் அதிகமா இருக்கும் இடம். அதற்கான சமிக்ஞை பலகையைப் பார்த்தவள், ‘அதுகைல மாட்டிட்டு சாகுற விட. இவெங்கூடவே போய்டலாம்’ என வந்து உக்காந்து விட்டாள்.


"நான் பயந்து போய்லாம் வந்து உன்னோட குப்ப கார்ல உக்காரல. ஜோஹிதாம்மா தான் உங்கூட டூ போட்டா சீக்கிரம் பழம் போட்டிடணும்னு சொன்னாங்க. அதா." என்றாள் பாந்தமாக.


"நான் இப்ப உன்னை எதுவுமே சொல்லலயே. " என்றவனின் உதடுகளில் புன்னகை நிறைந்திருந்தது. 


" சொன்னாலும் நான் அதுக்கு கவல பட மாட்டேன்.  ம்… சீக்கிரம் வண்டி எடு. லேட்டாகுது பாரு. " என வெளியில் கேட்ட சத்தத்தில் திட்டுக்கிட்டாலும்,‌ வந்த பயத்தைக் காட்டிக் கொள்ளாது அவனை விரட்டினாள் வாசு.


அவளின்‌ சிறுபிள்ளைத்தனத்தை  மனத்திற்குள் ரசித்தபடியே காரை ஓட்டிச் சென்றான். இதுவரை இருந்து டென்ஷன் மறைந்து மனமானது எதை பற்றியும் சிந்திக்காது ஓர் அமைதியாக இருப்பதை அவளின் அருகாமையில் உணர முடிந்தது அவனால். அது அவனுக்கு பிடித்திருந்தது.



 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...