முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 67


 

அத்தியாயம்: 67


கார்த்திகேயனின் இல்லம்.


" வாசு, நேரமாச்சி ஏன் இன்னும் நீ தூங்காம உக்காந்திருக்க. "  என்றான் கார்த்திகேயன்.


மணி பன்னிரெண்டை நெருங்கி விட்டது.‌ மாலையில் ஹாலில் லேப்டாப்புடன் அமர்ந்தவள் தான் இன்னும் எழ வில்லை.


"தயவு செஞ்சி உம்பொண்ணுக்கிட்ட இருந்து எனக்குப் பதில் வாங்கித்தா கார்த்திக். நானும் ஏன் தூங்காம இருக்க, உடம்பு சரியில்லையா? இல்ல வேற எதுவும் பிரச்சனையா?ன்னு அப்பத்துல இருந்து கேக்குறேன். நிமிந்து கூடப் பாக்க மாட்டேங்கிறா. வாணரம். " என மகளைப் பற்றிக் குற்றம் சொல்ல, கார்த்திக் மகளின் அருகில் அமர்ந்தான்.


" என்னாச்சி வாசும்மா?. நேத்து எங்க போயிருந்த. ருத்ராவால மறுபடியும் எதாவது… "


"நோ கார்த்திப்பா. ப்ராப்ளம் ஒன்னுமில்ல. ஆக்சலி நான் உங்க ரெண்டு பேர்கிட்டையும் சில ஐடியா கேக்கணும். அப்பறம் சில விசயம் பேசணும்னு தான் உக்காந்திருக்கேன்.


ஷீ.  இது கிறிஸ்மஸ் ஈவென்ட்டுக்காக நான் போட்டு வச்சிருக்குற ப்ளான். நல்லா பாத்துட்டு மிஸ்டேக்ஸ் எதுவும் இருந்தாச் சொல்லுங்க. இத்தன வர்ஷமா ஒரு ஹோட்டல சக்சஸ்புல்லா ரன் பண்ற உங்களோட சஜசன் கிடைச்சா நல்லா இருக்கும். ம்… பாருங்க. " எனக் கார்த்திக்கிடம் லேப்டாப்ப்பை நீட்டினாள் பெண்.


"க்றிஸ்மஸ் ஈவென்ட்டா?. அதுக்கு இன்னும் ஒன் மன்த்க்கு மேல இருக்கே. இந்த வீக்ல தீபாவளி தான் பெஸ்டிவெல். அதுக்கு மிஸ்டர் வெங்கட சுப்பிரமணியம் கார்டன்ல செலிப்ரேட் பண்ண ஏற்பாடு பண்றதால்ல சொன்னாரு. நீ எதுக்கு க்றிஸ்மஸ் ஈவென்ட் ப்ளான் போடுற?." ஜோஹிதா குழப்பமாக பேச, கார்த்தி மகளின் மடிக்கணினியை வாங்கி பார்த்தான்.


க்றிஸ்மஸ்… அந்த நாட்டின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று. அது முடிந்த அடுத்த வாரமே புது ஆண்டு பிறக்கும். தொடர் விடுமுறை இருக்கும். ஆதலால் அனைத்து நட்சத்திர விடுதிகளும் சுற்றுலா பயணிகளையும் வாடிக்கையாளகளையும் கவரும் படி அலங்காரம், கச்சேரி, விளையாட்டு எனப் புதிது புதிதாக அற்புதமான சிலவற்றை ஏற்பாடு செய்வர்.


சிவராம்மிற்குச் சொந்தமாகவே இரு நட்சத்திர விடுதி உண்டு. கூடவே பார்ட்னர்ஸ்ஸாக பல. அவை அத்தனைக்கும் வாசு ஒருத்தியே க்றிஸ்மஸ் ஈவென்ட்டை ப்ளான் செய்து கொண்டிருக்கிறாள்.


சொந்தமாக இருக்கும் இரு ஹோட்டல்களிலும் “Experience with Sky” என்ற பெயரில் உயர்ந்த கண்ணாடி பாலங்களும், கண்ணாடி நடை மேடைகளையும், சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் அந்தரத்தில் சறுக்குவது போன்ற உணர்வைதீ தரும் கண்ணாடி சறுக்கல், எனப் பிரம்மாண்டமாக அந்த ஈவென்ட்டை ப்ளான் போட்டு வைத்திருந்தாள் அவள்.


மற்ற விடுதிகளுக்கும் தேடி தேடி வித்தியாசமான சில பல நிகழ்ச்சிகளை குறித்து வைத்திருந்தாள் வாசு. இது வெறும் வரைபடம் போல் தான். திட்டத்தை முடிப்பதும் செயல்படுத்துவதும் ருத்ரா பார்த்துக் கொள்ளவான். 


ஆனால்???


இதை எதற்கு வாசு செய்கிறாள்?. ருத்ராவிற்காகவா?


ஏன்?


என்ற கேள்வி எழ.


" வாசு நீ MET group காக எதுக்கு வேலை பாக்குற?. உன்னோட வேலை இது கிடையாது. "


"ஆமா கார்த்திப்பா. என்னோட வேலை கிடையாது தான். பட். "


"வாசு நீ அவங்க ஹோட்டல்ல வேலை பாக்குற ஸ்டாஃப்  மட்டும் தான். அத தவிர வேற எதையும் நீ எக்ஸ்ட்ராவா பாக்க தேவையில்ல. அந்தப் பொடியனோட மிரட்டலுக்கு நீ பணிஞ்சி போக வேண்டிய அவசியமும் இல்ல. எது வந்தாலும் உன்னோட அப்பா நான் இருக்கேன். நான் பாத்துபேன். நீ அவனுக்காக இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ண தேவையில்ல." என அழுத்தமாக கூறினான் கார்த்திக்.


ஏனெனில் அவள் இப்போது பார்க்கும் அந்த ஈவென்டுக்கு எனதீ தனி பிஸ்னஸே உள்ளது. சில மில்லியன் டாலர்களுக்கு வியாபாரம் நடக்கும் அதை அவர்களை விடுத்து வாசுவைச்  செய்யச் சொல்வதன் மூலம், சாதாரண பணிப் பெண் வேலையில் இருக்கும் வாசுவின் திறமையை முதலாளியான ருத்ரா திருடுவது போல் பட்டது அவனுக்கு.


" கார்த்திப்பா நான் சொல்றத கேட்டுட்டு என்னைத் திட்டுங்க. நேத்து என்ன நடந்ததுன்னா... " என ருத்ராவின் காரை உடைத்ததைப் பற்றி சொல்ல, ஜோஹிதா கார்த்திக்கை முறைத்தாள்.


'பாரு நீ குடுத்த ஐடியாவால வந்த வினைய. ' என்பது போல் பார்க்க, அவன் அலட்டிக் கொள்ளவில்லை.


" ஓகே... அவெ கார உடைச்சதுக்கு நஷ்ட ஈடா இந்த ஈவென்ட்ட ப்ளான் பண்ணித் தரச் சொன்னானா?" என்றவனின் முகம் சற்று கடுமையாகவே இருந்தது.


"இல்ல கார்த்திப்பா. இன்னைக்கி என்ன நடந்ததுன்னா…." என் நடந்ததைச் சொல்ல தொடங்கினாள்.


காலை பத்து மணிக்கு தான் பணிக்கு வந்தாள் வாசு. அது தானே அவளின் நேரம். எட்டு மணிக்கு வர சொன்னால் எப்படி?


வழக்கமாக வரும் நேரத்தில் அவள் வர, நான்ஸி, " மகாராணி வர்ற நேரமா இது. போ... இன்னைக்கும் போய் வாங்கிக் கட்டிக்க. தினமும் தான் திட்டு வாங்குற. ஆனா உனக்கு ரோசம் மட்டும் வரவே மாட்டேங்கிது. " என நக்கலாகச் சொல்லி அவளைபீ பின் தொடர,


' உன்னை விட எனக்கு ரோசம் அதிகம் தான். வந்து பாரு டி வறுத்தப் பல்லி… யாரு வாங்கிக் கட்டிக்க போறான்னு. உன்னோட சப்ப மூக்கு உடஞ்சி விழுறத பாக்கும் போது செம்மையா இருக்கும்‌‌. ' என‌ மனதிற்குள் சிரித்தபடி ருத்ராவின் அலுவலக அறையைத் தட்ட, இருவரும் ஒரு சேர நுழைந்தனர்.


வாசு வாய் திறக்கும் முன் நான்ஸி வாசுவைக் குறை சொல்ல, ஒரு கரம் உயர்த்தி பேச்சை நிறுத்த சொன்னான் ருத்ரா.


'நான் பாத்துக்கிறேன். நீ போகலாம். ' என்பது போல் கை அசைக்க,


"ஸார்‌ இவ இன்னைக்கும் லேட்டா வந்திருக்கா. ரொம்ப லேட்டா. " என நான்ஸி இழுக்க,


" I will take care Miss. please. " எனக் கதவைக் காட்ட, முகம்‌ கறுத்தபடி செல்லும் அந்த roasted lizard பார்க்கையில் குதுகலமாக இருந்தது வாசுவிற்கு. நான்ஸி சென்றதும் அவள் வேகமாக வந்து அன்று ருத்ரா அமர்ந்திருந்த ஈஸி சேரில் உட்கார்ந்து கொண்டு அவனை போலவே ஆட்டினாள்.


" வாசு... "


" ம்… "


" நாம பேசணும். "


"எனக்கு காது கேக்குது. என்ன வழி சொல்ல போற..‌. " என்றவளின் பார்வை அங்கிருந்த ஒரு ஃபோர்டில் பட்டது. அதில் வாசு தர வேண்டிய ஒன் மில்லியன் டாலர். அதாவது 1000000 டாலரைத் தனி தனி இலக்கங்களாக பிரித்து எழுதியிருந்தான்.


1 0 0 0 0 0 0 என்றிருந்தது அந்தப் பலகையில்.


 " What's this. " என எழுந்து சென்று அந்தப் பலகையை அருகில் சென்றாள்.


" இது தான் உனக்கு நான் காட்டுற வழி. உன்னோட வெர்க்கிங் டயம் பழைய படி10-6  தான். சன்டே லீவ். இதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீயோ… ஐ மீன் நம்ம பிரேக்கப்புக்கு முன்னாடி வரைக்கும். அதே வேலைய மட்டும் நீ செஞ்சாபீ போதும். நோ more Too much work.


ஈவினிங் நீ ஊர் சுத்தலாம். உன்னோட டீம் மெட்ஸ்ஸோட சேந்து மேச்ட் விளையாடலாம். இதெல்லாம் மாறக்கூடாதுன்னா நீ எனக்கு ரெண்டு விசயம் பண்ணணும். "


"என்னதது? "


" நீ என்னை இம்ப்ரஸ் பண்ணணும். "


" வாட். இம்ப்ரஸ்ஸா. " எனக் கேட்டு சத்தமாகச் சிரித்தாள் வாசு.


"எஸ்... நான் இன்னும் டூ வீக்ஸ்தா இங்க இருப்பேன். அதுக்குள்ள நீ என்னை எவ்வளவுக்கெவ்வளவு இம்பரஸ் பண்றியோ. அதுக்கு ஏத்த மாதிரி நான் ஒரு ஒரு ஜீரோவா கட் பண்ணிட்டு வருவேன். நீ எனக்குப் பணம் தர தேவையில்ல.‌ ஜஸ்ட் என்னோட கவனத்த கவர்ந்து உன்னை நான் பாராட்டுற மாதிரி… நல்லா கவனிச்சுக்கோ பாராட்டுற மாதிரி…” என்று அழுத்தம் கொடுத்தவன், 


“நடந்துக்கிட்டா போதும். என்ன ஓகேவா? " என்க,


"ம்… ஓகே தா. ஆனா இந்த டூ வீக்ஸ்ல நான் உன்னை அட்ராக்ட் பண்ணலன்னா‌!!. என்ன ஆகும்? ம். ஏன்னா எனக்குப் பசங்களோட கவனத்த எம்பக்க கவருற திறம இருந்திருந்தா இன்னேரம் சொல்லிக்கிற மாதிரி மூணு பாய் ஃப்ரெண்டாவது கிடைச்சிருப்பாங்க. அப்படி எதுவும் இல்ல. அதா சந்தேகம்."


"நீ ட்ரெய் பண்ணு‌. ஒன்னும் பண்ண முடியலன்னா... டூ வீக்ஸ் முடியுறப்ப என்ன பண்ணணும்னு சொல்வேன். "


"அத இப்பையே சொல்லலாமே?"


"முடியாது... "


"ஏன்?."


"ஏன்னா நான் நா உனக்கு ஆப்சன் தர விரும்பல. நான் சொல்றத நீ செஞ்சி தான் ஆகணும். " என்றான் கறாராக.


"நீ இவ்ளோ அன்பாக் கேக்கும் போது முடியாதுன்னு சொல்லிட்டா அப்றம் நீ வருத்த படுவ. காசு வாங்காத பகவான கஷ்டப்படுத்த கூடாது. உன்னோட முதல் டீலுக்கு எனக்குச் சம்மதம். அடுத்தது. ‍"


"உன்னோட டயம் எனக்கு வேணும். "


"ஹாங்... என்ன சொன்ன‌?. டயம்மா!!. நேரத்த டப்பா போட்டு அடச்சி ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருக்கு கிஃப்ட் பண்ண முடியுமா என்ன‌‌? "


"ம்… முடியும். நீ எங்கூட டயம் ஸ்பென்ட் பண்ணா. அது உன்னோட நேரத்த எனக்கு கிஃப்ட் பண்ண மாதிரி தான். " என்க, அவள் புரியாது சில நொடிகள் புருவம் சுருக்கினாள்‌. பின்,


"ஓ… நீயும் நானும் சேர்ந்து பொழுது போக்கணும். அப்படி தான?"


"எக்சாட்லி… உன்னோட ஈவினிங் 6-8. அது எனக்கான நேரம். இந்த டூ வீக்ஸ்ஸும். சன்டே உட்பட. "


"சன்டே மட்டும் மார்னிங் மீட் பண்ணிக்கலாமே. ‍"


"ஏன்?. "


"அது கார்த்திப்பா கூட நான். " என இழுக்க,


"Daddy's girl. " என்றான் புன்னகையுடன்.


"நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க. நான் கவல பட மாட்டேன். " என்றவள் அவனின் முன் வந்து நின்று பணிவுடன்…


" ஸார்… நான் இப்ப என்னோட ட்யூட்டிய பாக்க போலாமாக்?" என்க.


"எஸ்... ஈவினிங் மீட் பண்ணலாம். " என்று சொல்லி அனுப்பினான் ருத்ரா.


"சோ, அவன இம்ப்ரஸ் பண்ண நீ இந்த ஈவென்ட் வெர்க்க பாத்திட்டு இருக்க? " கார்த்திகேயன்.


"எஸ்… "


" ஆனா நீ பண்ற வேலையால அவன இம்ப்ரஸ் பண்ண முடியும்னு நம்புறியா? " ஜோஹிதா.


" ஏன் இந்தச் சந்தேகம் ஜோஹிம்மா. நான் 100% நம்புகிறேன். ஏன்னா அவெ ஒரு பிஸ்னஸ் மேன். "


"புரியல வாசு."


"ஜோஹிம்மா, இப்ப துணிக்கடக்காரன இம்ப்ரஸ் பண்ணணும்னா நல்ல நல்ல டிரெஸ்ஸா போட்டுட்டு போய் அவெ முன்னாடி ரேப் வாக் பண்ணனா போதும்.


அதே இது grocery shopகாரன்ட்ட தரமான மளிகை சாமான் பத்தி பேசுனா இம்ப்ரஸ் ஆகிடுவான். ஏன் நம்ம கார்த்திப்பா மாதிரியான செஃப்பா இம்பரஸ் பண்ண சமயக்கட்டுக்குள்ள போய் மூக்கு நாக்கு வயிறுன்னு எல்லாத்தையும் கவருற மாதிரித் திருப்தியா சமச்சி தரும்போது… கார்த்திப்பா க்ளோஸ்.


அதே மாதிரி ருத்ரா பிஸ்னஸ் மேன். அவனோட பிஸ்னஸ்ஸ வச்சி தான் அவன இம்பரஸ் பண்ண முடியும். அதுமட்டுமில்ல இங்க வந்து தங்குன மூணு வாரமும் அவெ சரியில்ல ஜோஹிம்மா. எப்பயும் டென்ஷனாவே திரியுறான். எல்லாம் பிஸ்னஸ் டென்ஷன் தான். அதக் குறைக்க என்னாலான சின்ன உதவி. அவ்ளோ தான். "  என்றவளைக் கார்த்திக் உற்று பார்த்தான்.


மகளின் விழிகளில் ருத்ராவிற்காகத் தவிப்பைக் காண முடிந்தது. அவனின் கவலை இவளையும் கவலை கொள்ள செய்வதை உணர முடிந்தது அவனால். எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு. அவனில் அவளை உணர்வும் அவளுள் அவனை உணர்த்தவும் வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாள் என்று பட்டது கார்த்திக்கிற்கு. 


எனவே அவள் மடிகணினியில் இருந்த திட்டத்தில் தனக்குத் தெரிந்த குறைபாடுகளை நீக்கி, சில ஐடியாக்களையும் கொடுக்க, வாசு சந்தோஷமாக எழுந்தாள்.


" தேங்க்ஸ் கார்த்திப்பா. எல்லாம் பக்காவா இருக்கு. சீக்கிரம் வாங்க. இன்னைக்கி நான் உங்க கூட தான் தூங்க போறேன். " என்று சொல்லி சென்றாள் தன் அறைக்கு.


"வாசு ருத்ராவ இம்பரஸ் பண்ண போய் அவமானப்பட்டு நிக்கப்போறாளோன்னு பயம்மா இருக்கு கார்த்திக்.‌. "


" உனக்கு ஏன் அப்படி தோணுது?"


"ஏன்னா இது பெரிய வேலை. அவளுக்கு அனுபவம் கிடையாது."


"பட் ரசனை இருக்கே. அதுவே போதும். "


"இருந்தாலும் ஈவென்ட்ட மிஸ்டேக் இல்லாம ப்ளான் பண்ற அளவுக்கு கிடையாதே. ஒருவேளை அவ நினைச்ச மாதிரி சரியா நடக்கலன்னா.  வாசு மனசொடஞ்சி போய்டுவா. "


"இல்ல... ருத்ரா அவனோட லைஃப் பார்ட்னர பிஸ்னஸ் பார்ட்னரா மாத்த ட்ரெயினிங் குடுக்குற மாதிரி இருக்கு. சோ அவெ பாத்துப்பான்."


"லைஃப் பார்ட்னரா!!. ருத்ரா இன்னும் நம்ம வாசுவ மேரேஜ் பண்ணிக்க சம்மதிக்கலயே கார்த்திக். அப்றம் எப்படி? "


"கூடிய சீக்கிரம் சொல்லுவான். நாம வாசுவோட கல்யாணம் ரொம்ப ரொம்ப சீக்கிரமா நடக்கப் போது. நாம அதுக்கு தயாரா இருக்கணும். நீ எப்ப உங்கம்மாவ பாக்க ஊருக்கு கிளம்புறன்னு சொன்ன?"


"தீபாவளிக்கு அடுத்த நாள். "


"இன்னும் உங்கம்மா சென்னைல தான் இருக்காங்களா?. இல்ல… "


"சென்னை தான். உன்னோட மாமியார் குடும்ப இருக்கு. " என்க, அவன் திரும்பி அவளைப் பார்த்தான்.


" நீயும் எங்கூட இந்தியா வந்தா நல்லா இருக்கும் கார்த்திக். என்னோட அம்மாவ பாக்க சென்னைக்கி வேண்டாம், நாம படிச்ச காலேஜ் ஃபங்ஷனுக்கு வரலாமே. ப்ளீஸ்... " என்க.


"உனக்கு எல்லாம் தெரியும் தான ஜோஹிதா. என்னைப் பத்தி என்னோட லைஃப்ல நடந்தத பத்தி… நான் எதையுமே உங்கிட்ட மறைக்கல. ஓப்பன்னாத்தா இருந்திருக்கேன்‌. அங்க என்ன நடந்ததுன்னு உனக்கு நல்லா தெரிஞ்சும் என்னைக் கூப்பிடுற… வேண்டாம் ஜோஹிதா. நிம்மதி இல்லன்னாலும் நாம நம்ம வாசுவோட சந்தோஷமாத்தான் இருக்கோம். அந்தச் சந்தோஷத்தையும் நான் கெடுத்துக்க விரும்பல.  " என்றான் உறுதியாக.


ஜோஹிதா முகம் வேதனையில் நிறைந்திருப்பதை உணர்ந்தாலும் சமாதானம் செய்யும் எண்ணம் இல்லாமல் அறை வாயிலை அடைந்தவன் திரும்பி அவளைப் பார்த்து.


" ரொம்ப நாள் தங்கிடாத. சீக்கிரம் வந்திடு ஜோஹிதா. I can't without you. " என்று சொல்லி செல்ல, ஜோஹிதாவின் முகம் பூவாய் மலர்ந்தது.


ஜோஹிதாவைப் பொருத்த வரை. அனலும் அவன் தான் பனியும் அவன் தான்.


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


நேசிப்பாயா 66

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...