அத்தியாயம்: 68
ஓரிடத்தில் நிற்க இயலாது இங்கும் அங்கும் நடை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள் வாசு. பதட்டமாக இருந்தது அவளின் முகம் மட்டுமல்லாது உடலும் தான்.
" வாசு நீ ரெடியா?" என்றபடி வந்தான் ருத்ரா.
வெள்ளை நிற டீசர்ட் அணிந்து அதன் மேல் அடர் சிவப்பு நிற blazer. ஜெல் கொண்டு தன் சிகையையும் பங்கையும் கலையாது காத்தவன், தன் சில சென்டிமீட்டர் வளர்ந்திருக்கும் மீசையை உதடுகளை மடித்து தடவிய படி அவளின் முன் வந்து நிற்க,
'மனசுல எவ்ளோ டென்ஷன் இருந்தாலும் இவனப் பாக்கும் போது மட்டும் அந்த மானெங்கெட்ட மனசு இவன ரசிக்க சொல்லுது. ஏன்? ' என்ற விடை தெரியாத கேள்வியைக் கேட்டு அவளின் விழிகள் அவனை ரசிக்கும் பார்வைப் பார்த்தாலும், உடல் மொழி பதட்டத்தையே காட்டியது.
"அப்படியே நின்னா எப்படி? வா டைம் ஆகுது " என அவளைத் தாண்டி முன்னே நடக்க,
"ருத்ரா... இது… வேண்டாமே. நா… நான்…” என இழுத்தவள்,
“என்னோட வேலை அது கிடையாது ருத்ரா. ப்ளிஸ். நீ பண்ண சொன்ன. நான் பண்ணி தந்துட்டேன். அதுக்கு மேல வர்றத நீ தான் பாக்கணும். நான் இல்ல. அதுமட்டுமில்லாம நாம கான்ட்ராக்ட்ல இது மாதிரி எதுவும் இல்ல. சோ நான் போறேன். சரியா... பை." எனப் படபடவென பொறிந்து விட்டு, அவனைத் தாண்டிச் செல்ல பார்த்தவளின் கரம் பற்றி நிறுத்தினான் ருத்ராதேவ்.
" வாசு… இது உன்னோட டிசைன். நீ தான் அத எக்ப்ளைன் பண்ணணும். அதுமட்டுமில்ல நான் சொல்றத செய்யுறதாத் தான் கான்ட்ராக்ட்ல போட்டிருக்கோம். நீயும் அத ஒத்துக்கிட்ட. ஓகே... பிகு பண்ணாம வா." என்க, கரத்தை வேகமாக உறுவிக் கொண்டவள்.
" எனக்குப் பயம்மா இருக்கு ருத்ரா. நான் இதுவர இந்த மாதிரி கான்ஃப்ரன்ஸ்லாம் அட்டன் பண்ணது இல்லை. கோர்ட்டு சூட் போட்டுட்டு மைக்கையும் தண்ணி க்ளாஸையும், முன்னாடி வச்சிட்டு, எல்லாரும் என்னோட வாயையே பாத்துட்டு இருக்கும் போது... பேச்சு எப்படிக் குளறாம வரும்? அந்தப் பெரிய மனுஷனுங்க முன்னாடி அவமானப்பட என்னால முடியாது. நான் அதுக்கு தயாரா இல்ல. ஓகே… அது உன்னோட ஹோட்டல்ஸ். நீயே எல்லாத்துக்கிட்டையும் பேசு. " என்றவளைச் செல்ல விட்டு விடுவானா அவன்.
காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்தவள் தன் தினசரி வேலைகளை முடித்துவிட்டு பன்னிரண்டு மணி போல் அவனின் அறைக்கு வந்தாள். க்றிஸ்மஸ் ஈவெண்டுக்காகப் போட்டு வைத்த திட்டத்தை அவனுக்கு விளக்கிக் கூறினாள்.
அதில் அவளுக்குள்ள ஆர்வத்தை வாய் மட்டுமல்ல அவளின் கைகள், கண்கள், காதில் தொங்கிய தோசைக்கல் அளவு வட்டமான கம்மலும் சேர்ந்து சொல்லியது. அது அவனைக் கவர, அவன் அவளின் கையில் பெண்கள் அணியும் கோர்ட், சூட்டை ஒன்றை கொடுத்து மத்திய உணவு வேளை முடிந்ததும் தன்னைக் காண அலுவலக அறைக்கு வரும் படி கூறினான்.
ஏன் என்று தெரியாத போதும் அலங்காரம் செய்து கொண்டு அலுவலக அறைக்குள் செல்ல, அவன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அவளின் ஃபோன் சிணுங்க, அழைத்தது க்ரிஷ்.
" வாழ்த்துக்கள் மிஸ் வாசவி கார்த்திகேயன். " என்றான் எடுத்த எடுப்பிலேயே.
"தேங்க்ஸ் யூ. ஆமா எதுக்கு வாழ்த்துக்கள் க்ரிஷ்?. " எனப் புரியாமல் கேட்க,
"எதுக்குன்னா… இன்னைல இருந்து நீயும் எங்க MET க்ரூப்ல ஒருத்தியா மாறப்போறதுக்கு... "
"என்ன சொல்றீங்க க்ரீஷ்? எனக்கு ஒன்னும் புரியல. " என்றாள் வாசு.
வாசு போட்டு வைத்திருந்த ஈவென்ட் ப்ளான் MET குழுமத்தின் ஃபோர்ட் மீட்டிங்கில் அனைத்து Directors முன்னிலையிலும் அவளே ப்ரசென்ட் செய்து எக்ப்ளைன் செய்ய ருத்ரா ஏற்பாடு செய்துள்ளான்.
"வாட்!. நானா.? "
"ம்… நீ தான். ப்ளான் சூப்பரா வந்திருக்குன்னு தேவ் சொன்னான். அதா ஒரு All the best… எங்க குழுமத்துல இணைஞ்சதுக்கு ஒரு congratulationனும் சொல்லிடலாம்னு கூப்பிட்டேன். "
"தைரியமா ப்ரஷென்ட் பண்ணு வாசு. நாங்களும் உன்னை வீடியோல பாப்போம். உன்னோட ஸ்பீச்ச கேக்க நாங்க ரெண்டு பேருமே ஆவலா இருக்கோம். All the best. " என்றாள் தாரிகா.
"என்ன நீங்களும் இருப்பிங்கள? "
"ம்... நாங்க மட்டுமில்ல. MET groups சோட board members எல்லாரும் இருப்போம். க்றிஸ்மஸ் பெரிய ஈவென்ட் இல்லையா.!" என்க வாசுவிற்குப் பயப்பந்து உருள தொடங்கி விட்டது.
ஒருவர், இருவர் என்றால் பேசிவிடலாம். ஆனால் அங்கே இருக்கப் போவது முப்பதுக்கும் அதிகமான குழும உறுப்பினர்கள். ஹோட்டல் பிஸ்னஸின் பார்ட்னர்ஸ்.
"எனக்கு செட்டாகாது ருத்ரா. நான் வரல. நீ ஏன் என்கிட்ட கேக்காம இதெல்லாம் ஏற்பாடு பண்ற?. " என் அவனைக் கடிய,
"நான் எதுக்கு உங்கிட்ட கேக்கணும்? " எனப் பதில் கேள்வி கேட்டான் அவன்.
அவளின் முதலாளியாக மாறியிருந்த ருத்ரதேவ்வை ஒன்றும் சொல்ல முடியாது முறைத்துப் பார்த்தாள் வாசு.
" ஃபைவ் மினிட்ஸ் தான் டைம். சீக்கிரம் வந்து சேரு. " என மனசாட்சியே இல்லாமல் சொல்லிச் சென்றவனை, எதுவும் பேச முடியாது கார்த்திகேயனுக்கு அழைத்தாள். நடந்ததைச் சொல்லி புலம்பினாள்.
கார்த்திக்கின் உதடுகள் ருத்ராவை நினைத்து பெருமையில் விரிந்தன. மகளின் திறமைக்கு அவன் தந்த அங்கிகாரத்தை நினைத்து கர்வமும் வந்தது.
'ச்ச அந்த பொடியெ எனக்கு மருமகனான வந்திடுவான் போலயே. ' என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.
" வாசு எம்பொண்ணால எந்த ஒரு க்ரிட்டிக்கலான சூழ்நிலையையும் சமாளிச்சி வர முடியும். நான் அவள அந்த அளவுக்கு தைரியமா வளத்திருக்கேன்னு நம்புறேன். உன்னால நிச்சயமா முடியும் வாசு." என அவளுக்குத் தைரியம் சொல்ல,
"ஆனா கார்த்திப்பா... அங்க இருக்குற எல்லாருமே என்னை விட திறமையான பலரப் பாத்தவங்க. நா... நான் கத்துக்குட்டி கார்த்திப்பா. " நம்பிக்கையற்று பேச,
" வாசு… பிறக்கும் போதே எல்லாரும் எல்லாத்தையும் கத்துக்கிட்டு வர்றது இல்ல. "
"ஆனாலும்… "
"எல்லாத்துக்கும் ஆரம்பம்னு ஒன்னு இருக்கும் வாசு. அது பர்ஃபெக்ட்டா இருக்காது. நம்ம நினைச்ச படி எதுவும் நடக்காது. பட், அது தான் நம்மோட முன்னேற்றத்துக்கு நாம எடுத்து வக்கிற முதல் அடி. விழுந்தாலும் பரவாயில்லை வாசு. துணிஞ்சி செய். என்னைக்கும் உனக்கு பக்க பலமா நான் இருப்பேன். " என்க, புது தெம்பு வந்தது அவளுக்கு. கூடவே,
' இந்த டயலாக்க அவெ சொல்லி அந்த வீடியோ கான்ஃப்ரன்ஸ்ஸுக்கு கைய பிடிச்சி கூட்டீட்டு போயிருந்தான்னா நல்லா இருக்கும்.' என்று ஏங்கியது அவளின் மனம். ஆனால் அவன் அவளைத் திரும்பியும் பாராது சென்று அவனின் நாற்காலியில் அமர்ந்து கொண்டானே.
ஐய்யோ பாவம்... அவனுடைய அந்த அலட்சியமே ‘நல்லா பண்ணணும் வாசு… யூ கேன் டூ இட்’. என்ற முடிவுடன் அந்த மீட்டிங்கில் தன் ப்ளானை சிறப்புடன் விளக்கி கூறினாள்.
ஆரம்பம் தடுமாற்றமாக அமைந்தாலும், எந்த இடத்திலும் குழப்பாமல், சந்தேகம் என்று இடையே இடையே சிலர் அவளிடம் கேள்விகளை கேட்டாலும் தெளிவாக இலகுவாக அனைவருக்கும் புரியும் படி இருந்தது அவளின் பேச்சு. க்ரிஷ் எழுந்து நின்று கரகோஷம் செய்தான் என்றால் பாருங்களே.
"இந்த நேரம் மட்டும் எம்பக்கத்துல நின்று பேசியிருந்தன்னா என்னோட அப்ரிஷேஷன நான் வேற விதமா சொல்லிருப்பேன். " என்ற க்ரிஷை அடக்க தாரிகாவைத் தவிர வேறு யாராலும் முடியாது.
" இன்னைக்கி நீ என்னை இம்ப்ரஸ் பண்ணிட்ட ஸ்வீட்டி. சோ... அதுக்கு கிஃப்ட்டும்... பாராட்டும் உண்டு. " என்றவன் அவள் தரவேண்டும் என்று எழுதி வைத்திருந்தானே அந்த ஃபோர்டுக்குச் சென்று இரு பூஜ்ஜியங்களின் மீது பெருக்கல் அடையாளத்தைப் போட்டான்.
" ரெண்டு... வாவ்… ரெண்டு ஜீரோஸ். " என விழி விரிய நின்றவனின் முன் வந்தவன் அவளை அணைக்காது, விரிந்திருந்த அவளின் கண்களின் முத்தமிட்டு,
" நீ ப்ளான் பண்ண ஈவென்ட்டுக்கு ஒன்னு. அடுத்து இப்ப நின்னு பேசுன உன்னோட தைரியத்துக்கு. முன் அனுபவம் இல்லன்னாலும் சிறப்பா பண்ண. " எனப் பாராட்டி இரு இமைகளுக்கு மேலும் உதடுகளை ஒற்றி எடுத்தான்.
கன்னங்கள் சூடாகி நாணம் வந்தாலும், அதை ஒதுக்கித் தள்ளி விட்டு,
"ஆக்சலி இது எல்லாமே கார்த்திப்பா குடுத்த தைரியம் தான். என்னோட கார்த்திப்பா இல்லன்னா. " என அவள் பேசி முடிக்கும் முன்னே,
" ஈவினிங் பௌலிங் விளையாட கேம் ஷோன்க்கு வந்திடு. இப்ப நீ போலாம். " என்றான் முதலாளியாக.
"எப்பப் பாத்தாலும் கார்த்திப்பா கார்த்திப்பான்னுட்ட. அந்தாள தவிர இவளுக்கு பேச எதுவுமே கிடையாதா. " என அவனின் உதடுகள் முணுமுணுத்தன.
தன்னுடைய முதலாளியாக இருக்கும் ருத்ரதேவ்வை ஒன்றும் செய்யாது, மாலையில் விளையாட வந்த அவனுடன் மல்லுக்கு நின்றாள் வாசு.
ருத்ராவின் நாள்கள் பகல் வேளையில் அவளுடன் சண்டையாகவும், மாலையில் அவளைச் சமாதானம் செய்வதுமாக சென்றன.
கொஞ்சம் கோபம். நிறைய சண்டை. ஜோஹிதா சொன்னதை போல் சண்டை போட்டாலும் வேகமாக சமாதானமாகினர் இருவரும். பேச்சு, கேலி, கிண்டல், சீண்டல் அவ்வபோது சின்னச் சின்ன முத்தம் எனக் கழிக்கும் அந்த மாலைப் பொழுது இருவருக்குமே ஸ்பெஷலாக இருந்தது.
அவளின் டீம் மெட். அதான் அந்தப் பள்ளி செல்லாதக் குழந்தைகளுடன் சேர்ந்து ஃபேஸ் பால். சன்டே இளைஞர்களுடன் புட்பால். தினமும் மால் ஷாப்பிங் என இருவரும் மீண்டும் நெருங்கி பழகத் தொடங்கி இருந்தனர்.
"கார்த்திப்பா... கார்த்திப்பா… இன்னைக்கி என்ன நடந்ததுன்னு தெரியுமா... " என ஜோஹிதாவையும் கார்த்திக்கையும் அமரவைத்து இரவு கதை சொல்லினாள் வாசு.
"ம்… அப்றம். " கார்த்திக்கின் குரலில் சுரத்தை இல்லை.
"என்னாச்சி கார்த்திப்பா?"
"மறுபடியும் ஹெல்த் இன்பெஷன் வந்தானுங்க. இந்த மொற மெமோ குடுத்துட்டு போயிருக்கானுங்க. " என்றான் டேனியல்.
கடையில் வைத்தல்லவா கதை சொன்னாள். அதான் டேனியலும் வில்லியமும் இருந்தனர்.
வில், " நேத்து லன்ச் சாப்பிட்ட ஒரு கஸ்டமருக்கு ஹெல்த் இஸ்யூவாம். அதுக்கு நம்ம ஹோட்டல் தான் காரணம்னு செக் பண்ணி வான் பண்ணீட்டு போனானுங்க. "
"எல்லாம் அந்த ருத்ரா வேலை தானா கார்த்திப்பா. " என்றபோது கோபம் வந்தது ருத்ராவின் மேல் வாசுவிற்கு.
"அப்படில்லாம் இருக்காது வாசு. " என்றாள் ஜோஹிதா.
ருத்ராவிற்கு ஆதரவாக கரம் நீட்டும் ஒரே ஆள்.
"சும்மாச் சொல்லாதீங்க ஆன்டி. எப்பப் பாத்தாலும் அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு. முதல்ல இவள அவெங்கிட்ட வேலை பாக்க வேண்டாம்னு சொல்லுங்க. ஒரு மிரட்டல்காரெங்கூட இவ்ளோ நேரமா ஊர் சுத்திட்டு இருந்துட்டு, இங்க வந்ததும் நல்லா நடிக்கிற. " என்றான் டேனியல் கடுப்புடன்.
"சும்மா இரு டேனி. நான் ஒன்னும் ஊர்லாம் சுத்தல. ஓகே. " எனச் சூடாக வாசு சொல்ல,
"ஆமா ஜஸ்ட் ஷாப்பிங் தான். ரெண்டு மணி நேரமா அவனோட தோள்ல தொங்கிக்கிட்டே… ஸ்ட்ரீட் வாக்." என வில் கேலியாக.
"வில் நீயுமா?. இவெங்கூட சேராத. பேட் பாய். உன்னையும் எப்படிக் கெடுத்து வச்சிருக்கான் பாரு. "
" இவன அப்றமா கெடுக்கலாம். இப்ப கார்த்தி அங்கிள விட்டுடுட சொல்லி உன்னோட பாய் ஃப்ரெண்ட்டுட்ட ரெக்கமெண்ட பண்ணலாம்ல. "
"அவெ இப்ப என்னோட பாய் ஃப்ரெண்ட் இல்ல. எக்ஸ் பாய் ஃப்ரெண்ட். "
"பாருடா... ஒரு பாய் ஃப்ரெண்ட்டுக்காக அழஞ்சவ. இப்ப எக்ஸ் பாய் ஃப்ரெண்ட்டெல்லாம் வச்சிருக்கா. " எனக் கேலி செய்ய, ஜோஹிதா புன்னகையுடன் இருந்தாள்.
கார்த்திக் எழுந்து சமயலறை சென்றான். வாசு, முகம் கலங்கி புருவம் சுருக்கிக் கார்த்திக்கை பார்க்க,
"சின்ன அப்செட். சரியாகிடும். உங்கார்த்திப்பா எல்லாத்துயும் சமாளிப்பான். don't worry. " என ஜோஹிதா சமாதானம் சொல்ல, அவனின் பின்னாலேயே வாசுவும் எழுந்து சென்றாள். அடுத்த சிறிது நேரத்தில் இருவரின் பேச்சு சத்தமும் சிரிக்கும் சத்தமும் மட்டுமே கேட்டது வெளியே இருந்தவர்களுக்கு.
"வாசுகிட்ட மேஜிக் இருக்கு. கார்த்தி அங்கிளோட மூட மாத்துற மேஜிக்." என்றான் டேனியல்.
"ம் மேஜிக் தான் டேனியல். அது வாசுகிட்ட மட்டுமில்ல. ஒவ்வொரு பெண் குழந்தைங்களுக்கும் இருக்கு. அவங்க அப்பாங்களோட மூட மாத்துற மேஜிக். " ஜோஹிதா.
" நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டாங்கள்ல. " என டேனியல் பூதாகரமாக கேட்க,
"தப்பா எடுத்துக்கிற அளவுக்கு என்ன கேக்க போற?."
" நான் பாத்த வர, உங்களுக்கும் கார்த்தி அங்கிளுக்கும் சம்திங் எதோ சரி இல்ல. அது என்னன்று எனக்குத் தெரியல. தெரியவும் வேண்டாம். அது உங்க பர்ஸ்னல். இப்ப எனக்கு என்ன தெரியணும்னா…. எப்படி உங்களுக்குள்ள ஒத்து போது. ஐ மீன் ஒரு ப்ராப்ளம் உங்களுக்குள்ள இருக்கும் போதும். நீங்க ரெண்டு பேரும் ஒன்னா.. ஒரே ஃபேமிலியா… சந்தோஷமா… எப்படி இருக்கீங்க? " என்க ஜோஹிதா சிரித்தாள்.
" லவ்…" என்ற சொல்லி.
"என்னால நம்ப முடியல. ஒருத்தர் மேல வைக்கிற லவ் அப்பிடியேவா இருக்கும் கடைசி வர. மாறாதா என்ன? "
"கண்டிப்பா மாறாது. நீ உன்னோட லவ்வ கம்பேர் பண்ணாம இருந்தா. "
"புரியல. " என்க, ஜோஹிதா கண்ணாடி டம்ளரில் தன் விரல் விட்டு ஒரு துளி நீரை எடுத்து டேபிளில் வைத்தாள். அதை சுட்டிக்காட்டி,
" இது உன்னோட லவ். அது பெருசு. ஆழமானது. உன்னோட பார்வைக்கு இப்ப வரைக்கும் இது தான் பெருசா தெரியும். இந்த லவ் அதோட சைஸ்ஸ மாத்திக்காது. அப்படியேத்தா இருக்கும். கடைசி வர.
இது எப்ப உனக்கு சின்ன தான் தெரியும் அப்படின்னா. அது பக்கத்துல இன்னொரு ட்ராப் தண்ணீய வைக்கிறவர. சிம்பிள்ளா சொல்லணும்னா ஒரு கோட்ட சின்னதா மாத்த அது பக்கத்துல இன்னொரு கோடு போட்டு கம்பேர் பண்ணி பாப்போமே அது மாதிரி. நீ கோடு போடுறதுனால ஆல்ரெடி இருந்த கோடு மாறப்போறது இல்ல. அப்படியே தான் இருக்கும். லவ்வும் அப்படித்தான்.
எப்ப உன்னோட மனசுல பயம், நம்பிக்கயின்ம, சந்தேகம், பொறாமன்னு பக்கத்தில நிறைய கோடு நீளமா வந்து சேரும் போது, அந்த லவ் சின்னதா மாறி உன்னோட கவனத்த விட்டு போய்டும். ஆனா அந்த லவ் என்னைக்கும் அதோட சைஸ்ஸ மாத்தது." என்க டேனியலின் முகம் யோசனையில் விழுந்தது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..