முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 69


 

அத்தியாயம்: 69


"டேனியல்... என்னாச்சி? புரியாததா பேசி உங்கிட்ட மொக்க போட்டுட்டேனா. " ஜோஹிதா. வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருந்தவனின் முகம் பார்த்து கேட்க,


"இல்ல... அப்படி இல்ல. " என அவசர அவசரமாகச் சொன்னவன், "இப்ப என்னோட லவ்வ நான் தக்கவச்சிக்க அத நம்பணும்னு சொல்றீங்க. அத தவிர வேற எதுலையும் என்னோட போக்கஸ் இருக்க கூடாது. சரியா."


"எஸ்."


" தேவையில்லாதத பத்தி யோசிச்சி என்னோட லவ்வ நான் டேமேஜ் பண்ணிக்க கூடாது. கரெட்டா… "


"ம்… எல்லாத்தையும் சரியா சொல்றீயேப்பா‌ நீ. " எனச் சொல்லி சிரிக்க‍,


"என்னோட ஃபேரன்ஸ்ஸ பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும் ஆன்டி. அவங்களால நான் பட்ட கஷ்டம். அப்றம்." எனத் தயங்க,


"என்ன சொல்ல நினைக்கிறீயோ அத ஓப்பனா பேசு டேனியல்.”


"ஓகே…  நான் தன்யாவ லவ் பண்ணது உங்களுக்குத் தெரியுமா?. வாசு எதாவது சொன்னாளா?. "


"இல்ல. வாசு சொல்லல. ஒன் மினிட் தன்யா யாரு? ருத்ராவோட ரிலேஷன்னா?. "


ஆம் என்பது போல் தலையசைத்தான்.


"லவ் பண்ணதுன்னா என்ன அர்த்தம்! இப்ப நீங்க ப்ரேக்கப் பண்ணிக்கிட்டீங்களா?" எனக் கேட்க. டேனியல் நடந்ததைச் சொன்னான்.


"இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஆன்டி. அவளக் கல்யாணம் பண்ணிட்டு ஹப்பியா வாழ முடியும்ன்னு எனக்குல் தோணல. என்னோட ஃபேரன்ஸ் எப்படி வாழ்ந்தாங்கன்னு எனக்குத் தெரியும். நிச்சயம் அது மாதிரி இருக்க மாட்டோம். ஆனாலும் என்னோட எதிர் காலத்த நினைச்சா பயம் வருது ஆன்டி. அதே நேரம் குழந்தை.


டெய்லி பேபிய ஸ்கேன் பண்ண வீடியோஸ்ஸ அனுப்புறா. அதுல சின்னதா.. புள்ளியா… அசையிற  என்னோட குழந்தையப் பாக்க பாக்க, எதுவோ பண்ணது உள்ளுக்குள்ள. உடம்புல இருக்குற மொத்த செல்லுக்கும் புதுசா ரத்தம் பாயிற மாதிரி இருக்கு. என்னோட பேபி. அது என்னோட உயிரணு.


நம்ம வாசு எப்படிக் கார்த்திப்பாவ சுத்தி சுத்தி வாராளோ அது மாதிரி டேனிப்பா டேனிப்பான்னு தினமும் என்னோட கனவுல வந்து அதோட பிஞ்சி கையால அடிக்கிது. அது கூட விளையாடுறது. அதத் தூக்கி வச்சி கொஞ்சிறதுன்னு. தினமும் கனவு வருது ஆன்டி. எனக்கு என்னோட குழந்த வேணும். அதுக்கு நான் என்ன பண்ணணும். " என்க ஜோஹிதா எழுந்து சென்றாள்.


"ப்ராப்ளம கேட்டுட்டு அதுக்கு உங்க கருத்தம் சொல்லாம போனா என்ன அர்த்தம் ஆன்டி. "


" ப்ராப்ளத்துக்கு தீர்வ கையிலயே வச்சிட்டு சுற்றுற உன்னை மாதிரி ஒரு முட்டாளுக்கு என்னோட கருத்து தேவப்படாதுன்னு அர்த்தம். " 


" ஓகே. இப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க.  அப்பத்தான் என்னோட குழந்த எங்கைக்கு வரும். சரியா. " முகமலர்ச்சியுடன் கேட்க,


"இல்ல. நீ அவள கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது தான் பெஸ்ட். உனக்கு பேபி வேணும்னா வேற யார் மூலமாச்சும்‌ பெத்துக்க. "


"நீங்களும் வாசு மாதிரியே பேசுறிங்க. "


"நிஜமாவா? அவளுக்கு அவளோட லவ்வுல மட்டும் தான் சரியா முடிவெடுக்க தெரியல. அடுத்தவெ காதலுக்கு நல்ல நல்ல ஐடியாலாம் குடுத்திருக்கா பாரேன். " எனச் சிரிக்க, டேனியல் முழித்தான்.


"ஆன்டி நான் கொஞ்சம் மரக்கட்ட தான். கற்பூரம் மாதிரி வேகமாப் பத்திக்க எனக்கு தெரியாது. புரியிற மாதிரி…. " என இழுக்க, ஜோஹிதா புன்னகையுடன் அவனின் முன் வந்து நின்றாள்.


" டேனி நீ எப்பயும் உன்னோட பக்கம் மட்டுமே இருந்து யோசிக்கிற. தன்யாவோட மனசு. அதப் புரிஞ்சிக்க கூட நீ முயற்சி பண்ண மாட்டேங்கிறியே. ஏன்?" என்றவளின் முகத்தில் சிறு கோபம் இருக்க,


" எப்படித் தன்யா குழந்தைய பெத்து உங்கிட்ட குடுப்பான்னு நினைக்கிற? குழந்தங்கிறது உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற லவ்வுக்கான அடையாளமே தவிர, அது கல்யாணத்துக்கான காரணமா இருக்க கூடாது. இருக்காது.


உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற காதல அந்த குழந்த அதிகமாக்குமே தவிர. காதல உருவாக்காது டேனியல். உனக்குத் தன்யா‌ மேல காதல் இருந்திருந்தா… அந்தக் காதல் உன்னோட யூஸ்லஸ் பயத்தவிட பெருசா தெரிஞ்சிருந்தா இன்னேரம் நீ அவள கல்யாணம் பண்ணிருப்ப. அப்படி பண்ணலங்கிறப்போ உனக்கு தன்யா மேல இருக்குறது லவ்வே கிடையாது. சோ அவள அவளோட பாதைல சந்தோஷமா போக விட்டுடு.  " என்க டேனியல் மீண்டும் சிந்திக்க தொடங்கினான்.


'இவனுக்கு தான் மூளையே கிடையாதே. அப்றம் எதுக்கு யோசிக்கிறான். எப்படி யோசிச்சாலும் தப்பு தப்பாத்தா முடுவெடுக்க போறான். இடியட். ' என முணுமுணுத்தபடி ஜோஹிதா சென்று விட்டாள்.‌.


"ஆன்டி சொல்றது சரிதா. அவளாது சந்தோஷமா இருக்கட்டும். ஆனா அது என்னோட பேபி. அது எனக்கு வேணும். அதக் குடுத்துட்டு அவ சந்தோஷமா இருக்கட்டும். " என்ற முடிவெடுத்தான் டேனியல்.


' தன்யா யாரனாலும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழட்டும். அந்தக் குழந்தைய மட்டும் எங்கிட்ட குடுத்திடட்டும். ' எனத் தன்யாவின் சந்தோஷம் அவன் தான் என்பது புரியாது முடிவெடுத்து உள்ளான்.


இது சரிதானா என வெகு நேரமாக முகத்தை உம்மென வைத்துக் கொண்டு, புருவங்களை சுருக்கு சுருக்கு யோசித்துக் கொண்டிருந்தவனின் கண்களுக்கு கிச்சனில் இருந்து தட்டுடன் வெளியே வந்த வாசு தெரிந்தாள்‌.


"ஜோஹிம்மா இது உங்களுக்காக. நானும் கார்த்திப்பாவும் சேந்து செஞ்சோம். " எனத் தட்டை நீட்ட, ஜோஹிதாவின் முகம் அஷ்டகோணலாக மாறியது.‌


"கார்த்திக் என்னதிது?"


ஜோஹிதாவிற்கு சீஸ் பிடிக்காது. பிடிக்காது என்பதை விட உடல் எடை போடும் என அதிகம் சாப்பிட மாட்டாள். ஆனால் அந்தத் தட்டில் வெறும் சீஸ் மட்டும் தான் தெரிந்தது. ஜம்போ சீஸ் தோசை. இதை உண்டால் அவரின் டயட் என்னவாவது.? கட்டுடல் தான் என்னாவது?


"எனக்கு எதுவும் தெரியாது ஜோஹிதா. எல்லாம் உம்பொண்ணு பண்ணிட்டு என்னையும் கூட்டு சேத்துக்கிறா நம்பாத அவள. " கார்த்திக். 


டென்ஷன் தீர்ந்து விட்டது போலும். உற்சாகமாகவே பேசினான்.


"அவரு பொய் சொல்றாரு ஜோஹிம்மா. உங்களுக்காக அவரோட கையாலயே மாவ கல்லுல ஊத்தி… வெஜிடபில்ஸ் போட்டு... சீஸ் துருவி... ம்… எல்லாம் உங்களுக்கு தான். ஆ காட்டுங்க. " என‌ ஒரு பிட்டு தன் தாய்க்கு ஊட்ட வர,


"எனக்கு வேணாம் வாசு. என்ன கார்த்திக் பாத்துட்டு இருக்க, சொல்லு உம்பொண்ணுட்ட. நைட் டயம் இதச் சாப்பிட்டா டைஜிஸ்ட்க்கு லேட்டாகும். உடம்பு கெயிட் போய்டும்.‌ தூக்கமே வராது. நோ. " என்க, வாசு கார்த்திக்கைப் பார்த்தாள்.


"எனக்கு எதுவும் தெரியாது நீயாச்சு உம்பொண்ணாச்சி. " எனப் புன்னகையுடன் சொல்ல, வாசு ஜோஹிதாவிற்கு ஊட்டி விட்டு‌ அலுச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.‌


இது தினமும் நடக்கும் கூத்து தான். ஆனால் டேனியலின் கண்ணிற்கு மட்டும் கார்த்திக் அவனாகவும் ஜோஹிதா தன்யாவாகவும். வாசு தன்யாவின் சாயலில் உள்ள அவர்களின் குழந்தை போலும் தெரிய,


'ஒரு வேள தன்யாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா, இவங்கள மாதிரி ஒரு சந்தோஷமான குடும்பமா எங்களோட லைஃப் இருக்குமா.? ஐய்யோ... இப்ப நான் என்ன பண்ணணும். யாராது சொல்லுங்களேப்பா. ப்ளீஸ். ' என மீண்டும் குழப்ப நிலைக்கே சென்றான்.


__________


நேரம் காலை பத்து மணி இருக்கும். ருத்ரா அப்போது தான் குளியலறைக்குள் புகுந்தான். நேற்றிலிருந்தே அவனுக்கு டென்ஷன். பிஸ்னஸ் காரணமாக இரவு சரியாக உறங்காது ‌தவித்தவனை, சூரியன் வந்து உச்சி வானில் உலாவரும் போது தான் நித்திராதேவி ஆட்கொண்டிருந்தாள். 


அந்தக் காலைவேளையில் கூட புத்துணர்ச்சி வரும் முன்னே அலைபேசி மூலம் அவனை மீண்டும் டென்ஷனிக்கி விட்டிருந்தனர் யாரோ. எரிச்சலுடன் குளியலைக்கு செல்ல, அங்கு அவனுக்கு வர வேண்டிய சுடு நீர் வரவில்லை. வாசுவின் வேலை தான்.


என்னதான் சமாதான உடன்படுக்கை செய்து கொண்டாலும், ருத்ராவை அவ்வபோது இப்படி பழி வாங்குவாள்‌. அவளும் செய்ய மாட்டாள் அடுத்தவரையும் செய்ய விட மாட்டாள்.‌


அந்தப் பனி காலத்தில் குளிர்ந்த நீர் உடலை முள்ளாய் குத்த, வாசுவை திட்டியபடி குளித்து முடித்தவனுக்கு தலை வலிப்பது போல் இருந்தது.‌


உடை மாற்ற வந்தவனுக்கு வெளியே கேட்ட சத்தம்‌ அந்த வலியை அதிகரித்தது.‌.


ருத்ரா, படுக்கை அறையில் இருக்க., சத்தம் விசிட்டிங் ஹாலில் இருந்து வந்தது.‌ அது வேக்கம் க்ளீனரின் ஒலி. வாசு தான் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.


ருத்ராவின் தலைவலிக்குக் காரணம் வேக்கம் க்ளீனர் அல்ல. வாசு தான். வேலை செய்யும் போது அலுப்பு தெரியாமல் இருக்க, பாடல் கேட்டுக்கொண்டும் பாடிக் கொண்டும், சில நேரம் ஆடிக் கொண்டும் வேலை செய்வாள். இப்போதும் அதே போல் தான் செய்து கொண்டிருக்கிறாள்.


ருத்ராவின் சத்தம் கேட்காததால் அவன் அறையில் இல்லை என முடிவு செய்து வேக்கம் க்ளீனரை விட சத்தமாக பாடினாள் அவள்.


" Stop this nonsense…" எனக் கத்த, அவளின் காதில் அது கேட்கவில்லை. வேகமா அவளின் அருகில் சென்று அவள் காதில் இருந்த ப்ளூடூத்தைத் தூக்கி வீசி எறிந்தான் அவன்.


"ஐய்யோ என்னோட ப்ளூடூத். " என தேடியவளுக்கு அது கிடைக்காது போக, அவள் கோபமாக அவனை முறைத்தாள்.‌


அவளின் பார்வைக்குச் சளைக்காது அவனும் பார்த்தான். தாமதமாக வந்ததற்கு ஒரு திட்டு. கதவை தாழிட்டதற்கு ஒரு திட்டு. அவனின் காலை பொழுதை கன்றாவியாக்கியதற்கு ஒரு திட்டு என விடாது சில நிமிடங்கள் அவளைத் திட்டி தீர்த்தான் ‌ருத்ரா.


'ச்ச... திட்டுறதுல எந்தவித குறையும் வக்காம திட்டுறானேப்பா. சாயங்காலம் பாத்துக்கலாம். ஒவ்வொரு திட்டுக்கும் இவெங்கிட்ட இருந்து ஒவ்வொரு ஐஸ்கிரீம ‌பிடுங்கிடணும்.' என மனதிற்குள் நினைத்தபடியே‌ வெளியே செல்ல போக, அவளின் ப்ளூடூத் அவன் கைக்கு சிக்கியது.


"ஏய் இந்த குப்பையையும் எடுத்துட்டு போ. " என்க.


'ஒரு குப்பையை இன்னொன்றை பார்த்து குப்பை என்கிறதே அடடா ஆச்சர்யம் குறி.‌' என மனதிற்குள் கவிபாடியவள் பவ்வியமாக அவனிடம் இருந்து வாங்கும் முன், அதில் ஒலித்த பாடல் அவனின் காதுகளை நிறைத்தது.


பேசாத மொழி ஒன்றில் காவியமா

தானாக உருவான ஓவியமா

தாயின்றி கருவான ஓருயிரா

ஆதாரம் இல்லாத காதலா

கனயிடைவெளியில் கரம்பிடிப்பாயா

கரைதொடும் வரையில் மனம் முடிப்பாயா


"என்ன பாட்டு இது. " என்றவனுக்கு அதன் வரிகள் மிகவும் பிடித்திருந்தது. மனதை வருடியது.


"இது பொன்னியின் செல்வன் படத்துல வர்ற பாட்டு. ஏஆர்ரகுமான் இசைல அந்தரா நந்தியோட வாய்ஸ் செம்மையா இருக்குள்ள. நானும் கார்த்திப்பாவும் நேத்து தான் அந்தப் படத்த தியேட்டர்ல பாத்தோம். எல்லாப் பாட்டும் எனக்குப் பிடிச்சிருந்தது. ரிப்பீட் மேடுல வைச்சி இன்னைக்குள்ள எல்லாப் பாட்டையும் மனப்பாடம் பண்ணணும். " என உற்சாகமாக அவனின் முன் வந்து பேச,


'மனப்பாடம் பண்ணப்போறாளா. ' என வியப்புடன் பார்த்தான் ருத்ரா.


சில பாடல்களை இசைக்காக கேட்போம். சில பாடல்களை பாடியவரின் குரலுக்காக கேட்போம். சில பாடல்களை அதன் வரிகளுக்காக கேட்போம். வாசு இதில் மூன்றாவது ரகம். பாடல் வரிகளின் மீது இணையில்லா பிரியம். மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு அனைத்தையும் விடாது கேட்பாள்.


ப்ளூடூத்தின் ஒன்றை ருத்ராவின் காதில் வைத்தவள் மற்றொன்றை எடுத்து தன் செவியில் வைத்து தலையசைத்து கேட்க, ருத்ராவின் டென்ஷன் பறந்து சென்றது. பாடலாலா அல்ல வாசுவாலா. அவனிடம் தான்‌ கேட்க வேண்டும்.


" செம்மையா இருக்குள்ள. டேனியலுக்கு இந்த பாட்டு பிடிக்கலன்னு சென்னான். இன்னைக்கி இருக்கு அவனுக்கு. நேத்து படம் பார்க்கும் போதே கேலி பண்ணிட்டு இருந்தான். " என்க.


"டேனியலும் படத்துக்கு வந்தானா?"


"ம்... வந்தான். எம்பக்கத்துல உக்காந்து தான் படம் பாத்தான். பட் தொனதொனன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு உயிர எடுத்துட்டான். இடியட். அவனுக்கு விளக்கம் சொல்லியே நான் சரியாப் படத்த பாக்கல. இன்னைக்கும் மூவிக்கு டிக்கெட் வாங்கிருக்கான். அவன பழிவாங்க சரியான நேரம் இது. " எனத் திட்டம் போட,


"எப்ப போனிங்க படத்துக்கு?. எட்டு மணி வர எங்கூட தான இருந்த. அப்பறம் எப்படி.? " அவனின் குரலில் பொறாமை இருந்தது.


" நைட் ஷோ ப்பா... அதான் காலைல எந்திரிக்க லேட் ஆகி வேலைக்கி வரவும் லேட் ஆகிடுச்சி. " என அசடு வழிந்த படி காரணம் சொல்ல, ருத்ரா அவளின் முதலாளியாக மாறித் திட்டி துரத்தி விட்டான்.


'ச்ச அன்னியன் மாதிரி இவனுக்குள்ள எத்தன பர்ஷ்னாலட்டி இருக்கோ. தெரியல. நான் இந்த உழைப்பாளிக்கி நடு கடல்ல சிலை வைக்க சொல்லி இப்பவே ப்ரஷிடெண்டுக்கு மெயில் போடுறேன். ரொம்பத்தா பண்றான். ' என முணுமுணுத்த படியே அவள் சென்றான்.


' இந்த டேனியல் சமீபகாலமா ரொம்ப சந்தோஷமா இருக்கான் போலயே.  நைட் ஷோ படத்துக்கு போற அளவுக்கு சந்தோஷமா இருக்கான். நாளைக்கி வேற படத்துக்கு போறானாமே. இந்த தன்யா என்ன தான் பண்ற.' என்றபடி ருத்ரா தன்யாவை‌க் காணச் சென்றான். அவனின் அடுத்த கட்ட திட்டத்தை செயல் படுத்த.



தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...