முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 70

 

அத்தியாயம்: 70


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு


வள்ளுவர் காதலின் சிறப்பை ஏழடியில் கூறியுள்ளார்.‌


அதாவது உடலோடு உயிருக்குள்ள தொடர்பைப் போல் அவள் மீது தான் கொண்ட அன்பு. 


உயிரின்றி உடல் வெறும் கூடு. அதுபோல் அவள் இன்றி நான் இல்லை. இதை ருத்ரா சில நாட்களாக உணர்ந்து கொண்டிருக்கிறான். வாசுவுடன் அவன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் விலை மதிப்பற்ற மிகப் பெரிய புதையலாக நினைத்து அதை தன் நெஞ்சில் புதைத்து வைத்துள்ளான். 


அவள் மீது அவன் கொண்ட காதல் என்னும் புயல்.‌ அவளின் விழியில் மையம் கொண்டு கரையைக் கடக்கத் துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாலோ என்னவோ அவளிடம் இருந்து விலகியே நடக்கிறான் போலும். 


ருத்ரா விலகி இருக்கும் பெண் என்றால் அது வாசவி மட்டுமே. தன்யா சொல்வது போல் சோஷியல் டிஸ்டென்ஸ்ஸை வாசுவிடம் மட்டுமே கடைபிடிக்கிறான். 


பள்ளியில் படிக்கும் போது அவனுக்குப் பெண் ரசிகைகளின் கூட்டம் அதிகம். யாரையும் ஏமாற்றாது உடன் தாராளமாக பழகுவான். ஊர் சுற்றுவான். நெருக்கம் என்பது உடலோடு மட்டும் தான் இருக்குமே தவிர மனத்தில் அவர்கள் யாருமே நின்றது கிடையாது. 


ம்.‌.. நெருக்கம் என்றவுடன் கண்டபடி யோசிக்க வேண்டாம். இங்கு நெருக்கம் என்பது இடையணைத்து இதழணைத்து உடல் அணைப்பதே தவிர, கட்டிலில் உறவு கொண்டாடுவது இல்லை. அமிர்தாவின் வளர்ப்பு அப்படி. 


அவன் உறவாட நினைப்பதும். அவன் மனத்தை நிறைப்பதும் வாசவி மட்டும். எங்கே அவளைத் தொட்டால் அடக்கி வைத்திருக்கும் காதல் ஆட்டோ பாம் போல் வெடித்து விடுமோ என்பதற்காக, தன் உணர்ச்சிகளை அவளிடம் வெளிக்காட்டாது மறைத்து வைப்பது, அந்த ஆண்மகனுக்குக் கடினமாக இருக்கிறது. 


உடலும் மனமும் சேர்ந்து அவளின் அருகாமையில் புது உயிர் பெறுவது போல் தோன்றியது அவனுக்கு. இன்னும் சில நாள்கள் தான் அவன் அந்த ஊரில் இருக்கபோகும் நாள்கள். கார்த்திகேயனுக்கு அவன் கொடுத்த கெடு முடியப்போகும் நாள்களும் தொலைவில் இல்லை. 


இதுவரை கார்த்திகேயனுக்கு விரித்த வலையில் அவன் சிக்காது போக, எவ்வித முன்னேற்றமும் இன்றி தன் திட்டங்கள் கிணற்றில் போட்ட கல் போல் அசையாது கிடப்பது அவனுள் ஓர் அழுத்தத்தை உண்டாக்கியது நிஜம். 


அந்த அழுத்தத்தை வாசுவால் எதுவும் செய்ய இயலாது. ஆனால் அவனின் தொழில் ரீதியாக வரும் பல அழுத்தங்களை வாசு‌ குறைக்க உதவினாள். அவள் தர வேண்டியதாக சொன்ன பூஜ்ஜியங்களில் இப்போது இரண்டு மட்டுமே மீதி உள்ளன. மற்ற அனைத்தையும் அவனை இம்ப்ரஸ் செய்து கழித்து விட்டாள்.‌


இப்போது ஒரு துணிக்கடையில் உள்ளனர் இருவரும். பல கவர்களை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையில் ஐஸ்கிரீம்மைச் சுவைத்துக் கொண்டும் வந்தாள் வாசு. சில அடி இடைவெளி விட்டு. 


அவளை ஒரு பார்வை பார்த்தவனின் மனம் இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை இல்லாமல் ஆக்கச் சொல்லி தவிக்க, அதை அடக்கி தன் கரத்தை பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்த படி நடந்தான் அவன். 


கரங்கள் கன்ட்ரோல் மீறி தன்னவளின் இடையணைத்துவிடுமோ என்பதால் அந்தச் சிறை தண்டனைப் போலும். 


"ருத்ரா…" என ஆசையாக மேலே விழுந்து பழகும் ரகம் அல்ல வாசு. ஆனாலும் அப்படி பழக மாட்டாளா என மனம் தவிக்கும். 


அவனின் தவிப்பை உணராது அவளோ கடையில் உள்ள ஒவ்வொரு சட்டையாக அவனை தொடாது கவனாம அவனின் மீது வைத்து அழகு பார்த்துக் கொண்டு இருந்தாள். 


" ச்ச… எதுவுமே எனக்குப் பிடிக்கல. உனக்கு. " 


"நீ தான் கிஃப்ட் பண்றேன்னு சொல்லு கூட்டீட்டு வந்த. அப்ப உனக்குப் பிடிச்ச மாதிரி எடு. எனக்கு நீ குடுத்தா எதுனாலும் ஓகே தான். " என்க, நிமிர்ந்து அவனைப் பார்த்து சிறு புன்னகைப் பூத்து திரும்பிக் கொண்டாள். அது வெட்கம் கொண்ட புன்னகை எனச் சிவந்திருந்த கன்னங்கள் காட்டிக் கொடுத்தது. 


" ஓகே. அப்ப வொய்ட் எடுப்போம். உங்கிட்ட அந்த கலர்ல ஷர்ட்ட நான் பாத்ததே இல்ல. உன்னோட நிறத்துக்கும் அது அழகா இருக்கும்.  " எனத் தேடி பிடித்து வெள்ளை நிறத்திலேயே சில சட்டைகளை எடுத்து வந்தவள் ட்ரெயல் பார்க்க சொன்னாள். அவனும் சலிக்காது ஒவ்வொன்றாக அவளுக்கு அணிந்து காட்ட, கடைசியாக இரண்டை பில் போட கொடுத்தாள் வாசு குதுகலத்துடன். 


ருத்ராவின் அருகாமை அவளுக்கு எப்போதும் பிடித்த ஒன்றாகும். அவன் அவளுடன் பழகும் விதம். மிகவும் பிடிக்கும். பாஸ் போல் பகலில் நடந்து கொண்டாலும். மாலையில் அவன் காட்டும் அன்பு முகம் ஆசை கொள்ளச் செய்யும். 


கண்ணாடி பாத்திரம் போல் தன்னைக் கவனமாகக் கையாளும் ஆடவனின் மேல் காதல் மேலோங்காமல் இருக்குமா என்ன?.  


" Shirt தவிர வேற எதுக்கோ சேத்து பில் போட்டிருக்க. என்னதது.?" 


" வேஷ்டி. வெல்க்ரோ வேட்டி. " 


"யாருக்கு.? உன்னோட அப்பாக்கா?. " என நக்கலாக கேட்க‌, 


" இல்ல டேனியலுக்கும் உனக்கும். " 


"எனக்கா!!. " 


"ம்... கம்மிங்க ஃப்ரைடே தீபாவளி வருது இல்லையா. அதுக்கு இங்க இருக்குற இண்டியஸ் எல்லாரும் சேர்ந்து சின்ன கெட்டுகெதர் மாதிரி ஃபங்ஷன் ஏற்பாடு பண்ணிருக்கோம். அதுக்குப் போடத்தா உனக்கும் டேனியலுக்கும் இந்த டிரெஸ் எடுத்தேன். வேட்டி சட்டை... 


எல்லாரும் அவங்கவங்க ட்ரெடிஸ்னல் டிரெஸ்ல வருவாங்க. அதா உன்னைக் கேக்காமலேயே எடுத்திட்டேன்.‌ அவசியம் நீ அந்த ஃபங்ஷனுக்கு வரணும். இந்த டிரெஸ்ஸ போட்டுட்டு.‌ இது இன்விடேஷன்.  " என அழகிய காகிதத்தில் அச்சிடப்பட்ட அழைப்பிதழை நீட்ட. 


" Very attractive Invitation. but. I am sorry வாசு. என்னால வர முடியாது. " என்க. வாசுவின் புன்னகைத்த முகம் சுருங்கியது. 


"ஏன்?. " 


"ஏன்னா எனக்கு அன்னைக்கி ஒரு முக்கியமான மீட்டிங்க இருக்கு. பெரிய கான்ட்ராக்ட் ஒன்னு கைக்கு வர்ற நாள் அது. சோ... " என இழுக்க.


"நாள் முழுக்க ஃபங்ஷன் செலிப்ரேட் பண்ணப் போறது இல்ல ருத்ரா. ஈவ்னிங் தான். ஆறு மணிக்கி ஆரம்பிச்சி பூஜ பண்ணீட்டு. டான்ஸ் ஷோ நடத்தீட்டு, மத்தாப்பு கொளுத்திட்டு, சாப்டுட்டு எல்லாரும் கிளம்பிடுவோம். ஒன்பது மணிக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும்.” என்றவள், 


“வாயேன். ப்ளீஸ்...‌"என்றாள் ஆசையாகயும் ஏக்கமுமாக.


" நோ… "


"ஒன் ஹவர் கூட வேண்டாம். ஜஸ்ட் நீ வந்துட்டு உடனே கிளம்பினா கூட ஓகே தான். " 


" வாசு…. அது...‌ " 


"எனக்காக... நான் உன்னை வேட்டி சட்டைல பாக்கணும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ். " என ஏக்கத்துடன் அழைத்த அவளை அணைத்து வருவதாக சொல்ல மனம் துடித்தாலும்,


" நோ... " என்றான் இரக்கமற்று. அவனை ஏற இறங்க பார்த்தவள் அவனிடம் கொடுத்த கவரைப் பறித்துக் கொண்டு கோபமாக நடந்தாள். 


" நான் அன்னைக்கி பிஸி வாசு… " 


" இட்ஸ் ஓகே. ஆல் த பெஸ்ட். உங்க கம்பெனிக்கு அந்த கான்ட்ராக்ட்ட கிடைக்க நான் கடவுள வேண்டிக்கிறேன். " என்றவள் கோப நடையுடன் அங்கிருந்து செல்ல,


"ஹேய்… அந்தக் கவரையாது குடுத்துட்டு போ. அன்னைக்கி இல்லன்னாலும். என்னைக்காவது போட்டுக்கிவேன்ல. " 


"தேவையில்ல. நீ போடவே வேண்டாம்." என்றவள் சென்றே விட்டாள். 


அவளுடன் வம்பிழுத்து சண்டை போட்டு சிறுமி போல் கோபம் கொள்ளும் அவளின் முகத்தைப் பார்ப்பதே அவனின் வழக்கமாகிப் போனது. குறுநகையுடன் அன்றிரவு அவளுக்கு மெசேஜ் அனுப்ப, அவள் கோபமாக இருப்பது போன்ற எமோஜிக்களை அனுப்பினாள். இருவரின் சண்டை ஃபோனிலும் தொடர்ந்தது. 


காலை வழக்கம் போல் பணிக்கு வந்தவள் முதல் வேலையாக சென்று ருத்ராவைச் சந்தித்தாள்.‌


"எனக்கு மூணு நாள் லீவ் வேணும். " 


"எதுக்கு? " என்றவனை முறைத்து பார்க்க முடியாது தவித்தாள் அவள். ஏனெனில் அவனுக்குத் தான் காரணம் தெரியுமே. தெரிந்தே அவளைச் சீண்டவென கேட்டால், 


அதிலும்‌ பாஸ் வேறு. இதே கேள்வியை மாலையில் கேட்டிருந்தாள் சட்டையைக் கையை மடித்து விட்ட படி அவனுடன் சண்டைக்குச் சென்றிருப்பாள். இப்போது முடியாது. ‌ச்ச... 


" பர்ஸ்னல். " என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு. 


"தெளிவான பதில் சொல்லாம லீவ்லாம் குடுக்க முடியாது. அதுவும் உனக்கு… நோ சான்ஸ். " என்றவன் லேப்டாப்பில் மூழ்கி விட,


" பரவாயில்லை. நீங்க தந்து நான் எடுத்துக்கு வேண்டிய அவசியம் இல்ல. எனக்கு ஒரு மன்த்துக்கு டூ டேஸ் லீவ் எடுத்துக்க உரிம உண்டு. " என வீராப்பாய் சொல்லி சென்றாள் அவள். 


கதவைத் திறக்கும் முன். 'அந்த ஃபங்ஷனுக்கு வாயேன். ' எனக் கண்களால் அழைப்பு விடுக்க, ருத்ரா அதை பார்த்தாலும் கண்டு கொள்ளவில்லை. எனவே சிறு சோர்வுடன் வெளியே சென்றாள். 


அங்கு செல்வது பிரச்சினை இல்ல. ஆனால் தேவையில்லாமல் மிஸ்டர் கார்த்திகேயன பாக்க வேண்டி வரும். அதான் ருத்ரா வீம்பாக மறுத்தான். 


தீபாவளி நாள் அழகாக விடிந்தது. காலையிலேயே தந்தையும் மகளும் சேர்ந்து பல திட்டங்களைப் போட்டு வைத்திருந்தனர். இருவரும் சேர்ந்து பட்டாசுகளை வெடிக்க.‌. அதிலும் வாசு கையில் பிடித்து பட்டாசை எறிய, ஜோஹிதா தான் பயந்து போனாள். 


மாலையில் புத்தாடை உடுத்தி கார்த்திக் விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டான். விருந்து அவனின் கைவண்ணத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் விரைவாக சென்று விட,


"வாசு ரெடியாகிட்டியா? கார்த்திக் ஃபோன் பண்ணான். பூஜ ஆரம்பிக்க போறதா சொன்னான். நீ இன்னும் என்ன பண்ற? " எனக் கத்தினாள் ஜோஹிதா.‌ 


seafoam green என்ற பச்சை நிற மெல்லிய பார்டர் வைத்த மாம்பழ மஞ்சள்புடவை அது. வாசு தான் தேர்வு செய்தாள். கார்த்திக்கிற்கு அதே மஞ்சள் நிற சட்டையும் கரை வைத்த வேட்டியும். 


அந்தப் புடவையில் அழகோவியமாய் தெரிந்த ஜோஹிதாவை ஒரு பெண்ணின் தாய். அதிலும் நாற்பது வயதைக் கடந்த பெண்மணி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். 


" நானும் உன்னை மாதிரியே ஃபிகர மெயிண்ட்டென் பண்ணணும்னு நினைக்கிறேன். முடியத்தா மாட்டேங்கிது. ஹிம்…" என பெருமூச்சி விட்ட படி உஷா வந்தார். 


" அண்ணா, அஸ்வின் எங்க உஷா?." என்றவள் தயாராகி நின்றிருந்தாள். 


" ரெண்டும் திமிரு பிடிச்சதுக. நான் புடவை கட்ட நேரமாகும்னு சொல்லி என்னை விட்டுட்டு போயிடுச்சிங்க. வீட்டுக்கு வரட்டும் ரெண்டு பேரையும் நல்லா கவனிக்கணும். " என்றார் போலிக் கோபத்துடன்.


" ஆமா எங்க அந்த கழுத?. தாவணி கட்டப்போறதா சொன்னா. கட்டீட்டாளா?. " 


"தெரியல உஷா. கதவையும் திறக்க மாட்டேங்கிறா, வெளியவும் வர மாட்டேங்கிறா.‌ கத்தி கத்தி நா‌ன் தான் டயர்டாகிட்டேன்.‌" 


" அடியே வாசு... ஏய்... வாசவி... இப்ப நீ‌ வரலன்னா நானும் உங்கம்மாவும்  கிளம்பி போய்டுவோம் பாத்துக்க. அப்றம் நீ பட்டாசு வெடிக்க முடியாது. வெடிக்கிறத பாக்கத்தா முடியும். " என உஷா குரல் கொடுக்க, 


" ஐய்யையோ... என்னை விட்டுட்டு போய்டாதீங்க. நானும் வர்றேன். " என்றபடி ஓடி வந்தவளைப் பார்த்தார் இருவருமே அதிர்ந்தனர். 


" என்னடி கோலம் இது. கருமம் கருமம்.  " எனத் தலையில் அடித்துக் கொண்டார் உஷா. ஏனெனில் வாசு பாவாடை ஜாக்கெட்டுடன் வந்திருந்தாள். தாவணியை உடலை சுற்றி இருந்தாள். குளித்து முடித்து துண்டை உடலில் கட்டுவது போல். 


"இப்பத்தா எதைத் தொட்டாலும் யூட்யூப் ல கத்து தர்றானே. பாத்து ஒழுங்க கட்ட வேண்டியது தான. " உஷா.


" பாத்தேன் ஆன்டி. ஆனா இப்டி இப்டி மடிப்பு வைக்க சொன்னாங்க. நானும் அத ரொம்ப நேரமா ட்ரெய் பண்றேன். பட் முடியல. " எனச் சோகமாக சொல்ல,


"ஒரு பொம்பளப்பிள்ளைக்கி இது கூடத் தெரியாதாக்கும். உன்னைச் சொல்லக்கூடாது. உங்கம்மைய சொல்லணும். " என உஷா அவளைத் திட்டிக் கொண்டே கட்டி விட்டார்.‌


" நாளைக்கி புருஷெ வீட்டுக்கு போனா என்னடி பண்ணுவ.‌" 


"அவெ கட்டி விட்டுவான். இல்லன்னா ஆள் வச்சிக்க வேண்டியது தான். " எனச் சிரித்தவளின் கன்னம் தொட்டு வழித்தார் உஷா. 


"இதே மாதிரி நீ எப்பையும் சந்தோஷமா இருக்கணும் வாசு." என்று கண்கள் கலங்க சொல்ல, ஜோஹிதாவும் மகளைப் பார்த்தபடியேத்தான் நின்றாள்.


"என்ன திடீர்னு சென்டிமென்ட் மூடுக்கு போய்டீங்க? " என்றாள் இருவரின் விசித்திர பார்க்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் பொருட்டு.


"ஏன்னா உன்னை மாப்பிள்ள பாக்க வர்றாங்க. கண்டிப்பா இந்த இடம் ஓகே ஆகிடும். அப்றம் நிச்சயம். அடுத்த மாசம் கல்யாணம். நல்லா போனா நாப்பது நாள் தான் எங்க கூட இருப்ப. அதான்… " என்றவர்.


"போற இடத்துல வாயாட கூடாது. பட்டு பட்டுன்னு கோபப்பட்டு வார்த்தைய விட கூடாது. புருஷன அவெ இவென்னு எல்லார் முன்னாடி சொல்லக் கூடாது. அடக்க ஒடுக்கமா நடந்துக்க. " எனப் பலபல அட்வைஸ் தர, வாசு தாயின் முகம் பார்த்தார்.‌


அவர் மகளின் பின்னிய சடையில் மலர் கொத்துக்களை வைக்க, அவரிடம் எதுவும் கேட்கவில்லை. அவளுக்குத் தெரியும் பெற்றவர்கள் இருவரும் தன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பவர்கள் என்று. தன் மனம் அறிந்தவர்கள் என்று. 


ஆதலால் தன் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது என்று புன்னைகையுடன் சென்றாள் அந்தப் பூஜைக்கு.‌


அந்த ஊரில் இருக்கும் கோயிலில் லக்ஷ்மி பூஜை நடந்து கொண்டிருந்தது.‌ கார்த்திகேயனும் முருகனும் இவர்களுக்காக காத்திருக்க, வாசு ஓடிச் சென்றாள் தந்தையிடம். தீபாராதனைக் காட்ட குடும்பமாக நின்று அனைவரும் இறைவரை கண்மூடி வணங்கத் தொடங்கினர். 


எதுவோ ஒன்று தோன்ற வாசு கண் திறந்து, வந்திருந்த அனைவரின் முகத்தையும் உற்று‌ உற்று பார்த்தாள். பின் மனம்‌ சுருங்க சோர்வுடன் மீண்டும் கண் மூடிக் கொண்டாள். 


அப்படி என்ன பாத்தா‌ள்? ஒருவேளை ருத்ரா வர்றானா இல்லையா என்னு பாத்திருப்பாளோ!. அவன் வரவில்லை என்பதால் சோகமாகி விட்டாளோ.! 


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...