முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 71


 

அத்தியாயம்: 71


"உனக்கு ஃபோட்டோ கிராஃபி பத்தி எதாவது தெரியுமா வாசு. " என்றது டேனியல்


"ம்ஹிம்… தெரியாது. எனக்கு போஸ் குடுக்க மட்டும் தான் தெரியும். எதுக்கு கேக்குற? " என்றது வாசு.


"நான் இந்தியால இருக்கும் போது சிலர ஃபோட்டோ எடுத்திருக்கேன். சிலரன்னு சொல்றத விட, ஃபேமிலியன்னு சொல்லலாம். ரொம்ப ஹப்பியா இருப்பாங்க. ஃபோட்டோ கைக்கு வந்ததும் அவங்களோட முகத்த பாக்குறாங்களோ இல்லையோ. பக்கத்துல இருக்குறவங்க முகத்த பாத்தி கேலி பண்ணுவாங்க. ஹாஹ்ஹா ."  என சிரிக்க,


"போதும்… உன்னோட பழங்கதைய கேக்க எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. "


" பட் நான் சொல்ல வர்றதுல ஒரு மேட்டர் இருக்கே."


"என்னதது."


"அது என்னென்னா ஒரு statistics படி உலகத்துல இருக்குற அதிகபட்ச குடும்பங்கள் எல்லாம் எப்படி ஃபோட்டோ எடுக்குறாங்கன்னா…. " என இழுக்க,


" டக்குன்னுலாம் எதையுமே சொல்ல மாட்டியா. எப்பப் பாத்தாலும் ஜவ்வு மிட்டாய் கணக்கா இழுத்துட்டு. "


"ஓகே நீ கோபமா இருக்க. ஆனாலும் நான் சொல்றத சொல்லுவேன். " என்றவனை என்னடா வேணும் என்பது போல் பார்த்தாள் வாசு.


"அது என்னென்னா. பொதுவாக குடும்பமா ஃபோட்டோ எடுக்குறாங்கன்னா அப்ப தன்னோட குழந்தைங்கள பாதுக்காப்பா தங்களுக்கு நடுவுல நிக்க வச்சி தான் எடுப்பாங்க. அப்பா அம்மாக்கு இடைல தான் அவங்க பிள்ளைங்க இருப்பாங்க.


இந்த குட்ஸ் ட்ரெயின் பாத்திருக்கீயா? இன்ஜீனுக்கும் கடைசி பெட்டிக்கும் நடுவல மத்த பெட்டிங்க இருக்குமே. அந்த மாதிரி எத்தன குழந்தைங்க இருந்தாலும் அவங்களுக்கு நடுவுல தான் நிப்பாட்டுவாங்க. அப்படி இல்லன்னா அவங்க நடுவுல நின்னுட்டு குழந்தைங்கள சைடுல விடுவாங்க. 


நடுவுல ஜோடியா நிக்கும் போது. கை எடுத்து இங்க. " என வாசுவின் இடையில் கைப் போட வந்தவனை வாசு முறைக்க,


"ஓகே... நான் உனக்குச் செய்முறை விளக்கம் குடுக்க வேற யாரையாது கூட்டீட்டு வர்றேன். எங்க அந்த வீணாப்போன வில். வில்லியம். வில்லியம். " எனக் கத்த வில் வந்தான். அவனின் தோளில் கைப் போட்டு தன்னோடு அணைத்தவன்,


"இப்படி நிப்பாங்க. அப்படி இல்லன்னா. இடுப்புல கை வப்பாங்க. ரெண்டுமே பப்ளிக்கா பண்ண கூச்சப்படுறவங்கன்னா அட்லீஸ்ட் தோளையாது உரசிட்டு நிப்பாங்க. "


"நிப்பாட்டு. எதுக்கு நீ இதெல்லாம் எங்கிட்ட சொல்ற? "


" இங்க பாரு… கார்த்திக் அங்கிளும் ஜோஹி ஆன்டியும் நிக்கிறத. " எனப் புவனாவின் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தைக் காட்ட, அதில் வாசு கார்த்திக்கின் வலது கையை இறுக அணைத்தபடி நின்றாள். ஜோஹிதா இடது புறம் நின்றாலும் இருவரும் உரசாது இடைவெளி விட்டு நின்றிருந்தனர். அதைப் பார்த்தவளுக்கு மனம் குழம்பியது.


கேலிக்காகக் கூட இல்லை, அறியாமல் கூட இருவரும் அருகருகே நெருக்கி நின்று பாத்தது இல்லையே. ஏன்? என மனம் யோசிக்க,


"நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. கார்த்தித் அங்கிள பாத்தா அப்படி ஒன்னும் வயசானவர் மாதிரித் தெரியல. இந்த ஃபோட்டோவ பாக்கும் போது அவரோ வைஃப் யாருன்னு சந்தேகமா. ஆ…. ஆ… "


"கொன்னுடுவேன் உன்னை. தப்பு தப்பா யோசிச்சிட்டு திரியுற உன்னோட மண்ட மூளைய தட்டி தட்டி எடுக்கபோறேன் பாரு. " எனக் காளியாய் மாறி அவனின் தலையில் மாவாட்டினாள் ரௌத்திரத்துடன்.


"கூல் டவுன் வாசு. கூல் டவுன். ஒரு பேச்சிக்கி. " என்றவன் பேச்சைப் பாதியிலேயே நிறுத்தினான்.


" இந்தப் படத்த பாக்கும் போது நிஜமாவே எனக்குத் தோனுனத நான் சொல்லாம விட்டுட்டேன்னா என்னோட மூள வெடிச்சிடும். "


"அப்ப சாவு. "


" பரவாயில்லை சொல்லிட்டு செத்துடுறேன். " என அவளின் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன்,


"அது என்னென்னா ஜோஹிதா ஆன்டி கார்த்திக் அங்கிளோட ரெண்டாவது மனைவியா இருக்கணும். இல்லன்னா அவருக்கு ரகசிய காதலி ஒன்னு இருந்திருக்கணும். இப்பவரைக்கும் அவரு அந்தப் பொண்ணோட நினப்புலயே இருக்காரு போல.


யாருக்குத் தெரியும் அது before marriage க்கு அப்றமா இல்ல after marriage அப்றமான்னு. ஆனா அவருக்கு உங்கம்மாவ தவிர வேற ஒரு பொண்ணுகூடத் தொடர்பு இருக்கு. அதுனால தான் அவரு ஜோஹி ஆன்டிய விட்டு விலகி இருக்காரு.


ஏன்னா எந்த வயசா இருந்தாலும் ஒரு ஆம்பளைக்கி பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் கண்டிப்பா தேவ. நான் அடிச்சி சொல்லுவேன். அது உன்னோட ஃபேரன்ஸ் ரெண்டு பேத்துக்குள்ள இல்ல. 


அதெப்படி ஒரு ஆம்பள ஒரே பொண்ணுகூட மட்டுமே வாழ முடியும். அலுத்திடாது. ஒரே மூச்சிய பாத்து பாத்து சலிச்சிடாது. கார்த்திக் அங்கிளோட பிகேவியர வச்சி பாக்கும் போது அவரோட லைஃப்ல வேற ஒரு பொண்ணு கூடக் கண்டிப்பா affair இருக்கணும். " என்றவனை வாசு உயிரோடு விட்டதே பெரிய விசயம்.


அன்று, அவன் சொன்ன போது கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. ஆனால் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.


'ச்சச்ச… அப்படில்லாம் இருக்காது. ஜோஹிம்மா சொன்னாங்கல்ல அவங்க கதைய. கார்த்திப்பாவ அதிகமா பேசியே காயப்படுத்திட்டேன்னு. அதா. மத்தபடி ரெண்டு பேரும் Make for each other.' என்று சமாதானம் செய்து கொண்டாள் மனத்தை.


இன்று.


அந்த வீணா போன டேனியல் இப்பொழுது பக்கத்தில் இல்லை என்றாலும், அவனுடைய குரல் காதில்  திடீரென கேட்க, சாமி கும்பிட்டு கொண்ட இருந்தவள், கண் விழித்து பார்த்தாள்.


டேனியல் சொன்ன படி பலர் தங்களின் குழந்தைகளை நடுவே நிறுத்தி இருந்தனர். சிலர் மனைவியை உரசியபடி நின்றிருந்தனர். வயோதிகர்களாக இருந்தாலும் வாழ்ந்து முடித்தவர்களாக இருந்தாலும் மனைவியை விட்டு எந்த கணவனும் பிரிந்து நிற்க வில்லை. திரும்பி உஷா முருகுவைப் பார்க்க, அஸ்வினை இடையே நிறுத்தி இருந்தனர்.


இப்போது தன்னையே பார்த்தாள். தன் இடது கரம் கார்த்திக்கின் வலது கரத்துடன் பிணைந்து பின் சாமி கும்பிட்டபடி இருந்தது. இன்று மட்டுமல்ல என்றுமே கார்த்திக் அவளின் அருகில் இருக்கும் போதும் தன்னிச்சையாக மகளின் கரத்தை தன் கைக்குள் வைத்துக் கொள்வான். அவளும் அப்படித்தான். இப்போது எம்பி ஜோஹிதாவை பார்க்க, அவள் தனித்து தான் நின்றிருந்தாள்.


கார்த்திக்கின் பக்கத்தில் இருந்தாலும் அந்த அன்னியோன்யம் இருவருக்கும் இடையே இல்ல. ஏன்? கல்யாணம் செய்து கொள்வதில் பிரச்சனை என்றால், இப்போது வரை அதை மறக்காமல் இருப்பது நியாயமா? என யோசித்தபடி விழி மூடிக் கொண்டாள்.


இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அது சரியாக இறைவன் மனமார வேண்டினாள் வாசு.


சந்தோஷமான தெளிந்த நீரோடை போல் இருந்து மனம் மாறி கார்மேகம் சூழ்ந்த கடல் போல் கொந்தளித்தது அது.


'எல்லாத்துக்கும் காரணம் அந்த bowled frog தான். டேனியல். உன்னை சும்மா விட மாட்டேன்டா...' என அவனைத் திட்டலாம் எனத் தேட. கண்ணில் சிக்கலில்லை அவன். சரி ஃபோனிலவாது பிடித்துக் கத்தலாம் என்று பார்த்தால், ஃபோனையும் எடுக்க மாட்டேன் என்கிறான். என்ன ஆகிருக்கும்?. ம்…..


"ச்ச. கார்த்திப்பா டேனியல் எங்க? "


"தெரியல வாசும்மா. நேத்துல இருந்தே அவன நான் பாக்கல. " கார்த்திக்.


"உடம்பு சரியில்லயோ? " என அக்கறையாக கேட்க,


"இருக்கலாம் வாசு. அவனோட முகமே சோர்ந்து போய் தான் இருந்தது. ஏன்னு கேட்டதுக்கு பதில் சொல்லல அவெ. " என்றாள்  ஜோஹிதா‌.


"என்னாச்சி அவனுக்கு? " என வாசு யோசிக்க,


" பக்கத்துல எங்கயாது வேலை கிடைக்கிதான்னு பாக்க போயிருப்பான். நீ எதுக்கும்மா கவலப்படுற. " முருகு.


"ம்… அதான. அவன பாத்துக்க அவனுக்குத் தெரியும். ஆமா நீ டான்ஸ் ஆடப்போறேன்னு சொன்னீயே. அது எப்ப?"  உஷா.


" சரியா ஏழு மணிக்கி ஸ்டேஜ் பக்கத்துல வந்திடுன்னு வளவன் அங்கிள் சொன்னாரு ஆன்டி." வாசு.


" காஸ்ட்யூம் மாத்த தேவையில்லையா. "


"இல்லையே. ஏன்னா நான் கோபியர்கள் மாதிரில்ல ஆடப்போறேன். அதுக்கு இது தான் கரெக்ட்டா இருக்கும். சரி தான கார்த்திப்பா. நான் பாக்க ராதை மாதிரி இருக்கேன்னா. " எனத் தன் பட்டுப் பாவாடையைக் கையில் லேசாகத் தூக்கிக் கொண்டு, வட்டம் போட்டு விரித்துக் காட்டினாள் வாசு.


ஒரு முழுப் புடவையையே பாவாடையாகத் தைத்திருப்பார்கள் போலும். அவள் சுழன்ற போது பெரிய வட்டத்தை உண்டாக்கியது. அடர் நீல நிற பெரிய பார்டர். ஒரு ஜானிற்கு மேலேயே உயரமாக இருக்கும் அது. மீதி இடம் வெள்ளை நிறத்தில் இருந்தது. ரவிக்கையும் தாவணியும் நீல நிறம் தான். கண்ணாடியாய் அவளின் உடல் அழகைப் பளிச்சென்று காட்டியது அது.


பெரிய பெரிய தொங்கட்டான்கள் காதில் அசைய, நெற்றியில் கம்மலுக்கு இணையாக ஒரு பெரிய நெத்திச் சுட்டியை அணிந்திருந்தாள் வாசு. தளர்வாக விடாது, கூந்தலை இறுக்கி பிண்ணி.‌ அதில் ஜோஹிதா தந்த நெருக்கமாக மல்லிகை சரம், அவளுக்கென தனி வாசத்தைத் தந்தது.


கழுத்தை நிறைக்க ஒரே ஒரு பெரிய நெக்லஸ். கைகள் இரண்டையும் முழுதாக மூடிவிடும் அளவுக்கு வளையல். இடையில் ஆடை விலகாது இருக்க சிறிய கயிறு போல் ஒட்டியாணம் இருந்தாலும். அதில் பல சங்கிலிகள் தொங்கிக் கொண்டு இருந்தன. கற்கள் பல பதித்து அவளின் இடை முழுவதையும் மின்னச் செய்தது அது. மூக்கில் மின்னிய மூக்குத்தியின் அழகே தனியாக தெரிந்தது அவனுக்கு.


அனைத்தும் தங்கம். கார்த்திகேயன் மகளுக்காக எனத் தேடி தேடி பார்த்து பார்த்து வாங்கியவை அவை. இப்போது அதை அணிந்து அழகின் மொத்த உருவாய் மகளை காண்கையில் தந்தையாய்ப் பூர்த்து போனான் அவன். இப்பொழுது தான் அவளை, தன் உயிரைக் கையில் ஏந்தியது போல் இருந்தது. அதற்குள் அவள் வளர்ந்து திருமணம் என்ற நிலையையும் எட்டி விட்டாள்.


பெற்றவர்கள் இருவரும் மகளின் அழகில் மயங்கி நிற்க, அவளின் தாவணியைப் பிடித்து இழுத்தான் ஒரு இளைஞன்.‌


" ஹேய்… " என கத்தியபடி வாசு திரும்ப, அங்கு ரான் நின்று கொண்டிருந்தான், பைஜாமாவில்.


"ரான், நீ எப்ப வந்த?. வேற யாரும் வரலயா? " என அவளின் மற்ற தோழிகளைக் கண்கள் தேட,


" சர்ப்ரைஸ்... " எனக் கத்தியபடி மற்ற மூவரும் வந்து நின்றனர். லிண்டாவும் மெய்ஸியும் சேவை அணிந்திருந்தனர். விக்டர் வேட்டி சட்டை. நண்பர்களைப் பார்த்த குஷியில் அவர்களுடன் பேசியபடி சென்று விட, ஜோஹிதாவின் ஃபோன் சிணுங்கியது.


" எஸ், அங்க ரைட் சைடு கார்னர்ல ஒரு மியூசிம் இருக்கும். அதுக்குப் பக்கத்துல திரும்புனா, ஸ்ரெயிட் ரோடு தான். "


"... "


"ம்… நான் உங்களுக்காக என்ட்ரன்ஸ்லயே நிக்கிறேன்.".


"... "


"ஓகே… " எனப் புன்னகையுடன் ஃபோனை வைக்க, கார்த்திக் யார் என்று கேட்காது, புருவம் மட்டும் சுருக்கினான்.


" யாருக்கு டி வழி சொல்லிட்டு இருக்க… " என்றார் உஷா.


"அவங்க வந்துட்டு இருக்காங்க. " என்றவளின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி.


" என்ன!! வந்துட்டு இருக்காங்களா!. எங்க வந்துட்டு இருக்காங்களா?. நான் போய் வேணும்னா கூட்டீட்டு வரவா. " முருகு தான் படபடத்தார்.


" அஞ்சி நிமிஷத்துல வந்திடு வாங்கண்ணா. " ஜோஹிதா


" அப்ப வா நாம போய் வாசல்ல நின்னு பூ போட்டு வரவேற்போம். நீயும் வாடா. வரவேற்பு பலமாக இருக்கணும். இல்லன்னா அப்றம் கவனிப்பு சரியில்லன்னு முறுக்கிகிட்டு போய்ட போறாங்க. " எனக் கார்த்திக்கையும் இழுத்து செல்ல, கார்த்திக்கும் சிரித்தபடி உடன் சென்றான்.


வந்தது சிவ்ராம் குடும்பம். அமிர்தா, க்ரிஷ், தாரிகா, மாதேஷ், புவனா, அவளின் கணவன்‌ மார்க் எனக் குடும்பமே வந்திருந்தது.


ஜோஹிதாவும் கார்த்திக்கும் தீபாவளியை எங்களுடன் கொண்டாட வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தனர். க்ரிஷ்ஷை எதிர்பார்த்தான் தான். ஆனால் சந்திக்கவே அப்பாய்ன்மெண்ட் கேட்கும் அளவுக்கு பிஸியான சிவ்ராமே மனைவியுடன் வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.


" ரொம்ப ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாவும் இருக்கு போல. " என்றபடி எதிர்கொண்டார் சிவ்ராம்.


" எதிர்பாராத சந்திப்பு. ஆனாலும் சந்தோஷமா இருக்கு. வாங்க. " என இரு கரம் கூப்பி வரவேற்றான் கார்த்திக்.


" கார்த்தி மாமா. எப்படி இருக்கீங்க?. வாசு எங்க.? என்ன ட்ரெஸ் போட்டிருக்கா?. ட்ரெடிஸ்னல்னு சொன்னா!. சேலையா!. இல்ல... " க்ரிஷ் தான் அது.


"உனக்கு எதுக்கு அது?. " எனத் தாரிகா அவனைக் கையில் கிள்ள, வாசு வந்தாள்.


"  அத்தை, மாமா நல்லா இருக்கீங்களா?" என அமிர்தாவை அணைத்து வரவேற்றாள் வாசு. அவளுக்கு அமிர்தாவை மிகவும் பிடிக்கும். ருத்ராவின் அம்மா என்பதற்காக இல்லை. அனைவரிடமும் அன்பாக பாகுபாடு பார்க்காமல் பழகும் அவரின் குணம் மிகவும் பிடிக்கும்.


" அவங்கல்லாம் நல்லாத்தா இருக்காங்க. நான் தான் நல்லா இல்ல. " க்ரிஷ் சோகமாக சொல்ல,


"ஏன் க்ரிஷ்? தாரிக்காக்கா என்னாச்சி அவருக்கு? "


"அந்த வழிஞ்சல நீயே கேளு. " என்றாள் தாரிகா.‌


"அவங்கள வரவேற்ற மாதிரி என்னையும் நீ வரவேற்றன்னா மனசு ஆரோக்கியமா இருக்கும். அதத்தா சொல்ல வந்தேன். " எனக் க்ரிஷ் தன் சேட்டை தொடங்க, வாசு சிரித்தபடியே மாதேஷைத் தூக்கிக் கொண்டு சென்றாள். 


" ஒரு குழந்தைக்கி அப்பா மாதிரியா நீ பேசுற.! " எனத் தாரிகா கோபமாக விழி உருட்ட,


" How to talk after a child becomes a father அப்படின்னு ஒரு புக் எழுதி கைல குடேன். நான் படிச்சி தெரிஞ்சிக்கிறேன். " எனக் கேலி செய்ய, அவள் கோபமாக நடந்தாள்.


"ச்ச... ஹனி நீ கோபமா இருந்தாலும்  எனக்கும் மட்டும் செம்மையா தெரியுறீயே. ஏற் ஹனி? " என அவளைக் கைகளில் ஏந்தியபடி கேட்க,


"இறக்கி விடு க்ரிஷ். எங்க வச்சி எப்படி நடந்துக்கிற!. " எனச் சிணுங்கினாலும், கணவனின் காதல் அவளை முகம் சிவக்க வைத்தது. அது ஆடவனினைப் போதைக் கொள்ளச் செய்ய, மனைவியை இறக்கி விட்டான். அதற்கு முன் முத்தமிட தவறவில்லை.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அடுத்த பதிவு புதன் கிழமை தான். எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...