முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 72


 

அத்தியாயம்: 72


நவராத்திரி காலங்களில் படிக் கட்டுகளில் வீற்றிருக்கும் கொழு பொம்மை போல் அமர்ந்திருந்தாள் வாசு.


சுற்றி இருந்த அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ள, அவள்‌ மட்டும் அதில் ஒட்டாது தனித்து வேற்று உலகில் இருப்பது போல் இருந்தாள். அவர்களின் பேச்சில் சில புரிந்தாலும்‌‌, பல புரியாது இருக்க, அமைதியாய் குனிந்த தலையுடன் இருந்தாள்.


மனம் நிலையில்லாது தரையில் விழுந்த மீன் போல் துடித்தது. நா வறண்டு நீருக்காக ஏங்கியது. விழிகள் படபடத்தன. உள்ளங்கைகள் வியர்க்க, விரல்களில் சிறு நடுக்கம். தேகம் அடிக்கடி சிலிர்ப்பை ஏற்படுத்த, மயக்கம் வருவது போல் இருந்தது.


அவளின் இந்த நிலைக்குக் காரணம் அவளின் திருமணம் பற்றித் தான் அங்கிருப்பவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.  


அவளின் இந்தச் செயலை வெட்கம் என்று கூடச் சொல்லலாமா, இல்லை வேறு எப்படி சொல்வது என்று தெரியவில்லை.


அமைதியே உருவாய் பெண் போல் அமர்ந்திருந்த வாசுவின் அருகில் வந்தார் அமிர்தா. 


" உனக்கு இதுல சம்மதமாம்மா?" என அவளின் சம்மதம் கேட்க,


என்ன நினைத்தாளோ வாசு வேகமாக அவரின் காலில் விழுந்து தன் விருப்பதைத் தெரிவிக்க, அமிர்தா தன் ஆசிர்வாதங்களைத் தந்து அவளை அணைத்துக் கொண்டார். பின் தாரிகாவை திருப்பிப் பார்த்தார். அவள் தன் கையில் இருந்த டப்பாவை அமிர்தாவின் கையில் தர,


" உன்னை என்னோட இன்னொரு மகளா எங்க வீட்டுக்கு வரவேற்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாசு. இது என்னோட மகளுக்காக. " என்றவர், அந்தப் பெட்டியில் இருந்த வைர நெக்லஸ்ஸை அணிவித்து விட்டார். 


வாசுவின் சம்மதத்தைக் கேட்ட க்ரிஷும் முருகுவும் எழுந்து நின்று கைத் தட்டி தங்களின் ஆரவாரத்தைத் தெரிவித்தனர்.  கார்த்திக்கும் ஜோஹிதாவும் மகளுக்கு மகளின் மனம் விரும்பிய ஒருவனுடனே திருமணம் ஏற்பாடாகி உள்ளதை நினைத்து பூரிப்புடனும், முழுத் திருப்தியுடனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


யாரையும் தலை தூக்கிப் பார்க்கும் அளவுக்குத் தைரியம் என்பது முற்றிலும் வடிந்து போயிருந்தது அவளுக்கு. நேரம் சென்றுகொண்டே இருக்க நண்பர்களும் க்ரிஷ்ஷும் அவளைக் கேலி செய்து கொண்டே இருந்தனர்.


"எனக்காக நீ அந்த வீட்டுக்கு வரலங்கிறத தவிர மத்த எல்லாமே ஹேப்பி நியூஸ் தான். " எனச் சோகமாக க்ரிஷ் சொல்ல, தாரிகா அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.


வாசுவின் திருமணம் தொடர்பாக அனைத்தையும் பேசி முடித்து வந்தவர்களை நன்முறையில் திரும்பி வழியனுப்பி வைத்தனர் கார்த்திகேயன் குடும்பத்தினர்.


என்ன வாசுவுக்கும் ருத்ராக்கும் கல்யாணமா?. இது எப்பொழுது முடிவானது. ருத்ரா அன்று என்னென்னமோ சொன்னானே.‌ அவளுடையக் காதலை அடைந்ததற்குப் பிறகு தான் கல்யாணத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்றிருந்தானே. கார்த்திகேயனை வாசுவின் பார்வையில் இருந்து தரம் இறக்க வேண்டும் என்றிருந்தானே. செய்தானா? வாசு அவளின் காதலை அவனிடம் ஒப்புக் கொண்டாளா? 


எப்படி நடந்தது இந்நப் பெண் பார்க்கும் பாடலம்? யார் இறக்கு அடித்தளமிட்டது? அவன் தான் மாப்பிள்ளை என்றால், அவன் ஏன் பெண்பார்க்கும் படலத்தில் பங்கு கொள்ளவில்லை?


எங்கே அவன்?  


என நீங்கள் கேட்பது புரிகிறது. என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? காலத்த முன்னோக்கி டைம் ட்ராவல் செய்ய வேண்டும். சரியாக இரண்டு மணி நேரத்திற்கு முன், அதாவது சிவ்ராம் குடும்பத்தை உள்ளே கூட்டி வந்து விருந்துபசரித்ததுக்குப் பின்.


வாசுவின் நண்பர்களும் மாதோஷும் குதுகலிக்க, வாசு மேடையில் நடனம் ஆடிக் கொண்டு இருந்தாள்.


கம்சனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்த நாளை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். அந்த நிகழ்வையும் கிருஷ்ணனின் லீலைகளையும் பழைய நாடகமாக இல்லாது நவீன இசை நாடகமாக மேடையில் வாசுவும், அவளை போல் பெண்கள் பலரும் ஆடிக் கொண்டிருந்தனர். அதைத் தூர இருந்து இரு குடும்பமும் பார்த்துக் கொண்டிருந்தனர்.


"வாசு நல்லா டான்ஸ் ஆடுறால்ல. புவனா கல்யாணத்தப்பவே பாத்தேன். அப்பவே அவ எங்க வீட்டு பெண்ணாவே மாறிட்டா. "  என அமிர்தா தன் மகனின் மனம் கவர்ந்தவளை ரசித்து பார்க்க, ஜோஹிதா புன்னகைத்தாள்.


" நாளைக்கி இயர்லி மார்னிங் நீங்க  இந்தியா போறதா க்ரிஷ் சொன்னான். " எனச் சிவ்ராம் கார்த்திகேயனிடம் பேச்சை வளர்க்க,


"ஜோஹிதா மட்டும் தான் போற மிஸ்டர் சிவ்ராம். அதுவும் நாலு நாளைக்கி மட்டும் தான். நானும் வாசுவும் இங்கயே தான் இருப்போம்.‌. "


"ஓ... அப்ப எல்லாரும் இங்க ஒன்னா இருக்கும் போதே பேச வேண்டியத பேசிடலாமா?. "


"என்ன பேசணும்?" எனக் கேட்ட கார்த்திகேயனுக்கு என்னவென்று சட்டென புரியவில்லை.‌


ஏனெனில் ருத்ராவிற்கும் அவனுக்கும் இடையே சில பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அது முடியாத வரை அவனுக்குத் தன்மேல் கோபம் இருக்கும். அது அவன் வாசுவின் மீது வைத்துள்ள காதலையும் பாதிக்கும். அதனால் தான் ருத்ரா திருமண பேச்சைத் தள்ளிப் போட்டுள்ளான் என்பது கார்த்திகேயனுக்குத் தெரியும்..


இருவருக்குள்ளும் இருக்கும் அந்தப் போட்டி முடிய எப்படியும் நாள்கள் ஆகும். குறைந்தது ஓரிரு மாதத்திற்குப் பிறகு தான் வாசுவின் திருமணப் பேச்சையே மீண்டும் எடுப்பார்கள் என்று நினைத்தவனுக்கு, சிவ்ராமின் வருகையும், ருத்ரா வாசுவின் திருமண பேச்சும்‌ அதிர்ச்சியாக இருந்தது. அதை அவன் முகம் காட்டிக் கொடுக்க,


" என்னாச்சி மிஸ்டர் கார்த்திகேயன்? அதிர்ச்சியா!.‌"


"இல்ல… எதிர்பார்த்த ஒன்னு தான். அது இன்னைக்கே நடக்கவும் கொஞ்சம் ஷாக்." எனப் புன்னகைக்க, அவர்கள் எதற்கு வந்துள்ளனர் என்பதை அறிந்து கணவன், மனைவி அமைதியாக இருந்தனர்.


"அப்பத் தள்ளிப்போட்ட விசயத்த‌ சீக்கிரம் முடிச்சிடலாமே." என்றார்  சிவ்ராம்.


" கண்டிப்பா. ஆனா சம்மதிக்க வேண்டிய ஆள் சம்மதிச்ச மாதிரித் தெரியலயே. " என ருத்ராவின் விருப்பத்தைக் கேட்டான் கார்த்திக்.


" அதெப்படி நோ சொல்லுவான். அவனுக்கு‌த் தான் வாசுவ ரொம்ப பிடிக்குமே. பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கக் கசக்குமா என்ன?. " என்றான் க்ரிஷ்.‌


" அப்றம் என்ன!. நாம அடுத்து நடக்க வேண்டியத பாப்போம். எதுக்கு நேரத்த விரையம் பண்ணணும். என்ன மச்சான்.? "  என முருகு குதுகலிக்கத் தொடங்கி விட்டார். அவரின் மருமகளுக்கு அல்லவா திருமணம்.


" இல்ல… ருத்ரா வந்து, என்னோட பொண்ணு வாசவிய கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்குச் சம்மதம்னு சொல்லாம எதுவும் நடக்காது. " எனக் கார்த்திக் உறுதியாக் கூறினான். காரணம் அவர்களுக்குள் நடக்கும் மறைமுக யுத்ததில் வாசுவின் திருமணப் பேச்சு மணல் கயிறாகி விடக் கூடாது என்றும், கல்யாண விடயத்தில் வாசு காயப் பட்டு விடக் கூடாது என்று நினைத்தக் கார்த்திக், ருத்ராவின் சம்மதத்தைக் கேட்காது திருமண பேச்சு வேண்டாம் என்று மறுத்தான். 


அவனின் மறைமுக பயத்தை உணர்ந்த அமிர்தா மகனுக்கு ஃபோன் செய்து அனைவரும் கேட்கும் படி பேசினார்.


"தேவா நாங்க இப்ப Fremont ல இருக்கோம்ப்பா. "


"அதா மார்னிங்கே சொன்னீங்களே மாம். பத்திரமா வந்துட்டீங்களா? நைட்  தங்க நான் நம்ம ஹோட்டலயே ஏற்பாடு செஞ்சிருக்கேன். எனக்கும் இங்க வேலை முடிஞ்சது.‌ நாளைக்கி ஈவ்னிங் நாம எல்லாருமா வீட்டுக்குக் கிளம்பிடலாம்.‌ " என்றவனின் குரலில் உற்சாகம் இருந்ததா என்பதைக் கணிக்க முடியவில்லை. ஆனால் கோபம் இருந்தது.‌ அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினான்.


" இல்ல ருத்ரா, நாங்க இன்னைக்கி நைட்டை San Francisco கிளம்பிடுவோம். அங்க மார்னிங் ஒரு மீட்டிங் இருக்கு. " என்றார் சிவ்ராம்.


"ஓகே டாட். டேக் கேர். இப்ப என்ன விசயமா எனக்கு கால் பண்ணீங்க?"


"தேவா, நாம காலைல பேசினோமே. " என அமிர்தா வாய் எடுத்ததும்,


"மாம்... நான் தான் அப்பவே சொல்லிட்டேனே.‌ நீங்க கூடத் தை மாசம் கல்யாணம், அடுத்த வீக் நிச்சயம் வச்சிக்கலாமான்னு இன்னைக்கி மிஸ்டர் கார்த்திகேயன நேர்ல பாத்து பேசிட்டு வர்றதா சொன்னீங்கலே. ‌‌"


"ஆமா ப்பா. எல்லாருக்கும் அதுல சம்மதம் தான். இருந்தாலும் உன்னோட வாயால இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்டாத்தா அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். என்னப்பா சொல்ற, வாசவி கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு இஷ்டம் தான?" என மகனிடம் வினவினார் அமிர்தா.


"எஸ் மாம். எனக்கு வாசுவ கல்யாண பண்ணிக்கிறதுல முழு சம்மதம். போதுமா!. " என்றவன் பட்டென வைத்துவிட்டான்.


பிறகு என்ன, எப்படித் திருமணத்தை‌ நடத்துவது? என்னென்ன ஏற்பாடுகள் செய்வது? என்று இரு குடும்பத்துத் தலைவர்களும் பேசிக் கொள்ள, ஜோஹிதாவும் அமிர்தாவும் கல்யாண வேலைகளைத் திட்டமிடத் தொடங்கினர். அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று புரியாது வந்தமர்ந்தது வாசு மட்டும் தான்.


அமிர்தா வந்து இன்னொரு மகள், மருமகள் என்று சொல்லும் போது தான் வாசுவின் மனம் மகிழ்ச்சிக் குழியில் குதித்து விளையாட தொடங்கிவிட்டது. முகம் கொள்ளா வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.


இப்படியாக ருத்ரா வாசுவின் திருமணத்தைச் சிவ்ராம் குடும்பம் உறுதிப்படுத்தி விட்டுச் சென்றது.


"என்னால நம்பவே முடியல ஜோஹிதா. மிஸ்டர் சிவ்ராம்மே நேர்ல வந்து நம்ம வாசுவ பொண்ணு கேப்பாருன்னு எதிர்பார்க்கவே இல்ல. நம்ம பொண்ணு குடுத்து வச்சவ. அவளுக்குப் பிடிச்ச மாதிரியும் பையன் கிடைச்சாச்சி. நாம நினைச்ச மாதிரியும் அவளுக்கு ஒரு நல்ல குடும்பம் அமைஞ்சாச்சி. எல்லாம் கடவுள் செயல் தான்.


நீ தான் ஊருக்குப் போறேல்ல. மறக்காம உங்கம்மா அண்ணேன்னு எல்லாத்திட்டையும் நம்ம வாசுவோட கல்யாணத்தப்பத்திச் சொல்லி இங்கக் கூட்டீட்டு வந்திடு. எத்தன நாளைக்கி தான் நீயும் அநாமத்த நிப்ப. உனக்கும் சொந்த பந்தம் வேணும்ல. " என்றது உஷா தான்.


"உஷா!! ஜோஹிதா ஒன்னும் யாருமில்லாம நிக்கல. அவளுக்கு நானும் வாசுவும் இருக்கோம். நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் அவளுக்கு. வேற யாரும் தேவயில்ல. " எனக் காட்டமாகச் சொன்னான் கார்த்திகேயன்.


அவனின் கோபத்தைக் கண்ட ஜோஹிதா, "நான் போறது நம்ம காலேஜ் ஃபங்சனுக்கு மட்டும் தான் உஷா. அவங்கள பாக்கணும்னு இல்ல. எனக்குன்னு ஒரு குடும்ப இங்க இருக்கு. இது தான் எனக்கு முக்கியம்.” என்று உஷாவிடம் சொன்னவள், 


“இப்ப கூட நீ வேண்டாம்னு சொன்னா நான் எங்கயும் போகல கார்த்திக். " எனக் கணவனிடம் முடிக்க, அவளின் கூற்றை மறுத்து கல்லூரி செல்ல சம்மதித்து கார்த்திக் தோட்டத்திற்குச் சென்று யோசனையுடன் அமர்ந்து கொண்டான்.‌‌


"நீ என்னடி!  அவனே சும்மா இருந்தாலும் நீ விட மாட்ட போலயே. என்னதா கோபம் இருந்தாலும் உன்னைப் பெத்தவங்க இல்லன்னு ஆகிடுமா என்ன? நீயும் ஒரு பொம்பளப்பிள்ளயப் பெத்து வச்சிருக்க,


அது விரும்புற ஒருத்தனுக்காக உன்னைத் தூக்கி எறிச்சி பேசினா தெரியும், உங்கம்மா படுற வலி என்னென்னு. " என்க,


"நான் என்னோட பொண்ணு விருப்பத்துக்கு முக்கியத்துவம் குடுப்பேன் உஷா. இந்த ஊர் என்ன பேசும்? சொந்தக்காரங்க என்ன பேசுவாங்க?ன்னு யோசிச்சி அவளோட வாழ்க்கைய எங்கைல எடுத்துக்க மாட்டேன்." என்றாள் ஜோஹிதா. அவளின் பேச்சு புரியாது,


"என்னமோ போ. பிள்ளைங்க தான் பிரிஞ்சிருக்குற குடும்பத்த சேத்து வைக்கும்னு சொல்வாங்க. நடந்தத மறந்துட்டு நீ போய் வாசு கல்யாணத்தப் பத்தி பேசி,‌ உங்கம்மாவ கூட்டீட்டு வா. அவ்ளோ தான் நான் சொல்லுவேன்‌.‌"


" எனக்கு அவங்க யாருமே வேண்டாம் உஷா. நான் உங்கூட வர வேற ஒரு காரணம் இருக்கு‌.‌" என்றபோது ஜோஹிதாவின் முகம் வேதனையிலும் வலியிலும் துடித்தது.


"என்ன டி காரணம்?"


" நாம தான் போறோம்ல. அங்க வந்து பாத்துக்க. வாசுக்குப் பட்டு சேலை நிறைய எடுக்கணும் உஷா.‌ உனக்குப் பாத்து எடுக்க தெரியுமா? " எனப் பேச்சை மாற்றிய தோழியின் வேதனை எதற்கு என்று தான் புரியவே‌ இல்லை உஷாவிற்கு.


" உம்மகள புடவ கட்ட கத்துக்கு சொல்லு. அப்றம் டஜன் கணக்கா வாங்கிட்டு வரலாம்." என உஷா கேலியாகச் சொல்லி வாசுவிற்காக வாங்க வேண்டிய அனைத்தையும் லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர்.


"என்ன மச்சான் கவலயா?. பொண்ணுக்குக் கல்யாணம்னா அப்பனுக்கு பயமும் கவலையும் வர்றது சகஜம் தான. " என்றபடி முருகு, நண்பனின் அருகே அமர.


" காசு செலவாகுதேன்னு பயந்துட்டு நம்ம பொண்ணு கல்யாணத்த சிம்பிளா‌ முடிச்சிடாத மச்சி. நான் தாரேன். சும்மா திருவிழா கணக்கா நடக்கணும் நம்ம பொண்ணு கல்யாணம்.  நம்ம ஊரையே இங்க கொண்டு வந்து நிப்பாட்டணும் டா.


மாப்பிள்ளை அழைப்பு, பரிசம்ன்னு ஒரு வாரம் நடக்கணும். இந்த அமெரிக்கால இப்படி ஒரு கல்யாணமான்னு எல்லாரையும் வியக்க வைக்கிற அளவுக்கு தடபுடலா பண்ணணும்." என முருகு சொல்ல, கார்த்திகேயனால் இன்னும் நம்ப முடியவில்லை, ருத்ரா சம்மதம் சொன்னதை.


ஏனெனில் அவன் இன்று பண்ணிய காரியம் அப்படி. ‘என் ஹோட்டலுக்காடா நீ ஆள் விட்டு இடஞ்சல் பண்ற.‌ இரு நான் உன்னை என்ன பண்றேன் பாரு.' என நினைத்தவன், இன்று ருத்ராவின் கைக்கு‌ கிடைக்கவிருந்த ஒரு டீலை அவனுக்குக் கிடைக்க விடாது செய்தான்.


ருத்ரா, இங்க வந்து தங்கியிருப்பதற்கு வாசு மட்டுமே காரணம் அல்ல. தங்களின் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையை Fremontல் மற்றொரு கிளையாகத் தொடங்கி இருக்கிறான். அதற்காக நிலம் கையப்படுத்த, சில டிப்பாட்மெண்ட்டிடம் அனுமதி வாங்க, கட்டிட வேலையை மேற்பார்வை பார்க்க, அங்கிருக்கும் மக்களுடன் பழகி நன்மதிப்பைப் பெற்ற, விளம்பரப்படுத்த என பல காரணங்கள் உள்ளது.


ஃபேக்டரி இன்னும் சில மாதங்களில்  உற்பத்தியைத் தொடங்க தயாரா உள்ளது. முதல் ஆர்டர் இன்றைய மீட்டிங்கின் மூலம் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் கிடைக்கவில்லை. காரணம் கார்த்திகேயன் தான்.‌


' என்ன டிஸ்டப் பண்ண உனக்கு ஒரு ஆள் கிடைக்கும் போது எனக்குக்க் கிடைக்காத என்ன.!?' இது கார்த்திகேயனின் மைண்ட் வாய்ஸ்.


பல கோடி லாபம் தரும் நல்ல டீல். கைவிட்டு போனது ருத்ராவைப் பொருத்தவரை பெரிய சறுக்கல் தான்.‌


'இவ்ளோ ஆனதுக்கு அப்றம் எப்படிக்க் கல்யாணத்துக்குச்ச் சம்மதிச்சான். ஒரு வளள நான் தான் அந்த டீல் மிஸ்ஸானதுக்குக் காரணம்னு தெரிஞ்சிருக்காதோ?. இல்ல அவனுக்குத் தெரியும். அப்றம் எப்படிச் சம்மதம் சொன்னான். இது வாசு வாழ்க்கைல பிரச்சனைய ஏற்படுத்துமா?. வாசுவோட லைஃப்ப ருத்ராவ நம்பி தர்றது சரியா.? ' என யோசித்த படியே இருந்தான்.


‘அடப்பாவி ஏன்டா உனக்கு இந்தப் புத்தி. அவெந்தா எதோ சின்னப்பையங்கணக்கா பண்றான்னா. நீயும் நின்னு ரிவெஜ் எடுத்துட்டு இருக்க. அப்படி உங்களுக்குள்ள என்னதாய்யா பிரச்சன?’


 

தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...