அத்தியாயம்: 73
நிலைக்கண்ணாடி.
ஆள் உயர கண்ணாடி அது. அலங்காரத்தைக் கலைக்காது அதன் முன்னே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் வாசு.
தன் அழகு திடுமென மெருகேற்றி கூடியது போல் ஒரு பின்பம். மாயை தான் ஆனாலும் முகம் கொள்ளா வெட்கத்துடன் கண்ணாடியைப் பார்க்க, அதில் அவளுக்கு தெரிந்ததோ… அவளின் அவன்.
கண்ணாடி முன்...
நின்றேன் தெரிவது...
எல்லாம் உன்...
முகம் தான்...
விழி மூடித்திறந்தேன்...
அப்போதும் நீயடா...
என் கண்கள்...
உனையே பார்க்கிறது...
திரும்பும் இடம்...
எல்லாம் நீயடா...
எனை உற்றுப் பார்...
என் கண்ணில்...
இருப்பதும் நீயடா...
என்றோ எதிலோ படித்த கவிதை நினைவு வந்து அவளை இம்சித்தது.
"ஹேய் ஸ்வீடி... " என்ற அவனின் ஆழ்ந்த வசீகர குரல் காதில் ஒலிக்க, பல நிமிடங்கள் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள். அவனுடன் தன் வாழ்க்கை பிணைக்கப் பட போகிறது. இனி அவனும் நானும் வேறு வேறு அல்ல. விரைவில் ஒன்றாகப் போகிறோமா? என்றெல்லாம் எண்ணங்கள் கரைபுரண்டு ஓட, பெண்ணவள் மோனநிலையைக் கலைக்கவில்லை.
பின் தூரத்தே சத்தம் கேட்டு தன்னிலை உணர்ந்தவள் மென்னகையுடன் அணிந்திருந்த அணிகலன்களைக் கலட்டி பத்திரப்படுத்தான். உடை மாற்றாது கட்டிலில் படுத்துக் கொண்டே இன்று நடந்தவைகளை எண்ணிப்பார்த்தாள்.
ருத்ராவுடன் திருமணம் என்ற செய்தியால் அவளுக்குக் கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. வின்னில் பறப்பது போன்ற உணர, உடல் எடையை இழந்து இறகு போல் லேசாக இருந்தது. தன் மனம் கவர்ந்த ஆடவனை மணாளனாக அடையப் போகும் எக்களிப்பு அவளுக்கு.
அவனின் கறாரான பிஸ்னஸ் முகம் கண் முன்னே தோன்ற, " இனியும் எங்கிட்ட ஸ்டிரிட்டா பாஸ் மாதிரி நடந்துக்கிட்டா அதுக்கு நான் உனக்கு தண்ட குடுப்பேன். " என்க, அவன் உருவம் அதை ஏற்கும் விதமாக புன்னகையபடி அவளின் அருகில் வந்தது.
"என்னோட வைஃப்பா உன்னோட உதடால முத்தம் குடுத்து தண்டனைய சொன்னா. முழுசா ஏத்துப்பேன். " என அவளின் இதழ் தீண்டி சொல்ல, தேகம் சிலிர்த்தது அவளுக்கு.
மாயயையாய் அவனின் உருவம் அவளை இம்சை செய்ய, உடனே அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவனின் குரல் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, தன் செல்ஃபோனை எடுத்தாள். ஆனால் அழைப்பு விடுக்கவில்லை.
" இல்ல… நான் அவனோட முகத்த பாக்க விரும்புறேன். என்னைப் பாத்ததும் அதுல வர்ற வித விதமான உணர்ச்சிகள படிக்கணும்னு ஆசப்படுறேன். இந்த நியூஸ் என்னை மாதிரியே அவனுக்கும் சந்தோஷத்த தரும்ல. அவனோட ரியாஷ்ன நான் பாக்கணும். ஐய்யோ எனக்கு இப்பவே அவன பாக்கணும் போல இருக்கே. " என வாய்விட்டுப் புலம்பிவள் எழுந்து ஹாலிற்கு வந்தாள்.
" என்ன வாசு டிரெஸ்ஸ மாத்தாம இருக்க? "
"ஜோஹிம்மா நா… நான்... ருத்ராவ பாக்கணும்.” என்று சிறு நாணத்துடன் உரைக்க, ஜோஹிதா மகளையே பார்த்தபடி நின்றாள்.
அவளிடம் எவ்வித அசைவும் இல்லாது போகவே, “இப்பவே நான் ருத்ராவ பாக்கணும் மா." என்க,
" உனக்குக் கொழுப்பு கூடிப் போச்சின்னு நினைக்கிறேன். மணி என்னாதுன்னு தெரியுமா?. இன்னேரம் பாக்கணும்னு சொல்ற. காலைல பாத்துக்க. எப்படியும் வேலைக்கி போவதான. " என உஷா தான் பொரிந்தார்.
"இல்லை. நான் லீவ் போட்டிருக்கேன். நாளக்கழிச்சி தான் பாக்க முடியும். அதுக்குள்ள அவெ ஊர காலி பண்ணிட்டு போய்டுவான். அதுனால நான் இப்பவே அவன பாத்தாகணும். " என்றாள் பிடிவாதமாக.
" விடியக்காலைல எங்களுக்கு ஃப்ளைட் வாசு. நீ என்ன சென்டாஃப் பண்ண வர்ற தான. போய் தூங்கு. காலைல பாத்துக்கலாம். " என ஜோஹிதா மறுக்க.
"இல்ல ஜோஹிம்மா. நானீ அவன பாக்கணும். " என்றாள் அழுத்தமாக.
"அடி வாங்காம போய் தூங்குடி. " என உஷா விரட்ட வாசு அசைய வில்லை.
" கார்த்திக்… கார்த்திக் உம்பொண்ணு என்ன சொல்றான்னு வந்து கேளேன். " என ஜோஹிதா கத்த, கார்த்திக்கும் முருகுவும் உள்ளே வந்தனர்.
" கார்த்திப்பா, நான் ருத்ராவ பாக்கணும். ப்ளிஸ். அவனுக்கு இதுல சம்மதமான்னு கேக்கணும். "
" அதெல்லாம் அவெ சம்மதம் சொல்லிட்டான். நாங்களும் அதக் கேட்டுட்டோம். எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்க. " என உஷா விரட்ட,
"ஏன்டி எப்பப் பாத்தாலும் பிள்ளைய எதாவது சொல்லிக்கிட்டே இருக்க. சும்மா இரேன். " என முருகு சத்தமிட்டார்.
"நான் சொன்னா எதையுமே கேக்க இங்க ஆளே கிடையாதே. எல்லாருக்கும் இந்தப் பெரிய மனுஷி தான் முக்கியமா போய்ட்டா. என்னமும் போங்க. டேய் எழுந்து வாடா. எப்பப் பாத்தாலும் ஃபோனும் கையுமா உக்காந்துட்டு. " எனப் புலம்பியபடியே மகனை இழுத்துக் கொண்டு சென்றார் உஷா.
கார்த்திக்கிற்கு மட்டுமல்ல, முருகுவிற்கும் வாசு என்றால் உயிர். உஷா எது சொன்னாலும் எதிர்த்து வாதாட மாட்டார். ஆனால் அவரின் முன் வாசுவை எதாவது சொன்னால் போதும் அக்கினிப்பிளம்பாய் நிற்பார்.
" கார்த்திப்பா ப்ளிஸ்... ஜஸ்ட் பாத்துட்டு... ரெண்டு ரெண்டு வார்த்த பேசிட்டு… வந்திடுறேன். ப்ளிஸ்… நீங்களும் வேணும்னா கூட வாங்க. அரைமணி நேரத்துல திரும்ப கூட்டீட்டு வந்திடுங்க." என்று கெஞ்சத் தொடங்கினாள் மகள்.
" மொத்தத்தில மச்சான கால் டாக்ஸி டிரைவரா வேல பாக்க சொல்ற. " என முருகு கேலியாகச் சொல்ல,
"இல்ல... பொண்ணோட அப்பாவா என்னோட ஆசைய நிறைவேத்த சொல்றேன். "
" வாசு போதும். லேட் நைட் ஆகிடுச்சி. அவன டிஸ்டப் பண்ணாம இப்ப போய் தூங்கு. மார்னிங் டென் ஓ கிளாக்குக்கு மேல போய் பாரு. எவ்ளோ நேரம்னாலும் பாத்து பேசிட்டே இரு. " என்று ஜோஹிதா சொல்ல, வாசுவின் முகம் வாடியது. ஆனாலும் பிடிவாதமாக சோஃபாவில் இரு கரத்தையும் கட்டிக் கொண்ட பொத்தென அமர, கார்த்திக் அழைத்துச் செல்வதாக கூறிய பின் தான் அந்த முகம் மலர்ந்தது.
இரு ஆண்களின் சம்மதத்துடன் வாசு ருத்ராவைக் காணச் சென்றாள். ஆசையாக. ஆனால் அவன் அதே ஆசையுடன் அவளை வரவேற்பானா என்பது சந்தேகம் தான்.
"வாசு சரியா ஒன் ஹவர் தான். நான் கால் பண்ணதும் நீ எங்கண்ணு முன்னாடி இருக்கணும். ஓகே. " கார்த்திக் சொல்ல, வேகவேகமாகத் தலையசைத்தாள் வாசு.
"ஒருவேள அவெ எதாவது சத்தம் போட்டுற மாதிரிப் பிரச்சினை பண்ற மாதிரித் தெரிஞ்சா உடனே கால் பண்ணு. " என்றவனுக்கு ருத்ரா கோபமாக இருப்பதாக தோன்றியது. மகளை எதுவும் செய்ய மாட்டான் தான். ஆனால் வார்த்தைகளால் காயப்படுத்தி விடுவானோ என்ற பயம் இருந்தது. ஏனெனில் அந்த டீல் முடிவாகியிருந்தால் ருத்ராவிற்குப் பல கோடி லாபம் கிடைத்திருக்கும். அத்தோடு அவனுக்குத் தோல்விகள் பிடிக்காது. அதைப் பரிசளித்த கார்த்திக்கின் மீது நிச்சயம் கொலை காண்டில் தான் இருப்பான். அதை அறிந்து கார்த்திக் மகளை எச்சரித்து அனுப்பினான்.
அவனின் குரல் எதுவும் வாசுவின் காதில் விழவில்லை. அவளின் இலக்கு ருத்ராவைச் சென்றடைவதாக இருக்கும் போது எப்படி ஏறும்?
வேகமாக சென்றவள் ரிஷப்ஷனில் ருத்ராவைப் பற்றிக் கேட்டு அவன் அறையில் இருப்பதை உறுதி செய்துவிட்டு காணச் சென்றாள்.
கதவைத் தட்டாமல் உள்ளே செல்ல, அறை இருள் சூழ்ந்து அலங்கோலமாக இருந்தது. ப்ளவர் வாஷ் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அனைத்தும் தரையில் விழுந்துச் சிதறிக் கிடந்தன.
" ருத்ரா… Are you here?. ருத்ரா… " என்றவளுக்குப் பயம் வந்தது. அறையில் நிலவிய பேரமைதி அச்சத்தை தர, அனைத்து விளக்குகளையும் ஏரியவிட்டு ருத்ராவைத் தேடினாள்.
அவளின் பதட்டம் புரியாத அவனோ, கையில் க்ளாஸ்ஸுடன் பால்கனியில் நின்றிருந்தான்.
அன்று, அவள் கூறியது போல் ருத்ரா மொடா குடிகாரனெல்லாம் கிடையாது. தன் லிமிட் தெரியும் அவனுக்கு. சுயநினைவை இழக்காது நிதானம் தவறாது. ஒன்றோ இரண்டோ க்ளாஸ் குடிப்பான். ஆனால் இன்று மூன்று பாட்டில்களுக்கு மேல் காலியாக்கி விட்டான். அனைத்தும் அதிக போதை தரும் பானங்கள்.
காலில் பட்டு உருண்டேடிய காலி பாட்டில்களை பார்க்கையில் கவலையாக இருந்தது வாசுவிற்கு.
தன்னை எதிர்பார்த்து காதலுடன் காத்திருப்பான் எனத் திருமணக் கனவுகளை நெஞ்சில் நிறைத்து ஆசையுடன் ருத்ராவைக் காண வந்தவளுக்குப் பெருத்த ஏமாற்றம்.
"வாங்க… கல்யாண பொண்ணு. இன்றைய நிகழ்ச்சி நல்ல படியா முடிஞ்சதா?. ம்… நல்லா என்ஜாய் பண்ணி கொண்டாடுனீங்களா?.” என்றவனின் குத்தல் பேச்சு அவளுக்கு எப்படிப் புரியும். அவள் குழப்பத்துடன் அவனை ஏறிய,
“நான் தீபாவளிய கேட்டேன் ஸ்வீட்டி. " என வார்த்தைகள் போதையில் தெளிவில்லாமல் வந்தாலும் ஆள் ஸ்டெடியாத்தான் இருந்தான். பார்வை கூர்மையாக இருந்தது.
"ருத்ரா... ருத்ரா எ…ன்னதிது? " என்றபோது கிட்டத்தட்ட அழவே ஆரம்பித்து விட்டாள் வாசு.
" This is ஓட்கா.” என்றவன் “உனக்கும் வேணுமா?." என்பது போல் பாட்டிலை நீட்ட, அவள் வாங்காது அதையும் அவனையும் மாறி மாறி பார்க்கவும்,
“வேண்டாமா!” என்று விட்டுப் பாட்டிலில் இருந்ததை தொண்டைக்குள் சரித்தான்
" ருத்ரா நீ டிங்க பண்ணீட்டு இருக்க. ஏன். நா... நான். நீ ஹேப்பியா இருப்பன்னு நினைச்சேன். நம்ம மேரேஜ் பத்தி தெரிஞ்சி நீ என்னை எதிர்பாத்திட்டு இருப்பன்னு நினைச்சேன். ஆனா…” என்றபோது நிராசையில் வார்த்தைகள் வரவில்லை.
“எ..துக்கு குடிச்சிட்டு இருக்க ரு..த்ரா?. என்னாச்சி உனக்கு.? " என்றாள் திக்கித் திணறி.
"எதுவும் ஆகல. எதுவுமே…. ஆகல. முதல்ல நீ எதுக்கு இங்க வந்த. அதுவும் இந்த நேரத்துல. மிஸ்டர் கார்த்திகேயன் எப்படி உன்ன லேட் நைட்ல என்னைப் பாக்க அலோ பண்ணாரு." என்றவன் குரலில் எரிச்சல் நிறைந்திருந்தது. அதை உணர்ந்தவள்.
" நான் வந்தது உனக்குப் பிடிக்கலயா? " என்க அவன் அமைதியாக பாட்டிலை காலி செய்யும் முயற்சியில் இறங்கினான்.
"நான் கிளம்புறேன். நீ சீக்கிரம் தூங்கு. ரொம்ப குடிக்காத. இதுல இருக்குறத சாப்பிடு. " என்றவள் சிறிய டப்பாவை டேபிளில் வைத்தாள்.
அவனுக்காக வீட்டில் சமைத்த உணவை டப்பாவில் கொண்டு வந்திருந்தாள். அவளின் சமையல் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. கார்த்திக்கின் கை பக்குவம் வாசுவிடம் அப்படியே உண்டு. அவன் இங்கு தங்கி இருக்கும் நாட்களில் அவனுக்கான உணவை அவள் தான் சமைத்து தருவாள். ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் அவனுக்குத் தவறாது உணவு கையில் கிடைக்கும். அதற்காகவே அவன் ஒரு பூஜ்ஜியத்தை கட் செய்திருக்கிறான்.
திரும்பி அவனைப் பார்த்தவாறே அறையை விட்டு கணத்த மனதுடன் வெளியே வந்தாள் வாசு. அவளுக்குக் கத்தி அழவேண்டும் போல் இருந்தது. ருத்ராவின் இந்தத் திடீர் திடீர் பரிமாற்றத்திற்கானக் காரணம் புரியாது கதவில் சாய்ந்து கொண்டு நிற்க, அவனின் செல்ஃபோன் இசைக்கும் ஒலிகேட்டது. பின் பாட்டில் உடையும் ஓசை கேட்க, வாசு வேகமாக உள்ளே ஓடி சென்றாள்.
"ருத்ரா… உனக்கு என்னாச்சி ருத்ரா?. ஏன் இப்படி முட்டாள் மாதிரி நடந்துக்கிற. ருத்ரா ஸ்டாப்பிட். " எனப் பாட்டில்களை உடைத்துக் கொண்டிருந்தவனைத் தடுத்து கத்த,
"முட்டாள்... எஸ்... நான் ஒரு முட்டாள் தான். எந்தத் திட்டத்தையும் ஒழுங்கா போட முடியாத நான் முட்டாள் மட்டுமில்ல. லூசர்... பெரிய லூசர்… நான் தோத்திட்டேன். ஈசி டார்கெட்டுன்னு நினைச்ச ஒருத்தெங்கிட்ட நான் தோத்துட்டேன். லூசர்... தி பிக்கெஸ்ட்டு லூசர். " எனக் கண்ணா பின்னாவென கத்தினான்.
இன்று நடந்த மீட்டிங் அவனுக்குச் சாதகமாக அமையவில்லை என்பது வாசுவிற்குப் புரிந்தது. அதனால் தான் அவன் கோபமாக இருக்கிறான் என நினைத்தவள்,
"ருத்ரா இதெல்லாம் பிஸ்னஸ்ல சகஜம் தான. இந்த டீல் இல்லன்னா என்ன, இதவிட நல்ல டீல் உனக்கு கிடைக்கும். உன்னோட திறம மேல நம்பிக்கை வை. "
"நம்பிக்க... ஹிம்… நான் என்னோட பதினஞ்சு வயசுல இருந்து எங்கப்பாவோட பிஸ்னஸ்ஸ பாத்துக்கிறேன். கிட்டதட்ட பன்னெண்டு வர்ஷம். ஒரு சக்சஸ்புல் பிஸ்னஸ் மேனா தான் இருக்கேன். எதிர்ல இருக்குற என்னோட பிஸ்னஸ் எனிமீஸ்ஸாகட்டும், மறைமுகமா திட்டம் போட்டு என்னைவீழ்த்த நினைக்கிற ஃப்ரெண்ட்ஸ் ஆகட்டும்.
எல்லாரையும் என்னால ஈசியா ஐடென்டிஃவைவ் பண்ண முடியும். ஜர்ஜ் பண்ண முடியும். அந்தத் திறம மேல கர்வம் எனக்கு உண்டு. ஆனா அவன என்னால ஒன்னும் பண்ண முடியல.
இதுவர நான் எடுத்த எல்லா முயற்சிக்கும் வெற்றி தான் கிடைச்சிருக்கு. எங்க அடிச்சா எனக்கு வெற்றி கிட்டக்கும்னு பாத்து தான் அடிச்சிருக்கேன். அவங்க வீக்னஸ் ஸ்டென்த்ன்னு எல்லாம் தெரியும்.
ஃபஸ்ட் டயம். என்னால வின் பண்ண முடியாம தோத்திட்டு வந்து நிக்கிறேன். அதுவும் ரெண்டு பேர்கிட்ட. அப்பா பொண்ணுன்னு ரெண்டு பேர் முன்னாடியும் நான் தோத்து புஜ்ஜியமா நிக்கிறேன். I am a zero…. zero …. " எனக் கத்தியபடியே அறையை மீண்டும் அலங்கோலமாக்கத் தொடங்கினான்.
அவன் பிஸ்னஸ் காரணமாக அப்படி புலம்புகிறான் என நினைத்தவளுக்கு இப்போது புரிந்தது அவன் தன் தந்தையிடம் தோற்றதாகத்தான் புலம்புகிறான் என்று. தன்னிடம் தோற்றேன் என்றானே. ஏன்?.
" ருத்ரா… நீ என்ன பேசுற? எனக்கு புரியல? "
"புரியலயா!!. உங்கிட்டா... அப்றம் உன்னோட அப்பெங்கிட்ட… உங்க ரெண்டு பேர்க்கிட்டையும் எனக்குக் கிடைச்ச தோல்விய பத்தி தான் பேசிட்டு இருக்கேன்.
என்னோட காதல நடிப்புன்னு சொன்ன உன்னை… எம்மேல லவ் இருக்கா இல்லையான்னு தெரியாத உன்னை… கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேனே. அது என்னோட தோல்வி இல்லையா?. " என்றவனின் பேச்சு அவளுக்கு முழுதாகப் புரியவில்லை என்றாலும் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்றது அவனின் வீட்டார்களின் விருப்பத்திற்காக என நினைத்து,
" பிடிக்கலன்னா எதுக்குச் சம்மதம் சொன்னீங்க. அத்தையும் மாமாயும் உங்க விரும்பத்துக்கு மாறா நடத்துக்க மாட்டாங்க." என்றபோது வந்த வேதனையை அவனுக்குக் காட்டாது முகம் திருப்ப, அவளை இழுத்து தன்னுடன் அணைத்தான் ருத்ரா.
"Because I Love you. " என்றவன் அவளின் முகத்தைக் கையில் ஏந்தி கண், நெற்றி என அவளின் மதி முகத்தில் முழுவதும் முத்தமிட்டான்.
"மிஸ்டர் கார்த்திகேயனோட பொண்ணு மேல நான் இவ்வளோ பைத்தியமா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. உன்னை மறக்க நான் எடுத்த எல்லா முயற்சியும் வேஸ்ட். என்னோட லைஃப்ல பிஸ்னஸ்லன்னு நிறைய சறுக்கல நான் பாத்திருக்கேன். இது இல்லன்னா அடுத்ததுன்னு போய்க்கிட்டே இருந்த என்னால உன்னை அப்படி விட முடியல. நீ மிஸ்டர் கார்த்திகேயன் பொண்ணு. அதுனால தான் அந்த காஃபி ஷப்ல உன்னைப் பாத்தும் பேசாம போய்ட்டேன்.
அடுத்த முறை அப்படிக் கண்டுக்காம போக முடியல. என்னோட ஃபீல்… லவ்… எதையும் புரிஞ்சாம… மிஸ்டர் கார்த்திகேயனுக்காக என்னைத் தூக்கி போட்டுட்டு போனவ நீ. ஆனாலும் என்னோட மனசு உங்காலடில கிடக்கச் சொல்லி கெஞ்சிது. நான் விரும்பி வெறுக்கும் நீ… என்னோட முதல் தோல்வி. " என்றபோதும் நானும் உன்னிடம் தோற்றுதான் நிற்கிறேன் என்று சொல்ல வாய் திறக்க அதற்குள் அவளை விட்டு விலகி நின்றவன்,
" அடுத்த தோல்வி இன்னும் ரெண்டு நாள்ள கிடைக்கும். அத மிஸ்டர் கார்த்திகேயன் எனக்குத் தருவாரு.
ரெண்டுமே எனக்கு பிடிக்கல. I hate Mr Karthikeyan. பட் எனக்கு நீ வேணும் வாசு. லைஃப் லாங். உங்கூடவே வாழணும். உன்னை மாதிரியே டாடிஸ் கேர்ள் உன்னோட சாயல் வேணும்." எனப் பேசிக் கொண்டே சென்றவனின் பேச்சை நிறுத்தும் வழி தெரிந்து வைத்திருந்தாள் வாசு.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..