அத்தியாயம்: 74
மயில் இறகை வைத்து யாரோ தீண்டுவது போல் இருந்தது அந்தக் காலை நேர தென்றல் காற்று. சில்லெனப் பனிக்காற்றை அறைக்குள் ப்ரவேசித்து அவனின் தேகத்தைச் சிலர்க்கச் செய்தது அது.
உடலெங்கும் மின்சாரம் பாய தன் கையில் இருந்த தலையணையை மார்போடு அணைத்தான் ருத்ரா. அந்தப் பஞ்சு மூட்டை அவனின் மங்கையாகப் பட்டது. இறுக்கி முத்தமிட முயன்றவனின் உதடுகள் கன்னத்திற்குப் பதிலாகத் தலையணை உறையை உணரவும், நிஜம் உணர்ந்து வாசுவைத் தேடத் தொடங்கினான்.
பால்கனி, ஹால், கிச்சன் என எங்கும் அவள் இல்லை. ஆனால் படுக்கையில் அவளின் கம்மல் ஒன்று கிடந்தது. கூடவே அவள் அணிந்திருந்த சில கண்ணாடி வளையல்கள் உடைந்ததன் அடையாளமாகச் சில துண்டுகளும், தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூக்களின் சிதறல்களும், கலைந்திருந்த படுக்கையில் ஆங்காங்கே பரவிக் கிடக்க, குறுநகையுடன் நேற்று நடந்தவைகளை நினைவு கூர்ந்தான் அவன்.
"உனக்கும் கார்த்திப்பாக்கும் இடைல என்ன பிரச்சன ருத்ரா?." .
" Nothing. " என்றவன் அவளின் முகம் பார்க்கவில்லை.
" பொய் சொல்லாத. எங்க ரெஸ்டாரன்ட்டுக்கு காப்ஸ், மாஃபியா கும்பல்னு யார் யாரையோ அனுப்பி தகராறு பண்ற அளவுக்கு அவர் மேல உனக்கு என்ன கோபம்? "
"கோபம் இல்ல. வெறுப்பு... வன்மம்… விரோதம்… இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்."
"அதத்தா ஏன்னு கேக்குறேன்?"
"ம்ச்... இப்பச் சொன்னா உனக்குப் புரியாது."
"சொல்லு நான் புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்." என விடாது அவளும் குடைய, அந்தப் போதையிலும் அதை உலறாது காத்தவன், சொல்ல விருப்பமில்லாமல் கோபத்தை அணிந்து கொண்டான்.
" நீ என்னைப் பாக்க வந்தீயா இல்ல மிஸ்டர் கார்த்திகேயனுக்கு வக்கீலா வாதாட வந்தீயா? " எனக் காட்டமாகக் கேட்க,
"அவரு என்னோட அப்பா. "
"அது தான் டி எனக்கு இருக்குற ஒரே பிரச்சனையே. நீ மட்டும் நடுவுல இல்லன்னா இன்னேரம் நான் அந்தாள வேற மாதிரி டீல் பண்ணிருப்பேன். என்னோட வழிக்கு தன்னால பணிய வச்சி அடக்கிருப்பேன். உன்னால தான். நான் அந்தாள எதாவது செய்யப்போய் அதுனால நீயும் பாதிக்கப் படுவியோன்னு தோணுற நிமிசம் எல்லாத்தையும் விட்டுடணும்னு தோணுது. ஆனா அத்தன வர்ஷ பகைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது.
உன்னோட மனசு கஷ்டப்படும்னு தான் பொறுமையாவும் இருக்கேன். என்னால உன்னைக் காயப்படுத்த முடியாது வாசு. மிஸ்டர் கார்த்திகேயனுக்காக நீ அழறத பாக்கவும் முடியாது." என்க.
" கார்த்திப்பாவ உனக்கு என்ன தோனுதோ அந்த மாதிரி பழி வாங்கிக்க. எனக்காகவெல்லாம் நீ பாக்க வேண்டாம். என்னோட கார்த்திப்பாக்குத் தைரியமும் திறமையும் இருக்கு. உனக்கு நல்லாவே திருப்பிக் குடுப்பாரு. " என அவளும் பேச, அவளை உற்று நோக்கியவன்,
" மிஸ்டர் கார்த்திகேயன் நான் என்ன நிலமைல இருக்கேன்னு பாத்துட்டு வர சொல்லி தூது அனுப்புன மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது, நீ எம்முன்னாடி நிக்கிறத பாக்கும் போது." எனக் குத்தலாகப் பேச,
"ம்ச்…. எனக்குப் பிடிக்கல ருத்ரா. நீங்க ரெண்டு பேரும் இப்படி எதிர் எதிர் துருவமா நிக்கிறது."
"ஏன்?"
"ஏன்னா எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம். அவரு என்னோட அப்பா... நீ…. "
"ம்... நான்?."
".... "
"சொல்லு வாசு. நான் உனக்கு யாரு?. " என்றபோது சுவாரசியம் கூடியது அவனின் பேச்சில். அப்பொழுது அவளின் ஃபோன் சிணுங்கியது.
கார்த்திக் தான். ஒரு மணி நேரம் முடிந்து விட்டதன் காரணமாக அழைக்க, வாசு ருத்ராவின் முகம் பார்த்தாள்.
ஏற்கனவே அவனின் மனநிலை ரோலர் கோஸ்டர் ரைடில் ஏறி இறங்குவது போல் வளைந்து வளைந்து சென்று கொண்டிருக்கும் போது அதை தலைகீழாக மாற்றுவது போல் இருந்தது கார்த்திக்கின் அழைப்பு.
" தயவு செய்து கிளம்பி போய்டு. எங்கண்ணு முன்னாடி இருந்து என்னை இன்னும் கோபபடுத்தாத. get out." என்றவன் பால்கனிக்கு, மீதியிருந்த பாட்டிலுடன் செல்ல, அடுத்த நொடியே அவனைப் பின்னாளிருந்து அணைத்துக் கொண்டாள் வாசு.
"எனக்கு உன்னை இப்படியே விட்டுட்டு போக இஷ்டமில்ல ருத்ரா. ப்ளீஸ் புரிஞ்சுக்க. எனக்கு நீ ரொம்ப முக்கியம். இப்ப ஆரம்பிச்சது இல்லை அது. உன்னை ம்யூசியத்துல பாத்தப்ப இருந்தே. என்னால உன்னை இப்படியை விட்டுடு போக முடியாது" என்றவளைத் தன் புறம் திரும்பி அணைத்துக் கொண்டான். இதுவரை இருந்த மனநிலை மாறி இருந்ததை அவனால் உணரமுடிந்தது. அவளின் கலங்கிய முகமும் அவள் பேசிய வார்த்தைகளும் அவனை அசைத்துப் பார்த்தது நிஜம்.
" அதுக்கு... அதுக்குன்னு இங்கயே இருக்க போறீயா?. " என்றவனின் குரலில் இரேன் என்ற அழைப்பு இருப்பதாக வாசுவிற்கு தோன்றியது. அதற்கு ஏற்றார் போல் அவனின் அணைப்பும் இறுகியது.
" ம்… இருப்பேன்... " என அவனின் மார்பில் புதைந்திருந்தத் தலையை இடம் வலமாக அசைத்து ராகம் பாட, தேகம் சிலிர்க்க, அதை ஒரு கணம் ரசித்தவன்,
"இங்கல்லாம் நீ இருக்க கூடாது வாசு. ஏற்கனவே உன்னைப் பக்கத்துல வச்சிட்டு என்னை அடக்க நான் படுற பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். இது நைட் டைம். அழகா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து கட்டிப்பிடிச்சிக்கிட்டே என்னென்னமோ பேசுனா... நான் எந்த அர்த்தத்தில எடுத்துக்கிறது. எதாவது எக்குதப்பா ஆகுறதுக்குள்ள… நீயாவே போய். " எனப் பேசிக் கொண்டிருந்தவனின் இதழில் தன் இதழை அழுத்தி முத்தமாக மாற்றினாள் பெண்.
அதை அவளின் இடை இறுக்கி ஆழ்ந்த முத்தமாக முன்னேற்றினான் அவன்.
ஆழ்ந்த முத்தம் தான். உயிரை உறிஞ்சிக் குடிப்பது போல் அவளைத் தன்னுடன் இறுக்க அணைத்தான் அவன். இடையை இறுக்கி, முதுகைத் தன் நெஞ்சோடு அழுத்தி, பெண்ணவளின் மலர் அங்கங்களைத் தன்னோடு ஒட்டிக் கொள்ள வைக்கும் முயற்சியில் இருந்தவன், திடீரென அவளின் இதழ்களுக்கு விடுதலை தந்து முகம் பார்த்தான்.
அவனின் விலகலில் அவனின் முகம் பார்க்க நாணி கருமணிகள் நிலம் நோக்கி நின்றன. நொடிகளைத் தாண்டி நிமிடங்களாகியும் அவனின் பார்வையிலும் பிடியிலும் மாற்றம் இல்லாது போக,
"எதுக்கு அப்படி பாக்குற ருத்ரா?." என நாணமாய் குரல் வர,
"நீ மயங்கல…”
“ஹாங்…”
“கிஸ் பண்ணிருக்கேன்!. இன்னேரம் நீ மயக்கம் போட்டு விழுந்திருக்கணும்மே. " என்றான் குறுஞ்சிரிப்புடன்.
அவனின் குறும்பைப் புரிந்தவள், அவனின் கன்னங்களைப் பற்றி, விழிகளை உற்றுப் பார்த்தபடி,
"மயங்கித்தான் நிக்கிறேன் ருத்ரா. உங்கிட்ட மொத்தமா மயங்கித்தான் இருக்கேன். அது உனக்கும் தெரியும். நான் வார்த்தையால சொல்லன்னாலும் உனக்கு என்னோட காதல் தெரியும். ரொம்ப வர்ஷமா சொல்ல நினைச்சி முடியாத வார்த்த அது. I love you ருத்ரா. I love you…
நான் உன்னைக் காதலிக்கிறேன். இனி... இந்த நொடில இருந்து… எனக்கு எல்லாமே நீ. உனக்கு நான் மட்டும் தான். இத மாத்த நான் அனுமதிக்க மாட்டேன். I promise you. and I love you ருத்ரா. " என்று விட்டு அவனின் நெற்றியில் இதழொற்றியவள், அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
"நம்புற மாறி இல்லயே. " என்றவனிடம் தலை உயர்த்தாது,
"ஏன்? "
"ஏன்னா நீ Daddy's girl. உன்னோட கார்த்திப்பா பர்மிஷன் இல்லாம என்னை லவ் பண்ண கூடாதே!. தப்புல அது."
"அவருக்கு முன்னாடியே தெரியும். அதுனால தான் உங்களுக்குள்ள இருக்குற ஈகோ க்ளாஸ்ஸ விட்டுட்டு நம்ம மேரேஜ்க்கு ஓகே சொல்லிருக்காரு. "
" அப்ப நீ நிஜ Daddy's girlனு ஒத்துக்கிற. "
"நோ... நான் அப்பா பொண்ணு தான். பட் எல்லாத்துக்கும் அப்பா அப்பான்னு சொல்லி அனத்துற பொண்ணு கிடையாது. "
" அப்ப ப்ரூஃப் பண்ணு. " என்றான் அவளிடம் இருந்து விலகி. வெட்கச் சிரிப்புடன் அவனை நெருங்கி வந்தவள் எம்பி அவனின இதழணைத்தாள் பெண். இடையை இறுக்கி அவளை தன்னுள் வேரூன்றும் முயற்சியில் இறங்கினான்.
ஆடவனின் கையில் அணல் மேல் புழுவென துடித்தவளை அறிந்திடும் வேகத்துடன் தூக்கிச் சென்றான். கட்டிலுக்கு.
அவன் சொன்ன தோல்வியை வெற்றியாய் மாற்றியிருந்தாள் பெண்.
__________
"ஐய்யோ என்ன பண்ணி வைச்சிருக்குற தேவா நீ?. ச்ச… நேத்துல இருந்தே உன்னோட புத்தி யோசிக்கவே மாட்டேன்னு ஸ்டெய்க் பண்ணிட்டு இருக்கு. இந்த நேரத்துலயா நீ இப்படில்லாமா பண்ணுவ!!. " எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டே எழுந்தான் ருத்ரா.
'எதை சொல்கிறான்? '
நேற்றைய இரவு வாசுவுடன் அவன் நடந்து கொண்டது. அதற்கு முன் நடந்த மீட்டிங். அதற்குப் பதிலடியாக அவனுக்கு எதிராக கூடிய கூட்டத்தைக் கலைக்க ஆள்களை ஏவியது. காலையில் அவனின் தாய் திருமணம் பற்றி கேட்டபோது இம்முறை தள்ளிப்போடாது சம்மதித்தது எனப் பல நிகழ்வுகள் இருக்கின்றன.
'ஆனாலும் நேத்து என்னோட ஸ்வீட்டி கூட இருந்தது ஸ்வீட்டா தான் இருக்கு. ' என்றெண்ணியவனின் உடல், பெண்ணவளின் வாசம் பிடித்து அவளை நாடத் தூண்டியது. அவளைக் காணவும் மீண்டும் அள்ளி அணைக்கவும் உள்ளம் துடிக்க, அதை தடுப்பது போல் வந்தது அந்த ஃபோன் கால்.
தன்யா…
"என்ன தன்யா?. வீட்டுக்கு போனதுக்கு அப்றம் கால் கூட பண்ணவே இல்ல. ஃபெஸ்டிவெல் ஃபிஸியா?. எப்படிப் போச்சி தீபாவளி? "
அவனுக்குச் சிறப்பாக சென்றதன் பலனாய் உற்சாகமாகக் கேலி செய்தான் அவன்.
திட்டம் போட்டு வேலையைச் சிறப்பாய் முடித்துவிட்டு தன்யாவை இரு தினங்களுக்கு முன் தான் விமானம் ஏற்றி விட்டான். அவளுக்கு தேவ்வின் ப்ளான் பிடிக்கவில்லை. வேண்டாம் எனத் தயங்கியளை மிரட்டி உருட்டி டேனியலை ஒரு வழியாக்கி விட்டு அனுப்பி வைத்தான். அதனால் அவள் கோபமாக சென்றாள்.
"..."
"ஹலோ… தன்யா... ஹலோ... " எனத் தன் மொபைலைப் பார்க்க, அவள் காலை கட் செய்யாது லையனில் தான் இருந்தாள்.
"தன்யா இன்னும் எம்மேல கோபம் போகலயா?"
" கோபம் எல்லாம் இல்ல. கொல வெறில இருக்கேன். " என்றவளின் குரல் உடைந்திருந்தது.
"தன்யா அழறியா? "
"எஸ்... "
" என்னாச்சி?. "
"நேத்துல இருந்து டேனியல்ட்ட பேச முடியல. அவெ எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க முடியல. நான் அவனோட ரூம் மெட்டுக்கிட்ட அவனக் கண்கானிக்க சொல்லிட்டு வச்சிருந்தேன்.. ஆனா இப்ப அவெ எங்க இருக்கான்னே தெரியல. எனக்குப் பயம்மா இருக்கு தேவ். அவனுக்கு எதாவது ஒன்னு ஆகிடுமோன்னு. "
" அவெ அந்த அளவுக்கு கோழ கிடையாது தன்யா. எங்க இருந்தாலும் நல்லாத்தா இருப்பான். " எனக் கூலாக சொல்ல, தன்யா கொதித்து விட்டாள்.
" நீ போட்ட ப்ளானால தான் அவெ உடைஞ்சி போய்ட்டான். எனக்கும் இந்த நிலைம. நான் தான் வேண்டாம் விட்டுடுன்னு சொன்னேன்ல. கேட்டியா... அவனோட காயத்துக்கு மருந்தா இருக்க நினைச்சேன். பட் நானே அவன காயப்படுத்திடேன். என்னால என்னையே மன்னிக்க முடியல.
அவனுக்கு என்ன வேணும்... கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும். அவ்ளோ தான. அவெ எப்படி ஆசப்படுறானோ, அப்படியே இருந்திட்டு போவோம். நான் அவனுக்காகக் கூடவே இருப்பேன். நான் இத அவெங்கிட்ட சொல்லணும் தேவ். லிவ்விங் டுகெதர்க்கு எனக்குச் சம்மதம்னு சொல்லணும். எனக்கு அவெ வேணும். " என்றழுவளிடம்,
" லூசா நீ. லிவ்விங் டுகெதருக்கு ரஞ்சினி அத்தை எப்படிச் சம்மதிப்பாங்க. மாமா… உங்கக்காவ பத்தி யோசிச்சியா... " எனக் காட்டமாக கேட்க,
"அவங்க என்னோட ஃபேமிலி. என்னை அன்டர்ஸ்டான்ட் பண்ணிப்பாங்க. "
"பட் நீ டேனியல் சொல்ற மாதிரி இருந்தேன்னா உனக்குன்னு ஒரு ஃபேமிலிய உண்டாக்கிக்க முடியாது தன்யா. ஏன் நீ சலிச்சி போய்டேன்னா அவனே உன்னை விட்டுட்டு போய்டுவான். "
"பரவாயில்லை. கொஞ்ச நாளாது நான் அவெங்கூட சந்தோஷமா வாழ்ந்திருப்பேனே. நான் உடனே அவனோட குரல கேக்கணும். நீ போய் அவன பாத்து, எனக்கு அவன வீடியோ கால்ல காட்டு. ப்ளீஸ்…"
" பட் நான் இப்ப தான் எழுந்தேன் தன்யா. லெவன் ஓ க்ளாக் எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. "
"எனக்கு அது தேவையில்ல. நான் அவன பாக்கணும். அவெ எப்படி இருக்கான்னு எனக்கு தெரியணும். நீ உடனே போ. இல்லன்னா நான் நாளைக்கி மார்னிங் ஃப்ளைட் ஏறுடுவேன். "
" ம்ச்... தன்யா நீ தேவயில்லாம எமோஸ்னல் ஆகுற. இப்பத் தான் ஊருக்கு போன. மறுபடியும் வர்றேன்னு சொல்ற. "
"அதுல உனக்கு என்ன பிரச்சன?. நான் அவன பாக்கணும்.. அவெ சொல்ற மாதிரி வாழ சரின்னு சொல்லணும். "
"ஏன் தன்யா லூசுத்தனமான ஒரு முடிவ எடுத்திருக்க." என்ற தேவ்விற்குத் தன்யா பேசியதையே திரும்ப திரும்பப் பேச,
"ஓகே… நீ எதுக்கு தேவையில்லாம இங்கயும் அங்கயும் அழையிற. நான் அவன உம்முன்னாடி கூட்டீட்டு வர்றேன். போதுமா. " என்க,
"எப்ப?. " என்றாள் நம்பிக்கையின்றி.
"ரெண்டு நாள்ல."
"இப்ப என்ன பண்ண போற.? "
"அதா மேடம் உத்தரவு போட்டிருக்கிங்களே, போய் அந்த இடியட்ட பாக்குறேன். பாத்து கழுத்துக்கு மேல நாலு போட்டு இழுத்துட்டு வர்றேன். போதுமா!. "
"தேவா நீ அவன ஹர்ட் பண்ண கூடாது. "
"நான் பண்ண மாட்டேன். "
"ஆள் விட்டும் அடிக்க கூடாது. "
"பாக்கலாம். "
"தேவா.. "
" நீ இப்ப கால கட் பண்ணாத்தா என்னால கிளம்ப முடியும். வைக்கிறீயா ஃபோன. " என அவன் கட் செய்யும் நேரம் கத்தினாள் தன்யா.
" ஹே… ஹே... " தன்யா
"என்ன?" கடுப்புடன் கேட்க,
" நெக்ஸ்ட் வீக் எங்கேஜ்மெண்டாமே. congrats… உன்னோட காதலாது சக்சஸ் ஆச்சே. "
" ரொம்ப நன்றி. உனக்கும் ஆகும். கல்யாணம். "
".... "
"என்ன சத்தத்தையே காணும்?"
" டேனியல பாக்கணும் தேவா. " என்று மீண்டும் ஆரம்பிக்க,
"ஐய்யோ!! இதோ போறேன் ம்மா. " எனச் சலித்துக் கொண்டே குளித்துத் தயாராகத் தொடங்கினான்.
நீரில் அடியில் நிற்கும் அவனுக்கு தன்யாவின் நிலை புரியாமல் இல்லை. ஏனெனில் அவனும் அப்படி தானே இருந்தான். நாம் காதல் கொள்ளும் நபருக்கு நம் காதல் விளையாட்டாகத் தெரியும் போதும் உண்டாகும் வலி கொடியது.
அதை தன்யாவிற்கு தரக் கூடாது என்றெண்ணியவன், தன்யாவிற்காக டேனியல் தேடி பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
தலை துவட்டிய படியே தன் வாட்ரோப்பை நிறைந்தவன் கண்களுக்கு வாசுவின் கண்ணாடி வளையல் துண்டுகள் மீண்டும் பட்டது. அறையே சுத்தமாக இருந்தது. ஆனால் பெண்ணவளின் வாசம் நாசியை நிறைக்க, வாசுவை காணும் ஆவல் மேலோங்க, அவளுக்கு ஃபோன் செய்தான்.
அது எடுக்கப்படவில்லை. 'சரி டேனியல அப்றம் பாத்துக்கலாம். முதல்ல மை ஸ்வீட்டிய பாத்துட்டு, அவ தர்ற கிஸ்ஸோட என்னோட டேவ ஸ்டாட் பண்ணலாம். அப்றம் நேரம் இருந்தா டேனியல தேடுவோம். ' என்றெண்ணி வாசுவை காணச் சென்றான். ஆசையுடன்…

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..