முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 75


அத்தியாயம்: 75


கார்த்திக்.


தலைவி இன்றி வீடே வெறிச்சோடிப் போய் இருந்தது.‌ கொஞ்சி குலாவியது இல்லை‌. ஆசையாய் பேசி சிரித்தது இல்லை. காதலுடன் அக்கறையாய் நடந்து கொண்டது இல்லை. ஆனால்...‌


தன் கண்முன்னே நடமாடிக் கொண்டிருந்தாள். இருபத்தி இரண்டு ஆண்டுகள், அவளைத் திருமணம் செய்து முடிந்து விட்டன. ஒரு நாள் ஒரு பொழுது கூட ஒருவரை ஒருவர் பார்க்காது இருந்தது இல்லை.


திருமணத்திற்குப் பின் வரும் முதல் பிரிவு‌‌. ஆசைப்பட்ட அனைத்தையும் செய்து தரும் வசதியானக் குடும்பத்துச் செல்லச் சீமாட்டி அவள்.


 அவளை இத்தனை ஆண்டுகளாக வருத்திவிட்டேன்.‌ தன் மேல் கொண்ட காதலால் அவள் சந்தித்த கஷ்டங்கள் பல.‌ வியர்வைச் சிந்தி உழைக்க வேண்டிய அவசியம் இல்லாத வீட்டில் வாழ்ந்தவளை, பசி என்று கேட்க வைத்துவிட்டேன்.


மூன்று வேளையும் நெய் சோறு சாப்பாட்டு வந்தவளின் கண்களுக்குச் சோற்றைக் காட்ட பல நாள்கள் எடுத்துக் கொண்டேன். அத்தனை கஷ்டம். அத்தனை வேலை. அத்தனை வலி. அனைத்தையும் இஷ்டமாய் ஏற்று செய்தாளே… எனக்காக.


ம்… எல்லாம் எனக்காக…


பதிலுக்கு நான் என்ன செய்தேன். ஏன் என்னால் மற்ற தம்பதியினரை போல் அவளுடன் கூடி வாழ இயலவில்லை.


இந்தக் கேள்விகளுக்கு விடை இதுவரை கிடைத்தது இல்லை கார்த்திகேயனுக்கு. ஜோஹிதாவால் அவன் பட்ட காயங்கள் அதிகம் தான்.‌ ஆனால் அவளுடன் காதலாய்ப் பேசாது கடமையாய்ப் பேசி திருப்பி தந்த கொண்டுதான் இருக்கிறான். அவனுள்ளும் அவள் மீதான காதல் உண்டு.‌ அது வேறு மாதிரியான உணர்வு.


இன்று விமானம் ஏறும் போது தன்னையும் மீறி, " நீ அவசியம் அந்த காலேஜ் ஃபங்சனுக்கு போய்த்தா தீரணுமா ஜோஹிதா? " என ஏக்கத்துடன் வந்தது கார்த்திக்கின் குரல்.


" எஸ் கார்த்திக். எனக்கு அங்க சின்னதா ஒரு வேல இருக்கு‌. வந்திடுவேன். சீக்கிரமா. " என்றவளுக்கும் அவனை விட்டுப் பிரிந்து செல்வது கடினமாக இருந்தது. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்து தானே ஆக வேண்டும். ‌அதான் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு உதடுகள் வளைய மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டே விமான நிலையத்தின் உள்ளே சென்றாள்.


அவன் அழைத்ததும் சரி என பின்னாலேயே வந்து விடுவாள் என்று நினைத்தானோ என்னமோ. 


அவனின் எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் என்றுமே நிறைவேற்றியது இல்லை அவள்.‌ இன்றும் அப்படித்தான்.


அவளின் பதிலால் ஏமாற்றம் அடைந்து, " Take care. " என்றவன் விமானம் ஏறும் வரை அவளை விட்டு தன் பார்வையை விலக்கவே இல்லை.


'I am sorry. ஏதோ ஒன்னு நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குன்னு எனக்கு தெரியும். அத நாம ஓப்பனா பேசிக்காம கடைசி வர நாம இப்படியே தான் இருக்க போறோம் போல. தனித்தனியா.' என்றவனின் மனகுரலுக்கு,


'இல்ல கார்த்திக். நாம கடைசி வர இப்படியே இருந்திடக்கூடாதுன்னு தான் நான் போறேன். இந்தப் பிரிவு நம்மளோட நல்லதுக்கு தான்.' என்றது அவளின் மனம்.


இருவரும் பார்வையால் தங்களின் ஏக்கங்களைப் பரிமாறிக் கொள்ள, வாசு கார்த்திக்கின் வலப்புறம் சென்று அவனை அணைத்த படி தோள் சாய்ந்தாள்.


"என்னை மாதிரியே உங்களுக்கும் ஜோஹிம்மா நம்மல விட்டு போறதுல விரும்ப இல்லைல. " என்க, அவளைப் பார்த்து புன்னகைத்தான் கார்த்திக்.


"பிடிக்கலன்னா போக வேண்டாம்னு சொல்ல வேண்டியது தான கார்த்திப்பா. " என்றாள் விசும்பலான குரலில்.


"ஜோஹிதா அங்க போறது எனக்குப் பிடிக்கல தான் வாசு. ஆனா அவங்கவங்களுக்குன்னு சில தனிப்பட்ட ஆசைகள் உண்டு. அத நிறைவேத்தும் போது தடுக்க கூடாது. அவளுக்கு அந்த காலேஜ்ஜ பாக்கணும். அவளோட ஃப்ரெண்ஸ் ஃபேரன்ஸ்ஸ பாக்கணும்னு தோணும் போது, அவளப் பாக்க விடாம தடை  போடுறது தப்பு. she choose her own way. " என்றான்.


இருவருக்குமே ஜோஹிதா இல்லாத வீடு பிடிக்கவே இல்லை. ரெஸ்டாரன்ட்டை காரணம் காட்டி அவன் சென்றுவிட, வீட்டில் வாசுவால் தனித்து இருக்க முடியவில்லை.


அப்போது அவளின் கண்களுக்கு ஒரு கவர் தெரிந்தது‌. அது ருத்ராவுடன் ஷாப்பிங் சென்றாளே… அப்போது வாங்கியது.


"இடியட்… எனக்கு இதப் போட்டு காட்டாம என்னை ஏமாத்திட்டான். " என ருத்ராவைத் தூக்கி எறிவதாக நினைத்து அவனுக்கு என வாங்கிய சட்டையைத் தூக்கி எறிந்து தன் கோபத்தைக் காட்டி கவரைத் தூக்கி போட்டாள் வாசு. 


அந்த கவரில் ருத்ரா உடை மட்டுமல்ல, டேனியலுக்காக வாங்கியதும் இருக்க, டேனியல் பார்த்து நான்கு தினங்களுக்கு மேல் இருக்குமே என்ற நினைவு வந்தது.


வேகமாக அவனுக்கு ஃபோன் செய்தாள். எடுக்கபட வில்லை. "எங்க போயிருப்பான்.? நேத்து ஃபங்ஷனுக்கும் வரல. அதுக்கு முன்னாடி ரெண்டு நாளா கடப்பக்கமும் வரல. எங்க போயிருப்பான்?” எனச் சிந்தித்தபடி விடாது அழைப்பு விடுக்க, அது எடுக்கப் படவே இல்லை. 


“ச்ச... ஃபோனையும் எடுக்க மாட்டேங்கிறான். " என்ற வாசுவிற்கு டேனியலை நினைத்து கவலையாக இருந்து. அவன் தங்கும் இடம் அவளுக்குத் தெரியும் எனவே நேரில் காணபீ புறப்பட்டு விட்டாள் வாசு.‌


அது லன்ச் டயம். சற்று பிஸியாகத்தான் இருந்தது கார்த்திகேயனின் உணவகம். தீபாவளி என வந்திருந்த, தங்களின் சொந்தங்களுக்கு இந்திய உணவைக் காட்ட எனப் பலர் தங்களின் குடும்பத்துடன் வந்திருந்தனர். அதனால் இண்டியன் ஃபுட் கோர்ட் பிஸியாக இருந்தது.‌


மும்மரமாக அனைவரும் வேலை செய்துக் கொண்டிருக்க, கதவு உடைந்து விடும் வேகத்தில் அதைக் தள்ளிக் கொண்டு வந்தான் ருத்ரா.  அவனை எதிர் கொண்டது வில்லியம்.


" கங்கிராஸ் மிஸ்டர் தேவ். இன்னும் சிக்ஸ் டேஸ்ல நடக்கபோற எங்கேஜ்மெண்டுக்கு. " என புன்னகையுடன் வரவேற்றான் வில்லியம்.


" தேங்க்ஸ் மேன். வாசு எங்க? "


" வீடுல இருப்பா. "


"இல்ல… வீட்ட பாத்திட்டு தா‌ன் வந்தேன். She wasn't there. " என்றவனின் முகத்தில் ஒரு தவிப்பு தெரிந்தது.


" எனக்குத் தெரியாதே மிஸ்டர் தேவ். " என்றதும், ருத்ரா வேகவேகமாக கார்த்திக்கை காணச் சென்றான், கிச்சனுக்கு.‌


அங்கு அவன் மட்டுமல்லாது அவனைப் போல் இன்னும் இரு செஃப், சப்ளை செய்ய வெய்டர்ஸ் எனப் பலர் இருந்தனர்.


" மிஸ்டர் கார்த்திகேயன் வாசு எங்க?. " எனக் கத்தி கேட்க, அவன் தலை தூக்கி ருத்ராவைப் பார்த்து,


"வீட்டுல. " என ஆரம்பிக்கும் போதே,


"வீட்டுலன்னு சொல்லாதீங்க அங்க அவ இல்ல.‌ எங்க போயிருக்கா. நான் அவள உடனே பாக்கணும். "


" எனக்கு எப்படித் தெரியும்? " என அலட்சியத்துக்காகவே சொல்லிவிட்டு சமையல் வேலையை மும்மரமாக செய்ய, ருத்ராவிற்குக் கோபம் வந்தது.


"பெத்த‌ பொண்ணு எங்க போறா வர்றான்னுலாம் தெரிஞ்சி வச்சிருக்க மாட்டிங்களா? ‌என்ன அப்பாவோ?." என எரிச்சலுடன் சொல்ல,


" ஏன் கல்யாண பண்ணிக்கப் போற பொண்ணு எங்க இருக்குன்னு கட்டிக் போறவெ தெரிஞ்சி வச்சிருக்கலாம்ல. நேத்து நைட் பூரா கூட இருந்திட்டு காலைல எங்கன்னு தெரியலன்னு சொல்றது ஆச்சர்யமா இல்ல.  " என்க ருத்ரா அவனை முறைத்தான்.


"என்னோட பொண்ண வேவு பாக்குற பழக்கம் எனக்கு கிடையாது. எங்க இருந்தாலும் பாதுக்காப்பாத்தா இருப்பா. " என்றான் கார்த்திக்.


"பதிலுக்குப் பதில் செய்யாம உங்களால இருக்க முடியாதுல."


" எனக்கு என்ன கிடைக்கிதோ, அத திருப்பி தந்து தான் பழக்கம். Just like  a mirror. " 


" நீங்க எங்கிட்ட நடந்துக்கிற இந்த முறைக்காகக் கண்டிப்பா வருத்த படுவீங்க. வெய்டிங்க ஃபார் எ டூ டேஸ். " என்றவன் வாசுவிற்கு ஃபோன் செய்ய அவள் எடுக்கவில்லை. ஆனால் ரிங் போனது.


" ஷிட்.‌.. இந்த பொண்ணுக்கு என்னை டென்ஷன் படுத்தி பாக்குறதுல என்னதா சந்தோஷமோ. " என டேபிளை காலால் எத்தினான்.


" ஹலோ வாசு. " கார்த்திகேயனின் குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.


"கார்த்திப்பா. " வாசுவின்‌ குரல். லவுட் ஸ்பீக்கரில் போட்டு ருத்ராவிற்கும் கேட்கும் படி பேசினான் கார்த்திக்.


" வாசு எங்க இருக்கம்மா நீ?. வீட்டுலயா. "


"இல்ல கார்த்திப்பா. நான் டேனியல பாக்க போய்க்கிட்டு இருக்கேன். ரெண்டு நாளா அவனப் பாக்கல. ஜோஹிம்மா வேற அவனுக்கு உடம்புக்கு சரியில்லன்னு சொன்னாங்க. அதா பாத்துட்டு வரலாம்னு போய்க்கிட்டு இருக்கேன். நைட் குள்ள வந்திடுவேன். விக்டரும் மெய்ஸியும் கூட இருக்காங்க. நீ கவலப்படாதீங்க. " என்றவள் வைத்துவிட,


'ஏன் இந்த டயலாக்க என்னோட கால அட்டென் பண்ணி சொல்லிருக்கலாம்ல. காலைல இருந்து என்னோட கால எடுக்காம அவாய்ட் பண்ணிட்டு. அவளோட அப்பா பண்ண காலுக்கு மட்டும் ரெஸ்பான் பண்றா!!. ' என மனதிற்குள் திட்டிக் கொண்டே வெளியே செல்ல அவனின் ஃபோனுக்கு மெஸ்ஏஜ் மூலம் தகவல் சொல்லியிருந்தாள்.


"இந்த டேனியல் கிட்ட அப்படி என்னதா இருக்குன்னு, அந்த யூஸ்லஸ்காக ரெண்டு பேரும் துடிக்கிறாங்கன்னு புரியவே இல்ல. ச்ச… டேனியல். வர்றேன் டா. " என்றவன் காரை ஓட்டிச் சென்றான்.


"வாசு முடியவும் கால் பண்ணு உன்னை பிக்கப் பண்ணிக்கிறோம். " என்று இறக்கி விட்டான் விக்டர்.


"என்னை இறக்கி விட்டுட்டு நீங்க எங்க போகப்போறீங்க?. " என விழி விரிய வாசு கேட்க,


" பக்கத்துல ஒரு நல்ல வியூவ் இருக்கு. சோ... என்ஜாய் பண்ண போறோம். " என இருவரும் முத்தமிட்டு கொள்ள, வாசு அவர்களைக் கண்டு கொள்ளாது நடந்து சென்றாள்.


" லவ்வர்ஸ் தான் அதுக்குன்னு எப்பயும் இப்படியேவா இருக்கணும். ச்ச… " எனப் புலம்பியவள் சென்ற இடம் ஒரு பார்.


பல குறுக்கு சந்துகளைக் கடந்து சென்றால் தான் அந்த இடத்திற்குள் போக முடியும். மிகவும் குறுகிய சந்துக்கள் அவை.


"இவனுக்குக் குடிச்சிட்டு மட்டையாக வேற இடமே கிடைக்கலயா. " என பெருமூச்சி விட்ட படி உள்ளே சென்றாள்.


பகலிலும் இருளை வாரி வழங்கிய அந்த பாரில், பாட்டுச் சத்தத்திற்கும் புகையிலை வாடைக்கும் பஞ்சமே இல்லை. நடுவில் நின்று பெண்கள் சிலர் வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தவென நடனம் ஆட, அங்கிருந்த அனைவரும் போதை உலகில் மிதந்து கொண்டு இருந்தனர்.


ஒரு மூலையில் கிடந்த ஒற்றை நீள சோஃபாவில் அமர்ந்திருந்தான் டேனியல். முகத்தில் உயிர்ப்பு இல்லை. கண்கள் இரு தினங்களில் அதன் ஒளியை இழந்து குழிக்குள் கிடந்தது. லேசான தாடி அவனுக்கு உண்டு தான். ஆனால் இப்போது அது நீளமாக வளர்ந்திருப்பதை போல் தெரிந்தது.


குடிக்கவில்லை. ஆனால் புலம்பியபடியே இருந்தான். அவ்வபோது தலையில் கை வைத்து மல்லாக்க பார்த்தபடி கிடந்தான் அவன். பரந்த மார்பு குலுங்குவதை கொண்டு அவன் அழுகிறான் என்பதை அறிந்த வாசு,


"டேனி…. டேனியல். என்னாச்சி உனக்கு?. ஏன் இப்படி இருக்க?. " என்றபடி அருகில் சென்று அமர்ந்தாள். அவளை ஒரு பார்வை பாத்தவன்‍,


"இங்க எதுக்கு வந்த வாசு. இது உனக்கான இடம் கிடையாது. போ... " எனத் துரத்தினான்.


"நான் போணும்னா நீயும் எங்கூட வா. " என்றதும் மௌனமாய் இருந்தவன் பின் பேசத் தொடங்கினான்.


"நான் எங்கையும் வரல வாசு. என்னை விட்டுடு நீ போ. கார்த்திக் அங்கிளுக்கு நீ பாருக்கு வந்த விசயம் தெரிஞ்சாத் திட்டுவாரு. ஒரு நல்ல ஃபேரன்ஸ்ன்னா பிள்ளைங்க தப்பு பண்ணும் போது மட்டும் தான் கண்டிக்கணும். அந்த வகைல உன்னோட ஃபேரன்ஸ் ரெண்டு பேருமே ரொம்ப ரொம்ப நல்லவங்க.


என்னோட ஃபேரன்ஸ் மாதிரி கிடையாது. ஒருக்க என்னை கார் டிக்கில போட்டு பூட்டிட்டான் அந்தாளு. மூணு நாள்‌ கழிச்சி தான் திறந்து விட்டான். சாப்பாடு, தண்ணி, பாத்ரூம் கூட நான் போகல. இதுல ஹைலைட் என்னென்னா எனக்குக் கடைசி வர எதுக்கு என்னை அடச்சிவச்சான்னே தெரியல. என்னைப் பெத்தவளும் என்னைத் தேடல. அந்த அளவுக்கு கண்டிப்பான பொறுப்பான ஃபேரன்ஸ்.‌‌


நீ குடுத்து வச்சவ வாசு. ஒரு பேபி நல்லவனா கெட்டவனான்னு இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டுறதுல பெத்தவங்க ரோல் ரொம்ப இம்பார்ட்டெண்ட் ஆனது.


நானும் கார்த்திக் அங்கிள் மாதிரி நல்ல அப்பாவா இருக்கணும்னு தான் ஆசப்பட்டுறேன். அடிக்காம கண்ணாலயே கண்டிச்சி, என்னோட மூஞ்சி பாத்தே என்னோட மனநிலய புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு பொண்ணு. உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தை. எனக்குப் பிறந்திருக்கணும். ஆனா… ஆனா... " என்றவன் உடைந்து அழ, வாசுவிற்கு எதுவும் புரியவும் இல்லை. அந்த பப்பில் ஒலித்த பாடலின் சத்தத்தில் கேட்கவும் இல்லை.


"டேனி அழாத. ப்ளீஸ் ஸ்டாப் க்ரையிங். வா வெளிய போகலாம்.  கம் டேனியல். " என அவனை இழுத்துக் கொண்டு அந்தச் சந்துகளை விட்டு வெளியே வந்தாள்.


அங்கு ஒரு உணவகம் தெரிய அவனை அழைத்துக் கொண்டு அங்கு சென்று அமரவைத்தாள். முகம் கழுவச்செய்து, உணவை ஆர்டர் செய்ய, டேனியல் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. உண்ணும் நிலையிலும் இல்லை.


"டேனியல் எதப்பத்தியும் யோசிக்காத முதல்ல சாப்பிடு. "


"...."


"டேனியல் நான் உங்கிட்ட தான் பேசுறேன். " 


அதற்கும் அவன் அமைதியாக அந்த உணவை வெறித்து பார்த்தபடி இருக்கவும்,


"தன்யாட்டா பேசுனீயா. ரொம்ப திட்டீட்டாளா." என்றபோது அவனின் முகம் கசந்தது.


" விடு டேனியல். உனக்கு செட் ஆகுற மாதிரி நல்ல பொண்ணு கிடைப்பா. ஆனா பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்காக மட்டும் ஒரு பொண்ணு கூட பழகுறதும், அந்தப் பொண்ண அவமான படுத்துறதும் ஒன்னு தான்.


எனக்குத் தெரியும் நீ உன்னோட மைண்ட் செட்ட மாத்திக்க‌ மாட்ட. அதுனால தன்யாவ passing cloud டா நினைச்சி மறந்திட்டு அடுத்தது என்னன்னு பாரு. இன்னையோட உன்னோட லைஃப் முடிஞ்சி போய்டாது. இன்னும் நிறைய இருக்கு. இந்தா இதச் சாப்பிடு. " என உணவை ஸ்பூனில் எடுத்து ஊட்ட, அவள் கையை பிடித்து தடுத்தவன்,


"தன்யா ஒரு கொலகாரி வாசு. கொல பண்ணிட்டா." என்றான் கண்ணீருடன்.


"வாட்." என அதிர்ந்து போய் கேட்டாள் வாசு…


 

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...