அத்தியாயம்: 76
காலை நேரம்.
டேனியல், டிப்டாப்பாக டிரெஸ் அணிந்து கொண்டு, கண்களில் கூலிங் க்ளாஸ்ஸுடன், தன் பைக்கை ஒரு வீட்டின் முன்பு நிறுத்தாது தூர நிறுத்திவிட்டு அதன் வாயிலைப் பார்த்தபடி நின்றான்.
அது தன்யா தங்கியிருக்கும் வீடு. அவளுக்கு எனச் சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து குடுத்திருந்தான் தேவ். உடன் அவனின் தோழியையும் தங்க வைத்திருந்தான்.
தினமும் காலை வேளையில் அவளின் தரிசனத்திற்காகத் தூர நின்று காத்திருப்பான் டேனியல். சரியாகப் பத்து மணிக்கு செக்கப் என்ற பெயரில் ஒரு மருத்துவமனைக்கு செல்வாள். அப்போது மட்டும் தான் வெளியே வருவாள்.
இப்போதும் அவளுக்காகத்தான் காத்திருக்கிறான். பத்து மணியை நெருங்க உள்ளது. தேவியின் காட்சி கிடைக்கும் என ஆவலாக நிற்க அவனுக்கு வரமே கிடைத்தது.
செக்கப்பிற்காக வெளியே வந்தவள் அவளுக்காகக் காத்திருந்த டாக்ஸியில் ஏறாது, இவனை நோக்கி வந்தாள்.
"நான் ஹாஸ்பிடல் போகணும். " என அவனின் பைக்கின் அருகில் நின்று கூற,
"பின்னாடி உக்காரு தயா. உன்னை சேஃபா நான் கூட்டீட்டு போறேன். " என்றான் ஆனந்தமாக.
அவள் பேசாது ஏறி அமர்ந்து கொண்டாள். டேனியலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தன் பின்னே அமர்ந்து வருகிறாள் என்பது சந்தோஷமாக இருந்தது அவனுக்கு. எத்தனை நாட்களாகிவிட்டது, அவளுடன் பைக்கில் சென்று.
தன்னை மெதுவாக ஓட்டச் சொல்லி தன் இடையணைத்து முதுகில் முகம் புதைத்து கேட்கும் போது, எத்தனை சுகமாய் இருந்தது. ஹிம்… அதெல்லாம் அந்த நாள்கள் எனப் பல நினைவுகளைத் தாங்கியபடி அவளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான் டேனியல்.
இத்தனை மெதுவாக இவனுக்கு பைக் ஓட்ட வருமா! என அவள் நினைக்கும் அளவுக்குப் பார்த்துப் பதமாக ஓட்டிச் சென்றான் அவன். அவளுக்குள் இருக்கும் அவனின் பாப்பாவிற்கு எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக மெதுவாக ஓட்டிச் செல்பவனுக்கு தெரியாது என்ன நடக்க போகிறது என்று.
இருபது நிமிட பயணம் என்பது டேனியலின் நத்தை வேகத்தில் நாற்பது நிமிடமாக மாறி மருத்துவமனைக்குத் தாமதமாக வந்து சேர்ந்தனர். அவள் அவனை வாய்க்குள் திட்டிய படியே இறங்கி உள்ளே செல்ல,
"தயா… நீ பாத்துட்டு வர்ற வர, நான் வெளியவே நிக்கவா? இல்ல உள்ள வரட்டுமா?" என்று ஏக்கத்துடன் கேட்டவனை முறைத்தாள் தன்யா.
"அது வந்து உனக்கு ஸ்கேன் பாக்கும் போது கூட இருந்து பேபிய நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு. " என்க, புருவம் உயர்த்திப் பார்த்தவள்,
"ஓகே… வா... வந்துப் பாத்து சந்தோஷப்படு. " என அழைக்க, அவனும் ஆசையுடன் உள்ளே சென்றான். ஆனால் அங்கு அவளுக்கும் அந்த மருத்துவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அவனின் ஆசையைச் சிதைத்தது.
"தன்யா என்ன நடக்குது இங்க? அந்த டாக்டர் அபார்ஷன் பத்திப் பேசிட்டு இருக்காங்க. நீ ஒன்னுமே சொல்லாம உக்காந்திருக்க. எங்க போற தன்யா?. நில்லு. " எனச் செல்லும் அவளின் கரம் பற்ற,
"முதல்ல கைய எடு டேனியல். நான் நல்லா யோசிச்சேன் டேனியல். நீ சொன்னது தான் சரின்னு பட்டது. "
"எது?"
"அதா ஃப்ரெஸ்ஸா லைஃப்ப ஸ்டாட் பண்றது. அதுக்குக் குழந்த இடைஞ்சலாத்தான இருக்கும்.
அது மட்டுமில்லாம அடுத்தெவன் குழந்தைக்கி இன்ஷியல் தர்ற அளவுக்கு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு மனசு இல்ல. சோ... இந்தக் குழந்த உலகத்த பாக்காம இருக்குறது தான் நல்லது. அதா கலச்சிடலாம்னு... "
"தயா வேண்டாம் ப்ளிஸ். உன்னால அதப் பாத்துக்க முடியலன்னா பெத்து எங்கிட்டக் கூடக் குடுத்திடு. நான் அத நல்லா பாத்துப்பேன்."
"ஓ… பிறந்த குழந்தைய நீ எப்படிப் பாத்துப்ப? இன்குபேட்டர்ல வச்சா! இல்ல வாட தாய் மூலமாவா? " என்க, அவன் புரியாது புருவம் சுருக்கினான்.
" இன்னும் இருபது நாள்ள கல்யாணம். அதுக்குள்ள என்னால பெத்துக் குடுக்க முடியுமா என்ன? "
"அதுக்காக ஒரு உயிர கொல்லப்போறீயா?. வேண்டாம் தயா. " என்றவனுக்கு மனம் பதைபதைக்கத் தொடங்கியது. அது அவனின் உயிரணு அல்லவா!
" இது எப்படிக் கொலை ஆகும் டேனியல். " என்றவள்,
" நான் பெத்தே குடுத்தாலும் நீ எப்படி அத ஒழுங்கா வளப்ப?. உன்னால உன்னையே பாத்துக்கு முடியாது. நீயே வேற ஒருத்தரோட நிழல்ல நின்னுட்டு இருக்க. இதுல குழந்தைய எப்படிப் பாத்துப்ப. "
"இல்ல தயா. நான்…. "
"சரிப்பா நல்லா பாத்துப்பன்னு வச்சிக்க. அதுவும் உன்னை மாதிரியேத்தான வளரும். ஆம்பளப்பையனா இருந்தா என்னை மாதிரி நிறை பொண்ணுங்க பாதிக்கப்படுவாங்க. பொம்பள பிள்ள… என்னால யோசிக்க கூட முடியல.
உங்கைல குடுத்து அதக் கொஞ்சம் கொஞ்சமா வதைக்கிறத விட, கலைக்கிறது மேல். எதுக்கு உன்னைக் கூட்டீட்டு வந்தேன்னு உனக்குச் சந்தேகம் வரும். நாளைக்கி கல்யாணத்துக்கு அப்றம் எனக்குக் குழந்த பிறந்தா அத நீ என்னோட குழந்தன்னு சொல்லி சொந்த கொண்டாடிட்டு வரக்கூடாதுல்ல. அதா உம்முன்னாடியே கலச்சிடலாம்னு கூட்டீட்டு வந்தேன். " எனக் கருணையே இல்லாது சொல்லி விட்டு, மருத்துவரின் அறைக்குள் சென்று அரை மணி நேரம் சென்று வெளியே வர, டேனியல் சிலை என அத்தனை நேரமும் சமைந்து நின்றான்.
உண்மையிலேயே அப்படி ஒரு குழந்தையே இல்லை தான். ஆனால் டேனியலுக்கு அது தெரியாதே. அவனின் மூளை நிச்சயம் வேலை செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவள் அனுப்பிய ஸ்கேன் ரிப்போட்டை படித்துப் பார்த்திருந்தான் என்றால் அது புரிந்திருக்கும். எங்கே அவன் தான் அதில் கருவைத் தவிர வேறு எதையும் பாக்கவில்லையே.
வெளியே வந்தவள் அவனைக் கடந்து செல்லும் போது அவனின் வேதனைத் ததும்பும் முகம் அவளைக் கவலை கொள்ளச் செய்தது.
ஓடிச்சென்று அவனை அணைத்து, ‘எல்லாம் பொய் டேனியல் நீ வருத்தப்படாதே.’ என்று செல்லத் துடித்து கால்கள் அவன் புறம் நகற, தேவ் வந்து அவளை இழுத்து சென்றான்.
"என்ன பண்ற தன்யா? எல்லாம் சரியாப் போக்கிட்டு இருக்கும் போது முட்டாள் தனமா பண்ணி அத கெடுத்திடாத. " எனப் பற்களுக்கு இடையில் வார்த்தைகளைத் துப்பியவன், அவளைக் கையோடு ஃப்ளைட் ஏத்தி விட்டு விட்டான். தன்யாவின் கெஞ்சலைப் பொருட்படுத்தாது.
"என்ன சொல்ற டேனியல்! தன்யா ப்ரெக்னன்ட்டா இருக்காளா?"
"பாஸ்ட் டென்ஸ்ல சொல்லணும் வாசு. இருக்கா இல்ல இருந்தா. முன்ன இருந்த குழந்த இப்ப இல்ல. கொன்னுட்டா. என்னோட குழந்தையையா கொல பண்ணிட்டு, என்னையும் உயிரோட கொன்னுட்டு, சந்தோஷமா ஊர விட்டு போய்ட்டா. எவனையோ கல்யாணம் பண்ணிக்க. " என ஆவேசமாக சொல்ல,
"தன்யாக்குக் கல்யாணமா? " என அவள் யோசிக்கும் போதே டேனியலின் புலம்பல்கள் நிற்காது தொடர்ந்து கொண்டே இருந்தன.
"எஸ்… என்னோட குழந்தை தான் அது. எப்படி என்னோட குழந்தைய கொல்லலாம் அவ? இதோ பாரு. இது எல்லாம் என்னோட குழந்த தான். சின்ன லார்வா புழு மாதிரித் தெரியுதே, இது என்னோட பொண்ணு. மினி வாசு… நான் உன்னோட கார்த்திப்பா மாதிரி எம்பொண்ண தாங்கணும்னு கனவு கண்டுட்டு இருந்தேன்." எனத் தன்யா அனுப்பிய வீடியோஸ்ல காட்ட, அவளுக்கு டேனியலின் நிலைகண்டு பரிதாபமாக இருந்தது. பைத்தியக்காரன் போல் புலம்பினான். புலம்ப வைத்துவிட்டான்.
"நான் அதுக்குக் கயான்னு பேர் வைக்கலாம்னு இருந்தேன். கயா… புத்தருக்கு ஞானம் வந்த இடம்னு சொல்லிருக்கா தயா. நாங்க ரெண்டு பேரும் அங்க போயிருக்கோம். நல்ல அமைதியான இடம். எனக்கு ஞானம் தர பொண்ணுப் பிறக்க போதுன்னு சந்தோஷமா இருந்தேன். அமைதியையும் சந்தோஷத்தையும் என்னோட பொண்ணால தான் தர முடியும்.
அது தயாக்குப் பிடிச்ச பேரும் கூடும். ரெண்டு பேரும் சேந்து தான் இத முடிவு பண்ணோம். ஆனா... ஆனா... எங்கைக்கு வர்றதுக்கு முன்னாடி அத... கொல பண்ணிட்டா வாசு. நான் என்னெல்லாம் கனவு கண்டேன்னு தெரியுமா. எல்லாத்தையும் சிதச்சிட்டா. அவள கொல்லணும் போல கோபம் வருது. " எனச் சொல்லி ஆவேசப்பட,
"அதே கனவு தன்யாக்கும் இருக்கும்ல டேன்." என்க டேனியல் அவளின் முன் அமர்ந்தான்.
"என்ன சொல்ல வர்ற வாசு?"
" நீ சொல்ற மாதிரியான கனவு, குழந்தைய பெத்துக்க போற அவளுக்கும் இருந்திருக்கும் தான. இத்தனைக்கும் உன்னை அதிகமா லவ் பண்ணவ. சின்னதா ஒன்னே ஒன்னு தான் கேட்டா. தாலி... சட்ட படி அவள கல்யாணம் பண்ணி உங்க குழந்தைக்கி தாய் தகப்பன்னு ரெண்டு பேரும் இருக்கணும்னு ஆசப்பாட்டா. அத நீ கலைச்சது சரின்னா. தன்யா பண்ணதுல என்ன தப்பு இருந்திடப் போது. "
"எதுக்கு எதோட முடிச்சி போடுற. அதுவும் இதுவும் ஒன்னா. "
"ம்... ஒன்னு தான். சொல்ல போனா நீ பண்ணதோட தன்யா பண்ணத கம்பேர் பண்ணா அது தப்போ கிடையாது. இப்ப நீ சொன்னேல்ல உன்னோட கனவு அது இதுன்னு, அதுல எதுலயும் தன்யா கிடையாது டேனியல். நீ, உன்னோட குழந்தன்னு ரொம்ப சுயநலமாக மட்டும் தான் டேனியல் நீ யோசிக்கிற. ஆனா தன்யா உன்னையும் சேத்து தான் யோசிக்கிறா. அவளோட கனவுல நீயும் இருக்க. " என்க,
"அப்ப எங்க குழந்தைய கொன்னது சரின்னு சொல்றீயா. " எனக் கோபமாக எழுந்தான்.
"நீயும் பொண்ணு தான. அதா அவளுக்கே சப்போட் பண்ற. குழந்த… உலகம் அறியாத அந்த பிஞ்சிய எப்படிக் கொல பண்ண அவளுக்கு மனசு வந்தது. ச்ச அவள போய் லவ் பண்றேன்னு நினைக்கும் போதே கேவலமா இருக்கு. " என அங்கிருந்த உணவு தட்டை தள்ளி விட்டு விட்டு கோபமாக எழுந்து செல்ல,
"இவனுக்கு வந்தா ரத்தம். அடுத்தவங்களுக்கு வந்தா டொமேட்டோ சாஸ்னுல பேசுறான். சுயநலத்தோட மொத்த உருவமே இவெந்தா. ச்ச… இவன போய் மனுஷன்னு மதிச்சி பேச வந்தேன் பாரு. " என நினைத்தவள் மேஜையில் கொட்டாத உணவையும், ஆர்டர் செய்த உணவையும் பார்சல் செய்ய சொல்லி, வெளியே இருந்த வீடற்ற மக்களுக்குக் கொடுத்து விட்டு அவனைப் பின் தொடராது வேறு பக்கம் சென்று டாக்ஸியில் ஏறி அமர, உடன் டேனியலும் ஏறினான்.
டேனியல் எதுவும் பேசாது இருக்கவும்,
"எதுக்கு டேனியல் மறுபடியும் வந்த. நானும் தன்யா மாதிரி பொண்ணு தான். எனக்கு கோபம் வரும். தயவு செய்து கீழ இறக்கிடு. "
" என்னால முடியல வாசு. இது எனக்கு டிப்ரஸ்ஷென்னா க்ரியேட் பண்ணுது. எனக்கு ஒரு முடிவு வேணும்."
"அத நீ தான் எடுக்கணும். உனக்கு உன்னோட ஸ்டுப்பிட் கனவுல வந்த பிறக்காத அந்த குழந்ததா முக்கியம்னா போய் டாக்டர பாரு. உங்கைக்குக் குழந்த கிடைக்க ஆயிரம் வழி சொல்லுவாங்க. கல்யாணம் பண்ணிக்காமலேயே உனக்குக் குழந்த பிறக்கும். அது உன்னை அப்பான்னு கூப்பிடும்."
"ஆனா... இந்த குழந்த... " என்றவனுக்குக் குடும்பமாக வாழும் ஆசை சில காலமாக எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது. நான், தன்யா, என் மகள் எனச் சிறிய கூட்டிற்கு அஸ்திவாரம் போடத் தொடங்கிய மனத்தால் ஒரு ஜீவன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
"அதா போயிடுச்சே. உனக்குத் தன்யா வயித்துல தான் உன்னேட குழந்த வளரணும்னா… போய் தன்யாவ பாரு. அப்பயும் அவளக் கல்யாணம் பண்ணிக்காம கிடைக்காது. இந்த முறையாது நான்னு மட்டும் யோசிக்காம, நாங்கன்னு தன்யாவுக்கும் சேத்து யோசி. " என்க, டேனியல் அவளுக்கு பதில் சொல்லாது ஃபோனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான்.
'என்ன பேச விட்டுட்டு. இவெ என்னத்த அப்படி உத்து உத்து பாக்குறான். ' என எட்டிப்பார்க்க அவளின் மனம் மகிழ்ந்தது.
"என்ன பண்ணிட்டு இருக்க?” எனப் புன்னகையுடன் கேட்டாள் வாசு.
"நீ தான நாங்கன்னு யோசிக்க சொன்னல்ல. அதுக்குத் தன்யாவும் வேணும்ல. சோ... "
"சோ..."
"இன்னைக்கு நைட் சான் பிரான்சிஸ்கோல இருந்து லண்டனுக்கும். லண்டன் இருந்து இந்தியாவிற்கும் ஒரு ஃப்ளைட் இருக்கு. டிக்கெட் போட்டுட்டு இருக்கேன். " என்றான் டேனியல்.
"தன்யாவ கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டியா?"
"எஸ்... எனக்கு ஒரு குடும்பம் வேணும் வாசு. குழந்த வேணும். அந்தக் குடும்பத்த தன்யாவ தவிர வேற யாராலயும் எனக்குக் குடுக்க முடியாது. எனக்கு அவளம் பிடிக்கும். எப்பயுமே அவா மேல வச்ச காதல நான் மாத்திக்க மாட்டேன். என்னை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணிடு வாசு. " என்று விட்டு சீட்டில் தலை சாய்த்து தன் குடும்பம் என்ற கனவைக் காணத் தொடங்கினான்.
'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தன்யாவ கொலகாரி. அவளக் கொல பண்ணணும் கொலவெறில சொல்லிட்டு இருந்தான். இந்தத் திடீர் ஞானோதயம் என்னோட பேச்சக் கேட்டா வந்தது. நம்ப முடியலயே. இவெ மனசு மாறுற மாதிரி அப்படி என்ன பேசிட்டோம். ' என யோசித்தவள், கனவில் மகளுடன் விளையாடி இதழ்கள் இழுக்கச் மென் நகை புரிந்தவனிடம்,
"All the best. " எனச் சொல்லி வழியனுப்பி வைத்தாள் வாசு.
'யாரு பெத்த பிள்ளையோ. நாம போடுற எல்லா திட்டத்துலயும் பினிஷிங் டச் குடுத்து பர்ஃபெக்ட்டா எங்கைக்கு வெற்றி கோப்பைய கொண்டு வந்து குடுக்குது. இதுக்கு அடுத்தடுத்து நடக்கப்போறதுலயும் இவளால தான் எனக்கு வெற்றி கிடைக்கும்.' இது தேவ்வோட மைண்ட் வாய்ஸ்ஸா இருக்கும்.
இருவரும் அந்த உணவகத்தில் பேசிக் கொண்டு இருப்பதை தன்யாவிற்கு வீடியோ கால் மூலமாக காட்டினான்.
அதைப் பார்த்தப் பின் தான், 'டேனியல வாசு பாத்துப்பா. ' எனத் தன்யாவின் மனம் நிம்மதி அடைந்தது.
டேனியலை ஏர்போர்ட் இறக்கி விட்டு வீடு செல்லும் வரையும் தேவ்வின் கார் வாசுவைத் தொடர்ந்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..