அத்தியாயம்: 77
மெத்தையில் படுத்து உத்திரத்தில் தொங்கிய மின் விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
ஒன்றை கொண்டை தான். அதை மையமாகக் கொண்டு மூன்று இறக்கைகளும் சுழல்கிறது. இல்லை அப்படிச் சொல்ல கூடாது. மூன்று இறக்கைகளால் தான் நடுவில் இருக்கும் கொண்டைக்கு மதிப்பு.
தன்னை மதிப்பு மிக்கவனாக மாற்றியது தன் வாழ்வில் வந்த மூன்று பெண்கள்.
இன்று அவர்களின் நினைவு அதிகமாக வந்தது.
'ஒரு நிமிஷம். இவனோட லைஃப்ல மூணு கேர்ள்ஸ்ஸா. ஒன்னு கண்டிப்பா அவனோட பொண்ணு தான். வாசவி. அடுத்து ஜோஹிதா. வைஃப் அவளும் இப்பப் பக்கத்துலயே இல்ல. காலைல இருந்து அவளோட நினப்பாவே திரியுறான். ஓகே... அப்ப மூனாவது யாரு?
வாங்க பாக்கலாம். நம்ம வெளிநாட்டு ஜோசிக்காரெ டேனியல் சொன்னது உண்மையா இல்லையான்னு.'
" என்ன கார்த்தி. இன்னைக்காது சமாதானம் பண்ணியா?. " அப்சத். இது வழக்கமான தினசரி கேள்வியாய் மாறி இருந்தது.
"எங்க மச்சி... பக்கத்துல போனாலே தீயா முறைக்கிறா. பேசுனா… கண்ணுக்கு முன்னாடியே பஞ்ச வாங்கி காதுல வைச்சிக்கிறா. இதுல நெருக்கி போனா... என்னை சூசைட் பண்ண வச்சிடுவா. ச்ச... இந்தகீ காதல மட்டும் எவனும் பண்ணவே கூடாது. நம்மள நம்மளாவே இருக்க விடாது. " என்ற சலித்துபோன பதில் தான் வந்தது கார்த்திகேயனின் உதடுகளில் இருந்து.
" நாங்க தான் அப்பவே சொன்னோமே. நீ கேட்டியா?. பொத்தி பொத்தி வச்ச பிள்ளையா அது. எட்டி பாத்துத்திட்டு வந்து சொல்லுறேன்னு பாத்த… பாத்ததோட நிப்பாட்டுனீயா. பழகுன… அப்றம் லவ்வுன்ன. அந்தக் கருமத்தையாது ஒழுங்காப் பண்ணியா... அதையும் அரையும் குறையுமா பண்ணி, சண்ட போட்டு பிரிஞ்சிட்ட. இப்பச் சமாதானம் பண்ண வழி தெரியாம அழையுற. தப்ப உம்மேல வச்சிட்டு. காதல ஏன்டா கொற சொல்ற. " இது கண்டிப்பாக முருகு தான்.
"என்ன மச்சான்!. திடீர்னு காதலுக்கு மரியாதலாம் தந்து பாராட்டி சொற்பொழிவெல்லாம் ஆற்றுற. எதாவது பொண்ணு கிண்ணு கண்ணுக்கு லட்சனமா பாத்துட்டியா. " என்றான் அப்சத்.
" பொண்ணா!! டேய் எனக்கு அடுத்து ரெண்டு தம்பிங்க இருக்கானுங்க. ஒரு தங்கச்சி. அதுகல கரை சேக்கணும். அப்பாக்கு வேற ஆஸ்துமா, வாழா வெட்டியா வந்த தங்கச்சி மாதிரி அதுவும் பர்மனெட் விருந்தாளியா வந்து தங்கிடுச்சி. இனி அதுக்கு மருந்து மாத்திரன்னு அம்மா சம்பளத்துல பாதி போய்டும். மீதில தம்பிக்கி படிப்பு, சாப்பாடுன்னு வறுமைல காலந்தள்ளிட்டுக் கிடக்குற எனக்கு பொம்பள சோக்கு வேற கேக்குமா?. பைத்தியம் மாதினி உலறாம உருப்படியா பிரிந்து போன காதலர்கள சேத்து வைக்க நம்ம மச்சானுக்கு ஒரு ஐடியா குடு. இல்லன்னா நீயே போய் அந்தப் பொண்ணு கிட்ட சமாதான பேச்சுவார்த்த நடத்து. "
"எது?. நானா!. எங்கிட்ட அந்தப் பொண்ணு எப்படிப் பேசும்? இவனுக்கு வேலை கிடைச்சிருச்சின்னு ஸ்வீட் கொண்டு போய்க் குடுக்கச் சொன்னான். நம்ம மச்சானோட முன்னாள் காதலியாச்சேன்னு லவ் சர்வீஸ் பண்ணேன். அது எங்க ஏதுன்னு விவரம் கேட்டுச்சி அவ்ளோ தான். அப்றம் இங்க படிக்க போறதா சொல்லுச்சி. வேற எதுக்கும் என்னை அந்தப் பொண்ணு ஏறெடுத்து நிமிந்து கூடப் பாத்தது இல்ல. " எனக் கடகடவென நடந்ததை ஒப்பித்தான் அப்சத்.
" டேய்... டேய்... உங்க அனுபவத்த சொல்லி அறுக்காம ஜோஹிதாவ சமாதானம் பண்ண வழி சொல்லுங்கடா. ப்ளிஸ். " எனக் கார்த்திக் கெஞ்ச, அவனுக்கு வழி சொல்லாது, ஆகாத அட்வைஸ்களை அள்ளித் தெளித்த படி இருந்தனர் அவனின் நண்பர்கள்.
அப்சத் மூலம் ஜோஹிதா டில்லியில் படிக்க வர உள்ளதை அறிந்தவன். தானும் அங்கு போய்ச் சேர்ந்தான். MBA. இரண்டு ஆண்டுகள் கோர்ஸ் அது. பணியில் சேர்ந்த ஹோட்டலில் வேலை என்பது மாலை நேரத்திற்கு மேல் என்பது இவனுக்கு வசதியாய் போயிற்று.
ஜோஹிதாவும் அதே பிரிவைத் தான் தேர்வு செய்துள்ளாள். ஒரே வகுப்பு. பள்ளி காலத்திற்குப் பின் இருவரும் ஒரே வகுப்பில் படிக்க உள்ளனர்.
கார்த்திக்கிற்குப் பல மாதங்கள் கழித்து அவளை நேரில் பார்த்தது சந்தோஷமாக இருந்தது. அவளின் பிடிவாதம் அறிந்ததால் தானே கீழிறங்கி விட்டு கொடுக்க முடிவு செய்து அவளின் முன்னே நின்றான். ஆனால் அவளோ…
'என்னைக் கண்டுக்காம போனேல. இப்ப நான் மட்டும் எப்படி உங்கூட டக்குன்னு பேசுவேன். என்னைப் பின்னாடியே அழைய விட்டு உன்னை கொஞ்ச நாள் இல்லை, கொஞ்ச வர்ஷமாச்சும் அழைய விடணும். வா...வா... டிகிரி கைக்கு வர்ற வர பைத்தியக்காரெ மாதிரி எம் பின்னாடியே சுத்து. ' எனக் கார்த்திக்கைச் சுத்தலில் விட்டாள் அவள்.
தான் கல்லூரியில் சேர நினைத்ததும் முருகுவிற்கும் சேர்த்தே அப்ளிகேஷனை வாங்கி கார்த்திக்கே ஃபில் செய்து அனுப்பி விட்டான். கடிதத்தை மட்டும் முருகுவிற்கு அனுப்பி, ‘வந்து சேர்.’ என்றிருந்தான் கார்த்திக்.
முருகு வரும் போதும் அப்சத்தையும் அழைத்து வந்து விட்டான். ஆனால் கார்த்திக் உடன் படிக்க இல்லை. முதுகலை கணினி பிரிவைத் தேர்வு செய்தனர் இருவரும்.
மூவரும் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். முருகுவைத் தவிர மற்ற இருவருக்கும் ஹிந்தி ஓரளவுக்குத் தெரியும் என்பதால், ' என்னைய கூடவே இருந்து காப்பாத்தி கூட்டீட்டு போய்டுங்கடா. ' என முருகு இருவரை விடுத்துத் தனித்து எங்கும் செல்வது இல்லை.
ஆங்கிலம் சரளமாக பேசவில்லை என்றாலும் புரியும் என்பதாலும் ஓரிரு வார்த்தைகள் திரும்பி பேசுவதாலும் முருகுவிற்கு அந்தக் கல்லூரி பிடித்து போய் விட்டது.
" பரவாயில்லை மச்சான். all Indians are brothers and sisters. அப்படின்னு நம்ம ஸ்கூல்ல சும்மாக்காச்சிக்கி சொல்லி குடுக்கல. உண்மையத்தா சொல்லிருக்கானுங்க. " முருகு தான்.
அவர்கள் சந்தித்த வட மாநில மாணவர்களாகட்டும், பிற மாநில மாணவர்களாகட்டும் அனைவரும் நட்புடனே பழகினர். அதைத் தான் முருகு அப்படிச் சொல்கிறான். அவர்களின் நட்பு வட்டம் மொழி தாண்டி விரிந்து சென்றது.
முரளிதரன், கார்த்திக்குடன் அப்போது தான் அறிமுகம் ஆனான். வகுப்பறையையும் தாண்டி இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்தது. மச்சான்... மச்சான்... என முரளி கார்த்திக்கை விட்டுத் தனித்து இருந்ததே இல்லை. அந்த அளவுக்குக் கார்த்திக்குடன் நட்பு பாராட்டினான்.
பகல் முழுவதும் நண்பர்களுடன் அரட்டை, ஜோஹிதாவின் பின் சுற்றல். மாலை உணவகத்தில் தனக்குப் பிடித்த சமையல் வேலை எனக் கார்த்திக்கின் நாட்களும் ஓடி ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால் ஜோஹிதா கார்த்திக்கின் உறவில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் அது.
வழக்கமாக அவளின் வருகைக்காக வாயிலில் காத்திருந்து அவளைப் புன்னகையுடன் வரவேற்றான். அவள் தரும் கோபப் பார்வையையும் அலட்சிய பார்வையையும் கண்டு கொள்ளாது, அவளைப் பின் தொடர்ந்த படி வகுப்பிற்குள் சென்றால்….
அதிர்ச்சி…
அவன் அமரும் வழக்கமான இடத்தில் வேறு பெண் அமர்ந்திருந்தாள். 'யாருடா அது? ரெக்கேண்டு இயர்ல வந்து புதுசா ஜாயின் பண்றது. ' எனப் புருவம் சுருங்கிய படி அசையாது நின்றான் அவன்.
அந்த இடத்தில் அமர்ந்தால் தான் ஜோஹிதாவை சைட் அடிக்க வசதியா இருக்கும். அந்த இடத்தில் இவள் வந்து அமர்ந்து கொள்ளவும். எப்படி இவளைத் துரத்தி விடுவது, என அவளைப் பார்வையால் ஆராய்ந்த படி நடந்து வந்தான் அவன்.
வெளிறிய உடல், பயந்து போய் இருக்கிறாள் என்று சொல்லியது. நிறம் மங்கிய அவள் பாவாடை தாவணி அவளின் ஏழ்மையை சொல்வது போல் இருந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்காது அமர்ந்திருந்தவளின் முகத்தைச் சரியாப் பார்க்க முடியவில்லை அவனால்.
'புதுசு... யாரா இருக்கும்? யாரா இருந்தா நமக்கு என்ன. ' என நினைத்தவன் அவளின் பெஞ்சில் அமர்ந்தான். அவன் ஒரு ஓரத்தில் தான் அமர்ந்தான். இருவருக்கும் இடையே மூன்று பேர் அமரலாம் தான். ஆனால் பெண் எழுந்து விட்டாள், பட்டென.
தன் பேக்கை எடுத்துக் கொண்டு ஜோஹிதா இருந்த பெஞ்சில் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். க்ளாஸே அவளை வித்தியாசமாக பார்த்தது. அவளின் நடவடிக்கைகளைக் கண்டு தங்களுக்குள் கிசுகிசித்தது.
பெல் அடிக்கவும் ஆசிரியர் வந்தார் பாடம் நடத்த. கார்த்திக் பார்வை இப்போது புதியவள் மீது இருந்தது.
" யாரு மச்சி அது? உனக்கு தெரியுமா?" என முரளியிடம் கேட்க,
"ஹாங்... எனக்கு எப்படி டா தெரியும்? நானும் உங்கூட தான வந்தேன். " என்றான் முரளி.
"அதுகிட்ட போய் பேசுவோம் வர்றியா."
"எதுக்கு மச்சான் தேவையில்லாத வேல. " முரளி.
" டேய்... பார்க்க பட்டிக்காடு மாதிரி இருக்கா. சத்தியமாப் படிக்க வந்திருக்க மாட்டா. காஸ்லி திங்ஸ்ஸ திருடீட்டு போற திருடியா இருக்கணும். இல்லன்னா நம்மலோட அனுதாபத்த யூஸ் பண்ணி டோனேஷன்ங்கிற பேர்ல பிச்ச எடுக்க வந்திருக்கணும். ரெண்டும் இல்லன்னா நக்சல் தீவிரவாதியாக இருக்கும். நாம பேச போய், பேக்ல வச்சிருக்குற துப்பாக்கிய வச்சி நம்மல சுட்டுட்டா. வேண்டாம் டா." நவீன்.
ஜோஹிதா இங்கு படிக்க வந்திருப்பதை அறிந்து அவனும் வந்துள்ளான். கார்த்திக்கைக் கண்டு அவனுக்குச் சிறு அதிர்ச்சி தான். இருவரும் சண்டை போட்டு பிரிந்து விட்டனர் என்பதை அறிந்தவன் ஜோஹிதாவை கரெக்ட் செய்ய சரியான நேரம் இது என நினைத்தான். ஆனால்….
நினைத்து எல்லாம் நடந்து விடுமா என்ன?
ஜோஹிதா இன்னும் கார்த்திக்கின் மீது கோபமாக உள்ளாள் என்பது அவனுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கைக்குரிய ஒன்றாக உள்ளது.
ஜோஹிதாவின் வீட்டில் விகாஸ்ஸிடம் கார்த்திக்கின் வருகையைப் பற்றிக் கூறியவன், ஜோஹிதாவின் பாரா முகத்தையும் பற்றியும் சொல்ல, இருவரையும் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் கொடுத்தான் விகாஸ்.
ஜோஹிதா ஒரு முறை வெறுத்து ஒதிக்கி விட்டாள் என்றால் திரும்பியும் பார்க்க மாட்டாள் என்ற அவளின் குணம் அறிந்ததால், கார்த்திக்கை வெறுத்துவிட்டாளா என்பதை அறிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
க்ளாஸ் நடந்து கொண்டிருக்க, புதியவள் மட்டும் எதுவும் செய்யாது, குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் கூட்டம் தான் அவள் யாராக இருக்கும் என்று தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.
"எனக்கு நீ சொன்ன மாறிலாம் தோனல. க்ளாஸ் மாறி வந்து உக்காந்திருக்கான்னு நினைக்கிறேன். நீ என்னடா சொல்ற?. " என்றபடி கார்த்திக் முரளியைப் பார்க்க,
"இதுல நாள் சொல்ல என்ன இருக்கு. நவீன் சொல்றது சரியா கூட இருக்கலாம். நம்ம இவளப் பத்தி ஸ்டாப் ரூம்ல சொல்லுவோம். HOD பாத்துப்பாரு. " என்றான் அலட்சியமாக.
கார்த்திக் சென்று டிப்பார்ட்மெண்டில் சொல்ல அவளை வந்து விசாரித்தார் ஆசிரியர்.
" Hai... Who are you?. Which department?." என ஆங்கிலத்தில் வேகமாக கேட்க, அவள் முழித்தாள். அவர் கேட்டது. 'யாரு ந எந்த டிப்பார்மெண்ட்?.' என்பதாகும். அது புரியாததால் அவள் முழிக்க,
பின் அதையே ஹிந்தியில் கேட்டார். அப்போதும் முழித்தாள் பெண். பின் நிதானமாக அதே கேள்வியை ஆங்கிலத்தில் மறுபடியும் கேட்க, அவள் வாய்மொழிந்தாள்.
" I am Jothivani. " என்று தான் படிக்க வந்திருக்கும் பிரிவைச் சொல்ல, அவர் சிரித்தார்.
அவள் படிக்க வந்தது ஆங்கில புலமைக்கான படிப்பு. வகுப்பு மாற்றி வந்து அமர்ந்துள்ளாள் என்பதை அறிந்து அனைவரும் சிரிக்க, அவளின் முகம் சிறுத்து விட்டது. பின் அவளின் வகுப்பிற்கு வழி சொல்ல, மருண்டு போய் நின்றாள் அவள்.
அந்த முகம். கார்த்திக்கின் மனத்தில் அப்பொழுது பதிந்தது என்று சொல்ல முடியாது. அவளின் நடை, பாவனை முகம் அனைத்தும் சொல்லும் தென் தமிழகத்து மங்கை என்று. நவ நாகரீக உடையில் மங்கைகளைப் பார்த்தப் பகிர்வுக்கு, தாவணி கட்டிய தமிழ் பெண்ணாகப் பிடித்திருந்தது.
பின் வகுப்பு முடிந்தது. ஒரு வாரமு முடிந்தது. அன்றைக்குப் பின் அவளை வேறு எங்கும் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டான். அப்படியே இருந்திருக்கலாம். ஹிம்... விதி யாரை விட்டது? ஜோ வாக அவனின் மனத்தில் மட்டுமல்ல ஆன்மாவில் கலந்தவளானாள் பெண்.
"கார்த்திப்பா ஜோஹிம்மாக்கு கால் பண்ணிங்களா? அவங்க எப்ப லேண்ட் ஆகுறதாச் சொன்னாங்க. முருகு மாம்ஸ் வீட்டுல ஸ்டே பண்ணிக்கிறாங்களாம். நாளைக்கழிச்சி மார்னிங் டெல்லி போகப்போறதா சொன்னாங்க. ஈவ்னிங் ஃபங்ஷன். அன்னைக்கே வந்திடணும் நான் சொல்லிருக்கேன். நீங்களும் ஒருக்க சொல்லுங்க. இல்லன்னா ஃப்ரெண்ட்ஸ பாத்த சந்தோஷத்துல நாலு நாள் எக்ஸ்ட்ராவா தங்கிட போறாங்க. கால் பண்ணி பேசுங்க. " என்றபடி வாசு வந்தாள்.
மகளைப் பார்க்கையில் ஜோ வின் முகம் வந்து சென்றது. மகளின் கன்னம் தாங்கியவன், அவளின் இரு விழிகளை உற்று நோக்கினான். அது அவனுக்கு ஜோவின் நினைவுகளை வாரி வழங்கியது. இதழ்களில் தவழ்ந்த புன்னகையுடன் மகளை உற்றுப் பார்க்க,
"கார்த்திப்பா... முருகு மாமா வீட்டுல பேசி ஏர் ஃபோர்டுக்குப் போக சொல்லுங்க. கொஞ்சமாச்சும் பொறுப்போட நடந்துக்கங்க. " என்க கரம் விலக்கி சொல்ல, அவன் சிரித்தான்.
" உங்கம்மா பிறந்ததுல இருந்தே சென்னை வாசி தான். அவளுக்கு வழி சொல்லவும் வழி காட்டவும் யாரும் தேவையில்லை. அதோட உன்னோட முருகு மாம்ஸ்ஸுக்கு அவனோட வீட்டுக்குப் போற வழி நல்லாவே தெரியும். நாலு மாசத்துக்கு ஒருக்க எட்டி பாத்துட்டு தான் இருக்கான். " என்க, அவனை நம்பாது கையில் ஃபோனை தினித்து பேச சொல்லி அனுப்பி விட்டாள்.
"ச்ச… இந்தக் கார்த்திப்பா என்ன சின்ன குழந்தையா!. எல்லாத்துக்கும் கத்தி கத்தி சொல்ல வேண்டி இருக்கு. இவ்ளோ பெருசா வளந்திருந்தாலும், மூள கொஞ்சம் கம்மியாத்தா வேல செய்து. " எனப் படுக்கையை ஒதுக்கி வைத்துக் கொண்டே தந்தை திட்ட,
அவளை வந்து அணைத்தது ஓர் உருவம்.
ஆ... கத்த வாய் திறக்கும் முன் அவளின் இதழை கரத்தால் மூடி அவளின் பின்னங்கழுத்தில் முத்தமிட்டது.
"மிஸ்டர் கார்த்திகேயனுக்கு மூளை வேலை செய்யாதுன்னு உனக்கு இப்ப தான் தெரியுமா?. எனக்கு எப்பவோ தெரியும். மிஸ்டர் கார்த்திகேயனோட ப்ரைன்ல ஒரு பக்கம் முழுசா வேல செய்யலன்னு. " என்றது அது.
"ருத்ரா… " என இதழ் அசைந்தாலும் குரல் வரவில்லை. இன்னும் அவன் அவளின் இதழ்களுக்கு விடுதலை கொடுக்கவில்லை.
சிறையை அதரங்களுக்குக் கொடுத்தவன், தண்டனையாக முத்தங்களை கந்தரத்தைச் சுற்றிக் கொடுத்து, தன் லீலைகளால் உடல் சிவக்க செய்து கொண்டிருந்தான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..