முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 78


 

அத்தியாயம்: 78


பிறை மலர்ந்த...


இரவு நேரமும்...


ஈரம் தோய்ந்த...


தென்றல் காற்றும்...


வலி தரும்...


நீ இல்லாத…


தனிமையில்...


இதை நம் ருத்ராவிற்குச் சொன்னால் சரியாக இருக்கும். ஹோட்டல் அறையின் பஞ்சு மெத்தையில் படுத்தவனுக்கு நாயகி இன்றி அவனின் படுக்கை முள்ளெனக் குத்தி, ‘அவளை உடன் அழைத்து வா. சுகமும் தூக்கமும் தருகிறேன்.’ என்றது.


மஞ்சம் தான் அவனைத் துரத்தி விட்டது என்று எழுந்து பால்கனிக்குச் செல்ல, நேற்று அவள் தன்னை அணைத்து தந்த இதழொற்றல் நினைவு வந்தது. அவளுடனானத் தனிமை வேண்டுமென்றிருந்தது அவனுக்கு. அவளைக் கை அணைப்பில் வைத்து இரவு முழுவதும் கள்ளத்தனமாக செய்ய நினைத்தவனின் ஆசை நிறைவேற வேண்டும் என்றால் வாசு வேண்டும்.  முதலில் அவளின் வீட்டிற்குச் செல்லவேண்டும்.


எண்ணிய கணத்தினிலே புறப்பட்டு விட்டான். காரைத் தூர நிறுத்தி விட்டு யோசனையில் இருந்தான் ருத்ரா.‌ வீட்டின் உள்ளே நுழைய கதவைத் தட்ட வேண்டும் இல்லையேல் காலிங்பெல்லை அழுத்த வேண்டும். ரெண்டில் எது செய்தாலும் மிஸ்டர் கார்த்திகேயன் வந்து நிற்பான்.


'இந்த நல்ல மூடுல அந்தாளு மூஞ்சிய பாத்தா… வர்ற ரொமான்ஸ்ஸும் வத்தி போய்டும். அதுனால வேற வழியா உள்ள போகலாம்.' என நினைத்தவன் கண்டது ஒரு சிறிய பால்கனி.


'இவளுக்கு மட்டும் தான் மாடி ஏறி பால்கனி வழியா வரத்தெரியுமா. எனக்கும் தெரியும். ' என்பதை நிறுபிக்க அதில் ஏறி குதித்தான்.


பாவம் அவனுக்குத் தெரியாத ஒன்று. வாசுவின் அறைக்கு பால்கனி வசதி கிடையாது என்று. அப்படியெனால் அவன் ஏறிக் குதித்த பால்கனி யாருடையது என்று சொல்லித் தெரியவில்லை. 


எஸ் கார்த்திகேயனின் அறை தான். 


அங்கு சயனத்தில் விட்டதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.


அவனை கண்டவன் 'ஐய்யோ இவனா. ' எனத் திரும்பி போய்விடத்தான் நினைத்தான். ஆனால் கார்த்திக்கின் முகம் தடுத்தது. அதில் நிறைந்திருக்கும் வேதனையை ருத்ராவால் உணர முடிந்தது.


'பொண்டாட்டி இல்லன்ன சந்தோஷப்படாம, ஃபில் பண்ற புருஷன இப்பதா பாக்குறேன். அவ்ளோ லவ்வு போல.' என்றவனுக்கு வெறுப்பு தான் வந்தது, ஜோஹிதாவை நினைத்துபடி படுத்திருந்த கார்த்திகை காண்கையில்.


அவனும், கார்த்திக் செல்வான் என்று எரிச்சலுடன் வெகு நேரம் ஒழிந்து நிற்க, இவனும் மீட்க முடியாது தன் பழைய நினைவில் சிக்கி தவிக்க,


'ச்ச... பொண்ண பாக்க வந்த இடத்துல அவளோட அப்பன பாத்து சைட் அடிச்சிட்டு நிக்கிறான். ' மீ.


'ஹலோ என்ன!.‌ சைட்டு கிய்ட்டுன்னு ஓவரா பேசுறீங்க. ஐம்பது வயசு கிழவெ அவன போய். நான்…. ரசனையே கிடையாதா உங்களுக்கு. ' ருத்ராவின் கோபம்.


'என்ன ஐம்பது வயசா!. ஏப்பா அவனுக்கு நாப்பத்தி அஞ்சி தாப்பா ஆகுது. அப்படித்தான் அறிமுகம் செஞ்சி வச்சிருக்கேன்.'


'ரொம்ப பெரிய வித்தியாசம். பெத்த பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி குடுக்கப் போறான்னா. பேரெ பேத்தி எடுக்க போற கிழம்னு தான அர்த்தம். '


'எங்க கிழம்னு உன் ஆளு கிட்ட சொல்லு பாப்போம். ' என்றால். ருத்ராவின் ருத்ர பார்வை நம்மை பொசுக்கி விடும் என்பதால் பேசாமல் சென்று விடுவது மேல்.


கையில் ஃபோனுடன் வாசு உள்ளே வந்ததும் முகம் மலர தன்னவளின் பேச்சழகை ரசித்தான். வாசு டேனியலுடன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன் தந்தையிடம் ஒப்பிக்க,


"அவனுக்குப் புரிஞ்சிருக்குமான்னு எனக்குத் தெரியல கார்த்திப்பா. புரிஞ்சித் திருந்தியிருந்தான்னா கண்டிப்பா தன்யாவோட தான் திரும்பி வருவான். பாப்போம். Love is always magic. no logic." என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி கார்த்திக் இருக்க, அவனின் கையில் ஃபோனை தினித்து துரத்திவிட்டாள்.


' பாருடா. நான் வந்திருக்கேன்னு அவளுக்கு ஒரு பக்ஷி சொல்லிருச்சி போல‌. அதான் அப்பன தொரத்தி விட்டுட்டு தனியா நிக்கிறா. This is the perfect time to romance her. ' என அவள் அசந்து நேரம் பின்னாள் சென்று கட்டி அணைத்தான்.


கத்தி கார்த்திகேயனை அழைத்து விடக்கூடாது என்பதற்காக தன் வல்லிய கரம் கொண்டு பெண்ணவளின் மென்மையான இதழ்களை மூடி தன் சேட்டைகளைத் தொட, அவள் திமிறிக் கொண்டு அவனிடம் இருந்து விடுபட்டாள்.‌


" ருத்ரா... உன்ன யாரு இங்க வரச் சொன்னா?"


" கட்டிக்க போற பொண்ண பாக்க நான் வரறாம வேற யாரு வருவா?" என்றவன் கட்டில் எறிக் குதிக்க,


" மெத்தைல குதிக்காத ஜோஹிம்மாக்குக் கோபம் வரும். கீழ இறங்கு. " என அமர்ந்த படி எம்பி எம்பி குத்தித்த அவனைத் தடுத்து நிறுத்த பார்க்க,


" கட்டில்லனா அப்படி தான் பண்ணுவாங்க. ஏன் நீ என்னைப் பாக்க வந்தப்ப ஏறி நின்று குதிக்கல. அப்ப நாலாம் உன்னை மாதிரிக் கத்தலயே." என்க அவனை முறைத்தாள் வாசு.


"ஏய்... வாட்டர் பெட் மாதிரி நல்லாத்தா இருக்கு. பவுன்ஸ் ஆகுது பாறேன்."


"குதிக்காக ருத்ரா. இது படுக்குறதுக்கு மட்டும் தான் யூஸ் பண்ணணும். விளையாட ட்ராப்போலின் இருக்கு. கொண்டு வந்து கூட குடுக்குறேன். ப்ளிஸ் குதிக்காத.‌ சத்தம் கேக்கும் கீழ. கார்த்திப்பா வந்திடுவாரு." எனக் கதவை சாத்திவிட்டு வந்து கெஞ்சினாள் அவள்.‌


"அப்ப படுப்போம். வா… " என அவளை தன் பக்கம் இழுக்க அவன் மேலேயே விழுந்தாள் வாசு.


இனி உன்னிடம் என் கரங்களுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது என்பதை நிறுபிக்கும் வண்ணம் அவனின் கரம் அவளின் இடை அழுத்தி, அவளின் இரவு உடையான நைட் ட்ரெஸ்ஸின் சட்டைக்குள் சென்று, முதுகில் ஏறி, ஊர்வலம் செல்ல, அது பெண்ணவளைக் கிறக்கம் கொள்ள செய்தது. தன் மீதிருந்தவளை மெத்தையில் கிடத்தி, தன் இரு விரலால் சிவந்திருக்கும் பெண்ணவளின் முகமெங்கும் கோலமிட்டபடி,


" நாளைக்கு நைட் நான் லாஸ் ஏஞ்சல்ஸ் போறேன். அப்றம் உன்னைப் பாக்குறது கஷ்டம். லைட்டா பிஸியும் கூட. சோ ஃபோன்ல கூடப் பேச முடியாது." என ஏக்கமாக அவளின் கன்னத்தில் முத்தமிட்டு சொல்ல,


"ம்… தெரியும். " என்றவளின் குரல் அவளுக்குக் கூடக் கேட்டிருக்காது. இதழில் அருகில் காதை வைத்திருக்கும் அவனுக்கும் மட்டுமே கேட்டிருக்கும்.‌


"அப்றம் ஏண்டி என்னைப் பாக்க வராம. உங்கப்பெ கூட விளையாண்டுட்டு இருக்க. " என கன்னத்தில் கிள்ள, 


“ருத்ரா…” வலிக்கவில்லை என்றாலும் செல்லமாகச் சிணுங்கினாள் அவள்.


“ஏன் என்னைப் பாக்க வரல?” என்றான் அவளின் முகம் பார்த்தபடி.


"என்ன பண்ண ருத்ரா‌. என்னோட உருப்படாத பாஸ் எனக்கு லீவ் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். அவன பழி வாங்க நல்ல ஃப்ளான் போட்டுட்டு உன்னைப் பாக்க வரலாம்னு இருந்தேன். நீயே வந்திட்ட. so sweet. " என அவனின் கன்னத்தில் இதழ் பதித்தவள் பற்களையும் சேர்ந்தே பதித்து அச்செடுத்து வைத்துவிட்டாள்.


" ஸ்…ஆ…. ராக்சஸி." எனக் கன்னம் தடவ,


"ரெண்டு நாள் லீவ் கேட்டா குடுக்க மாட்டேனா சொல்லுவ. " என அவன் அணிந்திருந்த டீசர்ட்டின் காலரை பிடித்து உளுக்கி கேட்க,


" என்னோட பொண்டாட்டிக்கி நான் லீவ் குடுக்க மாட்டேன். எனி டயம் எங்கூட தான் இருக்கணும். " என்றவளை அணைத்துக் கொண்டான்.


"நான் ஒன்னும் உன்னோட வைஃப்ப ஆகல. அதுக்கு நாள் இருக்கு. " என முகம் திருப்பியவளின் கன்னம் தொட்டுத் தன் பக்கம் திரும்பியவன்,


"எப்ப உன்னோட லவ்வ எங்கிட்ட சொன்னியோ அப்பவே நீ என்னோட பாதி வைஃப் தான். " எனச் சொல்லி இதழ் தீண்ட நெருங்க,  அவனைத் தள்ளி விட்டு விட்டு எழுந்தாள் வாசு.


"ம்ச்… என்னாச்சி ஸ்வீட்டி? "


"நான் உம்மேல கோபமா இருக்கேன்‌‌. ஒழுங்கா போ இங்கருந்து." என இரு கரம் கட்டிக் கொண்டு பால்கனியைப் பார்க்க. நேற்றை நிகழ்வு தான் கோபத்திற்குக் காரணம் என நினைத்தவன்.


" ஸாரி ஸ்வீட்டி. வெரி ஸாரி. " என்றவன் அவளை அணைத்து பிறையென மலர்ந்திருக்கும் நெற்றியில் இதழ் பதித்தான். பின்…


" நான் உன்ன hurt பண்ணுருந்தா... வெரி வெரி ஸாரி. " என அவளின் விழிகளை உற்று நோக்கி சொல்ல,


"நீ எவ்ளோ ஸாரி சொன்னாலும் என்னால உன்னை மன்னிக்க முடியாது. நீ பண்ண காரியம் அப்படி. "


" ஐ நோ அது தப்பு தான். எனக்கே‌ தெரியாம நேத்து அப்படி நடந்திடுச்சி. கொஞ்சம் கண்ட்ரோஷ் இல்லாம…" என்க, அவனைத் திரும்பிப் பார்த்து,


"என்ன நடந்திடுச்சி நேத்து, கண்ட்ரோல் இல்லாத அளவுக்கு?" எனப் புருவம் சுருக்கி கேட்க,


"அதான்… நடக்க வேண்டியது. நடந்திடுச்சே. அதுக்கு ரெண்டு பேருமே பொறுப்பு தான். நான் தாங ஸ்டெடியா இல்ல. நீ என்னை ஸ்டாப் பண்ணிருக்கலாம்ல. பட் டோன்ட் வெரி. பேபி ஃபாம் ஆகுறதுக்குள்ள நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம். ப்ராமிஸ். " எனத் தலையில் கை வைக்க வர‌, அதைத் தட்டிவிட்டாள் வாசு.‌


" லூசா நீ. என்னென்னமோ பேசுற?"


'அப்படி என்ன லூசு மாதிரிப் பேசிட்டோம். ' என யோசித்தவன். " நீ ஏன் கோபமா இருக்க.? " என்க, மீண்டும் வந்து அவளின் காலரைப் பிடித்தாள்.


"நான் உனக்கு குடுத்து கர்சீப் எங்க டா? " எனக் கோபமாகவே கேட்டாள்.


"அது என்னோட கபோர்டுல ஒரு ஓரமா கிடக்கும்னு நினைக்கிறேன். ஆமா அத எதுக்கு இப்ப கேக்… " என்றவனுக்கு இப்போது தான்‌ நினைவு வந்து, புவனாவின் திருமணத்திற்கு முன் அதைத் தன்னிடம் தந்து வெட்கத்துடன் சிவந்திருந்த அவளின் முகம்.


'அடச்ச... வாசு அப்பவே லவ்வ சொல்லிட்டா. நீ தான் தேவையில்லாம குடிச்சிட்டு கண்ட பேசி… நடக்காததெல்லாம் நடந்த மாதிரிக் கற்பன பண்ணிட்டுச் சுத்திருக்க. மத்த விசயத்துல நிதானமா இருந்தாலும் இவான்னு வரும் போது மட்டும் அவசரக் குடுக்கையாவே இருக்க.' என அவனின் மனசாட்சி அவனைக் கேலி செய்ய.


"நீ என்னை உண்மையாவே லவ் பண்ணிருந்தேன்னா. அப்பவே அதுல என்ன எழுதிருக்குன்னு மொழி பெயர்த்துத் தெரிஞ்சிருப்ப. பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு நான் உன்னோட லவ்வ அவமதிச்சிட்டேன்னு டயலாக் பேசி. என்னை... என்னை... உனக்குச் சேவகம் செய்ய வச்சிருக்க. டேய்... நில்லுடா... " என அவனை அடிக்க ஏதுவாய் எதாவது கிடைக்கிறதா எனப் பார்க்க, அவன் அசராது அவளை பால்கனிக்கு இழுத்துச் சென்றான்.


அங்கு அவள் வளர்ந்திருந்த செடி கொடிகள் அழகாய் வளர்ந்து ஒருவித குளுமையை தர, அதன் இடையே அவளை இழுத்தணைத்து இதழ் பதித்தான்.


ஆழ்ந்த தன் முத்தத்தில் அவளின் உயிரைக் குடித்து விட்டும் நோக்கத்துடன்‌ இதழ்கள் செயல்பட, கைகள் அவளின் இளமையின் மென்மைத் தேடிச் சென்றது. இரவு உடையில் கழுத்தோர இடைவெளியில் முகம் புதைத்தவன் தன் தேடலில் தீவிரமாகினான். இருவரும் ஒரு உடலில் குடி கொள்ளும் முயற்சியில் ஈடுபட, கதவுகள் படார் எனத் திறந்தன.


'இன்னும் இவனுங்க கார்த்திக் ரூம் குள்ள தான் இருக்கானுங்க. '


"கார்த்திப்பா… " எனப் படபடத்து உடையை சரி செய்த கொண்டு, வேகமாக அறைக்குள் வர, கார்த்திக் உள்ளே வராது வெளியேயே நின்றான், ஒரு ட்ரேயுடன்.


" வாசு இதுல சாப்பாடு இருக்கு. கடைல வாங்கிட்டு வந்தது தான். Fried chicken and waffles, Cheeseburger, Macaroni and cheese and டேஸ்டே இல்லாத Coco cola இருக்கு. எதுலயும் காரம் கிடையாது. எல்லாத்தையும் மிச்சம் வைக்காம காலி பண்ணிட்டு போ சொல்லு. " என்றதும் பால்கனியில் மறைந்திருந்த ருத்ராவிற்கு அதிர்ச்சி. 


ருத்ராவின் வருகை எப்படித் தெரிந்து என்ற புரியாது இருவருமே முழித்தனர்.


" 15 minutes... just 15 minutes. அதுக்குள்ள அவெ இந்த இடத்த விட்டு கிளம்பிருக்கணும். இல்லன்னா அவனோட கார டோ பண்ணிட்டு போய்டுவாங்க, traffic police. சோ 15 minutes... " எனச் சொல்லி பார்க்கிங் பில்லை அவளின் கையில் தினித்துவிட்டு சென்றான் கார்த்திக்.


'அப்பாக்கும் பொண்ணுக்கும் என்னோட கார குப்ப வண்டில ஏத்தி விடுறதுல அப்படி என்ன சந்தோஷம் கிடைச்சிடப் போதுன்னு தெரியல. ' என முணுமுணுத்தவன்,


"கதவ லாக் பண்ணலயா நீ?" எனக் கத்தினான்.


"எதுக்கு லாக் பண்ணணும். இது அவரோட ரூம். நீ தான் க்ரூப்ள டூப்பா வந்திருக்க. பாரு உனக்காக சாப்பாடு வாங்கிட்டு வந்து. உனக்காக பார்கிங் டோக்கன் கூட எடுத்திருக்காரு. அவர போய் திட்டுற. " எனக் கார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசி சண்டைக்கி நின்றாள் பெண்.


"Daddy's girl. "


"Yes, Daddy's girl. அதுல என்ன தப்பு இருக்கு. " என்றவளின் அருகில் வந்து அவளைத் தன் கைகளில் அள்ளினான் அவன்.


" எனக்கும் உன்னை மாதிரி ஒரு Daddy's girl ல பெத்து குடுத்திட்டு நீ உன்னோட Daddyக்கு girlலாவே இரு. " என்றவன் அழுத்தமாக இதழில் தன் உதடுகளைப் பதித்தெடுக்க,


"ஹாங்..‌. முடியாது. போ நீ இங்கருந்து. என்னென்னமோ பண்ணிட்டு பேசிட்டு இருக்க… போ…" என்றவளைக் கட்டிலில் கிடத்தி அவள் மேல் படர,


"ருத்ரா… " எனக் கத்தினாள் அவள்.


"அதா மிஸ்டர் கார்த்திகேயன் எனக்கு 15 minutes டயம் குடுத்திருக்காரே. நேத்து நடக்கலன்னு நீ ஃபீல் பண்ணத சொன்னத செய்ய அவ்ளோ நேரம் பத்தாது தான். ஆனாலும் இப்பருந்தே ஸ்டாட்ர பண்ணா டைம் எக்ஸ்டன்சன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. " என்று மையலுடன் சொன்னவனிடம் சண்டை போட்டு எழுந்தாள் அவள்.


இருவரும் அந்த பால்கனியில் அமர்ந்து பேசி சிரித்து ஒரு மற்றவருக்கு உணவை ஊட்டி விட்டு என அன்றைய டின்னர் மிகவும் சுவையாக இருந்தது அவர்களுக்கு.


ஆனால் நாளைய பொழுது வாசுவிற்கானதாக நல்ல பொழுதாக இல்லாது போனது யாரின் சூழ்ச்சியோ.


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...