முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 79

 

அத்தியாயம்: 79


ஐ போன்களுக்கே உரித்தான ப்ரத்தேக ரிங்டோன் அது. வெகு நேரமாகலாம் அடிக்கவில்லை. இப்போது தான் இசைக்க தொடங்கியது. 


யார் அழைப்பது என்று தெரிந்தாலும் உடனே எடுக்காமல், சில நிமிடங்கள் கடத்தியவன், இதோ இசைத்து முடிக்கப் போகிறேன் என்று சொல்லிய செல்ஃபோனின் கடைசி நொடி ரிங் டோனில் அட்டன் செய்து காதில் வைத்தான், ருத்ரதேவ். 


வந்த வேலையை இனிதே முடித்து விட்டு இனி தன் இல்லம் நோக்கி செல்ல தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் அவன். விடியும் போது சிவாஸ் பேலஸ்ஸில் இருக்க வேண்டும். இது அமிர்தாவின் கட்டளை. 


" …. " செல்ஃபோனைக் காதில் வைத்தாலும் அழைத்தவரிடம் பேசப் பிடிக்காது அமைதியாய் இருக்க,


" ருத்ரா... வாசு… அங்க வந்தாளா?. " எனப் படபடப்புடனும் பயத்துடனும் தவிப்புடனும் வந்தது அந்த குரல். கார்த்திகேயனின் குரல். அது புரியாது.‌


"இல்ல. " என்றான் பட்டு கத்தரித்தது போல். 


" வேற எங்க இப்பான்னு தெரியுமா?. "


" எனக்கு என்னோட வருங்கால மனைவிய வேவு பாக்குற பழக்கமெல்லாம் இல்ல. சோ எனக்கு தெரியாது. " என்றான் நக்கலாக. 


"ருத்ரா, அவளோட ஃபோன் வீட்டுல இருக்கு. ஆஃப்டர்னுன்ல இருந்தே நான் பாக்கல. சொல்லாம எங்கயும் போக மாட்டா. ஆனா இன்னைக்கி…" என இடை நிறுத்தியவன், ஆழ தன் மூச்சை எடுத்துவிட்டு. 


"கொஞ்சம் அவளப் பாத்தா எங்கிட்ட கால் பண்ணி சொல்லு. " எனப் பட்டென வைத்துவிட்டான் கார்த்திக். அவனின் குரல் உடைந்து இருந்ததை கவனித்த ருத்ரா, மீண்டும் அவனுக்கு அழைக்க, உடனே எடுக்கப்பட்டது. 


" வாசு இங்க இல்ல. என்னைப் பாக்க ஈவ்னிங் வர்றதா சொன்னா. பட் வரல. நான் தேடி பாக்குறேன். நீங்க விசாரிச்சீங்களா? கம்ப்ளைண்ட் எதுவும் பண்ணிருக்கீங்களா?"


" ம்... கம்ப்ளைண்ட் பண்ணிட்டேன். வாசு வழக்கமா போற எல்லா இடத்துக்கும் போய் பாத்திட்டும் வந்திட்டேன். போலீஸ்ஸும் தேடிட்டு தான் இருக்காங்க. எங்கயும் கிடைக்கல. " என்ற கார்த்திக்கின், மகளைக் காணாது அவனின் பரிதவிப்பு புரிய, உடனே தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அவளைதீ தேட தொடங்கினான் ருத்ரதேவ். உடன் கார்த்திகேயனையும் அழைத்துக் கொண்டு. 


ஒரு நாளில் முதுமையை எட்டி விட முடியுமா என்ன? முடியும். வேதனை மனத்தில் நிறைந்திருந்தால் முதுமை வெகு அருகில் வந்துவிடும். அதற்கு கார்த்திகேயனே சாட்சி. 


எப்பொழுதும் ஃப்ரமல் பேண்ட் சர்ட்டுடன் டிப்படாப்பாக இருக்கும் படி தன்னைப் பார்த்துக் கொள்வான் கார்த்திக். மனத்தால் எடை போட்டு நன்மதிப்பெண் எனும் விருந்து பரிமாறப்படும் முன், உடை தான் இலையில் வைக்கப்படும் இனிப்பு. அதைக் கொண்டே நம்மை பற்றிய குட் இம்ப்ரஷன் உருவாகும் என்று நினைப்பவன் கார்த்திக். 


உடலை ஒட்டி அவனின் ஆஜானுபாகுவானத் தேகத்தைக காட்டும் அது இன்று தோய்ந்து போயிருந்தது. இந்தக் குளிரிலும் வியர்வையில் வழிந்து ஆங்காங்கே உப்பு பரிந்து இருந்ததை வைத்து அவன் வாசுவைத் தேடி அழைந்திருக்கிறான் என்பதை உணர முடிந்தது ருத்ராவால். 


" எங்கயும் போயிருக்க மாட்டா. அவளால உங்களப் பாக்காம இருக்கு முடியாது. வந்திடுவா. இல்லன்னா கண்டு பிடிச்சிடலாம். " எனக் கார்த்திக்கிற்கு ஆறுதல் சொல்லியவனுக்கும் பயம் இருந்தது. 


ஏனெனில் அமெரிக்கா காரண காரியங்கள் இன்றி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரர்களால் ஆண்டிற்குப் பலரை பழி கொடுத்து கொண்டிருக்கிறது. எங்கே அந்தப் பிடியில் சிக்கி விட்டாளோ என்ற பயம் தான் இரு ஆண்களையும் பீடித்து இருந்தது. 


நள்ளிரவு மணி ஒன்றை கடந்து விட்டது‌. குளிர் உடலை விறைக்கச்‌ செய்து பனிச் சிற்பமாய் மாற்ற தயாராக இருந்தது. 


" மிஸ்டர் சாம். நீங்க வீட்ட சுத்தி இருக்குற எல்லா சீசிடீவி கேமரா ஃபுட்டேஜ்ஜையும் கலெக்ட் பண்ணி தேடுங்க. உங்களுக்கு உதவ ஒரு டீம்ம வச்சுக்கங்க.” என்று ருத்ரா வரிசையாகப் பலருக்கு உத்தரவுகளை இட்டுக் கொண்டே இருந்தான்.


“ஆஃபிஸர் ஸ்டேட்ஸ் என்ன? காட்டுக்குள்ளத் தேடி பாத்தீங்களா இல்லையா. " எனக் கோபமாக கேட்க. 


அந்த ஆஃபிஸர் இதுவரை செய்த பணிகளை விளக்கி, "எங்களுக்கு சில கேள்விகள் இருக்கு. உங்க கிட்டையும். பொண்ணோட அப்பாகிட்டையும் பேசணும். அப்பதா எங்களால அந்தப் பொண்ண கண்டு பிடிக்க முடியும்." எனக் கூறினர் காவலர்கள். 


அவர் மட்டுமல்ல வாசுவைத் தேட பலரை ஹையர் செய்துள்ளான்.‌ டிரெக்டிவ் போலிஸ் என மொத்தம் நூறு பேரை உடனடியாகக் களத்தில் இறக்கி தேடுதல் வேட்டையைத் தொடங்கினான். 


கார்த்திகேயனின் இல்லத்தில் போலிஸ்ஸார் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.


"நீங்க உங்க பொண்ண எதுவும் சொன்னீங்களா. ஐ மீன் திட்டுனீங்களா?. உங்களுக்குள்ள சண்ட எதுவும் வந்ததான்னு கேக்குறேன். ஏன்னா கோய்ச்சிட்டு வீட்ட விட்ட போயிருக்கலாம்ல. போன வாரம் அப்பா பாய் ஃப்ரெண்டு கூட வெளில போனதுக்குக் கண்டிச்சதுனால ஒரு இருபது வயசு பொண்ணு தற்கொலை பண்ணி இறந்திட்டா. அதா கேக்குறேன். " 


" நீங்க ஏற்பாடு பண்ணக் கல்யாணத்துல உங்க பொண்ணுக்குச் சம்மதமா இல்லையான்னு கேட்டீங்களா‌? ஏன்னா மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்லாம கூட இருந்திருக்கலாம்.  அதா வீட்ட விட்டு போயிருக்கணும். வேற பாய் ஃப்ரெண்ட் கூட இருந்திருக்கலாம். அந்தப் பையனோட ஓடி கூடப் போயிருக்கலாம். " 


"அக்கம் பக்கத்துல சந்தேகப்படுற மாதிரி யாரையாது பாத்திங்களா?. சைக்கோ மாதிரி? வித்தியாசமா?. " 


"உங்க பொண்ணோட ஃப்ரெண்ட்ஷ் லிஸ்ட், அப்றம் லவ்வர்ஸ் லிஸ்ட் சொல்ல முடியுமா? அவங்க யாரது கடத்தீட்டு போயிருக்கலாம். " என் ஒரு அதிகாரி வாசுவை யாரோ கடத்திச் சென்றிருப்பது போலும், ஓடி போனது போலும் கார்த்திகேயனை மாறி மாறி கேள்வி கேட்க, பொறுமை இழந்த கார்த்திக். 


" ஸ்டாப் திஸ் நான்சென்ஸ். " எனக் கத்தினான். 


" உங்க ஸ்டுப்பிட் கொஸ்டீன்ஸ நிப்பாட்டீட்டு போய் எம்பொண்ண தேடுற வழிய பாருங்க. எம் பொண்ண பத்தி எனக்குத் தெரியும். நீங்க அவள தேடுறத விட்டுடு தேவையில்லாதத பேசி நேரத்த வீணடிச்சிட்டு இருக்கீங்க. "


" ஸார், எங்க கேள்விக்குப் பதில் சொன்னாத்தான உங்க பொண்ண யாரு கூட ஓடி போச்சீங்கிறத கண்டு பிடிக்க முடியும். " 


"அப்படிப் போகலன்னா கடத்திட்டு போயிருக்கலாம். யாரா வேணும்னாலும் இருக்கலாம். 


இப்படித் தான் என்னோட லாஸ்ட் கேஸ்ல முப்பது வயசு பொண்ணு. ஸ்கூல்ல டீச்சரா வேலை பாத்திட்டு இருந்தா. அவள 27 துண்டா வெட்டி வேக வச்சி நாய்க்குக் குடுத்திருக்கான். உடம்ப மட்டும் தான் அப்படி வெட்டிருக்கான். உள்ள இருக்கு உறுப்ப மிஸ்ஸில அரைச்சி டாய்லெட்ல ஊத்திருக்கான். 


அந்தக் கொடூரத்த பண்ணது அந்தப் பொண்ணோட ஸ்டூடண்ட். வயசு பதினேழு தான் இருக்கும். 


இப்ப யாரு யாருக்கு எதிர மாறுறாங்கன்னு கணிக்கவே முடியிறது இல்ல. எல்லாப் பக்கமும் யோசிக்கணும். உங்களுக்கு அதிஷ்டம் இருந்தா சின்ன சின்ன டேமேஜ்ஜோட உங்க பொண்ணு உங்க கைக்குக் கிடைப்பா. இல்லன்னா எலும்பு தான் மிஞ்சும். " என மிகவும் பொறுப்போடு பேசிய அதிகாரியைக் கார்த்திக் அடிக்க, கார்த்திகைக் கைது செய்ய அவர்கள் துடித்தனர். இடமே மல்யுத்த களமாய் மாறியது. 


" மிஸ்டர் கார்த்திகேயன் ப்ளிஸ் ஆவேசப்படாதீங்க. காம் டவுன். " என பீட்டர் வந்து இழுத்து சென்றார். அவரும் அவரின் மனைவி ஒலிவியாவும் வந்திருந்தனர். உடன் வில்லியமும் இருந்தான். கார்த்திக்குடன் சேர்ந்து அவனும் தேடி அழைந்தான். வில் அந்தக் காவலர்களிடம் சமாதானமாகப் பேசி வெளியே கூட்டிச் செல்ல,


ஒலிவியா அனைவருக்கும் குடிக்க பானங்களை எடுத்து வந்தார். பீட்டர் கார்த்திக்கிற்கு ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தார். அவனை வற்புறுத்தி சூடாக காஃபி கொடுக்க, அதை குடித்தவன் அவர்களிடம் மகளைப் பற்றி புலம்பியபடியே சோஃபாவில் சரிந்தான். அந்தக் தம்பதியினர் பயந்து விட்டனர். 


" Nothing to serious. இப்ப அவருக்கு தேவை தூக்கம். தூங்கட்டும். நான் ஸ்லீப்பிங் பில் குடுத்திருக்கேன். மைல்டான டோஸ் தான். காலைல கண் முழிப்பாரு. நீங்க அதுவரைக்கும்... " என ருத்ரா இழுக்க,


" I will take care of Karthikeyan. Don't worry. " எனப் பீட்டர் கூற ஒலிவியா வாசுவிற்காகப் பேசினாள் ருத்ராவிடம். 


" எப்படியாது கூட்டீட்டு வந்திடுங்க. " என்றவளுக்கு தலையசைத்தவன் வெளியே சென்றான். 


"மிஸ்டர் சாம். நான் செக் பண்ண சொன்ன ஃபுட்டேஜ். " 


"இட் ரெடி ஸார். மார்னிங் டென் ஓ க்ளாக் வீட்ட விட்டு வெளில போயிருங்க. அவங்களோட சைக்கிள்ள.‌ " என ஆரம்பித்து அவள் எங்கெல்லாம் சென்றாள் என்பது வரை காணொளி காட்சிகளில் பதிவாகி இருந்ததை வைத்து கண்டு பிடிக்க,


ருத்ராவிற்கு‌ச் சிறு நிம்மதி கிடைத்தது அவளை ‌யாரும் கடத்தவில்லை என்பதில். ஆனால் இப்போது அவள் இருக்கும் இடம் தெரியவில்லை என்பதால் அந்த நிம்மதியும் வந்த இடம் தெரியாது திரும்பிச் சென்றது. 


"கடைசியா Regional parkக்கு முன்னாடி வர அவங்க சைக்கிள்ள போயிருக்காங்க. அப்றம் சைக்கிள விட்டுட்டு காட்டுக்குள்ள நடந்து போயிருக்கணும். எவ்ளோ தூரம் போயிருக்காங்கன்னு தெரியாது. "


" அங்க யாரு இப்ப தேடிட்டு இருக்கா?" 


" மிஸ்டர் வார்னர் அவரோட டீம்மோட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ரீச்சாகிருக்காரு. அவங்க சைக்கிள கண்டுபிடிச்சாச்சி. " என்க, ருத்ரா புறப்பட்டான், வாசுவைக் காண. 


அது வனப்பகுதி. புற்களும் மரங்களும் அடர்ந்திருந்த அந்தப் பகுதியில் பலர் கையில் டார்ச்சை வைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருக்க, அவர்களின் தேடுதலுக்குப் பலனாய் வாசு கிடைத்தாள். 


பல கொடூர விலங்குகளின் நடமாட்டம் அந்தப் பகுதியில் இருந்த போதிலும் வாசுவிற்கு எதுவும் நேரவில்லை. அங்கிருந்த நீரோடையின் கரையில் இருந்த பாறையின் மீது தன் இரு கால்களையும் கட்டிக் கொண்டு உடலைக் குறுக்கி குளிரில் நடுக்கியபடி அமர்ந்திருந்தாள் அவள். 


அவளைத் தேடி வந்தவர்கள் நெருங்கும் முன் ருத்ரா முந்திக் கொண்டு கோபமாக அவளின் அருகில் சென்றான். " வாசவி. " என்க, அவள் தலை‌ தூக்கி பார்த்தாள். 


முகமெல்லாம் வீங்கி இருந்தது. அவள் அழுதிருக்கிறாள். கண்கள் சிவப்போடு தலை பாரம் அதிகமாக இருக்க, ருத்ராவின் குரல் காதில் விழுந்ததும் எழு முயல, அதற்குள் ருத்ராவின் கரம் கன்னத்தில் அழுத்தி பதிந்து அவளை மயக்கம் அடையச் செய்திருந்தது. 


குளிரில்  சில்லிட்டிருந்த உடலுக்கு இதமாக தன் ஜெர்கின்னைக் கலட்டி அவள் மேல் போர்த்தியவன், அவளைக் கையில் தூக்கி கொண்டு காரை நோக்கி சென்றான். கண் முழிக்கும் வரை அவளைத் தன் கையணைப்பிலேயே வைத்திருந்தான் அவன். அவனின் பயம் அவனுக்கு. 


சிறிது நேரத்திலேயே மயக்கம் தெளிந்தவளுக்கு உண்ண கொடுத்து கைக் கால்களை சூடு பறக்க தேய்த்து விட்டு அவளைத் திட்டிக் கொண்டே வந்தான் அவன். 


"அறிவில்லையா வாசு உனக்கு. எங்கள இப்படியாப் பதற வப்ப. சொல்லாமா கொள்ளாம இங்க எதுக்கு வந்து உக்காந்த? எங்கெல்லாம் தேடினோம்னு தெரியுமா. என்னை விடு. உன்னோட கார்த்திப்பா எப்படிப் பயந்தாருன்னு தெரியுமா? ஒரே நாள்ல பாதியா மாறிட்டாரு." என்க. 


அவன் உராய்ந்து கொண்டிருந்த தன் கரத்தை விலக்கி கொண்டு அவனை விட்டு விலகி அமர்ந்தாள். ஆனால் ருத்ரா விடவில்லை. அவளைத் தன் நெஞ்சோடு அணைத்து மீண்டும் கரத்தைத் தேய்த்துவிட தொடங்கினான். 


"நீ கிடைச்சிட்டன்னு முதல்ல அவருக்கிட்ட தான் சொல்லணும் ஸ்வீட்டி.” என்றவன், அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு, 


“ஸ்வீட்டி ப்ளிஸ், அடுத்து உனக்கு என்ன கோபம் இருந்தாலும் எங்க போறேன்னு சொல்லாம வீட்ட விட்டு மட்டும் போகாத ஸ்வீட் டி. நான் பயந்திட்டேன். உனக்கு ஏதாவது ஆகிருக்குமோன்னு. சோ ப்ளிஸ்… எனக்காக… எங்க போனாலும் கால் பண்ணி சொல்லிட்டு போ." என அவனின் கரம் பதிந்த கன்னத்தை இதமாய்த் தடவ. 


"இப்ப நாம எங்க போறோம். " என்றாள் சின்ன குரலில். 


"உன்னோட வீட்டுக்கு தான் ஸ்வீட்டி. பாவம் உன்னோட கார்த்திப்பா. பாக்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. எனக்கும் அவருக்கும் லைட்டா ஆகாது தான். பட் இன்னைக்கி அவரோட பயத்த பக்கத்துல இருந்து பாத்தேன்.  உன்னைக் காணும்னு அவர் பட்ட வேதனை, கவலைலன்னு அதிகமாவே துடிச்சிட்டாரு. " 


" என்னை உன்னோட வீட்டுக்கு கூட்டீட்டு போறீயா ருத்ரா. சிவாஸ் பேலஸ். " என்க, ருத்ரா புரியாது அவளைப் பார்த்தான். 


"ப்ளிஸ்… ஜோஹிம்மா வர்ற வர, நான் உன்னோட வீட்டுல தங்கிக்கவா ருத்ரா." எனக் கேட்க. என்ன சொல்வது என்று தெரியவில்லை அவனுக்கு. 


"என்னாச்சி ஸ்வீட்டி. எதுவும் ப்ராப்ளமா" என இதமாய் அவளின் தலை வருடி கேட்க, அமைதியாக இருந்தாலும் கண்ணில் நீர் குறையாது ஊற்றியது. 


"It's ok… It's okay. leave it… அழாத ஸ்வீட்டி. " என்றவன் அவளைத் தன்னுடனேயே அழைத்து சென்றான். 


அவனின் உதடுகளில், மெல்லிய புன்னகை வந்ததை, மார்பில் சாய்ந்த அவளால் பார்த்திருக்க முடியாது. 


புன்னகைக்குப் பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று. எதோ ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்துள்ளது அதில் வாசு கார்த்திகேயனைத் தேடாது தன்னை நாடி வருகிறேன் என்கிறாள். இது காதலனான அவனுக்குக் கர்வத்தை தந்தது.


ருத்ராவிற்குக் கிடைத்த வெற்றி என்று கூட இதைச் சொல்லலாம். அதான் வாசுவின் பார்வையில் கார்த்திகேயனைத் தரம் இறக்குவது. அதில் அவனுக்குத் தான் வெற்றி. அடுத்து கார்த்திகேயனுடன் அவன் போட்ட சாவல். அதிலும் ருத்ராவின் வெற்றி உறுதியானது. எப்படி என்பது பின்னர் தெரியும். 


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...