அத்தியாயம்: 80
சமையலறையில் பூனை போல் உருட்டிக் கொண்டிருந்தான் க்ரிஷ்.
"எல்லா இடத்துலயும் தேடிட்டேன். எதாவது ஒன்னு இருக்கு. ஆனா நான் தேடுறத மட்டும் இல்லை. வெய்." எனக் கன்னத்தில் விரல் வைத்து தட்டி கொண்டே யோசிக்க,
"க்ரிஷ், இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" தாரிகா.
"ஹே ஹனி. வா வா… வந்து எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு. இந்த பெப்பர் எங்க இருக்குன்னு எடுத்து குடேன். " என்றவனை ஏற இறங்க அவனின் மனைவி பார்த்தாள்.
"உனக்கே பெப்பர் எங்க இருக்குன்னு தெரியாதா. இல்ல பெப்பர் எப்படி இருக்கும்னே தெரியாத. சரி விடு… நான் போய் மம்மிய கூட்டீட்டு வர்றேன். அவங்களுக்கு தான் கிச்சன்ல என்னென்ன இருக்குன்னு சரியாத் தெரியும். உங்கிட்ட கேட்டா நீ எப்படிப் பதில் சொல்வ… சுமால் கேர்ள். " என்றவன் நகரும் முன் அவனின் டீசர்ட்டை பிடித்து இழுத்தாள்.
"யாரு டா சுமால் கேர்ள். ஹாங்… பெப்பர்னா எதுன்னு எனக்கு தெரியாதுன்னு நீயே முடிவு பண்ற. முதல்ல உனக்கு எதுக்கு பெப்பர்?. கைல என்ன?. " என்று மிரட்டியும், அவன் கையில் இருந்ததை டீசர்ட்டில் மறைத்து வைத்து வைத்தான்.
" காட்டு க்ரிஷ். நான் அது என்னென்னு பாக்கணும். " என அவனின் கரம் பற்றி இழுக்க, அதில் இருந்த முட்டை கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டது.
"ஓ... நோ… " என அதிர்ச்சியுடன் க்ரிஷ் வாயில் கை வைக்க,
"என்னடா இது? "
"முட்ட… ஆம்லெட் போடலாம்னு எடுத்திட்டு வந்தேன். நீ ஹஃப்பாயிலாக்கிட்ட. அதுவும் பேன்ல போட வேண்டியத தரைல போட்டு உடச்சி ஊத்தீட்டியே! எப்படி இது வேகும்?" என்றவன் மற்றொரு முட்டையை எடுத்து அடுப்பைப் பற்ற வைத்து ஆம்லெட் போட, அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் அவனின் மனைவி.
"ஹனி... பெப்பர் இல்லன்னாலும் ஆம்லெட் நல்லாத்தான இருக்கும். " எனச் சந்தேகம் கேட்க,
"யாருக்கு இது? " என்றாள் தீவிரமான குரலில். ஏனெனில் சூடு தண்ணீர் வைக்க கூட அவன் அடுப்பைப் பற்ற வைத்தது இல்லை. ஏன் பசிக்குக் கூட சமையலறைப் பக்கம் ஒதுங்காத ஆள் அவன். இப்போது ஆம்லெட் போடுவது ஆச்சர்யம் இல்லையா!.
" அது வாசுக்கு. "
"வாசுவா? அவ எப்ப வந்தா? "
"இயர்லி மார்னிங்."
"கார்த்திக் அங்கிளும் வந்திருக்காங்களா.! எங்க அவரு?" எனத் தேடி நகர,
"ஹனி வீணா தேடாத. கார்த்தி மாமா வரல. வாசு மட்டும் தான். "
"தனியாவா!"
"இல்ல தேவா கூட்டீட்டு வந்தான். அவளுக்கு தான் காய்ச்சல். கொஞ்சம் அதிகமாகவே இருக்கு. சத்தானதா சாப்பிடணும்ல. அதா டேப்லெட், ஃப்ரெஷ் ஜுஸ், அப்றம் சூடா ஆம்லெட் " எனக் கையில் இருந்ததை ஒவ்வொன்றாக உயர்த்திக் காட்டினான்.
" காய்ச்சலுக்கு யாராது ஆம்லெட் போட்டுக் குடுப்பாங்களா."
"கஞ்சி தான் காய்ச்சணும்னு மம்மி சொன்னாங்க. அவங்க குடுக்குறதுக்கு முன்னாடி, நாமலே செஞ்சி குடுத்து அவள இம்ப்ரஸ் பண்ணலாம்னு நினைச்சேன். பட் எனக்கு கஞ்சி போட தெரியாது. அதா ஆம்லெட் போட்டு அட்ராக்ட் பண்ணப் போறேன்." என்றவனை அவள் அடிக்கும் முன்னரே அமிர்தா வந்து விட்டார், கஞ்சி காய்ச்ச.
" அத்தை வாசு எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்திருக்கா? அதுவும் காய்ச்சலோட! அவளுக்கு என்னாச்சி?. "
" ஏன் வரக்கூடாது. அவளும் இந்த வீட்டுல ஒருத்திதான். சொல்லப் போனா உனக்குத் தங்கச்சி முறை. எனக்கு…. எனக்கு…. அத தமிழ்ல நல்ல பேர் சொல்லி சொல்லுவாங்களே. ம்… மாம் உங்களுக்குத் தெரியுமா வைஃப்போட சிஸ்டர எப்படிக் கூப்பிடுவாங்கன்னு. ஹனி உனக்கு தெரிஞ்ச நீயும் சொல்லலாம். " என்றவனின் கேள்விக்குப் பதிலாக அவன் மனைவியின் முறைக்க, ஜூஸை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்,க்ரிஷ்.
"அத்தை எதுவும் பிரச்சனையா?. கார்த்தி அங்கிள் இல்லாம வாசு மட்டும் ஏன் வந்திருக்கா?. அதுவும் விடியக்காலைல காய்ச்சலோட. என்னாச்சித்தை?."
" எனக்கு எதுவும் தெரியாது தாரிகா. ஆனா அப்பா மகளுக்கும் சண்டன்னு நினைக்கிறேன். இன்னும் அழுத்திட்டே தான் இருக்கா. காய்ச்சல் வேற குறையவே மாட்டேங்கிது. ஹாஸ்பிடல் தான் கூட்டீட்டு போகணும் போல. இப்போதைக்கி டிப்ஸ் போட்டிருக்கு. மதியானத்துக்குள்ள குறையலன்னா அட்மிட் பண்ண சொல்லி, ரத்ததத்த சோதிக்க எடுத்திட்டு போயிருக்காங்க. " என்றார் கவலையுடன்.
" ஒன்னும் ஆகாது அத்தை. நீங்க கவலைப்படாதீங்க. வாசுவ தேவ் கூட்டீட்டு வந்தது கார்த்தி அங்கிளுக்கு தெரியுமா?. "
" ம்… தேவா சொல்லிடான். இந்த நேரத்துக்கு நம்ம வீட்டுக்கு வந்திட்டு இருப்பாரு. " என்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது கார்த்திக் வந்திருப்பதாக பணியாளர்கள் கூறினர்.
புன்சிரிப்புடன் வரவேற்ற சிவ்ராம்மையும் அமிர்தாவையும் அவன் கண்டு கொள்ளாது, வாசு எங்கே எனத் தேட, ருத்ரா ஓர் அறையில் இருந்து வந்தான்.
"மிஸ்டர் கார்த்திகேயன். வாசுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதான் உங்கிட்ட கேட்காம கூட்டீட்டு வந்திட்டேன். " என ருத்ரா பொறுப்பாய் பேச,
"பரவாயில்லை. இப்ப நான் அவள பாக்கணும். " என்றவன் அறைக்குள் செல்ல பரபரத்தான். ஆனால்…
" அது இப்ப வாசு தூங்கிட்டு இருக்கா. எழுந்ததும் நீங்க பாருங்களே. நீங்க சாப்டீங்களா. " என அக்கறையுடன் தான் கேட்டான்.
"எனக்குப் பசிக்கல. அப்றம் நன்றி. வாசுவ கண்டுபிடிச்சி பாதுகாப்பா கூட்டீட்டு வந்ததுக்கு.” என்றவன்
“உனக்கு சரியா பொய் சொல்ல வரல. சோ, ட்ரெய் பண்ணாத. நான் இப்ப வாசுவ பாக்கணும். " எனப் பிடிவாதமாக நிற்க.
"அவா தூங்குறா எழுந்ததும் பாருங்க. " என அழுத்தமாக சொல்லி கதவைத் திறக்க விடாது நின்றான் ருத்ரா.
" ருத்ரா உன்னை விட எனக்கு வாசுவ பத்தி எல்லாமே தெரியும். அவ தூங்கல. என்னைப் பாக்க பிடிக்கலன்னு சொல்லி அனுப்பிருக்கா… சரியா. "
அது உண்மையும் கூட. கார்த்திகேயனின் வருகையை அறிந்த வாசு, "எனக்கு அவர பாக்க பிடிக்கல ருத்ரா. ப்ளிஸ்... நான் தனியா இருக்க விரும்புறேன்." என அழுது கரைந்த்தாள் வாசு.
நேற்று முழுவதும் கார்த்திகேயன் பட்ட வேதனையைப் பக்கத்தில் இருந்து உணர்ந்தவனுக்கு, வாசுவைக் கண்ணில் கூடக் காட்டாது, கூட்டி வந்ததே பிடிக்கவில்லை. இதில் மகளைப் பார்க்க விடாது தடுப்பதா என்றிருந்தது. ஆனாலும் வாசுவின் கண்ணீரைப் பொறுக்காது, ருத்ரா, வாசு உறங்குவதாகச் சொன்னான்.
அதை நம்பாத கார்த்திக் அவனை விலக்கி விட்டு உள்ளே செல்ல, வாசு முகம் திருப்ப கொண்டாள். மகளின் கையில் ஏறிக் கொண்டிருந்த டிப்ஸை பார்த்தவனுக்கு கண்ணில் நீர் வந்தது.
எல்லாம் முடிந்தது. இனி இழப்பதற்கு உயிரை தவிர எதுவும் இல்லை. அதையும் இழந்து விட்டால் நிம்மதியாவது கிடைக்குமே என உயிரை விட துணிந்தவனிடம். 'எனக்காக வாழலாமே கார்த்திப்பா. ' என்று சொல்லி அவன் வாழ ஒரே காரணமாக இருந்தது வாசு மட்டும் தான். மயிலிறகாய்த் தன் கையில் கிடைத்த அவனின் உயிர் அவள்.
மகளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறான். தன் மேல் அவளுக்குக் கோபம் உள்ளது என்பதை வீடு வந்த போது இறைந்து கிடந்த பொருட்களை வைத்து அறிந்தவனுக்கு… ஏன் அந்தக் கோபம் என்று தான் புரியவில்லை.
வாசுவின் பிடிவாதம் தெரியும். அது அப்படியே ஜோஹிதாவின் பிடிவாதத்தை ஒத்தது. விபரீதமாக எதையாவது செய்து எதிலாவது மாட்டிக் கொள்வாளோ என்று பயந்து விட்டான்.
இப்போது மகளை முழுதாக பார்க்கையில் ஒருவித நிம்மதி. உடலில் சோர்வு தெரிந்தாலும் அவளின் கோபத்தை விழிகள் காட்டிக் கொடுத்தன. கன்னத்தில் இருந்த தடத்தை காண்கையில் ருத்ராவின் மீது கோபம் வந்தது. நெருங்கி மகளின் அருகில் வந்தவன் டிப்ஸ்ஸிற்காக போட்டிருந்த பேண்டேஜ்ஜின் அருகில் தன் கட்டை விரல் வைத்து தடவி,
" வலிக்கிதாம்மா. " என்ற போது குரல் உடைந்திருந்தது. அதை உணர்ந்தவள் பதில் சொல்லாது திரும்பியும் பாராது இருக்க,
" வாசும்மா, உனக்கு எம்மேல என்ன கோபம்னு தெரியல. நான் எது பண்ணிருந்தாலும், என்ன தப்பு செஞ்சிருந்தாலும் என்ன மன்னிச்சிடும்மா… எங்கூடப் பேசுடாம்மா. என்னைப் பாரு வாசும்மா. " எனச் சிறுவன் போல் கெஞ்ச, தன் பிடிவாதத்தைப் பிடித்து வைக்கும் திடத்தை இழந்தவள்,
" முடியாது. என்னால உங்கள மன்னிக்க முடியாது. மன்னிக்க கூடிய காரியத்த நீங்க செய்யல. "
" நீ எதப்பத்தி சொல்றா வாசு. அப்பா என்ன தப்பு பண்ணேன்?"
"தப்பெல்லாம் இல்ல அது. நீங்க பண்றதுக்கு பேரு துரோகம். நம்பிக்கை துரோகம். நீங்க மட்டும் தான் உலகம்ன்னு உங்களையே நம்பிட்டு இருந்த என்னோட ஜோஹிம்மாக்குப் பண்ண துரோகம். அப்பா அம்மான்னு எல்லாத்தையும் விட்டுட்டு உங்க கூட உங்க நிழல் மாதிரி இத்தன நாளா இருந்து பாடு பட்டவங்களுக்கு நீங்க குடுத்த பரிசு. " எனக் கண்ணீருடன் தன் தாய்க்காகப் பேசியபடி அழுதவள் அருகில் இருந்த தன் சிறிய பையில் ஒரு கவரை எடுத்து கட்டிலில் வீசி விட்டு கரத்தில் முகம் புதைத்து கொண்டு கதறினாள்.
கார்த்திக்கிற்குப் புரியவில்லை. துரோகம் என்ற பெரிய வார்த்தையை சொல்லி அழும் மகளின் தலை கோதி விட்டவன் அவளின் கலைந்திருந்த கூந்தலை ஒழுங்கு படுத்தி பின்னலிட்டான்.
"இந்த மாதிரி நீ பெரிய பெரிய பேச்செல்லாம் பேசும் போது தான் நீ இன்னும் குழந்த இல்ல வளந்த பொண்ணுன்னே புரியுது. " என மகளின் கோபத்தை ரசித்தவன்,
"பேச்ச மாத்தாதீங்க. உங்களுக்கு எப்படி என்னோட ஜோஹிம்மாக்குத் துரோகம் பண்ண மனசு வந்தது. "
"நான் யாருக்கும் இதுவர தெரிஞ்சி துரோகம் பண்ணது இல்ல வாசும்மா. அதுவும் ஜோஹிதான்னு வரும் போது நான் அவள தவிர வேற யாரையும் யோசிச்சி கூடப் பாத்தது இல்ல. "
"பொய்... பொய்... பொய்…" என ஆவேசமாக கத்தியவள் கையில் இருந்த டிரிப்ஸ்ஸை கலட்டி எறிந்து விட்டு, கட்டிலை விட்டு இறங்கி நின்று கத்த, இதுவரை வெளியே நின்றிருந்தவர்கள் இப்போது உள்ளே வந்தனர்.
அவர்களின் முன் கார்த்திகை அவமானப்படுத்த அவள் தயாராக இல்லை. எனவே அனைவரையும் வெளியே செல்லும் படி கரம் குவித்தவளின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அனைவரும் வெளியே சென்றனர். ருத்ரா மட்டும் அவளைத் திட்டியபடியே கையில் டிப்ஸ்ஸை மாட்டிவிட்டு படுக்க வைத்துவிட்டு சென்றான்.
"வாசும்மா, எதுவா இருந்தாலும் பொறுமையா பேசு. நீ என்ன கேக்குறியோ அதுக்கு நான் கண்டிப்பா விளக்கம் சொல்லுவேன். என்ன கோபம் எம்மேல? ஏ துரோகம் அது இதுன்னு பேசுற வாசும்மா? " என மகளுக்குப் போர்வை போர்த்தி விட்டு அமைதியாக அவளின் அருகில் அமர்ந்து கொண்டு பேசினான் கார்த்திக்.
"இது யாரு? " என வீசிய பையில் இருந்த லேமினேஷன் செய்த ஒரு புகைப்படத்தைக் காட்டினாள் வாசு. அதை வாங்கியவன் அப்படியே உறைந்து விட்டான்.
"ஜோ… " என அவனின் உதடுகளில் இருந்து வார்த்தை வர, விரல்கள் தன்னாலே அதிலிருந்தவளை வருடியது.
" அவங்க யாரு? உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்க, மகளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவன். அவனின் கவனம் முழுவதும் அந்தப் புகைப்படத்திலேயே இருந்தது.
"உங்களுக்கும் அந்த ஜோக்கும் என்ன சம்மந்தம்?. இப்ப வரைக்கும் அவங்க பேர்ல இந்தியால ஒரு ட்ரெஸ்ட் வச்சி நிறைய பேர படிக்க வச்சிட்டு இருக்கீங்க. உங்க உடம்புல இருக்குற டட்டோ. அதுக்கு என்ன அர்த்தம்? சொல்லுங்க கார்த்திப்பா? " என அவனை உளுக்க, அவனிடம் அசைவில்லை.
"நீங்க பேசாம இருக்குறத பாத்தா, டேனியல் சொன்னது உண்ம தான் போல. உங்களுக்கு வேற ஒரு பொண்ணு கூட அப்ஃர் இருக்குன்னு அவன் சொன்னது சரி தானா!. நீங்க அவங்க கூட அப்ஃர்ல இருந்தீங்களா!.இப்பவும் அவங்க கூடத் தொடர்புல தான் இருக்கீங்களா. எப்படிக் கார்த்திப்பா என்னோட ஜோஹிம்மாக்கு துரோகம் பண்ண மனசு வந்தது உங்களுக்கு?" எனக் கேட்க, பதில் சொல்லும் நிலையில் இல்லை கார்த்திக்.
மறந்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்த அவனுக்கு, உன் உயிரை மறந்து எப்படி வாழ்வாய் என்றுணர்த்தியது அந்த புகைப்படம்.
அதிலிருந்தது ஜோதிவாணி. கார்த்திக், அவளை நெஞ்சோடு அணைத்து அவளின் நெற்றியில் தன் இதழ் பதித்திருந்தான் அந்தப் புகைப்படத்தில். அவன் விழி மூடி பெண்ணவளிடனான முத்ததில் திளைத்திருக்க, அவளின் விழிகள் அவனை மையலாய் நோக்கி, காதல் கவி பாடியது… அந்தப் புகைப்படத்தில்.
அந்த விழிகளில் இருந்தா காதல் பார்க்கும் யாவருக்கும் புரியும். அவனின் உடல் மொழியும், பெண்ணவளை இருக்கி அணைத்திருந்த விதமும், காதல் பெண்ணுக்கு மட்டுமல்ல கார்த்திக்கும் காதலுடன் தான் முத்தமிடுக்கிறான் என்றது.
எப்படி???
‘அவனின் காதல் தன் ஜோஹிம்மாவாக இருக்கும் போது, இடையில் காதல் கொண்ட இந்தப் பெண் யார்.
அவள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுச் செல்லட்டும். அவள் தன் கார்த்திப்பாவை காதலிக்க ஆயிரம் காரணங்கள் இருந்து விட்டுப் போட்டும். தன் கார்த்திப்பா எப்படி அவளை காதலுடன் அணைத்து, ஆசையுடன் முத்தமிடலாம். அது தன் தாய்க்கு செய்யும் துரோகம்.’ என்று குமுறியது அவளின் உள்ளம்.
‘எப்படி இதை வாசு கண்டு பிடித்திருப்பாள்?. எப்படி அவளோட கைகளுக்கு அந்த ஃபோட்டோ கிடைத்திருக்கும்?. ஜோ யார்?.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..