முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 81

அத்தியாயம்: 81


"Johi, I am sorry. "


" நான் உங்கிட்ட அப்படி பேசிருக்க கூடாது. "


" தப்பு தான். அதுக்குன்னு இத்தன நாளா நீ பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு.‌."


"Sorry for that. "


"Pls Johi. "


இது தினமும் கார்த்திக் ஜோஹிதாவிற்கு அனுப்பும் மெசேஜ்கள். நள்ளிரவுக்கு மேல் இலவச மெஜ்ஏஜ்களை அனுப்பலாம் என்ற வசதி இருந்த காலம் அது. (அப்படி ஒன்னு இருந்ததுன்னு தெரியும். ஆனா எந்த வர்ஷம்னு சரியா தெரியல. பகல் நேரத்துல ஒரு குறுஞ்செய்திக்கு ஒரு ரூபாய் என்று நினைக்கிறேன். சரியா தெரியலப்பா.)


90 களின் கடைசியில் தான் செல் ஃபோன் என்ற சேவை நம் நாட்டிற்குள் ஊடுருவி பரவத் தொடங்கி இருந்தது. சோப்பு டப்பா சைசில் பெரியதாக இருக்கும். ஆனால் அதன் திரை மிகவும் சிறியது. 


பட்டன் டைப் நோக்கியா மொபைல்.


விலை சற்று அதிகம் தான். ஆனால் இருவருக்கும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்று தேடி அழைத்து வாங்கி ஜோஹிதாவிற்குப் பரிசளித்திருந்தான் கார்த்திக். தன் நினைவாக அது இருக்கும் என்று.


அவளின் நினைவாக அவனிடம் எதுவும் இல்லை என்பது வேறு விசயம். அவளும் பரிசா க்ரீட்டிங் கார்ட், கீ‌செயின் எனச் சிறியதாக மட்டுமல்ல, காசாக விலை கொடுத்து எதையும் வாங்கி தந்தது இல்லை. இவனும் அவளிடம் அப்போது எதிர் பார்க்கவும் இல்லை. அவன் தந்த முதல் பரிசு அந்த செல் போன்.


ஆனால் அது அவளின் கையில் இல்லை. காய்லான் கடையில் இருக்கிறதோ! இல்லை மொபைல் கடையில் விற்கப்பட்டதோ!. அது விகாஸ்ஸிற்குத் தான் தெரியும். ஜோஹிதாவின் செல்போன் பறிக்கபட்டு அதில் இருக்கும் சிம் வெட்டி வீசப்பட்டிருந்தது.


இதை அறியாத கார்த்திக் தினமும் அதாவது ஒரு வருடமாகவே அதற்கு மெசேஜ் அனுப்புகிறான். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல். இதுவரை பதில் வந்தது‌ இல்லை. 


எப்படி வரும்? சிம் அவனின் ஆளிடம்  இல்லையே… 


ஆனால் வந்தது…


"மச்சான்…. ‌மச்சான்…. மச்சான்... எந்திரீங்கடா. மெசேஜ் வந்திருக்கு. " என உறங்கிக் கொண்டிருந்த அப்சத்தையும் முருகுவையும் எழுப்பி ஃபோனைக் காட்டினான் கார்த்திக். MY love என்று சேவ் செய்து வைத்திருந்த எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. 


என்ன வந்துள்ளது என அதை எட்டிப் பார்த்துக் கடுப்பானான் முருகு.


"போடாங்க. நடுசாமத்துல மோகினி பேய் மாதிரி எழுப்பீட்டு. ச்சீ போ… " எனத் திட்டி விட்டு போர்வை மூடி தூக்கத்தைத் தொடர நினைக்க,


"எந்திரி மச்சி... என்னோட ஃபோனுக்கு  மெசேஜ் வந்ததிருக்குடா. ஜோஹிதா அனுப்பிருக்கா." எனச் சந்தோஷமாகச் சொல்லி எழுப்பி விட்டான்.


"எப்படி டா வரும்? கண்டிப்பா அந்த ஃபோன அவளோட அண்ணெங்காரெ தூக்கி போட்டு உடச்சிருப்பான். " என்றான் அப்சத்.


"கந்தல்கோலமா கிடக்குற அத எடுத்து தன்னோட வருங்கால புருஷனுக்குக் காட்டலாம்னு உன் ஆளு பத்திரப்படுத்தி வச்சிருந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல. " என முருகு சொல்ல, அவனின் போர்வையை உறுகி வயிற்றில் குத்தினான் கார்த்திக்.‌


‘அதெப்படி தன் ஜோஹி தன்னைக் கலட்டி விட்டது போல் பேசலாம்.’ என்ற கடுப்புடன் 


“அப்படி பேசாத டா. ஜோஹி எனக்காகக் காத்திருப்பா. பாரு மெசேஜ் அனுப்பிருக்கா.” 


" டேய் உன்னோட நிலைமையே அருங்காட்சியகத்துல வைக்கிற மாதிரி அருமையா இருக்கும் போது. எப்படி டா உனக்கு மெஸ்ஏஜ் வரும். " எனக் கேலி செய்தான் அப்சத்.


"ஒரு வேள மோகினி பேய் தான் மெசேஜ் அனுப்புதோ!. come and meet மொட்ட மாடி at 1 AM... னு. " என முருகு தன் கட்டைக்குரலில் சொல்வதற்கும் நேரம் சரியாக ஒன்று ஆனதைச் சொல்வதற்காக மணி அடிக்கவும் சரியாக இருக்க, மூவருமே பயந்து விட்டனர்.


" மச்சான் உனக்கு மெசேஜ் அனுப்புனது கன்பார்ம்மா பேய் தான். ரிப்ளே பண்ணி பேசணும்னா. மொட்ட மாடிக்குத் தனியா போய் பேசு.‌." என அப்சத் நடுங்கியக் குரலில் சொல்ல,


"ஆமா…நீ பேய் கூடத் தனியாப் போய் பேசு. எங்கள விட்டுடு மச்சான். காலை எழுந்து மார்ச்சரிக்கி சொல்லி உன்னோட டெட் பாடிய கலெக்ட் பண்ணிக்கிறோம். டேய் உனக்கு இந்த ஊரு கவர்மென்ட் ஹாஸ்பிடல் நம்பர் தெரியும் தான. தெரியலன்னா நாளைக்கி விசாரிச்சிட்டு இவெ பாடிக்கிட்ட போகலாம். அப்பறம்‌ நாம தான் கொல பண்ணோம்னு போலீஸ் பிடிச்சிட்டு போய்டும். " என முருகு சொல்ல, அப்சத் அதை ஆமோதிக்க, இருவரும் போர்வையை மூடி உறங்கத் தொடங்கினர்.


"போங்கடா கேனப்பயலுகளா. பேய்லாம் கிடையாது. என்னோட ஜோஹி அனுப்பிருக்கா. " என மொபைலை கையில் வைத்துக் கொண்டு, பரவச நிலைக்குச் சென்றார் கார்த்திக்.


"முச்சிபோச்சி. " என்றவர்கள் அவனின் அருகில் சென்று,


"ஐய்யா கார்த்திகேயா. அனுப்புனது யாரா வேணும்னாலும் இருந்திட்டு போட்டும்‌‌. முதல்ல என்ன அனுப்பிருக்காங்கன்னு பாக்கலாமா. " என முருகு சொல்ல, கார்த்திக் மெசேஜை ஓப்பன் செய்து படித்தான்.


'என்ன ஒன்னையும் காணும். எதாவது டைப் பண்ணி அனுப்பிருக்கலாம்ல. ' என்று முருகு சொல்லும் அளவுக்குத் தான் இருந்தது. அது ஒரு எம்ட்டி மெசேஜ்.


"ஹிம் இதுக்குத் தான் இவ்ளோ பில்டப்பா…. போடா…. போய் தூங்கு. நடுச்சாமத்துல எழுப்பி எங்கள தொந்தரவு பண்ணிட்டு. ச்ச... " என இருவரும் அவனைத் திட்டி விட்டு படுத்துக் கொண்டனர்.


‘இத்தனை நாள்களாக இல்லாது. இப்போது தனக்கு ஒன்றுமே இல்லாத மெசேஜ்ஜை வந்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம். ம்… ஜோஹிதாவின் கோபம் குறைய தொடங்கி விட்டது. சீக்கிரமே அவளைச் சமாதானம் செய்து விடலாம் என்று தானே அர்த்தம்.’ இது கார்த்திக்கின் மைண்ட் வாய்ஸ்.


"காலையில மொத வேளையா அவளப் பாத்து பேசணும். அதுக்கு அப்றம் எல்லாம் சரியாகிடும். "  எனத் தங்களின் இனிய எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டபடி நிம்மதியுடன் உறங்கினான் அவன்.


காலை கல்லூரியில் வகுப்பு தொடங்கும் முன்னரே எரிச்சல் அடைந்தனர் முருகுவும் அப்சத்தும். 'ஏன்டா எங்களுக்குக் காத வச்ச கடவுளே.' என நொந்து கொள்ளும் அளவுக்குக் கார்த்திகேயன் இருவரின் காதையும் பஞ்சராக்கிவிட்டான்.


"போதும்… இத்தோட நிறுத்திக்கிவோம். எங்களுக்கு ரனில் ஸார் க்ளாஸ் வேற இருக்கு. உன்ன மாதிரி இல்ல அவரு. ஒரு மணி நேரம் மட்டும் தான் எங்க காத அறுப்பாரு. அடுத்து பாவம் பாத்து அவரே விட்டுடுவாரு. நல்ல மனுஷெ. ஆனா நீ இருக்கியே... ராத்திரி ஒரு மணிக்கி ஆரம்பிச்ச…. உன்னோட கனவ சொல்றேன்னு. சூரியன் வந்திடுச்சி இன்னும் கனவு கன்டினியூ ஆகிகிட்டு இருக்கு. " எனக் கடுப்புடன் சொல்ல,


"என்ன மச்சான் அப்ப என்னோட கனவ கேக்க மாட்டியா?" கார்த்திக் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,


"இந்த மூஞ்ச எங்க கிட்ட காட்டாத. நீ ஒரு அப்ராணின்னு கனவ கேக்க காதக் குடுத்தா. நீ எங்கள விசித்திர பிராணியா மாத்திடுவ போல. டேய் சொல்லுடா அவெங்கிட்ட போதும்னு." என முருகு அப்சத்தின் தோளை அடிக்க,


"விட்டுடு மச்சான். நாங்க பாவம். " என்றான் அப்சத் வேகமாக.


"ஏன்டா இப்படி பேசுறீங்க. நம்ம நண்பனோட மனசு கஷ்டப்படாது. அவனுக்கு நாம மட்டும் தானடா இருக்கோம்.‌ நீ பேசு மச்சான். நான் கேக்குறேன் உன்னோட கனவ. " எனக் கார்த்திக்கை உற்சாகப்படுத்தி ஜோஹிதா கார்த்திக் காதலைப் பற்றிக் கேட்டு ரசித்தான் முரளி.


" யாருடா இவன்?. கார்த்திகேயனோட தீவிர பக்தனா இருப்பான் போலயே.‌" என அப்சத் முணுமுணுக்க,


" கண்டிப்பா பக்தன் தான். அவங்க ரெண்டு பேரும் சேரணும்னு பழனி முருகனுக்கு வேண்டிக்கிட்டு இங்கருந்தே பாத யாத்திர போகப்போறானாம். நல்லா பத்துக்க இவன. ஏன்னா யாத்திர கிளம்பிட்டான்னா பழனி மலைல இருப்பானோ. இல்ல ஆகாயத்தில முருகெங்கூட லைவ் பேட்டி எடுத்திட்டு இருப்பானோ. யாருக்கு தெரியும்?.‌" எனக் கேலி செய்து சிரிக்க,


முரளி யாரையும் கண்டு கொள்ளாது, சலிக்காது கார்த்திக்கின் காதல் புராணத்தைக் கேட்டுக் கொண்டே வர, கல்லூரியில் ஓரிடத்தில் கூட்டமாக மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர்.


"எதுக்கு டா இவனுங்க கும்பலா நின்னு வேடிக்க பாக்குறானுங்க?. நம்ம பெரிய வாத்தியாரு யாராது பாம்பாட்டிய காலேஜ்குள்ள கூட்டீட்டு வந்து வித்த காட்ட ஏற்பாடு பண்ணிட்டாறா என்ன.!" முருகு


"அத பக்கத்துல போய் பாத்தாதே தெரிஞ்சிப்போம். " என அருகில் சென்று கூட்டத்தை விலக்கி விட்டு  பார்த்தனர்.


நான்கைந்து  தடியர்கள். இல்லை மாணவிகள் ( பெண்ணுங்க தாம்பா ஆனா பாக்க பையன் மாதிரி இருக்காங்க. முடி வெட்டி ஜீன்ஸ் போட்டு, சட்டை அணிந்திருந்தனால் உடனே அடையாளம் தெரியல.) வட்டமாக அமர்ந்து வேறு யாரையோ கேலி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு காது கூசும் அளவுக்கு இருந்தது. அதை வைத்தே இவர்கள் யாரோ ஒரு பெண்ணை தான் கேலி செய்து கொண்டிருக்க வேண்டும்.


அவர்கள் மிகவும் வக்கிரமாக அந்தப் பெண்ணைக் கேலி செய்து கொண்டு இருக்க… அவளோ… அதான் அந்த ஜோதிவாணி. கலங்கிய விழிகளுடன் தலை தூக்காது ஒரு செடியின் பின்னால் ஒளிந்து கொள்ள முயன்றபடி நின்றிருந்தாள்.‌


"ஏய்… இது க்ளாஸ் மாறி நம்ம க்ளாக்கு வந்த பார்ட்டி தான. பேர் கூட எதுவோ சொல்லுச்சே. ‌ம்… ஜோன்னு ஆரம்பிக்கும். முரளி உனக்கு நியாபகம் இருக்கா?.‌"


"இல்ல... நீ எத பத்தி பேசறன்னே தெரியல. " பட்டெனக் கூறினான் அவன்.


"எது உங்கிளாஸ்க்கு வந்துச்சா. நா இந்த பிள்ளைய எங்க டிப்பார்ட்மெண்ட் பக்கம் அடிக்கடி பாத்திருக்கேன். பேந்த பேந்த முழிச்சிட்டே திரியும். ஆனா பேரு தெரியாது. " முருகு.


" நல்ல பேருடா அது‌. கிட்டத்தட்ட ஜோஹிதா பேரு மாறி இருக்கேன்னு மனசுக்குள்ள மார்க் பண்ணி வச்சேன். ச்ச…. மறந்திட்டேன் போல."


"இப்ப பேராடா முக்கியம் அந்த பொண்ணக் காப்பாத்தனும்டா. இத்தன பேர் முன்னாடி அவளுங்க எப்படிப் பேசுறாளுங்க பாரு. அந்தப் பொண்ணு கேட்டுட்டு கோபப்படாம நிக்கிது.  " என அப்சத் ஆவேசமாக,


" அப்படி என்னடா சொல்றாளுக. " எனச் சுவாரஸ்யமாகக் கேட்ட முருகுவை அப்சத் முறைத்தான்.


"இல்ல, எனக்கு அவளுங்க பேசுறது புரியல… அதான். ஒரு வேள என்னை மாதிரியே அந்தப் பொண்ணும் புரியாமத்தா நிக்கிதோ‌. "


"இருக்கலாம். யாராது நல்ல மனசுக்காரங்க வந்து காப்பாத்தட்டும்‌. நாம போலாம். " எனக் கார்த்திக் நடக்க தொடங்கி விட்டான். மற்றவர்களும் தான்.‌


" டேய் பாவம் டா இந்தப் பொண்ணு. " என ஆரம்பித்தான் அப்சத்.


" அதுக்காக அதுக்கு பார்டி கார்ட் வேல பாக்க சொல்றீயா. " என்றான் கார்த்திக்.


"வெளிலன்னு வந்துட்டா இப்படி பொம்ளப்பிள்ளங்க மட்டுமில்ல ஆம்பள பசங்களும் பேசத்தா செய்வாங்க. சமாளிக்க தெரியலன்ன வீட்டுக்குள்ளையே கிடக்க வேண்டியது தான. இதெல்லாம் படிக்கலன்னு யாரு அழுதா. படிச்சி மட்டும் என்ன செய்யப்போது. " என்றான் முரளி வெறுப்பாக.


அவனை அனைவரும் திரும்பி கோபமாகப் பார்த்தனர். அவனின் பேச்சி அவர்களுக்குப் பிடிக்கவில்லை.


நேரடியாக அந்த மாணவிகளுடன் சண்டை போட்டால், பாஷை புரியாத ஊரில் உள்ளூர் ஆட்களைப் பகைத்துக் கொள்வது போலாகிவிடும். பிறகு எப்படிப் படிப்பை முடிப்பது எனப் பயந்து அமைதிகாக்க, அப்போது அந்த கூட்டத்தில் ஜோஹிதாவின் தலை தென்பட்டது.


"மச்சான் ஜோஹிதாவோட கருணை பார்வை உம்மேல விழ எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. ஆனா அதச் செய்ய உனக்குத் தைரியம் இருக்கா?. " முருகு‌.


"தைரியம்லா எக்கச்சக்கமா உள்ளுக்குள்ள கிடக்கு. என்ன ஐடியான்னு சொல்லு.?" கார்த்திக் ஆவலாக.


"இப்ப அந்த கூட்டத்துக்குள்ள புகுந்து அதிரடியா அந்தப் பொண்ண நீ காப்பாத்தணும். அதப் பாத்து வந்துட்டான்டா என்னோட ஹீரோன்னு ஜோஹிதாக்கு உம்மேல காதல் பொங்கி வழிஞ்சி. கோபமெல்லாம் வந்தி போய்டும். சரியா. " என்றான் முரளி எரிச்சலாக.


"கிட்டத்தட்ட அப்படித் தான். ஆனா அப்படிக் கிடையாது. " எனத் அ திட்டத்தை முருகு விளக்கினான்.


"இங்க பாரு எது பண்றதா இருந்தாலும் அந்த நவீன் கண்ணுல மட்டும் படுறமாதிரி இருக்க கூடாது. உடனே அவளோட வீட்டுல பத்த வச்சிடுவான். அப்றம் வந்திடுவானுங்க சின்ன தம்பி ப்ரதர்ஸ்… மிரட்ட... " கார்த்திக்.


"அப்படி நடக்காது. முழுசா ஐஞ்சி நிமிஷம் உனக்கு நேரம் கிடைக்கும் அதுவும் நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா பாத்துக்கிற மாதிரி. அதுக்குள்ள அவளோட கால் விழுந்தாது  பழையபடி காதலர்களா மாறிடுங்க. சரியா. "


"என்ன டா சொல்ல வர்ற. " என்பது போல் பார்த்த அவர்களை முருகு க்ரவுண்டிற்கு இழுத்து சென்றான்.


இங்கு அவர்கள் அவளின் உருவத்தை மட்டுமல்ல அங்கங்களையும் அசிங்கமாக கேலி செய்து சிரித்த படி அவ்விடம் விட்டி நகர விடாது அவளைச் சுற்றி நின்றிருந்தனர். 


அங்கு முருகு க்ரவுண்டில் கிடந்த வட்ட வட்ட வடிவிலான கற்களை அனைவர் கையிலும் கொடுக்க, என்ன செய்ய போகின்றனர் என்பதை யூகித்த முரளி ‘எனக்கு இது தேவையில்லாத வேலை ' எனச் சொல்லி சென்று விட்டான்.


அப்சத்திற்கும் முருகுவிற்கும் அந்தப் பெண்ணை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கையில் கல்லுடன் அங்கிருந்த மாடியின் முதல் தளத்திற்குச் சென்றனர். கல் மட்டுமல்ல கவணும் இருந்தது.


கல்லை கவணில் வைத்து மூவரும் யாருக்கும் தெரியாது அந்த மாணவிகளின் மீது தாக்குதல் நடத்த, அது சரியாக வேலை செய்தது.


கூட்டம் அப்போது கலைய பேராசிரியர்கள் அவ்விடம் வர. வாணி காப்பாற்றாப்பட்டாள். அப்போதைக்கு மட்டும் தான்.


இதில் ஹைலைட் என்னவென்றால், மாணாக்கர்கள் சிதறி ஓடும் போது, கார்த்திக் ஜோஹிதாவின் கரம் பற்றி இழுத்து லைப்ரரிக்கி கூட்டி சென்றான். 


யாருக்கும் தெரியாத மறைவான இடத்தில் அவளை நிறுத்தினான். அவள் கார்த்திக் கைய உதறிவிட்டு அவனின் பேச்சைக் கூடக் கேட்காது நன்கு திட்டி விட்டு சென்று விட்டாள்.


" எனக்கு நீ தேவையே இல்லன்னு சொல்லிட்டு போய்ட்டேல. அப்பறம் எதுக்கு வர்ற எம்பின்னாடி. எங்கப்பா பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்க வேற சொல்லி என்னோட மனச நீ ரொம்ப காயப்படுத்திட்ட கார்த்திக். அத என்னால மறக்க முடியல. அதுனால எனக்கும் நீ தேவையே இல்ல. நீ வேண்டாம் போடா. " என அனல் பறக்க கோபமாகக் கத்திய அவளைப் பார்த்து முழித்தபடி நின்றான் கார்த்திக்.


ஏனெனின் இன்று காலை தான் ஒரு காலி மெசேஜ் அவளிடம் இருந்து வந்திருந்தது. கோபம் குறைந்ததால் தானே அனுப்பிருப்பாள். அப்பறம் ஏன் சின்னப் பார்வை கூட மாற்றாது. வசனத்தையும் மாற்றாது அப்படியே இருக்கிறாள்.' என யோசித்த படி நின்றான் அவன்.



 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...