அத்தியாயம்: 83
எல்லாம் நீயே...
எல்லாமும் நீயே...
உன் மீது காதல் வர…
காரணங்கள் உண்டு…
ஆனால் தெரியாது…
எதந்த காரணமென்று...
கூடாதென்று தான்...
நினைத்தேன் வந்துவிட்டது…
என் மனசுமைக்கி…
வடிகாலாய்.
என்னுள்ள மகிழ்ச்சி...
விதையை விதைக்க…
என்னை நானே...
மறக்க காரணம்...
நீ…
பதிலாய் உன் தாயாய்...
என் மடிகிடத்த ஆசை…
சேயாய் உன் மார்பு…
நிறைக்க ஆசை…
தாரமாய் உன்னுள்…
உறைந்திட ஆசை…
உன் காயங்களை
மாயமாக்க ஆசை...
வாழ்வில் வரும்…
இன்பம் துன்பம்…
இரண்டிலும் உன்னுடன்…
கைகோர்க்க ஆசை...
எண்ணிலடங்கா ஆசை...
விலைமதிப்பற்ற பேராசை…
நீ என் துணையாய்…
இருக்க வேண்டுமென்பது…
காதலுடன்…
ஜோ….
எனக் கையொப்பம் இடப்பட்டிருந்தது.
'என்ன கையொப்பம் இன்க்ல விழுந்து எந்திரிச்சி போன கரப்பாம் பூச்சி போட்ட மாதிரி இருக்கு. பட் எழுத்து நல்லா முத்தா அழகா இருக்கு. கவிதையும் படிக்க நல்லாத்தா இருக்கு. ஆனா இத எழுதுன அந்த ஜோ யாரா இருக்கும். ம். ' வாசுவின் மைண்ட் வாய்ஸ்.
அந்த sign ஐ இரண்டொரு நொடிகள் உற்று பார்க்க. "அட… இது கார்த்திப்பா அவரோட மணிக்கட்டுல பச்ச குத்தி வச்சிருப்பாரே அது மாதிரில்ல இருக்கு. " என உற்று உற்று பார்க்கும் போது தான் தெரிந்தது அது J வையும் K வையும் இணைத்து போட பட்ட ஒரு சைன்.
அதை அங்கு மட்டுமல்ல கார்த்திக்கின் பைக்கிலும் பார்த்திருக்கிறாள். முன் பக்க ஹெட்லைட்டுக்கு மேல் இந்த சைன் இருக்கும். இதுவரை யாரையும் அந்த பைக்கைத் தொடவிட்டது இல்லை கார்த்திக்.
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக அவனின் பாட்டி வாங்கி தந்தது. பாதி அவனின் சேமிப்பு. மீதி பாட்டியுடையது. அதில் அவன் ஏற்றிச் சென்ற முதல் பெண்ணும் அந்தப் பாட்டிதான்.
பின் எத்தனையோ முறை ஜோஹிதாவை வரச் சொல்லி அழைத்திருக்கிறான். ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.
இந்தியாவில் இருந்து அவன் தூக்கி வந்த சில பொருட்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வாரமும் அதைத் துடைத்துப் பத்திரமாக கவர் போட்டு பாதுகாப்பானே தவிர அதை எடுத்து ஓட்டியதும் இல்லை. ஓட்ட அனுமதித்ததும் இல்லை.
" ஏன் கார்த்திப்பா உங்க பைக்க இந்தியால இருந்து இறக்குமதி பண்ணி… ஓட்டவே செய்யாம மூளைல போட்டு வச்சிருக்கீங்க!. நான் ஓட்டவா?. எனக்கு அத ஓட்ட சொல்லித் தரலாம்ல. " எனக் கேட்பாள் வாசு.
" நடக்க தெரியாதவளுக்கு பைக் ஒரு கேடு. " என ஜோஹிதா சொல்லி சிரிப்பாள்.
"சைக்கிள் மாதிரி தான பைக்கும். பெரிய அளவுல வித்தியாசம் கிடையாது. சைக்கிள் ஓட்ட தெரிஞ்ச எனக்கு, இத ஓட்ட முடியாதா!" என வீராப்பாய்ப் பேசுவாள் வாசு.
"கிழிச்ச… சைக்கிளையே உன்னால பேலன்ஸ் பண்ண முடியாது. கீழ விழுந்து முட்டிய உடச்சிட்டு வந்திடுற. இதுல இந்த பைக்க எடுத்தா உங்க கால உடச்சிட்டு, அடுத்தவெ மேலையும் ஏத்தி கொல பண்ணிருப்ப”
இதுவரை அப்பா பெண். கார்த்திப்பாவின் செல்லம் என்று நினைத்து வந்தளுக்கு, தான் ஜோஹதாவின் அன்பிற்குரியவள் என்ற எண்ணம் அவளைத் தாயன்பில் முத்துக்குளிக்க வைத்தது.
வேகமாக ஃபோனை எடுத்தவள் தாயிடம் சில மணி நேரம் பேசி விட்டு தான் வைத்தாள். அதுவும் உஷாவின் திட்டால் முகம் மலர்ந்தது.
பின் சிரிப்படியே இந்தக் கடிதம் யாருடையது? எப்படி இங்கு வந்தது என யோசிக்க? அங்கிருந்த சோஃபாவில் கார்த்திகேயனின் போர்வை இருந்ததை கண்டாள். அங்கு தான் இரவு துயில் கொண்டுள்ளான் என்று புரிந்தது.
உறக்கம் வராத நிலையில் கையில் எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்து விடுவான் கார்த்திக். இன்றும் அப்படி என்று சொல்லியது அருகில் இருந்த புத்தகம்.
நேற்றிரவு ருத்ராவுடன் இருந்ததால் கார்த்திக் சோஃபாவில் உறங்கியுள்ளான்.
ருத்ராவின் நினைப்பு வர புன்னகைத்த படியே பத்தகத்தையும் போர்வையையும் எடுத்து கொண்டு கார்த்திக்கின் கபோர்டில் அதை வைத்தாள். அப்போது தான் கண்டாள் அந்த லேமினேஷன் படத்தை.
தன் தந்தைக்கு அருகே தாயில்லாது வேறு பெண்ணைக் கண்டவளுக்கு ஆத்திரம் தான் வந்தது. ‘யார் அவள்?. என் தாயின் இடத்தை அபகரித்துக் கொண்டு நிற்பது’ எனக் கோபம் மேலோங்க… கார்த்திக் ஜோஹிதாவை வஞ்சித்ததாக பட்டது அவளுக்கு. அதிலும் அந்த பெண் அணிந்திருந்த மூக்குத்தி. கோபத்தின் உச்சம் எனலாம்.
வாசு, அதே போன்றொரு மூக்குத்தியை தான் அணிந்திருந்தாள். யாரும் அவளைக் கட்டாயப்படுத்தலாம் இல்லை. தன் பத்து வயதில் 'மூக்கு குத்திக்கவா கார்த்திப்பா? ' எனக் கேட்ட வாசுவிற்கு எந்தப் பக்கத்திலிருந்தும் எதிர்ப்பு வரவில்லை.
எக்ஸ்செப்ட் உஷா.
'அவரோட காதலி ஞாபகாத்தத்துல தான் நான் கேட்டதும் சரின்னு சொன்னாரா?. ' என்ற கோபத்தில் அறையைத் தலைகீழாக மாற்றியவள். அந்த பைக்கையும் தன்னால் முடிந்த வரை அடித்து உடைத்தும் விட்டாள். ஆனாலும் கோபம் தாளாமல் வீட்டை விட்டு சென்றாள்.
பசி தெரியவில்லை. குளிர் தெரியவில்லை. "கார்த்திப்பா பக்கத்துல எப்படி வேற ஒரு பொண்ணு இருக்கலாம். அதுவும் கார்த்திப்பா அந்த பொண்ணு கட்டிப்படிச்சி முத்தம் குடுத்திட்டு இருக்காரு. ஜோஹிம்மாவ தவிர வேற யாருக்கும் கார்த்திப்பா சொந்தம் கிடையாது. கார்த்திப்பா எப்படி இத பண்ணாரு? அவருக்கு எப்படி ஜோஹிம்மாக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சி?"
இதை தவிர வேறு எதையும் சிந்திக்காது அமர்ந்திருந்தவளைத்தான் ருத்ரா தேடி கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளான்.
தந்தை மகளின் வாக்குவாதங்களை கேட்காது ஹாலில் அமர்ந்திருந்தனர் அனைவரும்.
" ருத்ரா… என்ன நடக்குது இங்க? " என்றார் சிவ்ராம்.
" Nothing to serious dad. everything is our hand. don't worry. " என்றவனை முறைத்து பார்த்தபடி இருந்தாள் தாரிகா.
"ஹனி அவனை ஏன் மொறச்சி பாத்திட்டே இருக்க. அவனே பாவம் தன்னோட லவ்வர் அழுகுறத பாக்குறோமேன்னு வருத்ததுல இருக்கான். நமக்குப் பிடிச்சவங்க நம்ம முன்னாடி கண்ணீர் சிந்தினா... அது எவ்ளோ வேதனையா இருக்கும்னு தெரியுமா? " என்றான் க்ரிஷ். உண்மையான வருத்ததுடன்.
"தெரியும் க்ரிஷ். ஆனா, எங்க ஊருல ஒரு பழமொழி இருக்கு. பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலயும் ஆட்டுறான்னு. அதாவது நம்மலே தள்ளியும் விட்டுட்டு எந்திரிக்க கையும் குடுக்குறது. அந்த மாதிரி தான் இருக்கு இந்தக் காட்சி. "
"நீ சொல்ல வர்றதோட அர்த்தம். தேவா தான் வாசுவோட இருந்த நிலைக்கு காரணம்னு சொல்றீயா!. "
"எஸ்…"
" ஹெவ்?. "
" எனக்கு அப்படித்தான் படுது. ஏன்னா உந்தம்பி அப்படி பட்ட ஆளு தான். அன்னைக்கி கார்த்திக் அங்கிள் கூட எதுக்குச் சண்ட போட்டான்னு நம்ம யார்க்கிட்டையும் சொல்லல. சரி உனக்கும் வாசுக்கும் கல்யாணம் பேசிருக்கோம்னு சொல்லும் போது வேண்டாம்னும் சொல்லல. ஓகேவும் சொல்லல.
மூணு மாசம் கழிச்சி இதப் பத்தி பேசுங்கன்னு தள்ளிப்போட்டான். வாசு மேல கோபமா இருந்தான். அப்றம் திடீர்னு எந்த மேஜிக் மேன் மேஜிக் பண்ணானோ தெரியல கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றான். வாசு கூட ஜோடி போட்டுட்டு ஊர் சுத்திறான்.
இப்ப… இப்பயும் வாசு அழுகும் போது அவனுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. அத இல்லன்னு சொல்லல. பட்... அந்த வேதனையையும் தாண்டி அவனுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம். எதையோ சாதிச்ச ஒரு உணர்வு. என்னால மட்டும் தான் அதபீ பாக்க முடியும். உங்க யாருக்கும் தெரியாது. " என்றாள் தாரிகா.
ஏனெனின் கார்த்திக்குடன் அவனுக்கு இருக்கும் பனி போர் வீட்டார் அறிந்த ஒன்று. வாசுவின் முகத்திற்காகக் கூட அவன் கார்த்திக்கை பாவம் பார்க்கவில்லை.
என்ன நடந்தாலும் அவனுக்கு அவனின் பிஸ்னஸ் மிகவும் முக்கியம். அப்படி இருக்கையில் நேற்றில் இருந்து எந்த தொழிலையும் கவனியாது. ஏன் நிச்சயம் முடியும் வரை அவனைத் தொந்தரவு செய்ய கூடாது… எதுவாக இருந்தாலும் க்ரிஷ்ஷை வைத்து சமாளித்துக் கொள்ளும் படி சிவ்ராமிடம் தேவா கூறியிருப்பது தாரிகாவின் சந்தேகத்தை எழுப்பியது.
"இவெ அப்படி என்ன ப்ளான் போட்டிருப்பான்?. ம்… உங்களுக்கு தெரியுமா?" எனக் கணவனைக் கேட்க,
"எனக்குத் தெரியாத ஒன்ன பத்தி தெரியுமான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்வேன். " என்றவனைத் தாரிகா முறைக்க,
" கண்டிப்பா வாசுவோட கண்ணீருக்கு அவெ காரணமாக இருக்க மாட்டான். அது மட்டும் தெரியும் எனக்கு. He loves Vasu. "
"ஆனாலும்... "
"நீ எப்பயுமே அவன சந்தேகமாகவே பாரு.! " என்றவன் எழுந்து செல்ல,
"எனக்கு மட்டும் தான் அவன நல்லா தெரிஞ்சிருக்கு. " என வாசு இருக்கும் அறையின் கதவைப் பார்த்தபடி அமர்ந்திருந்த தேவ்வை இவள் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
நம் தாரிகா ரொம்ப சரியாகக் கணித்து வைத்திருக்கிறாள் தேவ்வை. ஏனெனில் கார்த்திக்கும் அந்த ஜோவும் இருக்கும் அந்தப் புகைப்படத்தையும், ஜோ எழுதிய கடிதத்தையும், ஜோவின் பெயரில் கார்த்திக் நடத்தும் தொண்டு நிறுவனத்தைப் பற்றியும்… பல இருக்கிறது. நேற்று இரவு வாசுவைப் பார்க்க வந்த போது அவளின் பார்வையில் படும் படி அனைத்தையும் வைத்தது அவன் தான்.
ஃபோட்டோ, லெட்டர், டிரெஸ்ட் அதை மட்டும் தான் பாத்தாள். மற்ற எல்லாத்தையும் தேடி பிடித்து பார்க்கும் முன் வாசு கார்த்திக்கின் மீதிருந்த சந்தேகத்தை உறுதி படுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவனுக்குத் தெரியும் வாசுவிற்கு, கார்த்திக்கின் இளமை காலம் பற்றி தெரிந்தால் அவள் எரிமலையாய் வெடித்துவிடுவாள் என்று. என்ன நிகழ்ந்தது என்ற முழு உண்மையும் தெரியாது மேலோட்டமாக புகைப்படத்தைப் பார்த்ததற்கே இந்த சீற்றம் என்றால் இருவரின் முழு கதையும் தெரிந்தால். அதை நினைக்கும் போது ருத்ராவிற்குக் கவலையாக இருந்தது. அவனுக்கே சில உண்மைகள் தெரியாது. தெரிய வேண்டி இருக்கிறது. அது என்ன உண்மை?. யார் தான் சொல்வது?.
கார்த்தி…
அவனால் மட்டுமே முடியும்.
"யார் அது.? யார் அது?. உங்களுக்கு அந்த பொம்பளைக்கும் என்ன சம்மந்தம். கார்த்திப்பா உங்ககிட்ட தான் கேக்குறேன். பதில் சொல்லுங்க." எனக் கார்த்திக்கிடம் விடாது வாசு கேட்டுக் கொண்டே இருக்க, கார்த்திக் அசையாது பழைய நினைவுகளை நினைத்த படி மலை போல் நின்றான்.
அது கோபத்தை அதிகரிக்க அந்த புகைப்படத்தை அவனின் கையில் இருந்து பிடுங்கி எறிந்தாள் வாசு. அது தரை தொடும் முன் பாதுகாப்பாய் பிடித்தவனின் செவிகளில்,
'அந்த கருப்பு கவுன போட்டுட்டு, தலைல அந்த சிவப்பு தொப்பிய போட்டுட்டு, அந்தக் காகித சுருள நான் உங்கையால… என்னோட கார்த்தி மாமா கையால… உன்னோட ஜோ வா. வாங்கணும்னு ஆசப் படுறேன் கார்த்தி மாமா. நடக்குமா?' என்ற ஜோவின் குரல் கேட்க, மகளிடம் எதுவும் சொல்லாது வெளியேறினான்.
கனத்த மனதுடன் அறையை விட்டு வெளியே வந்தவன் சிவ்ராமிடம் சென்று இன்றைய நிகழ்விற்கு வருத்ததை தெரிவித்து விட்டு வாசுவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு வெளியே செல்ல முயன்றான்,
" மிஸ்டர் கார்த்திகேயன், வாசுவ இங்க விட்டுட்டு நீங்க எங்க கிளம்பிட்டீங்க? " எனத் தேவ்வின் நக்கலான குரல் வந்து விழுந்தது.
எங்கு செல்ல போகிறான் என்று தெரிந்தே அதைக் கேட்டான்.
அவனைத் திரும்பி பார்த்தவன், அவனின் அருகில் சென்று, " அதா நீ வின் பண்ணிட்டியே. நீ கேட்டத செய்ய போறேன். உங்கிட்ட சொல்ல தேவையில்லை. ஆனாலும்… நான் திரும்பி வர்ற வர, வாசு என்னோட பொறுப்பு. வர்ற வரைக்கும் மட்டும் தான். " என்றவன் திரும்பி ஓரிரு அடி எடுத்து வைத்திருப்பான்… பின் மீண்டும் ருத்ராவின் முன் வந்தான்.
நொடியும் தாமதிக்காது அவனின் கன்னத்தில் தன் கரத்தை ஆழப் பதித்தான் கோபமாக.
அதைப் பார்த்த அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். சிவ்ராம் கோபமாக வாய்த் திறக்கும் முன் தேவ் வேண்டாம் என்றான் கண்களால்.
"எம்பொண்ண அடிக்கிற உரிம உனக்கு என்னைக்குமே கிடையாது. ஈவன் நீ அவளுக்கு லவ்வர்… ஹஸ்பெண்டுன்னு யாரா இருந்தாலும் கிடையாது. இதுவே கடைசியா இருக்கட்டும். அடுத்து எம்பொண்ணு அடிக்க நினைச்சா... நிச்சயம் உன்னை உயிரோட விட மாட்டேன். " என்றவன் வேக நடையுடன் அங்கிருந்து சென்றான்.
தேவ்வின் இதழ்கள், ‘இந்த வயசுலயும் வலிக்கிற மாதிரி அடி குடுக்குற அளவுக்கு மனுஷன் ஸ்டாங்காத்தான் இருக்காரு.’ என்று நினைத்து விரிந்தன.
வாயிலை அடையும் முன்னரே வாசுவின் குரல் கேட்டது.
" கார்த்திப்பா… கார்த்திப்பா... " எனக் கத்தியபடி நடந்து வந்தவளைத் தாரிகா தான் பிடித்து அமர வைத்தாள். விடாது அழுது கொண்டே அவள் இருக்க,
ருத்ராவிற்கு யாரோ தன்னைத் தூக்கி சுடுகலனில் வைத்து நெருப்பு மூட்டி விட்டது போலும் இருந்தது. தன்னைச் சுற்றி அனல் மட்டுமே இருப்பது போலும் ஓர் உணர்வு உண்டாகியது.
சொல்லப்போனால் அவன் இந்த வெற்றியை சம்பெயின் பாட்டிலை உடைத்து கொண்டாடியிருக்க வேண்டும். அதான் கார்த்திகேயனை வென்று விட்டானே. ஆனால் அது முடியவில்லை. வாசுவிற்காகவும் கார்த்திகேயனுக்காகவும் மனம் துடித்தது. வாசுவின் கண்ணீரை ஏற்க மனமில்லை என்றாலும், இதை அவன் செய்து தான் ஆக வேண்டும்.
கார்த்தி ஜோவின் காதல் உண்மை. அது வாசுவிற்கு புதிது. அவள் கார்த்திக்கின் உண்மை முகம் அறிய வேண்டும். அப்போது தான் கார்த்திகேயனிடம் அவன் போட்ட சவாலில் வெல்வான்... ம்… வென்று விட்டான்.
'அந்த சவால் என்னன்னு அடுத்த அத்தியாயத்துல ஃப்ளாஷ் பேக் போட்டிருக்கேன் படிச்சி தெரிஞ்சுக்கங்க. '
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..