அத்தியாயம்: 84
மணற்கடிகாரம் கேள்வியுற்றதுண்டா.
அது நம்மூரில் இருக்கும் உடுக்கை போன்ற வடிவத்தில் இருக்கும். அந்த உடுக்கைக்குள் சிறிது மணலை நிரப்பி வைத்திருப்பர். உடுக்கை வடிவ மணற்கடிகாரத்தை நிமிர்த்தி வைக்கும் போது அந்த மணல் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் மெல்லிய துளை வழியே அடுத்தக் குடுவைக்கு செல்லும். மேலிருக்கும் மணல் முழுதாகக் கீழே இருக்கும் குடுவைக்குள் செல்ல சில காலம் எடுக்கும்.
அது ஒரு நிமிடத்தை அளக்கும் கடிகாரமாக இருக்கலாம். அல்லது ஒரு மணி நேரத்தைச் சொல்லும் கடிகாரமாகக் கூட இருக்கலாம். ஜப்பானில் ஒரு வருடத்தை சொல்லும் மணற்கடிகாரம் இருக்கிறதாம். மேல் கண்ணாடி குடுவையில் இருக்கும் மணல் கீழே கொட்டி முடிக்கச் சரியாக ஒரு வருடம் எடுக்கும்.
‘இப்ப நமக்கு அது தேவையில்லை. நாம ருத்ராவ பாக்க போகலாம்.
வாசு, தன்னோட அப்பாவ மிரட்டுனான் சொல்லி ருத்ராவ ப்ரேக்கப் கூட பண்ணாளே. அந்தக் காட்சி இது…’
ருத்ரா கார்த்திகேயனுக்கு இடையே கண்ணாடி அறைக்குப் பின் நடக்கும் உரையாடல்.
ருத்ராவின் அலுவலக அறையில் இருந்தது, ஐந்து நிமிடத்தை அளக்கும் மணற்கடிகாரம். உள்ளே நுழைந்த உடனேயே அந்த அழகிய வேலைப்பாடுடன் கூடிய கண்ணாடி மணற்கடிகாரத்தைத் திருப்பி வைத்தான் அவன். அது முழுதாக மணலை கொட்டித் தீர்த்து விட்டது.
ஆனால், அவன் வாயை திறந்து வார்த்தைகளைக் கொட்ட வில்லை. எதிரில் அமர்ந்திருக்கும் கார்த்திக்கேயனை முறைத்தபடியே அமர்ந்திருந்தான்.
'இவெ வேலைக்கி ஆக மாட்டான். நாம தான் பேசணும் போலயே. ' என நினைத்த கார்த்திக், தொண்டையைச் சொருமி பேச தொடங்கினான்.
" பேசணும்னு சொல்லிட்டு அமைதியா உக்காந்திருந்தா என்ன அர்த்தம் மிஸ்டர் ருத்ரதேவ். இம்பார்ட்டனா எதுவும் இல்லன்னா. நான் பேசலாமா?." என்க, ருத்ரா வாயைத் திறக்கவில்லை.
"ஓகே நானே ஸ்டார்ட் பண்றேன். உனக்கு முரளி ராஜி எப்படிப் பழக்கம்?. எத்தன நாளா பழக்கம்?."
"உங்களுக்கு அது தேவையில்லாதது. "
" தேவையிருக்கே. நீ அவங்க ரெண்டு பேரையும் இந்தியால இருந்து இங்க வர வச்சிருச்சி என்னோட பொண்ணு… வாசு கூட அந்தக் குடும்பத்த தேவையில்லாம நல்லா பழக விட்டு வேடிக்கை பாத்திருக்க. ஏன். எதுக்கு இந்த மீடியேட்டர் வேலை பாக்குற. "
"அவங்களுக்கும் வாசு மேல உரிம இருக்கு. "
"நான் எம்பொண்ண சொந்தங் கொண்டாடுற உரிமைய அவங்களுக்கு குடுக்கல. உனக்கும் அது கிடையாது. "
" குடுக்கணும்னு அவசியம் இல்ல. எனக்கு வேண்டியத நானே எடுத்துப்பேன்." என்றவனை உற்று பார்த்த கார்த்திக்.
"இப்போதைக்கு அது முடியாது மிஸ்டர் ருத்ரதேவ். வாசு என்னோட பொண்ணு. நீ என்ன எதிர்பாத்து எங்குடும்பத்த, இந்த ஆறு மாசமா சுத்தி சுத்தி வர்றன்னு எனக்கு தெரியும். "
"உங்களுக்குக் கற்பனை வளம் ஜாஸ்தியா இருக்கும் போலயே " நக்கலாக.
"கற்பனை…. எஸ் கற்பனை தான். தி க்ரேட் பிஸி பிஸ்னஸ் மேன் ருத்ரதேவ், மீடியேட்டர் வேலை பாத்து பிரிஞ்சி இருக்குற நண்பர்கள சேத்து வைக்கிற மாதிரி ஒரு கற்பன வருது. அதே பிஸ்னஸ் மேன், பாக்குற பிஸ்னஸ் பத்தாதுன்னு எக்ஸ்ட்ராவா பேஸ்ட் மேன் வேலை பாத்து என்னோட வீட்டுக்கு டெய்லி லெட்டர் போட்டு சம்பாதிக்கிற மாதிரியும் ஒரு கற்பன வருது." என அவனின் வீட்டிற்குத் தினமும் வரும் கல்லூரி அழைப்பிதழை அவனின் மேஜையில் வைத்து ருத்ராவின் விழிகளை உற்று பார்த்தான்.
" அதே ஆளு கொஞ்ச வர்ஷத்துக்கு முன்னாடி நேர்ல பாக்கலாம்னு சொல்லி எம் பொண்ண வர சொல்லிட்டு, எதுவும் பேசமா அன்னைக்கி போய்ட்டான். ஆனா இப்ப வந்து வந்து பேசி பழகும் போது எனக்கு வேற மாதிரியானக் கற்பனையத் தூண்டுது. என்னோட கற்பனை சரியானது தான மிஸ்டர் ருத்ரதேவ்?." எனச் சந்தேகமாக கேட்க,
"நான் எதுக்கு உங்க கற்பனைகளுக்கு பதில் சொல்லணும்?. "
" சொல்லித்தா ஆகணும். உனக்கு என்ன வேணும்? "
"உங்க நிம்மதி. " என்றவன் எழுந்து வந்து கார்த்திக்கின் முன் நின்றான்.
"உங்க சக்ஸஸ் ஃபுல் மேரேஜ் லைஃப் எனக்குப் பிடிக்கல மிஸ்டர் கார்த்திகேயன். " என்க, அவனை உற்று பார்த்த கார்த்திக்.
" உனக்கும் என்னோட ஜோக்கும் என்ன சம்மந்தம். " எனக் கேட்டான்.
ருத்ரா, கண்களில் கோபத்துடன் கார்த்திக்கைப் பாரத்து,
"உங்க ஜோ இல்ல அது. என்னோட வாணி. என்னோட வாணிக்கா. " எனக் கத்தியவன்,
" நியாபகம் வச்சிருக்கீங்க போலயே. உங்க முன்னாள் காதலிய, என்னோட வாணியக்காவ. நீங்களும் உங்க வைஃப் ஜோஹிதாவும் சேந்து சின்னாபின்னமாக்குன என்னோட வாணியக்காவ நியாபகம் எல்லாம் இருக்கா உங்களுக்கு….
அங்க இந்தியால ஒரு பொண்ணோட ஆசை, கனவுன்னு எல்லாத்தையும் சிதைச்சிட்டு. அந்தப் பொண்ண உருத்தெரியாம அழிச்சிட்டு. யாருக்கும் தெரியாம வந்து ஒழிஞ்சிக் கிட்டா சந்தோஷமா வாழ்ந்திடலாம்னு நினைச்சிங்களா?.
விட மாட்டேன். என்னோட வாணிக்காவ எங்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி... உம்பொண்ணு வாசுவ உங்கிட்ட இருந்து பிரிஞ்சி… உன்னையும் உன்னோட காதல் பொண்டாட்டியவும் நடு ரோட்டுல நிக்க வப்பேன். ரெடியா இரு. " என்று உணர்ச்சி பொங்க, நரம்புகள் விடைக்கப் பேச,
கார்த்திக்கின் உதடுகள் 'சின்னு' என்றன. மெல்லிதாக மிக மெல்லியதாக வந்த அந்தச் சத்தம் ருத்ராவின் காதில் கேட்டு மீண்டும் அவனைக் கத்த வைத்தது. ஆனால் கார்த்திக் அதை பொருட்படுத்தாது எழுந்து சென்று அவனின் சட்டையைப் பிடித்து இழுக்க,
‘இவனுக்கு இதே வேலையா போச்சி. எப்ப பாத்தாலும் ருத்ரா சட்டைய பிடிச்சிட்டு.’
“விடு என்னை. " என்று ஆங்கிலத்தில் உறுமி ருத்ரா திமிர, கார்த்திக் அவனின் சட்டைக்குள் இருக்கும் ஒரு செயினை எடுத்து, அதன் டாலரை பார்த்தான்.
"நினைச்சேன். நீ தான அது. ஃபங்ஷன்ல உன்னோட சட்டையப் பிடிக்கும் போதே சின்ன தா சந்தேகம் வந்துச்சி. பட் அது பிரம்மன்னு தோணுச்சி. இப்பத் தான் தெரியுது. நீ தான அந்த குட்ட வாத்து. " எனப் புன்னகையுடன் சொல்ல, ருத்ரா அவனிடம் இருந்து விடுபட்டு நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டு கார்த்திக்கைத் தீயாய் முறைத்தான்.
அவனுக்குக் குட்ட வாத்து என்ற சொன்னால் பிடிக்காதே. அதான்...
இரு கைகளாலும் அந்த ஈசி சேரின் இரு புறமும் இறுக பற்றி தன் கோப விழிகளால் கார்த்திகேயனை முறைக்க, கார்த்திக் அவனுக்கு எதிரில் இருந்த சேரில் வேகமாக வந்து அமர்ந்து,
"ஆமா நீ ஏன் இன்னும் வளராம அப்படியே இருக்க. " என மிக முக்கியமான சந்தேகத்தை கேட்க,
"இப்ப அது முக்கியமா?. " என்க.
"இல்ல தான். இனி நீயே நினச்சாலும் வளர்றது முடியாது தான். பட் வளந்திருந்திருக்கலாம். " என ருத்ராவைத் தன் கண்களால் அளக்கத் தொடங்கினான். இருபத்தி எட்டு வயது இளைஞனாக இல்லை. தன்னை மிரட்டும் ஐந்து வயது சிறுவனாக.
நினைவுகள் பின் நோக்கி சென்றது கார்த்திகேயனுக்கு.
" இதெல்லாம் ரொம்ப ஓவர். ஒரு டாலருக்காக என்னை ரெண்டு நாளா கடை கடையா அழைய விடுற பாறேன். " எனக் கார்த்திக்கின் குரல் சலிப்புடன் வந்தது.
"ம்ச்... என்ன கார்த்தி மாமா!!. தனியாவா அழையிற. கூட நானும் இருக்கேன்ல. " என்றாள் ருத்ராவின் வாணி. கார்த்திக்கின் ஜோ.
அவனின் தோளில் இடித்து செல்லமாக மாமா என்க,
"ம்... இப்ப நான் உனக்கு மாமனா மாறிட்டேன். மத்த நேரம் கார்த்தி கார்த்தின்னு பேரு வச்சவ கணக்கா கூப்பிடுவ. "
" ஆமா… நான் தானா உனக்கு பேரு வச்சேன். ஏன்னா எனக்குள்ள உன்னோட எல்லா உறவும் அடங்கி இருக்கு. அம்மா, அத்தை, அப்பான்னு எல்லாச் சொந்தமும் உனக்கு நான் தான். எனக்கு நீதான். "
"நல்லா பேசுறடி. வசியம் வைக்கிறவ கணக்கா. ஆமா நீ வாங்கி தர்ற அந்த டாலர அந்த குட்ட வாத்து போடுவானா என்ன?. ஏன்னா அவெ பெரிய இடம்னு நீயே சொல்லிருக்க. நல்ல வசதியோட இருக்குற பணக்கார வீட்டு பன்னிக் குட்டி.” என்றவனை அவளை முறைக்கவும்,
“கன்னுக்குட்டி. போதுமா… அவெ பெரிய இடம்... அப்படி இருக்கும் போது. எதுவுமே இல்லாத நாம இத அவனுக்கு குடுத்தா… மதிச்சி வாங்கி போட்டுப்பானா?. "
" கார்த்தி... என்னோட சின்னு பரிசு பொருள பாக்க மாட்டான். பரிசு குடுக்குறவங்களத்தான் பாப்பான். " என்றவளை ஏற இறங்க பார்த்தான் கார்த்தி.
"ஆனாலும் அஞ்சி வயசு பொடியனுக்கு நீ குடுக்குற பில்டப் அதிகம் ஜோ. ஆமா ஏன் அவெ மேல உனக்கு அப்படி ஒரு பாசம். உன்னோட ரத்த உறவு கூட கிடையாதே. நீ வேலை பாக்குற வீட்டுக்குக் கெஸ்ட்டா வந்து, கொஞ்ச நாள் இருந்துட்டு வெளிநாட்டுக்கு போய்டுவான். அவனுக்கு தங்க நக குடுக்குற அளவுக்கு அவெங்கிட்ட அப்படி என்ன இருக்கு?."
" என்னோட சின்ன வயசுல எங்கப்பத்தா கதை சொல்லி கேட்டிருக்கேன். அந்தக் காலத்து மகா ராஜா... இளவரசர்கள்... ஜமீன்தாருங்க எல்லாருமே ஒரு கம்பீரமான தோற்றத்துல இருப்பாங்களாம். அவங்க பார்வை, நடை, செயல்னு எல்லாமே தனித்துவமா இருக்குமாம்.
சின்னுவ முதல் மொற பாத்தப்பவே எனக்கு இளவரசெ மாதிரி தெரிஞ்சான். இந்த வயசுலயும் அவெ பேச்சு எப்பயும் கம்பீரமா இருக்கும். தெரியுமா... நடக்குறது, பாக்குறதுக்கு, பேசுறதுன்னு அவனோட ஒவ்வொரு செயலையும் நான் ரசிப்பேன். வேலைக்கார பொண்ணு மாதிரி என்னை ஒரு நாளும் நடத்துனது இல்ல. அக்கா அக்கான்னு தான் சொந்தங் கொண்டாடுவான். " என்றவளுக்கு சின்னு என்ற ருத்ரா இளவரசன் தான்.
" வைரத்துலயும் வைடூரியத்துலயும் குளிக்கிற அவெ நீ குடுக்குப்போற இந்த சின்ன டாலர போடுவான்னு நினைக்கிறீயா?. "
"ம் கண்டிப்பா போடுவான். இது பிஞ்சே போனாலும். அவெ கழுத்த விட்டு இறங்காது. " என உறுதியுடன் கூறினாள் வாணி.
அது நிஜம் என்று இப்போது உணர்ந்தான் கார்த்திகேயன். அதே சமயம் ருத்ரா வாணியின் மீது வைத்திருக்கும் பாசமும் புரிந்தது கார்த்திகேயனுக்கு.
"சோ... நீ பழி வாங்க வந்திருக்க. "
"இல்ல... நியாயம் கிடைக்க. ஒன்னும் தெரியாத ஒரு சின்னப் பொண்ணு மனச கலச்சி. காதல் நாடகம் போட்டிங்களே... அந்த பொண்ணுக்கு நியாயம் வேணும். உங்க கிட்ட கேட்டா அது கிடைக்காதுன்னு எனக்கு தெரியும். அதான் நானே வாங்கி தரலாம்னு வந்திருக்கேன்.
அந்த ஊரு... அவங்க குடும்பம்… காலேஜ்ல கூட படிச்சவங்க… எல்லாருமே வாணியக்கா யார் கூடையோ ஊர விட்டு ஓடி போய்ட்டதா பேசிக்கிறாங்க. ஓடுகாலின்னு ஒழுக்கங்கெட்டவன்னு மட்டுமில்ல இன்னும் நிறைய அசிங்கமா… கேவலாம பேசிக்கிறாங்க. இப்ப வரைக்கும் பேசிட்டுத் தான் இருக்காங்க.
என்னோட வாணியக்கா அப்படி கிடையாது. அத நான் நிறுபிக்கணும். அதுக்கு நீங்க இந்தியா வரணும். உங்க வாயால உங்களுக்கும் வாணிக்காக்கும் இடைல இருக்குற உறவ, வாணிக்காவ தப்பா பேசுன அத்தன பேர் முன்னாடியும் சொல்லணும். வாணிக்கா மேல எந்த தப்பும் இல்ல. அவங்க கலங்கம் இல்லாதவங்கன்னு சொல்லணும். " என அந்த அழைப்பிதழைக் கார்த்திக்கின் முன் வைத்தான்.
"அதுக்காகத்தான் அந்த காலேஜையே விலபேசி வாங்கி. ஒரு விழா ஏற்பாடு பண்ணிருக்க. சரியா. "
"எஸ்... நான் தான் வாங்கிருக்கேன். அந்த ஃபங்ஷ்னல. வாணியக்காவோட ஃபேமிலி ஃப்ரெண்டுஸ்னு எல்லாரும் வருவாங்க. முக்கியமா அவங்க ஆசைப்பட்டு படிச்ச படிப்போட டிகிரிய வாணிக்காவோட ரிலேஷன்னா உங்க கையால வாங்கி. எல்லார் முன்னாடியும் வாணியக்கா மேல விழுந்த அவப்பெயர போக்கணும்னா. நீங்க அங்க வரணும்." என்க, கார்த்திக்கின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாது பாறையாய் இறுகி இருந்தது.
"என்னால முடியாது. " என்றான்.
இதுவரை பட்ட காயங்கள் போதாதா! இனியும் அங்கு சென்றால் காயப்படபோவது தான் மட்டுமல்ல தன் குடும்பமும் தான் என்பதால் மறுத்தான் அவன்.
" ஏன்? விரட்டி விரட்டி என்னோட வாணியக்காவ காதலிச்ச நீங்க, அந்தக் காதல காப்பத்திக்க தெரியாத கோழன்னு எல்லார் முன்னாடியும் ஒத்துக்க பயமா இருக்கா. "
"எப்படி வேணும்னாலும் வச்சிக்க. ஆனா என்னால அங்க வர முடியாது. " என்க, மீதி உரையாடலைத்தான் வாசு கேட்க நேர்ந்தது.
கார்த்திக்கை எப்படியாவது இந்தியா வரவைக்க வேண்டும். அந்த விழாவில் வாணி வாங்காத சர்டிபிகேட்டைக் கார்த்திக் கைகளால் வாங்க வேண்டும். அதை விட முக்கியம் வாணிக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.
வாணி சாடையில் இருந்த வாசுவை பார்த்த முதலே காதல் வயப்பட்டவன், கார்த்திகேயனின் மகள் என்பதை அறிந்ததும், அவன் கொண்ட ஆத்திரத்திற்கு அளவே இல்லாது போனது.
அன்று சந்திக்கலாம் என முடிவு செய்த காஃபி ஷாப்பில் கார்த்திக்கைக் கண்டதும் வாணியின் நினைவு வர, வாசுவிடம் பேசாது தவிர்த்துவிட்டு சென்றான் ருத்ரா.
அந்த சந்திப்பு அவனுள் வாணிக்கு என்ன ஆனது என்று கேள்வியை எழுப்ப, தேடிச் சென்றான் இந்தியாவிற்கு. அவள் வீடு, அவள் படித்த கல்லூரிக்கு என எங்கு தேடியும் அவள் ஊரை விட்டு சென்றது மட்டும் தான் பதிவாகி இருந்தது. வேறு எதுவும் தெரியவில்லை.
உயிருடன் உள்ளாளா இல்லை இறந்து விட்டாளா எனக் கேள்விக்கானப் பதிலை தேடியவனுக்கு பதிலாக கார்த்தியேனுடனான வாணியின் காதல் தெரியவந்தது. அதனால் அவன் கார்த்திகேயனைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றான்.
ஏற்கனவே ஜோஹிதாவுடன் காதல் வயப்பட்டிருந்த கார்த்திக், அறியா பெண் வாணியை ஏமாற்றியுள்ளான் என்று தான் அத்தனை காலம் நினைத்திருந்தான். ஆனால் அப்படி அல்ல என்பதை கார்த்திக்கின் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டான். இருவரின் வாழ்க்கையும் சுழலில் சிக்கி சின்னாபின்னமாதை கார்த்திக்கின் நண்பன் அப்சத்தின் மூலம் அறிந்தான்.
அந்த சுழலில் இருந்து கார்த்திக் மீண்டு விட்டான். வாணி மீளாது மூழ்கிவிட்டாள். உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதே சந்தேகம் தான். ஆனால் அவள் மேல் விழுந்த பலிக்குச் சாவு என்பதே இல்ல. அதைத் துடைக்கும் கடமையும், பொறுப்பும் கார்த்திகேயனுக்கு மட்டுமே உள்ளது என்று நம்பினான்.
அப்சத் தான் கார்த்திக், கல்லூரிக்கு வந்தால் வாணியின் மரணத்திற்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கலாம் என்றான். அதனால் தான் ஆறு மாதங்களாக கார்த்திக்கின் குடும்பத்தைச் சுற்றி சுற்றி வந்துள்ளான்.
தனக்கும் கார்த்திகேயனுக்கும் இடையே சிக்கி வாசு காயப்படகூடாது என்று தான் நினைத்தான். ஆனால் முடியவில்லை. அவளால் மட்டும் தான் கார்த்திக்கை அசைக்க முடியும். இப்போது வாசுவின் கண்ணீர் மனதை கரைத்தாலும். வாணியின் கலங்கம் துடைப்பது தன் முதல் கடமையாக பட்டது ருத்ராவிற்கு…

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..