அத்தியாயம்: 85
" வாசு இப்படியே அழுதிட்டே இருந்தா எப்படிம்மா காய்ச்சல் குறையும். இந்தா இத குடி. " எனத் தாயன்புடன் ஊட்டினார் அமிர்தா. அவரின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து அவர் தந்த கஞ்சியை முழுதாக குடித்தவள், மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தாலும் கண்ணீரை மட்டும் நிறுத்தவில்லை. அணையிட்டு தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு வடிந்து கொண்டே இருந்தது.
" ஸ்வீட்டி…. அழாத... " என ருத்ரா வந்து அவளை அணைத்துக் கொள்ள,
"கார்த்திப்பா எங்கிட்ட எதுவுமே சொல்லாம போய்ட்டாரு ருத்ரா. எங்க போனாருன்னு கூடச் சொல்லல. எங்கிட்ட பேசாம போய்ட்டாரு. எனக்குக் கார்த்திப்பாவ பாக்கணும். ஜோஹிம்மாவையும் பாக்கணும். அந்தப் பொண்ணும் கார்த்திப்பாக்கும் இடைல என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கணும். " என்று சொல்லி சிறு குழந்தை போல் அழுதாள்.
"அப்ப தெரிஞ்ச யாரகிட்டையாது கேட்டு தெரிஞ்சிக்கலாம். " என்க, அவள் முகம் தூக்கி அவன் முகம் பார்த்தாள்.
"வாசு உங்கப்பா லைஃப் ஒன்னும் ராக்கெட் சைன்ஸ் கிடையாது. யாராலயும் புரிஞ்சிக்க முடியாத அளவுக்குச் சிக்கலா இருக்க. அவர நல்லா தெரிஞ்சவங்க கிட்ட கேட்டா என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிடப்போது. இதுக்கு போய் சின்ன பிள்ளை மாதிரி அழுதிட்டு. " என்று கன்னத்தைத் துடைத்து விட்டான் ருத்ரா.
"என்னை உன்னால இந்தியா கூட்டீட்டு போக முடியுமா ருத்ரா. ப்ளிஸ்... " என இறைஞ்ச,
"கூட்டீட்டு போன்னு ஆர்டர் போடு ஸ்வீட்டி. கெஞ்சி கேட்காத. பிகாஸ் நீ என்னோட பெட்டர் ஆஃப். என்னோட சரி பாதி. உனக்கு எல்லா உரிமையும் உண்டு. " என்று அவளின் நெற்றில் இதழ் பதிக்க, அவளின் உடல் சூட்டை இதழ்கள் உணர்ந்தன.
" அப்ப இப்பவே போலாம். "
" ம்... போலாம். ஆனா உன்னோட காய்ச்சல் குறையாம உன்னால பறக்க முடியாது. இப்போதைக்கி மாத்திர போட்டுட்டேல. தூங்கு. நீ கண் முழிக்கும் போது நீ நினைச்ச இடத்துல இருப்ப. ம்…. " என அவளுக்கு போர்வை போர்த்தி விளக்கணைத்து விட்டு சென்றான்.
ருத்ராவுக்கு வாசுவைப் பார்க்க வருத்தமாக இருந்ததாலும் வாணிக்கு என்ன ஆனது என்று தெரிய வேண்டும். அடுத்து செய்ய வேண்டிய செயல்களைச் சிந்தித்தபடி வந்த அவனுக்குத் தந்தையின் கோபக் குரல் கேட்டது.
கார்த்திகேயனைத் தான் திட்டிக் கொண்டு இருந்தார் சிவ்ராம். தன் கண் முன்னே தன் மகனை அடித்து விட்டு சென்ற அவனைச் சும்மா விடக்கூடாது என ஆவேசமாக கத்தி திட்டியவர் யாருக்கோ ஃபோன் செய்ய,
" டாட்… ஏன் இவ்வளோ கோபம். காம் டவுன். " என்றான் ருத்ரா.
" எப்படிச் சும்மா இருக்கச் சொல்ற தேவா. பிறந்ததுல இருந்தே உன்னை நான் கை நீட்டுனது இல்ல. உன்னை மட்டுமில்ல என்னோட பிள்ளைங்க மூணு பேரையும் நான் செல்லமாத்தா வளத்தேன். ஆனா இன்னைக்கி… எவனோ ஒருத்தே வந்து எம்மகன எங்கண்ணு முன்னாடியே அடிச்சிட்டு மிரட்டீட்டு உயிரோட போயிருக்கான். அவன... " என்றவருக்குக் கார்த்திக் மீது அதீத கோபம் என்று தான் சொல்லவேண்டும்.
" எவனோ இல்ல ரொம்ப சீக்கிரம் நமக்கு நெருங்குன சொந்தமா மாறப் போறவரு. " எனச் சிறிய குரலில் சொன்ன அமிர்தாவை முறைத்தார் சிவ்ராம்.
அமிர்தாவின் முகத்தில் பதைபதைப்பு தெரிந்தது. கணவனின் கோபம் மகனின் திருமணத்தைப் பாதிக்குமோ என்ற கவலை தான் அது.
அவருக்கு வாசுவை மட்டுமல்ல கார்த்திகேயனின் குடும்பத்தையும் பிடித்திருந்தது. 'உங்க பையெ அந்த தம்பியோட மகள அடிச்சான். அந்த தம்பி உங்க மகெ கன்னத்த பதம் பாத்திட்டான். இதைச் சொன்னால் என்ன ஆகும். ஒத்துக்க மாட்டனுங்க. அதுனால அமைதியா இருக்க வேண்டியது தான். ' என மௌனமாக இருக்க,
"Stop everything. Cancel them all. எல்லாத்தையும் நிப்பாட்டணும். " என்றார் சிவ்ராம்.
" எதைச் சொல்றீங்க? "
"Engagement-டதான் சொல்றேன். " என்க, அமிர்தா மகனிடம் ஓடிச் சென்றார்.
" தேவா உங்கப்பா என்ன சொல்றாருன்னு கேட்டியா. " என்றபடி.
"ம்… கேட்டேன் மாம். டாட் சொல்றதும் கரெக்ட் தான். இந்த எங்கேஜ்மெண்ட் தேவையே கிடையாது. அடுத்த வாரம் நடக்க போற அத ஸ்டாப் பண்ணிடலாம்."
" தேவா... " என அதிர்ந்து போய் பார்க்க,
" அந்தத் தேதில கல்யாணத்தையே வச்சிப்போம். அப்ப எங்கேஜ்மெண்டுக்கு அவசியம் இருக்காது தான. எதுக்கு எங்கேஜ்மெண்ட்ட ஒரு நாள் பண்ணி கல்யாணத்த வேற நாள்ன்னு டயம் வேஸ்ட் பண்ண. நேரடியா கல்யாணமே பண்ணிக்கிறேன். " என்க, அமிர்தா புன்னகைத்தார். ஆனால் சிவ்ராமிற்குத் தான் பிடிக்க வில்லை.
' எவ்ளோ திமிரிருந்தா எம்பையனயே அடிப்பான். அவனோட திமிர அடக்காம விடக்கூடாது.' என்றது அவரின் மனம்.
"டாட்... I need Vasu. I love her. " என்றவனின் முடிவுக்கு மறுப்பு சொல்லாது நின்ற தந்தையைச் சமாதானம் செய்து புறப்பட்டான்.
எங்கே?. இந்தியாவிற்கு... டில்லிக்கு... தன் ப்ரைவேட் ஃப்ளைட்டில் வாசுவை அழைத்துக் கொண்டு சென்றான். உடன் வருகிறேன் என்று சொன்ன க்ரிஷ்ஷிடம்.
"போய் கல்யாண வேலைய பாரு. நான் இல்லங்கிறதுனால டாட்க்கு உதவி செய்ய உன்னை விட்டா ஆள் கிடையாது. நாள் கம்மியாத்தா இருக்குன்னு அரேஜ்மெண்ட்ஸ்ஸ அறைகுறையா பண்ணிடாத. எல்லாமே பக்காவா பிரம்மாண்டமா இருக்கணும்... " எனத் துரத்திவிட்டான்.
" இவெ போற போக்க பாத்தா கல்யாணத்துக்கு முன்னாடி ஹனி மூன கொண்டாடிட்டு தான் வருவான் போலயே. " என்ற க்ரிஷ்ஷின் முணுமுணுப்பு தேவ்வின் காதில் விழ,
"வாய்ப்பில்ல… அவளுக்கு நான் தான் அந்த ஃபோட்டோவ மிஸ்டர் கார்த்திகேயன் ரூம்ல வச்சி, அவக்கிட்ட கார்த்திகேயன போட்டுக் குடுத்ததுன்னு தெரிஞ்சா… என்ன நார் நாரா கிழிச்சி தொங்க விட்டுடுவா. இந்தத் திட்டத்த போட்டதுக்கு அப்றம் தான் கல்யாணத்துக்கே சம்மதம் சொன்னேன். உண்ம தெரியுறதுக்குள்ள அவள சொந்த மாக்கிடணும்." இது ருத்ராவின் மைண்ட் வாய்ஸ்.
கார்த்திகேயன் இந்தியா சென்றடையும் முன்னரே ருத்ரா வாசுவை அழைத்துக் கொண்டு டில்லியில் இறங்கி விட்டான்.
முதல் முதலில் இந்தியா வருகிறாள் வாசு. அது அவளுள் சிலிர்ப்பைத் தந்தது. சந்தோஷமாக இல்லாது ஏதோ ஒரு தவிப்பை அவளால் உணர முடிந்தது. கார்த்திக்கின் பாரா முகம் அவளுக்கு வேதனை தந்தது என்றால், தாயின் குரல் கேட்காதது கவலையைத் தந்தது. அவள் நேற்று முழுவதும் ஜோஹிதாவிற்கு முயற்சி செய்தால் தான். ஆனால் ஜோஹிதா எடுக்கவில்லை.
ஜோஹிதா, அவளின் அன்னையுடன் இருப்பதாக முருகுவும் உஷாவும் சொல்ல, பின் வாசு ஃபோன் செய்யவில்லை. பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் தாயையும் சேயையும் தொந்தரவு செய்ய மனமில்லை அவளுக்கு.
ஆனால் இப்போது தனித்து விடப்பட்டுவிட்டோமே, என்றுணரும்போது ருத்ரா அவளின் தோளணைத்து அழைத்துச் சென்றான். பொம்மை போல் ருத்ரா இழுக்கும் இழுப்பிற்கு எல்லாம் உடன் சென்றாள் அவள்.
வானுயர்ந்த கட்டிடம் தான் அது. பல அடுக்களை கொண்ட அந்த அப்பார்ட்மெண்ட் கொஞ்சம் பழையது தான். அது கட்டப்பட்டு முப்பது ஆண்டுகளை நெருங்கி விட்டது.
அனைத்து வசதிகளையும் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் ஒரு வீட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றான்.
அந்த வீடு மதன கோபால் சிவரஞ்சனி தம்பதியினருக்குச் சொந்தமானக் குடியிருப்பு. கதவைத் திறந்ததும் தன்யா வந்து வாசுவை அணைத்துக் கொண்டாள்.
" வாழ்த்துக்கள் வாசு. கடைசில உன்னோட லவ்வும் கைச் சேரப்போது. நீயும் எங்க சிவாஸ் ஃபேமிலில ஒருத்தியாகிட்ட. " எனப் புன்னைகையுடன் உற்சாகமாக வரவேற்க, வாசு மெல்லியதாக சிரித்து விட்டு சோர்வுடன் சோஃபாவில் அமர்ந்தாள்.
" என்னாச்சி தேவ்? ஏன் வாசு ஒரு மாதிரி இருக்கா?."
"அவளுக்கு உடம்புக்கு சரியில்ல. " என்றவனை ஏற இறங்க பார்த்தாள் தன்யா.
" நீ எதாவது பண்ணிய அவள?"
" என்னை பாத்தா உனக்கு எப்படித் தெரியுது?"
" வில்லன் மாறி இருக்கு. கோர்ட்டு சூட் போட்ட வில்லன். " என்றவளை முறைத்தபடி உள்ளே சென்றான் ருத்ரா.
" அத்தை மாமா வராமா நீ மட்டும் ஏதுக்கு தனியாக வந்த? இந்த வீட்டோட ஸ்பேர் கீ எங்கிட்ட இருக்கு. யாரும் வர வேண்டாம்னு சொன்னேனே. அப்றம் எதுக்கு தேவையில்லாம நீ வந்த உக்காந்திருக்க? நந்தி மாறி. "
" என்ன வேண்ணா சொல்லிக்க. உன்னையல்லாம் நம்பி பொண்ண தனியா விட முடியுமா?. அப்பாக்கும் அம்மாக்கும் கொஞ்சம் வேலை இருக்குன்னு சொன்னாங்க. ராசாத்திய வேணும்னா கூடக் கூட்டீட்டு போன்னு சொன்னாங்க. பட் அதக் கூட வச்சிக்கிறது, சைனேட கழுத்துல மாட்டிட்டு தொங்குறதுக்கு சமம். அதா தனியா வந்திட்டேன். அதுமட்டுமில்ல நீ எனக்குப் பண்ண லவ் சர்வீஸ்க்குக் கைமாற நான் எதாவது பண்ணணும்ல." என்க, வாசு புன்னகைத்தாள்.
" அவளுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அவள… " அவன் கூறியதை முழுதாக காதில் வாங்கும் முன் ஓடிவிட்டாள்.
" வாசு என்ன செய்து உடம்புக்கு. ஹாஸ்பிடல் போனீயா? ஃப்ளைட்ல வந்தது சேரலயா? இரு உனக்கு நான் குடிக்க எதாவது எடுத்துட்டு வர்றேன். " என வாசுவை உபசரிக்க கிளம்பிவிட்டார் தன்யா. தன்யாவின் துணை வாசுவிற்குள் இருந்த தனிமை உணர்வைப் போக்கியது.
" சின்ன வயசுல எங்களுக்கு உடம்புக்குச் சரியில்லன்னா ராசாத்தி கிழவி ஒரு கசாயம் வச்சி குடுக்கும். அது காலத்து கதைய பாட்டா பாடிக்கிட்டே சுடு தண்ணீல சுக்கு மிளகு நிலவேம்புன்னு என்னென்னத்தையோ போட்டு கசப்பா வச்சி குடுக்கும். வாய்க்கு நல்லாயில்லன்னாலும் காய்ச்சல் குணமாகிடும்.
இந்தா இதக் குடி. ஒரு நாளைக்கு த்ரீ ட்ரம்ஸ் குடிச்சா உடனே சரியாகிடும். " என டம்ளரை நீட்ட, வாசு முகம் சுளித்தாள். அவளுக்குக் கசப்பு பிடிக்காதே.
" எனக்கு வேணாம் தன்யா. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். சரியாகிடும். " எனப் படுத்துக் கொள்ள,
" குடிச்சிட்டு தூங்க. " என டம்ளரை முகத்தின் முன் நீட்டினாள் தன்யா.
'இவா விட மாட்டா போல இருக்கே. காப்பாத்து ருத்ரா. ' என்பது போல் அவனைப் பார்க்க, அவன் கையில் சாக்லேட்டை தினித்தான். நீ குடித்து தான் ஆக வேண்டும் என்ற பொருள் புரிய… ஒரே மூச்சாக குடித்து முடித்தாள். அப்போது ருத்ராவின் ஃபோன் சிணுங்க. அவன் வெளியே சென்றான்.
" தன்யா உன்ன பாக்க டேனியல் வந்தானே எங்க அவெ? " எனக் கேட்க, தன்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"எல்லாம் ஓகே ஆகுடுச்சா!. " என்றாள் வாசு பூரிப்புடன்.
"ம்... " என்றவள் டேனியலைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.
'நீ உன் காதலை முழுதாக நம்ப வேண்டும். ' என்ற ஜோஹிதாவின் வார்த்தை டேனியலுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. நேராக அவன் காண வந்தது மதன கோபாலையும் சிவரஞ்சனியையும் தான்.
அவர்களிடம் நடந்ததைக் கூறி தன்யாவை திருமணம் செய்து தர சொல்லி கேட்டான். அவர்கள் தன்யாவின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்பதாக கூறினர்.
தன்யா, டேனியலிடம் எதையும் மறைக்காது. குழந்தை என்ற ஒன்று இல்லை. அனைத்தும் நாடகம் என்ற உண்மை முழுவதையும் சொல்லி, இப்போதும் என்மீது காதல் இருக்கிறதா என்று வினவ.
" இருக்கு தயா. காலம் முழுக்க இருக்கும். அது மாறாது." என்றவனை அணைத்துக் கொள்ள, இருவரும் ஜோடி சேர்ந்து விட்டனர்.
" என்ன டக்குனு அவெ பண்ண தப்ப மன்னிச்சிட்ட. அவனும் உம்மேல கொல காண்டுல இருந்தான். உடனே மலை இறங்கிட்டானே எப்படி? உண்மைய சொன்னதும் நேசம் வந்திடுச்சா என்ன?. " எனக் கண் சிமிட்டினாள் வாசு.
" வாசு நமக்கு ரொம்ப பிடிச்சவங்க தப்பா… தவறா எதாவது பண்ணாலும். அத மறைக்காம நம்ம கிட்ட சொல்லும் போது. கோபப்படக்கூடாது. அவங்கள புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும். ஏன்னா சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மனுஷ என்ன வேணும்னாலும் பண்ண வைக்கும்.
டேனியல் வளந்த சூழ்நில அவன அப்படிப் பண்ண வச்சாலும். என்னால அவனப் புரிஞ்சிக்க முடிஞ்சது. நாங்க போட்ட நாடகத்துனால காயம் பட்டாலும், என்னோட சூழ்நிலைய அவனால ஏத்துக்க முடிஞ்சது. பிரச்சினை க்ளோஸ். அப்பா எங்க மேரேஜ்ஜ தை மாசம் வச்சிக்கலாம்னு சொன்னாரு. அதுக்குள்ள டேனியல் நல்ல வேலைல ஜாயின் பண்றேன்னு சொல்லிட்டு போயிருக்கான். "
"எங்க?. "
"அவனோட அம்பிஷன தேடி. wildlife photographer ஆகணுங்கிறது அவனோட ஏம்..."
"ஓ அதா நான் கால் பண்ணப்ப நாட் ரீச்சபுல்னு வந்துச்சா. " என்க, தன்யா புன்னகைத்தாள்.
"அத்தை. " என்றபடி ரோகிணி ஓடி வந்தாள் வீட்டிற்குள்.
" ஹேய் குட்டி சாத்தான். நீ எப்படி வந்த… உன்னை நான் சென்னைல தான விட்டுட்டு வந்தேன். " தன்யா.
"அப்பா அம்மா கூட வந்தேன் அத்தை. அதோ அம்மா." எனக் கரம் நீட்டி காட்ட, அங்கு ராஜி சர்க்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வந்தார்.
" வாசு… நல்லா இருக்கியாம்மா? " எனப் புன்னகையுடன் கேட்க, அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
தன் அன்னையை அன்று கண்டபடி பேசியவர் என்பதால் உண்டான கோபத்தை மறைக்காது காட்டினாள் வாசு.
" நல்லா இருந்தா என்ன? இல்லன்னா உங்களுக்கு என்ன!. கண்டவ பெத்த பொண்ணு கூடலாம் நீங்க சிரிச்சி நலம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்ல. " என வெடுக்கென பேச, ராஜிக்கு அது கோபத்தை தரவில்லை. புன்னகையைத் தான் தந்தது.
"அப்படியே வாணி மாறியே கோயிச்சிக்கிறா... இல்லையா முரளி?. " என ருத்ராவுடன் வந்து கொண்டிருந்த தன் கணவன் முரளி பார்த்து கேட்க, அவனும் அதை ஆமோதித்தான்.
இருவரும் வாசுவின் கோபத்தை பொருட்படுத்தாது அவளிடம் பேச…
" எதுக்கு ருத்ரா இவங்கள எல்லாம் கூட்டீட்டு வந்திருக்க. எனக்குப் பிடிக்கவே இல்ல. " என்றாள் வாசு.
" உனக்கு மிஸ்டர் கார்த்திகேயனுக்கும் ஜோக்கும் இடையில் என்ன நடந்ததுன்னு தெரியணுமா! வேண்டாமா!. " என்க அவள் தெரியவேண்டும் எனத் தலையசைத்தாள்.
"அப்ப இவங்க சொல்றத காது குடுத்து கேட்டுட்டு, ஈவ்னிங் ரெடியா இரு. உங்கப்பா அம்மா படிச்ச காலேஜ்க்குப் போக." என்றான் ருத்ரா.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..