முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 88


 

அத்தியாயம்: 88


" ஹேய்…. இங்க வா. உன்னைத் தான்… காதுல கேக்குதா இல்லையா…. வான்னே உன்னை…. ஹேய்…" கார்த்திக் தான், அழைத்தது வாணியை. ஆனால் அவளோ முரளியைப் பார்த்துவிட்டு தலை தெறிக்க ஓடியே விட்டாள். பின்னே யார் சுப்பு விடம் அடி வாங்குவது.


" மச்சி ஓடிட்டா... எவ்ளோ திமிரு பார்த்தியா… " கார்த்திக்


"இப்ப எதுக்கு நீ அவளக் கூப்பிடுற? " முரளி, கடுப்புடன் வந்தது குரல்.


"விசாரிக்கணும் டா. "


"என்ன விசாரிக்க போற? " அப்சத்.


"அது அந்தப் பொண்ணு நாலு நாளா என்னை உத்து உத்து பாத்திட்டே இருக்கு. அதான் ஏன்னு கேப்போம்…னு பாத்தா… நிக்காம போய்ட்டா. " கார்த்திக்.‌


" வேணும்னா நீ சிவப்பு கொடி காட்டு. ஸ்டாபிங் வந்திடுச்சின்னு நின்னாலும் நிப்பா. ஆமா உத்து உத்து பாக்க நீ என்ன கண்ணாடியா!. இப்படியும் ஒரு விசித்திரமான பிறவி நாட்டுக்குள்ள சுத்துதேன்னு அதிசயமாப் பாத்திருப்பா. அதைப் போய் விசாரிச்சி ஏன் தேவையில்லாம அசிங்கப்பட போற. " என்றது முருகு.


" அது எப்படி நாலு நாள்ன்னு அவ்ளோ கரெட்டா சொல்ற?. நீ அவள கண்கானிக்கிறியா?. " என அப்சத் கேட்க, கார்த்தி புன்னகைத்தான்.


" உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. அவள எதுக்கு நீ பாக்குற?. " என்றான் முரளி


"ம்ச்... அன்னைக்கி எங்கிட்ட காசு குடுக்குறப்ப அதோட கைல காயம் இருந்தது. ஒருவேளை நான் காசுன்னு கேட்டதால, அதக் குடுக்க யாருக்கிட்டையாது கேட்டு… அடி வாங்கிடுச்சோன்னு ஒரு கில்ட்டி. அதா அந்த பொண்ண அப்பப்ப… அப்பப்ப மட்டும் தான்டா… என்ன பண்ணுதுன்னு கவனிச்சேன். " கார்த்திக். அவனின் குற்ற உணர்வு உண்மையும் கூட தான்.


"காசு திருடினதுக்காகக் கூட யார்கிட்டையாது அடி வாங்கிருக்கலாம்ல. அது மூஞ்சிய பாத்தா அப்படித் தான் இருக்கு. இவள மாதிரிச் சில பொண்ணுங்க இந்த மாதிரி காலேஜ்க்கு வர்றதே நல்ல பணக்கார, அழகான பையனா பாத்து… காதலிச்சி செட்டில் ஆகத்தான். உன்னை மாதிரி நாலு பேருக்கு வலை விரிச்சி வச்சாலும் வச்சிருப்பா. அதுல ஒன்ன தேர்ந்தெடுத்து… கல்யாணம் பண்ணிப்பாளோ… இல்ல பண்ணாம கூட இருப்பாளோ...  அதுனால அந்தப் பொண்ணு மேல உம்பார்வைய வைக்காத. அது குணம் சரியில்லாத பொண்ணு. " என்றான் முரளி.


அவள் யாரை நிமிர்ந்து பார்த்தாலும் அவன் இப்படித்தா பேசுவான். சந்தேக புத்தி.


" அது எப்படி முரளி, முன்ன பின்ன பாக்காத, பேசி பழகாத பொண்ண பத்தி அக்குவேர் ஆணி வேரா உறுதியா சொல்ற!!. " என்ற முருகுவிடம் சிறு கோபம் இருந்தது.


" நான் இதுக்கு முன்னாடி படிச்ச காலேஜ்ல இவள மாதிரி நிறைய பேர பாத்திருக்கேன். ஒன்னுமே தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சிட்டு… ஆம்பளைங்க பரிதாப படுற மாதிரி டிரெஸ் போட்டுட்டு சுத்துவாளுங்க. கொஞ்சம் பேச ஆரம்பிச்சா போதும்.. ஒட்டி, உரசி, தாராளமாப் பழகி நம்ம உணர்ச்சிகளோட விளையாடிட்டு, காசப் பிடுங்கிட்டு, வேற பணக்கார பையன் கிடைக்கவும் அவெங் கூடப் போய்டுவாளுக. இவளும் அந்த மாதிரி ஆளு தான். " என முரளி வெறுப்பை உமிழ, முருகு எழுந்து சென்றான்.


" டேய் மச்சி… எங்க டா போற? " எனக் கார்த்திக்கும் அப்சத்தும் கத்த,


" இந்த மாதிரி நல்ல கருத்து உடையவெங்கிட்ட பழக எனக்கு விருப்பமில்ல மச்சி. இனி அவெ இருக்குற இடத்துல நான் இருக்க மாட்டேன். " என்றபடி நடந்தான் முருகு.


" டேய்.. என்னோட அனுபவத்த சொன்னேன் டா. வேற எதுவுமில்ல. நான் சொன்ன மாதிரியும் பொண்ணுங்க இருக்காங்கடா." என்று நியாயம் பேசினான் முரளி.


" இருக்கட்டும் முரளி. ஆனா அந்தப் பொண்ணு அப்படிக் கிடையாது. எனக்கும் ரெண்டு தங்கச்சி இருக்கு. வாய்க்கு வந்த படி ஒரு பொம்பளப்பிள்ளைய பத்தி கேவலமா பேச உனக்கு வெக்கமா இல்ல.


யாரு என்னன்னு தெரியாம… நீயா அந்த பொண்ணோட குணம் இதுதான்னு முடிவு பண்ணி, உன்னோட முடிவ எங்களுக்குள்ள திணிக்க பாக்குற. எனக்கு அது பிடிக்க. அந்தப் பொண்ணோட குணம் என்னன்னு நாங்க பழகிப் பாத்தே தெரிஞ்சிக்கிறோம். உன்னோட கருத்து தேவையில்ல. " என்றபடி கோபமாக செல்ல, கார்த்திக் தான் சமாதானம் செய்தான்.  அவனுக்கும் முரளியின் இது போன்ற பேச்சில் பிடித்தம் இல்லை.


இருவருக்குமே வாணியைத் தவறாக சித்தரித்து முரளி பேசுவதில் விருப்பமில்லை. எனவே கார்த்திக் முரளியுடனான நட்பை வகுப்பறைக்குள்ளேயே முடித்துக் கொண்டனர்.  வாணியைப் பற்றிய பேச்சு கூட அவனின் காதில் விழாமல் பார்த்துக் கொள்வான்.


' நான் சொன்னது உண்மன்னு ஒரு நாள் உங்களுக்கு தெரிய வரும். ' என்று நினைத்துக் கொண்டு விலகி இருந்தான் முரளி.


ஓரிரு வாரங்கள் சென்றிருக்கும்.


அன்று வரவேண்டிய பேராசிரியர் வராததால் நம் முருகுவிற்கும் அப்சத்திற்கும் அன்றைய வகுப்பு ஜாலியாக சென்றது. வகுப்பறையை விட்டு கல்லூரி வளாகத்தில் அனைவரும் வளம்வர, வாணி ஸ்டாஃப் ரூம் வெளியே நிற்பதைப் பார்த்தனர்.


"இந்தப் பொண்ணு எதுக்கு மச்சி இங்க நிக்கிது? " என இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்கும் போதே ஒரு ஆசிரியர் வந்து அவளை நன்கு வறுத்தெடுத்து திட்டிவிட்டு சென்றார். கண்ணீருடன் சோகமாக அவள் ஒரு கல் மேடையில் அமர, அவர்கள் இருவரும் அவளைப் பார்த்தபடி மற்றொரு மேடையில் அமர்ந்தனர்.


" என்னங்கடா இடத்த மாத்திட்டிங்களா! எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கிங்க?" எனக் கேட்ட கார்த்திக்கிற்குக் கண்களால் வாணியைக் காட்டி,


" என்னைய மாதிரியே திட்டு வாங்குச்சி மச்சி. என்ன நான் கண்ணீர் வடிக்க மாட்டேன். இந்தப் பொண்ணு குடம் குடமா வடிக்கிது. அந்தக் கண்ணீர எந்தப் பாசனத்துக்கு உபயோகிக்கலாம்னு நானும் இவனும் யோசன பண்ணிட்டு இருக்கோம். " முருகு.


" பிரபசர் திட்டீட்டாரு. வாத்தி திட்டுனா தட்டி விட்டுட்டு போய்க் கிட்டே இருக்கணும். ஒரு மணி நேரமா உக்காந்து உக்காந்து அழ என்ன இருக்குன்னு எனக்கு தெரியல கார்த்தி? " அப்சத்.


"வா அதுகிட்டையே கேட்டு தெரிஞ்சிப்போம். " எனக் கார்த்திக் நடக்க, அவனின் கரம் பற்றி நிறுத்தினான் முருகு.


" நீ வேண்டாம். நாங்களே ஒரு பத்து நிமிடம் அது அழுகுறத ரசிச்சிட்டு, அப்றமா என்னன்னு கேட்டுக்கிறோம். " என்க, 


“ஏன்?” என்றான் கார்த்திக்.


"நீ வாயத்திறத்தா… அந்தப் பொண்ணு ஓடிடுதே. " அப்சத்.


"கரெட்டு... உன்னைப் பாத்தாலே பொண்ணுங்கல்லாம் தெறிச்சி ஓடுதுக. அதுக்கு நீ ஒன்னும் பண்ண முடியாது. உன்னோட ராசி அப்படி." என்ற முருகு வாணியின் முன் சென்று நிற்க,


‘அவனுக்கு மட்டுமில்ல உனக்கு அந்த நிலைமை தான்.’ என்பது போல் எழுந்து செல்ல பார்க்க, பின் புறம் வந்து வழி மறித்து நின்றான் அப்சத்.  பக்கவாட்டில் இடைவெளி இருந்தால் ஓடி விடலாம் என்று பார்த்தால், அங்கும் கார்த்திக் இரு கரத்தையும் விரித்தபடி வந்து நின்றான். 


இவளை நடுவில் நிற்க விட்டு ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடுவது போல் மூவரும் சுற்றி நின்றனர்.


" உன்னை நாங்க என்ன பண்ணீட்டோம்னு பாக்குற நேரமெல்லாம் பதறி பதறி ஓடுற. என்ன பயமா?. " முருகு.


 அவளுக்குப் பயமெல்லாம் கிடையாது. எத்தனையோ பேரைப் பாத்திருக்கிறாள். அதில் இவர்கள் மட்டும் கொஞ்சம் சாஃப்ட் கேரெக்டர். 


சுப்புக்கு மட்டும் தான் பயம். முரளியிடம் கூட சில நேரம் ‘வந்து பாரு…’ என்று இருப்பாள்.  


முரளி சுப்புவிடம் போட்டுக் கொடுத்து அடி வாங்க வைப்பான். கையில இருந்த காயம் போல்.‌


ஃபோனைத் தூக்கிச் சென்ற முரளியிடம் இருந்து இரவோடு இரவாக திருடி விட்டாள் வாணி. அதைப் பார்த்துவிட்டவன் ஆத்திரத்தில் போட்டுக்‌ கொடுத்து, சட்டையில் தான் வைத்திருந்த பணத்தையும் எடுத்துவிட்டாள் என பழியையும் போட்டுச் சுப்புவின் கரண்டிக்கு வேலை வைத்து விட்டான் முரளி.


ஆதலால் அநாவசியமாக அவனிடம் மோத மாட்டாள். அவன் இருக்கும் இடத்தில் இருந்தால் தானே பிரச்சனை எனத் தவிர்த்து விடுவாள்.


இப்பொழுது இவர்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் முரளியும் இருப்பான் என்று நினைத்து ஓட பார்த்தாள்.  


முருகுவின் கேள்விக்குப் பதில் சொல்லாது கோழி போல் தலையைத் தூக்கி அனைத்து பக்கத்திலும் முரளி இருக்கிறானா எனத் தேட... அவன்‌ கிடைக்காது போகவே… மேடையில் அமர்ந்து கொண்டாள் சம்மணமிட்டு.


"நான் எதுக்கு உங்கள பாத்து பயப்படணும். நீங்க என்ன பூதமா! பேயா.!" எனக் கேட்டவளைப் பார்த்து இவர்கள் தான் அரண்டு போய் நின்றனர் ஆண்கள்.


" அப்றம் எதுக்கு ஓடினியாம்?" அப்சத்.


" ஒரு காலி மெஸ்ஏஜ் அனுப்புனதுக்கே ஐநூறு ரூபா கேட்டிங்க. பேசுனா எவ்ளோ கேப்பீங்க!!. உங்களுக்கு குடுக்குற அளவுக்கு எங்கிட்ட காசு கிடையாது. அதான் தூரமாவே இருந்துப்போம்னு விலகி போனேன்." எனக் கரம் விரித்தவளின் பையில் இருந்த டிப்பன் பாக்ஸ்ஸை எடுத்தான் முருகு.


" இதோ இது இருக்கே. போதாது. " எனப் பிரித்து பார்க்க அதில் பழைய சோறும் நான்கைந்து சிறிய வெங்காயமும் இருந்தது. முருகுவிற்கு எதுவோ போல் ஆகிவிட்டது.


" நான் தான் சொன்னேன்ல. எங்கிட்ட எதுவும் இல்லன்னு. பாவம். பிரியாணிய எதிர் பாத்து ஏமாந்து போயிருப்பீங்க. " எனங் சொல்லி சிரித்தாள்.


" நல்லா வக்கனையாத்தா பேசுறா. ஆனா டிச்சர் திட்டுனதுக்கெல்லாம் அழுற. ஏன்? " என்று அப்சத் நக்கலாகக் கேட்டான்.


" நான் அவரு திட்டுனதுக்கு அழுகல. " என்றாள் சோகமாக.


" அப்றம் எதுக்கு ஒரு பிரியடு முழுக்க இங்க வந்து உக்காந்திருக்க. க்ளாஸ்மெட் கிண்டல் பண்ணுவாங்கன்னு பயமா?." என்ற முருகுவின் குரலில் அக்கறை இருந்தது.‌


" அவுங்க என்னை ‌எப்பயும் தான் கிண்டல் பண்ணுவாங்க. நான் அதக் கண்டுக்க மாட்டேன் பா. ஏன்னா என்னைப் படிக்க வைக்கிறது அவங்க இல்ல. நான் அவங்களுக்குப் பயப்பட வேண்டிய அவசியமும் இல்ல. "


"கடைசி வரைக்கும் எதுக்கு அழுதங்கிறத சொல்லாம வாயாடுற. " என்றான் கார்த்திக் சிறு புன்னகையுடன்.


" அது… அது… " என இழுக்க,


" அட டக்குனு சொல்லும்மா. " முருகு.


" நான் சொல்றேன்… ஆனா சிரிக்க கூடாது. " என்றாள் நிபந்தனையாக.


"ட்ரெய் பண்றோம். " அப்சத்.


‌" இன்னைக்கி க்ளாஸ்ல பரிச்ச மாதிரி பேப்பர குடுத்து அதுல எழுத சொன்னாங்க. நான்…. நான். " எனச் சொல்லி முடிக்கும் முன்னரே கார்த்திக் அவளின் பையில் இருந்த பேப்பரை எடுத்து பார்த்து சிரிக்க தொடங்கி விட்டான்.


" என்ன இது?" எனப் புன்னகையுடன் கார்த்திக் கேட்க,


"எனக்குத் தெரிஞ்சத எழுதினேன்.‌. ஆனா அந்த வாத்தியான் ஒரு மார்க்குக் கூடப் போடாம… முட்ட போட்டு விட்டுட்டாரு. " என அவள் சொல்லிய தோரணையையும் பேப்பரில் எழுதியிருந்தவையையும் பார்த்து மூவருமே சிரித்தனர்.


"நான் அப்பவே சொன்னேன். எனக்கு எழுதலாம் வராது. பள்ளிக்கூடம் போய்ப் பல வர்ஷம் ஆச்சி. வேணும்னா பேச சொல்லித்தான்னு. ஆனா கேக்காம கொண்டு வந்து விட்டுட்டான். " எனப் புலம்பியது அவள் இருக்க,


"கேள்விக்குத் தப்பா பதிலெழுதி பாத்திருக்கேன். இங்க நீ கேள்வியவே பதிலா எழுதி வச்சிருக்க!. உனக்கு நான் எவ்வளவே தேவலை போலயே. " என முருகு பேப்பரில் இருந்ததைப் பார்த்து தன்னை தானே மெச்சிக் கொண்டான். அதைக் கேட்டு ரோசம் வந்தது, 


" ம்ச்…. குடுங்க. " என வாங்கி பைக்குள் தினித்துக் கொண்டாள்.


"நீ டில்லில்ல தான இருக்க. ‌ஹிந்தி படிக்க வேண்டியது தான. " அப்சத்.


" ஹிந்து வாசிக்க வரும். ஓரளவுக்கு இந்த ஊரு மனுஷங்க கிட்ட பேசி பேசி பழகிட்டேன். ஆனா இது மட்டும் தான் புரியவே மாட்டேங்கிது. இதுக்குன்னு தனியா டியூஷன்லாம் போறேன். ஆனாலும் படிப்பு வர்றதுக்குப் பதிலா தூக்கம் தான் வருது. ரொம்ப கஷ்டம்."


" கஷ்டப்பட்டு உன்னை யாரு படிக்க சொன்னா?. " முருகு.


"சின்னு…. சின்னு தான் சொன்னான். நீ இதப் பேசி எழுத பழகுனா உன்னை நான் அமெரிக்கா கூட்டீட்டு போறேன்னு. எங்கூட இருக்கலாம்னு. "


"சின்னு…. ‌எங்கேயோ கேட்ட பெயர்!" என்று முருகு தலையைத் தட்டி சிந்திக்க,


" டேய்… மொத தடவ இவள ரவுன்டப் பண்ணப்ப இவாதான் அந்தப் பேர சொன்னா… மொறப்பையன்…. மொறப்பையன். " எனத் தோளை இடித்தான் அப்சத்.


" ஓ... அவரா... சும்மாவே கூட்டீட்டு போயிருக்கலாமே. ஏன் படிக்கணும். அவரு பக்கத்துல இருந்து பாத்துக்க மாட்டாரா?" முருகு கேலியாக கேட்க, வாணி சத்தமாக சிரித்தாள். அந்தச் சிரிப்பு ரசிக்கும் படி இருந்தது.


" அவர தான் நாம பாத்துக்கணும். ஏன்னா அவருக்கு அஞ்சி வயசு தான் ஆகுது. ஆனா பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுவாரு. எனக்கு அவரோட கம்பெனில வேலை போட்டு தர்றதா சொன்னாரு. நான் இங்க வந்ததே அவருக்காத்தான்.‌ ஆனா நான் முட்ட வாங்குறது தெரிஞ்சா…."


" தரைல படுத்துட்டு கைய கால ஆட்டீட்டு அழுவான். " எனக் கார்த்திக் சொல்ல, அவனை முறைத்தாள் வாணி.


" ஏய் என்ன மொறக்கிற?." என அவளிடம் எகிறினான் அவன்.


" அப்படி தான் முறைப்பேன். என் சின்னு பத்தி கேலி பண்ணா. " என்றவளும் முறைப்பைக் கைவிடவில்லை.


" சரி முறைச்சிக்க… யாருக்க வேணும் உன்னோட பாசப்பார்வ. ஆனா எதுக்கு என்னை அப்பப்ப ஆச்சர்யமா பாத்த. " கார்த்திக் தான். அவனுக்கு அந்தக் கேள்விக்கான விடை வேண்டியதாக இருந்தது. ஆசையாகப் பார்த்திருந்தால், ‘சைட் அடிக்கிறாள்’ என நினைத்து ஒதுக்கியிருப்பான். ஆனால் அவள் பார்த்து அதிசயமாக. அதிசயப் பொருளைப் பார்ப்பது போல் அல்லவா பார்த்து வைத்தாள்.


" சொல்லும்மா... ஏன் இந்த விசித்திர பிறவ வித்தியாசமா பாத்த. " முருகு.


" அது... நீங்க அன்னைக்கி மேடைல பேசுனீங்கள்ல, மைக்க பிடிச்சி... படபடன்னு பட்டாசு மாதிரி இங்கிலீஷ்ல. அது நல்லா இருந்தது. எனக்குச் சொல்லித்தர்ற வாத்தியான் கூட இவ்வளவு அழகா பேசி நான் பாத்தது இல்லை. நீங்க பேசுனது நல்லா இருந்தது அதா உங்களைப் பாத்து…. ஒன்னு கேக்கலாம்னு நினைச்சேன்."


" என்ன உனக்கும் சொல்லித்தரணுமா? "  எனக் கார்த்திக் கேட்க, அவள் ஆம் எனத் தலை அசைத்தாள் வேகமாக.


" இவெங்கிட்ட கத்துக்கிட்டு பக்ஷி அமெரிக்கா பறந்து போகப்போது. சரியா?. " முருகு.


" சின்னு கூடவே இருக்க போற. " என அப்சத் கேலியாகச் சொல்ல, இதழ் மடித்து அழகாய் சிரித்தாள் வாணி.


" ஆனா இந்த உலகத்துல எதுவும் ஓசியா கிடைக்காதே. " என்றான் கார்த்திக்.‌


இது…. இது தான்…. கப்பலைத் திசை திருப்புவது போல் அவனின் வாழ்க்கையின் திசையை மாற்றி விட்டது.


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  

நேசிப்பாயா 87

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...