முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 89

அத்தியாயம்: 89 


இரவு ஏழு முப்பது மணி இருக்கும். 


" எண்டி மேனாப்பு பிடிச்ச மாறி நடக்குற. சீக்கிரம் நட. போய் அந்தம்மா குடுக்குற சப்பாத்தியையும் பருப்பையும் முழிங்கிட்டு நம்ம நிஜாம் பாய் கடைக்கி வரணும். இல்லன்னா பாய் காட்டு கத்து கத்துவாப்பல. நாலு மணி நேரமா உக்காந்து அந்தாளுக்காக எம்ராயிடரி போடுறோம். காபி டீ குடுக்குறது இல்ல. ஏன் ஒரு பாத்ரூம் வசதி கூட இல்லாத இடத்துல வந்து வேல பாக்குதுகன்னு கருணயெல்லாம் படமாட்டான். முடிச்சீடியா?. ஜல்தி ஜல்தின்னு மாட்ட ஓட்டுன மாறி ஓட்டுவான். ச்ச... நடடீ சீக்கிரம். " என வாணியைப் பிடித்து தள்ளி விட்டபடி நடந்தாள் ராஜி.  


வேலையே முடித்து விட்டு இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். வாணியின் முகம் யோசனையிலேயே இருந்தது. கார்த்திக் கேட்டதை நினைத்துக் கொண்டே ஆடி அசைந்து அசமந்தமாக நடக்க, ராஜி தான் கத்திக் கொண்டே வந்தாள். 


" இன்னைக்கி அந்த ஆந்திராகாரம்மா வீட்டுக்கு விருந்தாளிங்க வந்துட்டாங்கன்னு என்னைப் பாடா படுத்தி எடுத்திடுச்சி. அத்தன வகைல சமச்சி வச்சிருக்கேன். ஒரு வாய்ச் சாப்பிடுறியான்னு கூடக் கேக்காம அனுப்பிடுச்சி. நான் சுட்ட பலகாரம் என்னைப் பாத்து பல் காட்டுற மாதிரி இருந்தது. " எனச் சோகமாகச் சொல்லி வேகமாக நடந்தாள் வாணியின் கையை விடாது. 


" ராஜி… பெரியம்மா என்னைக் காய் வாங்கிட்டு வர சொல்லுச்சி. நான் போய் அத வாங்கி குடுத்திட்டு வந்திடுறேன். நீ போ. " என ராஜி துரத்தப் பார்க்க, அவள் சுப்பு என்றதும்… 


" சீக்கிரம் வந்து சேரு. இல்லன்னா இன்னைக்கும் உனக்கு ஹிந்தி பாட்டு தான். " என்றபடி சென்றாள். 


கூட்டமாக மக்கள் அடர்ந்திருக்கும் அந்தக் கடை வீதியில்  அனைவரையும் விலக்கிக் கொண்டு உள்ளே சென்றவள், எந்தப் பொருளையும் வாங்காது ஒரு முட்டுச் சந்தில் நுழைத்தாள். அங்கிருந்த சுவரைப் பார்த்த படி ஐந்து நிமிடங்கள் நின்றிருப்பாள். சரி செல்லலாம் என நினைக்கும் போது அந்தப் பாதை மறித்தபடி நின்றிருந்தான் கார்த்திக். 


"அது தான் மேடம் வேலை பாக்குற இடமா.? பெரிய பெரிய வீட்டிலெல்லாம் வேலை பாக்குறீங்க. பலே ஆளு தான் போ. " என்றவன் இரு கரத்தையும் கட்டிக் கொண்டு அவளின் அருகில் வர,


" ம்… என் சொந்த வீடு பாரு அது. வாடகைக்க விட்டுடுட்டு அதுலயே வேலை பாத்து சம்பாதிக்கிறேன். " என நக்கலாக வாணி சொல்ல, 


" நல்ல ஐடியாவா இருக்கே. நானும் இத ஃபாலோ பண்ணலாமா?. " 


" நீ என்ன வேணும்னாலும் செஞ்சிக்க. என்னை மட்டும் ஃபாலோ பண்ணாத.” என்றவள்,


“எதுக்கு நீ என்னை ஃபாலோ பண்ணிட்டு வர்ற. நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டேனே. அப்றம் ஏன் என்னைத் தொல்ல பண்ற. இனி வேலை பாக்குற இடத்துக்கெல்லாம வராத. அப்றம் தர்மடி வாங்குவ. " என எச்சரித்து விட்டு அவனை விலக்கி விட்டு நடக்க, அவனும் கூடவே நடந்தான்‌. 


" ச்ச... ‘காயப்படுத்திட்டேனா’ன்னு நீ வருத்தமா கேக்கவும் நான் உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன். ஆனா நீயும் கோக்குமாக்கா யோசிக்கிற சாதா ஆம்பள தான்னு நிறுபிச்சிட்ட. " 


"நல்லவனா!. நானா?. அப்படி நினைச்சது உந்தப்பு." 


"தப்பு தான். நீ நல்லா இங்கிலீஷ்ல பேசுறன்னு நினைச்சி உங்கிட்ட உதவி கேட்டது எந்தப்பு தான். " 


"ம்ச்…. நான் உனக்கு உதவி பண்ண மாட்டேன்னு சொல்லவே இல்லயே. உனக்கு பண்ணப்போற உதவிக்கி பதில் உதவி கேக்குறேன் இதுல என்ன தப்பு இருக்கு. " 


"தப்புத் தான். " 


"இது தப்பெல்லாம் கிடையாது. ஐஸ்ட்…. " என ஆரம்பிக்கும் போதே. 


"போதும். நீ என்ன சொன்னாலும் என்னால பண்ண முடியாது. போ... " 


"வாவ்!! நீ எனக்கு குடுக்குற மரியாதையோட அளவு குறைஞ்சிக்கிட்டே வருது. முதல்ல பேசவே இல்ல. அடுத்து வாங்க போங்கன்னு பேசுன. இப்ப…. " 


"நான் குடுக்குற இந்த மரியாதையும் தேஞ்சி கட்டறும்பா மாறுறதுக்குள்ள, அதக் காப்பாத்திட்டு போய்டு." 


"அப்ப நீ சரின்னு சொல்லிட்ட… நாளைக்கி பாக்கலாம். " என்றபடி அவன் விலகி செல்ல,


"ஏய்… நான் எப்பச் சரின்னு சொன்னேன். கார்த்தி…. கார்த்தி…. " எனக் கத்தியவளின் குரல் அவன் செவியில் கேட்காதது போல்,


"கேண்டின்ல வெய்ட் பண்றேன். மதியம் உன்னோட பழைய சோத்த தூக்கிட்டு வந்திடு. " எனக் கத்திய படியே நடந்து சென்றான். 


அப்படி அவன் என்ன கேட்டான் என்றால். ம்… தினமும் காலை மாலை என இருவேளையும் அவனின் வகுப்பிற்கு வந்து வணக்கம் வைக்க வேண்டும். பின் மத்திய உணவை அவனுடனும் அவனின் நண்பர்களுடனும் சேர்ந்து உண்ண வேண்டும். இதைச் செய்தால் வாரம் இரு நாட்கள் அவன் அவளுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பதாகச் சொல்ல, வாணி மீண்டும் ஓடியே விட்டாள். 


'இதுக்கு தான் நான் இவனுங்க கூடெல்லாம் பேச விரும்புறதே இல்ல. பாரு எப்படிச் சிக்க வைக்க பாக்குறான். இவனுக்கு ஒரு காலி செய்தி அனுப்புனதுக்கே அந்த முரளி பயெ என்னைச் சுப்பாத்தாட்ட சூடு வாங்க வச்சிட்டான். இதுல இவெ கூடவே திரிஞ்சா. கொளுத்தி விட்டுடும் அது. ஆள விடுடா சாமி. ' எனக் கும்பிடு போட்டு ஓடியவளை இரு நாட்களாக ஃபாலே‌ செய்து கொண்டிருக்கிறான். 


ஆமாம் இதில் அவனுக்கு என்ன ஆதாயம்? 


ம்…


கார்த்திக்கும் அவனின் நண்பர்களும் வாணியைச் சுற்றி நின்று ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாண்டார்களே அந்த விளையாட்டை தூர நின்று ஜோஹிதா பார்த்து விட்டாள். அவள் பார்ப்பதை கார்த்திக்கும் பார்த்தான். 


அவளின் கண்களில் தெரிந்த உரிமையுணர்வு அவளைச் சீண்டி பார்த்து தன் மேல் அவளுக்குள்ள காதலை நிறுபிக்க நினைத்தது. 


முதலில் விளையாட்டாகத்தான் நினைத்தான். ஆனால் அன்று மாலையே  ஜோஹிதா வாணியை அழைத்து, 


"அவனுங்க கிட்ட என்ன பேசிட்டு இருந்த?. " என மிரட்டலாக கேட்க, 


" அது… " என ஆரம்பித்து அனைத்தையும் மறைக்காது சொன்னாள் வாணி. 


'இவளுக்குக் கார்த்திக் க்ளாஸ் எடுக்க போறானா!.' என ஜோஹிதா வாணியை ஏற இறங்க பார்த்தாள். 


நிறம் தான் ஒரு பெண்ணிற்கு அழகு சேர்க்கிறதா? கிடையவே கிடையாது. லட்சணம். அது தான் பெண்ணின் அழகு‌‌. ஜோஹிதாவை போல் பளிச்சென்று நிறத்தில் இல்லை தான். ஆனால் முக லட்சணத்தில் ஜோஹிதாவைத் தூக்கி சாப்பிட்டுவிடுவாள் வாணி. 


கண்கள் அது நீல கருங்கடலில் துள்ளி குதிக்கும் மீன்களைப் போன்றது. அவளின் கடை கண்ணின் வசீகர பார்வை பட்டால், பார்வை படுபவன் நிச்சயம் தரையில் இட்ட மீன் போல், துள்ளத் துடித்து மடிவான். ஒற்றிய கன்னம் தான். ஆனால் அவள் இதழ்கள் சிரிக்கும் போது அது விரியும் அழகு தனி. வில் கூட அப்படி வளையாது. அவளின் நுதல் வளைவு தனித்துவமானது. அதனுடன் போட்டி போட்டால் வில்லிற்குத் தோல்வி தான் கிடைக்கும். 


மெலிந்த தேகம். ஆனால் அதற்கு  ஏற்றார் போல் இருக்க வேண்டிய அங்கங்கள் செதுக்கி வைத்த சிலையை போல் கச்சிதமாக இருக்கும். 


மொத்தத்தில் பிரம்மன் ரசித்து வடிவமைத்து மங்கை அவள்.


மனிதர்கள் பலரும் அந்த லட்சணங்களைப் பார்ப்பது இல்லை. உடுத்தும் உடை, நிறம். அது தான் முதலில் கவனத்தைக் கவர்கிறது. 


ஜோஹிதாவின் கவனத்தை வாணி கவரவில்லை. கறுப்பு நிறம் இல்லை என்றாலும் மங்கிய நிறம். அதை கறுப்பு என்று தான் சொல்வர். உடையோ, பாவாடை தாவணி. பட்டிக்காட்டைப் போல் தெரிந்தாள் ஜோஹிதாவிற்கு. பார்வையில் ஏளனம் அப்பட்டமாக தெரிந்தது. 


' இவா எனக்கு போட்டியா!! ' என நினைப்பு ஜோஹிதாவிற்குள் வந்தது நிஜம். 


'கார்த்திக் இவள மாதிரி ஒருத்திய திரும்பிக் கூடப் பாக்க மாட்டான். வீணா நான் தான் பயப்படுறேன். ' என நினைத்தவள் வாணியை அலட்சியம் செய்துவிட்டு சென்றாள். 


' ஏன் பேசிட்டு இருக்கும் போது போய்ட்டாங்க?. யாரு இவங்க?. எதுக்கு வந்து பேசுனாங்க?. ' எனப் புரியாது மண்டையைச் சொரிந்த வாணியின் முன் கார்த்திக் வந்து நின்றான். 


" உங்கிட்ட அவ என்ன கேட்டா?. " என்க, அவளும் சொல்ல, கார்த்திக்கின் மனம்  'சரியாத்தா கணக்கு போட்டிருக்கோம். ' எனச் சிரித்தது. 


" அவங்க எதுக்கு வந்து பேசனாங்கன்னு கடைசி வரைக்கும் எனக்குத் தெரியவே இல்லை. ஆமா உங்களுக்கு எப்படி?" என்னும் போது மூளைக்குள் மணி அடித்தது. 


" கார்த்தி உங்களோட காதலியா இது?" என விழி விரி கேட்க, அவன் புன்னகைத்தான்‌‌.‌


" ச்ச… எவ்ளோ அழகா இருக்காங்க!. ஆனா எப்படி உன்னைப் போய் காதலிச்சாங்கன்னு தான் தெரியல. " 


" என்ன நக்கலா?. நான் கேட்டதுக்கு என்ன பதில் சொல்ற?. " 


" அத தான் நான் அப்பவே சொல்லிட்டேனே. என்னோட பாடி கண்டிஷன் ரொம்ப வீக். அடியோ! வலியோ! தாங்குற அளவுக்கு அதுல வலிம கிடையாது. அதுனால  வேற யாரையாது பாத்து… பேசி… பழகி உங்காதலிக்கிப் பொறாமைய தூண்டி விட்டு… ஜோடி சேந்துக்க.  நான் வாறேன். " என நடக்க,


" உன்னால தான் என்னால அவள கன்வின்ஸ் பண்ண முடியாம போச்சி. " என்றான் உரத்தக் குரலில்.


" என்னாலயா!. எப்படி?. " 


"ஆமா… அவள சமாதானம் பண்ண கிடைச்ச வாய்ப்பத்தா நீ கெடுத்திட்டியே!!" 


"அதுக்கு தான் நான் காசு தந்தேனே. நீங்க கூட உன்னோட காசு எனக்கு வேண்டாம்னு பெருந்தன்மையோட திருப்பி தந்தீங்க. அத்தோட எல்லாம் முடிஞ்சி போச்சி.‌"


"காச விட்டுத்தள்ளு. ஆறு மாசமா நான் அனுப்புன மெஸ்ஏஜ்க்கு என்ன பலன்? நம்பர் ஜோஹிக்கிட்ட இருந்திருந்தா இன்னேரம் சேந்திருப்போம். " 


" அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? ஒரு வாரம் தான் எனக்கு வந்தது. அதுக்கு முன்னாடி நீங்க அனுப்புன எதுவும் எனக்கு வரலயே. யாருக்கும் போயிருக்காது. மெஜ்ஏஜ் அனுப்புறதுக்கு முன்னாடி நம்பர்லாம் செக் பண்ண மாட்டிங்களா?. ஃபோன் போட்டு பேசிட்டு அதுக்கு அப்றம் மெஸ்ஏஜ் அனுப்பிருக்கணும். அது உங்க தப்பு. " 


" ஆனா நான் அனுப்புனது அவளுக்கு தான். நீ அதப் படிச்சது தப்புதான. " என்றவனும் விடுவாதாக இல்லை. எப்படியாவது அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற விதண்டாவாதம் பேசினான்.


"நீங்க எந்த அர்த்தத்துல பேசுறீங்கன்னு எனக்குப் புரியல. ஆனா நீங்க கேக்குறத செய்ய முடியாது. இந்த காலேஜ்ல எனக்குத் தெரிஞ்சவங்க படிக்குறாங்க. நான் உங்க கூட இருக்குறத பாத்தா… கண்ட படி பேசுவாங்க. எம்பேரே கெட்டுடும். நான் ஒத்துக்க மாட்டேன் பா. எவ்ளோ கெஞ்சி கேட்டாலும் முடியாது." 


" ஹேய்... நா உங்கிட்ட கெஞ்சலாம் இல்ல. கண்டிப்பா நீ செய்யணும்னு சொல்றேன். உன்னால தான் நாங்க சேராம பிரிச்சி இருக்கோம். அது மட்டுமில்லாம நான் உன்னோட சின்னு கூட உன்னைச் சேத்து வைக்க உதவி செஞ்சா… அடுத்த கொஞ்ச நாள்லயே நீ வெளிநாட்டுக்காரியாகிடுவ. அப்றம் என்ன? உன்னை யாரு வந்து குறை சொல்லப் போறா. " என்க, அவள் யோசித்தாள். 


ஆனாலும்... 


" எனக்கு எதுவும் வேண்டாம். " என ஓடி விட, கார்த்திக் விடாது பின் தொடர்ந்து செல்கிறான். 


உணவு இடைவெளியில் கேண்டீனில் அமர்ந்திருந்தனர் அனைவரும். முரளியும் உடன் இருந்தான். 


"மச்சி கொஞ்சம் ஆப்போஷிட்ல போய் உக்காரேன். " எனத் தன் அருகில் அமர்ந்து முருகுவைப் பார்த்து கார்த்திக் சொல்ல.,


" ஏன் மோகினி பேய் வந்து உக்காரப் போதா உம்பக்கத்துல.?" என்றபடி எதிரில் அமர்ந்தான் முருகு. 


" பேயில்ல மச்சி. வெறும் மோகினி. " எனக் கண்சிமிட்டிச் சொல்ல,


"கார்த்திக் இது எனக்குச் சரியா படல. நீ ஜோஹிதாவ தப்பா எடை போடுற. " என அப்சத் எச்சரித்தான்.


"அதெல்லாம் சரியாத்தா போட்டிருக்கோம். நீயே அதப் பாத்து தெரிஞ்சிக்க. " என்றவன்  வேறு எதுவும் பேசாது சாப்பிடத் தொடங்கினான்.


"ஜோதிய காணுமே‌ மச்சி. உன்னோட திட்டத்துல பெரிய சைஸ்ல ஒட்ட விழுந்திடுச்சோ!.‌ நான் வேணும்னா நம்ம அப்சத்துக்கே பொம்பள வேசம் போட்டு உம்பக்கத்துல உக்கார வைக்கவா! " முருகு கேலி செய்ய, கார்த்திக் கண்களால் வாணியின் வருகையைக் காட்டினான். 


வேகவேகமாக வந்து அவனின் அருகில் அமர்ந்து கொண்டு தன் டிப்பன் பாக்கை ஓப்பன் செய்ய, முரளி எழுந்து சென்று விட்டான். 


" ஏன் நிம்மதியா கெடுக்குறதுக்கின்னே வந்திருக்கு பீடை. " என அவன் முணுமுணுத்தது அனைவருக்கும் கேட்டது. முருகுவிற்கு கோபம் வர, வாணியோ எதையும் கவனியாது தன் டப்பாவில் இருந்து பழைய சோற்றைக் காலி செய்து கொண்டு இருந்தாள். 


" வர மாட்டேன்னு சொன்ன மாதிரி இருந்தது. " எனக் கார்த்திக் குறுநகையுடன் கேட்க, 


" நீ ரொம்ப கெஞ்சின... அதா காதலுக்கு உதவி பண்ணலாம்னு வந்திட்டேன். ம்... எனக்கு எப்ப க்ளாஸ் எடுக்க போற.?" எனக் கேட்டாள் ஆவலாக. 


ஏன் இந்த திடீர் மாற்றம்? ம்... 


புரியலையா!. புரியும். ஏனெனில் இன்றைக்கும் அதே வாத்தியார்... அதே கொஸ்டீன் பேப்பர்… அதே மார்க்… அதே திட்டு.‌.. ரெண்டு இலக்கத்தில் மதிப்பெண் வந்திருந்தால் கூட சமாளித்திருப்பாள். ஆனால் வந்தது சிங்கிள் டிஜிட். 


அவளுடைய சின்னு ஃபோன் செய்து,  என்ன பண்ணா நீ படிப்பக்கா. ' எனக் கவலையுடன் கேட்க, ‘அது என்னடா இங்கிலீஷ்ஷு. நான் பாக்காத்ததா!. என்னால எல்லாமே கத்துக்கு முடியும் போது. அத மட்டும் ஏன் விட்டு வைக்கணும்.’ என மனத்தில் நினைத்தவள் அதைக் கற்றுக் கொள்ள கார்த்திக்கிடம் வந்து நின்றாள்.


" காலேஜ் முடியவும் நாம… " எனக் கார்த்திக் ஆரம்பிக்கும் போதே,


" எனக்கு வேலை இருக்கு. உன் வீட்டு விலாசம் சொல்லு நான் சனி ஞாயிறு அப்ப வருவேன். ரெண்டு மணி நேரம் தான். உங்க ஹெப்பி சன்டேவ நான் கெடுக்க மாட்டேன். ஓகேன்னு நீ சொன்னா காலையும் சாயங்காலமும் உனக்கு வணக்கம் வைக்கிறதுல எந்தப் பிரச்சனையும் இல்ல. என்ன சொல்ற? " என்க,


இருவரும் ஒப்பந்தம் போல் போட்டுக் கொண்டனர். 




தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


 நேசிப்பாயா 88

நேசிப்பாயா 90

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...