முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 90


 

அத்தியாயம்: 90


" சூடான வெள்ள சாதத்த, ஒரு முழு நீள வாழ இலைல போட்டு, அத மலை போல குமிச்சி, மலைக்கு நடுவுல பள்ளத்தாக்கு கணக்கா சோத்து மலைக்குள்ள பள்ளம் வெட்டி, அந்தப் பள்ளத்தைச் சொதி குழம்பால ரொப்பி, ஆத்திர அவசரமே படாம மெதுவா ருசிச்சி சாப்பிடறவெ நான் உண்மையான மனித பிறவி. நான் மனுஷ பிறவிடா. அதான் சொன்னபடி மலைய உருவாக்கி அதக் குழம்பால நிறைச்சி, வயித்துக்குள்ள தள்ளிட்டு இருக்கேன். ம்…. ஜோதி அந்தச் சுட்ட அப்பளத்தையும், இஞ்சி பச்சடியையும் இந்தப் பக்கம் நகட்டு.” என்றவன் கூச்சமேதும் படாமல் உணவை கடோத்கஜன் போல் கபளீகரம் செய்தான் முருகு. அவனை மற்றவர்கள் முறைக்க,  


“அந்தப் பச்ச மிளக துவயல மச்சானுக்கு வை. நடு மண்டைல இருக்குற முடியெல்லாம் நட்டுக்கிட்டு நிக்கிதான்னு பாப்போம். " என்க,


‘இலையவாது மிச்சம் வைப்பா.’ என்று சொல்லும் அளவுக்கு வழித்து வழித்து உண்டு கொண்டு இருந்தான்.


" ஜோதி... சூப்பரா சமைக்கிற. உனக்கும் இவன மாதிரி நல்ல பக்குவம் இருக்கு." என்று அப்சத் மனமாற பாராட்ட, வாணி புன்னகையுடன் கார்த்திக் முகத்தை பார்த்தாள்.


" உன்னை எதுக்கு வர சொன்னா.‌… நீ என்ன வேலை பாத்திட்டு இருக்க. " எனப் போலி கோபத்துடன் கேட்டவனும் தட்டில் இருந்த உணவு முழுவதுமாக காலி செய்திருந்தான்.


" நீ சொன்ன எல்லாத்தையும் நான் செஞ்சிட்டேனே கார்த்தி. வேணும்னா நோட்ட எடுத்து பாரு. " என்றாள் ரோசமாக.


" அவனுக்குப் பொறாமம்மா. நம்மல விட நல்லா சமைக்கிதே இந்தப் பிள்ளன்னு. நம்ம வேலைக்கி ஆப்பு வந்திடுமோன்னு பயப்படுறான் பயெ. வேற ஒன்னுமில்ல. அடுத்த வாரம் என்ன மெனு சமைச்சி வைக்கணும்னா... இட்லிக்கி மாவ பக்கத்துவீட்டு அக்காட்டா கரெக்ட் பண்ணிக்கலாம். அடை தோசக்கி ஊற போட்டு, அவியலுக்கும் கத்திரிக்காய் கிச்சடிக்கும் வாங்கிட்டு வந்து... " எனத் தொடங்கும் முருகுவைத் தலையில் கார்த்திக் தட்டினான்.


" உனக்கு வாரத்துக்கு ஒருக்க சமயல் செஞ்சி போட ஒன்னும் ஜோதி இங்க வரல. "


" கரெட்டு. ஜோதி நீ முடிஞ்சா டெய்லியும் கூட எங்களுக்குச் செஞ்சி போடு. இவனும் தான் இருக்கானே. எங்க ஊரு வெள்ளரிக்கா மாதிரி தான் டேஸ்ட் இருக்கு.‌. ஆனா அது பேரு கொட மிளகாய்ன்னு சொல்லி சட்டிக்குள்ள போட்டு வதக்குறான். கம்மு மாதிரி வாய்க்குள்ள ஒட்டிக்கிது. கேட்டா அத சீஸ்ன்னு சொல்லி அள்ளி அள்ளி போடுறான்.


உப்பு, காரம்னு எதுவுமே போடாம, நாளைக்கே நாக்கு செத்துப் போய்டுங்கிற மாதிரி சப்புன்னு சமைச்சி எங்கள அடக்கம் பண்ணப்பாகுறான். நல்ல வேளை நீ வந்து காப்பாத்திட்ட. " என் முருகு சொல்ல அப்சத் அதை ஆமோதித்தான்.


மூன்று வாரங்கள் முடிந்து விட்டன. வாணி அவர்களின் இருப்பிடம் தேடி வந்து பாடம் கற்பது. சொன்னது போல் கார்த்திக் அவளுக்குத் தனக்கு தெரிந்த ஆங்கில புலமையைக் கற்பிக்க, அவளும் காலை வேளையில் அவனின் வகுப்பறைக்குத் தான் முதலில் செல்வாள்.


" குட் மார்னிங் கார்த்தி. இன்னைக்கி நாம ஒரே கலர்ல டிரஸ் போட்டிருக்கோம். நீ தான் எனக்கு மிட்டாய் வாங்கி தரணும்." என கார்த்திக்கின் கையில் கிள்ளுவாள் வாணி.


" என்ன திடீர்னு இப்படி மாறிட்ட. நேத்து வர முடியாது. இதெல்லாம் தப்பு. பாவச் செயல் அப்படீன்னு பேசிட்டு இருந்த. " எனக் கார்த்தி அவளின் பரிமாற்றத்தை சந்தேகித்துக் கேட்க,


" கதாப்பாத்திரம்னு ஒன்ன ஏத்துக்கிட்டா… அந்தப் பாத்திரத்த சுத்தமா வச்சிக்கணும். என்னோட வேலை உன்னோட காதலிய கடுப்பேத்த உங்கூடப் பழகுறது. நான் என்னோட கடமைல கருத்தா இருப்பேன்.‌ இதே மாதிரி நீ‌…. " என இழுக்க,


"*** ஏரியா. உன்னோட ஏரியாக்கு பக்கம் தான். " என்று தான் வசிக்கும் வீட்டைப் பற்றிக் கூறினான்.


அதை வீடு என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் அது தான் வீடு. நான்கு சுவரும் மேல் சில ஓடுகளும் இருந்தன. செய்தித்தாளில் வானிலை அறிக்கை என்ற ஒன்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. வெயிலும் மழையும் வீட்டிற்குள் இருந்தாலும் தலை மேல் வந்து விழும்.


நல்ல வீடு வேண்டும் என்றால், பர்சில் பணத்தையும் நல்ல முறையில் நிரப்பி வைத்திருக்க வேண்டும். ஹாஸ்ட்டலை விட வீடு சீப்பாகப் பட்டது அவர்களுக்கு. ஹாஸ்ட்டலுக்கு எதற்கு தேவையில்லாத செலவு என மூவரும் ஒரே அறை தான்.


ஏரியா கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்கும். ஆனால் சமாளிக்க முடியாத அளவுக்கு இல்லை‌.‌


" ஓகே… சனி ஞாயிறு பாக்கலாம். என்னை இங்கிலீஷ்ல பேச வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. அப்படி நீ ஒழுங்கா சொல்லித்தரலன்னா உன்னோட முன்னாள் காதலி. கடைசி வரைக்கும் இன்னாள் காதலியா மாறவே முடியாது. " என வாணி மிரட்ட,


" மச்சான், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு குள்ள நரி கூட்டத்துக்குள்ள சிக்குன கன்னுக்குட்டி மாதிரி நின்னுட்டு இருந்த பொண்ண நீ பாத்த? " என முருகு கேலியாகக் கேட்டான்.


" அது கன்னுக்குட்டி இல்ல மச்சி. ப... " என ஆரம்பிக்கும் போது கையில் இருந்த நோட்டால் கார்த்திக்கின் முதுகில் அடிக்க, அவன்‌ சிரித்த படி ஓடத் தொடங்கினான். அவள் துரத்திப் பிடித்து அடிக்க இருவரும் பழகத் தொடங்கினர்.


அவளுக்குக் கார்த்திக்குடன் பழக மிகவும் பிடித்திருந்தது. அவனுடன் மட்டுமல்ல முருகு, அப்சத் என அவனின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருத்தியாக மாற நினைத்தாள்.


நம்மில் பல பெண்களுக்கு ஆண்களின் உலகம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு. நண்பர்களுடன் ரோசம் பார்க்காது விளையாட்டாய் பல தவறுகளைச் செய்து, பல பஞ்சாயத்தைகளை இழுத்து வந்தாலும் எதற்கும் கவலை படாத இளைஞர்களின் உலகம் எப்படி இருக்கும். ம்… அவர்களைப் போல் கால்சட்டையைக் கலட்டிப்‌ போட்டு பகலில் மட்டுமல்ல இரவிலும் ஊர் சுற்ற வாணிக்கு ஆசை.


வீடு, குடும்பம் இரண்டை மட்டுமே அறிந்தவள் பெண். அது தான் அவர்களின் உலகம். அந்த உலகை காக்க எதையும் செய்வாள்.


ஆனால் ஆணின் உலகம் வேறு. பல தரப்பட்ட மக்களைச் சந்திக்கிறான். பல வித குணங்கள் கொண்ட மனிதர்களுடன் போராடி தன் குடும்பத்திற்காகச் சம்பாதிக்கிறான். பல பிரச்சனைகள் வந்த போதும் சிரித்தபடியே எப்படிக் குடும்ப பொறுப்பைச் சமாளிக்கிறார்கள் என்ற யோசனை வாணிக்கு எப்பொழுதும் உண்டு. அவளின் தந்தையைப் பார்க்கும் போதெல்லாம் வரும்.


அத்தனை கடன். அரிசி சாதத்தைக் கண்ணில் பார்க்க பல காலம் காத்திருக்க வேண்டும். குறையை மட்டுமே கூறும் உறவினர். ஆனால் அவரின் இதழ்கள் புன்னகைக்க தவறியதே இல்லை. எவ்வித கஷ்டத்தையும் முகத்தில் காட்டியதே இல்லை.


கார்த்திக்கின் சிரிப்பும், அவனின் பரிவான அக்கறைக் குரலும் வாணிக்குத் தன் தந்தையை நினைவு படுத்தியது. அதுமட்டமல்ல அந்த மூவரும் தன் இல்லாமையை ஏளனமாக பார்க்காது, வயதுபெண் என முகத்திற்குக் கீழ் மோயாது, கண்களைப் பார்த்து பேச்சும் அந்த நண்பர்களை மிகவும் பிடித்து விட்டது. 


அவளுக்குப் பள்ளியில் படிக்கும் போதிருந்தே சக மாணவர்களுடன் தெருவில் இறங்கி விளையாட வேண்டும். சுட்டி பெண் அவள். தம்பி இருந்த வரை அவனுடன் சேர்ந்து தாய்க்குத் தெரியாது சுற்றுவாள். தெரிந்தால் பிரம்படி வாங்குவாள். இப்போதும் சுப்புவிற்குத் தெரியாது இவர்களுடன் சுற்றுகிறாள். தெரிந்தால் என்ன ஆகுமோ?.


காலை மாலை உணவு இடைவேளை என மூன்று பொழுதும் வாணி அவர்களுடன் இருக்க! அவர்களின் அந்த விளையாட்டைத் தினமும் முறைத்து பார்ப்பாள் ஜோஹிதா. பார்ப்பது அவள்‌‌ மட்டுமல்ல. முரளியும் தான். ஆனால் அவனைக் கண்டு கொள்ள மாட்டாள் வாணி. 'அடி தான வாங்கி குடுப்ப.‌ குடுத்துக்கோ. நான் வாங்காத அடியா. இவங்க கிட்ட சந்தோஷத்துக்காக கொஞ்சோண்டு அடி வாங்கிக்கிறதுல தப்பே இல்லை.' என அலட்சியமாக நடந்து கொண்டாள் வாணி.


முரளி, கார்த்திக்கிற்காக வாணியை வீட்டில் போட்டுக் கொடுக்காது இருந்தான். ஏனெனில் அவனுக்கும் ஜோஹிதா-கார்த்திக்கின் காதல் கைச் சேர வேண்டும் என்று நினைப்பு இருந்தது.


இந்த வாணியை மூவரும் அதிசயப் பொருளைப் பாதுகாப்பது போல் பாதுகாத்தனர்.  அவளின் கதையைக் கேட்டு அவர்களுக்குள் சிறு பரிதாபம் உண்டானது.‌ இன்று வரை அவள் அந்த பெரியன்னையின் குடும்பத்தால் படும் பாட்டை நினைக்கையில் அவளை அவளின் சின்னுவுடன் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மூவருக்குமே உண்டானது. 


முருகுவிற்குச் சொல்ல‌ தேவையில்லை. வாணியை பார்க்கும் போதெல்லாம் "ஏந்தங்கச்சி தாமரையப் பாக்குறது மாதிரியே இருக்கு மச்சான். அவளும் இப்படித்தா பாவாட தாவணி போட்டு வாயடிச்சிட்டே முருகண்ணா முருகண்ணான்னு சுத்துவா.  அதுனால நான் வாணிய தங்கச்சியா ஏத்துக்கிட்டேன். " என்பான்.‌


அப்சத்திற்கும் உடன் பிறப்புக்கள் உண்டு. இரண்டு பேர்.‌ வயதில் மூத்தவராய் இருந்த அவர்களுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அதனால் அவர்கள், அவர்களை விடச் சிறியவனா அவனுடன் சரியாகப் பேசுவது கிடையாது. அமைதியாக வளம் வரும் அவனின் உடன்பிறப்புக்களுக்கு மத்தியில் உரிமையுடன் பழகும் வாணியை பிடித்துப் போனது.


ஆனால் கார்த்திக்.


அவன் மிகவும் நெருக்கமாக பழகும் முதல் பெண் வாணி. ஜோஹிதாவுடன் பழகி இருக்கிறான் தான்‌. அது நம் தன்யா கூறுவது போல் சோசியல் டிஸ்டென்ஸ்ஸிங் காதல்.


இந்த இரு வாரங்களில் அவன் வாணியிடம் பேசிய வார்த்தைகளை எண்ணினால், அது ஜோஹிதாவை முதல் முதலில் பார்த்து பேசியது முதல் இன்று வரை இருவருக்குமான பேச்சு வார்த்தைகளை விட அதிகமாக இருக்கும்.


மிகவும் இயல்பாக பழகினர் இருவரும்‌. தன் அருகில் அமர்ந்து தன்னிடம் வம்பு வளர்க்கும் வாணியின் மீது… சாரி ஜோ வின் மீது காதல் எல்லாம் வரவில்லை. ஆனால் ஒருவித அக்கறையுணர்வு வந்தது. முருகுவும் அப்சத்தும் எப்படியோ அப்படி தான் ஜோ வுடன் நட்பு பூண்டான்.


தினமும் அவளுக்காகச் சமைத்து எடுத்து வருவான். அவளுடன் நடை பழகும் போது அவனின் வலது கை தானாக அவளின் இடக்கையைப் பற்றிக் கொள்ளும். கூட்டத்தில் நடந்து சென்றால் யாரும் அவளை இடிக்காத படி கரங்கள் இரண்டயும் விரித்து அரண் அமைத்து அழைத்துச் செல்வான்.


சேட்டை செய்தால் தலையில் தயங்காது கொட்டினான். அவன் கோபமாகத் திட்டினால் முகம்‌ சுருக்காது பதிலுக்கு அவனுடன் வாயாடி வெற்றி பெறுவாள். அவளின் கரம் பற்றுவது, கன்னம் கிள்ளுவது, தோளில் தட்டுவது என்பதெல்லாம் சகஜமாகிப்‌ போனது கார்த்திகேயனுக்கு.‌ இருவரின் மன உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு இருவரின் உறவும் ஆழமாக சென்றிருந்தது.‌


"மச்சி காப்பாத்து டா. இந்த வாணரம் என்ன அடிக்கிதுடா. " என முருகு கத்த, கார்த்திக் திரும்பி பார்த்தான். அங்கு வாணி முருகுவின் முதுகில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அப்சத், இதைப் பார்த்து சிரிக்க, கார்த்திக்கின் மனம் ஜோஹிதாவை நினைவிற்கு கொண்டு வந்தது.


அவள் இதுவரை கார்த்திக்கின் நண்பர்கள் யாருடனும் முகம்‌ கொடுத்து பேசியதே இல்ல. ஆனால் ஜோ வந்த பின் என்னென்ன மாற்றம்.


மாற்றம் அவர்கள் இருந்த அறையில் காணலாம். அழகாய் அதை ஒழுங்கு படுத்தி அவள் வைத்திருந்த அழகை பார்த்தவன், அடுப்பில் இருந்த பதார்தத்தை பார்க்க தவறி விட்டான்.


"என்ன கார்த்தி கண்ண திறந்து வச்சிட்டு தூங்குறியா? " எனக் கேலியாக கேட்டபடி அவனின் கையில் இருந்த கரண்டியை வாங்கி கிண்டியவள், அதை எடுத்து வாயில் வைத்து சுவை பார்க்க.


"எப்படி இருக்கு? நல்லா இருக்கா?. " என கேட்டான் ஆவலாக.‌


" நீ எனக்கு இங்கிலீஷ் டீச்சர் தான். ஆனா உண்மன்னு ஒன்னு இருக்குல்ல. அத நான் சொல்லணும்ல. " என்றவள் புருவம் சுருக்கி அதில் உள்ள குறைகளை சொல்ல,


மனம் என்ற அந்த குரங்கு மீண்டும் ஒப்பிட்டு பார்க்க தொடங்கியது. தான் கொண்டு வரும் உணவை ருசிப்பாளே தவிர கருத்து சொன்னது இல்லை ஜோஹிதா என்ற எண்ணம் வர, அமைதியாகிப் போனான் கார்த்திக்.‌


"ஹேய்… இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி?. பாதி பேரக் கொன்னாத்தா அரை வைத்தியன் ஆக முடியுமாம். அது மாதிரி தான் நீயும்.  சிறந்த சமையல் கலை வவ்லுனரா ஆகணும்னா நீ இன்னும் பல சட்டிகள கறுக்க வேண்டி இருக்கும். " என விளையாட்டாகப் பேசினாலும் ஊக்குவிக்கும் விதமாக இருந்தது கார்த்திக்கு.


" இவெ சிறந்த சமயக்காரனாக எங்க வயிறுதா கிடைச்சதா? " என் முருகு கேலி செய்ய, அப்போது ஒரு பந்து வந்து அவர்களின் ஓட்டின் மேல் விழுந்தது.


" இருக்குற கொஞ்ச நஞ்ச ஓட்டையும் இவனுங்க பிக்காம விட மாட்டானுங்க போலயே.! " என நினைத்த நண்பர்கள் வெளி வந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் திட்ட, வாணி அந்தச் சிறுவர்களை ஏக்கமாக பார்த்தாள்.‌


தன்‌ தம்பியிடம் பல முறை கேட்டு கெஞ்சுவாள் பனை மட்டையைத் தரச் சொல்லி. ஆனால் அவன் ' பொம்பளப்பிள்ளைங்கல்லாம் இது விளையாட கூடாது. போ... இப்ப நீ போலன்னா நீ வீடு தங்காதத ஆத்தாட்ட சிண்டு மூட்டி விட்டுடுவேன். போ…' எனத் தராது துரத்திவிட்டு விடுவான்.


தன் தம்பியை  நினைத்தபடியே அந்தச் சிறுவர்களை ஏக்கமாக வாணி பார்க்க,


" உனக்கு விளையாடணுமா.? " எனக் கேட்டான் கார்த்திக். அவள் யோசிக்காது ஆம் ‌எனத் தலையசைக்க, அவளின் கரம் பற்றி இழுத்து சென்றான் வீதிக்கு.


சிறுவர்களிடம் சண்டை போட்டு பேட்டை வாங்கி அவளின் கையில் தந்து, அவனே பந்தை வீசினான்.


அவன் ஜோஹிதாவுடன் இப்படி தான் பழக நினைத்தான்.‌ ஜோஹிதா தனக்கு ஒரு நல்ல தோழியாக, சிறந்த வழியாட்டியாக இருக்க விரும்பினான்.


இருவரும் செல்ல சண்டைகள் செய்து காமமெனும் கடலில் முழ்கவில்லை என்றாலும் சின்னச் சின்ன சீண்டல்கள் மூலம் கால்களையாவது நனைக்க வேண்டும் என்றெண்ணினான்.‌


ஜோஹிதா, கார்த்திக் நினைத்த அளவுக்கு நெருங்கி பழகியது கிடையாது. ஆனாலும் கார்த்திக்கின் இதயம் ஜோஹிதாவிற்காகத் துடித்து.‌ எனவே காதலை ஜோஹிதாவிடனும் தன் பெண் தோழியின் ஆசையை வாணியிடமும் நிறைவேற்ற நினைத்தான்.‌


பாவம், இந்த நெருக்கம் வேதியல் மாற்றத்தை உருவாக்கி காதல் என்ற ஒன்றை உருவாக்கும் என்று எண்ணி பார்க்கவே இல்லை.‌ அந்த வேதியியல் மாற்றம் இருவருக்குள்ளும் உண்டாகி என்னென்ன செய்யப்போகிறதோ!.


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...