அத்தியாயம்: 91
"கார்த்தி அந்த வாட்ச்மேன் ரொம்ப பண்றான். உள்ள விட பர்மிஷன் லெட்டர்லாம் கேக்குறான் டா. இது என்ன பார்லிமெண்ட்டா?. தீவிரவாதிங்க அட்டாக் பண்ணிடுவாங்கன்னு பயந்து இத்தன பாதுக்காப்பு குடுக்க. இருநூறு வீடு இருக்குற அப்பார்ட்மெண்ட்டு. அதுக்கு போய் அந்த வாட்ச்மேன் குடுக்குற பில்டப் ஜாஸ்தி டா. " என்றான் அப்சத்.
அந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்த்தபடி தன் பைக்கில் சாய்ந்து கொண்டு நின்றிருந்த கார்த்திக்கிடம் சொல்ல, அவன் புருவம் சுருக்கி யோசிக்கலானான்.
" சரி வா போவோம். " என்றான் கார்த்திக்.
"எங்கடா? "
" உள்ள... ஜோதிய பாக்க வேண்டாமா? நாம திட்டுவோம்னு சொல்லி காலேஜ்ஜிக்கே வராம டிமிக்கி குடுத்தவள என்னன்னு கேக்க வேணாமா.?"
" கேக்கணும்டா… கேட்டு அவ காத பிடிச்சி திருகுனாத்தான் திருப்தியா இருக்கும். ஆனா அந்த குர்கா விடமாட்டேன்னு சொல்லிட்டானே. வேற எப்படி உள்ள போறது?"
"சுவரேறி குதிச்சு போலாமே."
" கார்த்திக் விளையாடாத. இது பணக்காரங்க இருக்குற அப்பார்ட்மெண்ட்டு. சிக்கினோம். நம்மல சின்னாபின்னமாக்குற அளவுக்கு கேஸ்ஸ போட்டு உள்ளயே வச்சிடுவானுங்க. எப்படியும் இந்தச் சனிக்கிழம நம்ம வீட்டுக்கு வரத்தான போறா. அப்ப கவனிச்சிக்கலாம். "
" இல்ல… இப்பவே பாக்கணும். நான் உள்ள போற வழிய பாத்திட்டேன். நீ... "
" வெளில காத்திருக்கேன். முன் ஜாமின் எடுத்து வச்சிட்டு. " என்றவனை முறைத்தபடி உள்ளே செல்ல ஒரு மரத்தில் ஏறினான் கார்த்திக்.
அப்சத் சொன்னது போல் அது பணக்காரர்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு. மதன் - ரஞ்சனியின் வீடு. இரு நாட்களாக வாணி கல்லூரிக்கு வரவில்லை.
அதற்கு வேறு காரணம் இருக்கிறது. ஆனால் வகுப்பில் வைத்த சிறு பரிச்சையில் வாங்கிய ஒற்றை இலக்க மதிப்பெண்ணே காரணம். அதனால் தான் தலைமறைவாக சுற்றுகிறாள் என அவளைத் தேடி வந்துள்ளனர் இருவரும்.
கார்த்திக் குதித்த இடம் சிறுவர் பூங்காவை போல் ஊஞ்சல்களும் சறுக்கல்களும் நிறைய இருந்தன. எந்த வீட்டில் வாணி வேலை செய்கிறாள் என்று தெரியாது ஏறி குதித்துள்ளான் கார்த்திக்.
அவனுக்குத் தேடும் வேலை வைக்காது, கண்களைத் துணியால் மூடிய படி, ஒளிந்திருக்கும் நான்கைந்து சிறுவர்களுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள் வாணி.
ஏற்றி சொருகிய பாவாடை அவளின் கெண்டைக்காலின் அழகை மட்டுமல்ல இடையில் அழகையும், ஒரு பக்க இளமையின் அழகையும் சேர்ந்தே காட்ட, அதையெல்லாம் கவனியாது, அவளின் அருகில் சென்றான் கார்த்திக்.
காற்றில் கைகளை நீட்டி சிறுவர்களைத் துலவியபடி மெதுவாக எட்டு வைத்து நடந்தவளின் முன் வந்து கார்த்திக் நிற்க, அவனின் சட்டையை பிடித்தபடி நின்றாள் வாணி.
அங்கிருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு வாணி பரிட்சயமானவள். பல ஆண்டுகளாக இங்கு வேலை செய்யும் அவளிடம் வம்பு வளர்க்க யாரும் முன் வந்தது இல்லை, சுப்புவின் தொண்டைக்கு பயந்து.
இப்போது கண்களை மூடியிருக்கும் போது முன் வந்து நிற்பது யார் என யோசித்த படி கட்டை அவிழ்த்தவள் கண்டது, கார்த்திக்கை.
" கார்த்தி... " என விழி விரிய கேட்டவளின் தோரணை ரசிக்க வைத்தது.
"நீ எப்படி இங்க வந்த?. உன்ன யாரு உள்ள விட்டா?. எதுக்கு இங்க வந்த?. கார்த்தி... கார்த்தி... " என அவள் உளுக்கிய பின் தான் சுயநினைவானது வந்தது.
" எதுக்கு ஒரே நேரத்துல இத்தன கேள்வி கேக்குற. இங்க எதுக்கு வருவாங்க. உன்னைப் பாக்கத்தா. நல்லவேள எங்காலுக்கு வேலை வைக்காம உன்னை வேகமா கண்டுபிடிச்சிட்டேன். "
" நாளைக்கி காலேஜ் வருவேனே அப்ப பாத்துக்கலாம். இப்ப நீ கிளம்பு. " எனத் துரத்த.
"ஏன், நா இங்க வரக்கூடாதா?. "
"ஆமா. எனக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு. நீ வந்து பேசுனா! என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?. நீ முதல்ல போ… " எனச் சுற்றிலும் யாரும் பார்க்கிறார்களா எனப் பார்வை அலைபாய விட்ட படி,ரகசியக் குரலில் பேசி, அவனின் முதுகில் கை வைத்து தள்ள,
"நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும். க்ளாஸ் டெஸ்ட் எப்படி எழுதுனேன்னு சொன்ன? " எனக் கேட்க, ஒரு நொடி தயங்கியவள், பின்,
" கார்த்தி எதுவா இருந்தாலும் நாம காலேஜ்ல பேசிக்கலாம். இல்லன்னா நைட் மெஸ்ஏஜ் அனுப்பு. அதுவும் இல்லன்னா கேட் பக்கத்துல ஒரு மரத்துக்குக் கீழ பிள்ளையார் ஒருத்தரு தனியா உக்காந்திருப்பாரு. அவருக்குத் துணையா நில்லு. நான் அரைமணி நேரத்துல வந்திடுறேன். இப்ப இங்க வேண்டாமே. ப்ளீஸ்… " எனக் கெஞ்ச,
"சரி என்னமோ சொல்ற. " என அவன் கிளம்ப தயாரானான்.
"வாணிக்கா.. Who is this? "என்ற கேள்வியுடன் சின்னு வந்து நின்றான் வாணிக்கும் பின்னால்.
" தெரியல சின்னு. ஹச் ப்ளாக் எங்கன்னு கேட்டாரு. வழி சொல்லிட்டு இருந்தேன். அவ்ளோ தான். நீ வா போலாம். நேரமாச்சி. " என அவனின் தோளில் கைப் போட்டு இழுத்து செல்ல, அந்த பொடியன் திருப்பி திருப்பி கார்த்திக்கைப் பார்த்தான்.
" மேடம்…” என அழைத்தவன்,
“வழி சொல்லாமலேயே போறீங்க. சொன்னீங்கன்னா நானும் தனியா நிக்காம, ஜோடியா… உங்க கூடவே வருவேன்ல. தோள்ல கைப் போட்டு இல்லன்னாலும் ரெண்டடி தள்ளி பேசிக்கிட்டே வருவேன். " என வம்பாய் பேச,
" Go straight. take third left. Watchmen will be there. Ask him to find out. come vani. " எனக் காவலாளியிடம் வழி கேட்கச் சொல்லி சிறுவன் அவளின் இடையில் கைப் போட்டு அழைத்து சென்றான்.
' டேய் குட்ட தவக்கா!. என்னையவாட வாட்ச்மேன்ட்ட வழி கேக்க சொல்லுற. இரு. ' என நினைத்தவன். வாணியின் கரம் பற்றி நிறுத்தினான்.
" நான் கேள்வி கேட்டது உங்கிட்ட. பதில் ஏன் ஒரு சில்லுவண்டுக்கிட்ட இருந்து வருது. நீ சொல்லிட்டு கிளம்பு." என வழி மறித்து நின்றான்.
" Why make a fuss. There is a board in front of every building. Do you have eyes to see or not?"
‘கண்ணு இருக்கா இல்லையா. பில்டிங்க்கு முன்னாடி போர்டு இருக்கு பாத்து தெரிஞ்சிக்க.’ எனச் சொல்ல, கார்த்திக் அவனின் டிசர்ட்டைப் பிடித்து உயர தூக்கினான்.
அந்த வாண்டு திமிறாது, கார்த்திக்கைத் திமிருடன் பார்த்தான்.
" ஏய் குட்ட வாத்து. நான் உங்கிட்ட பேசல. புரியுதா… காது இருக்கா இல்லையா. நான்… உங்கிட்ட… பேசல. உங்கக்கா கிட்டதா பேசுறேன். பெரியவங்க பேசும் போது சும்மா வேடிக்க மட்டும் தான் பாக்கணும். குறுக்கால புகுந்து புத்திசாலித்தனமா பேசுறேன்னு பேசக்கூடாது. என்ன!." என மிரட்ட,
வாணி, " கார்த்தி விடு கார்த்தி அவன. ப்ளிஸ் கார்த்தி." எனக் கெஞ்சினாள். அவளின் முதலாளி வீட்டு விருந்தினர் மட்டுமல்ல அவளின் இளவரசன் அல்லவா அந்தச் சின்னு.
கார்த்திக் அந்த வாண்டுவை இறக்கி விட்டான். கீழே இறங்கும் போதே அந்த வாண்டு கார்த்திக்கின் வயிற்றில் தன் பலம் கொண்டு குத்த, அதை எதிர்பார்க்காத கார்த்திக் சிறு வலியுடன் வயிற்றைப் பிடித்தான்.
நிமிர்ந்து அவன் பார்க்கும் முன் இருவரும் எக்கேப் ஆகி இருந்தனர். சின்னு, வாணியிடம் கார்த்திக் யார் எனக் கேட்டுக் கொண்டே வர, ‘உடன் படிப்பவர்’. என்று அவனுக்குத் தெரிய வேண்டியதை மட்டும் கூறினாள். அந்தச் சின்னு என்ற ருத்ரதேவிற்கு தன் சட்டையை பிடித்த கார்த்திக்கைப் பிடிக்கவில்லை.
" I don't like him. you don't even talk to him." எனக் கார்த்திக்கிடம் பேசாதே என்று உத்தரவு போட்டான் சின்னு.
சரியாக அரைமணி நேரம் என்றவள் ஒரு மணி நேரம் கழித்தே வெளியே வந்தாள். அதுவும் தனியாக அல்ல ராஜியுடன்.
"அடுத்த பாடி கார்டா!! ஆமா உனக்கு எத்தன பேர் தான் காவலுக்கு வருவாங்க?" கார்த்திக் கேட்க, அவள் அவனுடன் பேசாது.
"அப்சத் அண்ணா. நீங்களும் வந்திருக்குறதா கார்த்தி சொல்லவே இல்ல. முருகண்ணா எங்க?. "
"உன்னை அழச்சிட்டு போக தாம்பூலம் தட்டு வாங்க போயிருக்கான்." அப்சத்.
" இந்த இங்கிலாந்து இளவரசிய பாக்குறதே கஷ்டமா இருக்கும் போது, பாக்குற வாய்ப்பு கிடைக்கும் போதே பரிசு குடுக்க வேண்டாமா!. " எனச் சொல்லிக் கொண்டே வாணியின் தலையில் கார்த்திக் கொட்ட,
"ஏய்... யாருடா நீங்க?. காட்டுள்ள இருந்து இறங்கி வந்த மந்தியாட்டம் நடு ரோட்டுல நின்னு வித்த காமிச்சிட்டு இருக்கீங்க. வழிய விடுங்கடா முட்டா பயளுகளா. " என ராஜி பட்டாசாய் பொரிந்தாள்.
" மந்தியா!! "அப்சத்.
" வித்தையா!!. " கார்த்திக்
" இவாதா குரங்காட்டி போல கார்த்தி. கைல குச்சி மட்டும் மிஸ்ஸிங். மத்தபடி ஆடுறா ராமா ஆடுறா ராமான்னு பாட ஏத்த குரல் வளம் பக்காவா இருக்கு. " எனக் கேலி செய்தான் அப்சத்.
"ஏய்... என்ன நக்கலா!. என்னைப் பாத்தா கலக்கூத்தாடி மாதிரியா இருக்கு. "
"பாக்க அப்படி தெரியல தான். ஆனா கண்ண மூடீட்டு உங்க குரல கேக்கும் போது அந்த ஃபீல் தன்னால வருது. சரியா கார்த்திக். "
"ரொம்ப சரி. " எனக் கார்த்திக் சொல்ல, ராஜி பேசும் முன்,
"நாங்க ஏற்கனவே ஒரு மணி நேரமா உங்களோட வருகைக்காக காத்திருக்கோம். இதுக்கு மேல உங்கூட சண்ட போட்டு நான் நேரத்த விரையமாக்க விரும்பல. க்ளாஸ் டெஸ்ட் எப்படி எழுதுனேன்னு நாங்க கேட்டதுக்கு என்ன பதில் சொன்ன?. " கார்த்திக் மிரட்டலாக கேட்க,
"அது... அது... நல்லாத்தான்... "
"நல்லா எழுதியிருந்தா ரெண்டு டிஜிட்ல மார்க் வந்திருக்கணுமே. ஏன் இப்படி வந்திருக்கு. அப்படின்னா…. " அப்சத்.
" படிக்காம எங்களுக்கு டிமிக்கி குடுத்திருக்க. "
"ஐய்யோ அப்படி இல்ல கார்த்தி. அந்த வாத்தியான் நீ சொல்லிக்குடுத்த எதையுமே கேக்கல. அப்ப தப்பு அவரு மேல தான. " என வாணி அவசர அவசரமாக சொல்ல,
"சரியா சொல்லிக்குடுக்கலன்னு இவனையும் தப்பு சொல்லு. " அப்சத்.
"அந்த மாதிரி பழியெல்லாம் மூஞ்சிக்கி முன்னாடி சொல்ல கூடாது அப்சத்ண்ணா. " என்றவளின் தலையில் தட்டி,
" வேல முடிஞ்சதா இல்லையா? "
"அடுத்து பாய் கடைக்கி போகணும். "
"எத்தன மணிக்கி?"
" எட்டு மணிக்கி. "
"மணி ஏழு தா கார்த்தி ஆகுது. " என்ற அப்சத்தை முறைக்க தவறவில்லை வாணி.
" வந்து உக்காரு. " எனக் கையில் புத்தகத்தை எடுத்து பிள்ளையாரு கோயில் அமரச் சொல்ல,
"நான் நோட் எதுவும் கொண்டு வரல கார்த்தி. நாம நாளைக்கி காலேஜ்ல பாப்போமே." என்க,
"காலேஜ்லயும் பாப்போம்… இங்கயும் பாப்போம். கார்த்தி அவகிட்ட அதக் குடு. " என்றவர்கள் தயாராகத்தான் வந்திருந்தனர்.
" ராஜி இவா என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு. ராஜி இவங்க தான் நான் சொன்னேன்ல கார்த்தி. எனக்குப் பாடம் சொல்லித்தர்றவன்னு. அது இவெந்தா. " என அறிமுகம் செய்து வைத்தவள்.
"ராஜி இந்த இருட்டுள எப்படித் தனியா போவா?. நானும் போய் அவள விட்டுட்டு வர்றேன். நாம சேந்து போகலாம் ராஜி." என ராஜியை விடுதியில் விட்டுவிட்டு வருவதாகச் சொல்லி நகர, இருவரும் சுற்றி நின்று கொண்டனர்.
" ஏன் எப்ப பாத்தாலும் நலங்கு வைக்கிற மொறப்பையங்கனங்கா என்னைய சுத்தி சுத்தி வர்றீங்க. எனக்குப் பிடிக்கவே இல்ல. நாளைக்கி பாக்கலாம். " என ராஜியை அழைத்துக் கொண்டு சொல்ல,
"அந்தக் குட்ட வாத்து தான் சின்னுவா?. அவெங்கூடதான் அமெரிக்கா போக கனவு கண்டுட்டு இருக்கீயா?. அந்தப் பகல் கனவு நிறைவேறவே நிறைவேறாது. காலம் முழுங்க இந்த டில்லி நான் உன்னோட ஊரு. இந்த அப்பார்ட்மெண்ட் தான் உன்னோட ஆஃபீஸ்." எனக் கார்த்தி கத்த, வாணி நின்று விட்டாள்.
" இந்த லட்சனத்துல படிச்சேன்னா, உனக்கு ஆஃபீஸ் வேலைலாம் போட்டு தரமாட்டான். இதே வீட்டு வேலைய அங்க போய் பாப்ப. அமெரிக்க வீட்டு வேலைக்காரி. " என்க, கோபமாக திருப்பி அவளின் முன் வந்தாள் வாணி.
"என்னை வேலக்காரின்னு சொல்லாத." என மூக்கு விடைக்க விரல் நீட்டி எச்சரிக்க,
" அப்ப ஒழுங்கா படி. இல்லன்னா இங்க பாக்குற வேலையத்தா அங்கயும் பாப்ப. " என்க, விரைவாகச் சென்று அவன் சொன்ன இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
என்னவென்று புரியாத போதும் ராஜியும் வாணிக்குத் துணையாக நின்று பாடத்தைக் கவனித்தாள். இது அவர்களின் தினசரி பழக்கமாக மாறியது. அந்தக் கோயில் இருவரின் சந்திப்புக்கு ஏற்ற இடமாய் இருந்தது.
" அந்தக் கறுப்பு சட்ட தான் கார்த்திக்கா.? " என ராஜி கேட்க,
"ம்… அவெந்தா. பயங்கரமா கொட்டுறான். வலிக்கிதுன்னு சொன்னாலும் விட மாட்டேங்கிறான். லூசு. " எனத் திட்டியவள், பின்,
"ஆனாலும் ரொம்ப நல்லவே. " என்று சிலகித்தே கூறினாள் வாணி.
"என்னத்த நல்லத கண்டுட்ட. அவனுக்கு நீ ஒரு உதவி செய்ற. பதிலுக்கு அவனும் செய்றான். இதெல்லாம் வியாபாரம் மாதிரித்தான். லாபம் இல்லன்னு தெரிஞ்சா கலட்டி விட்டுடுவான். "
" கார்த்திக் அப்படி இல்ல."
"ஓ… நீ அவெ காதலி கூடச் சேத்து வப்பங்கிற நம்பிக்கைல தான் உங்கூட பழகுறான். இல்லன்னா உன்னை ஏறெடுத்து கூடப் பாத்திருக்க மாட்டான். ஆள பாத்தாலே தெரியுதே. பையன் நல்லா வெண்ணையும் நெய்யுமா சோத்துல போட்டு சாப்பிடற பணக்கார பால்டப்பான்னு. பொண்ணு பேரு என்ன சொன்ன? "
" ஜோஹிதா." என்றபோது குரல் எழும்புவே இல்லை வாணியிடம்.
“அந்தப் பொண்ணும் பெரிய இடம் தான. பணம் பணத்தோட தான் சேரும். இந்த மாதிரிப் பணக்காரனுங்க எச்சிக் கைட்ட காக்கா ஓட்டுனாக் கூட, அதுல எதாவது லாபம் இருக்கும். அவனுக்கு அவெங்காதலியோட பொறமைய தூண்டி விட்டு ஜோடி சேரணும். உனக்கு சின்னு கூட இருக்கணும். அது தான. சீக்கிரம் உங்க ரெண்டு பேர் ஆசையும் கைக் கூடும். அப்றம் நீ அவன அந்த ஜோஹிதாவோட புருஷனாத்தா பாப்ப. " என ராஜி பேசிக் கொண்டே செல்ல,
'ஜோஹிதாவின் புருஷன்.' என்ற வார்த்தை வாணியின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது.
தன் மீது அக்கறையும் பாசமும் காட்டு ஒரே ஜீவனாய் கார்த்திக் மட்டுமே இருக்கிறான் என வாணியின் கண்களுக்குத் தெரிய, இதயம் அவனை எண்ணி துடிக்க ஆரம்பித்தது. சில நாட்களாகவே.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..