அத்தியாயம்: 93
ஜோஹிதா, உலைகலனில் கொதிக்கும் நீர் போன்ற கொதிநிலையில் இருந்தாள்.
காரணம் உள்ளது. அவளுக்குக் கார்த்தியின் மீது துளியும் சந்தேகம் இல்லை. அவனின் காதல் தன்னைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. அவன் மனதில் தனக்கிருக்கும் இடத்தை வேறு யாராலும் நிரப்ப இயலாது என்ற கர்வம் அவளுக்கு எப்பொழுதும் உண்டு.
அது உண்மை. அந்த உண்மையை அவனின் பார்வையில் கண்டு கொள்ளவாள். தன்னை வெறுப்பேற்ற என ஒரு பெண்ணுடன் பேசி சிரித்து சுற்றினாலும், அவளின் மீது அவனுக்கு இருப்பது அன்பும், நட்பும் பரிதாபமே தவிர… காதலாக அது மாறாது என்று முழுமையாக நம்பினாள் ஜோஹிதா.
அவளுக்குத் தெரியாதது கார்த்திக்கின் மனம் தற்சமயம் தடுமாறத் தொடங்கி இருப்பது.
மனம் என்ன கல்லால் செய்யப்பட்டதா! அப்படியே கல்லாக இருந்தாலும் கரைப்பார் கரைக்க கல்லும் கரைந்து தானே போகும். அசைக்க முடியாத உறுதியான மனம் யாருக்கும் கிடையாது. அது ஜோஹிதாவிற்குத் தெரியாது போனது.
இப்போது அவள் கொதிக்க காரணங்கள் இரண்டு. ஒன்று கார்த்தி முன்போல் அவளிடம் பேச முயற்சிப்பது இல்லை. உறவினர் வீட்டில் தங்கி இருப்பதால் அவள் பஸ்ஸில் தான் தினமும் கல்லூரிக்குச் செல்வாள். அவளைத் தொடர்ந்து, கார்த்திக்கும் பஸ்ஸில் தான் வருவான். அப்சத்துடனும் முருகுவுடனும் பைக்கில், ஜோஹிதா பஸ் ஏறும் இடம் வரை வருபவன், அவள் பஸ் ஏறியதும் அவளைப் பார்த்தபடியே, அப்சத்துடன் பேசி சிரித்துக் கொண்டே பஸ்ஸில் வருவான்.
வகுப்பிற்கு இறங்கிச் செல்லும் போதும் அப்படித்தான். அவளை முன்னே நடக்கவிட்டு பின்னே தொடர்ந்து வருவான். அதைக் கவனியாதது போல் கவனிப்பதில் ஓர் அளாவதிய ஆனந்தம் அவளுக்கு. அவனின் கண்கள் அவளைப் பின் தொடர்ந்து கொண்டே இருப்பது அவளுக்குக் குதுகலமாய் இருக்கும். அவனின் செயல்களை அவன் அறியாமல் கண்கானித்துக் கொண்டேதான் இருந்தாள்.
அந்தப் பார்வை இப்போது சமீபகாலமாய் பின் வருவதில்லை. அதற்கு காரணம் இது கடைசி செமஸ்டர்... ப்ராஜெக்ட் வெர்க், எக்ஸாம் எனப் பல வேலைகள் இருந்து கொண்டே இருந்தது.
எதைச் செய்தாலும் முழு மனத்துடன் செய்து முடிக்க நினைக்கும் தீவிரம் கார்த்திக்கிடம் இருந்ததால் கல்லூரி படிப்பிலும் அவன் டாப்பராகவே இருந்தான்.
'என்ன இருந்தாலும் என்னைத் தொடர்வதை விட அவனுக்கு வேறு வேலையா முக்கியம். ' என்பது முதல் கோபம்.
அடுத்தது... முக்கியமானதும் கூட.
கேம்பஸ் இன்டவியூ…
படித்து முடிக்கும் முன்னரே பல இளைஞர்களை நேர்காணல் மூலம் தங்களின் நிறுவனங்களுக்கு வேலைக்கு எடுப்பது வழக்கம்.
கார்த்திக், தனக்காக இங்கு வந்து சேர்ந்து படித்தது போல், சமையல் கார ஆசையை விட்டு விட்டுடு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்வான் என எதிர்பார்த்தாள். அப்படி வேறு வேலை கிடைத்தால் தன் அண்ணன் விகாஸ்ஸிடம் சொல்லி தங்களின் திருமணத்தை நடத்தி விடலாம் என்று நினைத்தாள். ஆனால்… அது நடக்காது போனது.
அவனின் திறமைக்கு நேர்காணல் எல்லாம் தேவையே இல்லை. அப்பாய்மெண்ட் லெட்டரே கொடுக்கலாம். ஆனால் அதற்கு நேர்முகத் தேர்வை அட்டன் செய்ய வேண்டும்.
'என்ன இன்டர்வியூ நடந்ததா?' எனக் கேட்கும் அளவுக்கு அலட்சியமாக அந்த நேர்காணல் எதிலும் பங்கு கொள்ளாது சுற்றி திரிந்தான் கார்த்தி. எனவே அவனிடம் காரணம் கேட்க,
" எனக்கு எதுக்கு அந்த வேல ஜோஹிதா. நான் தான் ஆல்ரெடி ஒரு நல்ல ஜாப்ல இருக்கேனே. அப்றம் எதுக்கு வேற வேலை தேடணும். " என்றவனுக்கு செஃப் வேலையை விட விருப்பமில்லை.
"எது நல்ல ஜாப்?. அந்தச் சமையக்கார வேலையா!." நக்கலாக கேட்டு அவனுடன் வாதம் செய்தாள் அவள்.
" இன்டர்வியூ அட்டன் பண்ணி வேலைக்கி போய், அந்த கம்பெனிக்காரனுங்க தர்ற சம்பளத்த விட நான் பாக்குற வேலைல அதிகமாவே கிடைக்கும். எனக்குப் பிடிச்ச வேலையும் கூட. அதுனால எனக்கு வேற வேலை தேவயில்லை." என உறுதியாக சொல்ல, ஜோஹிதா அதீத கோபம் அடைந்தாள்.
'நான் நல்ல சமையக்காரனாத்தா ஆகுவேன்.' என அடம்பிடித்த கார்த்திக்கின் மீது ஆங்காரம் வந்தது.
இந்த ஆத்திரத்தை அதிகப்படுத்துவது போல் இந்த வாணி வேறு, ‘கார்த்தி… கார்த்தி…’ என அவனைச் சுற்றி சுற்றி வந்தாள். அவளால் தான் அவனின் பார்வைத் தன் பக்கம் திரும்பவில்லை என அதற்கும் ஆங்காரம் கொண்டாள் ஜோஹிதா.
" குட் மார்னிங் ஜோஹிதா. இங்க வந்து உக்காரு. " என பஸ்ஸில் அவளுக்குத் தான் இருந்த இடத்தை விட்டுக் கொடுத்து, எழுந்து வேறு இடம் அமர்ந்தான் நவீன். அவனுக்குப் புன்னகையைத் தந்தவள் அவன் எழுந்த இடத்தில் அமர்ந்து கொண்டு கார்த்திக்கைப் பார்க்க,
அவன் அப்போது தான் அப்சத்துடன் உள்ளே ஏறி வந்தான். நவீனைப் போல் அவனுக்கு இடம் கொடுக்க எந்தக் கருணை உள்ளமும் கொண்டவர்கள் முன் வராததால் படிக்கட்டின் அருகே நின்று கொண்டு வந்தான். வழக்கம் போல் பேசி சிரித்தபடி அவன் இருக்க, இங்கு ஜோஹிதாவின் மூச்சு தான் குச்சர் விசில் போல் நீண்டு வந்தது.
"ப்ராஜெக்ட் முடிச்சிட்டியா ஜோஹிதா. நாளைக்கி நாம அத கட்டாயம் சமிட் பண்ணணும். "
" ம்… முடிச்சிட்டேன் நவீன். " என்றாள் கார்த்திக்கைப் பார்த்தபடி இருந்தாள். அதைக் கண்ட நவீன்,
"நீ தான் அவனப் பாத்து பாத்து ஏங்குற!. ஆனா அவனுக்கு உன்னோட நினப்பே கிடையாது. இப்பல்லாம் அவெ அந்தக் கருவாச்சி கூட தான் அதிகமா சுத்திறான். அவனோட காதலி யாருன்னு கன்ஃப்யூஷனா இருக்கு. " என நவீன் ஓரக்கண்ணால் ஜோஹிதாவைப் பார்த்து பேச, அவள் எவ்வித ரியாக்ஷனும் காட்ட வில்லை.
" கருவாச்சியா? யாரு பைய்யா அது?. " என உடன் பஸ்ஸில் பயணிப்பவர்கள் மட்டுமல்ல ஜோஹிதாவின் வகுப்பு மற்றும் கல்லூரியைச் சேர்ந்த பலர் ஆவலாக இருந்தனர், நவீனின் புரணி பேச்சை கேட்க.
"அதான் க்ளாஸ் மாறி வந்தேன்னு நம்ம க்ளாஸ்க்கு வந்து காமெடி பண்ணுச்சே. அது தான். "
" அவளா!! நம்ம கார்த்திக்கு அவளயெல்லாமா நிமிந்து பாக்குறான்?"
" நீ வேற… அவளுக்குக் கைல அடி பட்டுச்சின்னு சோத்த ஊட்டி வாய்ல வச்சான். நீ அதப் பாக்கலயா!. கேண்டின் முழுக்கு அது தான் பேச்சி. தெரியுமா?." எனக் கேட்க, அங்கிருந்தவர்கள் ஆவலாக நவீனின் வாயைப் பார்த்தனர்.
முன்பெல்லாம் ஜோஹிதாவிற்கு நவீனின் இந்த மாதிரியானப் பேச்சு அருவருப்பாக இருக்கும். ஆணிடம் கைக் குழுக்கினாலே இருவருக்கும் இடையைத் தொடர்பு உள்ளது எனக் கதை கட்டி விடும் பிற்போக்கான சிந்தனையை அவள் வெறுத்தாள்.
ஏன் தந்தை ஊட்டி விடுவதில்லையா? அண்ணனுடன் பைக்கில் வருவதில்லையா?. தம்பியை அணைப்பதில்லையா?. அவர்கள் எல்லாம் ஆண்கள் இல்லையா?. ஏன் அனைத்தையும் விகல்பமாகவே பார்வை வேண்டும்.
மனத்தில் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவருக்கு அறிவுரை வழங்கு கும்பலை கண்டால் அவளுக்குப் பிடிக்காது.
அவள் வாணியும் கார்த்திக்கும் பழகுவதில் எவ்வித காதலையும் காமத்தையும் இதுவரை பார்த்து இல்லை. வாணி சிறுபிள்ளைத்தனத்துடன் நடந்து கொள்ளும் ஆர்வக்கோளாறு. அவ்வளவு தான்.
வாணி கார்த்திக்கின் உறவில் சந்தேகம் இல்லை என்றாலும், வர வைக்கும் எண்ணத்தில் பேசினான் நவீன். சமீபகாலமாக அதில் வெற்றியும் அவனுக்கே.
நவீனின் பேச்சு காதில் விழுந்ததால் மனம் ஆத்திரம் கொள்ள, அதை பிறரிடம் காட்டாது சாலையைப் பார்த்தபடி இருந்தாள் ஜோஹிதா. அது நவீனுக்குள் குரோதத்தை உண்டாக்கியது.
அவனும் தலைகீழா நின்று குட்டி கர்ணம் எல்லாம் அடித்து பார்த்து விட்டான். ஆனால் ஜோஹிதாவின் கடைகள் கண் பார்வை கூட அவனின் மீது பாசமாக விழவே இல்லை.
கொஞ்சம் சிரித்து பேசினால் கூட போதும். விகாஸ்ஸிடம் சொல்லி திருமண வரை கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தவனின் எண்ணத்தைத் திரும்ப வளராத படி ஆசிட் ஊற்றி அழித்துவிட்டாள்.
தனக்கு அவள் கிடைக்கவில்லை எனில் கார்த்திக்கும் கிடைக்க கூடாது, என்ற நல்ல எண்ணத்தில் செயல் பட தொடங்கிவிட்டான். கிரிக்கெட் கமெண்டரி போல். அவன் நின்றான், நடந்தான், பாத்ரும் சென்றான் எனக் கார்த்திக், என்ன செய்தாலும், வந்து ஜோஹிதாவிடம் திரும்ப திரும்ப ஸ்லோ மோஷனில் ரிப்பீட் மோடில் கூறத் தொடங்கினான்.
அதில் ஒன்று தான் வாணி கார்த்திகேயனின் உறவு. அவளிடம் சொன்னால் மட்டும் கதையாகாது என அவளின் வட்டத்தில் அனைவரிடமும் வதந்தியாய்ப் பரப்பத் தொடங்கினான்.
மேலே சொன்னது தான். கரைப்பார் கரைக்க கல்லே கரையும் போது ஜோஹிதா மட்டும் விதி விலக்கா என்ன?
" கார்த்தி மட்டுமில்ல, அந்தக் கருவாச்சி, முருகு, அப்சத்து சர்வான்னு எல்லார் கூடவே இளிக்கிறா!. ரெட் லைட் காரியா இருப்பா போல. ஆம்பளய மயக்குற திறமை அவக்கிட்ட நிறையவே இருக்கு. நேத்து கூட ஒரு இங்கிலீஷ் படத்தையே நடுரோட்டுல நின்னு கார்த்திக் கூட ஓட்டீட்டு இருந்தா!. இவனும் அதுக்கு நல்லா ஈடு குடுத்தான்.” என்று பல்வேறு கோணங்களில் அவன் பார்த்ததைத் திரித்து ஆங்கிலப்படம் காட்டினான்.
“அந்தக் கருவாச்சி தான் கார்த்தி கைய பிடிச்சி இழுத்திட்டு போய். மரத்துக்கு கீழ... ம்… ம்.. சுத்தி பொம்பளப்பிள்ளைங்க இருக்குறதுனால வெளிப்படையா சொல்ல முடியல. ஆனா சீனு வேற மாதிரி இருந்தது. ஹாலிவுட் படத்தையே தூக்கி சாப்பிடுற அளவுக்கு. " என ரசித்து ரசித்து சொல்ல, ஜோஹிதா எழுந்து நின்று கொண்டாள்.
கேட்கவே காது கூசியது. நினைத்து பார்க்க கூட இயலாது அவள் தவித்தாள். கார்த்திக்குடன் வேறு பெண்… என்ற எண்ணமே அவளைச் சுட்டது.
ஸ்டாப்பிங் வர உள்ளதால் படிக்கட்டை நோக்கி நடந்தாள். நவீன் கார்த்திக்கின் அருகில் ஜோஹிதா செல்லும் சமயம் அவளின் காலை தட்டி விட்டான். அவள் நிலை தடுமாறி கீழே விழும் முன் கார்த்திக் தாங்கிப் பிடித்தான்.
"ஏய்… பாத்து ஜோ. " என அவன் அடுத்த வார்த்தைக்கு வாய்த் திறக்கும் முன் அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ஜோஹிதா.
" பொறுக்கி... எவளையாது எப்படா தொடலாம்னு அழையுற. ச்சீ... " என்க, கார்த்திக்கிற்கு நடப்பதைப் புரிந்து கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது.
புரிந்த பின் அவன் கோபம் கொள்ள, நவீன், ஜோஹிதாவிற்கு ஆதரவாக வர, அப்சத்தும் பேச, கார்த்தி நவீனின் வாயை உடைக்க என பேருந்து போர்க்களம் போல் ஆனது.
அதைப் பார்த்த கண்டெக்டர் காவல் நிலையத்திற்கு வண்டியை விடச் சொல்ல, ஜோஹிதா, கார்த்திக்கின் மீது ஈஃப்டீசிங் கேஸ் கொடுத்தாள். நவீன், கார்த்திக் வேண்டும் என்றே ஜோஹிதாவைத் தடுக்கி விழ வைத்து அவளிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக பொய்ச் சாட்சி சொல்ல. கார்த்திக் கைதியாகிப் போனான்.
அதைக் கல்லூரி முழுவதும் கார்த்திக்கின் பெயரை கெடுக்கும் வகையில் பரப்பி, நவீன் கார்த்திக்கை பழி வாங்கிக் கொண்டிருந்தான்.
தன்னை ஜோஹிதா அறைந்ததில் கூடக் காயப்படவில்லை அவன். அவள் சுமத்திய குற்றம் தான் அவனுக்கு மிகவும் பெரியதாக பட்டது.
அவளைப் பார்த்து பேசி பழகிய இத்தனை ஆண்டுகளில் அவனின் விழிகளைத் தவிர்த்து வேறெங்கும் பார்த்து இல்லை அவன். பருவ வயதிற்கே உரிய எந்த ஆசையையும் அவன் அவளிடம் காட்டியது இல்லை. காதலாய்க் காதலியிடம் பகிரப்படும் முத்தங்களைக் கூட அவளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை அவன்.
அவளைத் திருமணம் செய்து கொண்டு குடும்பமாய் வாழ வேண்டும். தாபம் மோகம் எல்லாம் திருமணமெனும் கரையில் ஏறிய பின் பார்த்து கொள்ளலாம் என்றிருந்தால்.
ஜோஹிதாவும் அப்படி தான், அவனைக் கரம் கோர்க்க மட்டுமே அனுமதித்தாள். அதைத் தவிர்த்து வேறு எங்கும் கார்த்தியின் கரம் தீண்டியது இல்லை.
இன்று அவளின் இடையைப் பற்றிக் கீழே விழுல இருந்தவளைக் காப்பாற்ற, அதைத் தவறாக சுட்டிக் காட்டி தன்னை அனைவர் மத்தியிலும் அசிங்கப்படுத்தி விட்டாள் என்ற வேதனை அவனிடம் அதிகமாவே இருந்தது.
' எவ கூடவோ கொஞ்சி குலாவிட்டு வந்து அதே கையால என்ன வேற தொட்டுட்டான். ச்சீ... ' என்ற அருவெறுப்பு தான் அவளை அவ்வாறு பேச வைத்து. நவீனின் போதனைகளை உண்மை என நினைத்து மனம் சந்தேகம் எனும் புதைகுழியில் இறங்கியது.
அவன் தன்னைத் தீண்ட மாட்டானா! ஏன் கரம் பற்ற மாட்டானா! என அவள் ஏங்கும் காலம் வந்து சொல்லியது கார்த்தியின் மனகாயத்தை.
" Mr. Karthik, somebody is waiting for you. " என்றான் ஒருவன்.
நட்சத்திர விடுதி அது. கல்லூரி முடிந்ததும் இங்கு வந்து விடுவான். இரவு உணவும் நள்ளிரவில் கேட்கப்படும் உணவையும் செய்து கொடுக்கும் பணி. இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தான் பணி முடித்து செல்வான்.
இப்போது நேரம் பத்து.
" Did they say who is there?"என்றான் ஆங்கிலத்தில், 'வந்திருப்பது யார் என்று கூறினார்களா?'
" No... But here comes a girl. a very beautiful… girl. " என்றான் அவன். வெளி நாட்டு செஃப் போலும்.
'இல்லை ஆனால் வந்திருப்பது ஒரு பெண். மிகவும் அழகான பெண்.' என்றா அழகானவில் அதிக அழுத்தம் கொடுத்து ரசித்து கூறினான் அவன்.
அவன் கூறியதைக் கேட்டு கார்த்திக்கிற்கு இரு நாட்களுக்கு முன் நடந்ததைப் பற்றி வருந்தி பேச ஜோஹிதாதான் வந்திருக்கிறாள் என நினைத்து வேக வேகமாக ஏப்ரானைக் கலட்டிப் போட்டு விட்டு ஓடிச் சென்று பார்க்க, அங்கு இருந்தது…
ஜோதிவாணி….
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..