முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 94

அத்தியாயம்: 94


"நீயா! நீ எதுக்கு இங்க வந்த ஜோதி?" என்றவன் முகத்தில் இருந்த ஏமாற்றம் அவளை உறுத்தியது. 


கார்த்திக், வாணியைத் தனியாக எங்கும் அழைத்து சென்றது இல்லை. முருகு தான், ' எந்தங்கச்சி தாமர மாதிரி.' என்று சொல்லி அருகில் இருக்கும் இடத்தை‌த் தவிர்த்து‌, தூரமா அவளைத் தனித்து அழைத்து செல்ல விட மாட்டான். அண்ணனாய் அவளைப் பாதுகாக்கிறானாம். 


அவளுக்கும் அந்த அப்பார்ட்மெண்ட், காலேஜ், அவளுக்கும் வீட்டைச் சுற்றி சில இடங்களைத் தவிர வேறு எந்த இடமும் தெரியாது. 


பல ஆண்டுகளாக தலைநகரில் இருந்தும் அதைச் சுற்றி பார்த்தது கிடையாது. யாரும் அவளைச் சுற்றி பார்க்க அழைத்து சென்றதும் கிடையாது‌ என்று கார்த்திக் அறிவான். 


இப்போது அவள் தனியாக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். அதுவும் என்னை தேடி. இந்த இரவு பொழுது. ஏன்? எனப் புருவம் சுருக்கி யோசித்தானுக்கு மனத்தில் மெல்லிய சாரல், தனக்காக வந்திருக்கிறாள் என்று. 


" உன்னைப் பாக்கத்தா வந்தேன் கார்த்தி. நீ ஏன் இன்னைக்கி காலேஜ் வரல. அதான் உன்னைத் தேடி நான் வந்தேன். " என்க. 


"ம்ச்… முதல்ல கிளம்பு. " என்றவன் ஏமாற்றத்துடன் உள்ளே செல்ல பார்க்க, 


"கார்த்தி… கார்த்தி… நா உன்னைத் தேடி வந்துக்கான காரணத்தா சொல்லவே இல்ல. நீயும் கேக்கவே இல்ல. அதுக்குள்ள என்னைப் போன்னு விரட்டுற. " என அவனுடன் நடக்க,


"என்ன நடந்ததுன்னு உனக்கு உளவுத்துற தகவல் சொல்லிருக்குமே. அட்வைஸ் பண்றேங்கிற பேர்ல கழுத்தறுக்க வந்திருக்கு… சரியா?. " 


"ச்சச்ச… அட்வைஸ் பண்ற அளவுக்கு அறிவு இருந்தா நான் இன்னேரம் எங்கையோ போயிருப்பேன். அது இல்லாததுனால தான வேலக்காரியா இருக்கேன். " என்க, அவன் சட்டென நின்று விட்டான். அவளின் வேலைக்காரி என்ற வார்த்தை அவனை நிற்க வைத்தது.


"அப்ப எதுக்கு வந்த?" 


" முக்கியமான ஒன்னு. அந்த முக்கியமானத உன்னைத்தவிர வேற யாராலையும் சொல்லித்தர முடியாது." எனக் கதை அளக்க,


" ரொம்ப சுத்தாம சீக்கிரம் சொல்லு டி. " என்றான் பொறுமை இழந்து.


"அது… அடுத்த வாரம் சின்னுக்கு பிறந்த நாள். " 


"அதுக்கு... என்னாலலாம் அவன வாழ்த்தி பாட்டு பாட முடியாது. " 


"நீ பாடுனா யாரு கேப்பா. " என்றவளைக் கார்த்தி முறைக்க, 


"அது… நான் அவனுக்கு சர்ப்ரைஸ்ஸா ஏதாவது செய்யலாம்னு நினைச்சேன்‌. உடனே எனக்குச் சின்னு சாப்பிடுற ஒன்னு நியாபகம் வந்துச்சி. கத்து குடுக்குறீயா. " 


"என்னதது? " 


"பேரு என்னமோ சொன்னானே. ம்... ஸ்பெ….ஸ்பேகா." என இழுக்க,


" ஸ்பெகட்டி." 


"ம்…. அது தான். இட்டாலியன் ஷ்பெகட்டி. ஒரு வகையான பாஸ்தான்னு சொன்னான். கார்த்தி… ப்ளிஸ்... எனக்கு அதைச் செய்ய சொல்லித்தர்றீயா. அதுவும் ஒரு வாரத்துக்குள்ள… ம். " எனப் பூனைக் குட்டி போல் கெஞ்ச,


" முடியாது... கிளம்பு இங்கருந்து. " என்றவன் நடக்கத் தொடங்கினான்.


" இவ்ளோ பெரிய ஹோட்டல் வச்சி நடத்துற உனக்கு ஒரு பாஸ்தா செய்ய தெரியலயலன்னு சொன்னா எல்லாரும் சிரிக்க போறாங்க.‌ பேசாட்டிக்கி கடைய இழுத்து மூடிடுட்டு இடத்த வித்திடு. " என்று அறிவுரை வழங்க,


'எது இடத்த விக்கவா?. யாரு இடத்த யாரு விக்கிறது. ஹோட்டல் ஓனருக்குத் தெரிஞ்சது, ஆட்டுத்தோல உரிக்கிற மாதிரி உரிச்சு எடுத்திடுவான்.' என நினைத்தவன் அவளின் அருகில் செல்ல,


"நான் இதுக்கு ஓனர்னா நீ நினைச்சிட்டு இருக்க! " 


"ம்… இங்க பாரு உங்கிட்ட வர்ற கஸ்டமர் கேக்குறத சமைக்க தெரிஞ்சாத்தா இவ்வளவு பெரிய ஹோட்டல வச்சி நடத்த முடியும். இல்லன்னா மூடு விழா தான். எதுக்கும் நீ உன்னோட சமையல் திறமைய வளத்துக்க இத்தாலி போ. அங்க தான் நல்ல நல்ல சாப்பாடெல்லாம் சமைப்பாங்கலாம். " 


"இத்தாலில மட்டும் தான் நல்லா சமைப்பாங்களா?." 


" ம்…" 


"இந்த விசயத்த யாரு சொன்னா?. உன் சின்னுவா?. " எனறான் புன்னகையுடன். அவள் ஆம் என தலையசைக்க,


"ஜோதி... நான் இங்க வேலை பாக்குற ஒரு ஆள் தான். செஃப்… உன்னோட பாஷைல சொல்லணும்னா, சமையக்காரென். ரொம்ப சாதாரண சமைக்காரெ." என்ற போது ஜோஹிதாவின் முகம் தான் நினைவில் வந்தது. 


" அதுனால என்ன! என்னைக்காது ஒரு நாள் இந்த மாதிரி... ச்ச... இதவிட பெரிய ஹோட்டல நீ கட்டுவ. அப்ப வர்ற கஸ்டமர் பாஸ்தா கேட்டா என்ன பண்ணுவ?. சமைக்க  தெரியாது பக்கத்து கடைல போய் சாப்பிடுங்கன்னு துரத்தி விட்டுடுவியா!. பொறுப்புள்ள முதலாளியா நடந்துக்க."  


"யாரு நானு? "


"ம்.‌.." 


" முதலாளி!! " 


"ஆமா..."


" இந்த ரெஸ்டாரன்ட்டுக்கு?. " 


" ச்ச… ச்ச... இத விட பெரிய ஹோட்டலுக்கு. அதுவும் இங்க இல்ல. அமெரிக்கால. " 


" ஏன் உன் சின்னுவ கூட்டீட்டு வந்து ஓசி சாப்பாடு சாப்பிடவா?" 


"ஏன் வரக்கூடாதா! கவலப்படாத நான் உனக்கு டிப்ஸ் குடுப்பேன். பட் சின்னுவுக்குப் பிடிச்ச மாதிரி பாஸ்தா செஞ்சி தந்தா மட்டும் தான்." என்றவளை முறைக்க மட்டும்தான் முடிந்தது. 


" நீ ஒருத்தியாது நான் ரெஸ்டாரன்ட் வச்சி நடத்துவேன்னு நம்புறீயே அதுவரைக்கும் சந்தோஷம்‌. " என வெறுப்பாக வந்தது வார்த்தை.


" கார்த்தி‌.. நம்மோட இலக்கு மத்தவங்களுக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா அது நம்மோட இலக்கு. அவங்களுக்காக நம்மோட பாதைய மாத்திக்க நினைக்கிறது முட்டாள்தனம். 


லட்சியத்த அடைய எத்தன கஷ்டம் வேணும்னாலும் வரலாம். யார் யாரோ தடையா வந்து நிக்கலாம். அவங்களப் பாக்காம நீ உன்னோட முயற்சிய தயங்காம தொடர்ந்து செய் கார்த்தி. உனக்கான பலன் உன்னைத் தேடி வரும். 


உன்னை ஜோஹிதா ஒரு நாள் கண்டிப்பா புரிஞ்சிபா. அவளே உன்னைத் தேடியும் வருவா. அப்பவும் நீ உனக்குப் பிடிச்ச அதே செஃப்பா இருக்கணும். உன்னை மாத்திக்காத. 


நீ உன்னோட ஜோஹிதா கைய பிடிச்சிட்டு உன்னோட இலக்க அடையும் போது, அவளே சொல்லுவா. நான் ஜோஹிதா கார்த்திகேயன்னு.” என்றவள். 


“கொஞ்சம் அவளுக்காக மட்டுமில்ல, எனக்காகவும் நீ பெரிய ஹோட்டல் கட்டணும். பெரிய செஃப்பா வரணும். செய்வீயா. " என்றவளின் வாக்கு அவனுக்கு வேத வாக்காக மாறியது அவனுக்கு. 


"என்ன திடீர்னு அறிவுரலாம் சொல்ற! " 


" தோனுச்சி... சொன்னேன்... சரி நான் கிளம்புறேன். " என்றவள் நடக்கத் தொடங்கினாள்.


" ஹே ஜோ... பாஸ்தான்னா என்னன்னு தெரியுமா உனக்கு?" 


"நீ தான் சொல்லித்தர மாட்டேன்னு சொல்லீட்டியே. அப்றம் அது எப்படி இருந்தா எனக்கு என்ன?" 


" சொல்லித் தர மாட்டேன்னு நான் எப்பச் சொன்னேன்.?" என்றபோது வேகமாக ஓடி வந்து அவனின் முன் நின்றவள்,


" சொல்லித்தாரீயா. " என விழி விரிய ஆர்வமுடன் கேட்டவளின் முகத்தை ரசிக்க தொடங்கினான் கார்த்தி. 


தனக்காக வந்துள்ளாள் என்ற நினைப்பு அவனுள் கிளர்ச்சியை உண்டாக்கி, அவளின் கொஞ்சல் மொழி பேசும் முகத்தை ரசிக்க வைத்து அப்போது மட்டுமல்ல எப்பொழுதுமே ரசித்தான். 


அவளின் கையைப் பற்றி அந்த நட்சத்திரம் உணவகத்திற்குள் அழைத்துச் சென்றான். 


'இவ்ளோ பெரிய இடமா!. இவ்ளோ பெரிய கிச்சனா!. இவ்ளோ பெரிய அடுப்பா!. இது என்ன? அது என்ன?. ' என வாய் மூடாது கேள்வி மேல் கேள்வி கேட்டு கார்த்தியின் மனநிலையைச் சட்டென மாற்றிவிட்டவளை ஆழமான தன் பார்வையால் ஸ்கேன் செய்து நெஞ்சில் பதிவேற்றிக் கொண்டிருந்தான். 


பணி முடியும் வரை அவளைத் தன்னுடனேயே வைத்திருந்தான். இருவரும் தனியாக பஸ்ஸில் பயணம் செய்தனர். அப்போதும் அவள் வாயை மூடவே இல்லையே. டில்லியைச் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே வந்தாள். ' பெரிய பெரிய பிள்டிங்கா இருக்கில்ல!. இதெல்லாம் எப்ப கட்டிருப்பாங்க.! ' என ஜன்னலின் வழியே தலையை வெளியே நீட்டியவளின் மீது பாசத்தையும் பரிவையும் தாண்டி எதுவோ ஒன்று தோன்றியது கார்த்திக்கிற்கு. 


அந்தப் பேருந்து பயணம் கார்த்திக்கின் மனத்தை இதமாய் வருட, அவளுடனான தன் பொழுதை ரசித்து யாருக்கும் தெரியாது ரகசியமாய் அனுபவிக்க தொடங்கினான்.‌


அடுத்தடுத்து வந்த நாட்களில் கார்த்தி, இரவு அவளைத் தான் பணி புரியும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அவளுடன் சேர்ந்து சமைக்கும் போது மனம் லேசாவதை போல் ஓர் உணர்வு வர. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பெயர் தெரியாத அந்த உணர்வுப் பிடிக்குள் சுகமாய் சிக்கித் தவிக்க ஆரம்பித்தான். 


மூன்று நாட்களாக அப்பார்ட்மெண்ட்டுக்கும் இரவில் பாய் கடைக்கும் வாணி வேலைக்கு வராததற்கு காரணம் என்ன எனத் தெரியாது முழித்த ராஜியின் முன் வந்து நின்றான் முரளி. 


"எங்க வீட்டு பிடிச்சி பீடை இப்ப கார்த்தியையும் சேத்து வச்சி ஆட்டுது போல. இப்ப எங்க அந்தப் பீடை?." 


"எனக்கு எப்படித் தெரியும்.‌ பீடையா!. யாரு யார பிடிச்சி ஆட்டுதுன்னு சொல்ற.? " 


"சும்மா நடிக்காத. " எனப் பற்களை அறைக்க,


"நீ என்ன விருது வழங்குற குழுவுல ஒருத்தனா?. உம்முன்னாடி நடிச்சிக் காட்டினாத்தான் விருது குடுப்பேன்னு சொல்ல. " நக்கலாக இதழ் சுளிக்க,


"அந்தச் சனியெ செய்ற வேலைய நான் இவ்ளோ நாள் எங்காத்தாட்ட சொல்லாம இருக்கு காரணமே அந்த *** யால கார்த்தி ஜோஹிதா வாழ்க்கைல நல்லது நடக்குமின்னு தான்.‌. ஆனா அவா அவெ வாழ்க்கையையே அழிச்சிட்டு இருக்கா. விடியட்டும் அவளுக்கு இருக்கு. ஊர் மேய்ற ****யோட கால் உடச்சி முடமா அழைய விடுறேன்." 


" என்ன என்னென்னமோ பேசுற. கொஞ்ச புரியுற மாதிரிப் பேசுனாத்தா என்னவாம்.‌"  எனக் கேட்க, முரளி நடந்த ஜோஹிதா கார்த்திக்கின் சண்டையைப் பற்றி கூறினான். 


" மூணு நாளா அவெ காலேஜ்கு வரல. அந்தப் பொண்ணும் இவளால அழுதிட்டே திரியுது. சொல்லி வை அவ கிட்ட. ரெண்டு பேருக்கும் குறுக்க புகுந்து ஆட்டத்த கலச்சான்னு வை. அவா சாவு எங்கையால தான். " என எச்சரித்தான்.


ராஜி, கல்லூரி செல்லும் முன் வாணியைச் சந்தித்து விசாரிக்க தொடங்கினாள். வாணி கார்த்தி மீது தான் வைத்திருக்கும் காதலை அவளிடம் சொல்ல, வாணியின் கன்னம் எரிந்தது, ராஜி கொடுத்த அடியால். 


" பைத்தியமாடி நீ. அவனுக்குத் தான் காதலின்னு ஒருத்தி ஏற்கனவே இருக்காளே. அவனப்‌ போய் காதலிக்கிறேன்னு சொல்லுற. அவெ கிட்டத்தட்ட இன்னொருத்தியோட புருஷெ மாதிரித்தான். அவனப் பிடிச்சிருக்குன்னு சொல்றது உனக்குத் தப்பா தெரியலயா?. எப்படி டி உன்னால இப்படி யோசிக்க முடிஞ்சது. அடுத்தவ புருஷனுக்கு ஆசப்படுற ஈனப்பிறவியா நீ." எனக் கோபமாக கத்தினாள் ராஜி. ‌


"அப்படிப் பேசாத ராஜி. நான் கார்த்தியும் ஜோஹிதாவும் பிரியணும்னு நினைக்கவே இல்ல. " என்றாள் கண்ணீருடன்.‌


"அப்பறம் எதுக்கு உனக்கு இந்தப் புத்தி. பாத்தியா.. பேசுனியா… போனியான்னு இருந்திருக்கணும். அத விட்டுட்டு மனசுல ஆசைய வளத்தா... யாருக்குக் கஷ்டம். உனக்குத் தான. இங்க உன்னைப் பத்தி யோசிக்க யாருமே கிடையாது. இந்த விசயத்துல நான் உட்பட உனக்கு சப்போட்டா இருக்க முடியாது. எல்லாம் அவன சொல்லணும். அவன நேர்ல பாத்தா நாக்க புடுங்குற மாதிரிக் கேள்வி கேக்கணும்.‌ விவரம் தெரியாத பொண்ணு மனசுல ஆசைய வளக்குறீயே‌.‌. நீயெல்லாம் ஆம்பளயான்னு?. " என ஆத்திரத்தில் கார்த்தியைக் கண்டபடி திட்டித் தீர்த்தாள் ராஜி.


" ராஜி, வேண்டாம். நீ கார்த்திய திட்டுறத என்னால கேக்கவே முடியல. ப்ளிஸ்... அவனுக்கு என்னோட இந்த எண்ணம் தெரியவே தெரியாது. திட்டாத. அவெ மனசுல நான் கிடையாது. ஜோஹிதாவ தவிர அவெ எங்கிட்ட யார பத்தியும் பேசுனதும் கிடையாது. ப்ளிஸ். ராஜி." என்க, அவளை ஏற இறங்க பார்த்தவள். 


" இப்பல்லாம் ஆம்பள பயளுக தெளிவாத்தா இருக்கானுங்க. ஆனா அவனுங்கள, உன்னை மாதிரி பொண்ணுங்க தாண்டி கெடுக்குறதே. அவெ அவ்ளோ தெளிவா உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான். நான் ஒருத்திய விரும்புறேன். அவ கூடச் சேருறதுக்குத்தா உங்கிட்ட பழகுறேன்னு வெளக்கமா‌ சொல்லியும் அவெ மேல உனக்கு ஆசை வந்துச்சின்னா… அந்த மானங்கெட்ட மனச என்ன பண்ண. ச்சீ..." எனக் கண்டபடி ஏசினாள் ராஜி.


"எனக்கும் அது தெரியல ராஜி. எதைப் பாத்து நான் கார்த்திய விரும்புனேன்னு இப்ப வரை யோசிச்சிட்டே தான் இருக்கேன். ஆனா நான் கார்த்திய காதலிக்கிறது நிஜம். கடைசி வரை நான் காதலிச்சிட்டேத்தா இருப்பேன்‌. யாராலயும் அதத் தடுக்க முடியாது. " என்றாள் வாணி உறுதியாக. 


" அப்ப அத அவெங்கிட்ட சொல்லு. சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழு. " 


" அது எப்படி முடியும்?. அவங்களுக்குள்ள இப்ப வந்திருக்கும் சண்டய பயன்படுத்தி கார்த்திய நான் ஏமாத்துன மாதிரில இருக்கும். எனக்குக் கார்த்தியோட காதல் தேவையில்லை. என்னோட காதல் மட்டுமே போதும். " என்றவளுக்குத் தெரியாது அந்தக் காதல் கார்த்தியின் மனத்தில் வந்துவிட்டது என்று‌.


" என்ன தியாகி பட்டத்துக்கு எதுக்கும் எழுதி போட்டிருக்கீயா? எங்கிருந்தாலும் நீ வாழ்கன்னு பாட்டு பாடிட்டே அதுக ரெண்டு கல்யாணம் பண்ணி குழந்த குட்டியோட வாழ்றத ரோட்டுல ஒரு ஓரமா நின்று வாழ்த்தப் போறீயா. நீ கார்த்திய காதலிக்கிறது நிஜம்னா அத அவெங்கிட்ட சொல்லு. 


அந்த ஜோஹிதா தான் அவன விட்டுடுட்டு போய்ட்டால்ல. அப்றம் என்ன‌... இல்ல அவங்க ரெண்டு பேர்தா சேந்து வாழணும்னு நீ முடிவு பண்ணா. விட்டு விலகிடு.  ஒரேயடியா. கார்த்திய இனி பாத்து பாத்து உன்னை நீயே காயப்படுத்திக்காத. நாளைக்கு நீ அவனப் பாக்க போகக்கூடாது. பேசக்கூடாது. சத்தியம் பண்ணு. ." என கரம் நீட்டினாள்


" என்னால முடியாது." என்ற வாணியை ராஜி முறைக்க,


"இன்னும் ஒரு மாசத்துல அவனுக்கு கான்ட்ராக்ட் முடியுது.‌ அது முடியவும் அவெ சென்னைக்கி போய்டுவேன்னு சொன்னான். அப்றம் நான் யாருங்கிறதையே மறந்திடுவான். ஜோதின்னு ஒருத்தி அவெ வாழ்க்கை வந்ததே நியாயம் இருக்காது. அது வர மட்டும் நான் பாத்துக்கிறேன். பேச முயற்சி செய்ய மாட்டேன் ப்ளிஸ். " என்றவளுக்கு ராஜி சொல்வது சரி எனப் பட்டது. அவனை விட்டு விலகி இருப்பது மட்டுமே ஒரே வழி. இன்னும் சில நாட்கள் தானே. 


ஆனால் அந்த நாட்களில் விலகி இருக்க முடியுமா என்ன?.


இருவரின் காதலுக்கு முதல் எதிர்ப்பு ராஜியிடம் இருந்து வந்தது. அதை இப்போதைக்கு சமாளித்து விட்டாள். ஆனால் சுற்றி நிற்க வைத்து விதி எதிர்க்கும் போது எப்படிச் சமாளிப்பாள்? 

 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...