முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 96


 

அத்தியாயம்: 96


கள்ளுர பார்க்கும் பார்வை 


உள்ளூர பாயுமே…


துள்ளாமல் துள்ளும் உள்ளம் 


சல்லாபமே…


வில்லோடு அம்பு ரெண்டு 


கொல்லாமல் கொல்லுதே…


பெண் பாவை கண்கள் என்று 


பொய் சொல்லுதே…


முந்தானை மூடும் ராணி 


செல்வாக்கிலே…


என் காதல் கண்கள் போகும் 


பல்லாக்கிலே…


தேனோடை ஓரமே 


நீராடும் நேரமே…


புல்லாங்குழல் தள்ளாடுமே 


பொன் மேனி கேளாய் ராணி…


வானொலியில் ஒலித்த பாடல் அது. இளையராஜாவின் மெட்டில் பாடல் அழகாய்க் காற்றில் கேட்க, அதற்கு இணையாக கார்த்தியின் தலை தானாக ஆடியது. உடலோடு மனமும் சேர்ந்து அந்தப் பாடலுக்கு ஆடியது. அவனின் ஜோவுடன்... 


"ஆஹா…. ஆஹா…. காதல கம்பியாக் காச்சி, காதுல ஊத்துற ஒரே ஆளு நம்ம இளையராஜா தான்ய்யா. என்னா பாட்டு…. அதுல ஏசுதாஸ் வாய்ஸ்ஸு உணர்ச்சி இல்லாத தூணுக்குக்கு கூடக் காதல் உணர்வ ஊட்டும்யா... ஆஹா... ஆஹா…. " நம் முருகு தான். 


அனைவரும் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்திருந்தனர். பரீட்சை முடிந்து விட்டதால் ஊர் திரும்புகின்றனர். கார்த்திக்கைத் தவிர‌. அதிலும் முருகு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளான். அவனுக்கு வேலை கிடைத்து விட்டது. சென்னையில் தான். டில்லியில் தருவதாகச் சொன்ன வேலையை மறுத்து சென்னையில் கேட்டு வாங்கிக் கொண்டான். 


"எவ்ளோ நாளைக்கி தான் காஞ்ச சப்பாத்திய சாப்பிடுறது. எனக்குச் சோறு தான் வேணும் ஆத்தா. அதுவும் எங்காத்தா கையால சமச்ச சோறு வேணும். தொலை தூரத்திற்கு வந்ததுக்கு அப்றம் தான் தாய்ப் பாசம்னா என்னன்னு தெரியுது. அதுலையும் இவெ சமயல சாப்பிடும் போது என்னைப் பெத்தவள நான் ரொம்ப மிஸ் பண்ணேன். " என முருகு கார்த்திக்கைக் சுட்டிக் காட்டி சொல்ல,


" இப்ப சொல்லு. வகவகையா திங்கும் போது தெரியலயாக்கும். உனக்கு இனி நான் சமச்சி தர மாட்டேன்டா. தட்ட எடுத்திட்டு பசின்னு வா. மாட்டு சாணிய சுட்டு தட்டுல போடுறேன். " எனக் கார்த்தி சண்டைக்கு நிற்க,


" நீ குடுக்குற சப்பாத்தியே அப்படித்தா இருக்கும். ஆனா எங்கம்மா செய்ற இட்லி மல்லிப்பூ மாறி மிருதுவா... வெள்ளையா... வாசமா... ம்... ம்... " எனக் காற்றை உணவாக உண்டு கொண்டிருந்தான் முருகு. குடும்பத்துடன் இருக்க போகும் மகிழ்ச்சியில். 


" எல்லாரும் குடும்பமாத் தான் இருக்க போறோம். ஆனா கார்த்தி நீ. அடுத்து என்ன பண்ண போற?. " 


" வேறென்ன... ஒரு க்ரூயல் ஷிப்க்கு அப்ளிக்கேஷன் போட்டிருக்கேன். கிடைக்கிற வர கிடைச்ச சின்ன சின்ன வேலய பாத்திட்டு, பாட்டிய கூட்டி வந்து பக்கத்துல வச்சிக்கலாம்னு இருக்கேன். " 


கான்ட்ராக்ட் மூலமாகத் தான் டெல்லியில் வேலை செய்கிறான். இரண்டு வருடங்கள். இதோ அது முடிய போகிறது. இனி சென்னைத்தான்.


" நான் குடும்பத்த பத்திப் பேசுறேன் கார்த்திக். " என்றான் அப்சத் அழுத்தமாக.


" நானும் அதப் பத்தி தான் பேசுறேன்.  நானும் பாட்டியும் சேந்தா குடும்பன்னு சொல்லி ரேஷன் கார்டு தர மாட்டானுங்களா?. நான் அதோட சொந்த மகன் பிள்ளை. பேரன்... அதோட கடைசி காலத்துல எங்கூட இருக்கணும்னு அதுக்கு ஆசை. " 


" ம்ச்... நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு‌ப் புரியலயா கார்த்தி. " என அப்சத் எரிச்சலாகச் சொல்ல,


"புரியாமலா இல்ல. ஆனா அது எந்த விதத்துல நியாயம்னு நீயே சொல்லு. எப்பயும் நான் மட்டுமே தான் இறங்கி போகணுமா?. இதுவரைக்கும் சரி. ஏன்னா அவள நான் காயப்படுத்திட்டேன். பீச்ல வச்சி தேவையில்லாம கோபமாத் திட்டிட்டேன். அந்தக் குற்ற உணர்ச்சி தான் அவ பின்னாடி போக காரணம் ஆனா இந்த மொற... என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டா…” என்றவனுக்கு வேதனை. 


அவளுக்காகத் தானே இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்தான். இரண்டு ஆண்டுகள் நாயைப் போல அவளின் பின்னாலேயே சுற்றினான். அவளின் அலட்சியத்தில் குளித்தான். இப்பொழுது அவமானப்பட்டு நிற்கிறான். 


தன் காதலை நிறுபிக்க இன்னும் என்னென்ன செய்ய வேண்டும்.


“இனி எங்களுக்கு எதுவுமே இல்ல. ரெண்டு வர்ஷத்துக்கு முன்னாடி இருந்தே எதுவும் இல்ல. " எனப் வெறுப்புடன் கூறினான். 


அவள் தான் எல்லாம் என நினைத்த அவனுக்கு அவளால் கிடைத்தது எல்லாமே ஏமாற்றம் தான்.


"ஆனா ஜோஹிதா உன்னை விரும்புறாடா!. அந்த நவீன் தான் குட்டையக் குழப்பிருப்பான். " 


"அவெ குழப்புனா இவளுக்கு எங்க போச்சி புத்தி. " என்றான் முருகு ஆவேசமாக.‌


"அன்னைக்கி பஸ்ல அத்தன பேர் முன்னாடியும் அடிச்சதோட மட்டுமில்லாம போலிஸ்ல ஈப்டீசிங் கேஸ் குடுத்திருக்கா. காதலிச்சேன்னு சொல்றவ செய்ற வேலையாடா இது?” என அப்சத்திடம் கூறியவன்,


“நீ ஸ்டெடியா இரு மச்சான். அவளுக்கா வேணுங்கிறப்ப தொட்டுக்கவும் வேண்டாங்கிறப்ப குப்பைய தூக்கி எறியுற மாறி எறியவும் நீ என்ன ஊறுகா பாக்கெட்டா?. " எனக் கார்த்திக்கு ஆதரவாக பேச, அப்சத் ஜோஹிதாவிற்காக பேச அங்கு வாக்குவாதம் நடைபெற்றது.


நண்பர்களை டிரெயின் ஏற்றி விட்டு சென்ற இடம் வாணி வேலை செய்யும் அப்பாய்மெண்ட், உள்ளே செல்லாது அவளுக்காகக் காத்திருக்க, அவனின் நல்ல நேரம் ராஜி உடன் இல்லாது அவள் மட்டும் வந்தாள். அவள் அறியாது அவளைப் பின்னால் இருந்து அணைத்துத் தூக்கியவன்,


"ஹாய் ஜோ... உன்னோட பாடிகார்ட்ட காணும்." எனக் காதில் கிசுகிசுப்பாய்க் கேட்க,


" கார்த்தி நீயா!. விடு கார்த்தி. விடு... " திமிறிக் கொண்டு இறங்கி யாரும் பார்க்கிறார்களா எனச் சுற்றி சுற்றி பார்த்தாள் வாணி. யாரும் இல்லை என்பதை உறுதி செய்து பெருமூச்சி விட,


"அதா யாரும் இல்லேல்ல. கம்... " எனக் கரம் நீட்டிக் காட்டி‌ அணைக்க வர, அவனின் கரத்தைத் தட்டிவிட்டு நடந்தாள் வாணி. 


"இவ்ளோ வேகமா எங்க போற?" 


"அடுத்த வேலைக்கி. வேறெங்க போக." 


"சரி வா. " எனக் கரம் பற்றி வேறு புறம் இழுத்துச் சென்றான்.


"எங்க கார்த்தி இழுத்திட்டு போற? " 


"போற இடத்த சொன்னாத்தா வருவீயா?" என் எதிர் கேள்வி கேட்டான் அவன். பதில் அவள் தராத போதும் தரதரவென அவளை இழுத்துச் சென்றான். தந்தாலும் அப்படித்தான் சென்றிருப்பான்.


"கார்த்தி வேண்டாம்... யாராது பாத்தா!” 


"உன் சுப்பாத்தாட்ட போட்டு குடுத்து, உனக்கு அடி வாங்கி குடுப்பானுங்க. சரியா? " எனக் கேலியாக சொல்ல,


"உனக்காகத்தான் என்னை அடிக்கிதுன்னா நான் அதைத் தாங்கிப்பேன். ஆனா அவங்க அப்படிப் பண்ண மாட்டாங்க. மோசமானவங்க. உன்னை தான் அடிக்க ஆள் அனுப்புவாங்க. என்னால உனக்கு ஒன்னுன்னா தாங்கிக்க முடியாது." என்றாள் கண்ணீருடன்.


" என்னை மட்டுமில்ல உன்னையும் பத்திரமா பாத்துக்கிற அளவுக்கு தெம்பு எங்கிட்ட இருக்கு ஜோ. என்னை நம்பு. " என்றவன் இழுக்கவே தேவையில்லை என்பது போல் அவன் உடன் நடந்தாள். 


அன்று கார்த்தி காதலைச் சொன்ன போது வியப்பாக இருந்தாலும், அதை வாணி மறுக்கவில்லை.  மறுக்க தோன்றவில்லை.


"உனக்காக இனி நான் இருக்கணும்னு ஆச படுறேன். என்னை உனக்கு பிடிச்சிருக்கா ஜோதி. காதல் தோல்வில தவிக்கிற எனக்கு வாழ்க்க குடுத்தா உனக்கு புண்ணியமா இருக்கும். ம்..." என அவளின் இரு கரம் பற்றிக் கேட்க, அதை மறுக்கும் துணிவு அவளிடம் இல்லை. 


" என்ன திடீர்னு. உனக்கு எப்படி எம்மேல அது வந்தது?. " என்றாள் தயக்கத்துடன். 


"அது ரொம்ப நாளாவே இருக்கு. பட் நான் அதுக்கு இம்பாட்டென்ட் குடுக்கல. இப்ப சொல்லலன்னா எப்பயும் சொல்ல முடியாம போய்டும்‌. அதான்…. I love you." 


" என்னைப் பாத்து இரக்க படுறீயா கார்த்தி?" 


"இல்லை. அடுத்தவங்களப் பாத்து இரக்க படுற சூழ்நிலைல நான் இல்ல. அடுத்தவங்க தான் என்னைப் பாத்து இரக்க படுவாங்க. நான் என்னோட காதல உம்மேல இருக்குற பரிதாபத்தால சொல்லல, உங்கூட பழக ஆரம்பிச்சதுக்கு அப்றம் தான் நான் நானா இருக்குற மாதிரி ஒரு ஃபீல். நீ பக்கத்துல இருக்கும் போது அந்த ஃபீல் ஜாஸ்தியாவே இருக்கு. வேஷம் போட வேண்டியா தேவையில்லாத மனநிறைவு உன்னோட இருக்கும் போது எனக்குக் கிடைக்கிது ஜோ.


என்னைப் பத்தி உனக்கு முழுசா தெரியும். அதே மாதிரி உன்னைப் பத்தியும் தெரியும். சொல்லப்போன கிட்டத்தட்ட ரெண்டு பேரோட லைஃப்பும் ஒன்னு தான். அன்புக்கா ஏங்கிட்டு இருக்கோம். நாம ஏன் ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் பண்ண கூடாது. 


ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்ணவெ தான, கலட்டி விட்டுட்டு அடுத்தாளப் பிடிச்சிக்குவான்னு உனக்குத் தோணலாம். எனக்கு உம்மேல வந்த அந்த ஃபீல் வேற யார் மேலயும் வராது. I promising you. " என்க, அவளுக்கு அழுகையாக வந்தது. வேகமாக வந்து அவனின் மார்பில் சாய்ந்து கொண்டு தன் காதலைக் கண்ணீருடன் கூறினாள். 


இருவரும் யாருக்கும் தெரியாது பழக தொடங்கினர். இருவருமே ஜோஹிதா என்ற ஒருத்தியைப் பற்றி யோசிக்காது காதலிக்க தொடங்கினர். 


யாரிடமும் சென்று நாங்கள் காதலர்கள் என்று விளக்கவில்லையே தவிர, ரகசியமாக சந்தித்து யாருமற்ற இடத்தில் பேசிக் கொள்ளவில்லை. சின்ன பார்வை தொடாத மெல்லிய அணைப்பு என இருவரின் சைவக்காதல் ஓரீரு வாரங்கள் சென்றன.


பின் வந்த நாட்களில் அப்படியே இல்லாது முத்தங்கள் பரிமாறப்பட்டது. தினமும் அவளைக் கட்டியணைக்காது அவனின் இரவுகள் முடிந்ததே இல்லை. அவனின் ஆண்மை உணர்வு துண்டப்பட்டது ஜோதியால். கார்த்தியின் இளமையின் ஆசைகள் எதற்கும் வாணி தடை சொல்லவில்லை. அவனுக்கும் அவனின் எல்லை தெரிந்திருந்தது. 


மால் அது. 


கழுத்தை அன்னாந்து பார்த்தபடி நடந்து வந்தவள் கீழே விழுந்திடாதபடி இழுத்து வந்தது கார்த்தி தான். 


"இங்க எதுக்கு வந்திருக்கோம் கார்த்தி?" 


"உனக்கு ட்ரெஸ் வாங்க." 


"எங்கிட்ட தான் இருக்கே. " 


"இதுவா. " என ஆங்காங்கே கிழிந்த இருந்த தாவணியைக் காட்டியவன்,


"எத்தன தடவ சொல்றது. இந்த மாதிரி கிழிஞ்ச ட்ரெஸ்ஸ போடாதன்னு. நல்ல டெஸ்ஸா போடலன்னாலும் பரவாயில்லை. கிளிஞ்சத போடாத. " எனக் கோபமாக பற்களை அரைத்தவன், அவளை ஒரு துணிக்கடைக்குள் அழைத்து சென்றான். 


அவள் சுடிதார் எங்கு உள்ளது என்று தேட, அவன் ஜீன்ஸ் பக்கம் சென்றான்.‌


"கார்த்தி யாருக்கு? எனக்கா!. " எனக் கேட்டவளின் குரலில் ஆசை இருந்தது. 


"உனக்கு தான். இது சரியா இருக்கும். அங்க ட்ரெயல் ரூம் இருக்கும் போய் மாத்திட்டு வா. நான் உனக்கு வேற டிரெஸ் பாக்குறேன். " என்று நகரப் போனவனின் கரத்தைப் பற்றி நிறுத்தியவள்,


" போதும் கார்த்தி. எதுக்கு தேவையில்லாம காச வேஸ்ட் பண்ற." என்க, அவளின் இதழில் தன் ஆள்காட்டி விரலை வைத்தவன்,


"ஷூ. இனி நீ எதுவும் பேசக் கூடாது. உனக்கான எல்லாமே நான் தான் செய்வேன். நான் சொல்றத தான் நீ சரின்னு கேங்கணும். எதுவும் எதிர்த்து சொல்லக் கூடாது. புரியுதா? போ… " என அனுப்பி வைக்க, அவள்‌ மாற்றிக் கொண்டு வந்தாள். 


ஒல்லியான கால்கள் தான், ஆனால் அது கவர்ச்சியாக இருக்கும். அந்தக் கவர்ச்சியை அந்த ஜீன்ஸ் வெளிக் கொண்டு வந்தது. கை இல்லாத டீசர்ட், அதற்கு மேல் ஓவர் கோர்ட் போல் ஒன்று போட்டு  வெட்கத்துடன் பூனை நடை நடந்து காட்டிய போது. கார்த்தி அவனாகவே இல்லை‌. ஆசை மேலோங்க,


"அழகா இருக்கு ஜோ. " என்றான் ரசனையுடன். 


"என்ன அழகா இருக்கு. அங்கங்க பிடிக்குது. கண்ணாடில பாத்தேன். நல்லவே இல்ல. எனக்கு இது வேண்டாம். " என்றாள் முகத்தை அஷ்ட கோணத்திற்கு கொண்டு வந்து,


"அப்ப இத ட்ரெய் பண்ணு. " என முழு நீள ஸ்கெட்டைத் தந்தான். அது அவளுக்குப் பிடித்திருந்தது. சுற்றி சுற்றி வட்டம் போட்டு காட்டியபடி நடந்தாள் அவள். ஜீன்ஸ்ஸையும் பில் போட்டு வாங்கிக் கொண்டான். 


முதல் நாள் ஹோட்டலுக்குத் தனியாக வந்து அவனைச் சந்தித்த போது அவளை வீட்டில் விட என வந்தவனை ஏரியாவின் ஆரம்பத்திலேயே நிறுத்தி,


"நீ போ கார்த்தி. நான் போய்க்கிவேன். எங்க ஏரியாதா இது." என் விரட்டப் பார்த்தாள் வாணி.


" ஆர் யூ சுயர்! தனியா எப்படிப் போவ?" 


" நான் பாத்துப்பேன் கார்த்தி. எத்தன வர்ஷமா இங்க இருக்கேன். எனக்கே துணைக்கி வாரேங்கிற. போ… போ..." என அவளைத் துரத்தி விடுவதில்லேயே குறியாய் இருந்தாள் வாணி. முரளி பார்த்துவிட கூடாது என்பதற்காக. 


‘சரி...’ எனச் சென்றவன் என்ன நினைத்தானோ அவளைப் பின் தொடர்ந்து செல்ல, சுப்புவின், " எவெங்கூட டீ ஊர் மேஞ்சிட்டு வார **** . டேய் அவ சென்னி மயித்த பிடிச்சி இழுத்திட்டு வாடா. " என்ற பெருத்த குரல் கேட்டது. 


" இன்னைக்கி தான உன்னை கூப்பிட்டு வச்சி ஜோஹிதா சொன்னா. ‘கார்த்தி பின்னாடி இனி நீ போகக் கூடாது’ன்னு. அப்றமும் நீ போய்ப் பாத்திட்டு வந்திருக்கேன்னா, உனக்கு எவ்ளோ திமிரு இருக்கணும். " என்றபடி முரளி  வர,


"இல்ல நான் கார்த்திய பாக்க போகல. மித்ராக்கா வீட்டுல தான் வேலை. " என ஆரம்பிக்கும் போதே,


"பொய் சொல்ற நீ!!. ம்… " என ஆங்காரத்துடன் கத்தியபடி வந்து அவளின் முடியை பிடித்து இழுத்து சென்றான் முரளி.


அடுத்த சில நொடிகளில் வாணியின் அலறல் சத்தம் கேட்டது. முதலில் என்ன நடக்கிறது என்றே தெரியாது நின்றவனுக்கு முரளி கண் மண் தெரியாது வாணியை இழுத்துச் சென்றதும், மனம் அதிகமாக துடித்தது கார்த்திக்கிற்கு. 


உள்ளே சென்று முரளியைத் தடுக்கச் சொல்லி உந்த, அவளைக் காப்பாற்ற தனக்கு என்ன உரிமை உள்ளது என்ற எண்ணம் தலை தூக்கியது. ஆதலால் உரிமையை உண்டாக்க நினைத்தான். அவளை அந்த நரகத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். 


தன்னை போலவே அன்பிற்காக ஏங்கும் அந்த ஜீவனைத் தன்னோடு சேர்த்து பயன் செய்ய வேண்டும். அடுத்த நாளும் வந்து எவ்வித கவலையையும் காட்டாது சிரித்தவளைப் பார்க்க பாவமாக இருந்தது. முரளியின் மீது அதீத கோபம் வந்தது. 


அவள் சொல்லியிருக்கிறாள் தான். பெரியம்மாவின் பிள்ளை. தன் அண்ணனுக்கும் தன்னைப் பிடிக்காது என்று. அந்த அண்ணன் முரளியாக இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை அவன். 


'ச்சீ... இப்படியும் ஒரு மனுஷனா. ஜோதிய பத்தி எவ்ளோ கேவலமா எங்க கிட்ட பேசுனான். கூடப் பிறக்கலான்னாலும்.‌ கூட வளந்த பொண்ணப் பத்தி தப்பாப் பேச எப்படி அவனுக்கு மனசு வந்தது. ' என நினைத்தவன் முரளியை முற்றிலும் தவிர்த்தான். 


தன் கவலையைத் தன்னோடு புதைத்துக் கொண்டு தன் மன ஆறுதல் நீக்க வந்தவளைத் தான் இனி தன் வாழ்நாள் முழுவதும் மனத்தில் சுமக்கும் முடிவுடன் காதலைக் கூறினான். 


" தேங்க்ஸ் கார்த்தி . எல்லா டிரெஸ்ஸுமே எனக்குப் பிடிச்சிருக்கு. ஆமா எதுக்கு இதெல்லாம்? " 


" சொல்றேன். வர்ற செவ்வாக்கிழம உனக்கு எக்ஸாம் முடியுதா? " 


" ஆமா கார்த்திக். எல்லாப் பரிச்சையும் முடிஞ்சிடும். " எனச் சந்தோஷமாகக் கூறினாள்.


"நல்லது. நாம அன்னைக்கி மீட் பண்ணலாம். பை." என்றவன் அவளைப் பாய் கடையின் முன் இறக்கி விட்டு சென்றான். 


அவன் எடுத்த அந்த முடிவு அவன் வாழ்க்கைக்குக் கிடைத்த அற்புதமான வரம் என்றும் சொல்லலாம். அல்லது சாபம் என்றும் சொல்லலாம். 


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...