அத்தியாயம்: 104
காலை வேலையில் அனைவரும் டயனிங் டேபிலில் கூடி இருந்தனர் உணவிற்காக. விகாஸ்ஸின் தந்தை கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு உணவு தட்டை வெறிக்க, அவரின் மனைவி உணவு பரிமாறினார்.
கணவனின் கோபம் ஏன் என தெரியாது முகத்தைச் சுருக்கி கொண்டு இருக்கும் கணவனின், " போதும்." என்ற கட்டளை குரல் கேட்டதும், பதட்டத்தில் அவர் உணவை அவரின் கையில் வைக்க, மனைவியின் கன்னம் பழுக்கும் அளவுக்கு ஓர் அறை விழுந்தது.
கட்டிய மனைவியைப் பிறர் முன் அடிக்கிறோம் என்ற எண்ணம் இல்லாது, சரமாரியாக யாரின் மீதிருக்கும் கோபத்தை மனைவியிடம் காட்டிக் கொண்டு இருந்தார் அவர்.
யாரோ என்ன யாரோ!. நம் கார்த்திக்கின் மேல இருக்கும் கோபம் தான். வட்டிக்குப் பணம் கொடுக்கும் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வரும் அவர்கள், அடமான பொருளாக நில பத்திரங்கள் நகைகள் பைக் கார் என விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைப்பது வழக்கம்.
அப்படி ஒருவர் வாங்கிய நில பத்திரத்தை, வட்டிக்குக் கொடுத்த காசைத் திரும்ப வாங்காமல் உரிமையாளரிடம் சேர்த்துவிட்டான் கார்த்திக். அந்த நிலத்தின் மதிப்பு அதிகம். அதை வேறு ஒரு கம்பெனிக்கு தர ஒப்பந்தம் பேசப்பட்ட நிலையில் பத்திரம் காணது போயிருந்தது.
நிலத்திற்குச் சென்று பார்த்தால் அங்கு உரிமையார் உரிமையுடன் அமர்ந்திருந்தான். கேட்டதற்கு, ‘நான் முழு தொகையையும் செலுத்தி, என் பத்திரத்தை மீட்டு விட்டேன் பார்.’ எனத் தாய்ப் பத்திரத்தைக் காட்ட, இது கார்த்திக்கின் வேலை என விசாரித்து தெரிந்து கொண்டார். அந்தக் கோபம் தான் அவருக்கு.
கன்னத்தைத் தாங்கி பிடித்து நின்ற அவரின் மனைவியிடம், " கொஞ்சம் இடத்த குடுத்தா போதுமே. உரிம எடுத்திட்டு அதிகப்பிரசங்கித்தனமா நடந்துக்கிறது. முதுகொழும்பில்லாம என்னை அண்டி பிழைக்கிறவ நீ... நா சொன்னத மட்டும் தான் செய்யணும்.
சொல்லாத இடத்துல போய் எதையும் புடுங்க கூடாது. சோத்துக்கு தட்டேந்தி எங்கிட்ட தான் வரணுங்கிற நினப்பு உனக்கு இருந்திட்டே இருக்கணும். என்ன?. அடுத்து நான் சொல்லாமா எதாவது பண்ண… உயிரோட இருக்க முடியாது. " என வீட்டிற்குள் வந்து கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து கொண்டே பேச,
"எதுவா இருந்தாலும் நீங்க நேரடியாவே பேசலாம். எதுக்கு எதுவும் அறியாத உங்கள எதிர்த்து பேச வாயில்லாத, அவங்கக்கிட்ட கேள்வி கேக்குறீங்க. என்ன வேணும் உங்களுக்கு?" என்று அவன் கேட்க, அவனிடமெல்லாம் அவர்கள் பேச மாட்டார்களாம்... அதனால்...
"ஜோஹிதா... ஜோஹிதா... " என உரத்த குரலில் அழைத்தான் விகாஸ்.
" என்னண்ணா. " என்றபடி ஜோஹிதா வந்தாள்.
" உம்புருஷன்ட்ட சொல்லி வை. அது அவனோட பிஸ்னஸ் இல்ல. அந்த கம்பெனில அவெ வெறும் எம்பளாயி… எம்ளாயின்னாத் தெரியும் தான. கூலியாள். காசுக்கு வேலை பாக்குறவன். நாங்க என்ன சொல்றோமோ அதக் கைக் கட்டி வாய்ப் பொத்தி செஞ்சா போதும். சுயமாலாம் எதையும் செய்ய வேண்டாம்னு அவனுக்கு புரியிற மாதிரி சொல்லி வை. " என விகாஸ் கத்த, ஜோஹிதாவிற்குப் புரியவில்லை பின் புரியும் படி விலக்கி கூறினான் அவன்.
" இதென்ன கூத்தா இருக்கு. கடைத் தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறது கணக்கா... நம்ம வீட்டு பணத்தையே எடுத்து, எவெ வீட்டுக்கு குடுத்து பண்ண பாவத்துக்குப் புண்ணியம் தேடிக்கிறதா நினப்பா. " என்ற ஜோஹிதாவின் பெரியன்னையின் குரல் கேட்க, கார்த்திக் திரும்பி பார்த்ததும் வாயை மூடிக் கொண்டனர் அவர்கள்.
"அவங்க வட்டியாவே, அசலவிட பல மடங்கு குடுத்திட்டாங்க. இருக்குறவெங்கிட்ட இருந்து கொள்ளையடிச்சா பரவாயில்லை. எதுவும் இல்லாதவங்க கிட்ட… நியாயமா நடந்துக்கணும். அந்தக் கணக்குல பாத்தா அவரோட நிலத்த எப்பயோ குடுத்திருக்கணும். நீங்க செய்யல அதான் நான் செஞ்சேன். இதுல என்ன தப்பு இருக்கு!"
" தப்பு தா. காசு கைக்கு வந்து சேராம பத்திரத்த குடுத்தது தப்பு. அத விட பெரிய தப்பு அந்த பத்திரத்த என்னோட அனுமதி இல்லாம… என்னோட ஆஃபீஸ் ரூம்ல இருந்து திருடுனது. " என்றார் விகாஸின் தந்தை. கார்த்தி அலட்சியமாக தோள்களை குளுக்கி விட்டு நடக்க,
" நீங்க எதுவும் நினைக்காதீங்க ப்பா. இதெல்லாம் நம்ம மாப்பிள்ளையோட குணம் கிடையாது. கடந்த ஒரு வர்ஷமா சில சாக்கடைங்க கூட பழகிருக்காருல. அதா நாறுறாரு. நம்ம பொண்ணுக்கு பண்ண பாவத்துக்கு நம்ம காசைக் குடுத்து பரிகாரம் பண்ண நினைக்கிறான் போல. " விகாஸ் நக்கலாக சொல்ல, கார்த்தி நின்று அவனை முறைத்தான்.
"ம்… அதுவும் சரிதா... திருடிய காதலிச்சா திருடுற பழக்கம் வந்து தானே தீரும். " எனச் சொல்லி சிரிக்க, அவன் கோபமாக தன் அறைக்குள் சென்றான். இன்னமும் சில நிமிடங்கள் அங்கு நின்றால் கூட வீடு போர்களமாக மாறியிருக்கும். அதான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இடத்தைக் காலி செய்து வந்தவன் தன் கோபம் குறையும் மட்டும் சுவற்றில் குத்தினான். ஜோஹிதா பின்னாலேயே வந்தாள்.
"என்ன பண்ற கார்த்திக்?. ரத்தம் வருது பாரு. அமைதியா இரு." என அடிபட்ட இடத்திற்கு மருந்திட்டபடியே பேச தொடங்கினாள்.
" என்ன இருந்தாலும் கார்த்திக், நீ பெரியப்பா அனுமதி வாங்காம பத்திரத்த எடுத்து குடுத்திருக்க கூடாது. " என்க.
" அவெ யாரு எனக்கு? நான் எதுக்கு அவெங்கிட்ட பர்மிஷன் வாங்கணும். " என்றான் கோபமாக.
"ஏன்னா அது நம்மோடது இல்ல. அந்த கம்பேனியோட பொறுப்பு அவர்கிட்ட தான் இருக்கு. நீ அங்க வேலை பாக்குற. அப்ப உனக்கு மேல இருக்குறவங்க குடுக்குற ஆடருக்கு ஒபே பண்ணிதான ஆகணும். நீயும் செஃபா இன்னொருத்தருக்குக் கீழ வேலை பாத்திருக்க தான. உனக்குத் தெரியாத இது."
"தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும். உன்னோட குடும்பத்துக்குக் கீழ பணிஞ்சி வேலை எல்லாம் பாக்க முடியாது. " என வெடுக்கென கூற,
"கார்த்திக் நீ எதையோ மனசுல வச்சிட்டு பேசுற மாதிரி இருக்கு. "
" எஸ்... என்னோட கனவு. என்னோட கேரியர். நான் என்னவா மாறணும்னு முடிவு பண்ண இவனுங்க யாரு? நான் என்ன வேலை பாக்கணும்? யார்ட்ட பேசணும்? என்ன பேசணும்னு எல்லாத்தையும் உங்குடும்பத்து ஆளுங்க டிசைட் பண்றது எனக்கு பிடிக்கல. என்னோட பாதைல தலையிட்டு என்னைக் கட்டாயப்படுத்துனா, நான் அப்படித் தான் செய்வேன். " என்றான் கோபமாக.
" அப்ப உன்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால தான், பக்கத்துல நெருங்கி வராம பழி வாங்குறீயா? " என்றாள் கேட்க.
" நீ என்ன பேசுறன்னு தெரிஞ்சிதா பேசுறீயா?"
"ம்... தெரிஞ்சி தான் பேசுறேன். நாலு மாசம் ஆச்சி நமக்குக் கல்யாணம் ஆகி. ஆனா இதுவர உன்னோட சுண்டு விரல் கூட எம்மேல பட்டது இல்ல. ஏன்?” என்றவள்,
“இன்னும் அவள நினைச்சிக்கிட்டு தான் இருக்கீயா?. " என ஆக்ரோஷமாக கேட்டாள்.
" … " எதுவும் சொல்லாது நகர பார்த்தான் கார்த்திக். அவனைப் பிடித்து நிறுத்தி,
" சொல்லு கார்த்திக். நீ அந்த *** நாய நினைச்சிட்டு தான் இருக்கீயா. அவா ஒரு *** தெரிஞ்சும் தேடுறீயா. " எனக் கேட்க, ஜோஹிதாவைக் கன்னத்தில் அடித்தான் கார்த்திக்.
ஆனாலும் விடாது ' சொல்லு கார்த்திக். சொல்லு கார்த்திக்… ' என்றவளிடம்,
" எஸ்... என்னால ஜோவ என்னைக்கும் மறக்க முடியாது. எம் உடம்புல உயிர் இருக்குற வர நான் அவள மறக்க மாட்டேன். நான் அவள விருப்புறேன். எப்பயும் விருப்புவேன். I love her. " என்க, கார்த்திக்கின் வாய்மொழியாக அதை கேட்டவளுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
" உன்ன ஐம்பது லட்ச ரூபாக்கி வித்திட்டு போன அவளயா உனக்கு பிடிச்சிருக்கு. உங்க காதலுக்கான வில ஐம்பது லட்சம் தானா!" எனக் குரலுயர்த்தி கத்த,
"அதே ஐம்பது லட்சம் குடுத்து தான நீயும் என்னை வாங்கி வச்சிருக்க. கார் பைக் மாதிரி என்னையும் இந்த வீட்டுல ஒரு உயிரில்லாத ஒரு பொருள் மாதிரித் தான் நடத்துறீங்க. உங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்க தான காச செலவளிச்சி வாங்கி வந்திருக்கீங்க. நீ என்னமோ யோக்கியம் மாறி பேசுற. உன்னோட காதலோட விலையும் அதே ஐம்பது லட்சம் தான். " எனப் பதிலுக்குப் பதில் பேச, அவனிடம் கத்தினால் பயனில்லை எனத் தெரிந்து குரலிலை உயர்த்தாது பேச தொடங்கினாள்.
" கார்த்திக் நீ எப்படி அவள லவ் பண்ண முடியும்?. நாம தான் ஆல்ரெடி லவ்வரஸ் ஆச்சே. உனக்கு அவளோட கஷ்டத்த ஏழ்மைய பாத்து பரிதாபம் வந்திருக்கு கார்த்திக். அதக் காதல்னு தப்பா புரிஞ்சிக்கிட்ட. அவ அந்தப் பரிதாபத்த யூஸ் பண்ணி பணம் பாத்திருக்கா. அவ்ளோ தான்.
இதுல காதல்ங்கிற பேச்சே கிடையாதே. என்னை வெறுப்பேத்த நீ அவ கூட பேசி பழகுன. அவளுக்குத் தேவையான ஒன்ன நீ செஞ்ச… அப்ப இது வியாபாரம் கார்த்திக். காதல் இல்ல. " என அவனுக்கு புரியவைக்கும் தோரணையில் பேச, அவன் உச்சிக் கொட்டினான்.
"உன்னோட கருணைய அவ தப்பாப் புரிஞ்சிட்டு, உங்கூட க்ளோஸ்ஸா பழகிட்டா. நீயும் அவ நெருக்கி பழகவும் கொஞ்சம் தடுமாறிட்ட. எனக்கு அபத்துன்னு தெரிஞ்சதும் நீ அவள விட்டுட்டு வந்தியே அது தான் உண்மையான லவ். உன்னோட நிஜ காதல் நான் மட்டும் தான்." என்க, அவன் முகம் சுழித்தான்.
" நான் மட்டும் தான. சொல்லு கார்த்திக். உன்னோட காதல் நான் மட்டும் தான." என மிரட்டலாகவே கேட்க,
" இதுக்கு நான் பதில் சொன்னா உன்னால அதத் தாங்கிக்க முடியாது ஜோஹிதா. " என்று சொல்லி நடக்க,
" அப்போ என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னது பொய்யா?. எங்கூட பழகுனது உண்மைதான. நாம காதலிச்சது நிஜம் தான. இல்ல எப்படா இவ சண்ட போடுவா. இதக் காரணம் காட்டி இவள ஒதுக்கி வச்சிட்டு அடுத்த பொண்ண பிடிப்போம்னு அழையுற த்ர்டு ரேட் பொறுக்கியாடா நீ...
பிரிஞ்சி போன ஒரே மாசத்துக்குள்ள புதுசா ஒருத்திய பிடிச்சி, அவளச் தூக்கி பைக்கல உக்கார வச்சி, ஊர் சுத்துற அளவுக்கு பழகுன உன்னை என்னன்னு சொல்றது... *** த்தூ…
உங்கப்பாக்கிட்ட பெருசா எந்தச் சுகமும் கிடைக்கலன்னு அடுத்தவனுக்கு வப்பாட்டியா வாழ முடிவெடுத்த உங்கம்மாக்கும், எங்கிட்ட இல்லாதத தேடி அவ கிட்ட போன உனக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல. as is the mother so is the son. நீ நிறுபிச்சிட்ட. " என உச்ச ஸ்வனத்தில் கத்த, அது கார்த்திக்கின் ஆத்திரத்தைத் தூண்டியது. அவளை அடிக்க வருவதற்குள் இவர்களின் சத்தம்கேட்டு வந்த குடும்பத்தினர், அவளைச் சமாதானம் செய்து கார்த்திகேயனைத் திட்டி தீர்த்தனர்.
வாழ்க்கையை வாழும் போதே சொர்க்கத்தையும் நரகத்தையும் கண் முன்னே காட்டும் மந்திரம் பெண்களிடம் மட்டுமே உள்ளது என்பதை கார்த்திக் நன்கு உணர்ந்தான். இதே ஜோஹிதா தான் அவனின் இனிய நாட்களுக்கு காரணம். இதே ஜோஹிதா தான் அவனின் இப்போதைய துன்பத்திற்கும் காரணம். ஜோதியும் அதே போல் தான். இன்பத்தையும் துன்பத்தையும் தந்து விட்டு சென்று விட்டாள்.
எத்தனை முயற்சி செய்தும் ஜோஹிதாவின் தேள் கொட்டும் வார்த்தைகளில் இருந்து தப்பிக்க முடியாது போனது கார்த்திகேயனால்.
உணவு உள்ளே இறங்கவில்லை. வீடு செல்ல மனம் இல்லை. மதுவின் பிடிக்குள் சென்றிருந்தான் கார்த்திக். 'எப்படி மச்சி அவ அப்படி சொல்லலாம். நானும் அந்தப் பொம்பளையும் ஒன்னாம். குழந்த குடும்பம்னு எதையும் நினைக்காம தன்னோட உடம்பு சுகத்த முக்கியமா நினைச்ச அவ கூட என்னை…. ச்ச... ' என்ற வெறுப்பு வந்த போதும் மனம் ஜோஹிதாவை வெறுக்க நினைக்கவில்லை.
ஜோஹிதாவின் ஏளனப் பேச்சு, கார்த்திகேயனின் குடி புலம்பல் இது தினசரி வாடிக்கையாக மாறியிருந்தது.
அன்றும் குடித்துவிட்டு நிதானம் இன்றி முருகு வீட்டிற்கு செல்லாது தன் வீட்டிற்குச் சென்றான். எப்பொழுதும் வாணியின் நினைவுகளில் சிக்கித்தவிக்கும் அவனுக்கு ஜோஹிதா ஜோதிவாணியாகத் தெரிய, அவளைத் தாபத்துடன் நெருங்கினான்.
அவன் குடித்திருக்கிறான் என்பது அறியாத ஜோஹிதாவிற்குக் கார்த்தியின் ஜோ புலம்பல்கள் தனக்கானதாகத் தெரிந்தது. அவன் ஜோதியை நினைத்து உருகுகிறான் எனத் தெரியாது அவனுடன் தாம்பத்தியத்தில் இணைந்தாள் அவள். அவளுக்கு அதில் மகிழ்ச்சி தான்.
ஆனா அனைத்தும் முடியும் போது " ஜோ நீ ஓகே தான. ம்... " என இதழில் முத்தமிட்டவன்,
" ஹே… ஜோ உன்னோட மூக்குத்தி எங்க? எனக்கு குத்தும்னு கலட்டீட்டியா… கள்ளி…" என முகத்தைத் தடவி கேட்க, அதிர்ந்து போனாள் ஜோஹிதா.
அவள் என்று நினைத்தா தன்னுடன் கலந்தான். ச்சீ... தன்னை மறந்த போதையிலும் அவளின் நியாபகம். அந்த அளவுக்கா அவன் அவளைக் காதலிக்கிறான் என்ற எண்ணமும். அவளின் நினைவில் தன்னைத் தொட்டிருக்கிறான்… அதை உணராத அவனுடன் நான்... என்ற எண்ணம் அவளுக்கு அருவருப்பையும் அவமானத்தையும் தந்தது. விடியும் வரை அழுது கொண்டே முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சோம்பல் முறித்து எழுந்த கார்த்திக்கிற்கு நடந்தது நினைவு வர. " ஸாரி ஜோஹிதா. நான். " என ஆரம்பிக்கும் போது வெடித்து விட்டாள் ஜோஹிதா. அழுது புலம்பியவளைச் சமாதானம் செய்யும் வழி தெரியாது முழித்தான் கார்த்திக்.
இந்த நிகழ்விற்கு பின் ஜோஹிதா வெகுவாக அடங்கி போயிருந்தாள். கார்த்திக்கின் காதல் தான் என்ற கர்வம் கொண்டவளுக்கு அது தனக்கு மட்டுமானது இல்லை என்று தெரிந்ததால் வந்த அடக்கம் அது.
காலம் எப்பொழுதும் ஒரே போல் இருப்பதில்லை அல்லவா. அது ஜோஹிதாவின் தேள் கொடுக்கை வெட்டி கார்த்திக்கின் பக்கம் நிற்க வைத்து, குடும்பத்தாரை எதிர்க்க வைத்தது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..