முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 105


 

அத்தியாயம்: 105



" கார்த்திக். நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன். " என்றவளின் முகத்தில் மகிழ்ச்சி, வருத்தம், கவலை, சந்தோஷம் என எந்த உணர்வும் இல்லை.


கார்த்திக் அவளின் முகத்தை பார்த்தான் பின் எதுவும் சொல்லாது தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.


இருவரும் படுக்கை அறையைப் படுக்க மட்டுமே உபயோகித்தனர். பேச்சுக்கள் அங்கு இருப்பதில்லை. அன்றைய சண்டைக்குப் பின் இன்றுவரை ஒருவித வெறுமை சூழ்கொண்டிருந்தது.


ஜோஹிதா கூறியது மகிழ்ச்சியான விசயம் தான். ஆனால் அவளிடம் பேச சிறு தயக்கம் கார்த்திக்கிற்கு. நண்பனிடம் பேச தவறு செய்த குழந்தையிடம் இருக்கும் தயக்கம் அது. இருவருக்குமே இருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க பின் அவன் பேசாமல் கையில் ஃபைலை எடுத்துக் கொண்டு தன் பைக் சாவியை எடுத்தான்.


" சாப்டியா கார்த்திக்?" என்றாள் ஜோஹிதா அவசரமாக. அவன் சென்றுவிடும் முன் பேச வேண்டும் என்பதற்காக.


" இல்ல. இனிமே தான் சாப்பிடணும். " என்றவனின் கையில் சில கவர்கள் இருந்தன. அன்றைய சண்டைக்குப் பின் கார்த்திக் அந்த வீட்டில் உணவுன்னுவது இல்ல. குடிப்பதும் இல்லை. வெளியே எதையாது வாங்கி வந்து உண்ணுவது. இல்லயேல் இருக்கவே இருக்கு நம்ம முருகு மெஸ். பொது சத்திரம் போல் எப்பொழுது வேண்டுமாலும் கார்த்திக் சென்று வரலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.


" எனக்குப் பசிக்கிது கார்த்திக். எதாவது ஸ்வீட் செஞ்சி தர்றீயா.‌" எனக் கேட்க, சாவியை அதன் ஹோல்டரில் சொருகி விட்டு நடந்தவனை மகிழ்வுடன் பின் தொடர்ந்தாள் அவள்.


பிள்ளைத்தாச்சி பெண் கேட்கிறாள் என்றெல்லாம் செய்யவில்லை. அவ்வ போது இதுபோல் ஏதாவது கேட்பாள். மறுப்பேதும் சொல்லாது செய்து கொடுப்பான்.  


சமையலறைக்குள் சென்றவன் அவளுக்காக சமைக்க தொடங்க அங்கிருந்த மற்ற பெண்கள் பாத்திரங்களை டொம் எனகீ கீழே போட்டுவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு முணுமுணுத்தபடியே வெளியே சென்றனர்.


'இவங்களுக்கெல்லாம் என்னாச்சி. ' என்ற சந்தேகம் நமக்கு மட்டும் தான்  இருக்கும். கார்த்திக்குப் பழகிப் போன ஒன்று.


‘இதுவரைக்கும் ஆம்பளைங்க கூட தான் சண்ட வந்திட்டு இருந்தது. இப்ப என்ன புதுசா எல்லா மாமியாரும் கோயிச்சாட்டு போதுங்க. ஜோஹிதா அம்மாவாச்சும் தம்பி தம்பின்னு ஒன்னு ரெண்டு வார்த்த பேசிட்டு இருந்தது. இப்ப அந்தம்மா தான் முதல்ல முகத்த திருப்பிட்டு போகுது. அப்படி என்ன தான் பண்ணிருப்பான் இவெ.


பெருசா பண்ணிட்டான் போல. அதான் வீட்டுல இருக்குற நஞ்சான் குஞ்சான்னு எல்லாமே அவெ மேல கடுங்கோபத்துல இருக்குதுங்க.’


வாணியின் வீட்டில் தன்னை விட்டுக் கொடுக்க விலை பேசப் பட்டத்தை அறிந்த கார்த்திக்,


"என்னையா விலை பேசி வாங்குறீங்க. வாங்குனா பொருள் சரியில்லன்னா ரிட்டன் பண்ண வாய்ப்பிருக்கு. கம்பெனிக்காரெ வந்து எடுத்திட்டு போய்டுவான். ஆனா என்ன அப்படி ரிட்டன் பண்ண முடியாது. இந்த மாம்பூக்குள்ள தேன் எடுக்க வந்த வண்டு மாதிரி தான் நான். நாம் பாட்டுக்கு வருவேன். தேவையானத எடுத்திட்டு போய்க்கிட்டே இருப்பேன். என்னைப் போக விடாம மூடி வைக்க நினைச்சா... மனுஷங்க யாரும் சாப்பிட முடியாத படி பழத்தையே நாசம் பண்ணிடுவேன்.” என்று நினைத்தவன்,


“காசு இருக்குங்கிறதுனால தான ரேட் பேசுனீங்க. இனி அது உங்க கைக்கு வரவே செய்யாது." என முடிவு செய்தான். அவர்களின் பைனான்ஸ் நிறுவனத்தைத் திவால் நிலைக்கு கொண்டு வந்து விட்டான். இப்போது அவர்கள் இருக்கும்‌ வீடு உட்பட அனைத்தும் ஜப்தியாகும் நாள் குறிக்கப்பட்டுவிட்டது.


"அடப்பாவி தலை முறை தலைமுறையா வெற்றிகரமா நாங்க பாத்திட்டுருந்த, லாபம் தந்த தொழில் டா அது.  உன்ன மாப்பிள்ளன்னு நம்பி உள்ள கொண்டு வந்து விட்ட கொஞ்ச நாள்ளயே கட்டடத்த கூட விட்டு வைக்காம விக்க வச்சிட்டியேடா பாவி.‌ " இது அந்த வீட்டு பெண்களின் புலம்பல். ஆண்களுடைய புலம்பல் கார்த்திக்கைக்  கொன்று புதைத்துவிடுவேன் எனும் அளவுக்கு இருந்தது. ஆனால் ஜோஹிதா விடவில்லை.


" கவனக்குறைவா இருந்திட்டு எதுக்கு எம்புருஷன குறை சொல்றீங்க.‌ அவரு அங்க வேலை மட்டும் தான் பாக்குறாரு. தொழிலாளி செய்ற சின்ன தப்பு முதலாளியோட கோட்டையையே சரிச்சதுன்னா... கோட்ட அந்த அளவுக்கு பலகீனமா இருந்திருக்குன்னு அர்த்தம். குருவி உக்கார பனம்பழம் விழுந்த கணக்க எம்புருஷெ வந்ததுனால தான் இப்படி ஆச்சின்னு பேசுறத விட்டுடுட்டு ஜெயில்ல இருக்குற பெரியப்பாவ வெளில எடுக்குற வழிய பாருங்க.‌" என முதல் முறை கணவனுக்கு ஆதரவாகச் பேசினாள். 


தன் மனைவி தானா அது என்று வியந்து தான் போனான் கார்த்திக். அன்றிலிருந்து அவர்களின் இறுக்கமான சூழல் மாறி இணக்கமாகத் தொடங்கியிருந்தது.


 " நல்லா இருக்கு கார்த்திக்.‌ இதுக்கு பேரு என்ன?. எப்படி பண்ண? " எனக் கேட்டுக்கொண்டே வேகமாக உண்ட ஜோஹிதாவின் மாற்றம் மட்டும் கார்த்திக்கிற்குப் புரியவே இல்லை.  சிறிது நேர உரையாடலுக்குப் பின்‌ சாவியை எடுத்து கொண்டு வெளியே செல்ல,


" எனக்கு இன்னைக்கி செக்கப் இருக்கு. கூட்டீட்டு போக முடியுமா?.‌" 


'எங்க உன்னோட சின்ன தம்பி பிரதர்ஸ். அவனுங்கள கூட்டீட்டு‌ போகலயா.' என நக்கல் செய்யாது சாவியை ஃபேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டவன். ஆட்டோவை பிடித்தான்.


" பைக்லயே போலாமே. " என ஏக்கமாக அந்த பைக்கை பார்த்தபடி கேட்டாள்.


'அவன் உன்னை எத்தனையோ தடவை கூப்பிட்டுருப்பான். அப்பெல்லாம் பிகு செய்து விட்டு இப்பொழுது வந்து கேட்டால் என்ன செய்வது. '


"இருக்கட்டும் ஆட்டோல போவோம். அது தான் உனக்கு உக்கார வசதியா இருக்கும். எந்த ஹாஸ்பிட்டல்? " எனக் கேட்க, அவள் பெயரை சொன்னதும் உச்சுக்கொட்டினான்.  காஸ்லியான மல்டி ஸ்பெஷலிட்டி ஹாஸ்பிட்டல் அது.


"நாம வேணும்னா ஜீஹச்க்கு போகலாமா?" என சின்ன குரலில் கேட்டாள்.


"ஏன்?. "


"இல்ல இங்க ஒருக்க டாக்டர பாக்கவே நிறைய செலவாகும்."


"வேலைக்கி போகலன்னாலும் உனக்கு செலவு செய்ய எங்கிட்ட காசு இருக்கு. " என்றவன் அவள் சொன்ன அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.‌ எப்பொழுதெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமோ அப்பொழுதெல்லாம் அவன் தான் அழைத்து சென்றான். அவளின் செலவுகள் அனைத்தும் அவனுடையதாக மாறியது.


மருந்து, மாத்திரை, பழம், சத்துள்ள ஆகாரம் தொடங்கி தினமும் மாலை வாக்கிங் செல்வது, இதமாய் பாதம் பிடித்து விடுவது என அவளுக்குப் பார்த்து பார்த்து செய்தான். தன் குழந்தையைச் சுமக்கும் மனைவிக்காக அதைச் செய்யவில்லை. தன் மனத்தில் சுமந்த காதலுக்காகச் செய்தான். அவளின் மனம் வருந்துவதைப் பார்க்க முடியாது செய்தான்.


கார்த்திக் பேசாது இருந்ததாலும் ஜோஹிதாவாகச் சென்று பேசி பேச்சைத் தொடங்குவாள்.‌ அவன் கோபம் கொண்டாலும் ஈகோ பார்க்காது சென்று பேசுவாள். குழந்தையைப் பற்றிய பேச்சுக்கள் தான் முக்கியமாக இருக்கும்.


தாய் உடன் இருந்தும் அவளுக்கு வளைகாப்பு என்ற ஒன்று முருகுவின் வீட்டில் வைத்து நடந்தது. அவருக்குக் கார்த்திக்கின் குழந்தையைத் தன் மகள் பெற்றெடுப்பதில் விரும்பம் இல்லை.


மாதங்கள் உருண்டோடின. பிரசவ நாளும் நெருங்கி வந்தது.


நன்கு உறங்கி கொண்டிருந்த கார்த்திக்கின் உடல் திடீரென வியர்த்து கொட்ட, மூடிய கண்களுக்குள் பலவித வினோத காட்சிகள் தெரியந்தது. கனவு தான் என்ற போதும் உயிர் வலி கொடுத்தது அவனுக்கு. அலறிக் கொண்டு எழுந்தான் கார்த்திக்.‌


"என்னாச்சி கார்த்திக்? கார்த்திக்... " என வயிற்றை பிடித்துக் கொண்டு நின்ற மனைவியிடம் எதுவும் சொல்லாது இருக்க, அவளுக்குக் கவலையாகிப் போனது. அடுத்த நாளும் இதே போல் நிகழ… உறங்க முடியாது தவித்தான் கார்த்திக்.


" என்னச்சி? கார்த்திக் நான் உன்னை மனைவியா இதக் கேக்கல. உன்னோட ஃப்ரெண்டா கேக்குறேன். சொல்லு ப்ளிஸ். என்னாச்சி?. ஏ‌ன் திடீர்னு இப்படி வேர்த்திருக்கு. கெட்ட கனவா. " என அவனின் தலை கோதி கேட்க, அது இதமாய் இருந்தது அவனுக்கு.


" என்னனென்னனு தெரியல ஜோஹிதா. மனசு ஒரு மாதிரி இருக்கு. சொல்ல முடியாத வலி. " என நெஞ்சை நீவி விட்ட படி அவன் இருக்க, அவனின் அருகில் அமர்ந்து இதமாய் தோளில் சாய்த்துக் கொண்டு நெஞ்சில் வைத்து வருடிக் கொடுத்தாள்.


"உனக்குப் பிடிச்ச வேலை எதுவும் அமைஞ்சிச்சா கார்த்திக். "


"ம்.. கிடைச்சிருக்கு. "


" எங்க? எந்த ஹோட்டல்ல?." எனச் சந்தோஷமாகவே கேட்டாள் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹோட்டல் பெயர் கூறினான்.


"இது கலிபோர்னியாலைல இருக்கு."


"ம்... லாஸ் ஏஞ்சல்ஸ்ல. "


" அங்கெல்லாம் cost of living அதிகமா இருக்குமே. டாலர்ஸ் அதிகமா கிடச்சாலும். நாம சம்பாத்திக்கிறது நமக்கே பத்தாது. ஏன் கார்த்திக் இங்கயே எதாவது மும்பை டில்லின்னு ட்ரெய் பண்ணிருக்கலாம் "


"இல்ல ஜோஹாதா. எனக்கு இங்க இருக்குறது மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. மறக்க நினைக்கிறது எல்லாம் கண் முன்னாடி வந்து எதேதோ செய்து. நான் இதெல்லாத்தையும் விட்டுட்டு தூரமா.. ரொம்ப தூரமா போகணும்னு விரும்புறேன்." என்றவனின் முகத்தில் இருந்த வருத்தம் அவளைப் பாதித்தது. நானும் அதற்கு காரணம் என்று.


" எப்ப கிளம்பணும்?"


" டயம் இருக்கு. அதுக்குள்ள பேபி பிறந்திடும். "


" கார்த்திக்... நீ எங்க போறதா இருந்தாலும்,  என்னையும் கூட்டீட்டு போயேன். ப்ளீஸ். " என்றாள் இறைஞ்சலாக.


" நாம இருக்குற இடத்த விட்டு வெளி போய் வேலை பாக்குறது அவ்ளோ ஈசியானது இல்ல ஜோஹிதா. நிறைய கஷ்டம் வரும். நான் மட்டும்னா ஒன்னுமில்ல தாங்கிப்பேன். நீ எப்படி? "


"எதுவா இருந்தாலும் நீ எம்பக்கத்துல இருப்ப தான. அது போதும். என்னையும் நம்ம குழந்தையையும் இந்த வீட்டுல தனியா விட்டுட்டு போய்டாத ப்ளீஸ். " என்றவளின் கெஞ்சல் அவனுக்கு புரிந்தது.


சமீப காலமாக இல்லை ஜோஹிதா கரு தரிப்பதற்கு முன்னாலேயே, விகாஸ்ஸுடன் ஜோஹிதாவிற்கு வாக்குவாதங்கள் வழுத்துக் கொண்டே வருவதை அவனும் பார்க்கிறானே. சில நேரம் அவளுக்கு அடியும் விழும். அவளின் சொந்தங்களே அவளுக்கு எதிராக நின்றது இப்பொழுதெல்லாம்.


" சரி... பாஸ் போர்ட் இருக்கா உனக்கு."  எனகீ கேட்க, இருக்கு என தலையசைத்தபடி அவனின் தோள் சாய்ந்தாள் ஜோஹிதா.


வெளிநாட்டு செல்லும் வேலை மும்மரமாய் நடக்க, ஜோஹிதாவிற்கு பிரசவ வலி வந்தது. வீட்டார் யாரும் அவளை எட்டிப்பார்க்காத நிலையில் கார்த்திக்கே உடன் இருந்து அனைத்தும் செய்தான்.‌ உடன் முருகுவும் அவனின் குடும்பமும் இருந்தது.


ஜோஹிதாவிற்கு அதிகம் கஷ்டம் தராது வலி வந்த சில மணி நேரத்திலேயே அவர்களின் மகள் ஜனித்து விட்டாள். மலர் செண்டாய் கார்த்திக்கின் கைகளை நிறைத்தவள் கார்த்திக்கின் மனத்தையும் நிறைத்து விட்டாள்‌.


கார்த்திக்கின் எல்லா வலிகளுக்கும் மருந்தாக வந்தவள் தான் அவனின் மகள். அவளைக் கையில் ஏந்திய போது புது மனிதனாக மாறியிருந்தான்.  பிரசவம் பெண்ணிற்கு மட்டுமல்ல ஆணிற்கும் இன்னொரு ஜென்மம் போன்றது தான். 


" என்ன மச்சான் அரைக்காப்படி உலக்கு கணக்கா இத்துனுண்டா இருந்திட்டு ஊரையே தட்டி எழுப்புறா உம்மகா.” என்றபோது கார்த்திக் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


“எம்மாடி மருமகளே அமைதியா இரு. அட சைரன நிப்பாட்டும்மா. " என முருகு அழும் வாசுவை தூக்கிக் கொண்டு சுற்றுவான். அவரின் செல்ல மருமகள் வாசவி.


இரு ஆண்களுக்குமே வாணி கிடைத்துவிட்ட திருப்தி இருந்தது. வாசுவி பிறந்ததுமே முருகுவின் வீட்டிற்குச் சென்று தங்கினர். ஜோஹிதா தான் இனி அங்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக கூறினாள். கார்த்திக் மீண்டும் முருகுவின் மொட்டை மாடிக்கு குடிபெயர்ந்தான்.


சிறிய ஓடு வீடு தான். அதில் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. முருகுவின் அன்னையின் தயவால் கைக் குழந்தையான வாசுவைக் கவனித்தாள் ஜோஹிதா. இரவு கார்த்திக்கின் மார்பை மெத்தையாக்கி மகளைக் கிடத்தி  அணைத்துக் கொள்வான் அவன்.


மகளின் சிரிப்பு அவனின் சந்தோஷமாக மாறியது. மகளின் அழுகை அவனின் கண்ணீராக மாறியது.


" மச்சா நீயும் பாஸ் போர்ட் எடுத்துருக்கீயா!. எதுக்கு?. " எனக் கார்த்திக் முருகுவைப் பார்த்து கேட்டான்.


" என்னடா லூசு மாதிரிக் கேக்குற. பாஸ் போர்ட் எதுக்கு எடுப்பாங்க பீரோல்ல போட்டு பூட்டி வைக்கவா. நானும் உங்க கூட வர போறேன். "


"எதுக்கு டா?"


"எதுக்குன்னா வேலை பாக்கத்தான். இந்தியா ரூபாய விட அமெரிக்க டாலருக்கு மதிப்பு அதிகம்னு நேத்து தான் உன்னோட பாட்டி என்னோட கனவுல வந்து சொல்லிட்டு போச்சி. அது மட்டுமில்ல, நீ ஒரு உருப்படாதவெ உன்னை நம்பி அதோட பேத்தியையும் கொள்ளு பேத்தியையும்  தனியா அனுப்ப முடியாது. அதுனால காவலுக்கு கருப்ப சாமி கணக்கா கூடவே போன்னு சொல்லுச்சி. "


" எது! எம்பாட்டி உங்கனவுல வந்து சொன்னாங்களாக்கும். "


"எஸ்.. எஸ்... எத்தன நாளைக்கித்தான் பேராண்டி லைஃப்பாய் சோப்புல குளிப்ப... எம்பேரன் டாலர் டாலரா சம்பாதிக்க போறான். அவெங்கூட போய் டாலர்ல முங்கி குளின்னு சொல்லுச்சி. " என முருகுவும் கார்த்திக்குடன் கிளம்ப ரெடியாக,


கார்த்திக், " வேண்டாம் டா. உனக்குன்னு இங்க ஒரு குடும்பம் இருக்கு. அத விட்டுட்டு வர்றது தப்பு. "


"அந்தக் குடும்பத்துக்காகத்தா வர்றேன்னு சொல்றேன். அங்க வந்து வேலை பாத்தா வேகமாச் சம்பாதிக்கலாம்ல. தங்கச்சிங்களுக்கும் கல்யாணத்த நல்ல படியா நடத்தலாம். தம்பி படிப்பு. அம்மாக்கு வீடுன்னு வாசல்னு செட்டில் ஆக வேண்டாமா!. ஏம்மா நானும் உங்க கூட வர்றது எதாவது ஆட்சேபனை இருக்கா உனக்கு.‌" எனக கேட்டான் முருகு. 


முன்பு போல் உரிமையாக ஜோஹிதாவிடம் பேச முருகுவிற்கு மனம் வரவில்லை. ஆனாலும் நண்பனின் மனைவி என்ற மரியாதைக் கொடுத்தான்.


"எனக்கு ஏதும் இல்ல அண்ணா நீங்க தாராளமா தங்குங்க. " என்ற போது முருகுவிற்கு மகிழ்ச்சி.


இதுவரை ஜோஹிதா அவனிடம் பேசியது இல்ல. இப்போது அண்ணன் என்று அழைக்கவும் வந்த சந்தோஷம் அது.


ஜோஹிதா, இதுவரை கார்த்திக்கின் நண்பர்களை மதித்து பேசியது இல்லை. இப்போது முருகு மீது வந்த மதிப்பு கார்த்திக் மீது அவன் கொண்ட நட்பால் கிடைத்தது. தன் மகவின் போது அவனின் குடும்பம் கொடுத்த ஆதரவால் கிடைத்தது.


"எல்லாம் சம்மதம் செல்லியாச்சி நீ மட்டும் தான் ஓகே சொல்லணும். எங்க சொல்லு. மாமா உங்கூட வர்றது உனக்கு ஓகேவா.‌" என ஒன்று அறியாக் குழந்தை வாசவியை வாங்கிக் கொண்டு கேட்க,


"அவ எப்படி டா பதில் சொல்லுவா‌!"


"சொல்லிட்டா மச்சான். அதுவும் சூடா. ஸ்.‌.. ஆ...‌ " எனக் கத்த, வாசு அவனின் சட்டையை ஈரம் செய்து வைத்திருந்தாள். அனைவரும் சிரிக்க, அந்த மூனே கால் பேரும் அமெரிக்காவிற்குச் செல்ல தயாராகினர்.


ஆறு மாதங்களில் மகளைத் தூக்கி கொண்டு வெளிநாட்டு பறந்து சென்றனர். பிறந்த மண்ணில் இருவரும் கிடைத்த அனுபவங்கள் மிகவும் கொடியதாக தெரிய. திரும்பி வரவே கூடாது என்ற முடிவுடன் தான் விமானம் ஏறினர்.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...