முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 108

அத்தியாயம்: 108


"உனக்கு அவளும் முக்கியம்னா ஏன் இத்தன வர்ஷமா எங்கூட வாழ்ந்த. டைவர்ஸ் பண்ணிருக்கலாம்ல. " என அழுகுரலில் கேட்க,


"ஏன்னா நீ என்னோட வைஃப். ஜோஹிதா நமக்குள்ள நடந்த கல்யாணத்த நான் மதிக்கிறேன். சந்தர்ப்பம் சூழ்நிலையால நடந்திருந்தாலும் உன்னை முழு மனசோட தான் மனைவியாக்கி கிட்டேன். நீ மட்டும் தான் என்னோட வைஃப். இத நான் மட்டுமில்ல. ஜோதியும் ஏத்திட்டு இருந்திருப்பா.


உன்னைக் கல்யாணம் பண்ணதுக்கு அப்றமா நானே வா ஓடிப் போலாம்னு கூப்பிட்டிருந்தாலும். உன்னோட புருஷன ஜோதி ஏத்துக்க மாட்டா. அதே நேரம் என்னை விட்டு தூரமா இருக்க நினைக்கவும் மாட்டா. அவளோட காதல் அப்படிபட்டது. எங்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதது. " என்க,


"எப்படிக் கார்த்திக் நீயும் அவளும் ஒரு மாதிரி பேசுறீங்க? நான் கேட்டேன் கார்த்திக் அவகிட்ட, ‘கார்த்திய கல்யாணம் பண்ணிக்கிறாயா?’ன்னு. நீ சொன்னியே… அதே பதில தான் அவளும் சொன்னா. உங்க ரெண்டு பேரோட வேவ் லென்த்தும் ஒன்னு போல இருக்குல. ஒரே மாதிரியே யோசிக்கிறீங்க. பர்ஃபெக்ட்டா கப்பில்ஸ் தான் போங்க. " என்று சொல்லி சிரிக்க,


"நீ ஜோட்ட பேசுனீயா! எப்ப? "


" பேசுனேன்… பழகுனேன்… நாலு மாசம் எங்கூட தான்… பத்திரமா பாதுகாப்பா இருந்தா. ஆனா அதுக்கப்புறம். எங்க போனானு தெரியல."


"இப்ப ஜோ உயிரோட இல்ல. ஜோ இறந்தது உனக்குத் தெரியுமா?"


"ம்… தெரியும். உனக்குத் ‌தெரியாதத விட அதிகமாவே தெரியும். விகாஸ் சொன்னான். ஆக்ஸிடென்ட்டுன்னு. தப்பிச்சிட்டான்னு... ஸ்லோ பாய்ஷன் ஒன்ன ஹாஸ்பிட்டல்ல அவளுக்கு ஏறுற டிரிப்ஸ்ல கலந்து விட்டதா சொன்னான்.


அவனுக்கு உம்மேல என்ன காண்டுன்னே தெரியல. நீயும் அவளும் சேரக்கூடாதுங்கிறதுல என்னை விட ரொம்ப வெறித்தனமா இருந்தான். ஆனா விதி ஆடுன கண்ணாம்பூச்சி ஆட்டத்துல அவெங்கைல சிக்கிட்டா. உன்னோட ஜோ சின்னாபின்னமாகிட்டா.‌ "  என்றவளின் பேச்சில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றியது.


விகாஸ்ஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அவளே ஜோதியைக் கொலை செய்தது போல் பேச, அதைக் கேட்டவர்கள் குழம்பிப் போய் நின்றனர். என்ன உலறுகிறாள் இவள் என்று?


"பைத்தியக்காரி மாதிரி இருக்குல என்னோட பேச்சு. முழுசா பைத்தியமாவே மாறிட்டேன். அவளோட பேச்ச எடுத்தாலே இப்படித் தான்… கண்டபடி சம்மந்தம் சம்மந்தமே இல்லாமா... ஆனா அவ ரொம்ப ஸ்வீட். நான் அவளோட வாழ்க்கையப் பறிச்சிட்டேன்னு தெரிஞ்சும் எங்கூட அன்பா பழகுனா. உன்னை மாதிரியே அவளுக்கும் நல்ல கை பக்குவம் இருக்கு. சூப்பரா சமப்பா. என்னை உங்கூட நல்லபடியா வாழச்சொல்லி திட்டுவா. உனக்காக எங்கூட சண்ட போடுவா. " எனப் போதையில் இருப்பது போல் என்னென்னமோ பேச, ஜோதியை ஜோஹிதா எப்பொழுது பார்த்தாள் என்ற கேள்வியுடன் அவன் நின்றான். 


"ஜோஹிதா நடந்தது என்னன்னு தெளிவா சொல்லு. ப்ளிஸ் ." என்றான் இறைஞ்சலான குரலில். அவள் அதைக் காதில் வாங்காது பேசிக் கொண்டே இருக்க,


அவளின் கரம் இழுத்தவன் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு, " Thanks. " என்றான். எதற்கு அந்த நன்றி என்று தெரியாத போதும் ஜோஹிதா உடைந்து அழத் தொடங்கினாள்.


ஓ… வென அவள் அழுது கரைந்தது அந்த நிசப்தமான நூலகத்தைக் கிழித்துக் கொன்னது


"என்ன நடந்ததுன்னு சொல்லு ஜோஹிதா. உண்மைய சொல்லு. உன்னோட மன வேதனைய இறக்கி வச்சிடு ஜோஹிதா…." என்க, 


' உண்மை சொன்னால் நேசிப்பாயா. ' என்பது போல் தலை தூக்கி அவனின் முகம் பார்த்தவள் அழுகையுடனே அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள். பல ஆண்டுகள் கழித்து கிடைக்கும் அணைப்பு அது. அந்த அடைப்பால் வந்த மயக்கமா இல்ல இத்தனை ஆண்டுகள் அவளுள் இருந்த மன உளைச்சலால் வந்த மயக்கமா தெரியாது. ஆனால் மயங்கி விழுந்தாள் ஜோஹிதா.


உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்ட செல்ல பட்டவளுக்கு ஹார்ட் அட்டாக் என்று கூறி அதிர வைத்தார் மருத்துவர்.


"போதும்… எல்லாமே போதும். இதுக்கு மேல நாம இங்க இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்குப் போவோம். நீங்க தேடி வந்தவங்க இறந்துட்டாங்க. அவங்க கதை அவ்ளோ தான். அவங்களப் பத்தி பேச போய்... என்னோட ஜோஹிம்மாவ நான் இழக்க விரும்பல. வாங்க கார்த்திப்பா போலாம். என்னால ஜோஹிம்மாவ இப்படிப் பாக்க முடியல. ப்ளிஸ் கார்த்திப்பா. நம்ம வீட்டுக்குப் போகலாம்.‌ " எனத் தந்தையைக் கட்டிக் கொண்டு அழுதாள் வாசு.‌ கார்த்திக்கின் கைகள் அவளை அணைத்து சமாதானம் செய்தாலும் கண்கள் தூர நடந்து கொண்டிருந்த ருத்ராவின் மீது இருந்தது.


கை, கால்களைக் கோவத்தில் உதறிய படியும், இயலாமையில் சுவரைக் குத்தியபடியும் நடந்து சென்றவனின் பின் சென்றவன்,


"ருத்ரா… எங்க போற?" என்றான் கார்த்திகேயன்.


" வேறெங்க அந்த விகாஸ்ஸ எதாவது பண்ணாத்தா எனக்கு ஆத்திரம் அடங்கும். விஷம் ஏத்தி என்னோட வாணிக்காவ. ச்ச…. ஊசி கூட போட்டுக்க பயப்படுவாங்க. அவங்களுக்குப் போய்… ஆக்ஸிடென்டு… கோமா… டிரிப்ஸ்ஸுன். சும்மா விட மாட்டேன். அவனச் சும்மாவே விடமாட்டேன். எங்க இருந்தாலும் அவன நான் விடமாட்டேன். " என்று ஆத்திரத்தில் சிவந்து போய் நின்றான்.


"அதுக்கு நீ செத்து‌ தான் போகணும். " எனக் கார்த்திக் சொன்னதும்,‌ ‘என்ன?’ என்பது போல் பார்த்தவனை நெருங்கி அணைத்துக் கொண்டான் கார்த்திக்.


" ஜோவோட இழப்பு உனக்குக் கஷ்டமாத்தா இருக்கும்னு எனக்குத் தெரியும் ருத்ரா. ஆனா அத ஏத்துக்க. விகாஸ்ஸ உன்னால ஒன்னும் பண்ண முடியாது. " என்றவனின் பிடியில் இருந்து திமிறி விலகியவன்,


" உங்களால தான் அவங்க லைஃப் பாத மாறுச்சி. நீங்க தான் அவங்க மரணத்துக்கு காரணம். " எனக் கோபமாகவும், ஆத்திரமாகவும் கத்த,


" நீ சொல்றது சரி தான். நான் மட்டும் அவளோட லைஃப்ல என்டர் ஆகலன்னா… உயிரோடவாது இருந்திருப்பா.” என்று கவலையோடு சொன்னவன்,


“நீ இப்ப விகாஸ்ஸ தேடி போக தேவையில்ல. "


"ஏன்? உங்க மனைவி குடும்பத்த காப்பாத பாக்குறீங்களா?" என்றவனுக்கு கசந்த புன்னகையைத் தந்தவன்,


"அவன் செத்து இருபது வர்ஷம் ஆச்சி. ஜோஹிதாவோட குடும்பம் மொத்தத்தையும் சிதைச்சதுக்கு அப்றம் தான்… நான் அமெரிக்காகே வந்தேன்.


அதுல விகாஸ்ஸும் அவனோட அப்பனும் கொல்லப்பட்டாங்க. அதிக வட்டி வாங்குனதுனால அவனுங்க ஏமாத்துன கும்பல் நடுரோட்டுல வெட்டி கொன்னுடுச்சி. நான் தான் அவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு குடுத்தேன். ஜோதிக்காக இல்ல. அவனால பாதிக்கபட்டவங்களுக்காக செஞ்சேன். ஜோ.. வ அவெ கொல பண்ணான்னு தெரிஞ்சிருந்தா அவனோட மரணத்த இன்னும் கொடுமையானத மாத்திருப்பேன்.‌" என்று கார்த்திக் சொல்ல சிறுவன் போல் அவனை அணைத்து அழுதான் ருத்ரா.


மிகச்சிறிய அட்டாக் என்பதால் விரைவில் தேறிவிட்டாள்  ஜோஹிதா. அவளை விட்டு ஒரு நொடி கூட வாசு நகரவே இல்லை. அவளின் கரத்தைபீ பிடித்துக் கொண்டு 'ஜோஹிம்மா எனக்கு நீங்க வேணும். ப்ளிஸ். எங்கிட்ட பேசுங்க.' என ஜெபித்துக் கொண்டே இருக்க, ஜோஹிதா கண் முழித்தாள்.


"மனச குப்பத்தொட்டியா வச்சிருக்கவெ கூட நல்லாத்தா இருக்கான். ஏன்னா அவனுக்கு அந்த குப்பத்தொட்டிக்குள்ள என்ன போட்டோம்னே தெரியாது. ஆனா நீ. மனச சுடுகாடுடாக்கி வச்சிருக்க. கண்டத போட்டு குழி‌ தோண்டி புதைச்சி வச்சி… அதுக்கு தாஜ்மகால் மாதிரி கல்லற கட்டி  எல்லாரும் வந்து பாக்குற டூரிஸ்ட் ப்ளேஸாக்கி வச்சிருக்க நீ.


நான் அப்பப்ப சொல்லுவேன் தான் நீ என்ன பைத்தியமான்னு. இப்ப முடிவு பண்ணிட்டேன். நீ பைத்தியக்காரி தான்டி. " உஷா தான் அது. கண் விழித்ததில் இருந்து உஷா திட்டுவதை விடவில்லை.


'இத்தனை விசயங்கள் நடந்திருக்கிறது. ஏன் என்னிடம் சொல்ல வில்லை.' என்ற கோபம் தான்‌ அது.


"போதும் உஷா அவள விட்டுடு பாவம். ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது ஆரம்பிச்ச. முடிக்கவே மாட்டேங்கிற. " என முருகு சொல்ல, அவரின் முகத்தைப் பார்க்காது திரும்பிக் கொண்டாள்‌ உஷா.


"உனக்கு என்னாச்சி உஷா? ஏன் இப்படி மூஞ்சிய தூக்குறான்னு உங்கத்தைக் கிட்ட கேட்டு சொல்லி வாசும்மா. "


"எனக்கு வாயில்ல." என்றாள் அவள்.‌


" வாசும்மா… உன்னோட முருகு மாம்ஸ் மேல கோபமா!"


"ஆமா. இன்னைல இருந்து இல்லை. நாலு நாளைக்கு முன்னாடியே நான் உங்கள டைவர்ஸ் பண்ணிட்டேன். நீங்க ஆன்டி. " என உஷாவை கேட்க,


" ஊருக்க போனதும் அப்ளை பண்ணிடுவேன். "


"ஏம்மா என்னாச்சி?" எனப் பின் சீட்டில் அமர்ந்திருந்த முருகு மனைவியை எக்கி கொஞ்ச, அவர் தட்டி விட்டும் முன் வாசு தட்டி விட்டாள்.


" வாசு…" என்றாள் ஜோஹிதா அதட்டலாக,


" நீங்க யாரும் எங்க கிட்ட பேசாதீங்க. " என்று அறிவித்தாள் வாசு.


"ஆமா… முக்கியமா நீயும். இவரும். " என உஷா முருகுவை முறைத்தாள்


" நான் என்னடி பண்ணேன். " என்றார் முருகு பாவமாய்.


"என்ன பண்ணலன்னு கேளுங்க. சொல்றேன். நீங்க எல்லாம் சேர்ந்து எங்க ரெண்டு பேர்கிட்ட இருந்தும் நடந்தத மறைச்சிருக்கீங்க. ஒரே வீட்டுக்குள்ள இருந்தும் நீங்க மூணு பேர் ஒரு கூட்டம் மாதிரியும்… நான் கோமாளி மாறியும் ஃபீல் பண்ண வச்சிட்டிங்க‌.‌" வாசு.‌


"என்னையும் சேத்துக்க. உங்காத்தாட்ட நான் எத்தனையோ முறை கேட்டேன். உனக்கும் கார்த்திக்கும் இடைல எல்லாம் ஓகே தானான்னு. ஓகே ஓகேன்னு தலைய தலைய ஆட்டீட்டு… மனசுக்குள்ள எவ்ளோ பெரிய விசயத்த மறைச்சி வச்சிருக்கா பாரேன். இவளெல்லாம் நண்பி. ச்ச… " என முகம் திருப்ப, ஜோஹிதா உஷாவை சமாதானம் செய்ய முயன்றார்.


"உஷா ஆன்டி. மலை இறங்கிடாதீங்க. கெஞ்சி கொஞ்சின்னு கால்ல கூட விழுந்தாலும் நாம கோபமாவே இருக்கணும். இவங்ககிட்ட‌ பேசவே கூடாது. " என்றவளின் தலையில் சிரித்துக் கொண்டே தட்டினாள் ஜோஹிதா.


"என்ன அடக்குற மாதிரி உங்களையும் நாலு தட்டு தட்டி வளத்திருந்தாங்கன்னா… நீங்க இவ்வளவு அடமெண்டா வளந்திருக்க மாட்டிங்க. பிடிவாதம்… பிடிவாதம். உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது ஜோஹிமா. அதுவும் இந்த வயசுல. " எனச் சற்று காட்டமாகவே சொல்ல, ஜோஹிதாவின் முகம் சுருங்கியது. அதைக்‌ கண்ட கார்த்திக் வாசுவை அதட்டினான்.


"எல்லா ரூல்ஸ்ஸும் பிள்ளைங்களுக்கு மட்டும் தான் போல. அதபா போடுற பெத்தவங்க ஃபாலோ பண்ண தேவையில்ல போல. ஹிம்... நான் இந்த வாரம் முழுக்க படுற கஷ்டம் உங்க யாருக்குமே புரியல. நீங்க உங்க வைஃப்க்கு அதிகமா ‌செல்லம் குடுக்குறீங்க கார்த்திப்பா. அது தான் அவங்களோட பிடிவாதத்துக்குக் காரணம். நீங்க தான் காரணம்." என முகம் திருப்பினாள் அவள்‌.


வாசுவோட கோபத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இப்பொழுது அவர்கள் இருக்குமிடம் சென்னை. அதிலும் நகர் புறத்தைத் தாண்டி எங்கயோ சென்று கொண்டிருந்தனர். 


" நான் ஜோதியோட கல்லறைய பாக்கணும். " என்று காலையில் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்ஜார் ஆனவள் உடனே பிடிவாதம் பிடித்தால் கோபம் வராதா.


வாசுவும் உஷாவும் கூடாது மீண்டும் ஜோதியின் பேச்சு ஜோஹிதாவின் உடலைப் பாதிக்கும் என நிற்க,


" அப்சத் என்ன கூட்டீட்டு போவீயா?.  கார்த்திக் ப்ளிஸ். எனக்கு எதுவும் ஆகாது. நான் நல்லாத்தா இருக்கேன். ஒரே ஒருக்க பாத்திட்டு அன்னைக்கி நைட்டே நாம ஃப்ளைட் ஏறிடலாம். " என்று கெஞ்சும் போது கார்த்திக் மறுக்கவில்லை. அதான் வாசுவிற்கு கோபம் வந்து விட்டது.


"சரி விடு வாசும்மா. ஆசைப் பட்டுடுச்சி… ஒரே ஒருக்க தான. பாத்துக்கலாம். " என முருகு சொல்ல,


"வாய வச்சிட்டு சும்மா இருக்கணும். அவளுக்கு சப்போட் பண்ணீங்க... பாத்துக்கங்க. அடுத்த வாரம் கல்யாணத்த வச்சிக்கலாமான்னு கேட்டு காலைல தான் மிஸ்டர் சிவ்ராம் கால் பண்ணாரு. அவரு கிட்ட சரி சரின்னு சொல்லிட்டு… ஒரு பொண்ண பெத்தவங்க கணக்காவா நடந்துக்கிறீங்க ரெண்டு பேரும்.  " என ஜோஹிதாவை முறைத்துக் கொண்டே சொன்னார் உஷா.


" அதென்ன அடுத்த வாரம். அவங்க இஷ்டப்பட்ட நாள்ல வப்பாங்களாமா. நாம பொண்ணு வீட்டு காரங்க. மாப்பிள்ள முறுக்குக்குப் பணிஞ்சி போய்ட கூடாது மச்சான். நீ அடுத்த மாசம் வச்சிக்கலாம்னு ஃபோன் போட்டு சொல்லு. " என்க, உஷா அவரை முறைத்தாள். அவர் வாயில் விரலை வைத்துக் கொண்டு அமைதியாகி விட்டார்.


"ஜோஹிதாவோட ஹெல்த் காரணமா மேரேஜ்ஜிக்கு வேண்டிய எல்லாத்தையும் மாப்ள வீட்டுல பாத்துக்கிறோம்னு சொன்னாலும் நமக்கும் சில கடமை இருக்கு. பத்திரிக்கை‌‌... டெக்கரேஷன்… மெனு… ஈவென்ட்டுன்னு கல்யாண வேலை தலைக்கி மேல கிடக்கு. அதெல்லாத்தையும் விட்டுடுட்டு இது ரொம்ப முக்கியமானதா." என்று கடுகடுத்தார் உஷா.


"அத விட கார்த்திப்பா கைல கத்திய எடுத்து, காய் கட் பண்ணி, சமச்சி ஒரு வாரம் ஆச்சி. நான் நல்லா சாப்பிட்டும் ஒரு வாரம் ஆகுது. அதுனால நாம இப்பவே முருகு மாம்ஸ் வீட்டுக்கு கிளம்புறோம். கார்த்திப்பா கையால சாப்பிடுறோம். அப்சத் அங்கிள் வண்டிய திருப்புங்க." என்க, அவன் இவர்களின் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டே மகிழுந்தை மகிழ்ச்சியுடன் இயக்கினான் அப்சத்.


வாசு, அப்சத்துடன் சண்டைக்கி நிற்க, வெகு நாட்களுக்கு பின் சந்தோஷம் என்ற சந்திரன் அவர்கள் வானில் உதயமானது போல் இருந்தது. சண்டையும் சச்சரவுமாக இருந்த கார் ஒரு இல்லத்தில் வந்து நின்றது.


கார்த்திக்கின் கையில் பச்சை குத்தியிருந்தானே, ‘JK’ என சைன். அது பெரிதாக வரவேற்பு  எழுதப்பட்டிருந்தது. இரும்பு கேட்டை வாட்ச்மென் திறக்க, காரில் இருந்து இறங்கிய அப்சத்திற்கு வணக்கம் வைத்தனர் சிலர். ஒரு பத்து வயது பெண் ஓடிவந்து அணைத்தாள்.


"என்னோட பொண்ணு. " என அறிமுகம் செய்து வைத்தான் அப்சத்.


" ஹே ப்யூட்டி உன்னோட பேர் என்ன? " என வெட்கத்துடன் அப்சத்தின் பின் நின்றவளை பார்த்து வாசு கேட்க,


"ஜோதிவாணி. " என்றாள் அவள்.


" க்கும்… முந்தி எல்லா கலட்டி விட்ட காதலி பேரத்தான… பெத்த பொண்ணுக்கு வச்சி அழகு பாப்பாங்க. இப்ப என்ன புதுசா தங்கச்சியா நினைக்கிற பொண்ணுங்க பேர கூட வைக்கிறாங்க. " என உஷா முணுமுணுக்க.


"இது புது ட்ரெண்டு ஆன்டி. காதலி பேர வைக்கிறது 90 கிட்ஸ் பண்ற வேலை. இப்ப இருக்குற 2k கிட்ஸ் அப்படிக் காதலிங்க பேர வைக்கணும்னா குறைஞ்சது ஒரு டஜன் குழந்தையாது பொத்துக்கணும். அவ்ளோ லவ்வர் இருப்பாங்க‌‌. தங்கச்சின்னு பாத்தா ஒன்னோ ரெண்டே தான். " என்றாள் வாசு.


"ஆனா, அப்சத் 90 கிட்ஸ் வாசு. " என்ற முருகுவுடன் காரில் விட்ட சண்டையை கன்டினியூ செய்தனர் வாசுவும், உஷாவும்.


அப்சத், தன் மனைவியுடன் கார்த்திக்கை உள்ளே கூட்டிச் சென்றான். ஜோஹிதாவின் கரத்தைப் பிடித்தபடி கார்த்தி ஜோதியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றான்.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...